Sunday, May 29, 2011

பாலியல் குறைபாடும், இலங்கைத் தமிழர்களும்!

அன்பிற்கினிய உறவுகளே;

டிஸ்கி:  இப் பதிவினை முழுமையாகப் படிக்காது, என்னை மன்னிப்புக் கேட்க வைக்கும் வகையில் தனிப் பதிவு போட யாராவது நினைத்தால், ஆபாசப் பதிவு போடுறான் நிரூபன் எனப் போர்க் கொடி தூக்கினால், அவர்களுக்கு இவ் இடத்தில் ’’எங்கள் குரு நாதர் சிபி. செந்தில் குமார் வழியில் சொல்லிக் கொள்ளும் ஒரே வசனம்: 
தனிப் பதிவுகளுக்கெல்லாம் வந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை, ஐ ஆம் ரொம்ப பிசி. ஆகவே இங்கேயே மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிச்சுக்குங்க மக்களே!
டிஸ்கி 2: பதிவினைப் படிக்காது, பதிவிலுள்ள படங்களை மட்டும் பார்த்து- பதிவின் உட் கருத்து இதுவாகத் தான் இருக்கும் எனும் ஊகத்தில் யாராவது பேஸ் புக்கில் ஊகித்து ஸ்டேட்டஸ் எழுத விரும்பினாலோ, ஆபாசமாக பதிவெழுதி ஹிட்ஸ் தேடுறோம் என எழுதினாலோ, கதைகளுக்குள் முட் கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் மக்கள் வாழ்க்கையினை அவர்களோடு வாழ்ந்த ஒருவன் ஏன் எழுதுகிறான், என்பதை அறியாது, பதிவினைப் படிக்காது ஸ்டேட்டஸ் ஆக வெளியிடுவோர் யாராக இருப்பினும் அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது,
ஐ ஆம் ரொம்ப பிசி. எல்லா சமூக வலைத் தளங்களுக்கும் வரும் நிலையில் நான் இல்லை. ஆகவே இங்கேயே உங்கள் விளக்கங்களைக் கோரின் விடைகள் முன் வைக்கப்படும். 
மன்னிப்புக் கேட்கனுமா;-)) ஐயா பெரியவங்களே மன்னிச்சுக் கொள்ளுங்கப்பா. 

இனிப் பதிவிற்குள் போவோமா;
லங்கைத் தமிழர்கள் பற்றி அதிகமாக விபரிக்க வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன். ஏற்கனவே என்னுடைய பல பதிவுகளில் தமிழர் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பல விடயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களினைப் பொறுத்த வரை இன்றைய இளம் சந்ததியினருடைய பாலியல் கல்வி சார்ந்த அறிவானது- கல்வியமைச்சின் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் அவர்களுடைய ஒன்பதாவது ஆண்டுச் சுகாதாரப் புத்தகத்திலிருந்தே(14ம் வயதிலிருந்து) ஆரம்பமாகிறது.

பாலியல் கல்வி, ஆண் பெண் பாலுறுப்பு, தொடர்பான வேறுபாடுகள், கருத்தடை முறைகள், பாதுகாப்பான உடல் உறவு தொடர்பான விடயங்கள் யாவும் ஒரு சராசரி இலங்கை மாணவனின் ஒன்பதாவது வகுப்பிலிருந்தே விளக்கமாக அறிவுரையாக இலங்கையில் கற்பிக்கப்பட்டுகின்றன.

ஆனாலும் எம் தமிழர்களின் தனித்துவக் குணங்களை யாரால் மாற்ற முடியும். ‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ எனும் வாக்கின் அடிப்படையில், பரம்பரை ரீதியாக அவர்களிடத்தே விரவிக் காணப்படும் எள்ளி நகைத்தல் பண்பானது, பாலியல் ரீதியில் இன்று வரை அவர்களின் மனங்களினை விட்டு விலகாத ஒன்றாகவே காணப்படுகிறது.

திருநங்கைகள் எங்கள் ஊர்களில் குறைவு என்றாலும், அவர்கள் மீதான மக்களின் பார்வை ஒன்பதுகள் எனும் தோரணையில் அழைப்பதாகவும், பொன்ஸ் எனப் பெயர் சொல்லி நக்கல் அடித்து நையாண்டி செய்வதாகவும் இருக்கும்.

பாட நூலகள் மூலம் பாலியல் தொடர்பான அறிவினை வழங்கினாலும்; இளையவர்களின் மனங்களினை இத்தகைய வேறுபாட்டின் அடிப்படையில் திருநங்கைகளைக் கிண்டல் செய்யும் மனப்பக்குவத்தை தடுக்க முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். அல்லது கிண்டல் செய்வதை ஒரு வகையில் அங்கீகாரம் செய்யும் சமூகமாக இலங்கைத் தமிழினம் இருக்கிறது என்பதனை மறுக்க முடியாது.

ஆணும், பெண்ணுமற்ற ரீதியில் உள்ளவர்களையோ, அல்லது திருநங்கைகளையோ, அல்லது ஆணாக இருந்து ஒரு வகையில் பெண்மை கலந்த சாயல் கொண்டு வெட்கப்படும் நபரையோ ’பொண்ஸ்’ என்று தான் கேலியாக அழைத்து மகிழ்கிறது எங்கள் சமூகம். இதனைத் தட்டிக் கேட்டாலோ ஏன் அவ்வாறு அழைக்கிறீர்கள் என்று கேட்டாலோ’ நீ என்ன அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் ஆளோ’ என விளிக்கிறது இம் இனம்.
இந்த நிலையினை, இத்தகைய மனங்களினை எமது சமூகத்திலிருந்து எவ் வகையில் மீட்டெடுக்க முடியும்?

இன்னோர் விடயம் ‘எமது சமூகத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தொகை குறைவாக இருந்தாலும், அவர்களுக்குச் சமூக அங்கீகாரம் வழங்குவதை விடுத்து; வசை பாடி உளவியல் அடிப்படையில் அவர்களைத் துன்புறுத்தும் நடை முறைகளைத் தான் எமது தமிழ்ச் சமூகம் கையாண்டு வருகிறது.

நான் படித்த பாடசாலையில் எங்கள் வகுப்பில் வானியல் பாசறை எனும் நிகழ்வானது வருடத்தில் ஒரு தரம் இரவு வேளையில் நடை பெறும். இதற்கு ஒவ்வோர் ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களைத் தெரிவு செய்து வானில் உள்ள நட்சத்திரங்களைக் காட்டி விளக்கமளிப்பார்ப்பார்கள்.

அன்றைய தினம் இரண்டு மாணவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முனைந்தமையினைக் கண்டறிந்து ‘எமது நண்பர்களால் சைக்கிள் ஓடுவோர்’ எனும் தொனிப் பொருளில் கிண்டலடிக்கப்பட்டு,  அவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் காலப் பகுதி வரை இதே வகையில் நையாண்டி செய்யப்பட்டு, உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.

இவ் விடயம் பாடசாலை உயர் மட்டத்தினருக்குத் தெரிந்த பின்னர்; ஆசிரியர்கள் கூட அம் மாணவர்கள் இருவரையும் சைக்கிள் என அழைத்தே கிண்டல் பண்ணி மகிழ்வார்கள்.

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களை நடு வீதியில் வைத்தும் கிண்டலடித்து மகிழ்வோரையும் நான் கண்டிருக்கிறேன்.  ‘இரு ஆண்களை நடு வீதியில் வைத்து ஒரு முதியவர் சைக்கிள் எனத் திட்டி மகிழ்ந்த செயலினையும் நான் கண்டிருக்கிறேன்.

பாலியல் ரீதியில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களை இலங்கையில் மதிக்கும் அளவிற்கு எம் தமிழ் சமூகம் பக்குவப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இதற்கான காரணம் நையாண்டி, நக்கல் எனும் குணங்களிற்குத் தீனி போடும் நகைச்சுவை மனிதர்களாக இத்தைய வேற்றுப் பால் இனத்தவரை எம்மவர்கள் கருதுவதேயாகும்.

ஓரினச் சேர்க்கையாளர்களைக் கிண்டலடிக்க ஈழத் தமிழர்கள் பயன்படுத்தும் இன்னோர் வாக்கியம் ‘நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நபர்கள்’ இதற்குரிய விளக்கம் கொடுக்கப்படாமலே புரிந்து கொள்ளும் பக்குவம் உங்கள் அனைவருக்கும் இருந்தாலும் ஒரு சில விடயங்களை இவ் இடத்தில் விளக்கலாம் என நினைக்கிறேன்.

இலங்கையில் ஆற்று நீரினை அடிப்படையாக வைத்துத் தான் நீர் மின்சாரம் உற்பத்தியாக்கபடுகிறது. இதனை அடிப்படையாக வைத்துத் தான் இரு ஓரினச் சேர்க்கையாளர்களைக் கிண்டல் பண்ணி மகிழ்கிறார்கள் தமிழர்கள்.

பாலியல் ரீதியான போதிய அறிவு, விழிப்புணர்வு இலங்கையில் உள்ள நடுத்தர வயதுடைய பலருக்கு இல்லை என்றே கூறலாம். அதுவும் இன்றைய கால கட்டத்தில் யாழ் குடாநாட்டில் இடம் பெறும் இளவயதுக் கர்ப்பங்களும், திருமணத்திற்கு முன்னரான கருத்தரிப்புக்களும், சிசுக் கொலைகளும் இத்தகைய பாலியல் ரீதியான போதிய அறிவின்மையால் ஏற்படும் விளைவுகளேயாகும். இவ் இடத்தில் யுத்த காலத்தின் பின்னரான சொகுசு வாழ்க்கையும் செல்வாக்குச் செலுத்துகிறது எனலாம்.

ஒரு ஆணும் பெண்ணும், காதல் ஜோடிகளாக அன்றி, பாடசாலை நண்பர்களாக ‘வீதியில் நின்று உரையாடினாலே போதும்’
’கேட்டியளே சங்கதி! அந்த மாடி வீட்டுக் காரனின் மகளும், சங்கக் கடை ஆளின் மகனும் ரோட்டில் நின்று கதைக்கிறார்கள் எனும் பாணியில் ஒருவர் தீயினைப் பற்ற வைக்க, அந் நெருப்பானது கொழுந்து விட்டெரிந்து ஊரெல்லாம் புதிய சீன் படச் செய்தியாக வேண்டத்தாகா காட்சிகள் புகுத்தப்பட்டு எடிற்றிங் ஏதுமின்றிப் பெரிய தொரு படமாகக் காண்பிக்கப்படும்.

ஊர் வாய்க்கு இந்த மேட்டர் அவலாக இருக்கும், ஆனால் கள்ளங் கபட மற்ற இரு இளம் உள்ளங்களின் மனதிற்கோ, இந்தச் சேதி ஓர் கட்டுக் கதையாக மாறி மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் கல்வி கற்றல் செயற்பாடுகளிலிருந்து அவ் இளம் உள்ளங்களை நெறி தவற வைத்து விடும்.

நீண்ட நாள் காணாத பாடசாலை நண்பர்கள் பேசும் போதே இந்த நிலமை என்றால். இரு காதலர்கள் பேசுகையிலோ, பழகுகையிலோ எவ்வாறான நிலமை ஏற்படும் என்பதனை நினைத்துப் பாருங்கள். இதன் காரணமாகத் தான் ஊருக்கும், உறவுகளுக்கும் பயந்து இளசுகள் ஆணுறை வாங்குவதினையோ, மருந்தங்களை(Pharmacy ) நாடிச் செல்வதையோ தவிர்க்கிறார்கள்.

விடயம் வீங்கினால் மறைக்க முடியாது என்பதற்கமைவாக குழந்தை வயிற்றில் உண்டாகியதும் சட்ட விரோதக் கருக் கலைப்பிற்கும், சிசுக் கொலைக்கும் யுவதிகள் ஆளாக வேண்டிய நிலைக்கு உட்படுகிறார்கள்.

தமிழர் தாயகப் பகுதிகளில் சட்ட விரோதக் கருக் கலைப்பு நிலையங்கள் தான் இப்போது கை நிறையப் பணத்தைச்(அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றன. இதனை விட வயது வந்தோருக்கான பார்க்(பூங்கா) எனும் பெயரில் (Adults Only) எனும் வாசகத்தோடு இயங்கும் பூங்காவும் குடா நாட்டில் பாலியல் குறை பாடுகளை நிவர்த்தி செய்யும் ஓர் மையமாகவும், ஊக்குவிப்பு நிலையமாகவும் தொழிற்படுகிறது.

இலங்கையர்களில் வட கிழக்குத் தமிழர்களின் பாலியல் ரீதியான குறை பாடுகளினைப் பின் வரும் விடயங்களை வைத்துத் தீர்மானிக்கலாம்.

*புதிய நியூஸ் பேப்பர் அல்லது சஞ்சிகைகள் வாங்கினால் ‘முதலில் வர்ண மயமாக வரும்’ நடுப் பக்கத்தையே திறந்து பார்ப்பவர்களாக இருப்பார்கள். நடுப் பக்கத்தில் சினிமா நடிகைகளின் கிளு கிளு விடயங்களும், படங்களும் வரும்.

*இலங்கைப் பத்திரிகைகளைப் பொறுத்த வரை தமது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கில் பாலியல் ரீதியான கேள்விகளை வெளியிடுவார்கள்.
இதனால் பெரும் பாலான இளசுகள் பத்திரிகைகளை வாங்குகையில் இதனைக் கருத்திற் கொண்டு எந்த பத்திரிகையில் கேள்வி பதில் அதிகமாக வருகிறதோ அதனை வாங்குவார்கள்.

*புத்தகக் கடைகளில் உள்ள படங்களில் அட்டைப் படங்களினை அடிப்படையாக வைத்து எந்தப் புத்தகத்திற்கு ஆபாசம் அதிகமாக உள்ள படம் வருகிறதோ, அதனை முன்னுரிமை கொடுத்து வாங்குவோராக இருப்போர்.

*இன்ர நெட் கபேக்களை அடிக்கடி நாடிச் செல்வோர், இவர்களால் எதிர்காலச் சந்ததியும் சீரழிக்கப்படுகிறது. இதற்கான காரணம் இவர்கள் இணையத்தில் உலவிய பின்னர் நெட் கபேயின் இணைய உலவியில் உள்ள History இனை அழிக்காது சென்று விடுவார்கள். இதனால் இவ் இணைய பிரவுசிங் செண்டர்களுக்காக கேம் விளையாடச் செல்லும் சிறுவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது,  பிஞ்சிலே பழுக்கும் நிலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

*கூட்டமாக உள்ள பஸ்களில் ஏறி அங்க சேட்டை செய்யும் நபர்கள். அல்லது கூட்டமாக பஸ்ஸினை விரும்பித் தெரிவு செய்யும் நபர்கள்.

*அடுத்தவர்கள் உரசுவதைப் பார்ப்பதற்காக பார்க், பீச் என்று செல்வோர். இதனைப் பார்த்தே காதலில் விழ நினைத்து படு குழியில் விழுந்தோரும் உள்ளார்கள்.

இப்போது என்னிடம் உள்ள கேள்வி, இன்றைய சந்ததியினர் செய்யும் தவறுகளைச் சீர்திருத்துவது என்பது மிகவும் கடினமான விடயம், ஆனால் எமது எதிர்காலச் சந்ததியினரை, இத்தகைய பாலியல் ரீதியான வேற்றுமைகளிலிருந்து எப்படி மீட்டெடுக்க முடியும்?
ஓரினச் சேர்க்கையாளர்கள், மறு பால் உணர்வுள்ள மக்களைப் பற்றிய புரிதல்களை எந்த வழியின் ஊடாக எமது எதிர்காலச் சந்ததிக்குக் கொண்டு செல்ல முடியும்?
திரு நங்கைகளிற்கான சமூக அங்கீகாரத்தினை எவ்வாறு எமது சமூகத்தின் ஊடாக கொடுக்க முடியும்?

இதற்கான விடைகளையும், விளக்கங்களையும் உங்கள் கைவசம் வைத்திருப்பீர்கள் எனும் நம்பிக்கையில் இந்த வார விவாத மேடையினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

85 Comments:

Unknown said...
Best Blogger Tips

முதலில் டிஸ்கிக்கு oru salaam ஹிஹி

Unknown said...
Best Blogger Tips

// ஊரெல்லாம் புதிய சீன் படச் செய்தியாக வேண்டத்தாகா காட்சிகள் புகுத்தப்பட்டு எடிற்றிங் ஏதுமின்றிப் பெரிய தொரு படமாகக் காண்பிக்கப்படும்.//
ஹிஹிஹி உண்மை பாஸ்...ஒவ்வொருத்தர் காது மாற மாற செய்தி சூடு பிடிக்கும்

Unknown said...
Best Blogger Tips

// நெட் கபேயின் இணைய உலவியில் உள்ள History இனை அழிக்காது சென்று விடுவார்கள். இதனால் இவ் இணைய பிரவுசிங் செண்டர்களுக்காக கேம் விளையாடச் செல்லும் சிறுவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது, பிஞ்சிலே பழுக்கும் நிலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.//
பிரக்டிக்கல் விசயங்களை குறித்துவைத்து போட்டுத்த் தள்ளுகிறீர் ...!!!சூப்பர்

Unknown said...
Best Blogger Tips

இதற்க்கு சரியான விடை என்று ஒன்று இருக்காது பாஸ்..

ஆனால் விடையை கண்டுபிடிப்பது தான் முக்கிய பிரச்சனை..அனைவரின் மனங்களில் ஏற்படும் மாற்றம் தான் விடையாக இருக்கும்..ஆனால் எப்படி மனதை மாற்றுவது??முடியாத காரியம் பாஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவில் உள்ள இரண்டு டிஸ்கிகளுக்கும், அதற்கு கீழே உள்ள படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, ஆனால் அப் படத்திற்கும் பதிவிற்கும் நிறையத் தொடர்புகள் இருக்கிறது.

Unknown said...
Best Blogger Tips

//உறவுகளுக்கும் பயந்து இளசுகள் ஆணுறை வாங்குவதினையோ, மருந்தங்களை(Pharmacy ) நாடிச் செல்வதையோ தவிர்க்கிறார்கள்.//
இதில் முன்னேற்றம் வருமென நான் நினைக்கவில்லை..
வெளிநாடுகளில் உள்ள மாதிரி அங்கங்கு காசு போட்டு பாக்கட் எடுக்கும் முறையை வைத்து பாருங்கள்..எவ்வளவு விற்றுத்தள்ளுமேன்று !!!
அம்பானி அப்புறம் இந்த பிசினச்சில் இறங்கிடுவார்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இப்போது என்னிடம் உள்ள கேள்வி, இன்றைய சந்ததியினர் செய்யும் தவறுகளைச் சீர்திருத்துவது என்பது மிகவும் கடினமான விடயம், ஆனால் எமது எதிர்காலச் சந்ததியினரை, இத்தகைய பாலியல் ரீதியான வேற்றுமைகளிலிருந்து எப்படி மீட்டெடுக்க முடியும்?//

சரியான கேள்வி, என்ன பதில் சொல்லன்னு தெரியலை....!! பாலியல் கல்வி மூலமா சரி செய்யலாமோ..?

Anonymous said...
Best Blogger Tips

கொஞ்சமா சூடான மேட்டரை தான் கையில எடுத்திருக்கீங்க பாஸ்....ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

///இலங்கைத் தமிழர்களினைப் பொறுத்த வரை இன்றைய இளம் சந்ததியினருடைய பாலியல் கல்வி சார்ந்த அறிவானது- கல்வியமைச்சின் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் அவர்களுடைய ஒன்பதாவது ஆண்டுச் சுகாதாரப் புத்தகத்திலிருந்தே(14ம் வயதிலிருந்து) ஆரம்பமாகிறது.///கரெட்டு! ஆனால் அது பற்றிய கல்விக்கு இது தான் சரியான வயசு என்று நினைக்கிறேன் ...

Anonymous said...
Best Blogger Tips

////பாலியல் கல்வி, ஆண் பெண் பாலுறுப்பு, தொடர்பான வேறுபாடுகள், கருத்தடை முறைகள், பாதுகாப்பான உடல் உறவு தொடர்பான விடயங்கள் யாவும் ஒரு சராசரி இலங்கை மாணவனின் ஒன்பதாவது வகுப்பிலிருந்தே விளக்கமாக அறிவுரையாக இலங்கையில் கற்பிக்கப்பட்டுகின்றன.// முதல் முதலா இதெல்லாம் பள்ளியில படிக்கும் போது சிதம்பர சக்கரத்த எதோ பாத்தது போல இருந்திச்சு எனக்கு ;-)

Anonymous said...
Best Blogger Tips

///திருநங்கைகள் எங்கள் ஊர்களில் குறைவு என்றாலும், அவர்கள் மீதான மக்களின் பார்வை ஒன்பதுகள் எனும் தோரணையில் அழைப்பதாகவும், பொன்ஸ் எனப் பெயர் சொல்லி நக்கல் அடித்து நையாண்டி செய்வதாகவும் இருக்கும்./// ஐயாம் சாரி, நான் வாழ்ந்த சூழலில் இதுவரை இவர்களை கண்டதில்லை பாஸ், அதால கருத்து சொல்ல முடியாது இருக்கு ...

Anonymous said...
Best Blogger Tips

///‘எமது நண்பர்களால் சைக்கிள் ஓடுவோர்’ எனும் தொனிப் பொருளில் கிண்டலடிக்கப்பட்டு,//// ஆமா இது எங்க பாடசாலையில் கூட நடந்திருக்கு ...

Anonymous said...
Best Blogger Tips

///ஒரு ஆணும் பெண்ணும், காதல் ஜோடிகளாக அன்றி, பாடசாலை நண்பர்களாக ‘வீதியில் நின்று உரையாடினாலே போதும்’
’கேட்டியளே சங்கதி! அந்த மாடி வீட்டுக் காரனின் மகளும், சங்கக் கடை ஆளின் மகனும் ரோட்டில் நின்று கதைக்கிறார்கள் எனும் பாணியில் ஒருவர் தீயினைப் பற்ற வைக்க, /// ஆமாம் பாஸ் இது உண்மையிலே எம் சமூகத்தில் உள்ள அருவருக்க தக்க பழக்கம். சும்மா இருந்த இருவரை வைத்து கதை கட்டி அவர்களை ஊரை விட்டு ஓட வைத்த சம்பவங்களும் நடந்திருக்கு...

Anonymous said...
Best Blogger Tips

உண்மைகளை எடுத்துரைத்ததற்கு பெரிய ஓ ! நிரூபன்.

தமிழ்நாட்டில்லும் இத்தகையப் பாங்கே அதிகமாக உள்ளது. ஆனால் ஓரினச்சேர்க்கையாளர் குறித்த பார்வையும், திருநங்கையர் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகின்றது எனலாம்.

இங்கு நகர் சார், கிராமம் சார், புறநகர் சார் என சமூகம் மூன்றுவிதமாகப் பிரிந்துள்ளது.... ஆகையால் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொருவிதமான பார்வைகள் மக்களிடம் இருக்கின்றது.

அதே போல தலைமுறை சித்தாந்தங்களிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.

இருப்பினும் கற்பக் கலைப்புகள் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் மக்கள் தொகையை கணக்கெடுக்கும் போது குறைந்தே வருகின்றது எனலாம்... கல்வியறிவு, உலகறிவு, பொருளாதார சுதந்திரம், மாற்றுப் பார்வை என்பது எந்த சமூகத்தில் கிடைக்கின்றதோ .. அந்த சமூகம் முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை..

அந்த வகையில் ஈழமும் முன்னேறும் காலம் வெகு தூரம் இல்லை.. தங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் -- கமுக்கமாக இருக்கும் விடயங்களை வெளியேக் கொண்டு வருவது ..ஒரு நல்லத் தொடக்கமே !!!

Anonymous said...
Best Blogger Tips

/// இதன் காரணமாகத் தான் ஊருக்கும், உறவுகளுக்கும் பயந்து இளசுகள் ஆணுறை வாங்குவதினையோ, மருந்தங்களை(Pharmacy ) நாடிச் செல்வதையோ தவிர்க்கிறார்கள். /// இன்று கல்யாணத்துக்கு முன்னர் உடலுறவு வைத்திருப்பது என்பது எம் சமூகத்தை பொறுத்து தப்பான செயலே,ஆனால் ஆணுறை ,மருந்துகளின் பாவனையும் அதிகரித்தால் இது போன்ற தப்புகளும் சர்வ சாதாரணமாக வந்துவிடும். ஆக இது என்னை பொறுத்து சற்று ஜோசிக்க வேண்டிய விடயமே

Unknown said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி மாப்ள!...இதில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்துகளுக்கு பதில் தருவதானால்...........ஆண் பெண் இவர்களை தனிமைபடுத்துவதை நிறுத்த வேண்டும்....அதாவது சிறு வயது முதலே இரு பாலாரும் ஒரே கற்கும் இடத்தில் கல்வி பெற செய்ய வேண்டும்.......!

சுதா SJ said...
Best Blogger Tips

உண்மையில் நல்ல பதிவு அண்ணா.
அதுவும் ஓரின செயர்க்கையாளர்களை பற்றி குறிபிட்டுள்ளவை நிதர்சனமானது,
இன்னும் அவர்களைப்பற்றிய புரிந்துணர்வு நம்மிடையே இல்லை என்றுதான் தோன்றுகிறது,  ஓரினைச்செயர்க்கையாளர்களைப்பற்றி கிண்டல் செய்வதை சிலர் பெருமையாக கூட நினைப்பார், ஆனால் பிராண்ஸ்சில் ஓரினைசெயர்க்கை யோடிகள் சர்வசாதாரணமாக திரிவார்கள் இதையெல்லாம் பாக்கும் போது நாங்கள் இன்னும் வளர வில்லை என்றுதான் தோன்றுகிறது.

சுதா SJ said...
Best Blogger Tips

அசத்தலான பதிவு,
இப்படி பதிவு போடவும் ஒரு துணிச்சல் வேனும், அது உங்களிடம் நிறையவே இருக்கு.

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

அருமையான் பதிவு உண்மையான விசயங்களை எழுதி உள்ளீர்கள் இதற்கு தீர்வு என்பது முறையான பாலியல் கல்வி கொண்டு வரலாம் . தற்சமயம் காதலே காமம் சார்ந்து மாறி விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது கால மாற்றத்தில், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

உணவு உலகம் said...
Best Blogger Tips

முறையான பாலியல் கல்வி இதற்கு தக்க தீர்வைத் தருமென்று நான் நம்புகிறேன்.

கார்த்தி said...
Best Blogger Tips

நான் இந்த விளையாட்டுக்கு வரேல சார்! ஹிஹிஹி. ஆனால் எங்கள் யாழ் சமூகத்தில் பெற்றோரின் பங்கு முக்கியம். ஒவ்வொரு பிள்ளையிலும் நம்பிக்கை இருப்பது அவசியம்தான் என்றாலும் எமது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை வடிவாக கவனிக்கவேண்டும். ஓவர் நம்பிக்கை பிரச்சனையான விளைவுகளை கொண்டரலாம்!!

குணசேகரன்... said...
Best Blogger Tips

எனது பதில்-பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு Sex Education பற்றி சொல்லித்தர முன் வரவேண்டும்.

http://zenguna.blogspot.com

செங்கோவி said...
Best Blogger Tips

சமீபகாலமாக ஊடகங்களும் இவர்கள் மீதான எள்ளல் பார்வையை மாற்றிக் கொண்டு வருகின்றன. இப்போதைய போக்கு தொடர்ந்தால், அடுத்த தலைமுறை நிச்சயம் இந்த எள்ளலை விட்டு விடும்!

செங்கோவி said...
Best Blogger Tips

இந்த நல்ல பதிவிற்கு இப்படி டிஸ்கி போடும் நிலைமையா?

தனிமரம் said...
Best Blogger Tips

நல்ல விசயத்தை சொல்லியிருக்கிறீர்கள் கருத்துக்கூற கடமையில் இருப்பதால் இரவுப்பாடலுடன் வருகிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நாரதரே, அடுத்த கலகத்தை ஆரம்பித்துவிட்டீரா? இன்று கடும் தாக்குதல் நடத்தப்படும்!

தாக்குதல் நடத்தப்போகிறவர் நாந்தான்! தாக்குதல் யாருக்கு எதிராக - நிருபனுக்கு எதிராக.....

மச்சி ரெடியா இரு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

எனக்கு தமிழில் பிடிக்காத ஒரு வார்த்தை இருக்கிறது! அது என்னவென்றால் - கலாச்சாரம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கலாச்சாரம் வேறு! பண்பாடு வேறு! 99 வீதமான தமிழர்களுக்கு இந்த விஷயமே தெரியாது! ரெண்டையும் போட்டு குழப்பிக்கொள்வார்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கலாச்சாரம் கலாச்சாரம் என்று வாய்கிழிய கத்தும் கலாச்சார காவலர்கள். துரதிருஷ்டவசமாக பண்பாட்டை ஊக்குவிப்பதில்லை!

பண்பாட்டை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்!

ஆனால் இல்லாத ஒரு கலாச்சாரத்தை மீறிவிட்டார்கள் என்று எமது சமூகம் கெம்பி குதிக்கிறது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பண்பு , பண்பாடு என்பவை சாதாரணமாக சாலை விதிகளில் இருந்து ஆரம்பிக்கிறது!

வீதியில் சிவப்பு விளக்கு எரிந்தும், வாகனத்தை நிறுத்தாமல் போகிற ஒரு சாரதியை, தீண்டத்தகாதவனாக, கேவலமானவனாக, அருவருப்புக்கு உரியவனாக பார்ப்பதற்கு எமது சமூகம் பழக வேண்டும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் குடும்பத்தில், பெண் எடுப்பது மகாகேவலம் என்று கருதும் நிலை, எமது சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நாட்டின் சட்டங்களை மீறுபவர்களை இழிவானவன் என்று கருதும் மனோபாவம் எம்மத்தியில் உருவாகவேண்டும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

திருமணம் வரை தங்கள் பாலியல் ஆசைகளை பொத்தி பொத்தி வைக்கும் ஆண்களும் பெண்களும், எத்தனை ராக்கெட்டுகளை விண்வெளிக்கு ஏவியுள்ளார்கள் என்று கேட்க விரும்புகிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

13 வயதில் பருவமடையும் ஒரு பெண் 24 வயதில் திருமணம் செய்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்! இதே சமன்பாட்டை ஒரு ஆணுக்கும் போடுவோம்!

ஆக, 11 வருடங்கள் இருவரும், பாலியலாக எதையும் அனுபவிக்கவிக்காமல், கலாச்சாரத்தை கட்டிக் காக்கிறார்கள்!

என்ர குருவாயூரப்பா,

அந்த இருவருக்கும் டிப்ளோமா இன் கலாச்சாரம் எனும் பட்டத்தை எந்த யூனிவேர்சிட்டி வழங்கும்?

அட்ரெஸ் ப்ளீஸ்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆண் ஒரு விலங்கு , பெண் ஒரு விலங்கு! இவற்றைத்தாண்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு எந்த வரவிலக்கணமும் தேவையில்லை!

ஆனால் எமது சமூகமோ, ஆணுக்கு ஒரு இலக்கணமும், பெண்ணுக்கு ஒரு இலக்கணமும் வகுத்து, அடி முட்டாள்தனத்தை ஆண்டாண்டு காலமாக பேணிவருகிறது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இன்னும் சொல்லப்போனால் காலாதி காலமாக கலாச்சரத்தை காவி வருபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்!

பெண்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கலாச்சாரத்தை காவும் பொறுப்பு அவள்மீது வலிந்து திணிக்கப்படுகிறது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பாடசாலையில் ஆண் ஆசிரியர் ஜீன்சும் சேர்டும் போட்டு வருவார்! பெண் ஆசிரியர் சேலை உடுத்தி வருவார்! - பெண் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் பாடசாலையில் தொடங்குகிறது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நான் இலங்கை கல்வி அமைச்சராக இருந்தால், அத்தனை பெண் ஆசிரியர்களுக்கும் விடுதலை கிடைக்கும்!

மதிப்பும் கவுரவமும் மிக்க கோட் வடிவத்தில் அமைந்த ஸ்கேர்ட் அன்ட் ப்லொஸ் ( skirt and blouse ) அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள்!

ஒவ்வொரு பெண் ஆசிரியைகளும் ஹிலாரி கிளிண்டன் போல தோற்றமளிப்பார்கள்! ஆளுமை உச்சக்கட்டத்தில் இருக்கும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு உங்கள் பதிவைவிட்டு நான் வெளியே போகவில்லை! வெயிட் அண்ட் சீ

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆண்களோடு அவ்வளவாக பழகாத பெண்கள் எப்பொதுமே ஆண்கள் பற்றிய நினைப்போடு தான் இருக்கிறார்கள்!

cisco said...
Best Blogger Tips

இந்த வானியல் பாசறை சைக்கிள் கதை எனக்கும் தெரியும் ....அநேகமாக நாங்கள் இரண்டுபேரும் ஒரே பள்ளிக்கூடம் என்று நினைக்கிறேன்..

Prabu Krishna said...
Best Blogger Tips

மிகக் கவனமாக கையாள வேண்டிய விஷயம் இது.

இதில் சிறு வயது தவறுகள் 90 % வயதுக் கோளாறுதான். மற்றபடி அவை சரியாகக் கூடும்.

காதல், காமம் மீது சமூகத்தின் பார்வை மாற வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமை மாறும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பாலியல் ஆசைகளை அளவுக்கு அதிகமாக பொத்தி வைக்கும் ஆண் இறுதியில் சைக்கோவாக மாறி விடுகிறான்! பெண்ணுக்கும் ஒரு சைக்கோத்தனம் இருக்கும்! இது எங்கள் ஊரில் " காலியான விசர் " என்று சொல்லப்படும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பாலியல் உறவில் ஈடுபட்ட ஒரு ஆணை , ஏனையவர்கள் கிண்டலடிப்பதற்கு காரணம், தங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் தான்! ( அனுதாபத்துக்குரியவர்கள் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இப்போது யாழ்ப்பாணத்தில் வேகமாக பாலியல் சிக்கல்கள் இடம்பெற்று வருவதாக நாள்தோறும் செய்திகள் வருகின்றன! - நல்ல விஷயம்! - இன்னும் சிறிது காலத்தில் எல்லாம் நார்மலுக்கு வந்துவுடுவார்கள்! - இதில் கலாச்சாரத்தை கட்டிக் காப்பவர்களை கே கே எஸ் கடலில் குதிச்சு சாகச்சொல்லுங்கோ!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பூங்கா ஒன்றில் ஒருவரை ஒருவர் அனைத்து, முத்தமிட்டு காதல் செய்யும் ஜோடிகளை களவாக வீடியோ எடுத்து இன்டெர் நெட்டில் போடுகிற ஒருவன், ஒரு பாலியல் குறைபாடு உள்ளவனாகவே இருப்பான்!

அதுமட்டும் அல்லாது, அன்று இரவே அந்தப் பெண்ணை நினைத்து இந்த வீடியோக்காரன் " சுயஇன்பம் " காண்கிறான்!

இப்படி வீடியோ எடுத்து இண்டர்நெட்டில் போடுபவர்களை, ஒரு விபச்சாரியை புக் பண்ணி தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு கச்சேரி நடத்த விட்டால் , அவரது ஆசை எல்லாம் அடங்கி , நிதானத்துக்கு வருவார்! பிறகு களவாக வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டு தனது வேலையை பார்ப்பார்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தனது மனைவியுடன் சுமுகமான பாலியல் உறவு கொள்ளும் ஒரு ஆணுக்கு கோபம் வருவது குறைவாம்! பெண்ணுக்கும் அதே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நித்தியானந்தா என்பவர் எத்தனையோ நல்ல விஷயங்களை மக்களுக்கு சொல்லி வந்தார்! ஆனால் தமிழனுக்கு அவரைப் பற்றி தெரிஞ்சதெல்லாம், அவர் ஒரு நடிகையுடன் ஒன்றாக இருந்தமை மட்டுமே!

ஆக தமிழனின் மூளை எதை சேமித்துவைக்கிறது பாருங்கள்! நித்தி சொன்ன நல்ல விஷயங்கள் எல்லாவற்றையும் தமிழன் மறந்து விட்டான்! அவனுக்கு அந்த வீடியோ மட்டுமே மூளையில் பதிந்துள்ளது!

இது தமிழனின் குறைபாடாகவே கொள்ளவேண்டும்! தமிழனுக்கு பாலியல் என்பது எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறது காரணம்! அவன் எல்லாவற்றையும் பொத்தி வைப்பதாகும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிருபனின் இந்தப் பதிவு அதிக பேஜஸ் வியூக்களைக் கொடுக்க போகிறது! காரணம் இந்தப் பதிவுக்கான தலைப்பு எல்லோரையும் சுண்டி இழுக்கத்தான் போகிறது! ஆக பாலியல் என்பது இயல்பானது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது நல்லது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒரு கடற்கரையில் சில வெள்ளைக்காரிகள், முக்கால் நிர்வாணமாக நின்றுகொண்டு சூரியக்குளியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்! அருகில் ஒரு வெள்ளைக்காரன் எதுவித சலனமும் இல்லாமல் அன்றைய பத்திரிகையை வாசித்துக்கொண்டு இருப்பான்!

தமிழனோ குறு குறு என்று அந்த வெள்ளைக்காரிகளின் வெளித்தெரியும் உறுப்புக்களை பார்த்துக்கொண்டு இருப்பான்!

Anonymous said...
Best Blogger Tips

////*புதிய நியூஸ் பேப்பர் அல்லது சஞ்சிகைகள் வாங்கினால் ‘முதலில் வர்ண மயமாக வரும்’ நடுப் பக்கத்தையே திறந்து பார்ப்பவர்களாக இருப்பார்கள். நடுப் பக்கத்தில் சினிமா நடிகைகளின் கிளு கிளு விடயங்களும், படங்களும் வரும்./// ஹிஹிஹி அட நம்ம ஈழ முரசு, நடுப்பக்கத்துக்கான்டியே இது நல்ல விலை போகும்....

Anonymous said...
Best Blogger Tips

////இப்போது என்னிடம் உள்ள கேள்வி, இன்றைய சந்ததியினர் செய்யும் தவறுகளைச் சீர்திருத்துவது என்பது மிகவும் கடினமான விடயம், ஆனால் எமது எதிர்காலச் சந்ததியினரை, இத்தகைய பாலியல் ரீதியான வேற்றுமைகளிலிருந்து எப்படி மீட்டெடுக்க முடியும்?/// இது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது .....

Anonymous said...
Best Blogger Tips

ஓட்டவடை அண்ணே ஒரு பிளானோட தான் இருக்கிங்க ;-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தமிழனோடு ஒப்பிடுகையில், சிங்களவனின் பாலியல் பிரச்சனைகள் குறைவு என்றே சொல்ல வேண்டும்! காரணம் அவர்களது திறந்த நிலை பாலியல் கொள்கையாகும்! ( திறந்த நிலை பொருளாதாரம் போல )

Anonymous said...
Best Blogger Tips

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு கடற்கரையில் சில வெள்ளைக்காரிகள், முக்கால் நிர்வாணமாக நின்றுகொண்டு சூரியக்குளியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்! அருகில் ஒரு வெள்ளைக்காரன் எதுவித சலனமும் இல்லாமல் அன்றைய பத்திரிகையை வாசித்துக்கொண்டு இருப்பான்!

தமிழனோ குறு குறு என்று அந்த வெள்ளைக்காரிகளின் வெளித்தெரியும் உறுப்புக்களை பார்த்துக்கொண்டு இருப்பான்!/// நண்பா அது வெள்ளையனுக்கு இயைவாக்கம் போலாகிவிட்டது, அதே போல அந்த கலாச்சாரத்தில் ஐரோப்பாவில் வாழும் தமிழனுக்கு சிறிது காலத்திலே இதெல்லாம் சகயமாகிவிடும்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆகக்குறைந்தது பதின்னான்காயிரத்து நூறு தடவைகள் உடலுறவு கொள்ள சந்தர்ப்பம் இருக்கிறது! ( மினிமம் ) ஆனால் தமிழனோ வெறும் ஆறாயிரம் தடவைகள் மட்டுமே உடலுறவு கொள்கிறான்!

மிகுதி நாளெல்லாம் உழைக்கிறது, சொத்து சேர்க்கிறது, ஊர்வம்பு அளக்கிறது இன்ன பல பிரச்சனைகளில் தமிழனின் வாழ்வு சீரழிந்து போகிறது!

திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் புள்ளிவிபரங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஓரினச்சேர்க்கை பற்றி நக்கல் அடிப்பவர்கள், கதைப்பவர்கள் பாலியல் வியாதி கொண்டவர்கள் என்பதை இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள்! அவர்களை கையில் உறை கசிதம் நல்லதொரு விபச்சாரியை நாடச்சொல்லுங்கள்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு இன்னும் கனக்க இருக்கு! பேந்து வாறன்! ( ஹி......ஹி.....ஹி.... பிறகு வாறன் )

Anonymous said...
Best Blogger Tips

//ஓரினச் சேர்க்கையாளர்கள், மறு பால் உணர்வுள்ள மக்களைப் பற்றிய புரிதல்களை எந்த வழியின் ஊடாக எமது எதிர்காலச் சந்ததிக்குக் கொண்டு செல்ல முடியும்?
திரு நங்கைகளிற்கான சமூக அங்கீகாரத்தினை எவ்வாறு எமது சமூகத்தின் ஊடாக கொடுக்க முடியும்?//

மனிதனின் உயிர் இப்புவியில் உள்ள வரை நீங்கள் கூறிய கருத்தை அவர்காள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்............!!!!!!!!!

Anonymous said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது......

//பாடசாலையில் ஆண் ஆசிரியர் ஜீன்சும் சேர்டும் போட்டு வருவார்! பெண் ஆசிரியர் சேலை உடுத்தி வருவார்! - பெண் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் பாடசாலையில் தொடங்குகிறது!//


// நான் இலங்கை கல்வி அமைச்சராக இருந்தால், அத்தனை பெண் ஆசிரியர்களுக்கும் விடுதலை கிடைக்கும்!

மதிப்பும் கவுரவமும் மிக்க கோட் வடிவத்தில் அமைந்த ஸ்கேர்ட் அன்ட் ப்லொஸ் ( skirt and blouse ) அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள்!

ஒவ்வொரு பெண் ஆசிரியைகளும் ஹிலாரி கிளிண்டன் போல தோற்றமளிப்பார்கள்! ஆளுமை உச்சக்கட்டத்தில் இருக்கும்!//

இதற்கு நான் அளிக்கும் பதில் பெண்கள் சேலை கட்டி வந்தால் பெண் அடிமத்தனம் என்கின்றீர்..பெண் ஆசிரியைகள் சேலை கட்டி வந்தாலே மணவன் சேலை விலகி இருக்கும் சந்தை உற்றுப் பார்க்கிறன்.அதைக் கூட ஆசிரியைகள் பின் போட்டு மறைத்து விடுகின்றார்கள்.

நீர் கூறியது போல் ஹிலாரி கிளிண்டன் மதிரி உடை அனிந்து வந்தால் மாணவன் வகுப்பறையில் புத்தகத்தைப் படிக்க மாட்டான் ஆசிரியை காலையிம்,அவள் இடுப்பையிம்,பின் அழகையும் தான் பார்ப்பான்.

இதிலிருந்து தெரிகிறதா ? ஆசிரியைகளை எதுக்கு சேலை கட்டி வரச் சொல்கின்றார்கள் என்று......!!1இது பெண் அடிமைத்தனமாகுமா?????????

Anonymous said...
Best Blogger Tips

//பாலியல் கல்வி, ஆண் பெண் பாலுறுப்பு, தொடர்பான வேறுபாடுகள், கருத்தடை முறைகள், பாதுகாப்பான உடல் உறவு தொடர்பான விடயங்கள் யாவும் ஒரு சராசரி இலங்கை மாணவனின் ஒன்பதாவது வகுப்பிலிருந்தே விளக்கமாக அறிவுரையாக இலங்கையில் கற்பிக்கப்பட்டுகின்றன.//

சரசரியாக இரு இலங்கை மணவனுக்குக் கற்பிக்கப்படும் பாலியல் கல்வி முறை ஈழத் தமிழ் மாணவனுக்கு கற்பிக்கப்படுவது கிடையாது!1ஏன் எனில் இலங்கையில் சிங்கள இனப் பெருக்கத்தினை அரசு ஊக்குவிக்கிறது.ஆனால் தமிழன் உற்பத்தியை தடுக்கும் அரசாகவே சிங்களவன் அரசு செயல் படுகிறது.ஏனென்டால்,தமிழன் இனப்பெருக்கம் அதிகமானால் நம்மை எதிர்த்து விடுவார்கள் என்பதற்காகத்தான்.......

Sivakumar said...
Best Blogger Tips

திருநங்கைகளுக்கு உங்கள் ஊர்களிலும் அதே நிலையா? வருத்தமான செய்தி.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>இப் பதிவினை முழுமையாகப் படிக்காது, என்னை மன்னிப்புக் கேட்க வைக்கும் வகையில் தனிப் பதிவு போட யாராவது நினைத்தால், ஆபாசப் பதிவு போடுறான் நிரூபன் எனப் போர்க் கொடி தூக்கினால், அவர்களுக்கு இவ் இடத்தில் ’’எங்கள் குரு நாதர் சிபி. செந்தில் குமார் வழியில் சொல்லிக் கொள்ளும் ஒரே வசனம்:
தனிப் பதிவுகளுக்கெல்லாம் வந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை, ஐ ஆம் ரொம்ப பிசி. ஆகவே இங்கேயே மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிச்சுக்குங்க மக்களே!

என்னை வம்புக்கு இழுத்த நிரூபனுக்கு என் மைனஸ் ஓட்டு ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>*கூட்டமாக உள்ள பஸ்களில் ஏறி அங்க சேட்டை செய்யும் நபர்கள். அல்லது கூட்டமாக பஸ்ஸினை விரும்பித் தெரிவு செய்யும் நபர்கள்.

*அடுத்தவர்கள் உரசுவதைப் பார்ப்பதற்காக பார்க், பீச் என்று செல்வோர். இதனைப் பார்த்தே காதலில் விழ நினைத்து படு குழியில் விழுந்தோரும் உள்ளார்கள்.

இதில் தவறில்லை.. தன்னால் செய்ய முடியாத தவறை மற்றவர் செய்வதை வேடிக்கை பார்க்கும் ம்னோபாவம் எல்லோருக்கும் உண்டு..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>ஆனால் எமது எதிர்காலச் சந்ததியினரை, இத்தகைய பாலியல் ரீதியான வேற்றுமைகளிலிருந்து எப்படி மீட்டெடுக்க முடியும்?

கோ எட் படித்தால் சரி ஆகிடும்

நிரூபன் said...
Best Blogger Tips

@வைகறை தங்கராஜ்...

சரசரியாக இரு இலங்கை மணவனுக்குக் கற்பிக்கப்படும் பாலியல் கல்வி முறை ஈழத் தமிழ் மாணவனுக்கு கற்பிக்கப்படுவது கிடையாது!1ஏன் எனில் இலங்கையில் சிங்கள இனப் பெருக்கத்தினை அரசு ஊக்குவிக்கிறது.ஆனால் தமிழன் உற்பத்தியை தடுக்கும் அரசாகவே சிங்களவன் அரசு செயல் படுகிறது.ஏனென்டால்,தமிழன் இனப்பெருக்கம் அதிகமானால் நம்மை எதிர்த்து விடுவார்கள் என்பதற்காகத்தான்.......//

ஈழம், இலங்கை இரண்டும் ஒன்று தான் சகோ, ஈழம் என்பது இலங்கையின் புராதன பெயர்களில் ஒன்று. ச்ங்க இலக்கியங்களில் இலங்கையினை ஈழம் என்றே அழைத்தார்கள். இலங்கையில் இருக்கும் அனைவருக்கும் ஒரே கல்வித் திட்டப் பாட நூல்கள் தான் கற்பிக்க்கப்படுகின்றன.
நீங்கள் கூறும் இனவேறு அடிப்படையிலான பாலியல் கல்வி முறையினை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஒரு கல்வி முறை அதாவது தமிழ் மாணவர்களுக்கு வேறோர் பாட நூலும், சிங்கள மாணவர்களுக்கு வேறோர் பாட நூலும் இருக்கிறது என்பதைத் தாங்கள் நிரூபிக்க முடியுமா?

இரண்டாவது தமிழ், இந்து சயம் முதலிய இரண்டு பாட நூல்களைத் தவிர இலங்கையில் உள்ள ஏனைய பாட நூல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருக்கும் கல்வியமைச்சின் கையேட்டினைத் தழுவியும், சிங்கள மொழியில் வெளியிடப்படும் பாட நூல்களின் மொழி பெயர்ப்பாகவும் தான் இலங்கையில் வெளியிடப்படுகிறது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது......

//பாடசாலையில் ஆண் ஆசிரியர் ஜீன்சும் சேர்டும் போட்டு வருவார்! பெண் ஆசிரியர் சேலை உடுத்தி வருவார்! - பெண் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் பாடசாலையில் தொடங்குகிறது!//


// நான் இலங்கை கல்வி அமைச்சராக இருந்தால், அத்தனை பெண் ஆசிரியர்களுக்கும் விடுதலை கிடைக்கும்!

மதிப்பும் கவுரவமும் மிக்க கோட் வடிவத்தில் அமைந்த ஸ்கேர்ட் அன்ட் ப்லொஸ் ( skirt and blouse ) அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள்!

ஒவ்வொரு பெண் ஆசிரியைகளும் ஹிலாரி கிளிண்டன் போல தோற்றமளிப்பார்கள்! ஆளுமை உச்சக்கட்டத்தில் இருக்கும்!//

இதற்கு நான் அளிக்கும் பதில் பெண்கள் சேலை கட்டி வந்தால் பெண் அடிமத்தனம் என்கின்றீர்..பெண் ஆசிரியைகள் சேலை கட்டி வந்தாலே மணவன் சேலை விலகி இருக்கும் சந்தை உற்றுப் பார்க்கிறன்.அதைக் கூட ஆசிரியைகள் பின் போட்டு மறைத்து விடுகின்றார்கள்.

நீர் கூறியது போல் ஹிலாரி கிளிண்டன் மதிரி உடை அனிந்து வந்தால் மாணவன் வகுப்பறையில் புத்தகத்தைப் படிக்க மாட்டான் ஆசிரியை காலையிம்,அவள் இடுப்பையிம்,பின் அழகையும் தான் பார்ப்பான்.

இதிலிருந்து தெரிகிறதா ? ஆசிரியைகளை எதுக்கு சேலை கட்டி வரச் சொல்கின்றார்கள் என்று......!!1இது பெண் அடிமைத்தனமாகுமா?????????

ஹிலாரியின் உடைகளை நீங்கள் இன்னும் சரியக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

ரேவா said...
Best Blogger Tips

சகோ பதிவை படித்தேன்...முதலில் வாழ்த்துக்கள் இப்படி ஒரு களத்தை கையில் எடுத்தமைக்கு....என்றைக்கும் உண்மை சுடும்.....அனைவரின் பின்னூட்டம் படித்தேன்..சகோதரர் விக்கி உலகம் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.....மனிதருள் மாறுபட்ட இனமாகவே திருநங்கைகளையும், ஓரினசேர்க்கை யாளர்களையும் நாம் கருதுகின்றோம் அன்றில், ஹார்மோன் குறைபாட்டினால் தான் இவர்கள் நம்மில் வேறுபடுகின்றனர் என்பதை யாரும் உணர்வது இல்லை.....

அடுத்தவர் குறைகளை கண்டு எள்ளி நகைக்கின்ற பலர் இன்னும் நம்மில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்...இவர்களை நம் சமுகத்தில் இருந்து மீட்டெடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்...மாற்றம் முதலில் நம்மில் இருந்து உருவானால் வளமாய் இருக்கும்...உண்மையாகவே THE TRUTH HURTS ....

வாழ்த்துக்கள் சகோ இந்த பதிவிற்கு...சில விடயங்களை சொல்ல ஆசை இருப்பினும், தயக்கங்கள் என்னை புறம் தள்ள, பெண் என்ற முற்றுப் புள்ளி இட்டுச் செல்கின்றேன்...

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

அங்குமட்டுமல்ல இங்கும் அப்படித்தான் என நான் நினைக்கிறேன்!பாலியல் கல்வி மட்டும் மாற்றம் கொண்டு வருமா?தெரியவில்லை!
துணிச்சலான பதிவு!

NKS.ஹாஜா மைதீன் said...
Best Blogger Tips

இதற்கான விடைகள் .?என்ன சொல்வது ...பாலியல் கல்வியை கட்டாயமாக்கினால்?

சசிகுமார் said...
Best Blogger Tips

நிரூ தங்களின் இந்த பதிவு மிக அற்ப்புதம் தனது உணர்வு மாற்றாதாலே ஆண்கள் திருநங்கைகளாக உருவாகிறார்கள். இது அவர்களின் குறை அல்ல அனைவரும் முதலில் இதை அறிய வேண்டும். அவர்களையும் மனிதர்களாக எண்ணி நமது சமூகம் தக்க மரியாதை கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக பாலியல் தொழியில் ஈடுபட மாட்டார்கள். அவர்களை அனைவரும் புறக்கணிப்பதோடு கிண்டலும் கேலியும் செய்து அவர்கள் மனதை புண்படுத்தி நாம் மகிழ்கிறோம். திருநங்கைகளுக்கும் அலுவலகத்திலும் மற்ற இடங்களிலும் வேலை கொடுக்காததால் தான் அவர்கள் வயிற்று பிழைப்பிற்காக விருப்பமில்லாமல் இந்த தொழிலை செய்து வருகின்றனர். ஆக இவர்களையும் மனிதர்களாக எண்ணி அவர்களை புறக்கணிக்க வேண்டாம்.

நல்ல சமூக அக்கறை கொண்ட பதிவு நிரூ. இந்த பதிவிற்கு நீங்கள் இது போன்ற ஒரு டிஸ்கியே போட தேவையில்லை இதில் ஒரு துளியும் ஆபாசமில்லை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, பாலியல் கல்வி, பாலியல் விழிப்புணர்வு போன்றவை பாலியலை எவ்வாறு கவனமாக கையாளலாம் என்பதையே வலியுறுத்துகின்றனவே தவிர, எல்லாவற்றையும் பொத்தி வைக்கும்படி அவை கூறவில்லை!

துரதிருஷ்டவசமாக, பாலுணர்வுகளை அடக்கிவைக்க வேண்டும் என்று பிரசங்கம் வைப்போர் , பாலியல் கல்விபற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்திவிடுகின்றனர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

யார் என்ன சொன்னாலும், எப்படி விளக்கம் தந்தாலும், பாலியல் பரவலாக்கம் ஏற்படாதவரை, பாலியல் பிரச்சனைகள் தீரப்போவதில்லை!

கவி அழகன் said...
Best Blogger Tips

இளைஞ்சர்கள் மட்டும் அல்ல வயது போனவர்கள் கூட அதிகமாய் பாலியல் லீலைகளில் ஈடுகின்றனர்
இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்து சிறையில் இருப்பவர்களில் அதிகமானோர் ஐம்பது வயதை தாண்டியவர்கள்
ஏன் வன்னியில் கூட அப்படிதான் அண்ணமார் இருந்த காலத்தில்

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

சமூக அக்கறை உள்ள பதிவு சகோ
காமம் கடந்தும் வாழ்க்கை உள்ளது என அவர்களை புரிய வைக்க வேண்டும் , பாலியல் கல்வி அத்தியாவசியமாக்க படுத்தல்தான் இதன் ஆரம்பம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பாலியல் பிரச்சனைதான் மிகவும் முக்கியமான பிரச்சனை என்று சமூகத்தில் ஒரு கருத்து இருப்பதால், ஏனைய குற்றங்களை செய்யும் குற்றவாளிகள் இலகுவாக தப்பி விடுகின்றனர்!

புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பொது சொத்துக்களை நாசமாக்குவது என தமிழனின் கீழ்தரங்கள் ஏராளமானவை! ஆனால் இவற்றை சமூக சீர்திருத்தவாதிகள் கண்டுகொள்வதே இல்லை!

ஒரு வகையில், இவர்களும் மேற்படி குற்றங்களை ஊக்குவிக்கிறார்களோ என்னவோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பெண்களை பொத்திப் பொத்தி வளர்க்கும் எமது சமூகம், பூப்புனித நீராட்டு விழாவில், அவள் குளிக்கும் காட்சியை விதம் விதமான கோணத்தில் வீடியோ எடுத்து ஊருக்கே காட்டுகிறான்!

இந்த முட்டாள்தனமான கேவலம்தான் , தமிழனின் கலாச்சாரம் என்றால், நான் ஒரு தமிழன் என்று சொல்லவே வெட்கப்படுகிறான்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தமிழனின் திருமணமுறைகள் தமிழனுக்கு சொந்தமானவை அல்ல! திருக்குறள் ஓதி செய்யப்படும் திருமணமே தமிழர் திருமணமாகும்! எத்தனைபேர் தமிழில் திருமணம் செய்கிறார்கள?

இதுதான் எமது கலாச்சாரமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இலங்கையில் தமிழன் ஒரு நேர சாப்பாட்டுக்கே வழியில்லாமல், குடிசையில் வாழ்கிறான்! அவனுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய இலட்சியமே மூன்று வேளை சாப்பிடுவதுதான்!

நிலைமை இப்படி இருக்க, இன்னொரு பகுதி தமிழனோ முழத்துக்கு முழம் கோவிலாக கட்டுகிறான்! அடுத்த ஊர்க்காரன் ராஜகோபுரம் கட்டினால், இந்த ஊர்க்காரனுக்கு நித்திரை வராது! இவனும் எப்படியாவது முயன்று, தலையால குத்தி ராஜகோபுரம் கட்டுகிறான்!

பலகோடி ரூபாக்களை விழுங்கி நிமிர்ந்து நிற்கும் ஒவ்வொரு ராஜகோபுரமும், பல லட்சம் தமிழர்களை ஏழைகளாக்கி, தாழ்த்தி, அமுக்கி வைத்துக்கொனண்டே நிமிர்ந்து நிற்கின்றன!

கோபுரங்களைப் பார்க்கும் போது கையெடுத்து கும்பிடும்படி எனது சமயம் எனக்கு சொல்லி தந்தது!

இப்பொது கோபுரங்கலைப் பார்க்கும் போதெல்லாம் காறித்துப்ப வேண்டும் போல உணர்வு!

யார் சொன்னது தமிழன் ஏழை என்று?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தமிழனின் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையில் ஒரு ஏழைத்தமிழன் இருக்க மாட்டான்!

ஆற்றங்கரை மீதினில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் எப்போது , தனக்கு தங்க நகைகளும் ராஜகோபுரமும் வேண்டும் என்று கேட்டு தமிழனின் காலைப்பிடித்து கெஞ்சினார்?

யாராவது சொல்லுங்கப்பா?

ஒரு குளக்கரையில், ஒரு சிறிய கோவிலில், ஒரு மாலைவேளையில் சென்று சிறிது நேரம் அமர்ந்து வழிபட்டுப் பாருங்கள்! உள்ளம் அமைதியாக இருக்கும்! மனம் அமைதி கொள்ளும்!

கோபுரம்கட்டித்தான், கடவுளை காக்கவேண்டுமா என்ன?

இந்த இழி நிலைக்கு காரணம் எமது கலாச்சாரம் தானே!

தமிழனின் சீத்துவக்கேடுகள் எண்ணில் அடங்காதவை! கலாச்சாரம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் அருவருப்பானவை, கேவலமானவை!

இதெல்லாத்தையும் எண்ணிப்பார்க்க மறந்த தமிழன், சதா எண்ணீக்கொண்டிப்ப்பது,

எந்தப் பெண் யாருடன் கதைக்கிறாள்? யார் யாரைக் காதலிக்கிறார்கள் ? எந்தப் பூங்காவில் எத்தனை காதல் ஜோடிகள் உலாவுகின்றன? கலியாணம் கட்டி இவ்வளவு வருஷமாச்சு ஏன் இன்னும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை? ஹி ஹி ஹி!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வரும் ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிறு அன்று, தமிழன் பாரிஸ் நகரின் லா சபேல் பகுதியில், பிள்ளையாரை தெருத்தெருவாக இழுத்து செல்ல இருக்கிறான்! இதற்கு ஐம்பதாயிரம் யூரோக்கள் செலவழிக்க இருக்கிறான்!

அன்று பல்லாயிரக்கணக்கான தேங்காய்கள் , தெருத்தெருவாக உடைக்கப்பட்டு, சுத்தம் மிக்க பிரெஞ்சு வீதிகள் , அழுக்காக்கப்பட இருக்கின்றன!

மே 18 நிகழ்வுக்கு வந்திருந்த தமிழர்களைவிட 10 மடங்கு தமிழர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்கிற கசப்பான உண்மையையும் சுட்டிக்காட்டுகிறேன்!

அன்றைய தினமும் - எமது வன்னிமக்கள், தங்கள் எதிர்காலம் குறித்து கவலையோடு இருப்பார்கள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்!

Jana said...
Best Blogger Tips

கட்டுரையும் உங்கள் இறுதிக்கேள்வியும் பலவற்றை சிந்திக்கவைக்கின்றது. எம் சமுதாயத்தில் உடனடியாக பாலியல் அறிவு பற்றிய ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியாது, ஆனால் குறைந்தது ஒரு 10 ஆண்டு திட்டம் போட்டு மெல்ல மெல்ல பல தெளிவுகளை ஏற்பயுடுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

shanmugavel said...
Best Blogger Tips

பல விஷயம் புதுசு சகோதரன் வாழ்த்துக்கள்.

ஹேமா said...
Best Blogger Tips

எங்கள் சமூகத்தின் சீர்கேட்டு நிலைக்குத் தேவையான யோசிக்கவேண்டிய கட்டுரை.என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நெருங்கின உறவுக்கார ஆண்கள் வந்தாலே உள்ளுக்குப் போங்கோ என்று அடுப்படியோடு இருந்து,
ஒளிச்சிருந்து பார்த்த என் தேசத்தின் சீரழிவை நாங்களே ரசித்தும்,
காறித்துப்பியும் எப்படி இதைச் சீர்ப்படுத்துவது என்றும் யோசிக்கவேண்டியிருக்கு.

உண்மைதான் முத்தம் கொடுத்தல் என்பதை வெட்கத்தோடு பார்த்தும் பார்க்காமல் போன காலம் போக,இந்த நாட்டுக்கு வந்த பிறகு முத்திட்டுக் கொண்டிருக்கும்போதே அருகில் சூடு சொரணையே இல்லாமல் இருக்கிறோமே.எனவே கையைப் பொத்தி வைத்திருக்கும்வரைதான் என்ன இருக்குமோ என்கிற ஆவல்.இதுதான் என்று காட்டிவிட்டால்.....!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

திருநங்கைகளைக் கிண்டல் செய்யும் மனப்பக்குவத்தை தடுக்க முடியாதவர்களாக நாம் இருக்கிறோம்.>>>

உண்மை தான் சகோ. திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு வந்தால் இப்பிரச்சனை ஓரளவு குறையும்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails