Thursday, May 5, 2011

மணமகள் தேவை- முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!

வணக்கம் உறவுகளே, இன்றைய கால கட்டத்தில், புறோக்கர்மாரின் பிழைப்பில் நிறையப் பேர் மண் அளிப் போடுறாங்களாம். இதை நான் சொல்லவில்லை, நம்ம ஊர் விசுவலிங்க புறோக்கர் தான் சொல்லுறார்.  இன்டநெட், செல்போன், ஐபோன் என்று அடுக்கடுக்காக நவீன தொழில் நுட்ப சாதனங்கள் வந்த காரணத்தினால், வருமானம் தங்களுக்கு வரவில்லை என்று, ரேசன் கடை நிவாரணத்தில் பிழைப்பை ஓட்டும் பணக்கார வீட்டார் மாதிரி, நம்ம ஊர் புரோக்கர்களும், பஞ்சம் கொட்டத் தொடங்கிட்டாங்கள். யோ...தெரியாமத் தான் கேட்கிறன். அந்தப் புறோக்கரின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டது யாரு?
புரோக்கர் ஆட்களின் தொழில், இன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் வீழ்ச்சியடைந்திருந்தாலும், ’சிங்கிள் கப்(Single Cap) பார்த்து சிக்ஸர் அடிக்கும் கிரிக்கட் வீரர்கள் மாதிரி, மாசியிலை ஒரு கலியாணம், மார்கழியில் மற்றோர் கலியாணம் என ஒப்பேத்தி, பேசி முடிச்சு, பொருத்தம் பார்த்து, சுளை- சுளையா காசைச் சுருட்டி வேட்டியினுள் போட்டுக் கொண்டு ஹாலிடே... ஜாலிடே... இளமைக்கெல்லாம் ஹாப்பி டே’ என்பது போல நம்ம ஊரில் உள்ள அறுபது வயதைத் தாண்டின புறோக்கர் ஆட்களும் இப்ப நகர் வலம் போக வெளிக்கிட்டாங்கள்.

முந்திய காலத்திலை போட்டோ எடுத்து, பொருத்தம் பார்க்க குடுக்க வேண்டும் என்றால், வடிவா வெளிக்கிட்டு ஊரிலை உள்ள ஸ்டூடியோவிற்கு போய் இரண்டு பூங் கொத்துக்களைக் கையிலை வைச்சுக் கொண்டு, ஸ்டூடியோ கடைக் காரன் சொல்லுற பகிடியளுக்கு பல்லை இளிச்சு, காட்டிப் படம் எடுத்தாலும், போட்டோ; இரண்டு மாசம் கழிச்சு தான் வரும்.

இப்போதெல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக ஐந்தே நிமிடத்திலை படத்தையும், தந்து, பொம்பிளை அல்லது மாப்பிளை கறுப்பாகவோ, கலர் குறைவாகவோ, இருப்பின் போட்டோ சொப்பில்(Photo Shop) வெள்ளையடித்து, கலியாணத்தை ஆறேழு நாட்களுக்குள் பேசி முடித்து, ஒரு பெரிய எமவுண்டை புரோக்கர் தன்ரை பொக்கற்றினுள் கமிசனாகப்(கூலி) போட்டிடுவார்.

விளம்பரம்: ’யாழ் இந்து வேளாள குலத்தைச் சேர்ந்த, படித்து உயர் பதவி வகிக்கும், கனடாவில் உள்ள மணமகனுக்கு, அதே குலத்தைச் சேர்ந்த படித்த அழகிய மணமகள் தேவை’(கனடா சிட்டிசன் உள்ள மணமகனுக்கு)

இது இன்றைய காலப் பத்திரிகைகளில் நம்ம ஊர் புரோக்கர்கள் ஒரு தனிப் பக்கத்தையே ஒதுக்கிப் போடுற விளம்பரம். அதுவும், வெளி நாட்டு மாப்பிளைகளுக்கு பெண் தேடுவோர் தொகை தான் அதிகமாக இருக்கும்,

‘அடங் கொய்யாலா, படித்து உயர் பதவி வகிக்கிறது என்று நீ போட்டுத் தான் நம்ப வேணுமே, நம்மளுக்கு என்ன தெரியவா போகுது நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாய் என்று.

யாதார்த்தம் என்னவென்றால், மாப்பிளையிடம் உயர் பதவி, இல்லை என்பதை நம்பாத அப்பாவியாய், பொண்ணு வீட்டுக்காரர், என்ன பண்ணுவாங்க.
உள்ளூரில் அழகாக இருந்து நம்ம தூக்கத்தையெல்லாம் கெடுத்த ஒரு பிகரைப் பார்த்து, பேசிக் கட்டி, கனடாவிற்கு அனுப்பினாப் பிறகு தான் தெரியும், மாப்பிளையின் வண்டவாளங்கள். (யாருக்காவது கோபம் வந்தால் மன்னிக்கவும், இது ஒரு காமெடி கலாட்டா,)

போகப் போக எல்லாம் புரியும் என்பது போலவே, கொஞ்ச நாட் சென்றதும்,
அந்தப் பெண்ணே போன் பண்ணி, எல்லா உண்மைகளையும்,(கல்வித் தகமை, வேலை) தன் வீட்டுக் காரரிடம் போட்டு உடைத்து விடும்.

‘இலண்டனில் வசிக்கும், யாழ்ப்பாண அழகிய மணமகளுக்கு, மணமகன் தேவை, சாதி எதிர்பார்க்கப்பட மாட்டாது.’ இது அடுத்த விளம்பரம்.

இலண்டனில் வசிக்கிறவா, அழகிய மணமகள் என்றால், நம்ம உள்ளூரிலை வசிக்கிறவங்க, வாழுறவங்க; எல்லோரும் என்ன அழகில்லாத ஆட்களே. நீங்க என்ன பெரிய கிளியோபட்ரா என்ற நினைப்பிலையா விளம்பரம் போடுறீங்க.

இந்த மாதிரியான கொடுமைகளுக்கு ஒரு பில்டப்பு விளம்பரங்கள், முந்தி பத்திரிகைகளில் மட்டும் தான் வந்து கொண்டிருந்தது, இப்போ, டீவியிலையும் வரத் தொடங்கிட்டுது. என்ன கொடுமை! இன்றைய கால மணமகள் தேவை விளம்பரத்திலை வாற இன்னொரு விடயம், அந்த நாட்டு குடியுரிமை உள்ளவர், அல்லது அமெரிக்க கிறீன் கார்ட் உள்ள ஆள் என்று’ ஒரு அடை மொழியைப் போட்டு, மணமகன், மணகளின் தரத்தை உயர்த்திக் காட்டுவது. அப்படிக் காட்டினால் தானாம், ஊரில் அழகான பொண்ணை வெளி நாட்டுக்கு, ஏற்றுமதி செய்வார்களாம்.

உள்ளூரில் நல்ல குணத்தோடு படித்து அழகிய மண மகனோ, மணமகளோ இருந்தாலும், வெளி நாட்டிலை உள்ள ஆட்களுக்கு தான் எங்கள் ஊரில் எல்லோரும் கட்டி வைக்கிறார்கள்- நிச்சயமாய் வயித்தெரிச்சல் இல்லை.
அப்படியாயின் உள்ளூர், இளைஞர்கள் எங்கே போய் பெண்ணெடுப்பது. 

காதலித்து, உள்ளூரில் உள்ள பொண்ணை திருமணம் செய்வோம் என்றாலும், பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போல காதலித்த பொண்ணுங்க தான், மறு நாளே டாட்டா காட்டி விட்டு, கபுக்கென்று ஏறி கடல் கடந்து வெளி நாட்டுக்கு ஓடுறாளுங்க. நம்மளை விட இப்ப பொண்ணுங்க, ரொம்ப விவரமாகிட்டாங்க, ரொம்ப அலேர்ட்டா இருங்க நண்பர்களே!

சில வெளி நாட்டு மணமகன்கள் வேலை அதிகமாக இருப்பதால் ஊருக்கு வர மாட்டாங்கள், அவங்கள் போனிலையே எல்லாவற்றையும், பேசி  முடிச்சிடுவாங்க. பொண்ணு பார்த்து, சம்பந்தம் கலந்து தட்டு மாத்திய பின்னாடி, போனிலை பேசிப் பேசி, அலை பேசியில் அசடு வழிய வைச்சே குடும்பம் நடத்திப் பிள்ளையும் பெத்திடுவாங்க. இதுவும் நம்ம ஊர் பண்பாடு ஆகி விட்டுது.

முந்தி ஒரு காலத்தில் வெளி நாட்டிற்கு பொண்ணை அனுப்பி வைக்க வேண்டும் என்றால், பொண்ணோடை மாப்பிளையின் அப்பா- மாமன் காரன் தான் பொண்ணைக் கொழும்பிற்கு கூட்டிக் கொண்டு போய், விசா ஏற்பாடு எல்லாம் செய்வார், விசாவிற்கு கிடைக்காமல் தாமதம் ஆகினால், மாமனும்- மருமோளும் ஒற்றுமையாக கொழும்பெல்லாம் திரிவாங்களாம். இப்புடியும் பல சம்பவங்கள்...


இன்னொரு விடயம் என்ன என்றால், ஒரு சில வெளி நாட்டு நல்லவர்களுக்கு வேலையில் லீவெடுக்க முடியாமல் இருக்குமாம். அப்போ அவங்க என்ன பண்ணுவாங்க என்றால்,
‘பொண்ணுக்கு விசா கிடைச்சு, பிளைட் புக் பண்ணி, பொண்ணு வெளி நாடு போக ரெடி ஆகிட்டு என்றால்’
’எனக்கு இன்னைக்கு வேலைடா செல்லம், நீ கோவிச்சுக்காமல், பிளேன் ஏறி வா. என் உயிர் நண்பனை எயார் போட்டிற்கு அனுப்புறேன், அவன் வந்து உன்னை பிக் பண்ணிக் கொண்டு வந்து வீட்டிலை விடுவான் எனச் சொல்லி, நைசாக வேலைக்கு நழுவி விடுவார்களாம்.

அதிஸ்டகார நண்பன் என்ன பண்ணுவான் தெரியுமோ, தான் தான் மாப்பிளை என்று சொல்லி, எயார் போர்ட்டில் ஒரு மாஸ் ஹீரோ வேசம் போட்டு, எயார் போர்ட்டில் இருந்து பொண்ணை அழைத்து வந்து, தன் வசப்படுத்திடுவான், இப்படி ஆளைச் சரியாகத் தெரியாமலே, ஜோடிகள் மாறிய சோகக் கதைகள் இருப்பதாக ஒரு சில புலம் பெயர் நண்பர்கள் சொன்னார்கள். உண்மை என்று உறுதிப் படுத்த யாராவது இருக்கிறீங்களா?

ன்னொரு விளம்பரம் பத்திரிகையில் எப்பூடி வரும் தெரியுமா?

‘பிரான்ஸில் வசிக்கும், யாழ் இந்து உயர் குலத்தைச் சேர்ந்த திருமணமாகி விவகாரத்துப் பெற்ற ‘60’ வயது ஆண்மகனுக்கு, படித்த அழகிய இளம் மண மகள் தேவை, சீதனம் எதிர்பார்க்கப் படமாட்டாது!

அடக் கடவுளே, அறுபது வயதிலும் தான் ஆண் மகன் என்று விளம்பரம் வேறு, அடிங் கொய்யாலா, அறுபதிலும் இருபது கேட்குதாம். -அழகிய இளம் பெண்.
இதனை விட இன்னொரு பகிடி என்ன என்றால், நம்ம ஊரில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பங்கள், தங்களின் பொருளாதாரத்தைச் சீர் தூக்க வேண்டும் என்பதற்காய், இளம் பெண்களை, இப்படியான தாத்தாமாருக்கு கட்டி வைத்து விடுவார்கள். பிறகு பொண்ணோடை கதி.....
‘ஊரு சனம் தூங்கிடுச்சு...ஊதக் காற்றும் அடிச்சிருக்கு..
பாவி மனம் தூங்கலையே...அதுவும் ஏனோ நடக்கலையே...!
எனப் பாடிய படி ஆகி விட்டும்,

அம்மாமாரே, அப்பாமாரே, உள் நாட்டிலும் கொஞ்சம் படித்த அழகிய குணமான வாலிப நெஞ்சங்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீதும் கொஞ்சம் கருணை காட்டினால், உங்களுக்கும் புண்ணியமாவது கிடைக்குமே!

டிஸ்கி: மணமகள் தேவை- இந்தப் பதிவிற்கும், இறுதியில் உள்ள பிரான்ஸ் விளம்பரத்திற்கும், பிரான்ஸில் வாழும் பிரபலம் ஒருவருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கம்பனி உறுதிப்படுத்திக் கொள்கிறது.

125 Comments:

Anonymous said...
Best Blogger Tips

இந்தப் பதிவுக்கு கருத்துப் போடவில்லை எனில் நான் மனிதனே இல்லைங்க ....

வெகு காலமாக யாரும் சாட்டை செய்யாத ஒரு பகுதியைப் பிடித்து பதிவாக்கிட்டீங்க ....

நியாயமான கருத்துக்கள், யதார்த்தங்களையும், சம்பவங்களையும் பதிவில் இட்டுள்ளீர்கள் ....

முதலில் நான் வெறுப்பது விளம்பரம் கொடுத்து பெண்/ஆண் எடுப்பது ... துணைவி என்ன வீடா/காரா .. விளம்பரத்துக்குப் பிடிக்கிறதுக்கு

Anonymous said...
Best Blogger Tips

சரி ! வேறு வழி இல்லை . நேரில நம்ம மூஞ்சியைப் பார்த்து எவனும்/எவளும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்கனா.. விளம்பரத்துல தேடுங்க ....

ஆனால் இந்த புரோக்கர் இருக்காங்களே ! அதாங்க.. மாமா'ஸ் அவங்க காசுக் கிடைச்சாப் போதும்னு கழுதைக்கும் தவளைக்கும் கூட கலியாணம் பண்ணிடுவாங்க.. ஆயிரம் பொய் சொல்லி கலியாணம் பண்ணலாமுனு எந்த புறம் போகிறவனோ சொல்லிபுட்டு போய்டான்.. கலியாணத்துக்கு அப்புறம் ஒவ்வொரு பொய்யா வெளியில வரவர ஒரே அல்லோகலங்கள் தானுங்க..

Anonymous said...
Best Blogger Tips

ஸ்டூடியோவில் போட்டோ எடுக்கிறதப் பத்திச் சொன்னீங்க.. உண்மையில் அது கொடுமையிலும் கொடுமை. ஒரு முறை கல்லூரிக்கு ஒரு போட்டு கொடுக்கணும்னு போனா.. அங்கிருக்கிறவன் நான் என்னவோ அலையண்ஸ்ப் பார்க்கத் தான் போட்டோ எடுக்க வந்தவனு நினைச்சு நாத்தம் பிடிச்ச கோர்டெல்லாம் மாட்டிவிட்டு கடுப்பேத்திட்டான், நானும் என்ன நடக்குதுனு தெரியாமா... அந்த கோட் வேண்டாம் சும்மாவே எடுங்க.. அப்படினு சொல்ல.. அவனும் விதவிதமா எடுத்துக் கொடுத்துபுட்டான். பாவிபய. நான் எடுக்க வந்த போட்டோ சிறிய புகைப்படம்னு சொன்னப்புறம் தான் அவனுக்கு விஷயமே புரின்சுது. சரினு அந்த போட்டோவெல்லாம் என் காதலிக்கு அனுப்பி வைச்சேன் ....

Anonymous said...
Best Blogger Tips

இந்த சாதி போட்டு மணமகள்/மகன் தேவை எங்கின்ற விளம்பரத்தைப் பார்த்தாலே கடுப்பாகி வரும் ... ஆணுக்குத் தேவை - வேலை, கலர், அழகு, சாதி பெண்ணுக்குத் தேவை அழகு, கலர், சாதி, வேலை .... இதை எல்லாம் பார்த்து காதல் வருமா? கலியாணம் நிலைக்குமா? என்னவோங்க... நல்லா இருந்தாச் சரி ..

Anonymous said...
Best Blogger Tips

// யாதார்த்தம் என்னவென்றால், மாப்பிளையிடம் உயர் பதவி, இல்லை என்பதை நம்பாத அப்பாவியாய், பொண்ணு வீட்டுக்காரர், என்ன பண்ணுவாங்க. //

என்னங்க.. மாப்பிள்ளை இங்க என்ன டாக்டரா, எஞ்சினியரா, அவருக்கு பெர்மணண்ட் வேலையும் இருந்து, இதுக்கு முன்னாடி கலியாண அனுபவமும் இல்லாம இருந்தாலே பெரும் புண்ணியம் .... ஆனால் பெரும்பாலும் இது உல்டாவாத் தான் இருக்கு ....

விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகள் தான் அதிகமுங்க... இதுக்கு மேலயும் விளக்கினால் பல குடும்பம் புஸ்வானமாகிடும்

Anonymous said...
Best Blogger Tips

சாதிகள் எதிர்ப்பார்க்கப்பட மாட்டாது என்றால் - நிச்சயம் ஏற்கனவே கலியாணம் ஆகியிருக்குமோனு நம்மாளுங்க.. நினைச்சிடுவாங்க....

இனிமேல் கலியாண விளம்பரத்துல மேட்ரமோனியல் சைட் போல போட்டோவோடத் தான் போடனும்னு சொன்னா. பாவம் பேப்பர் காரனுக்கு பிழைப்பு நாறிடும் ........... அதனால் அத்தெ சொல்ல மாட்டங்க..

Anonymous said...
Best Blogger Tips

// உள்ளூரில் நல்ல குணத்தோடு படித்து அழகிய மண மகனோ, மணமகளோ இருந்தாலும், வெளி நாட்டிலை உள்ள ஆட்களுக்கு தான் எங்கள் ஊரில் எல்லோரும் கட்டி வைக்கிறார்கள்- // இதே மனோபாவம் இந்தியாவில் உயர் - நடுவர்க்கக் குடும்பங்களில் காணப்படுகின்றன. ஆனால் எல்லாருக்கும் அமெரிக்க மாப்பிள்ளைக் கிடைச்சுடுமா, அதனால் உள்ளூரிலயே வேற வழி இல்லாமல் கலியாணம் பண்ணிடுவாங்க..

ஆனா - இப்போ எல்லாரும் விரும்புவது ஐடி மாப்பிள்ளைகள்/பெண்கள் .... அப்போ மிச்சம் பேரு !!!

Anonymous said...
Best Blogger Tips

// அப்படியாயின் உள்ளூர், இளைஞர்கள் எங்கே போய் பெண்ணெடுப்பது //

சிந்திக்க வேண்டிய விடயம், தமிழ்நாட்டில் பலருக்கு பெண் கிடைக்காதத்தால் கேரளாவில போய் எடுக்கிறாங்க... ( கேரளாவில் பெண்கள் அதிகமுங்க, வசதிக் குறைந்தவர்கள் என்பதாலோ என்னவோ ). நீங்க இந்த ரூட்ல ஏன் யோசிக்கக் கூடாது...

Anonymous said...
Best Blogger Tips

// காதலித்து, உள்ளூரில் உள்ள பொண்ணை திருமணம் செய்வோம் என்றாலும், பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போல காதலித்த பொண்ணுங்க தான், மறு நாளே டாட்டா காட்டி விட்டு, கபுக்கென்று ஏறி கடல் கடந்து வெளி நாட்டுக்கு ஓடுறாளுங்க //

உண்மை... கசக்கும் .... மன்மதன் ஆகிவிடாதீர்கள்

Anonymous said...
Best Blogger Tips

// சில வெளி நாட்டு மணமகன்கள் வேலை அதிகமாக இருப்பதால் ஊருக்கு வர மாட்டாங்கள், அவங்கள் போனிலையே எல்லாவற்றையும், பேசி முடிச்சிடுவாங்க. பொண்ணு பார்த்து, சம்பந்தம் கலந்து தட்டு மாத்திய பின்னாடி, போனிலை பேசிப் பேசி, அலை பேசியில் அசடு வழிய வைச்சே குடும்பம் நடத்திப் பிள்ளையும் பெத்திடுவாங்க. இதுவும் நம்ம ஊர் பண்பாடு ஆகி விட்டுது //

தொலைத் தூரக் காதல் குடும்பங்கள்

Anonymous said...
Best Blogger Tips

// மாமனும்- மருமோளும் ஒற்றுமையாக கொழும்பெல்லாம் திரிவாங்களாம். இப்புடியும் பல சம்பவங்கள்... //

இப்படியும் நடக்குதா.. கொடுமை கொடுமை.. கலி காலம் .. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்... கோர்ட் வாசலிலே

Anonymous said...
Best Blogger Tips

// அதிஸ்டகார நண்பன் என்ன பண்ணுவான் தெரியுமோ, தான் தான் மாப்பிளை என்று சொல்லி, எயார் போர்ட்டில் ஒரு மாஸ் ஹீரோ வேசம் போட்டு, எயார் போர்ட்டில் இருந்து பொண்ணை அழைத்து வந்து, தன் வசப்படுத்திடுவான் //

கனடாவில் நடந்த சம்பவம் தானே இது,, ஒரு பெண் திருமணமாகி துணைவி விசாவில் இங்கு வர, ஏர்போர்ட்டில் மாயம் ... கடுப்பாகியது மணமகன் மட்டுமில்லை .. கனடா அரசாங்கமும் தான் ...

அதனால் இனிமேல் இங்கு வரும் துணைவியர் மூன்று ஆண்டேனும் ஒன்றாக வசித்தால் தான் பி.ஆர். சிட்டிசன் எல்லாம் என முடிவு செய்துள்ளார்கள்...

சில நேரங்களில் அப்பாவே பெண்ணை மணந்து மனைவினு விசாக் கொண்டு வந்து அப்புறம் விவாகரத்து வாங்கிய கதைகளும் உண்டாம்.. நாறப் பிழைப்பு .....

கஞ்சியைக் குடித்தாலும் கௌரவமாக இருக்கணும் ....

Anonymous said...
Best Blogger Tips

// அடக் கடவுளே, அறுபது வயதிலும் தான் ஆண் மகன் என்று விளம்பரம் வேறு, அடிங் கொய்யாலா, அறுபதிலும் இருபது கேட்குதாம். -அழகிய இளம் பெண். //

இப்படியான சம்பவங்கள் கேரளக் கரைகளில் பல நடக்குது. அங்கே பெண்கள் அதிகம், ஏழைகள் அதனால் பல இஸ்லாமிய இளம் பெண்களை வயது வந்த அரபி முஸ்லிம்களுக்கு சில நாள் வைப்பாட்டித் திருமணம் செய்து அனுபவித்துக் கொள்வார்கள். அப்புறம் அந்த கிழட்டு அரபிகள் மாதம் மாதம் பணம் அனுப்புவார்களாம்... சிலர் அடிக்கடி வருவார்களாம், சில நல்லவர்கள் வைப்பாட்டிகளை கூட்டிச் செல்வார்களாம், சிலரோ புதுசு புதுசா தேடுவார்களாம். பெண்ணின் வறுமையும் கொடியது ....

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் இப்படி பதிவு போட்டாவது யாராவது சிட்டு சிக்காதா என்று இருக்கின்றீர்கள். நான் சொல்றேன் அடுத்த ஆண்டே உங்களுக்கு டும் டும் டும் தான்.. கலியாணம் நடக்குமுங்க... ஆல் தி பெஸ்ட்

Unknown said...
Best Blogger Tips

இப்ப ஓகே பண்ணிட்டன் பாஸ்

Unknown said...
Best Blogger Tips

இக்பால் பாசுக்கு என்ன ஆச்சு??இப்பிடி வாங்கு வாங்குன்னு வாங்குறார்??

Unknown said...
Best Blogger Tips

ஆமா யாரு அந்த பிரான்சு பதிவர்??
பிரான்சில வடை சுட்டு புழைப்பு ஓட்டும் ஓட்டவடை இல்ல தானே??

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஆமாம் யாருக்கு பொண்ணு பாக்குரீன்கலாம்...?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மறுபடியும் பாலோவர் குடுத்துட்டேன் மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

/அடக் கடவுளே, அறுபது வயதிலும் தான் ஆண் மகன் என்று விளம்பரம் வேறு, அடிங் கொய்யாலா, அறுபதிலும் இருபது கேட்குதாம். ///


ஹா ஹா ஹா ஹா அப்பிடி போடு அருவாளை....

Anonymous said...
Best Blogger Tips

சொல்ல மறந்துட்டேன் ஒன்னாவது மற்றும் ஆறாவது புகைப்படத்தில் இருப்பவர்கள் அழகாக இருக்கின்றார்கள். திராவிடத் தன்மை நிறைந்த அழகிகளை தமிழ்நாட்டு காமெராக்கல் சுடுவதில்லை என்பதால் வறட்சியில் இலங்கைப் பக்கம் கண்கள் திரும்ப நேரிடுகின்றது.

இதில் ஐந்தாவது புகைப்படம் நிருபனுடையதா? { சந்து வழியிலா ஆட்டோ ஒட்டுறிங்க.. என்ன } ஆறாவது யார் என எனக்குத் தெரியும் ?

shanmugavel said...
Best Blogger Tips

நல்லாருக்கு! போகட்டும்.உண்மையிலேயே பிரான்ஸில் வாழும் பிரபலத்துக்கு சம்பந்தமில்லையா? பாசமா? ஹாஹா

Anonymous said...
Best Blogger Tips

///புரோக்கர் ஆட்களின் தொழில், இன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் வீழ்ச்சியடைந்திருந்தாலும், ’சிங்கிள் கப்(Single Cap) பார்த்து சிக்ஸர் அடிக்கும் கிரிக்கட் வீரர்கள் மாதிரி, மாசியிலை ஒரு கலியாணம், மார்கழியில் மற்றோர் கலியாணம் என ஒப்பேத்தி, பேசி முடிச்சு, பொருத்தம் பார்த்து, சுளை- சுளையா காசைச் சுருட்டி வேட்டியினுள் போட்டுக் கொண்டு /// பாஸ் இப்ப எல்லாம் பெண் கொடுக்கிற சீதனத்தில குறிப்பிட்ட வீதம் கமிசன் எடுக்கிறாங்கள். அதுவும் மாப்பிள்ள பொம்பிள்ள எண்டு இரண்டு பக்கமும்...

Anonymous said...
Best Blogger Tips

///விளம்பரம்: ’யாழ் இந்து வேளாள குலத்தைச் சேர்ந்த, படித்து உயர் பதவி வகிக்கும், கனடாவில் உள்ள மணமகனுக்கு, அதே குலத்தைச் சேர்ந்த படித்த அழகிய மணமகள் தேவை’(கனடா சிட்டிசன் உள்ள மணமகனுக்கு)/// சிவந்த லட்சணமான நல்ல குணஅம்சம் உள்ள குடும்ப பாங்கான( அப்புறம் வெளிநாடு போன பிறகு ரூட்ட மாத்தினால்) பெண் வேண்டும்... ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

///‘அடங் கொய்யாலா, படித்து உயர் பதவி வகிக்கிறது என்று நீ போட்டுத் தான் நம்ப வேணுமே, நம்மளுக்கு என்ன தெரியவா போகுது நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாய் என்று./// பாஸ்! இப்ப வெளிநாடு மாப்பிள்ள என்றாலே என்ன தொழில் என்று கேட்கிறதில்ல.. ஏனென்டா மாப்பிள்ள என்னவா இருக்கிறாரு என்று ஊரில கேட்ட "வெளிநாட்டில இருக்காரு" எண்டு பெருமையா சொல்லுவினம் பாருங்கோ....) B . A ,M . A எண்ட போல வெளிநாடும் ஒரு பட்டமாச்சு ஹிஹிஹி ( சத்தியமா எனக்கு அனுபவம் இல்ல)

Anonymous said...
Best Blogger Tips

என்ன அந்த நாலாவது போட்டோவில நிக்கிற பொண்ணு ஒரு நகைக்கடையே உடம்பில சுமந்து கொண்டு போஸ் கொடுக்குறா.ஓ இது தான் நடமாடும் நகைமாளிகயா...)

Anonymous said...
Best Blogger Tips

///இந்த மாதிரியான கொடுமைகளுக்கு ஒரு பில்டப்பு விளம்பரங்கள், முந்தி பத்திரிகைகளில் மட்டும் தான் வந்து கொண்டிருந்தது,// ஞற்று கிழமை வீரகேசரில இதுக்கென்றே தனியா நாலு பேப்பர் வருமே!

Anonymous said...
Best Blogger Tips

///காதலித்து, உள்ளூரில் உள்ள பொண்ணை திருமணம் செய்வோம் என்றாலும், பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போல காதலித்த பொண்ணுங்க தான், மறு நாளே டாட்டா காட்டி விட்டு, கபுக்கென்று ஏறி கடல் கடந்து வெளி நாட்டுக்கு ஓடுறாளுங்க. நம்மளை விட இப்ப பொண்ணுங்க, ரொம்ப விவரமாகிட்டாங்க,/// நங்கையர் குலமே என்ன பாத்துக்கிட்டு இருக்கீங்க..வாங்க வந்து ஒரு கும்மு கும்முங்க...).....

Anonymous said...
Best Blogger Tips

////அம்மாமாரே, அப்பாமாரே, உள் நாட்டிலும் கொஞ்சம் படித்த அழகிய குணமான வாலிப நெஞ்சங்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீதும் கொஞ்சம் கருணை காட்டினால், உங்களுக்கும் புண்ணியமாவது கிடைக்குமே!/// குணமா முக்கியம் நமக்கு பணம் தானே முக்கியம் ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

////இக்பால் செல்வன் said...

நிரூபன் இப்படி பதிவு போட்டாவது யாராவது சிட்டு சிக்காதா என்று இருக்கின்றீர்கள். நான் சொல்றேன் அடுத்த ஆண்டே உங்களுக்கு டும் டும் டும் தான்.. கலியாணம் நடக்குமுங்க... ஆல் தி பெஸ்ட்//// அண்ணே இவருக்கு கல்யாணம்...................ஆகிட்டு......................ச்சும்மா )))

மதுரை சரவணன் said...
Best Blogger Tips

purokkarkal meethulla aathankgamaa...illai pen kidaikkaatha allathu paarkkaatha kuraiyai ippadi pendu eduththulleerkala...? vaalththkkal

செங்கோவி said...
Best Blogger Tips

செம நக்கல் பதிவு சகோ..சிரிச்சிக்கிட்டே படிச்சேன்..ஃபோட்டோ எடுக்குறது செம காமெடி..கடைசியில் அங்க கோர்த்திருக்க வேண்டாம்னு தோணுது.

Anonymous said...
Best Blogger Tips

கந்தசாமி - //அண்ணே இவருக்கு கல்யாணம்...................ஆகிட்டு......................ச்சும்மா ))) //

ஓஹ் அப்படியா மேட்டரு.. இருந்திட்டுப் போகுது.. ரெண்டாம் கலியாணம் நடக்கட்டுமேன்.. டும் டும் டும்ம். அப்புறம் டம் டம் டமாரம் .. ஹஹஹாஆ....

உணவு உலகம் said...
Best Blogger Tips

//டிஸ்கி: மணமகள் தேவை- இந்தப் பதிவிற்கும், இறுதியில் உள்ள பிரான்ஸ் விளம்பரத்திற்கும், பிரான்ஸில் வாழும் பிரபலம் ஒருவருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கம்பனி உறுதிப்படுத்திக் கொள்கிறது.//
பாவங்க அவரு!

உணவு உலகம் said...
Best Blogger Tips

///அடக் கடவுளே, அறுபது வயதிலும் தான் ஆண் மகன் என்று விளம்பரம் வேறு, அடிங் கொய்யாலா, அறுபதிலும் இருபது கேட்குதாம். ///
கேட்கட்டும், கேட்கட்டும். சும்மா பார்க்கிறதுக்குதாங்கோ!

உணவு உலகம் said...
Best Blogger Tips

உங்கள் விளாசல்கள் ஒவ்வொன்றும் அருமை, நண்பரே!

கவி அழகன் said...
Best Blogger Tips

எனதை சொல்ல அதுதான் நீங்கள் எலாத்தையும் புட்டு புட்டு வசிடின்களே நிருபன்
இருந்தாலும் ஒரு முளேல சின்ன வயிதெரிச்சல் இருக்குதான்

கவி அழகன் said...
Best Blogger Tips

லண்டன்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம்
எண்டு சொல்ல்லுராங்க
எத்தினையோ பொம்பிளைங்க
ஊர் பாத்து வந்தாங்க
இன்னும் சில பொம்பிளையள்
ஊர் பாக்க போறாங்க
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்
நல்ல நல்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்த
அள்ள நிக்குறாங்க
எத்தனையோ பொம்பிளைங்க
ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க
ஏமாற போறாங்க..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்கு தெரியும்
இவை நாட்டுக்குள்ளே நரிகள் என்று
யாருக்கு தெரியும்!!

டக்கால்டி said...
Best Blogger Tips

Ada ponga boss... en vayitherichalai kottikkaatheenga...

Enakkum inum ponnu kidaikkala..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>
டிஸ்கி: மணமகள் தேவை- இந்தப் பதிவிற்கும், இறுதியில் உள்ள பிரான்ஸ் விளம்பரத்திற்கும், பிரான்ஸில் வாழும் பிரபலம் ஒருவருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கம்பனி உறுதிப்படுத்திக் கொள்கிறது.

haa haa ஹா ஹா ஜீவனுக்குத்தான் சட்டப்படி ஒண்ணூ செட்டப்படி 3 இருக்கே? மறுபடியுமா?

Mathuran said...
Best Blogger Tips

//மணமகள் தேவை- முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!//

தலைப்பை பார்த்துவிட்டு எவ்வளவு ஆர்வமா ஓடோடி வந்தன்! இப்படி ஏமாத்திட்டிங்களே பாஸ்

Unknown said...
Best Blogger Tips

சரிப்பா விடு....என்னை மாதிரி அப்பாவிங்களுக்கு எப்படி பொண்ணு கெடைக்கும் தெரியலையே........ஒரு அமைதியான மனுசன
கலாய்க்காதய்யா!

Unknown said...
Best Blogger Tips

என்னமோ போங்க பாஸ்!

'இப்பல்லாம் அழகான பொண்ணு கூட யாரும் வெளிநாட்டிலருந்து கேக்கிறதில்ல! உள்ள அட்டு பிகர், சப்பை பிகரெல்லாம் கனடா போகுது'ன்னு நேற்று கூட ஒரு நண்பன் புலம்பினான்-அப்போ நம்மளுக்கெல்லாம் என்ன மிஞ்சும்னு அவன் கவலை!

இப்போ உங்கள் பதிவைப் பார்க்கிறேன்! என்னத்த சொல்ல? :-)

ஆதவா said...
Best Blogger Tips

தளத்தை ஏதாவது மேட்ரிமோனிக்கு வித்துட்டீங்களோன்னு நினைச்சேன்!!! செம பதிவு.. லேசாக சாடுவதும் அழகு!

ஆனால் பாருங்க... எல்லாரும் விளம்பரத்தில் “உயர்பதவி, அழகான ஆண், நல்ல சம்பளம்” போன்ற வார்த்தைகளை மறக்காமல் சேர்த்துவிடுவார்கள்... அவ்வாறெனில் நல்ல குணமுள்ள பொண்ணே வேண்டாம்???? என்னமோ போங்க.!!

ஆதவா said...
Best Blogger Tips

தளத்தை சொந்த முகவரிக்கு மாற்றியதற்கு வாழ்த்துக்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

அருமையான விசயத்தை பதிவில் சொல்லியதற்கு வாழ்த்துக்கள்!
புலம்பெயர்வாழ்வின் மறுபக்கத்தை வெளியில் சொல்வதா என்றதயக்கம் எனக்கு!
இருந்தாலும் ஒரூஉண்மையான துயரம் என் நண்பருக்கு ஊரில் இருந்து வந்த பெண் அவரின் நண்பரோடு போய்விட்டாள் இங்கே ஏற்பட்ட தவறு யாருடையது என்று இன்னும் புரிய வில்லை எனக்கு!
மீண்டும் வருவேன்!
ஏன்னப்பூ அவசரம் இன்னும் வைகாசி பிறக்கட்டும் நிரூபன் கலியாணத்திற்கு!

Chitra said...
Best Blogger Tips

கலகலப்பான கல்யாண லக்க லக்க பதிவு....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

காலியான விஷயத்தப் பற்றி கதைச்சாலே ஒரு இது வரத்தான் செய்யுது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

‘பிரான்ஸில் வசிக்கும், யாழ் இந்து உயர் குலத்தைச் சேர்ந்த திருமணமாகி விவகாரத்துப் பெற்ற ‘60’ வயது ஆண்மகனுக்கு, படித்த அழகிய இளம் மண மகள் தேவை, சீதனம் எதிர்பார்க்கப் படமாட்டாது!//

இதில ஒரு சின்னப் பிழை இருக்கு நிருபன்! அவர் எத்தினை முறை திருமணமாகி, எத்தினை முறை விவாகரத்து பெற்றவர் எண்டதையும் சொல்லுங்கோ!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அம்மாமாரே, அப்பாமாரே, உள் நாட்டிலும் கொஞ்சம் படித்த அழகிய குணமான வாலிப நெஞ்சங்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீதும் கொஞ்சம் கருணை காட்டினால், உங்களுக்கும் புண்ணியமாவது கிடைக்குமே!///

ஹி.......ஹி........ நிரு இந்தப் பதிவுக்கு ஒரு எதிர் பதிவு போடவா? " வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டுவதில் உள்ள நன்மைகள் " என்ற தலைப்பில்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

டிஸ்கி: மணமகள் தேவை- இந்தப் பதிவிற்கும், இறுதியில் உள்ள பிரான்ஸ் விளம்பரத்திற்கும், பிரான்ஸில் வாழும் பிரபலம் ஒருவருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கம்பனி உறுதிப்படுத்திக் கொள்கிறது.///

உண்மையில சம்மந்தமே இல்லைத்தான்! நீங்க சொன்ன அந்தப் பிரபலத்துக்கு, தமிழ் பெட்டையளைப் பிடிக்கிறதே இல்லையாம்! எல்லாம் வெள்ளைக்கார குட்டிகள்தானாம்!!!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
தனிமரம் said...
Best Blogger Tips

நண்பரே!புரோக்கரில் மட்டும் தவறு சொல்வதில் உடன்பாடு கிடையாது என் நண்பருக்கு ஊரில் பேசி முடிவாக்கி அந்த அம்மணியும் இவனுடன் 2மாதங்கள் tpயில் கடலை போட்டு ஒரு ஏஜேன்சி மூலம் இங்கே வந்து அவனிடம்  வந்த பிறகு அவன் அழகில்லை என்று நிராகரித்தாள் !அவன் அதிகம் செலவலித்து(இங்கே வங்கியில் கடன் எடுத்தாள் கோவனமும் உருவப்படும்) உன் விருப்பம் எப்படியோ திரும்பிப்போறது என்றாள் தாயகம் திரும்பு என்றவனுக்கு 3நாட்கள் அவகாசம் வாங்கினாள் ! மறு நாள் நண்பன் எனக்கு tp செய்தான் வந்தவளின் காதலனும் மறுநாள் பாரிஸ் வந்து சேர்ந்துவிட்டான் இப்போது அவர்கள் இருவரும் குடித்தனம் நடத்த என் நண்பன் கடனில் இருந்து மீளமுடியாமல் தினமும் அதிக நேரம் வேலை செய்கிறான் எந்த விசேசங்களிலும் அவன் பங்கெடுப்பதில்லை !இப்படியான அம்மணிகளுக்கு என்ன தண்டனை!இப்படி புலம்பெயர் தேசத்தில் நடக்கும் சீர்கேடு அதிகம்.ஒருசிலர் செய்யும் செயலால் எவ்வளவு துயரங்கள் !

தனிமரம் said...
Best Blogger Tips

புலம்பெயர் தேசத்திற்கு கலியாணம் பேசி ஏஜேன்சியில் வரும் சகோதரிகள் வாழ்வில் பல துண்பங்கள் புயல்கள் அவற்றை பதிவிட்டால் பலருக்கு இது தரம்தாழ்ந்த செயல் என்பதால்  ! முடிந்தளவு அவதானமாக இருங்கள் தோழிகளே என்று மட்டும் ஒரு ஆண்மகனாக கூறமுடியும்!

தனிமரம் said...
Best Blogger Tips

நீங்கள் படித்துவிட்டு ஊரில் இருந்து கவலைப்படுகிறீர்கள் இங்கு லண்டன்,கனடா மாப்பிள்ளைகளுக்கு இருக்கும் மரியாதை பாரிஸ் மாப்பிள்ளைகளுக்கு இல்லை என்ற கவலை பல நண்பர்களுக்கு(நீங்க சொல்லமாட்டிங்கள் நாங்கள் கோப்பை கழுவிகள் அதானால் அம்மணிகள் கொஞ்சம் உங்கள் எதிர்பார்ப்புக்களுக்கு கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்) இல்லை என்றாள் பாவம் நண்பர்கள் வெளிநாட்டு மருமகனாகிவிடுவார்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

tpயில் குடும்பம் நடத்தும் அரபுலம்,புலம்பெயர் ,வாழ்வு கொடுமையான விசயம் .சகோதரம் கலியாணம் கட்டி நீங்களும் தொழில் நிமித்தம் பிரிந்தாள் தான் புரியும் இல்லை நாஞ்சில் மனோவிடம் பாட்டுப்போட்டியை நிறுத்திவிட்டு இதுபற்றி நாளை இரவு கேளுங்கள்!(என்னாள் பாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளமுடியல என்ற உயர்ந்த குணம்தான் வேலை நேரம் நீங்கள் மைக்கை திறக்கும் போது)

தனிமரம் said...
Best Blogger Tips

ஒன்றுமட்டும் தனிப்பட்டமுறையில் சொல்லுவேன் நண்பா! கலியான வயசில் புலம் பெயராதீர்கள் உங்கள் வாழ்வு நடைப்பிணம்தான் வாழ்வாதாரப் பிரச்சனைகள், விசாப்பிரச்சனை என்று உங்கள்  வாலிபம் தொலைந்து விடும் இது கசப்பான உண்மை ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயம்!

தனிமரம் said...
Best Blogger Tips

நண்பரே நீங்கள் கூறும் விவாகரத்துவாங்கிய வயதானவர்கள் மறுமணம் செய்வதற்கு உதவியாக இருப்பது சீதனம் என்ற பேய் படித்த மாப்பிள்ளைக்கு கோடியில் நிர்னையம் செய்வதால் தான் சில பெற்றோர்கள் தன்மகளின் கலியாணம் நடக்கனும் என்ற கவலையில் இப்படி வெளிநாட்டுக்கு கலியாணம் கட்டிக்கொடுக்கினம் (ஊரில் இருந்து அழுவதைவிட கண்கானா தேசத்தில் அழட்டும் என்று) இதுக்கு நாம் என்ன செய்யமுடியும்!

Anonymous said...
Best Blogger Tips

கல்யாண ஆசை கரைபுரண்டு ஓடுதா நிரூபன்!

Jana said...
Best Blogger Tips

யோ...தெரியாமத் தான் கேட்கிறன். அந்தப் புறோக்கரின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டது யாரு?
:)

Prabu Krishna said...
Best Blogger Tips

கலக்கல் :-)

Prabu Krishna said...
Best Blogger Tips

கலக்கல் :-)

சுதா SJ said...
Best Blogger Tips

//அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்: என் வலைப் பதிவினை ப்ளாக்கரில் இருந்து டாட்காம் ஆக மாற்றி இருப்பதால்//

வாழ்த்துக்கள் அண்ணா

சுதா SJ said...
Best Blogger Tips

//‘பிரான்ஸில் வசிக்கும், யாழ் இந்து உயர் குலத்தைச் சேர்ந்த திருமணமாகி விவகாரத்துப் பெற்ற ‘60’ வயது ஆண்மகனுக்கு, படித்த அழகிய இளம் மண மகள் தேவை, சீதனம் எதிர்பார்க்கப் படமாட்டாது!
//

நம்ம நாட்டையும் விட்டு வைகலையா பாஸ்
அவ்வ்வ்வ்

வலிப்போக்கன் said...
Best Blogger Tips

அனுபவம் பேசுகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

இந்தப் பதிவுக்கு கருத்துப் போடவில்லை எனில் நான் மனிதனே இல்லைங்க ....

வெகு காலமாக யாரும் சாட்டை செய்யாத ஒரு பகுதியைப் பிடித்து பதிவாக்கிட்டீங்க ....

நியாயமான கருத்துக்கள், யதார்த்தங்களையும், சம்பவங்களையும் பதிவில் இட்டுள்ளீர்கள் ....

முதலில் நான் வெறுப்பது விளம்பரம் கொடுத்து பெண்/ஆண் எடுப்பது ... துணைவி என்ன வீடா/காரா .. விளம்பரத்துக்குப் பிடிக்கிறதுக்கு//

ஹா...ஹா...
விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை
நிரந்தரம் ஆகாது, என்று எங்கேயோ படித்த வாக்கியம், உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கையில் நினைவிற்கு வருகிறது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

சரி ! வேறு வழி இல்லை . நேரில நம்ம மூஞ்சியைப் பார்த்து எவனும்/எவளும் லவ் பண்ண மாட்டேங்கிறாங்கனா.. விளம்பரத்துல தேடுங்க ....

ஆனால் இந்த புரோக்கர் இருக்காங்களே ! அதாங்க.. மாமா'ஸ் அவங்க காசுக் கிடைச்சாப் போதும்னு கழுதைக்கும் தவளைக்கும் கூட கலியாணம் பண்ணிடுவாங்க.. ஆயிரம் பொய் சொல்லி கலியாணம் பண்ணலாமுனு எந்த புறம் போகிறவனோ சொல்லிபுட்டு போய்டான்.. கலியாணத்துக்கு அப்புறம் ஒவ்வொரு பொய்யா வெளியில வரவர ஒரே அல்லோகலங்கள் தானுங்க..//

அது தானே சகோ, ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணத்தைப் பண்ணிக்கலாம் என்று அவங்க மனதை, அவங்களே தேத்திக்கிறாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


ஸ்டூடியோவில் போட்டோ எடுக்கிறதப் பத்திச் சொன்னீங்க.. உண்மையில் அது கொடுமையிலும் கொடுமை. ஒரு முறை கல்லூரிக்கு ஒரு போட்டு கொடுக்கணும்னு போனா.. அங்கிருக்கிறவன் நான் என்னவோ அலையண்ஸ்ப் பார்க்கத் தான் போட்டோ எடுக்க வந்தவனு நினைச்சு நாத்தம் பிடிச்ச கோர்டெல்லாம் மாட்டிவிட்டு கடுப்பேத்திட்டான், நானும் என்ன நடக்குதுனு தெரியாமா... அந்த கோட் வேண்டாம் சும்மாவே எடுங்க.. அப்படினு சொல்ல.. அவனும் விதவிதமா எடுத்துக் கொடுத்துபுட்டான். பாவிபய. நான் எடுக்க வந்த போட்டோ சிறிய புகைப்படம்னு சொன்னப்புறம் தான் அவனுக்கு விஷயமே புரின்சுது. சரினு அந்த போட்டோவெல்லாம் என் காதலிக்கு அனுப்பி வைச்சேன் ....//

இதைத் தான் சொல்வதோ, போட்டு வாங்குவதென்று, என் பதிவின் மூலம் உங்களின் சொந்தக் கதை- சோகக் கதைகளையும் அல்லவா உளறுகிறீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

இந்த சாதி போட்டு மணமகள்/மகன் தேவை எங்கின்ற விளம்பரத்தைப் பார்த்தாலே கடுப்பாகி வரும் ... ஆணுக்குத் தேவை - வேலை, கலர், அழகு, சாதி பெண்ணுக்குத் தேவை அழகு, கலர், சாதி, வேலை .... இதை எல்லாம் பார்த்து காதல் வருமா? கலியாணம் நிலைக்குமா? என்னவோங்க... நல்லா இருந்தாச் சரி//

பெரியவங்களால் நிச்சயிக்கப்படும் காதல் தான் நிலைக்கும் என்று தத்துவம் வேறு சொல்லி, தங்கள் மனதைத் தாங்களே தேற்றுறாங்க சகோ.
கொடுமையிலும் கொடுமை. ..

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

// யாதார்த்தம் என்னவென்றால், மாப்பிளையிடம் உயர் பதவி, இல்லை என்பதை நம்பாத அப்பாவியாய், பொண்ணு வீட்டுக்காரர், என்ன பண்ணுவாங்க. //

என்னங்க.. மாப்பிள்ளை இங்க என்ன டாக்டரா, எஞ்சினியரா, அவருக்கு பெர்மணண்ட் வேலையும் இருந்து, இதுக்கு முன்னாடி கலியாண அனுபவமும் இல்லாம இருந்தாலே பெரும் புண்ணியம் .... ஆனால் பெரும்பாலும் இது உல்டாவாத் தான் இருக்கு ....

விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகள் தான் அதிகமுங்க... இதுக்கு மேலயும் விளக்கினால் பல குடும்பம் புஸ்வானமாகிடும்//

ஹா...ஹா....
பரவாயில்லை சகோ, வெளிப்படையாகச் சொல்லுங்க. இன்னொரு சந்ததியாவது திருந்தி வாழட்டுமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

சாதிகள் எதிர்ப்பார்க்கப்பட மாட்டாது என்றால் - நிச்சயம் ஏற்கனவே கலியாணம் ஆகியிருக்குமோனு நம்மாளுங்க.. நினைச்சிடுவாங்க....

இனிமேல் கலியாண விளம்பரத்துல மேட்ரமோனியல் சைட் போல போட்டோவோடத் தான் போடனும்னு சொன்னா. பாவம் பேப்பர் காரனுக்கு பிழைப்பு நாறிடும் ........... அதனால் அத்தெ சொல்ல மாட்டங்க.//

ஒரு கல்யாணத்தினைப் பொறுத்த வரை எல்லோருமே சுய நலவாதிகளாகத் தான் இருகிறாங்க சகோ,
பெற்றோர்- தங்கள் பிள்ளையை வீட்டை விட்டு கலைக்க வேண்டும்/ கரை சேர்க்க வேண்டும் எனும் எண்ணம்,
புறோக்கர்: தனக்கு பாக்கட் நிறைய வேண்டும் எனும் எண்ணம்,
பத்திரிகை நிர்வாகம்: தங்கள் வயிற்றுப் பிழைப்பு ஓடணுமே எனும் எண்ணம்,
திருமணமே ஒரு வியபாரமாகி விட்டது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

/ அப்படியாயின் உள்ளூர், இளைஞர்கள் எங்கே போய் பெண்ணெடுப்பது //

சிந்திக்க வேண்டிய விடயம், தமிழ்நாட்டில் பலருக்கு பெண் கிடைக்காதத்தால் கேரளாவில போய் எடுக்கிறாங்க... ( கேரளாவில் பெண்கள் அதிகமுங்க, வசதிக் குறைந்தவர்கள் என்பதாலோ என்னவோ ). நீங்க இந்த ரூட்ல ஏன் யோசிக்கக் கூடாது...//

குருவே! உங்களை வாழ்த்த வார்த்தைகள் வர மறுக்கின்றன, கேரளாப் பக்கம் போகச் சொல்லும் எங்கள் இளவலே!
நம்மளோடை கலருக்குகெல்லாம் அங்கே காம்பினேசன் கிடைக்குமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
// காதலித்து, உள்ளூரில் உள்ள பொண்ணை திருமணம் செய்வோம் என்றாலும், பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போல காதலித்த பொண்ணுங்க தான், மறு நாளே டாட்டா காட்டி விட்டு, கபுக்கென்று ஏறி கடல் கடந்து வெளி நாட்டுக்கு ஓடுறாளுங்க //

உண்மை... கசக்கும் .... மன்மதன் ஆகிவிடாதீர்கள்//

அந்த மாதிரி எல்லாம் ஆகிட மாட்டேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


தொலைத் தூரக் காதல் குடும்பங்கள்//


அவ்......கவிதையாக யோசித்து பதில் எழுதுறீங்களே! வியப்பாக இருக்கிறது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

// மாமனும்- மருமோளும் ஒற்றுமையாக கொழும்பெல்லாம் திரிவாங்களாம். இப்புடியும் பல சம்பவங்கள்... //

இப்படியும் நடக்குதா.. கொடுமை கொடுமை.. கலி காலம் .. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்... கோர்ட் வாசலிலே//

இதனை விடப் பல கொடுமைகள் இருக்கிறது சகோ, எழுதினால் ஆபாசத் தளம் என்று முத்திரை குத்தி விடுவார்கள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


// அதிஸ்டகார நண்பன் என்ன பண்ணுவான் தெரியுமோ, தான் தான் மாப்பிளை என்று சொல்லி, எயார் போர்ட்டில் ஒரு மாஸ் ஹீரோ வேசம் போட்டு, எயார் போர்ட்டில் இருந்து பொண்ணை அழைத்து வந்து, தன் வசப்படுத்திடுவான் //

கனடாவில் நடந்த சம்பவம் தானே இது,, ஒரு பெண் திருமணமாகி துணைவி விசாவில் இங்கு வர, ஏர்போர்ட்டில் மாயம் ... கடுப்பாகியது மணமகன் மட்டுமில்லை .. கனடா அரசாங்கமும் தான் ...//

கனடாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும், இச் சம்பவ்ம் நடந்துள்ளதாக, எங்களூர் நண்பர்கள் சொல்லுவார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

அதனால் இனிமேல் இங்கு வரும் துணைவியர் மூன்று ஆண்டேனும் ஒன்றாக வசித்தால் தான் பி.ஆர். சிட்டிசன் எல்லாம் என முடிவு செய்துள்ளார்கள்...

சில நேரங்களில் அப்பாவே பெண்ணை மணந்து மனைவினு விசாக் கொண்டு வந்து அப்புறம் விவாகரத்து வாங்கிய கதைகளும் உண்டாம்.. நாறப் பிழைப்பு .....

கஞ்சியைக் குடித்தாலும் கௌரவமாக இருக்கணும் ....//

அடடா, மூன்று ஆண்டென்பது எங்கள் தமிழர்களைப் பொறுத்த வரை மூன்று மணி நேரம் போன்றது சகோ,
தமிழன் ஊசி போகாத இடத்தினூடாகவும் போய் பிழைக்கத் தெரிந்தவன் என்று சொல்லுவார்கள்.
அதனை இந்த விடயங்களில் தான் நம்மவர்கள் சரியாக நிரூபித்துக் காட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

// அடக் கடவுளே, அறுபது வயதிலும் தான் ஆண் மகன் என்று விளம்பரம் வேறு, அடிங் கொய்யாலா, அறுபதிலும் இருபது கேட்குதாம். -அழகிய இளம் பெண். //

இப்படியான சம்பவங்கள் கேரளக் கரைகளில் பல நடக்குது. அங்கே பெண்கள் அதிகம், ஏழைகள் அதனால் பல இஸ்லாமிய இளம் பெண்களை வயது வந்த அரபி முஸ்லிம்களுக்கு சில நாள் வைப்பாட்டித் திருமணம் செய்து அனுபவித்துக் கொள்வார்கள். அப்புறம் அந்த கிழட்டு அரபிகள் மாதம் மாதம் பணம் அனுப்புவார்களாம்... சிலர் அடிக்கடி வருவார்களாம், சில நல்லவர்கள் வைப்பாட்டிகளை கூட்டிச் செல்வார்களாம், சிலரோ புதுசு புதுசா தேடுவார்களாம். பெண்ணின் வறுமையும் கொடியது ....//

ஆனால் நம்ம நாட்டில் வறியவர்கள் தங்கள் இளம் பிள்ளைகளைத் தமது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காய் வெளி நாட்டில் இருந்து வரும் வயதானவர்களுக்கு கட்டி வைத்து விடுவார்கள்.

கேரளாவிற்கும், ஈழத்திற்கும் இங்கே உள்ள ஒற்றுமையினைப் பார்த்தீர்களா.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


நிரூபன் இப்படி பதிவு போட்டாவது யாராவது சிட்டு சிக்காதா என்று இருக்கின்றீர்கள். நான் சொல்றேன் அடுத்த ஆண்டே உங்களுக்கு டும் டும் டும் தான்.. கலியாணம் நடக்குமுங்க... ஆல் தி பெஸ்ட்//

சிங்கிள் கப்பில் சிக்ஸர் அடிக்க நினைக்கும் ஆள் நான் இல்லை சகோ.
சும்மா ஒரு கலாய்ப்பாக இந்தப் பதிவைப் போட்டேன் சகோ.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா


இப்ப ஓகே பண்ணிட்டன் பாஸ்//

நான் இங்கே மணமகன் தே என்று விளம்பரம் போடலையே!
மணமகள் தேவை என்று தான் போட்டிருக்கேன்.
ஹி..ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா


இக்பால் பாசுக்கு என்ன ஆச்சு??இப்பிடி வாங்கு வாங்குன்னு வாங்குறார்??//

அவரின் ஸ்பெசாலிட்டியே, பதிவுகளினைப் படித்து, அருமையான பின்னூட்டங்களூடாக விமர்சிப்பது தான், இன்று தான் நீங்கள் இக்பால் பாஸ்ஸின் பதில்களைப் பார்க்கிறீர்கள் போல,

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

ஆமா யாரு அந்த பிரான்சு பதிவர்??
பிரான்சில வடை சுட்டு புழைப்பு ஓட்டும் ஓட்டவடை இல்ல தானே??//

ஏனய்யா, ஏன் இந்தக் கோர்த்து விடும் வேலை.
நான் அவரைப் போய் இப்படிச் சொல்வேனா!
நம்புங்க பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


ஆமாம் யாருக்கு பொண்ணு பாக்குரீன்கலாம்...?//

யார் யாருக்கு விருப்பமோ, அவங்களுக்கு பார்க்கிறது தான் நம்ம பாலிசி.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


மறுபடியும் பாலோவர் குடுத்துட்டேன் மக்கா...//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

சொல்ல மறந்துட்டேன் ஒன்னாவது மற்றும் ஆறாவது புகைப்படத்தில் இருப்பவர்கள் அழகாக இருக்கின்றார்கள். திராவிடத் தன்மை நிறைந்த அழகிகளை தமிழ்நாட்டு காமெராக்கல் சுடுவதில்லை என்பதால் வறட்சியில் இலங்கைப் பக்கம் கண்கள் திரும்ப நேரிடுகின்றது.

இதில் ஐந்தாவது புகைப்படம் நிருபனுடையதா? { சந்து வழியிலா ஆட்டோ ஒட்டுறிங்க.. என்ன } ஆறாவது யார் என எனக்குத் தெரியும் ?//

இதில் உள்ள படங்கள் எதிலும் நான் இல்லைச் சகோ.
ஹி...ஹி...
தொடர்ச்சியாக தென் இந்திய நாயகிகளின் படங்களைப் பார்த்து போரடித்திருப்போருக்காக, ஒரு வெரைட்டியாக இருக்கட்டுமே என்று தான் இந்தப் படங்களை இணைத்தேன்,.
ஆனால் நீங்கள் படங்களோ ஒன்றித்து விட்டீர்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel


நல்லாருக்கு! போகட்டும்.உண்மையிலேயே பிரான்ஸில் வாழும் பிரபலத்துக்கு சம்பந்தமில்லையா? பாசமா? ஹாஹா//

நம்புங்க சகோ, அப்படிச் சம்பந்தம் ஏதுமே இல்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
///புரோக்கர் ஆட்களின் தொழில், இன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் வீழ்ச்சியடைந்திருந்தாலும், ’சிங்கிள் கப்(Single Cap) பார்த்து சிக்ஸர் அடிக்கும் கிரிக்கட் வீரர்கள் மாதிரி, மாசியிலை ஒரு கலியாணம், மார்கழியில் மற்றோர் கலியாணம் என ஒப்பேத்தி, பேசி முடிச்சு, பொருத்தம் பார்த்து, சுளை- சுளையா காசைச் சுருட்டி வேட்டியினுள் போட்டுக் கொண்டு ///

பாஸ் இப்ப எல்லாம் பெண் கொடுக்கிற சீதனத்தில குறிப்பிட்ட வீதம் கமிசன் எடுக்கிறாங்கள். அதுவும் மாப்பிள்ள பொம்பிள்ள எண்டு இரண்டு பக்கமும்...//

சகோ புறோக்கர் ஆகினால் நம்ம பொழைப்பு ஓடும் போல இருக்கே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///‘அடங் கொய்யாலா, படித்து உயர் பதவி வகிக்கிறது என்று நீ போட்டுத் தான் நம்ப வேணுமே, நம்மளுக்கு என்ன தெரியவா போகுது நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாய் என்று.///

பாஸ்! இப்ப வெளிநாடு மாப்பிள்ள என்றாலே என்ன தொழில் என்று கேட்கிறதில்ல.. ஏனென்டா மாப்பிள்ள என்னவா இருக்கிறாரு என்று ஊரில கேட்ட "வெளிநாட்டில இருக்காரு" எண்டு பெருமையா சொல்லுவினம் பாருங்கோ....) B . A ,M . A எண்ட போல வெளிநாடும் ஒரு பட்டமாச்சு ஹிஹிஹி ( சத்தியமா எனக்கு அனுபவம் இல்ல)//

இப்படியும் உள் கூத்து இருக்கா சகோ,
ஊரில் இருந்து கஸ்டப்பட்டுப் படிக்கிற பொடியங்களை விட, வெளி நாட்டில் இருந்து வாற ஆட்களுக்குத் தான் அதிஸ்டம் இப்போ..
ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


என்ன அந்த நாலாவது போட்டோவில நிக்கிற பொண்ணு ஒரு நகைக்கடையே உடம்பில சுமந்து கொண்டு போஸ் கொடுக்குறா.ஓ இது தான் நடமாடும் நகைமாளிகயா...)//

அதை அந்தப் பொண்ணுக் கிட்டத் தான் கேட்கனும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


///இந்த மாதிரியான கொடுமைகளுக்கு ஒரு பில்டப்பு விளம்பரங்கள், முந்தி பத்திரிகைகளில் மட்டும் தான் வந்து கொண்டிருந்தது,// ஞற்று கிழமை வீரகேசரில இதுக்கென்றே தனியா நாலு பேப்பர் வருமே!//

அப்போ தாங்களும் ஒரு மார்க்கமா, ஞாயிற்றுக் கிழமை வீரகேசரி பார்க்கிறீங்க போல இருக்கே.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

//காதலித்து, உள்ளூரில் உள்ள பொண்ணை திருமணம் செய்வோம் என்றாலும், பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போல காதலித்த பொண்ணுங்க தான், மறு நாளே டாட்டா காட்டி விட்டு, கபுக்கென்று ஏறி கடல் கடந்து வெளி நாட்டுக்கு ஓடுறாளுங்க. நம்மளை விட இப்ப பொண்ணுங்க, ரொம்ப விவரமாகிட்டாங்க,

/// நங்கையர் குலமே என்ன பாத்துக்கிட்டு இருக்கீங்க..வாங்க வந்து ஒரு கும்மு கும்முங்க...).....//

எரிமலையை எப்படிப் பெட்ரோல் ஊற்றாமல் பற்ற வைக்கலாம் எனும் நோக்கத்தோடு தான் அலையுறீங்க.
ஹி...ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


////அம்மாமாரே, அப்பாமாரே, உள் நாட்டிலும் கொஞ்சம் படித்த அழகிய குணமான வாலிப நெஞ்சங்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீதும் கொஞ்சம் கருணை காட்டினால், உங்களுக்கும் புண்ணியமாவது கிடைக்குமே!///

குணமா முக்கியம் நமக்கு பணம் தானே முக்கியம் ஹிஹிஹி//

அவ்.......இது தான் சொல்லடியா சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///இக்பால் செல்வன் said...

///இக்பால் செல்வன் said...

நிரூபன் இப்படி பதிவு போட்டாவது யாராவது சிட்டு சிக்காதா என்று இருக்கின்றீர்கள். நான் சொல்றேன் அடுத்த ஆண்டே உங்களுக்கு டும் டும் டும் தான்.. கலியாணம் நடக்குமுங்க... ஆல் தி பெஸ்ட்//// அண்ணே இவருக்கு கல்யாணம்...................ஆகிட்டு......................ச்சும்மா )))//

ஏன் இந்தக் கொலை வெறி.. நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு.

எனக்கு கல்யாணம் ஆகலை என்பதை இனி மேடை போட்டுச் சொன்னால் தான் நம்புவீங்க போல இருக்கே.

சகோ கந்தசாமி, என் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடும் நோக்கமா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரை சரவணன்

purokkarkal meethulla aathankgamaa...illai pen kidaikkaatha allathu paarkkaatha kuraiyai ippadi pendu eduththulleerkala...? vaalththkkal//

அடடா....புறோக்கர் மீது ஆதங்கமும் இல்லை, பெண் கிடைக்கவில்லை என்று கவலையும் இல்லை,
நம்ம் நாட்டு அவலங்களை பதிவாக எழுதணுமே, அதான் சகோ, இப்படி ஒரு றூட்..
ஹி...ஹி..
உட்கார்ந்து யோசிப்பீங்களோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


செம நக்கல் பதிவு சகோ..சிரிச்சிக்கிட்டே படிச்சேன்..ஃபோட்டோ எடுக்குறது செம காமெடி..கடைசியில் அங்க கோர்த்திருக்க வேண்டாம்னு தோணுது.//

நன்றிகள் சகோ, நம்ம சகோ ஆல்ரெடி பர்மிசன் தந்திட்டார்,
நிரூ நீ என்னைப் பற்றி புகழ்ந்து எழுதினால் நான் கவலைப் பட மாட்டேனாம்.
ஹி,...ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

கந்தசாமி - //அண்ணே இவருக்கு கல்யாணம்...................ஆகிட்டு......................ச்சும்மா ))) //

ஓஹ் அப்படியா மேட்டரு.. இருந்திட்டுப் போகுது.. ரெண்டாம் கலியாணம் நடக்கட்டுமேன்.. டும் டும் டும்ம். அப்புறம் டம் டம் டமாரம் .. ஹஹஹாஆ....//

ஒருத்தனோடை வாழ்க்கையிலை பூகம்பத்தை உருவாக்கிப் பார்க்கலாம் எனும் நோக்கத்தோடு தான் அலையுறீங்க..
விடுங்க சாமிகளா,
நான் பொழைச்சுப் போறன்
ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

/டிஸ்கி: மணமகள் தேவை- இந்தப் பதிவிற்கும், இறுதியில் உள்ள பிரான்ஸ் விளம்பரத்திற்கும், பிரான்ஸில் வாழும் பிரபலம் ஒருவருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கம்பனி உறுதிப்படுத்திக் கொள்கிறது.//
பாவங்க அவரு!//

நான் அவரைப் பற்றி இங்கே சொல்லலையே, கோர்த்து விடுற நோக்கமா..
ஹி...ஹி..ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

///அடக் கடவுளே, அறுபது வயதிலும் தான் ஆண் மகன் என்று விளம்பரம் வேறு, அடிங் கொய்யாலா, அறுபதிலும் இருபது கேட்குதாம். ///
கேட்கட்டும், கேட்கட்டும். சும்மா பார்க்கிறதுக்குதாங்கோ!//

ஆனால் அறுபதிற்கு வாக்கப்படும் பொண்னோடை வாழ்க்கை?

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

உங்கள் விளாசல்கள் ஒவ்வொன்றும் அருமை, நண்பரே!//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்

லண்டன்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சம்பளமாம்
எண்டு சொல்ல்லுராங்க
எத்தினையோ பொம்பிளைங்க
ஊர் பாத்து வந்தாங்க
இன்னும் சில பொம்பிளையள்
ஊர் பாக்க போறாங்க
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்குத்தெரியும்
வெளிநாட்டில் என்ன நடக்குதெண்டு
யாருக்கு புரியும்
நல்ல நல்ல மாப்பிளையாம்
பொண்ணு கேக்குறாங்க
ஆயிரமாய் சீதனத்த
அள்ள நிக்குறாங்க
எத்தனையோ பொம்பிளைங்க
ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க
ஏமாற போறாங்க..
ஐயையோ வெட்கக்கேடு
யாருக்கு தெரியும்
இவை நாட்டுக்குள்ளே நரிகள் என்று
யாருக்கு தெரியும்!!//

அடடா, சிட்டுவேசன் சாங்க்ஸ் பிரமாதம்.
அந்தக் காலப் பொப்பிசை.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Ada ponga boss... en vayitherichalai kottikkaatheenga...

Enakkum inum ponnu kidaikkala..//

சேம் சேம், பப்பி சேம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

>>
டிஸ்கி: மணமகள் தேவை- இந்தப் பதிவிற்கும், இறுதியில் உள்ள பிரான்ஸ் விளம்பரத்திற்கும், பிரான்ஸில் வாழும் பிரபலம் ஒருவருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கம்பனி உறுதிப்படுத்திக் கொள்கிறது.

haa haa ஹா ஹா ஜீவனுக்குத்தான் சட்டப்படி ஒண்ணூ செட்டப்படி 3 இருக்கே? மறுபடியுமா?//

அப்போ இது நான்காவதா...அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


//மணமகள் தேவை- முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!//

தலைப்பை பார்த்துவிட்டு எவ்வளவு ஆர்வமா ஓடோடி வந்தன்! இப்படி ஏமாத்திட்டிங்களே பாஸ்//

சகோ, இது என் தவறல்ல, உங்கள் தவறு.
நான் மணமகன் தேவை என்றா போட்டேன், மணமகள் தேவை என்று தானே போட்டிருக்கிறேன்.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்

சரிப்பா விடு....என்னை மாதிரி அப்பாவிங்களுக்கு எப்படி பொண்ணு கெடைக்கும் தெரியலையே........ஒரு அமைதியான மனுசன
கலாய்க்காதய்யா!//

ஆஹா...அப்பாவியா இல்லை குமுறும் எரிமலையா நீங்கள் என்பதை சிபி தான் விளக்கிக் கூற வேண்டும்.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

என்னமோ போங்க பாஸ்!

'இப்பல்லாம் அழகான பொண்ணு கூட யாரும் வெளிநாட்டிலருந்து கேக்கிறதில்ல! உள்ள அட்டு பிகர், சப்பை பிகரெல்லாம் கனடா போகுது'ன்னு நேற்று கூட ஒரு நண்பன் புலம்பினான்-அப்போ நம்மளுக்கெல்லாம் என்ன மிஞ்சும்னு அவன் கவலை!

இப்போ உங்கள் பதிவைப் பார்க்கிறேன்! என்னத்த சொல்ல? :-)//

நாம இனி சிங்களப் பொண்ணுங்க மீது பார்வையைச் செலுத்த வேண்டியது தான் சகோ.
வேறு வழியில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆதவா

தளத்தை ஏதாவது மேட்ரிமோனிக்கு வித்துட்டீங்களோன்னு நினைச்சேன்!!! செம பதிவு.. லேசாக சாடுவதும் அழகு!//

ஆஹா..ஆஹா...என்னை மாமா ஆக்கிப் பார்க்கிறதிலை உங்களுக்கு சந்தோசமா,


//ஆனால் பாருங்க... எல்லாரும் விளம்பரத்தில் “உயர்பதவி, அழகான ஆண், நல்ல சம்பளம்” போன்ற வார்த்தைகளை மறக்காமல் சேர்த்துவிடுவார்கள்... அவ்வாறெனில் நல்ல குணமுள்ள பொண்ணே வேண்டாம்???? என்னமோ போங்க.!!//

அப்படியும் ஒரு உள் கூத்து இருக்கலாம், ஆனால் ஆண் எவ்வளவு தான் தவறு செய்திருந்தாலும், பொண்ணு பார்க்கப் போகும் போது நல்ல பெண்ணா இல்லையா என்பதனைத் தானே ஆராய்கிறாங்க மாப்பிளை வீட்டுக்காரங்க சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Chitra


கலகலப்பான கல்யாண லக்க லக்க பதிவு....//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


காலியான விஷயத்தப் பற்றி கதைச்சாலே ஒரு இது வரத்தான் செய்யுது!//

அது கல்யாணமாகாத பசங்களுக்குத் தானே வர வேண்டும், ஆனால் உங்களுக்கெல்லாம் அதெப்படி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

‘பிரான்ஸில் வசிக்கும், யாழ் இந்து உயர் குலத்தைச் சேர்ந்த திருமணமாகி விவகாரத்துப் பெற்ற ‘60’ வயது ஆண்மகனுக்கு, படித்த அழகிய இளம் மண மகள் தேவை, சீதனம் எதிர்பார்க்கப் படமாட்டாது!//

இதில ஒரு சின்னப் பிழை இருக்கு நிருபன்! அவர் எத்தினை முறை திருமணமாகி, எத்தினை முறை விவாகரத்து பெற்றவர் எண்டதையும் சொல்லுங்கோ!!//

அதனை அவர் தான் மனம் விட்டுச் சொல்ல வேண்டும்,
அவ்...........

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அம்மாமாரே, அப்பாமாரே, உள் நாட்டிலும் கொஞ்சம் படித்த அழகிய குணமான வாலிப நெஞ்சங்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீதும் கொஞ்சம் கருணை காட்டினால், உங்களுக்கும் புண்ணியமாவது கிடைக்குமே!///

ஹி.......ஹி........ நிரு இந்தப் பதிவுக்கு ஒரு எதிர் பதிவு போடவா? " வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டுவதில் உள்ள நன்மைகள் " என்ற தலைப்பில்?//

கண்டிப்பாக எதிர்ப் பதிவு போடுங்க சகோ, அப்போத் தான் பல விடயங்களை நாங்களும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

டிஸ்கி: மணமகள் தேவை- இந்தப் பதிவிற்கும், இறுதியில் உள்ள பிரான்ஸ் விளம்பரத்திற்கும், பிரான்ஸில் வாழும் பிரபலம் ஒருவருக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கம்பனி உறுதிப்படுத்திக் கொள்கிறது.///

உண்மையில சம்மந்தமே இல்லைத்தான்! நீங்க சொன்ன அந்தப் பிரபலத்துக்கு, தமிழ் பெட்டையளைப் பிடிக்கிறதே இல்லையாம்! எல்லாம் வெள்ளைக்கார குட்டிகள்தானாம்!!!//

ஆஹா...ஆஹா...இனிமே விளம்பரத்தை மாத்திட வேண்டியது தான்.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

நியாயமான கருத்துக்கள்
சீக்கிரமே விவாகப்பிராப்தி கிடைக்க வாழ்த்துக்கள்.//

நான் இங்கே என்ன எனக்கா பொண்ணு தேடுறேன்....
உண்மையாகவே பதிவைப் புரிஞ்சு கொண்டு தான் கருத்து எழுதுறீங்களா சகோ.
அவ்.......

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நண்பரே!புரோக்கரில் மட்டும் தவறு சொல்வதில் உடன்பாடு கிடையாது என் நண்பருக்கு ஊரில் பேசி முடிவாக்கி அந்த அம்மணியும் இவனுடன் 2மாதங்கள் tpயில் கடலை போட்டு ஒரு ஏஜேன்சி மூலம் இங்கே வந்து அவனிடம் வந்த பிறகு அவன் அழகில்லை என்று நிராகரித்தாள் !அவன் அதிகம் செலவலித்து(இங்கே வங்கியில் கடன் எடுத்தாள் கோவனமும் உருவப்படும்) உன் விருப்பம் எப்படியோ திரும்பிப்போறது என்றாள் தாயகம் திரும்பு என்றவனுக்கு 3நாட்கள் அவகாசம் வாங்கினாள் ! மறு நாள் நண்பன் எனக்கு tp செய்தான் வந்தவளின் காதலனும் மறுநாள் பாரிஸ் வந்து சேர்ந்துவிட்டான் இப்போது அவர்கள் இருவரும் குடித்தனம் நடத்த என் நண்பன் கடனில் இருந்து மீளமுடியாமல் தினமும் அதிக நேரம் வேலை செய்கிறான் எந்த விசேசங்களிலும் அவன் பங்கெடுப்பதில்லை !இப்படியான அம்மணிகளுக்கு என்ன தண்டனை!இப்படி புலம்பெயர் தேசத்தில் நடக்கும் சீர்கேடு அதிகம்.ஒருசிலர் செய்யும் செயலால் எவ்வளவு துயரங்கள் !//

இனிப்பான ஒரு விடயத்திற்குப் பின்னால் ஒரு இருண்ட அவல வாழ்க்கையே இருக்கிறதா சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


புலம்பெயர் தேசத்திற்கு கலியாணம் பேசி ஏஜேன்சியில் வரும் சகோதரிகள் வாழ்வில் பல துண்பங்கள் புயல்கள் அவற்றை பதிவிட்டால் பலருக்கு இது தரம்தாழ்ந்த செயல் என்பதால் ! முடிந்தளவு அவதானமாக இருங்கள் தோழிகளே என்று மட்டும் ஒரு ஆண்மகனாக கூறமுடியும்!//

கண்டிப்பாக இந்த அவலங்களை நீங்கள் பதிவாக்க வேண்டும் சகோ, அப்போது தான் இன்னோர் சந்ததிக்கு இத்தகைய நிலமை ஏற்படாது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நீங்கள் படித்துவிட்டு ஊரில் இருந்து கவலைப்படுகிறீர்கள் இங்கு லண்டன்,கனடா மாப்பிள்ளைகளுக்கு இருக்கும் மரியாதை பாரிஸ் மாப்பிள்ளைகளுக்கு இல்லை என்ற கவலை பல நண்பர்களுக்கு(நீங்க சொல்லமாட்டிங்கள் நாங்கள் கோப்பை கழுவிகள் அதானால் அம்மணிகள் கொஞ்சம் உங்கள் எதிர்பார்ப்புக்களுக்கு கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்) இல்லை என்றாள் பாவம் நண்பர்கள் வெளிநாட்டு மருமகனாகிவிடுவார்கள்!//

ஆமாம் சகோ, பிரான்ஸ் மாப்பிளைக்கு ஏன் மவுசு இல்லை எனும் சந்தேகம் என் மனதில் இருந்தது, அதனை இன்று தான் புரிந்து கொண்டேன் சகோ. என்ன செய்ய எல்லாம் எங்கள் தலை விதி என்று நொந்து கொள்ள வேண்டியது தான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


tpயில் குடும்பம் நடத்தும் அரபுலம்,புலம்பெயர் ,வாழ்வு கொடுமையான விசயம் .சகோதரம் கலியாணம் கட்டி நீங்களும் தொழில் நிமித்தம் பிரிந்தாள் தான் புரியும் இல்லை நாஞ்சில் மனோவிடம் பாட்டுப்போட்டியை நிறுத்திவிட்டு இதுபற்றி நாளை இரவு கேளுங்கள்!(என்னாள் பாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளமுடியல என்ற உயர்ந்த குணம்தான் வேலை நேரம் நீங்கள் மைக்கை திறக்கும் போது)//


சகோ, ஒரு நகைச்சுவையாகத் தான் இப் பதிவினை எழுதினேன், ஆனால் அது இந்தளவு தூரம் உணர்ச்சிகளைக் கிளறும் என்று நினைக்கவில்லை,
மன்னிக்கவும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


ஒன்றுமட்டும் தனிப்பட்டமுறையில் சொல்லுவேன் நண்பா! கலியான வயசில் புலம் பெயராதீர்கள் உங்கள் வாழ்வு நடைப்பிணம்தான் வாழ்வாதாரப் பிரச்சனைகள், விசாப்பிரச்சனை என்று உங்கள் வாலிபம் தொலைந்து விடும் இது கசப்பான உண்மை ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயம்!//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


நண்பரே நீங்கள் கூறும் விவாகரத்துவாங்கிய வயதானவர்கள் மறுமணம் செய்வதற்கு உதவியாக இருப்பது சீதனம் என்ற பேய் படித்த மாப்பிள்ளைக்கு கோடியில் நிர்னையம் செய்வதால் தான் சில பெற்றோர்கள் தன்மகளின் கலியாணம் நடக்கனும் என்ற கவலையில் இப்படி வெளிநாட்டுக்கு கலியாணம் கட்டிக்கொடுக்கினம் (ஊரில் இருந்து அழுவதைவிட கண்கானா தேசத்தில் அழட்டும் என்று) இதுக்கு நாம் என்ன செய்யமுடியும்!//

ஆமாம் சகோ, குடும்பத்தில் உள்ள வறுமை தான் இந்த நிலமைகளுக்கு காரணமாக இருக்கிறது.
ஆனாலும் அந்தப் பெண்ணின் ஆசா பாசங்களைப் பற்றியும் பெற்றோர் சிறிதளவாவது சிந்திக்க வேண்டும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !


கல்யாண ஆசை கரைபுரண்டு ஓடுதா நிரூபன்!//

யாருக்கு எனக்கா..
இல்லைச் சகோ, ஒரு காமெடியாக திருமணத்தைச் சார்ந்துள்ள அவலங்களை பதிவாக எழுதியுள்ளேன். அவ்வளவும் தான்,

நிரூபன் said...
Best Blogger Tips

@Jana

யோ...தெரியாமத் தான் கேட்கிறன். அந்தப் புறோக்கரின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டது யாரு?
:)/

சகோ, இந்த நவீன தொழில் நுட்பங்களான, ரெலிபோன், பேஸ்புக்...
இவை தான் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு


கலக்கல் :-)//

நன்றிகள் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு


கலக்கல் :-)//

நன்றிகள் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

/அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்: என் வலைப் பதிவினை ப்ளாக்கரில் இருந்து டாட்காம் ஆக மாற்றி இருப்பதால்//

வாழ்த்துக்கள் அண்ணா//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்


//‘பிரான்ஸில் வசிக்கும், யாழ் இந்து உயர் குலத்தைச் சேர்ந்த திருமணமாகி விவகாரத்துப் பெற்ற ‘60’ வயது ஆண்மகனுக்கு, படித்த அழகிய இளம் மண மகள் தேவை, சீதனம் எதிர்பார்க்கப் படமாட்டாது!
//

நம்ம நாட்டையும் விட்டு வைகலையா பாஸ்
அவ்வ்வ்வ்//

ஏன் பாஸ், உண்மையைத் தானே சொல்லியிருக்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@வலிபோக்கன்


அனுபவம் பேசுகிறது.//

சகோ இதனை ஓர் மொக்கை கமெண்டாகவா எழுதியுள்ளீர்கள்.
இந்தப் பதிவில் என் அனுபவங்கள் எவற்றையும் நான் சொல்லவில்லை.
திருமணம் எனும் திரைக்குப் பின்னால் இடம் பெறும் அவலங்களைத் தான் பதிவாக எழுதியுள்ளேன் சகோ. நன்றிகள் சகோ.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails