Saturday, April 30, 2011

ஈழத்திற்காய் தீக்குளிக்கப் போகும் புதுமைப் பெண்!

ணக்கம் உறவுகளே, பல தசாப்த காலமாக எம்மையெல்லாம் கொன்றொழித்து, அகதியாக்கி, அவல வாழ்வைத் தந்த யுத்தம் இன்று எம்மை விட்டு நீங்கி விட்டது, ஆனாலும் பலரது வாழ்வு இன்றும் யுத்தம் நிறைந்த சிறைச்சாலைகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

ன்னியில் இறுதி வரை இருந்து வாழ்வைத் தொலைத்து; செத்துப் பிழைத்த எவருமே, இன்னொரு போரை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால், இனியும் ஒரு போர் வேண்டும் என ஒரு தொகுதிப் புலம் பெயர் மக்கள் விரும்புகிறார்களே! அதன் பின்னணி என்ன?  சமீபத்தில் எங்கள் வலைகளுக்கு வந்த ஒரு புலம் பெயர் நபர், ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஒருவர்,
வன்னியில் நடந்த விளைவுகளைச் சொன்னால், தமிழ் நாட்டில் தமிழன் தீக்குளிப்பானா? என்று கேட்டிருகிறார். இவரின் மன நிலையில், தாங்கள் மட்டும் வாழ வேண்டும், ஏனையவர் சாக வேண்டும் எனும் எண்ணம் தானே இருக்கிறது.ன்றை மட்டும் கேட்கிறேன், நீங்களும், உங்கள் வம்சங்களும் ஆங்கிலம் பேசி, வெளி நாட்டு மொழி பேசி, புதுப் புது உடையணிந்து சுக போக வாழ்க்கை வாழ வேண்டும், ஆனால் அப்ப்பாவி மக்கள், வெளி நாட்டிற்கு போக முடியாதவர்கள் மட்டும் சாக வேண்டுமாம்? இது என்ன நியாயம்?  உங்களுக்கு மட்டும் ஆங்கிலமோ, வேற்று நாட்டு மொழிகளோ தெரிந்தவுடன், இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொத்தடிமைகளாகப் போரிட்டுச் சாவுங்கள் எனக் கூறுவது சரியா? ஏன் நீங்களே போய்ச் சாகலாம் தானே?
அதற்கேன் அப்பாவித் தமிழர்களைக் கூவி அழைக்கிறீர்கள்!

நாங்கள் சாக வேண்டும், எங்கள் உறவுகள் அனைவரும் எரிந்து சாம்பலாக வேண்டும், அப்போது தான் நீங்கள் வாழலாம் எனும் எண்ணம் உங்களைப் போன்ற பலருக்கு இருக்கலாம். ஏன் தமிழ் நாட்டில் தீக்குளிப்பதன் மூலம் உங்கள் சுக போக வாழ்க்கையினை நீங்கள் தக்க வைக்க முயற்சிக்கலாம்.

புலம் பெயர்ந்த உறவுகளே! நீங்கள் தந்திரத்தால் அவர்களை விழுத்தலாம் என்பதில் குறியாக இருக்கிறீர்கள். ஆனால் அவர்களோ மந்திரத்தால் உங்கள் தலைகளில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே முட்டாள்கள் ஈழத் தமிழர்கள் தான், சிங்களவர்கள் அல்ல, மோட்டுச் சிங்களவர் என அவர்களை அழைப்பதை விடுத்து எங்களை மோட்டுத் தமிழர்கள் என அழைக்கத் தொடங்குங்கள்!

ன்று வரை சிங்களவர்களை எப்படியாவது பழி வாங்கலாம் எனும் பகைமை உணர்வோடு தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடக்கம்- உலகத் தமிழர்கள் வரை அனைவரும் இருக்கிறார்கள். உங்கள் அனைவரிலும் அவர்களைப் பகைமை கொண்டு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருகிறதே தவிர, அவலப் பட்டுத் துன்பப்பட்ட மக்கள் வாழ்வை மீளக் கட்டியொழுப்ப வேண்டும் எனும் எனும் உணர்வுடன் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?

போர்க் குற்ற வழக்குத் தொடுத்து, அவர்களுக்குப் பாடம் கற்பிக்கலாம் என்று நீங்கள் நினைப்பதால், போரில் இறந்து போன உயிர்கள் மீள வராது. போர் குற்ற வழக்கில் தள்ளி, இவர்களை அடக்க வேண்டும் என நினைக்கும் எல்லோரிடமும் ஒரே ஒரு கேள்வி! உங்களில் எத்தனை பேர், எங்கள் பாசமிகு உறவுகள் முகாமிலிருந்து வந்திருக்கிறார்கள்- அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும், அவர்களுக்கான வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டும் என நினைத்திருப்பீர்கள்?

ங்களில் எவராவது, அகதி முகாமிலிருந்து வந்திருக்கும் மக்களுக்கு, கவுன்சிலிங் வசதி தேவை, வன்னி மக்களிற்கு வீடுகள், உணவுப் பொருட்கள் தேவை என்று சிந்திருப்பீர்களா- இல்லைத் தானே, இதற்கான காரணம் உங்கள் கண் முன்னே பகைமை உணர்வு இருக்கிறது, பழி வாங்க வேண்டும் எனும் விரக்தி உங்கள் உணர்வுகள் மூலம் முதன்மை பெறுகிறது. இதன் மூலம் மக்கள் வாழ்வு உங்கள் பார்வையில் வேண்டப் படாத அல்லது தீண்டத்தகாத ஒன்றாகிறது!

‘ஏன் தப்பி வந்தனீங்க, நீங்கள் எல்லோரும் செத்திருந்தால் ஈழம் கிடைக்கும் என’ புலம் பெயர்ந்திருந்து எங்களுக்குப் பின்னூட்டம் எழுதும் நீங்கள் புலத்திலிருந்து, ப்ளாக் எழுதி, ஆங்கிலத்தில் கமெண்ட் போட்டு என்னத்தைச் சாதிச்சனீங்க? நீங்கள் செத்தால், நாங்கள் வாழலாம் என, இலங்கையில் இருக்கும் தமிழர்களைப் பார்த்துச் சொல்லும், ஒவ்வோர் உள்ளங்களிடமும் சொல்கிறேன், இப்படியான நினைப்புடன் வாழும், நீங்கள் செத்தால், நாங்களும் நிம்மதியாக வாழலாம்!

லங்கையில் உள்ள அனைவரும் போரிட்டுச் செத்த பின்னர் நீங்கள் வந்து சொகுசாக ஒரு நிலத்தை ஆள வேண்டுமாம். அப்படி ஒரு இழிவான நிலை உங்களுக்கு எதற்கு! நீங்களே போரிட்டு, உங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் அல்லவா!

ங்கள் உறவுகளுக்காக, நீங்கள் ஏதாவது செய்யலாம் தானே! தமிழ் நாட்டு மக்களைத் தீக்குளிக்கத் தூண்டும் உறவுகளே! ஒரு கணம் சிந்தியுங்கள்! இதனை உங்கள் கடமையாக ஏற்று நீங்கள் செய்தால் எப்படியிருக்கும்?

...உங்களின், உங்கள் சந்ததிகளின் சுக போக வாழ்க்கை அழிந்து விடும் என்று அச்சமா!

தே போலத் தான் இப்போது, நாங்களும் நினைக்கத் தொடங்கி விட்டோம். எங்களின் வேர்களும், கட்டுக்களும் அழிந்து விடும் எனும் பயத்தில் எஞ்சியுள்ளவற்றை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம்!

ன்னிக் கதைகளைச் சொன்னால், தமிழ் நாட்டு மக்கள் தீக்குளிப்பார்களா என்று கேட்கும் உறவே! இதனை உங்கள் கடமையாக எடுத்து நீங்கள் ஏன் செய்யக் கூடாது! உங்கள் உயிர் மீது, உங்களுக்கு உள்ள ஆசை போலத் தான், எங்கள் உயிர்கள் மீதான எங்களின் பற்றுறுதியும்!

வீழ்வது ஈழத் தமிழனாகட்டும்!
அவன் சூட்டில் குளிர் காய்ந்து வாழ்வது புலத் தமினாக மாறட்டும்!
புறப்படுங்கள் உறவுகளே!

123 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

என்னது இலங்கைத் தமிழ் பெண் தீக்குளிக்கப் போகிறாளா? ஐயா நம்பும் படியாக ஏதாவது சொல்லுவீரா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வன்னியில் உள்ள மக்களைப் பற்றி எந்தக் காலத்தில் யார் கவலைப் பட்டார்கள்? வன்னியில் இருந்து வவுனியாவுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வந்த போது, வவுனியா தமிழ் கிராம சேவையாளர் ................. சொன்னார் " அங்க கிடந்தது அவங்களோட சாகிறத விட்டுட்டு இஞ்ச என்னத்துக்கு வந்தனியள்? "

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வவுனியா நலன் புரிநிலையத்தில் இருந்த மக்களை பேட்டி எடுக்க வந்திருந்த பி பி சி செய்தியாளர் மாணிக்கவாசகம், சனங்களுக்கு சொல்லி கொடுத்தார் இப்படி " நான் இப்ப உங்களிட்ட கேள்வி கேப்பன்! நீங்கள் ஆமி செல்லடிச்சு சனம் நிறைய செத்தது எண்டு சொல்லுங்கோ! இயக்கம் ஆள்பிடிச்ச கதையள் சொல்ல வேண்டாம் "

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


வணக்கம் நிருபன்!//

இனிய இரவு வணக்கம் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

என்னது இலங்கைத் தமிழ் பெண் தீக்குளிக்கப் போகிறாளா? ஐயா நம்பும் படியாக ஏதாவது சொல்லுவீரா?//

இணையங்களில் வாய்ச் சொல்லில் வீரம் காட்டுற ஆட்கள், நாட்டுப் பற்று உடைய நல்லவர்கள் இதனைச் செய்தாலும் செய்வார்கள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வன்னியில் உள்ள மக்களைப் பற்றி எந்தக் காலத்தில் யார் கவலைப் பட்டார்கள்? வன்னியில் இருந்து வவுனியாவுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வந்த போது, வவுனியா தமிழ் கிராம சேவையாளர் ................. சொன்னார் " அங்க கிடந்தது அவங்களோட சாகிறத விட்டுட்டு இஞ்ச என்னத்துக்கு வந்தனியள்? "//

இது யதார்த்தம்....
வன்னியில் எஞ்சியுள்ள இரண்டு இலடம் பேரும் தான் ஈழத்தை... என்று கவிதை பாடினவர்களும் உண்டு சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வவுனியா நலன் புரிநிலையத்தில் இருந்த மக்களை பேட்டி எடுக்க வந்திருந்த பி பி சி செய்தியாளர் மாணிக்கவாசகம், சனங்களுக்கு சொல்லி கொடுத்தார் இப்படி " நான் இப்ப உங்களிட்ட கேள்வி கேப்பன்! நீங்கள் ஆமி செல்லடிச்சு சனம் நிறைய செத்தது எண்டு சொல்லுங்கோ! இயக்கம் ஆள்பிடிச்ச கதையள் சொல்ல வேண்டாம் "//

யோ....அந்தாள் மாறிச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்,

பாதுகாப்பு வலயத்தினுள், மக்களின் நடுவினுள் அவங்கள் ஷெல் வைச்சு அடிச்சதை மறைச்சு, இலைக் கஞ்சியும், சோறும் தந்ததை சொல்லச் சொல்லியிருக்கனும் சகோ.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இந்த வார வீரகேசரியில, ஐ நா அறிக்கை பற்றி வன்னி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள்! வன்னி மக்கள் ஐ நா அறிக்கை தமக்கு கிடைச்ச நீதி எண்டு சொல்கிறார்களாம்! ஏன் வீரகேசரி கொழும்பு மக்களை பேட்டி எடுத்து போடவில்லை? போர்குற்ற படங்களை இணையத்தில் பார்க்கும் போது கொழும்பு மக்களுக்கு துடிக்கவில்லையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஈழத்தமிழனின், வன்னித் தமிழனின் உண்மையான உணர்வுகளை அப்படியே எழுதி இருக்கிறீர்கள் நிரு! பார்த்து யாராவது துரோகி என்று சொல்லப் போகிறார்கள்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, நான் தெரியாமல்தான் கேட்கிறேன்! தமிழ் கூட்டமைப்பில இருக்கிற பிரேமச்சந்திரன், அடைக்கலநாதன், மாவை சேனாதி இந்த மாதிரியான ஆக்கள் கடைசியா எப்ப யாழ்ப்பாணத்துக்கு வந்தவை? சனங்களோட என்ன கதைச்சவை? ஏதும் காசு கீசு குடுத்தவையோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


இந்த வார வீரகேசரியில, ஐ நா அறிக்கை பற்றி வன்னி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள்! வன்னி மக்கள் ஐ நா அறிக்கை தமக்கு கிடைச்ச நீதி எண்டு சொல்கிறார்களாம்! ஏன் வீரகேசரி கொழும்பு மக்களை பேட்டி எடுத்து போடவில்லை? போர்குற்ற படங்களை இணையத்தில் பார்க்கும் போது கொழும்பு மக்களுக்கு துடிக்கவில்லையா?//

இந்தத் துடிப்பு, சுறணை எல்லாம் டீவி சீரியலுக்கு முன்னாடியும், பைலாப் பாட்டுக்குப் பின்னாடியும் பார்த்தால்...ஒரு தூசு சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஈழத்தமிழனின், வன்னித் தமிழனின் உண்மையான உணர்வுகளை அப்படியே எழுதி இருக்கிறீர்கள் நிரு! பார்த்து யாராவது துரோகி என்று சொல்லப் போகிறார்கள்!//

ஏற்கனவே, பல பட்டங்கள் வழங்கிட்டாங்க...இப்ப வேறை வெளி நாட்டிலை தப்பி ஓடி இருக்கிற தூரோகி என்று, புதுக் கதை வேறு சொல்லுறாங்க.
உள் நாட்டில் இருந்து எழுதினால் உண்மைகள் சுடுமாம், வெளி நாடு என்றால் மிகைப்படுத்தி எழுதுறான் என்று முடிக்கலாம் என்று பிளான் வேறு..
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


நிரு, நான் தெரியாமல்தான் கேட்கிறேன்! தமிழ் கூட்டமைப்பில இருக்கிற பிரேமச்சந்திரன், அடைக்கலநாதன், மாவை சேனாதி இந்த மாதிரியான ஆக்கள் கடைசியா எப்ப யாழ்ப்பாணத்துக்கு வந்தவை? சனங்களோட என்ன கதைச்சவை? ஏதும் காசு கீசு குடுத்தவையோ?//

ஹி...ஹி...
அவர்கள் இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் வந்தார்கள்.
இப்போ சுரேஷ் பிரேமச்சந்திரந் ஜேர்மனியிலை.

சேனாதிராஜா...கனடாவிலை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, இந்த தலையிடிக்குத்தான் நான் இலங்கை விஷயத்தையே கையில எடுக்கிறதில்லை! நீதி செத்துப் போய் நீண்ட காலமாச்சு! நிரு, சிங்களவன் ஏதாவது தீர்வு தருவானா? சிங்களவனிட்ட தீர்வு கேட்டு வடக்கு கிழக்குக்கு வெளியால இருக்கிற தமிழனை போராடச்சொல்லிங்கோ! பாவம் வன்னி மக்கள்! அந்தப் பிள்ளைகள்! சின்னச்சின்ன pபள்ளிக் கூடப் பிள்ளைகள்! அதுகள் நிம்மதியா இருக்கட்டும்!ஒவ்வொரு தாய் தேப்பனும் தங்கட பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி நடத்திப் பார்க்கட்டும்! அதுகளிண்ட வாழ்க்கையில நிம்மதி கிடைக்கட்டும்! வன்னிப் பெடியள் நல்லா மோட்டச்சைக்கிள் ஓடித்திரியட்டும்! மொபைல் போன் பாவிக்கட்டும்! ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலையும் நல்லா படிப்பு மேலோங்கட்டும்!இந்த கொழும்பு கூட்டத்தை வாயப்பொத்திக்கொண்டு இருக்கச் சொல்லுங்கோ!!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நிரூபன்!உங்கள் கோபம் யார் மீது என்று தெரியவில்லை.ஆனால் பல பகுதிகளில் கால் பதிக்கும் உங்கள் எழுத்துக்கள் இந்த நேரத்தில் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு கேள்வி எழுப்புகிற மாதிரி தெரிகிறது.

மண்ணுக்குள் இருப்பவர்கள் தங்கள் குரல்களை உயர்த்த முடியாவண்ண்ம் அவர்கள் குரல்வளையில் கயிறு இறுக்கப்படுகிறதென்பதாலேயே புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து குரல் எழும்புகின்றன.

ராஜபக்சே குழுவினர் ஓரளவுக்காவது மனிதாபிமானம் கொண்டு போரை நிகழ்த்தியிருந்து போருக்குப் பின் பொது உலகையும்,தமிழக மக்களின் உதவிகளையும் ஏற்றுக் கொண்டிருந்தால் மக்கள் மீதான உதவிக்கரங்கள் நிறைய வந்து சேர்ந்திருக்கும்.

நீளமாகும் பின்னூட்டம் கருதி மீண்டும் தொடர்கிறேன்.

ஆகுலன் said...
Best Blogger Tips

"இலங்கையில் உள்ள அனைவரும் போரிட்டுச் செத்த பின்னர் நீங்கள் வந்து சொகுசாக ஒரு நிலத்தை ஆள வேண்டுமாம்."
அண்ணா நான் ஒரு புலம்பெயர் தமிழன். உங்களது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நீங்கள் மண்ணுக்குள்ளிருந்து எப்படி ஈழப்பிரச்சினையை பார்க்கிறீர்கள் என்ற பகிர்வை வரவேற்கிறேன் என்பதோடு பதிவுலகம் 2008 முதல் எப்படி செயல்படுகிறது என்கின்ற பொதுப் பார்வை உங்களுக்கு வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இப்போதைக்கு ஈழப் பிரச்சினையை முன் கொண்டு செல்ல இயலும்.

நான் பல முறை பல பின்னூட்டங்களில் சொல்லியது

நடந்தது நடந்து விட்டதென்று சமாதானம் செய்து கொண்டு ராஜபக்சே அரசு சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு பின் தொடர்வது.

ராஜபக்சே அரசு வெளி ஊடகங்களை,N.G.O க்கள்,தமிழகத்திலிருந்து வரும் உதவிகளை நிறுத்தியதனால் மட்டுமே மண்ணில் அவதிப்படும் மக்களுக்கு உதவ இயலாமல் இருக்கிறதென்பதோடு அப்படி அனுமதி அளித்திருந்தால் ராஜபக்சே குழுவினரின் போர் குற்றங்கள் இன்னும் அதிகமாக உலக மக்களின் கண்களுக்கு வெளி வந்திருக்கும்.

மக்கள் என்ற கருணைக்கும் அப்பால் பூகோள ரீதியாக இலங்கை உலக பொருளாதாரம் என்ற மையத்திலும் இந்தியா,சீனா போட்டி,அமெரிக்காவின் கண் என்று பெரும் புயலில் சிக்கிக்கொண்டது என்பதால் மக்கள் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியாகி விட்டது.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

தற்போதைய ஐ.நா அறிக்கை ராஜபக்சேவுக்கு செக் வைப்பதோடு இன்னும் தீர்வுகளுக்கான தூரம் வெகு தொலைவில் இருப்பதால் மக்கள் நிலைகளுக்கு உணர்வு பூர்வமாக வருந்துவது தவிர வேறு வழியில்லை.

உணவு,ஏனைய அத்தியாவசிய தேவைகள் எல்லாம் இலங்கை வர முயற்சித்த கல்கத்தா,சென்னையென்று ஊர் சுத்திய கப்பல் கதைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

எய்தவன் இருக்க அம்பை நோகுவது போல் இருக்கிறது உங்கள் கருத்து சகோ!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

எய்தவன் இருக்க அம்பை நோகுவது போல் இருக்கிறது உங்கள் கருத்து சகோ!//

விளங்கவில்லை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தற்போதைய ஐ.நா அறிக்கை ராஜபக்சேவுக்கு செக் வைப்பதோடு இன்னும் தீர்வுகளுக்கான தூரம் வெகு தொலைவில் இருப்பதால் மக்கள் நிலைகளுக்கு உணர்வு பூர்வமாக வருந்துவது தவிர வேறு வழியில்லை.///

இதுதான் முடிவா? அரசாங்கம் தீர்வு குடுக்கும் வரை மக்கள் வாழ்வு அவ்வளவுதானா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அரசாங்கம் எப்ப தீர்வு குடுக்கும்? அது எப்படிப்பட்ட தீர்வாக இருக்கும்? என்ன தீர்வு எமக்கு இப்போது தேவை? யாருக்கு தேவை? வடக்கு கிழக்கு தமிழர்களுக்கா? அல்லது ஒட்டு மொத்த இலங்கை தமிழருக்கா? தீர்வு யாருடைய கையில் கொடுக்கப்படும்?யாராவது விளக்கம் சொல்லுங்கப்பா?

கவி அழகன் said...
Best Blogger Tips

நியாயமான கோபம்
புலம் பெயர் தமிழர்கள் இன்னும் 90 ஆம் ஆண்டு சிந்தநியோடே இருக்கிறார்கள்

கவி அழகன் said...
Best Blogger Tips

எல்லாம் காசுதிமிறால வார கதைகள்
மரணம் மரண பயம் தெரிந்திருந்தால்
இப்படி கதைக்க மாட்டார்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


நிரூபன்!உங்கள் கோபம் யார் மீது என்று தெரியவில்லை.ஆனால் பல பகுதிகளில் கால் பதிக்கும் உங்கள் எழுத்துக்கள் இந்த நேரத்தில் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு கேள்வி எழுப்புகிற மாதிரி தெரிகிறது.//


ஈழப் பிரச்சினையின் உள்ளார்ந்த விடயங்கள் அடிப்படையில் பார்க்கையில், என் எழுத்துக்களில் நியாயம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

போருக்கெதிரான பிரச்சாரம் எல்லாம் இறுதி யுத்தம் வலுப் பெற்ற காலப் பகுதியில் தான் புலம் பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டன.
என் கோபம் என்பதை விட பதிவின் உள்ளடக்கத்தில், உள் நாட்டுத் தமிழர்கள் இறக்க வேண்டும், வெளி நாட்டில் உள்ளவர்கள் வந்து நாடாள வேண்டும் எனும் எண்ணத்தோடு வாழ்வோர் மீது தான்.

அப்பாவிச் மக்களை, போர் நடக்கும் வரை..அடியுங்கோ...அடியுங்கோ என குரல் எழுப்பி விட்டு, போர் முடிந்த பின்னர் கை அலம்பி விட்டது போன்ற உணர்வுடன் மறந்து போயுள்ளார்களே! அவர்கள் மீது தான் என் கோபம்.

அத்தோடு இந்தப் புலம் பெயர் தமிழர்களின் கூற்றுக்களை நியாயப்படுத்தி வலையில் வந்து வீரம் காட்டுவார்களே அவர்கள் மீதும் என் கோபம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


நீங்கள் மண்ணுக்குள்ளிருந்து எப்படி ஈழப்பிரச்சினையை பார்க்கிறீர்கள் என்ற பகிர்வை வரவேற்கிறேன் என்பதோடு பதிவுலகம் 2008 முதல் எப்படி செயல்படுகிறது என்கின்ற பொதுப் பார்வை உங்களுக்கு வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இப்போதைக்கு ஈழப் பிரச்சினையை முன் கொண்டு செல்ல இயலும்.

நான் பல முறை பல பின்னூட்டங்களில் சொல்லியது//

சகோ, இப்போது ஈழப் பிரச்சினையை புலம் பெயர் தமிழர்கள் தலமையில் முன்னெடுத்துக் கொண்டு போய் என்ன செய்யப் போகிறீர்கள்?
போராடித் தீர்வு வாங்கப் போகிறீர்களா?

அது வரைக்கும், இறுதிக் காலம் வரை வன்னியில் இருந்து அவலப்பட்ட மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
உங்கள் கருத்தின் அடிப்படையில் நோக்கினால் முதலில் பிரச்சினைக்குத் தீர்வு, அதன் பிறகே மக்கள் வாழ்க்கைக்குத் தீர்வு என்றல்லவா தோன்றுகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


நீங்கள் மண்ணுக்குள்ளிருந்து எப்படி ஈழப்பிரச்சினையை பார்க்கிறீர்கள் என்ற பகிர்வை வரவேற்கிறேன் என்பதோடு பதிவுலகம் 2008 முதல் எப்படி செயல்படுகிறது என்கின்ற பொதுப் பார்வை உங்களுக்கு வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இப்போதைக்கு ஈழப் பிரச்சினையை முன் கொண்டு செல்ல இயலும்.

நான் பல முறை பல பின்னூட்டங்களில் சொல்லியது//

சகோ, என் பதிவில் நான் சொல்லிய விடயங்கள் என்ன?
அவற்றினை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள். 2008ம் ஆண்டு முதலான பதிவுலக அனுபவம் எனக்கு இல்லா விட்டாலும், தற்போதைய பதிவுல கருத்துக்களை மையப்படுத்தியே இக் கட்டுரை, அல்லது, நையாண்டிப் பகுதியினை அமைத்துள்ளேன்.


இப்போது ஈழப் பிரச்சினையை முன் கொண்டு செல்ல வேண்டிய பணியா?
அல்லது,
போரினால் பாதிப்ப்டைந்து இரண்டு வருடங்களாகும் நிலையிலும், கவனிப்பாரற்று இருக்கும் வறிய மக்களின், பொது மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் நிகழ்வா எம் கண் முன்னே நிற்கிறது?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

நடந்தது நடந்து விட்டதென்று சமாதானம் செய்து கொண்டு ராஜபக்சே அரசு சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு பின் தொடர்வது.//

அது சரி சகோ, இன்று இரண்டு வருடங்களாகியும், தமிழருக்குத் தீர்வேதும் வழங்காது காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. ஆனால்,
இப்போ பாருங்களேன்,

நீங்கள் கூறும் இந்த வசனமே, இராஜ...மீதான கோபத்தின் வெளிப்பாடாக உள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நல்ல நோக்கம் உடைய கருத்தாக அமையவில்லைத் தானே சகோ.

பொதுமக்கள் அவலத்தினை-
சிகப்பு சட்டை மீதான பகைமை மறைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்ராஜபக்சே அரசு வெளி ஊடகங்களை,N.G.O க்கள்,தமிழகத்திலிருந்து வரும் உதவிகளை நிறுத்தியதனால் மட்டுமே மண்ணில் அவதிப்படும் மக்களுக்கு உதவ இயலாமல் இருக்கிறதென்பதோடு அப்படி அனுமதி அளித்திருந்தால் ராஜபக்சே குழுவினரின் போர் குற்றங்கள் இன்னும் அதிகமாக உலக மக்களின் கண்களுக்கு வெளி வந்திருக்கும்.//

அப்போ, மக்கள் போஷாக்கான உணவின்றி/ சத்துணவின்றி வாடுவதையோ, பொருளாதார ரீதியில் சுய தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் நாட் கூலிகளாக காலத்தை ஓட்டுவதையோ வீடியோவாக எடுத்து புலம் பெயர் மக்களுக்கு காட்டி, உலக நாடுகளுக்கு காட்டி மக்கள் வாழ்வை மேம்படுத்துவதை விடுத்து;

போர்க் குற்றங்களை, நடந்து முடிந்தவைகளை காட்டி அனுதாபம் பெற்று சிகப்பு சால்வையை உள்ளே தள்ள முடியலையே என்று வருந்துகிறீர்கள்.

மக்கள் எக்கேடு கேட்டாலும் கெடட்டும் எனும் உள் நோக்கம் இதன் பின்னே இருக்கிறது என்பதை, கட்டுரையில் சொன்ன விடயங்களை எற்றுக் கொள்கிறீர்களா சகோ?

வெத்து வேட்டு said...
Best Blogger Tips

டாய் நிருபன் நீ ஒரு ஒரு துரோகி..சிங்களவனுக்கு கூட்டி கொடுக்கிரணீ...எத்தனை வன்னி நாய்கள் செத்தாலும்
எங்களுக்கு தமிழ் ஈழம் தான் முக்கியம்... வன்னியிலே தப்பின நாயால் ஆளுக்கு ஒரு கிரனைட்டை ஆமிக்கு மேலே எறிஞ்சு இருந்தாலே
இன்னைக்கு எங்களுக்கு தமிழீழம் கிடைச்சிருக்கும்..நாங்கள் வந்து தலைவருக்கு ரோலக்ஸ் வாச்சும் குடுத்துட்டு படமும் எடுத்து இருப்போம்
..உங்களை எல்லாம் ஆருடா தப்ப சொன்னது?
தமிழீழம் தான் முக்கியம்...
பார் நாங்கள் எப்படி சிங்களவனுக்கு ஆப்பு வைக்குறோம் எண்டு...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>
நாங்கள் சாக வேண்டும், எங்கள் உறவுகள் அனைவரும் எரிந்து சாம்பலாக வேண்டும், அப்போது தான் நீங்கள் வாழலாம் எனும் எண்ணம் உங்களைப் போன்ற பலருக்கு இருக்கலாம்

இது ரொம்ப ஓவர் கற்பனையா இருக்கு. மனிதாபிமானம் அந்த அளவுக்கா இல்லாம போயிடுச்சு?

டக்கால்டி said...
Best Blogger Tips

இது ரொம்ப ஓவர் கற்பனையா இருக்கு. மனிதாபிமானம் அந்த அளவுக்கா இல்லாம போயிடுச்சு?//

Sir ithu cinema review illa

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மனிதாபிமானம் எங்கே போச்சு?

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் - மற்றுமொரு அருமையன பதிவு சகோ. இப்பதிவால் நீங்கள் துரோகிகள் என பலரால் பட்டம் சூட்டப்படலாம். இருப்பினும் தைரியமாக யதார்த்ததை எடுத்து வைத்துள்ளீர்கள்.

நான் இலங்கையில் வாழ்ந்தவன் இல்லை, எனக்கு அங்கு நடந்த துன்பங்கள் எல்லாம் தெரியாது தான். எனது பெற்றோர் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர் அவர்கள் வாழ்வில் பெற்ற துன்பங்களை நான் அறிவேன். தமிழ்நாட்டு அகதி முகாமில் இருக்கும் பலருடன் எனக்கு நட்பு இருந்தது, அவர்கள் படும் துயரங்களை கண்கூடாகப் பார்த்துள்ளேன்.

அதேப் போல கனடாவிலும் சில ஆண்டுகள் வாழ்கின்றேன். ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு வெளியே அதிகமாக வாழும் நாடு கனடாத் தான். தமிழ்நாட்டில் கூட இவ்வளவு ஈழத்தமிழர்கள் இல்லை எனலாம்,

முதலில் இலங்கையில் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் அனைவரும் நடுவர்க்கத்து குடும்பத்தவர்கள் தான். ஆனால் கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் பூரண சுதந்திரத்துடன், பூரண வசதியுடன் வாழ்கின்றார்கள் என்பதில் ஐயமே இல்லை.

இங்கு வந்து வாழும் என்னைப் போன்றத் தமிழ்நாட்டவருக்கு இந்நாடு அந்நியமாகத் தென்படுகின்றது - ஒவ்வொரு பேச்சிலும், மூச்சிலும், பழக்க வழக்கத்திலும். இத்தனைக்கு சென்னையிலேயே குழந்தை முதல் வளர்ந்தவன் நான். இருப்பினும் எனக்கு இந்த நகர வெளிநாடு வாழ் அந்நியமாக இருக்கின்றது. ஆனால் இங்குள்ள ஈழத்தவர் கனடா அவர்களின் சொந்த நாடாகவே பாவித்து செட்டில் ஆகியுள்ளார்கள்.

வீடு, கார், வேலை, என அனைத்தும் உண்டு. உணவகம், கோயில். திருமண மண்டபம், உறவினர்கள் என ஒரு சுதேச சமூகமாகத் தான் வாழ்கின்றார்கள். இங்கு வாழும் அனேகம் பேருக்கு மீண்டும் ஈழம் திரும்பும் எண்ணமும் துளியும் இல்லை எனலாம். முதியவர்கள் அதாவது 50-60 வயதுக்கு மேற்பட்டோர் தான் பால்யக் கால நினைவுகளுடன் நாடு திரும்பும் விருப்பத்துடன் உள்ளனர்.

இங்கு அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்பதும் உண்மை.

ஆனால் ...............

ஈழத்தமிழர்களில் நான் அவதானித்தது - பெரும்பாலானோர் இந்திய வெறுப்பாளர்கள். ஒரு சில இந்திய வம்சாவளி அல்லது இந்தியத் தொடர்புடைய ஈழத்தவர் மட்டுமே இந்திய வெறுப்பற்றவர்கள். மற்றொன்று இங்குள்ள ஈழத்தவர் அனைவருமே !!! தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் - ஆனால் அதனால் ஈழத்தமிழர் இறந்தாலும், அவர்கள் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டாலும், கல்வி பாதிக்கப்பட்டாலும் துளியும் மறு எண்ணமற்றவர்கள்.

இன்னும் சிலரோ - ஈழத்தில் யுத்தம் நடந்தால் அவர்களின் உறவினர்களை அகதிகளாக இங்கு அழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஓங்கியவர்களாக இருக்கின்றார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல சம்பாதித்து தமிழ்நாடு திரும்பி வீடுக் கட்டி சொந்த நாட்டில் வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அதுபோக !!! தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவும் எண்ணம் துளியும் இல்லை, இலங்கையில் துளிக்கூட வெளிநாட்டு உதவி இல்லாத எண்ணற்றக் குடும்பங்களுக்கு உதவும் எண்ணமும் இல்லை. கனடா தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பு ஈழத்தில் இருக்கும் குடும்பங்களைத் தத்தெடுத்து உதவும் திட்டம் அறிமுகம் செய்தது. ஆனால் அதற்கு போதிய ஆதரவு இல்லாமல் போனது .................. !!!

Anonymous said...
Best Blogger Tips

இலங்கையில் தனிநாடு பெற புலம் பெயர் தமிழர்கள் நினைப்பது எல்லாம் -- ஈழத்தில் போராடி செத்தது போன்று, தமிழ்நாட்டில் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு தமிழர்கள் போராட வேண்டும் என்பதே. மீறி நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள் எனக் கேட்டுவிடாதீர்கள். கேட்டால் பணம் கொடுத்தோமே ! சாலை மறியல் செய்தோமே என்பார்கள்.

யாருக்குப் பணம் கொடுத்தார்கள் - தீவிரவாத இயக்கத்துக்கு. சாலை மறியல் செய்தார்கள் ஒரு மாதம் மட்டும் சிலர். சொல்லப்போனால் அனைத்து மக்களும் போராட்டம் செய்தது ஒன்று இரண்டு நாள் மட்டுமே. அதுவும் பலர் 4 மணிக்கு மேல் வேலை முடிந்து சும்மா நின்றுவிட்டுப் போனார்கள். நானோ வேலைக்கு லீவுப் போட்டுவிட்டு போனேன் .................. !!!

கனடாவில் போராடினால் போலிஸ் அடிக்காதுங்க.. அமைதியா இருப்பாங்க ...... பசித்தால் வாங்கி உண்ண மெக்டோனால்ட், டிம் கோர்டன் என அனைத்தும் உண்டுங்க..

தமிழ்நாட்டில் போராடினால் - என்னவாகும்? காவல் துறை அடிப்பானுங்க ....... பசித்தால் வாங்கி உண்ண முடியாது. அது மட்டுமின்றி, அங்குள்ள வாழ்வில் ஒரு நாள் வேலைக்குப் போகாமல் போனாலும் அன்றாடக் கஞ்சிக்கே வழியில்லை.

ஈழத்தில் போராடியவர்களின் வலியை நிரூபனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ............ !!!

Anonymous said...
Best Blogger Tips

ஈழப் போரில் இறுதியில் செத்த மக்களுக்கும் சாதியமும் மறைந்து நிற்கின்றது என ஒரு கருத்து வருகின்றது சகோ. இதுக் குறித்து எனக்கு சரியாகத் தெரியவில்லை. கண்டியில் வாழ்ந்து பின்னர் வன்னியில் குடியேறியவர்கள் பலர் இறந்துவிட்டதாக அறிந்தோம். வன்னியில் இந்திய வம்சாவளியினர் ஆயிரக் கணக்கில் குடியேறி வாழ்ந்தார்கள். மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த எம் உறவுகள் போரினால் பாதிக்கப்பட்டும், கடைசி யுத்தத்தில் இருசாராராலும் காவு வாங்கப் பட்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் மாண்டவர்கள் ஈழத் தலித் மக்களே !!! இதுக் குறித்து தகவல்கள் வேண்டப்படுகின்றேன் நிரூபன்...........

Anonymous said...
Best Blogger Tips

@ ராஜ நடராஜன் - //உணவு,ஏனைய அத்தியாவசிய தேவைகள் எல்லாம் இலங்கை வர முயற்சித்த கல்கத்தா,சென்னையென்று ஊர் சுத்திய கப்பல் கதைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. //

உண்மை தானுங்க.. இல்லை என சொல்லவில்லை. ஆனால் புலத்தில் இருந்து மணி ஆர்டர் ஈழத்துக்கு அனுப்ப வசதி இருக்குங்க. விளம்பரம் எல்லாம் போடுறாங்க .......... வன்னிக்கு நேரிடையாக பணம் அனுப்பலாம்னு. ஆனால் எத்தனை பேர் ஈழத்தில் துன்பப் படும் மக்களுக்கு பணம் அனுப்பியுள்ளார்கள் ???? இருக்கும் வாய்ப்பையே பயன்படுத்தவில்லை. இல்லாத வாய்ப்பைச் சொல்வது நொண்டிச் சாக்கு...

உணவு உலகம் said...
Best Blogger Tips

மனிதம் செத்துப்போய் விட்டதா?

உணவு உலகம் said...
Best Blogger Tips

மனிதர்களை மடிந்து போக சொல்ல யாருக்கு உள்ளது உரிமை?

Anonymous said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி - // அரசாங்கம் தீர்வு குடுக்கும் வரை மக்கள் வாழ்வு அவ்வளவுதானா? //

இதைத் தான் நானும் பிரதிப் பலிக்கின்றேன். தமிழீழம் தனிநாடு, தனிமாநிலம் பெற்றப் பின் தான் மக்களின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படுவோம் எங்கின்றார்கள். அதுவரை சோற்றுக்கு சிங்கியடித்து சாவதா அங்குள்ள ஏழை எளியோர்? உதவி செய்வதை சிங்கள அரசு தடுக்குதுனு சொல்றாங்க -- ஆனால் பலர் ஈழத்துக்கு இன்ப சுற்றுலா சென்று வருவதை இல்லை என மறுக்க முடியுமா?? இன்பச் சுற்றுலா செல்லத் தெரிந்தவர்களுக்கு அங்கிருக்கும் பசித்தவனுக்கு உதவி செய்யும் எண்ணமில்லை..

அங்குள்ளவர்கள் துன்பப்படவேண்டும், அதைக் காட்டி அனுதாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்தை நானும் வன்மையாக கண்டிக்கிறேன்................

Anonymous said...
Best Blogger Tips

@ சி.பி. செந்தில் குமார் - //இது ரொம்ப ஓவர் கற்பனையா இருக்கு. மனிதாபிமானம் அந்த அளவுக்கா இல்லாம போயிடுச்சு//

இது தான் உண்மை சகோ. மனிதாபிமானம் என்பது எல்லாம் எங்கும் இல்லாமல் போய்விட்டது. நம் தமிழ்நாட்டில் படிக்கவும், வாழவும் நாதியற்று இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு நாம் என்னத்தை செஞ்சுக் கிழிச்சோம் --- முதலில் அவர்களை நல்ல முறையில் வாழ வழி செய்வோம் -- அப்புறம் இலங்கையில் இருப்பவருக்கு உதவ போராடுவோம்.

Unknown said...
Best Blogger Tips

நண்பா...........இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் என்றால்....அது பாதிக்கப்பட்டவன் வலி நிறைந்த வாழ்கை வெளியிலருந்து பார்பவனுக்கு தெரியாது.......கை கிழிந்து ரத்தம் வரும்போது மட்டுமே அந்த வலி உரைக்கும்......இந்த விஷயத்தில் தமிழ் நாட்டு மக்கள் என்றுமே உணர்ச்சி வசப்பட்டவர்கள் அதனால் தான் இன்றும் இந்த அரசியல் சாக்கடிகள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்..........

பலருக்கு எங்க பிரச்சன என்ன பிரச்சன.........யாரால பிரச்சன......என்ற விஷயங்கள் சரியாக கொண்டு போகப்படவில்லை..........இதுவே நிதர்சன உண்மை!.

செங்கோவி said...
Best Blogger Tips

போர் என்பது எங்களுக்குச் செய்தி..உங்களுக்கு வலி!..தொடருங்கள்!

செல்வா said...
Best Blogger Tips

பெரும்பாலும் ஈழத்தமிழர் பற்றிய பதிவுகளில் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. காரணம் அவர்களின் வலியை அறியாமல் பின்னூட்டமிடுவது சரியாக இருக்காது! இவ்விசயத்தில் இதுவே எனது முதல் பின்னூட்டமும் கூட!

நீங்கள் சொல்வதுதான் எனது கருத்தும். சிங்களவர் , தமிழர் என்று மொழிவாரியாகப் பிரித்து சிங்களவர்களை எதிரியாக நினைக்கிறோமே ஒழிய , போரில் காயம்பட்ட , வாழ்வுகளை இழந்த மக்களுக்கு அவர்களின் வாழ்கையை சீரமைக்க என்ன செய்கிறோம் ?

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான். அனைவருமே மனிதர்கள்தான்! உயிர் எங்கு போனாலும் அதன் வலி கொடியது! முதலில் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்க்கவேண்டும் என்பதே எனது கருத்தும்!

( ஏதேனும் தவறாகக் கூறி இருந்தால் மன்னிக்கவும் )

தனிமரம் said...
Best Blogger Tips

எப்படி இருக்கிறீங்கள் நீரூபனே!
உங்கள் கோபம் புரிகிறது ஒருசிலருக்காக ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழரையே தாக்குவது போல் தெரிகிறது.
புலம் பெயர் தேசத்தில் ஒவ்வொருத்தரும் 80% வீதமானவர்கள் யுத்ததிற்கு முகம் கொடுத்தவர்கள் தானே! அறிவுத்துறைசார்  தப்பித்தார்கள் மற்றவர்கள் அதிகமாக புலம் பெயர்ந்தது1990இன் பின்பே!
அப்படியானவர்கள் பல இன்னும் வலியும் வேதனையுடன் தான் வாழ்கிறார்கள்! 
ஒருவகையில் இவர்களும் போரை விரும்பாதவர்கள் தான் !
இன்னும் விடயங்கள் தருவதற்கு கோப்பை பார்த்துக்கொண்டு இருக்கிறது என் கைபடனும் என்று மீண்டும் வருவேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

போர் உக்கிரமானகாலகட்டத்தில் முக்கிய mp மார்கள் தலமையின் செய்தி என்று கொண்டு எத்தனை புலம்பெயர் பிச்சைக்காரர்களிடம் போரின் பொய்யான சாகாசங்களைக்கூறி பணம் பரித்த போது கொடுக்காதவர்கள் மாற்றுக்குழு என்றவர்கள் இப்போது புலம்பெயர்ந்தவர்களை குற்றவாளிக்கூட்டில் நிற்கவைப்பது உங்களின் கூற்றின் மூலம் தெரிகிறது இப்படியான தவறுக்கு காரணம் யார் !
சாதாரன புலம்பெயர் சமூகம் என்ன செய்யமுடியும்!
மந்தைகள் போல் சிலர் வழிநடத்தியது தாயக உறவுகளுக்கு புரியுமா!
இங்கே எங்களின் ஓவ்வொரு துளி இரத்தமும் போராளியுடன் ஒப்பிட்டு தரம்தாழ்த்திய செயல்கள் தாயகத்துக்கு தெரிந்திருக்குமா!

தனிமரம் said...
Best Blogger Tips

போர்காலத்தில் உண்டியல் குழுக்கியவர்கள் நம் உறவுகள் அந்திமகாலத்தில் சிறையில் இருந்து வெளி எடுப்பதற்கு பணம் பிரட்டமுடியாத நிலைக்கு கொண்டு வந்த mp மார்கள் ஏன் புலம் பெயர் துயரங்களை தாயக உறவுகளுக்கு எடுத்துக்கூறி போர் உக்கிரத்தை தனித்திருக்கலாமே! ஒவ்வொருமுறையும் ஏன் இந்தியா.லண்டன் என்று ஓடுகினம் என்னுறவுகள் இன்னும் தெய்யத்த கண்டி முகாமிலும் பூசாமுகாமிலும் வாடும் போது இவர்களுக்கு புலம் பெயர்ந்த வர்களுக்கு ஏன் கூஜா தூக்கினம் என்று புரிகிறதா உங்களுக்கு நண்பரே!
இப்போது அமைதி,வடக்கின் வசந்தம் ஏங்கே எல்லாம் புலம்பெயர் சொத்துக்களை அல்லவா தாயகத்தில் சூரையாடுகிறார்கள் !
எத்தனை துயரங்களை வன்னிமக்களைப்போல் நாமும் தாங்கி வாழ்கின்ரோம் சகோ!

தனிமரம் said...
Best Blogger Tips

ஒரு பக்கம் பார்க்கும் தாயக உறவுகளுக்கு புலம் பெயர் வாழ்வாதார திண்டாட்டங்களை சமாதான விரும்பிகள் ஏன் முன்காட்டவில்லை!
விசா இல்லாட்டியும் பணம் கொடு வன்னியில் உன் உறவுகள் காப்பற்றப்படும் என்று கூறியே பணம் சேர்த்தவர்கள் இன்று ஏன் உங்களின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் இருப்பது எனக்கு புரியவில்லை!
ஒவ்வொரு உயிரும் பெரிதானது தீக்குளிக்கவும் உண்ணாவிரதம் இருந்து உயிர்மாய்க்க தூண்டியவர்கள் புலம் பெயர் உறவுகள் மட்டுமா?'

தனிமரம் said...
Best Blogger Tips

உங்கள் கருப்பொருளுக்கு வித்திட்டவரிடம் கேளுங்கள் புலம் பெயர்தேசத்தில் எத்தனை பேர் நிம்மதியாக 5மணித்தியாலம் நித்திரை கொள்கிறான் என்று தாயகத்தில் இத்தனை அவலம் என்றே புலம் பெயர் மக்களை சிந்திக்கவிடாதவரிடம் கேளுங்கள் உண்மையாக கஸ்ரப்பட்டு பணம் சேர்த்து உறவுகளுக்கு நல்லது செய்தாரா என்று?
நாடுகடந்து அகதி என்ற போர்வையுனுள் எத்தனை நாத்தங்களை மூடி மறைக்கிரோம் நிறைவான சாப்பாடு ,இல்லரம் ஆன்மீகம் ,ஏதாவது செய்யமுடியுதா!பிறகு எதற்கு இந்த புலம் பெயர் மோகம் என்று தாயக உறவுகளுடன் சிண்டு முடியும் வேலை!

தனிமரம் said...
Best Blogger Tips

சகோ!நீங்கள் சொல்லும் புலம் பெயர் மக்கள் தன்னுடைய சுகத்தை துறந்து இன்றும் தனியாக தமது உறவுகளின் கஸ்ரத்திற்கு எவ்வளவு பணம் வட்டிக்கு எடுத்து  அனுப்பிக்கொண்டு இருக்கிறான் அவர்க்ளின் துயரத்தில் தீமூட்டுகிறது உங்களின் வாதம் மீண்டும் வருவேன் !

தனிமரம் said...
Best Blogger Tips

புலம் பெயர்ந்தவர்கள் வன்னி அவலத்தில் இருந்த போது அடுத்த தலைமுறை ஐரோபாவின் நகரங்களை ஸ்தம்பிக்க வைத்தார்களே!அவர்களா தன் உறவுகள் சாக தான் வாழனும் என்று என்னும் புலம்பெயர் சொந்தங்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

நாடுகடந்தவன் வில்லன் என்று காட்டுவதற்கே சில சில்லறைகள் புலத்திற்கும் தாயகத்திற்கும் சிண்டுமுடிகின்ற  வேலையை வேண்டும் என்றாள் சில ஆங்கிலம் படித்த மேதாவிகள் செய்தாலும் தாயக உறவுகள் தீக்குளிக்க புலம் பெயர்ந்தவர்கள் மானாடமயிலாட பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//நீங்கள் சொல்வதுதான் எனது கருத்தும். சிங்களவர் , தமிழர் என்று மொழிவாரியாகப் பிரித்து சிங்களவர்களை எதிரியாக நினைக்கிறோமே ஒழிய , போரில் காயம்பட்ட , வாழ்வுகளை இழந்த மக்களுக்கு அவர்களின் வாழ்கையை சீரமைக்க என்ன செய்கிறோம் ?///


சரியாக சொன்னாய் தம்பி, உன் கருத்துதான் என் கருத்தும்....

ரஹீம் கஸ்ஸாலி said...
Best Blogger Tips

நீங்களும், உங்கள் வம்சங்களும் ஆங்கிலம் பேசி, வெளி நாட்டு மொழி பேசி, புதுப் புது உடையணிந்து சுக போக வாழ்க்கை வாழ வேண்டும், ஆனால் அப்ப்பாவி மக்கள், வெளி நாட்டிற்கு போக முடியாதவர்கள் மட்டும் சாக வேண்டுமாம்? இது என்ன நியாயம்? உங்களுக்கு மட்டும் ஆங்கிலமோ, வேற்று நாட்டு மொழிகளோ தெரிந்தவுடன், இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொத்தடிமைகளாகப் போரிட்டுச் சாவுங்கள் எனக் கூறுவது சரியா? ஏன் நீங்களே போய்ச் சாகலாம் தானே?
நியாயமான கேள்வி

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ!மீண்டுமொரு முறை அனைத்துப் பின்னூட்டங்களையும் படித்து விட்டு தொடர்கிறேன்.

நீங்களும்,பின்னூட்டமிட்டவர்களும் ஒரு மையப்புள்ளியை தொடாமலே பேசுகிறீர்கள்.இப்போது மட்டுமல்ல,போரின் உக்கிர காலம் தொட்டே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினையே முக்கியமான ஒன்று என்பதால்தான் போர்க் காலத்தில் மக்களை கம்பி வேலிக்குள் அடைக்காமல் அவரவர் வாழ்விடங்களுக்கு குடியமர்த்தியிருந்தாலே ஏனையவர்கள் உதவியல்ல அவரவர் உழைப்பினாலேயே அவரவர் நிலங்களில் உழைத்தோ,மீன் பிடித்தோ ஏதாவது ஒரு வழியில் அவரவர் வாழ்வாதாரத்தை தேடி இருப்பார்கள்.அதற்கான சூழலை ஏற்படுத்தாதது ராஜபக்சே குழுவின் குற்றமல்லவல்லவா?

குஜராத்தில் ஏகப்பட்ட பூகம்பத்துக்கே அதிக நிதி சேர்த்து தந்தது தமிழகம்தான்.தன் மொழிக்காரர்களுக்கு உதவ முடியாமல் போனதுக்கு யார் காரணம்?
இந்த ராஜபக்சே குழுவின் இரும்புக்க்ர ஆட்சியல்லவா?

கனிமொழி,திருமா போன்றவர்கள் ராஜபக்சேவை சந்திக்க முயன்றதில் பல விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் துயர் துடைக்க இயலாமல் போனதற்கு காரணம் இலங்கை ஆட்சி முறைக் காரணமல்லவா?

புலம் பெயர்ந்தவர்கள் தமது சொந்தங்களுக்கு உதவ நினைத்தால் அந்த உதவிகள் நியாயமாகப் போய்ச் சேரும் உத்தரவாதம் இல்லாத ராணுவ இறுக்கம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் புலம்பெயர்ந்தவர்கள் மீது விமர்சனம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்

நாரயணன் கேட்ட கேள்விக்குப் பதிலே எய்தவன் ராஜபக்சே இருக்க புலம்பெயர் அம்புகளை நோவதேன்?

தனிமரம் said...
Best Blogger Tips

உக்கிரமானகாலகட்டத்தில் நீங்கள் யுத்தபூமியில் இருந்தீர்கள் அதே துயரத்தை நெஞ்சில் தாங்கி தன் சகோதரம் ,தாரம்,உறவுகள் அல்லல்பட்டபோது புலம் பெயர் தேசத்தில் நடைப்பிணமாக திரிந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்னுடன் இருந்தார்கள் என நேரில் பார்த்தவன் அந்த வலிதான் உங்களுடன் கருத்தில் மோதுகிறேன் சில வார்த்தைகளை நான் தவறாக கையாண்டால் உங்களைப்போன்ற நட்சத்திர பதிவரிடம் மன்னிப்பு கோருகிறேன்!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

ஹிட்லரின் ஆட்சி முறைகளை வரலாறில் படித்ததுதான்.கண்முன்னே ராஜபக்சே ஹிட்லராக இருப்பதே மக்களையும் காப்பாற்ற முடியாத அவலநிலைக்கு காரணமென்று சொன்னால் ராஜபக்சே மீதான காழ்ப்புணர்ச்சியே உங்கள் கண்களுக்கு அதிகம் தெரிகிறது.

மக்களுக்கு உதவுவதற்கு புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல உலகமக்களே திரளும் சாத்தியம் இப்பொழுது இருக்கிறது ஐ.நா அறிக்கை மூலமாக.ஆனால் ஐ.நா அறிக்கையே பக்கசார்பு கொண்டதென்றும் flawed என்றும் கருத்து சொல்லும் இலங்கை அரசை குறை காணாமல் புலம்பெயர்ந்தவர்களை நொந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

தனிமரம் said...
Best Blogger Tips

ஈழத்திற்காக தீக்குளி என்று மனித நேயம் கொண்ட புலம் பெயர் அகதி ஒருவனும் கூறிவிட்டு வீட்டில் நிம்மதியாக உறங்கமாட்டான் அவனுக்கும் அதன் வலிபுரியும் சகோ!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புலம்பெயர்ந்த மக்கள் குரலையொட்டியே இனி விளைவுகள் நிகழும்.அவர்கள் மட்டுமே குரல் கொடுக்கும் வலுவான நிலையில் இருக்கிறார்கள்.நான் வெறும் விமர்சகன் என்பதை விட என்னை விட புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்தங்களை,வேர்களை மண்ணில் விட்டு வந்தவர்கள் என்பதால் எனது பின்னூட்டத்தை விட அவர்களது மண்மீதான,மக்கள் மீதான அக்கறை அதிகமாக இருக்கும் என நம்புகிறேன்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

தலைப்பை நான் முன்பு பொருட்படுத்தாமல் இடுகையின் கருத்துக்களை ஒட்டியே எனது கருத்துக்களை முன்வைத்தேன்.மீண்டுமொரு முறை யோசிக்கும் போது யார் மீதோ உள்ள கோபத்தை இடுகைத் தலைப்பாக உபயோகித்துக்கொள்கிறீர்கள் என்ற உள்குத்து புலப்படுகிறது இப்பொழுது.

தனிமரம் said...
Best Blogger Tips

ஈழத்தில் போரினால் அழிந்தது ஒருதலைமுறையல்ல 3தலைமுறையினர் யுத்தம் தந்தபாடம் புலம் பெயர்ந்தவன் புரிந்து கொள்ளவில்லை என்றாள் அவன் பிழையாக வழிநடத்தப்பட்டவனே! அதற்காக அவனை நிந்திப்பது என்ன நியாயம் சகோ!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

உங்கள் முன்பு இரு வழிகள் இருக்கின்றன.

Reconcilliation என்று சொல்லப்படும் நிகழ்ந்தது நிகழ்ந்து விட்டதென ராஜபக்சே செய்தது சரியே என்று சமாதானம் செய்து கொண்டு விடுவது.

இரண்டாவது ஈழமண்ணின் படுகொலைகள் மனித உரிமை மீறல்கள்,இனப்படுகொலைகள் என்று நிருபிக்க வேண்டிய சூழலும்,தமிழர்களுக்கான சுயவாழ்வு என்ற உரிமையும்.

தேர்வு ஈழமக்களுடையது மட்டுமே.

தனிமரம் said...
Best Blogger Tips

உங்களுக்கு புலம் பெயர்ந்தவர் மேல் இருக்கும் கோபம் போன்றே சாதாரன அப்புகாமியின் மகனுக்கும் குனதாசவின் வாரிசுகளுக்கும் மேல்தட்டு இனவாதிகளின் தூண்டலுக்கு பலியாகும் சிங்களவருக்கும் தமிழர் என்றாள் யுத்த விரும்பிகள் என்ற கோபம் வரும்தானே!

தனிமரம் said...
Best Blogger Tips

உங்களுக்கு புலம் பெயர்ந்தவர் மேல் இருக்கும் கோபம் போன்றே சாதாரன அப்புகாமியின் மகனுக்கும் குனதாசவின் வாரிசுகளுக்கும் மேல்தட்டு இனவாதிகளின் தூண்டலுக்கு பலியாகும் சிங்களவருக்கும் தமிழர் என்றாள் யுத்த விரும்பிகள் என்ற கோபம் வரும்தானே!

தனிமரம் said...
Best Blogger Tips

நண்பரே நீங்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எரிகிறீர்கள் நாங்கள் தனிக்கைகள்,சட்டம்,சந்தேகம் என்ற வலைகளில் பின்னப்பட்டவர்கள் தாக்கம் புலம்பெயர்ந்தவர்மீது சுமத்துவது எவ்விதத்தில் நியாயம்!நம்பினோம் நல்லது நடக்கும் என்று அதற்காக  நெருப்பு மூட்ட தன்வீட்டை கொழுத்தும் மதிகெட்டவனா! புலம் பெயர்ந்த அகதிகள்,!

தனிமரம் said...
Best Blogger Tips

கனடாவில் ஒருத்தர்,லண்டனில் இன்னொருவர் ,பாரிஸ்சில் ஒருவர் பிழைவிட்டால் ஒட்டு மொத்த  நாடற்றவர்கள் கூட்டம் யுத்த விரும்பிகள் என்பீர்களா சகோ!

தனிமரம் said...
Best Blogger Tips

அன்பின் நிரூபனே!
மீண்டும் சொல்கிறேன் கருத்துச்சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது நட்சத்திர பதிவர் நீங்கள் ஆனால் சாதார எங்களைப்போன்ற   
புலம் பெயர் அகதிகள் போரின் துயரங்களை மறக்க நினைக்கிறோம்! யுத்தம் முடியக்கூடாது என் வீட்டுக்கு போகக்கூடாது என்று என்னும் மனித உனர்வு இல்லாத அரக்கர்கள் அல்ல,ஈழம் அழியனும் சந்ததிகள் அங்கவீனர்கள் ஆகனும்  நாங்கள் போய் சொகுசு வாழ்க்கை வாழனும் என்று என்னும் இழிவான என்னம் கொண்டவர்கள் கிடையாது! தவறு இருப்பின் மீண்டும் மன்னிப்பு கோருகிரேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

நண்பரே உங்களின் துயரங்களை மதிக்கிரேன் பலவிடயங்களை பதிவு செய்யனும் என்ற உங்களின் உயர்வான சிந்தனைக்கும் இழப்புக்களையும் தாண்டி முட்டிமோதி ஏதோ வாழுவோம் என்ற உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள் நாம்!
நமக்குள் கொள்கைகள் இருக்கிறது உங்கள் வலையில் நான் என் உனர்வுகள் நீட்ச்சியாகக் கூடாது என்ற என்னத்தின் விழைவே என்பின்னுட்டங்கள்!
இதை தனிநபர்தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளவேண்டாம்! மீண்டும் இன்னொரு பதிவில் வரும் வரை நட்புடன்!

shanmugavel said...
Best Blogger Tips

தமிழனுக்கு மட்டும் இப்படியெல்லாம் எழுதி வைத்திருக்கிறதா? தெரியவில்லை.உங்கள் கேள்விகள் முக்கியமானவை சகோ .இன்றைய அவலத்திற்கு இப்படிப்பட்ட கேடுகேட்டவர்களும் ஒரு காரணம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


தற்போதைய ஐ.நா அறிக்கை ராஜபக்சேவுக்கு செக் வைப்பதோடு இன்னும் தீர்வுகளுக்கான தூரம் வெகு தொலைவில் இருப்பதால் மக்கள் நிலைகளுக்கு உணர்வு பூர்வமாக வருந்துவது தவிர வேறு வழியில்லை.//

உங்கள் கருத்தின் அடிப்படையில் நோக்கினால். மக்களின் அவலங்களுக்கு, உணர்வுகளை மட்டுமே வெளிக்காட்ட முடியும், தற்போதைய நிலமையில் உதவிகளைச் செய்ய முடியாது, தீர்வு தான் முக்கியம் என்று சொல்கிறீர்கள்.

இந்தத் தீர்வை போர் முடிந்து பல ஆண்டுகளாகியும் தந்தார்களா? இல்லைத் தானே. எல்லோரும் சேர்ந்து தமிழர் தலையில் மிளகாய் அரைத்து தானே நாடகமாடி மகிழ்கிறார்கள். இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

உணவு,ஏனைய அத்தியாவசிய தேவைகள் எல்லாம் இலங்கை வர முயற்சித்த கல்கத்தா,சென்னையென்று ஊர் சுத்திய கப்பல் கதைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை.//

அறிந்தேன், கையாலாகதவர்களாய் இறுதிக் கட்டத்தில் இருக்கையில் தானே இந்த உணவு, மருந்து எல்லாம் ஒரு கப்பலில் வந்தது.
வணங்கா மண் எனும் பெயர் கொண்ட கப்பலில் வந்தது சகோ.

இவை அனைத்தும் யுத்தத்தின் ஆரம்ப நிலையில் வந்திருந்தால், பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் தானே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


எய்தவன் இருக்க அம்பை நோகுவது போல் இருக்கிறது உங்கள் கருத்து சகோ!//

நான் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதைப் பார்த்து விட்டா, இப்படிச் சொல்கிறீர்கள். உங்களின் உள்ளக் கருத்து யாவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி அல்ல. அந்தப் போருக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதில் தானே குறியாக இருக்கிறது சகோ ப்ளீஸ் மீண்டும் ஒரு தடவை பதிவினைப் படித்தால் நிறைய விடயங்கள் தெளிவாகும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


நியாயமான கோபம்
புலம் பெயர் தமிழர்கள் இன்னும் 90 ஆம் ஆண்டு சிந்தநியோடே இருக்கிறார்கள்//

எல்லோரும் இல்லைச் சகோ, ஆனால் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்கள் மாத்திரம் இதே சிந்தனையுடன் இன்றும் இருக்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@வெத்து வேட்டு


டாய் நிருபன் நீ ஒரு ஒரு துரோகி..சிங்களவனுக்கு கூட்டி கொடுக்கிரணீ...எத்தனை வன்னி நாய்கள் செத்தாலும்
எங்களுக்கு தமிழ் ஈழம் தான் முக்கியம்... வன்னியிலே தப்பின நாயால் ஆளுக்கு ஒரு கிரனைட்டை ஆமிக்கு மேலே எறிஞ்சு இருந்தாலே
இன்னைக்கு எங்களுக்கு தமிழீழம் கிடைச்சிருக்கும்..நாங்கள் வந்து தலைவருக்கு ரோலக்ஸ் வாச்சும் குடுத்துட்டு படமும் எடுத்து இருப்போம்
..உங்களை எல்லாம் ஆருடா தப்ப சொன்னது?
தமிழீழம் தான் முக்கியம்...
பார் நாங்கள் எப்படி சிங்களவனுக்கு ஆப்பு வைக்குறோம் எண்டு...//


நான் துரோகி தான் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் இவ்வளவு நடந்ததன் பின்னரும், இத்தனை உயிர் இழப்புக்களின் பின்னரும் உங்களுக்கு உணர்வு வரவில்லையே சகோ.
அதனை நினைத்து சிரிக்கிறேன் சகோ.

ஆப்பு வைக்கப் போறீங்களா? இதனைத் தானே எல்லோரும் பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்போ இங்கே உள்ள மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


நாங்கள் சாக வேண்டும், எங்கள் உறவுகள் அனைவரும் எரிந்து சாம்பலாக வேண்டும், அப்போது தான் நீங்கள் வாழலாம் எனும் எண்ணம் உங்களைப் போன்ற பலருக்கு இருக்கலாம்

இது ரொம்ப ஓவர் கற்பனையா இருக்கு. மனிதாபிமானம் அந்த அளவுக்கா இல்லாம போயிடுச்சு?//

ஆமாம், சகோ, மனிதாபிமானம் இருந்திருந்தால் இப்படி எல்லாம் பேசுவார்களா சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!


மனிதாபிமானம் எங்கே போச்சு?//

அதனைத் தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். உங்க ஊர் கடையில எங்கயாச்சும் கிடைக்குமா சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


நிரூபன் - மற்றுமொரு அருமையன பதிவு சகோ. இப்பதிவால் நீங்கள் துரோகிகள் என பலரால் பட்டம் சூட்டப்படலாம். இருப்பினும் தைரியமாக யதார்த்ததை எடுத்து வைத்துள்ளீர்கள்.//

துரோகி எனப் பட்டம் ஏற்கனவே சூட்டி விட்டார்கள் சகோ.
இப்போது கருத்துக்களை எப்படி அடக்கலாம், குரல் வளையை எப்பூடி நசுக்கலாம் என்று மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

ஆனால் ...............

ஈழத்தமிழர்களில் நான் அவதானித்தது - பெரும்பாலானோர் இந்திய வெறுப்பாளர்கள். ஒரு சில இந்திய வம்சாவளி அல்லது இந்தியத் தொடர்புடைய ஈழத்தவர் மட்டுமே இந்திய வெறுப்பற்றவர்கள். மற்றொன்று இங்குள்ள ஈழத்தவர் அனைவருமே !!! தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் - ஆனால் அதனால் ஈழத்தமிழர் இறந்தாலும், அவர்கள் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டாலும், கல்வி பாதிக்கப்பட்டாலும் துளியும் மறு எண்ணமற்றவர்கள்.

இன்னும் சிலரோ - ஈழத்தில் யுத்தம் நடந்தால் அவர்களின் உறவினர்களை அகதிகளாக இங்கு அழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஓங்கியவர்களாக இருக்கின்றார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல சம்பாதித்து தமிழ்நாடு திரும்பி வீடுக் கட்டி சொந்த நாட்டில் வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அதுபோக !!! தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவும் எண்ணம் துளியும் இல்லை, இலங்கையில் துளிக்கூட வெளிநாட்டு உதவி இல்லாத எண்ணற்றக் குடும்பங்களுக்கு உதவும் எண்ணமும் இல்லை. கனடா தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பு ஈழத்தில் இருக்கும் குடும்பங்களைத் தத்தெடுத்து உதவும் திட்டம் அறிமுகம் செய்தது. ஆனால் அதற்கு போதிய ஆதரவு இல்லாமல் போனது .................. !!!//

இவை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் அலசியிருந்தேன் சகோ, இந்திய உறவுகள் மீதான ஈழத் தமிழர்களின் வெறுப்புக்கள் பற்றி ஏற்கனவே என் பதிவில் அலசியிருந்தேன்.

ஊருக்கு வந்து எப்படி வெய்யிலினுள்ளும், சுக போகம் அற்ற ஓட்டை பஸ்களிலும் பயணம் செய்ய முடியும் சகோ, அதனால் தான் இவர்களுக்கு எங்கள் மீதான கரிசனையற்றுப் போய் விட்டது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


இலங்கையில் தனிநாடு பெற புலம் பெயர் தமிழர்கள் நினைப்பது எல்லாம் -- ஈழத்தில் போராடி செத்தது போன்று, தமிழ்நாட்டில் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு தமிழர்கள் போராட வேண்டும் என்பதே. மீறி நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள் எனக் கேட்டுவிடாதீர்கள். கேட்டால் பணம் கொடுத்தோமே ! சாலை மறியல் செய்தோமே என்பார்கள்.//

விளக்கம் அருமை சகோ, அதுவும் புலம் பெயர்ந்த உறவுகளையும், உள் நாட்டு மக்களையும் ஒப்பிட்டு நீங்கள் கூறும் கருத்துக்களில் நியாயம் உள்ளதை ஏற்றுக் கொள்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

ஈழப் போரில் இறுதியில் செத்த மக்களுக்கும் சாதியமும் மறைந்து நிற்கின்றது என ஒரு கருத்து வருகின்றது சகோ. இதுக் குறித்து எனக்கு சரியாகத் தெரியவில்லை. கண்டியில் வாழ்ந்து பின்னர் வன்னியில் குடியேறியவர்கள் பலர் இறந்துவிட்டதாக அறிந்தோம். வன்னியில் இந்திய வம்சாவளியினர் ஆயிரக் கணக்கில் குடியேறி வாழ்ந்தார்கள். மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த எம் உறவுகள் போரினால் பாதிக்கப்பட்டும், கடைசி யுத்தத்தில் இருசாராராலும் காவு வாங்கப் பட்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் மாண்டவர்கள் ஈழத் தலித் மக்களே !!! இதுக் குறித்து தகவல்கள் வேண்டப்படுகின்றேன் நிரூபன்...........///

சகோ, என்னுடைய சாதியம் பற்றி இரண்டாவது பாகத்தில் ஏலவே சொல்லியிருக்கிறேன். வசதி நிறைந்தவர்கள், பணம் படைத்தவர்கள் எல்லோரும் இறுதி யுத்தத்திற்கு முன்பதாகவே, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். வறியவர்கள், சாதி குறைந்தவர்கள் என மேல் தட்டு வர்க்கம் எனத் தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் மக்களில் பெரும் பகுதியினர் தான் இறுதி யுத்தத்தில் மாண்டார்கள்.

மலைய உறவுகளும் இதனுள் அடக்கம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

உங்களின் விளக்கமான, அர்த்தம் நிறைந்த, காத்திரமான பின்னூட்டங்களுக்கு, மீண்டும், மீண்டும் நன்றிகள் சகோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


மனிதம் செத்துப்போய் விட்டதா?//

அது தான் எனக்கும் புரியாமல் இருக்கிறது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


மனிதர்களை மடிந்து போக சொல்ல யாருக்கு உள்ளது உரிமை?//

கேள்வி கேட்டால், துரோகி என்று அழைக்கிறார்கள். நாங்கள் மௌனமாக இருப்பதே நல்லது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

இது தான் உண்மை சகோ. மனிதாபிமானம் என்பது எல்லாம் எங்கும் இல்லாமல் போய்விட்டது. நம் தமிழ்நாட்டில் படிக்கவும், வாழவும் நாதியற்று இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு நாம் என்னத்தை செஞ்சுக் கிழிச்சோம் --- முதலில் அவர்களை நல்ல முறையில் வாழ வழி செய்வோம் -- அப்புறம் இலங்கையில் இருப்பவருக்கு உதவ போராடுவோம்.//

நியாயமான கருத்துக்கள் சகோ, இப்படி எல்லோரும் நினைத்தால் எங்கள் உறவுகள் வாழ்வு என்றைக்கோ செழித்திருக்கும் சகோ. என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்


நண்பா...........இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் என்றால்....அது பாதிக்கப்பட்டவன் வலி நிறைந்த வாழ்கை வெளியிலருந்து பார்பவனுக்கு தெரியாது.......கை கிழிந்து ரத்தம் வரும்போது மட்டுமே அந்த வலி உரைக்கும்......இந்த விஷயத்தில் தமிழ் நாட்டு மக்கள் என்றுமே உணர்ச்சி வசப்பட்டவர்கள் அதனால் தான் இன்றும் இந்த அரசியல் சாக்கடிகள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்..........

பலருக்கு எங்க பிரச்சன என்ன பிரச்சன.........யாரால பிரச்சன......என்ற விஷயங்கள் சரியாக கொண்டு போகப்படவில்லை..........இதுவே நிதர்சன உண்மை!.//

நன்றிகள் சகோ. உள் காயத்தினை ஆற்றினால் தான், பின்னர் வெளிக் காயம் பற்றி சிந்திக்க முடியும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


போர் என்பது எங்களுக்குச் செய்தி..உங்களுக்கு வலி!..தொடருங்கள்!//

நன்றிகள் சகோ.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ!பின்னூட்டங்களை மீண்டுமொரு முறை காண வந்தேன்.வெத்துவேட்டு மாதிரி புனைப்பெயரில் பின்னூட்டம் போடுபவர்களை ஒரு முறைக்கு இரண்டு முறை கவனித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

போகப் போக பின்னூட்டங்கள் பழக்கப்பட்டு வருமென நம்புகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோமாளி செல்வா

பெரும்பாலும் ஈழத்தமிழர் பற்றிய பதிவுகளில் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. காரணம் அவர்களின் வலியை அறியாமல் பின்னூட்டமிடுவது சரியாக இருக்காது! இவ்விசயத்தில் இதுவே எனது முதல் பின்னூட்டமும் கூட!

நீங்கள் சொல்வதுதான் எனது கருத்தும். சிங்களவர் , தமிழர் என்று மொழிவாரியாகப் பிரித்து சிங்களவர்களை எதிரியாக நினைக்கிறோமே ஒழிய , போரில் காயம்பட்ட , வாழ்வுகளை இழந்த மக்களுக்கு அவர்களின் வாழ்கையை சீரமைக்க என்ன செய்கிறோம் ?

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான். அனைவருமே மனிதர்கள்தான்! உயிர் எங்கு போனாலும் அதன் வலி கொடியது! முதலில் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்க்கவேண்டும் என்பதே எனது கருத்தும்!

( ஏதேனும் தவறாகக் கூறி இருந்தால் மன்னிக்கவும் //

சரியாகவே கூறியிருக்கிறீர்கள் சகோ.
மக்கள் வாழ்க்கையினை முதன்மைப்படுத்தினால் தான், மக்களுக்கு மன நிம்மதி ஏற்படும். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி விருத்தியாகும், இதன் பின்னர் இரண்டாம் பட்சமாக இருப்பதே போர் குற்ற விசாரணை.

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

எப்படி இருக்கிறீங்கள் நீரூபனே!
உங்கள் கோபம் புரிகிறது ஒருசிலருக்காக ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழரையே தாக்குவது போல் தெரிகிறது.
புலம் பெயர் தேசத்தில் ஒவ்வொருத்தரும் 80% வீதமானவர்கள் யுத்ததிற்கு முகம் கொடுத்தவர்கள் தானே! அறிவுத்துறைசார் தப்பித்தார்கள் மற்றவர்கள் அதிகமாக புலம் பெயர்ந்தது1990இன் பின்பே!
அப்படியானவர்கள் பல இன்னும் வலியும் வேதனையுடன் தான் வாழ்கிறார்கள்!
ஒருவகையில் இவர்களும் போரை விரும்பாதவர்கள் தான் !
இன்னும் விடயங்கள் தருவதற்கு கோப்பை பார்த்துக்கொண்டு இருக்கிறது என் கைபடனும் என்று மீண்டும் வருவேன்!//

சகோ, ப்ளீஸ், இந்தப் பின்னூட்டங்களை எழுதுவதற்கு முன்பதாக ஒரு தடவை பதிவை முழுமையாக படித்திருக்கலாமே சகோ.

நான் ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழர்களும் என்று எங்காவது ஒரு வார்த்தையினைப் பதிவில் யூஸ் பண்ணி இருக்கேனா சகோ. ஏன் கருத்துக்களைப் புரியாதவராய், ஒரு பெரும் சமூகத்தையே நான் சாடுவதாக விளக்கமளிக்கிறீர்கள் சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
எப்படி இருக்கிறீங்கள் நீரூபனே!
உங்கள் கோபம் புரிகிறது ஒருசிலருக்காக ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழரையே தாக்குவது போல் தெரிகிறது.
புலம் பெயர் தேசத்தில் ஒவ்வொருத்தரும் 80% வீதமானவர்கள் யுத்ததிற்கு முகம் கொடுத்தவர்கள் தானே! அறிவுத்துறைசார் தப்பித்தார்கள் மற்றவர்கள் அதிகமாக புலம் பெயர்ந்தது1990இன் பின்பே!
அப்படியானவர்கள் பல இன்னும் வலியும் வேதனையுடன் தான் வாழ்கிறார்கள்!
ஒருவகையில் இவர்களும் போரை விரும்பாதவர்கள் தான் !
இன்னும் விடயங்கள் தருவதற்கு கோப்பை பார்த்துக்கொண்டு இருக்கிறது என் கைபடனும் என்று மீண்டும் வருவேன்!//

சகோதரம், முதல்- இரு பந்திகளும் இலங்கையில் இருக்கும் மக்களே, வாயை மூடுங்கள், உண்மைகளை வெளியே சொன்னால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் தீக்குளிப்பார்களா? என்று என்னைக் கேள்வி கேட்டு பின்னூட்டம் அனுப்பிய ஒரு நபருக்காகவே விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. ப்ளீஸ் புரியா விட்டால், உங்கள் கருத்துக்களைப் பகிர முதல் படித்துப் பாருங்கள் தோழா

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////ஈழத்தமிழனின், வன்னித் தமிழனின் உண்மையான உணர்வுகளை அப்படியே எழுதி இருக்கிறீர்கள் நிரு! பார்த்து யாராவது துரோகி என்று சொல்லப் போகிறார்கள்!/////

நிச்சயமாக நடக்கும் ஆனால் உண்மைகள் துயிலெழும்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

@Nesan
ஃஃஃஃஃ
உங்கள் கோபம் புரிகிறது ஒருசிலருக்காக ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழரையே தாக்குவது போல் தெரிகிறது.
புலம் பெயர் தேசத்தில் ஒவ்வொருத்தரும் 80% வீதமானவர்கள் யுத்ததிற்கு முகம் கொடுத்தவர்கள் தானே! ஃஃஃஃஃஃ

சகோதரம் நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் உங்களைப் போல் முகம் கொடுத்தவர்கள் இப்படி கூறுவதில்லையே... போராட வேண்டிய நேரம் கள்ள பாஸ் எடுத்து ஒழித்தோடியவர்கள் (பெரும்பாலானவர்) தான் இப்படி நடக்கிறார்கள்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

எப்படி இருக்கிறீங்கள் நீரூபனே!
உங்கள் கோபம் புரிகிறது ஒருசிலருக்காக ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழரையே தாக்குவது போல் தெரிகிறது.
புலம் பெயர் தேசத்தில் ஒவ்வொருத்தரும் 80% வீதமானவர்கள் யுத்ததிற்கு முகம் கொடுத்தவர்கள் தானே! அறிவுத்துறைசார் தப்பித்தார்கள் மற்றவர்கள் அதிகமாக புலம் பெயர்ந்தது1990இன் பின்பே!
அப்படியானவர்கள் பல இன்னும் வலியும் வேதனையுடன் தான் வாழ்கிறார்கள்!
ஒருவகையில் இவர்களும் போரை விரும்பாதவர்கள் தான் !
இன்னும் விடயங்கள் தருவதற்கு கோப்பை பார்த்துக்கொண்டு இருக்கிறது என் கைபடனும் என்று மீண்டும் வருவேன்!//

மூன்றாவது பந்திக்கு கீழே என்ன சொல்லியிருக்கிறேன், பலரும் என்று ஒரு வார்த்தை-

இவ் இடத்தில்;
புலத்தில் உள்ள அத்தனை உறவுகளையும் நான் சுட்டவில்லையே, பலர் என்றால் ஒரு தொகுதியினரைத் தானே சுட்டுகிறேன். பிளீஸ் இப்படியான பதிவுகளிற்கு அவசரப்பட்டு, பதிவை மேலோட்டமாக அலசி விட்டு பின்னூட்டம் போடுவதால், பின்னூட்டங்களையும் பதிவையும் படிக்கும் நண்பர்களுக்கு குழப்பங்கள் தான் ஏற்படும் சகோ. ப்ளீஸ்...ஒட்டு மொத்த புலமும் என்று ஒரு வார்த்தையை இங்கே பாவிக்கவில்லை.
பலர்........எல்லோரும் இல்லை, பலர் என்றே கூறியிருக்கிறேன் சகோ.
//புலம் பெயர்ந்த உறவுகளே! நீங்கள் தந்திரத்தால் அவர்களை விழுத்தலாம் என்பதில் குறியாக இருக்கிறீர்கள். ஆனால் அவர்களோ மந்திரத்தால் உங்கள் தலைகளில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே முட்டாள்கள் ஈழத் தமிழர்கள் தான், சிங்களவர்கள் அல்ல, மோட்டுச் சிங்களவர் என அவர்களை அழைப்பதை விடுத்து எங்களை மோட்டுத் தமிழர்கள் என அழைக்கத் தொடங்குங்கள்!//

இது எல்லோருக்கும் பொதுவான கருத்து.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

உண்மையில் இனி ஒரு போரை எதிர் கொள்ளும் சக்தி எங்கள் மனங்களுக்கோ உடல்களுக்கோ இல்லை... அழிக்கப்பட்ட எம் கல்வியையாவத கட்டியெழுப்புவோம்.. வன்னியில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டொலராவது தாருங்கள்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

100

Anonymous said...
Best Blogger Tips

@ ராஜ நடராஜன் - // புலம் பெயர்ந்தவர்கள் தமது சொந்தங்களுக்கு உதவ நினைத்தால் அந்த உதவிகள் நியாயமாகப் போய்ச் சேரும் உத்தரவாதம் இல்லாத ராணுவ இறுக்கம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் புலம்பெயர்ந்தவர்கள் மீது விமர்சனம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்
//

தாங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள் என எனக்குத் தெரியாது. ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழர்களும் இரக்கமற்றவர் என நிரூபன் கூறியதாகவும் தெரியவில்லை.

ஆனால் ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள், கனடாவில் ஈழத்தமிழர் அதிகம் வாழும் நாட்டில், அவர்கள் அதிகம் வாழும் நகரில் இருப்பவன் என்ற முறையில் ஒன்றை சொல்லுகின்றேன்.

அநேக ஈழத்தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் விடுமுறைகளில் சென்று தான் வருகின்றார்கள். இவர்கள் இங்கு குடியிருமை வாங்கியவர்ள் மட்டும் என நினைக்க வேண்டாம், அகதி விசாவில் வந்து ஒரு ஆண்டு முடியும் முன்னரேக் கூட இலங்கைக்கு சென்று வருகின்றார்கள். இலங்கையில் அச்சம் எனக் கூறினால் எப்படி அங்கு சுற்றுலா சென்று வர இயலும் என கனடா அரசாங்கம் இவர்களுக்கு கேள்வி எழுப்பியதும் இங்கு நினைவுக் கூரத்தக்கது.

இராணுவம் ஈழத்தில் அடக்குமுறை செய்வது உண்மை தான் என்றாலும், பண உதவிகள் செய்ய தடையே இல்லை. இங்கு அநேக தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் வன்னிக்கு நேரிடையாக பணம் அனுப்பும் வசதி இருப்பதாகவே விளம்பரம் செய்யப்படுகின்றது. ஆக புலத் தமிழர் இலங்கைக்கு சுற்றுலா செல்வதும், பணம் அனுப்புவதும் நடந்தே வருகின்றது.

அப்படி இருக்க ! துன்பப்படும் ஏழைகளுக்கு அவர்கள் உதவ முன்வரும் போதும் மட்டும் - இராணுவம் தடுப்பதாகக் கூறுவது அபத்தமாக இருக்கு.

நான் சொன்னது எல்லாம் பொய் என்பதை இங்கு யாராலும் நிருபிக்க முடியுமா சொல்லுங்கள்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃஃஃராஜ நடராஜன் said...
பின்னூட்டம் போடுபவர்களை ஒரு முறைக்கு இரண்டு முறை கவனித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

போகப் போக பின்னூட்டங்கள் பழக்கப்பட்டு வருமென நம்புகிறேன்.ஃஃஃஃஃஃஃ

ஆம் நிரு கருத்துக்களில் கவனமெடுங்கள்.. நாம் எழுத்துக்களையல்லவா பிரசவிக்கிறோம்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

போர் உக்கிரமானகாலகட்டத்தில் முக்கிய mp மார்கள் தலமையின் செய்தி என்று கொண்டு எத்தனை புலம்பெயர் பிச்சைக்காரர்களிடம் போரின் பொய்யான சாகாசங்களைக்கூறி பணம் பரித்த போது கொடுக்காதவர்கள் மாற்றுக்குழு என்றவர்கள் இப்போது புலம்பெயர்ந்தவர்களை குற்றவாளிக்கூட்டில் நிற்கவைப்பது உங்களின் கூற்றின் மூலம் தெரிகிறது//

//இதில் எம்பி மாரின் கருத்தை எங்கேயாவது நான் நியாயப்படுத்தி இருக்கிறேனா சகோ. பதிவுடன் தொடர்பில்லாத கருத்துக்களை மட்டும் பதிவிற்கு தருகிறீர்களே சகோ.

//
இப்படியான தவறுக்கு காரணம் யார் !
சாதாரன புலம்பெயர் சமூகம் என்ன செய்யமுடியும்!
மந்தைகள் போல் சிலர் வழிநடத்தியது தாயக உறவுகளுக்கு புரியுமா!
இங்கே எங்களின் ஓவ்வொரு துளி இரத்தமும் போராளியுடன் ஒப்பிட்டு தரம்தாழ்த்திய செயல்கள் தாயகத்துக்கு தெரிந்திருக்குமா!//

சகோ பதிவில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனை மீண்டும் ஒரு தடவை எனக்காக படித்து விட்டு, உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

போர்காலத்தில் உண்டியல் குழுக்கியவர்கள் நம் உறவுகள் அந்திமகாலத்தில் சிறையில் இருந்து வெளி எடுப்பதற்கு பணம் பிரட்டமுடியாத நிலைக்கு கொண்டு வந்த mp மார்கள் ஏன் புலம் பெயர் துயரங்களை தாயக உறவுகளுக்கு எடுத்துக்கூறி போர் உக்கிரத்தை தனித்திருக்கலாமே! ஒவ்வொருமுறையும் ஏன் இந்தியா.லண்டன் என்று ஓடுகினம் என்னுறவுகள் இன்னும் தெய்யத்த கண்டி முகாமிலும் பூசாமுகாமிலும் வாடும் போது இவர்களுக்கு புலம் பெயர்ந்த வர்களுக்கு ஏன் கூஜா தூக்கினம் என்று புரிகிறதா உங்களுக்கு நண்பரே!
இப்போது அமைதி,வடக்கின் வசந்தம் ஏங்கே எல்லாம் புலம்பெயர் சொத்துக்களை அல்லவா தாயகத்தில் சூரையாடுகிறார்கள் !
எத்தனை துயரங்களை வன்னிமக்களைப்போல் நாமும் தாங்கி வாழ்கின்ரோம் சகோ!//

அப்படி என்றால், இனியும் போர் வேண்டும் என ஒரு சில உள்ளங்கள் நினைப்பதற்கு காரணம்- புலம் பெயர் உள்ளங்கள் அல்ல,
மந்திரிகள் MP மார் என்று கூற வருகிறீர்களா சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

ஒரு பக்கம் பார்க்கும் தாயக உறவுகளுக்கு புலம் பெயர் வாழ்வாதார திண்டாட்டங்களை சமாதான விரும்பிகள் ஏன் முன்காட்டவில்லை!
விசா இல்லாட்டியும் பணம் கொடு வன்னியில் உன் உறவுகள் காப்பற்றப்படும் என்று கூறியே பணம் சேர்த்தவர்கள் இன்று ஏன் உங்களின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் இருப்பது எனக்கு புரியவில்லை!
ஒவ்வொரு உயிரும் பெரிதானது தீக்குளிக்கவும் உண்ணாவிரதம் இருந்து உயிர்மாய்க்க தூண்டியவர்கள் புலம் பெயர் உறவுகள் மட்டுமா?'//

ஊரில் இருந்தா தீக்குளிக்கத் தூண்டினார்கள் சகோ. அவலப் பட்டு அகதி முகாமினுள் இருந்த மக்களா தீக்குளிக்கத் தூண்டினார்கள்? இல்லையே, மந்திரிகள், அமைச்சர்களும் தூண்டினார்கள்.

இங்கே ஒரு உறவு, வந்து உண்மைகளை வெளியே சொன்னால் தீக்குளித்தல் இடம் பெறாது என்று வருந்தி விட்டுச் சென்றிருக்கிறது. அதன் கருத்திற்கு தான் நான் எதிர் வடிவம் கொடுத்திருக்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


சகோ!நீங்கள் சொல்லும் புலம் பெயர் மக்கள் தன்னுடைய சுகத்தை துறந்து இன்றும் தனியாக தமது உறவுகளின் கஸ்ரத்திற்கு எவ்வளவு பணம் வட்டிக்கு எடுத்து அனுப்பிக்கொண்டு இருக்கிறான் அவர்க்ளின் துயரத்தில் தீமூட்டுகிறது உங்களின் வாதம் மீண்டும் வருவேன் !//

புலம் பெயர் நாடுகளில் இருந்து தானே பல இணையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, எல்லோரும் போர் குற்ற விசாரணை என்று முதன்மைப் படுத்தி படங்களை வெளியிடுகிறார்களே தவிர, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையோ, இல்லை அவர்களின் வாழ்கையினையோ மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்களில்லை.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

இக்பால் செல்வன் said...

////அநேக தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் வன்னிக்கு நேரிடையாக பணம் அனுப்பும் வசதி இருப்பதாகவே விளம்பரம் செய்யப்படுகின்றது. /////

யாருக்காவது ஆர்வம் அல்லது எண்ணமிருந்தால் தெரிவியுங்கள் சமூக சேவகன் என்ற முறையில் நான் பாதிக்கப்பட்டவர்களது நேரடியான தொடர்பை பெற்றுதர தயாராக இருக்கிறேன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


புலம் பெயர்ந்தவர்கள் வன்னி அவலத்தில் இருந்த போது அடுத்த தலைமுறை ஐரோபாவின் நகரங்களை ஸ்தம்பிக்க வைத்தார்களே!அவர்களா தன் உறவுகள் சாக தான் வாழனும் என்று என்னும் புலம்பெயர் சொந்தங்கள்!//

இங்கு தான் நாங்கள் தவறு செய்திருக்கிறோம் சகோ. இறுதிக் கட்டத்தில் கைகள் எல்லாம் செயலிழந்த பின்னர் காப்பாற்றுங்கள் என்று தானே கெஞ்சினோம். இதனை மேற்குலம் மக்களைக் காப்பாற்றுங்க எனும் கண்ணோட்டத்தில் பார்த்திருக்குமா இல்லை
புலிகளைக் காப்பாற்றுங்க எனும் கண்ணோட்டத்தில் பார்த்திருக்குமா என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.

இது காலங் கடந்த ஞானம். இந்த வீதி மறிப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நாங்கள் 2002ம் ஆண்டு செய்திருந்தால் அதற்கான பலாபலன்கள் கடுகளவு என்றாலும் கிடைத்திருக்கும்- இதற்கான காரணத்தை விரிவாக விளக்கத் தேவையில்லை என்றி நினைக்கிறேன் சகோ.(2002ல் வலியோனாக இருந்தார்கள் தமிழர்கள்,
2008இன் பின்னர்..../////)

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நாடுகடந்தவன் வில்லன் என்று காட்டுவதற்கே சில சில்லறைகள் புலத்திற்கும் தாயகத்திற்கும் சிண்டுமுடிகின்ற வேலையை வேண்டும் என்றாள் சில ஆங்கிலம் படித்த மேதாவிகள் செய்தாலும் தாயக உறவுகள் தீக்குளிக்க புலம் பெயர்ந்தவர்கள் மானாடமயிலாட பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்!//

ஒரே ஒரு கேள்வி, தமிழ் நாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக பலர் தீக்குளித்தார்களே, அப்போது அந்த வறிய குடும்பங்க மீது உங்களால் என்ன செய்ய முடிந்தது சகோ?
ஏதாவது உதவிகள் செய்ய முடிந்ததா சகோ?
இல்லை முதன் முதலாக ஈழத் தமிழருகாக தீக்குளித்தவர் யார் எனும் விடயம் எங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் நினைவிருக்கிறது?
தெரிந்தால் அவர் யார் எனச் சொல்லுங்கள் பார்போம்.

Anonymous said...
Best Blogger Tips

இறுதி யுத்தத்தின் போது மக்களுக்கு என்று சொல்லி சேர்த்த பணத்தை ஒரு தொகுதி ஏப்பம் விட்டுவிட்டது. இப்போ ஆளாளுக்கு பார்த்து முழுசிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு சொல்வது போல நபர்கள் ஒரு ஐம்பது தொடக்கம் நூறு வரை தான் இருப்பார்கள் ஆனால் ஏனையவர்கள் நாட்டு மக்கள் மீது அக்கறை அற்று இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது நிரூபன். 95 % மான மக்கள் குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர்கள் அல்ல மாறாக தம் குடும்பத்தையோ அல்லது நெருங்கிய உறவுகளையோ ஈழத்திலே கொண்டிருப்பவர்கள் ஆக அவர்கள் எந்த விதத்தில் மீண்டும் ஒரு யுத்தம் வேண்டும் என்று நினைப்பார்கள் என்பது கேள்விக்குறியே?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நாடுகடந்தவன் வில்லன் என்று காட்டுவதற்கே சில சில்லறைகள் புலத்திற்கும் தாயகத்திற்கும் சிண்டுமுடிகின்ற வேலையை வேண்டும் என்றாள் சில ஆங்கிலம் படித்த மேதாவிகள் செய்தாலும் தாயக உறவுகள் தீக்குளிக்க புலம் பெயர்ந்தவர்கள் மானாடமயிலாட பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்!//

தாயக உறவுகள் நெருப்பாற்றி நீச்சலில் நிற்கையில் புலம் பெயர் உறவுகள் என்ன செய்தார்கள் என்று தெரிந்த பின்னுமா இது பற்றி பேசுகிறீர்கள்;-))
அடியுங்கோ, அடியுங்கோ என்று கோசம் போட்டு, உதவிகள் செய்தார்கள். ஆயுதம் வாங்க பணம் அனுப்பினார்கள். த.பு, கழகம் மூலம் பல நன்புரி உதவிகள் செய்தார்கள்.

ஆனால் இந்தியாவில் எங்களுக்காய் பல தமிழக உறவுகள் தீக்குளிக்கையில் புலம் பெயர் உறவுகள் என்ன செய்தார்கள் என்று ஒரு கணம் சிந்தியுங்கள். இலங்கை மக்களை விட்டு விட்டு,
தொப்புள் கொடி என்று கொண்டாடுவோமே, அவர்களைப் பற்றி பேசுங்கள் சகோ.
இவ் இடத்தில் ஒரு கணம் யோசியுங்கள்.
எங்களுக்காய் தீக்குளித்த தமிழக உறவுகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் அன்றாட வாழ்வியலைப் பற்றி யாராவது யோசித்தார்களா? உதவிகள் செய்தார்களா? அந்த தமிழக உறவுகளின் தியாகங்கள் எல்லாம் ஆறிய பின்னர்,
புலத்து உறவுகளினால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புக்களில் எத்தனை அமைப்புக்கள் இம் மக்களைப் பற்றிச் சிந்தித்தன சகோ.


தீக்குளிப்பு முடிந்ததும் ஒரு புரட்சிகர கவிதை, இரண்டு பாடல்கள், ஓராண்டு நினைவஞ்சலி, இதன் பின்னர் எமக்காய் தீக்குளித்தவர்களின் குடும்பங்களைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


சரியாக சொன்னாய் தம்பி, உன் கருத்துதான் என் கருத்தும்....//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரஹீம் கஸாலி

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

சகோ!மீண்டுமொரு முறை அனைத்துப் பின்னூட்டங்களையும் படித்து விட்டு தொடர்கிறேன்.

நீங்களும்,பின்னூட்டமிட்டவர்களும் ஒரு மையப்புள்ளியை தொடாமலே பேசுகிறீர்கள்.இப்போது மட்டுமல்ல,போரின் உக்கிர காலம் தொட்டே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினையே முக்கியமான ஒன்று என்பதால்தான் போர்க் காலத்தில் மக்களை கம்பி வேலிக்குள் அடைக்காமல் அவரவர் வாழ்விடங்களுக்கு குடியமர்த்தியிருந்தாலே ஏனையவர்கள் உதவியல்ல அவரவர் உழைப்பினாலேயே அவரவர் நிலங்களில் உழைத்தோ,மீன் பிடித்தோ ஏதாவது ஒரு வழியில் அவரவர் வாழ்வாதாரத்தை தேடி இருப்பார்கள்.அதற்கான சூழலை ஏற்படுத்தாதது ராஜபக்சே குழுவின் குற்றமல்லவல்லவா?//

ஆம், சகோ. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதை விடுத்து, போர் முடிந்த பின்னரும் ராஜபக்சவுடன் முரண்பட்டுக் கொண்டிருப்பது யார் குற்றம்? இதனால் அந்த மக்களுக்கு விடிவு வருமா?

சிவகுமாரன் said...
Best Blogger Tips

நான் கூட முன்னர் மீண்டும் ஈழம் பிறக்கும் , இன்னொரு தலைவன் வருவான் என்றெல்லாம் கவிதை எழுதினேன். உங்கள் வலி புரியாமல். உங்கள் பதிவுகள் உண்மை நிலவரத்தை உரைக்கின்றன. என் அறியாமைக்கு தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

உக்கிரமானகாலகட்டத்தில் நீங்கள் யுத்தபூமியில் இருந்தீர்கள் அதே துயரத்தை நெஞ்சில் தாங்கி தன் சகோதரம் ,தாரம்,உறவுகள் அல்லல்பட்டபோது புலம் பெயர் தேசத்தில் நடைப்பிணமாக திரிந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்னுடன் இருந்தார்கள் என நேரில் பார்த்தவன் அந்த வலிதான் உங்களுடன் கருத்தில் மோதுகிறேன் சில வார்த்தைகளை நான் தவறாக கையாண்டால் உங்களைப்போன்ற நட்சத்திர பதிவரிடம் மன்னிப்பு கோருகிறேன்!//

சகோ நான் ஒரு நாற்று. ஆதலால் என்னோடு எப்படி வேண்டுமானாலும் தாங்கள் பேசலாம்.
நட்சத்திரப் பதிவர் என்று பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேச வேண்டாம்.
அவங்க எங்க..நான் எங்கே.

உசுப்பேத்துறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


தலைப்பை நான் முன்பு பொருட்படுத்தாமல் இடுகையின் கருத்துக்களை ஒட்டியே எனது கருத்துக்களை முன்வைத்தேன்.மீண்டுமொரு முறை யோசிக்கும் போது யார் மீதோ உள்ள கோபத்தை இடுகைத் தலைப்பாக உபயோகித்துக்கொள்கிறீர்கள் என்ற உள்குத்து புலப்படுகிறது இப்பொழுது.//

சகோ, பதிவினுள் எல்லா கோபங்களையும் தான் உள்ளடக்கியுள்ளேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


கனடாவில் ஒருத்தர்,லண்டனில் இன்னொருவர் ,பாரிஸ்சில் ஒருவர் பிழைவிட்டால் ஒட்டு மொத்த நாடற்றவர்கள் கூட்டம் யுத்த விரும்பிகள் என்பீர்களா சகோ!//

பதிவில் ஒட்டு மொத்த புலம் பெயர் உறவுகளையும் சொல்லவில்லையே சகோ, தவறான புரிதல்கள் வேண்டாம் நண்பரே.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

உங்களுக்கு புலம் பெயர்ந்தவர் மேல் இருக்கும் கோபம் போன்றே சாதாரன அப்புகாமியின் மகனுக்கும் குனதாசவின் வாரிசுகளுக்கும் மேல்தட்டு இனவாதிகளின் தூண்டலுக்கு பலியாகும் சிங்களவருக்கும் தமிழர் என்றாள் யுத்த விரும்பிகள் என்ற கோபம் வரும்தானே!//

புலம் பெயர்ந்த எல்லாத் தமிழர்கள் மீதும் எனக்கு கோபம் இல்லை. போர் விரும்பும் மக்கள் மீது தான் கோபம் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


கனடாவில் ஒருத்தர்,லண்டனில் இன்னொருவர் ,பாரிஸ்சில் ஒருவர் பிழைவிட்டால் ஒட்டு மொத்த நாடற்றவர்கள் கூட்டம் யுத்த விரும்பிகள் என்பீர்களா சகோ!//

ஒட்டு மொத்த உறவுகளையும் சொல்லவில்லையே சகோ. ஏன் பதிவே புரியாதது போன்று ஒரு புதுக் கருத்தை திணிக்கிறீர்கள்?
ப்ளீஸ் ஒரு தடவை படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


அன்பின் நிரூபனே!
மீண்டும் சொல்கிறேன் கருத்துச்சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது நட்சத்திர பதிவர் நீங்கள் ஆனால் சாதார எங்களைப்போன்ற
புலம் பெயர் அகதிகள் போரின் துயரங்களை மறக்க நினைக்கிறோம்! யுத்தம் முடியக்கூடாது என் வீட்டுக்கு போகக்கூடாது என்று என்னும் மனித உனர்வு இல்லாத அரக்கர்கள் அல்ல,ஈழம் அழியனும் சந்ததிகள் அங்கவீனர்கள் ஆகனும் நாங்கள் போய் சொகுசு வாழ்க்கை வாழனும் என்று என்னும் இழிவான என்னம் கொண்டவர்கள் கிடையாது! தவறு இருப்பின் மீண்டும் மன்னிப்பு கோருகிரேன்!//

சகோ, உங்கள் கருத்துக்களுக்கா நீங்கள் மன்னிப்பெல்லாம் கூற வேண்டியதில்லை தோழா. பதிவில் நான் யார் யாரை எல்லாம் சாடியிருக்கிறேன் என்பதனை படித்துப் பாருங்கள். உங்களுக்கு என் கருத்தின் நியாயத் தன்மை புரியும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நண்பரே உங்களின் துயரங்களை மதிக்கிரேன் பலவிடயங்களை பதிவு செய்யனும் என்ற உங்களின் உயர்வான சிந்தனைக்கும் இழப்புக்களையும் தாண்டி முட்டிமோதி ஏதோ வாழுவோம் என்ற உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள் நாம்!
நமக்குள் கொள்கைகள் இருக்கிறது உங்கள் வலையில் நான் என் உனர்வுகள் நீட்ச்சியாகக் கூடாது என்ற என்னத்தின் விழைவே என்பின்னுட்டங்கள்!
இதை தனிநபர்தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளவேண்டாம்! மீண்டும் இன்னொரு பதிவில் வரும் வரை நட்புடன்!//

இதெல்லாம் தனி நபர் தாக்குதல் இல்லை சகோ, உங்கள் கருத்துக்கள் அத்தனைக்கும் நான் பொறுமையாகப் பதில் சொல்லியுள்ளேன். அதே போல என் கருத்துக்களுக்கும் நீங்கள் பதிவை ஒரு தடவை படித்த பின்னர் பதில் சொல்லுவீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் பொன்னான நேரத்தில் என் பதிவிற்கும் ஒதுக்கியதற்காக மனமார்ந்த நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel


தமிழனுக்கு மட்டும் இப்படியெல்லாம் எழுதி வைத்திருக்கிறதா? தெரியவில்லை.உங்கள் கேள்விகள் முக்கியமானவை சகோ .இன்றைய அவலத்திற்கு இப்படிப்பட்ட கேடுகேட்டவர்களும் ஒரு காரணம்.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

ஃஃஃஃஃராஜ நடராஜன் said...
பின்னூட்டம் போடுபவர்களை ஒரு முறைக்கு இரண்டு முறை கவனித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

போகப் போக பின்னூட்டங்கள் பழக்கப்பட்டு வருமென நம்புகிறேன்.ஃஃஃஃஃஃஃ

ஆம் நிரு கருத்துக்களில் கவனமெடுங்கள்.. நாம் எழுத்துக்களையல்லவா பிரசவிக்கிறோம்...//

நன்றிகள்..

நிரூபன் said...
Best Blogger Tips

@சிவகுமாரன்

நான் கூட முன்னர் மீண்டும் ஈழம் பிறக்கும் , இன்னொரு தலைவன் வருவான் என்றெல்லாம் கவிதை எழுதினேன். உங்கள் வலி புரியாமல். உங்கள் பதிவுகள் உண்மை நிலவரத்தை உரைக்கின்றன. என் அறியாமைக்கு தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.//

சகோ, சும்மா, பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசுறீங்க. இன்றைய ஈழத்து மக்கள் வாழ்க்கையினைப் புரிந்து கொண்டாலே போதும் சகோ.
நன்றிகள்.

Anonymous said...
Best Blogger Tips

///ஒரே ஒரு கேள்வி, தமிழ் நாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக பலர் தீக்குளித்தார்களே, அப்போது அந்த வறிய குடும்பங்க மீது உங்களால் என்ன செய்ய முடிந்தது சகோ?
ஏதாவது உதவிகள் செய்ய முடிந்ததா சகோ?
இல்லை முதன் முதலாக ஈழத் தமிழருகாக தீக்குளித்தவர் யார் எனும் விடயம் எங்களில் எத்தனை பேருக்கு இன்னமும் நினைவிருக்கிறது?
தெரிந்தால் அவர் யார் எனச் சொல்லுங்கள் பார்போம்./// /// ரபூக் என்ற முஸ்லீம் வாலிபர் என்று நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் இந்த தீக்குளிப்புக்கள் எதற்காக என்று தான் புரியவில்லை. அதே போல இந்த தீக்குளிப்புக்களால் எந்தவித மாற்றமும் நிகழப்போவதில்லை மாறாக இவர்கள் தீக்குளிப்புக்களை தம் கட்சி சொத்தாக மாற்றி சில தமிழ் நாட்டு தலைமைகள் தமது அரசியலில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன தொடர்பு!! இவர்கள் தீக்குளிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ் நாட்டு தேசியவாதிகளின் ஆவேச பேச்சுக்கள், மற்றையது தம் உயிர்த்தியாகத்தின் மூலம் ஏதாவது மாற்றத்தை ஏற்ப்படுத்தலாம் என்ற அப்பாவி தனமா சிந்தனைகள். நிச்சயமாக இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியது.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

உங்களது கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ,
என்னுடைய கருத்தும் இதே தான்,
இனித் தீக்குளிப்புக்கள் இடம் பெறுவதால் என்ன இலாபம்?
இவை யாவும் யாருக்ககா.
இதனால் ஏற்படப் போகும் விளைவு,
அப்பாவி ஏழைக் குடும்பங்களின் வாழ்வு தான் சிதைக்கப்படும்!
ஆகவே அனைவரும் உரிய முறையில் சிந்தித்து, அரசியல்வாதிகளின் கபட நாடகங்களைப் புரிந்து கொண்டவர்களாக மாற வேண்டும்.
அப்போது தான் இந்தத் தீக்குளிப்புக்கள் எல்லாம் நிறுத்தப்படும்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails