Saturday, May 14, 2011

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 3

இத் தொடரின் முதற் பாகத்தைப் படிக்க

இத் தொடரின் இரண்டாவது பாகத்தைப் படிக்க.

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக.....
எங்கள் வீட்டில் உள்ள ஐயனாருக்கு மடை பரவுவதற்காய்(படையல் வைப்பதற்காய்) எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தோம்.அப்போது மாமா, மீண்டும் ஓடோடி வருகிறார். இராசாத்தியைக் காணேல்லையாம்...........என பதை பதைத்தபடி வார்த்தைகள் எச்சிலோடு மல்லுக் கட்டி, வெளியே வர முடியாத நிலையில் இருக்கும் மனிதனைப் போல உணர்வற்றவராகி நடுக்கத்துடன் சொல்லத் தொடங்குகிறார்.......................................................மாமாவின் உதட்டிலிருந்து வார்த்தைகள் வர மறுக்கின்றன, ’வாங்கோ எல்லோரும் ராசாத்தி எங்கே என்று தேடிப் பார்ப்போம்’ எனச் சொல்லியபடி புறப்படுகிறார். 


'ஐயோ என்ரை பிள்ளைக்கு ஏதும் ஆகக் கூடாது எனக் கதறிய படி இராசாத்தியின் அம்மா, 
என்ரை ஆசை மகள்- கடவுளே அவளுக்கு ஏதும் ஆகக் கூடாது எனக் கதறிய வாறு இராசாத்தியின் அப்பா, இவர்கள் எல்லோரது அவலங்களையும் பொருட்படுத்தாதவனாய், ஐயோ இன்றைய மடை பரவலை நாசமறுவார் நிறுத்திப் போடாங்களே எனும் உணர்வு கொண்டவனாய், வடை, பொங்கல் என ஐயனாரின் பிரசாதங்களைத் தவற விட்ட உணர்வோடும், பெரியவர்கள் போகும் காற் தடங்களை அடியொற்றியவாறும் நான் நகர்ந்து கொண்டிருந்தேன்.


ராசாத்தி அக்காவை எல்லா இடமும் சல்லடை போட்டுத் தேடினார்கள். அவா கிடைக்கவேயில்லை, எங்கேயாவது காட்டிலை இருக்கிற ’காடை முனி’ திசை மாற்றிக் கூட்டிக் கொண்டு போயிருக்கும் எனும் மூட் நம்பிக்கைக்கு அர்த்தம் கொடுத்தவர்களாக, அவள் திரும்பி வருவாள் எனும் நம்பிக்கையில் வீட்டிற்கு வந்தார்கள். வரும் வழியில் ‘கோபாலு’ மாமா ஓடி வருகிறார்.


‘உவன் குணத்தானின்ரை காணியிருக்கெல்லோ, அதுக்குப் பின்னுக்கு- இந்தியன் ஆமி சென்ரி போட்டு இருக்கிறாங்கள் தானே, அங்கே யாரோ அழுது சத்தம் கேட்டது, ‘ஐயோ என்னைக் காப்பாற்றுங்கோ, இவங்களிட்டை இருந்து என்னைக் காப்பாற்றுங்கோ’ என்று கூக்குரல் கேட்டது,
அப்போது ரோந்து வந்த ஆமிக்காரர் அங்கே நின்றவங்கள், அதாலை நான் போய்ப் பார்க்க முடியலை’ இப்ப ஆமி காம்ப் மாறிப் போயிட்டாங்கள்’ எல்லோரும் ஒருக்கால் வெளிக்கிட்டியள் என்றால் போய்ப் பார்க்கலாம்’ எனச் சொன்னார். 


எல்லோர் மனங்களிலும் அது இராசாத்தியாக இருக்கக் கூடாது, எனும் எண்ண அலைகள் ஓடத் தொடங்கின. எல்லோரும் போனார்கள். இந்தியன் ஆமி சென்ரி மாறிப் போய் விட்ட காரணத்தினால் இலகுவாக அவ் இடத்தினுள் நுழைந்தார்கள். அங்கே இராசாத்தி அக்கா கடித்துக் குதறப் பட்டு, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டிருந்தா, வாயினுள் சீலை வைத்து அழுத்திய காரணத்தாலும், பலாத்காரப் பேய்களின் பலமான நெருக்குதல் காரணமாகவும் இராசாத்தி அக்காவின் உயிர் பிரிந்திருந்தது.


இராசாத்தியின் உடலைக் காவிய படி வீடு வந்தார்கள். செத்த வீட்டிற்கான கடமைகளை முடித்தார்கள். மாமாவின் மனதில் தன் முதற் காதல் சிதைந்து போனதற்கான கோடுகளை விட, எங்கள் மணணில் எதிரியின் பிடியில் இப்படி ஓர் கொடுமையா என்பதற்கான’ கேள்விக் குறிகளே அதிகமாக நீண்டு கொண்டிருந்தன.


ஆதிக்கப் பேய்களின் அரக்கக் கால்கள் ஒவ்வோர் நிலங்களில் அடியெடுத்து வைக்கையிலும் சூறையாடல்கள் நிகழும்.  


மனித உடலாகவோ, அல்லது உறை விடங்களைச் சார்ந்ததாகவோ இல்லைப் பொருட்களை விரும்பியதாகவோ அவர்களின் சூறையாடல்கள் அமைந்து கொள்ளும்.  இன்றும் எங்கள் மண்ணில் பல வெளித் தெரியா இராசாத்திகள் இருக்கிறார்கள். 


மானம்- விற்பனைப் பொருளாகத் திருமணச் சந்தையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய தேவை, குடும்பக் கௌரவம் முதலிய காரணிகளால் வல்லுறவுக்குள்ளான பெண்களில் யாராவது உயிர் தப்பினால் வாய் திறப்பதேயில்லை.


நீதி தேவதயின் தராசின் இரு படிகளிலும் குருதிகள் கட்டி பட்டு, நிறுத்தற் படிகளாக இருக்கும் போது, எங்கனம் நியாயம் கிடைக்கும். அழகிய வனப்புக்களும், அழிந்து போகாத செல்வங்களும் என இருந்த வாழ்வு மெல்ல மெல்ல அரிக்கப்படத் தொடங்கிய காலம் அது. அந்தர் கணக்கில் நெற்களை மூடைகளாக்கி ஏற்றுமதி செய்து, ஆசை அடங்கா வண்ணம் ஆதவனுக்குப் பொங்கலிட்டு, ஆஹா என்று பேர் சொல்லும் படி வாழ்ந்திருந்த வாழ்க்கை மெல்ல மெல்ல கறையான்களால் அரிக்கத் தொடங்கிய காலங்கள் அவை. 


வன்னிப் பகுதி; மட்டும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றாறுகள் வரை பெருமெடுப்பிலான இடப் பெயர்வுகளைச் சந்தித்திருக்காத பெரும் பேறு பெற்றிருந்தது. வீரம் எனும் குறியீட்டின் விளக்கப் பொருளான கொற்றவை’ வற்றாப் பளையில் அம்மனாகவும், கிளி நொச்சியில் கண்ணகை அம்மனாகவும் குடி கொண்டிருந்தாள்.


எங்கள் ஊர்த் தெய்வங்கள் எங்களோடு இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையில் இருக்கையில் தான் யாழில் இருந்து இந்திய இராணுவத்துடனான போரினைச் சந்திக்கும் தந்திரம் கொண்டு ‘ஒரு காலத்தில் நாம் வணங்கிய நிஜக் கடவுளர்களும்’ வன்னியின் முல்லைத் தீவை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள்.


நடை பயின்று, கழுசான் அவிண்டு விழும் பருவத்திலும், இவர்களின் செய்கைகள் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. செம் புழுதி மண்ணில் உருண்டு புரள்வதுவும், கொக்கான் வெட்டல் விளையாட்டு விளையாடி’ கொத்தம்பியா குளக் கரைகளில் ஓடி மகிழ்ந்ததுவும் இன்றும் காட்சிகளாக இருக்கின்றன. 


மண் வீடு கட்டி- பெட்டிக் கடை போட்டு ரோட்டால் போவோர் வருவோரிடம் எங்கள் சிறிய கைவினைப் பொருட்களைத் திணித்த விரல் சூப்பும் வயசு ஞாபகங்களைக் கிளறுகையில்- மீண்டும் ஒரு தரம் குழந்தையாக மாறி ஒரு கெந்தல் கெந்திக் கிளித் தட்டு விளையாடி மகிழ வேண்டும் என்று தோன்றும்.


ஈழம் ஒரு காலத்தில் அமைதியாக இருந்த பொழுதுகளில், நாங்கள் ஆரவாரம் செய்த நிகழ்வுகள் ஏராளம். ரக்ரர்(உழவு இயந்திரம்- Tractor) தட்டி வான், லாண்ட் மாஸ்டர்(Land Master) இவைகள் அக் காலத்தில் எங்கள் ப்யண ஊர்திகளாக விளங்கின. இவை எல்லாவற்றையும் விட சைக்கிள் தான் எம் உற்ற தோழனாக இருந்தது. ஒரு சில கிலோ மீற்றர்களை விட நூற்றிற்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்களுக்கு சைக்கிள்களில் சவாரி விட்டிருக்கிறோம், கோயில் திருவிழா என்றாலோ இல்லை அடுத்த ஊர்களில் பாட்டுக் கச்சேரிகள் என்றாலோ, பட்டி மன்றம்- கவியரங்கம் எனப் பல நிகழ்வுகளை நடக்கும் வேளைகளாயினும் சரி; சைக்கிள் ஓடியச் சந்தோசமாகப் போய்ப் பார்த்த காலங்கள் அவை. 

எங்கள் ஊரில் தைப் பொங்கல் என்றால் தனியான தொரு மகிழ்ச்சி களை கட்டும். இளசுகளுக்கு ஒரு வித இன்பம் பொங்கல் அன்று கிடைக்கும், அதே வேளை பழசுகளுக்கும் ஒரு வித இன்பம் பொங்கலை அடுத்த சில நாட்களில் கிடைக்கும். இளசுகள் கொடி பறக்க(பட்டம் ஏற்றல்) விட்டு மகிழத் தொடங்குகையில், பெரிசுகள் மாட்டு வண்டிச் சவாரிக்காய்த் தங்களைத் தயார்படுத்தத் தொடங்குவார்கள். 


பட்டங்கள் பல விதம். மணிக்கூட்டு, கொக்குப் பட்டம், எட்டு மூலை, சீனன் பட்டம், பாம்பன் பட்டம், செம்பிராந்தன் பட்டம், ஆறு மூலைப் பட்டம், ஆள் பட்டம், எனப் பல பட்டங்கள் உண்டு.  கழுசான்(காற்சட்டை) அவிழ்ந்து விழுகையிலும், ஒரு கையால் காற் சட்டையினைப் பிடித்தபடி, மறு கையால் பட்டத்தின் நூலை விட்டுக் கொடுத்து ஏற்றுவதில் நாங்கள் அப்போது கை தேர்ந்தவர்களாக இருந்தோம்.


 மார்கழி மாதத்தில் பாடசாலை விடுமுறை விட்டதும் பல திட்டங்கள் போட்டுப் பட்டங்கள் கட்டி ஏற்றத் தொடங்கிடுவோம்...........................


டிஸ்கி: இது சிறுகதையோ அல்லது கதையோ அல்ல. கிரமாத்து மணங் கமழ எழுதப்படும் ஒரு உரை நடைத் தொகுப்பு.

24 Comments:

உணவு உலகம் said...
Best Blogger Tips

//இன்றும் எங்கள் மண்ணில் பல வெளித் தெரியா இராசாத்திகள் இருக்கிறார்கள்//
நெஞ்சைப் பிழியும் நெருடல்கள்.நினைக்கவே நெஞ்ச்ம் பதறுகிறது.

உணவு உலகம் said...
Best Blogger Tips

//இது சிறுகதையோ அல்லது கதையோ அல்ல. கிரமாத்து மணங் கமழ எழுதப்படும் ஒரு உரை நடைத் தொகுப்பு.//
சத்தியமாய் இது உரைநடைத் தொகுப்பு மட்டுமல்ல, உங்களின் உயிர் துடிப்பு.

உணவு உலகம் said...
Best Blogger Tips

முதல் வருகை, படித்தேன்,மனம் கலங்கினேன், வாக்கிட்டேன், வருகிறேன், நண்பரே!

கவி அழகன் said...
Best Blogger Tips

உணர்வை தொடும் கதை படங்களும் அருமை

கவி அழகன் said...
Best Blogger Tips

பிளாக்கர் கொஞ்சநாளாக முடங்கிவிட்டது அதனால் உடனடியாக வரமுடியவில்லை

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

வலி நிறைந்த பகிர்தல்கள்

saarvaakan said...
Best Blogger Tips

நடந்தவற்ற நேரில் பார்ப்பது போலவே உள்ளது. மனதை உறைய வைக்கிற‌து.தொடருங்கள் நண்பரே!!!!

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

மனதை பிசையும்
மந்திர பகிர்வு
சோகம் அப்பிய வார்த்தைகளில்
வேதனை வேர் விழுதாகிறது
ஆயினும் கைகட்டி படிக்க மட்டுமே
முடிந்த,
முடியாதவனாய்
முயலாதவனாய்
தமிழினம்

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ இரண்டு நாள் வலையில் தவறு என்று நான்பட்ட அவஸ்தை ஒருபுறம்!
..
முடியவில்லை நண்பா ஊரை நினைக்கும் போது மீண்டும் சிறுவர் ஆகி வயில்களில் எத்தனை இன்பம்!
நீங்கள் ஒரு ராசாத்திமட்டுமா இப்படி ஆயிரம் தோழிகள் மறுவடிவம் எடுக்க அந்தப்பேய்களின் கொடிய விசம் பரவித்தானே புறப்பட்டுப் போனார்கள்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மனசு கனத்து போனது...

தனிமரம் said...
Best Blogger Tips

இந்தப் பட்டம்பற்றிய ஞாபகங்கள் நானும் பதிவு செய்துள்ளேன் உண்மையில் நாமும் இப்போது ஒரு பட்டங்களாகிப்போனோம்!

Anonymous said...
Best Blogger Tips

அடேங்கப்பா அருமையான அலசல்

Anonymous said...
Best Blogger Tips

மண்மணம் வீசுது

தனிமரம் said...
Best Blogger Tips

இந்த இடப்பெயர்வுகள் வராவிட்டால் எத்தனை தூயரங்கள் வாழ்வில் வந்திருக்காது! இது உரையல்ல எங்களின் வாழ்க்கைச் சக்கரம்!
 பலருக்குப் புரியா புதிரில் எங்கள் சோகமான காவியத்தை உங்கள் எழுத்து உலகிற்கு வெளிச்சம் போடுகிறது!
மீளமுடியவில்லை ஊர் ஞாபகத்தில் மீண்டால் மீண்டும் வருவேன்!

ரஹீம் கஸ்ஸாலி said...
Best Blogger Tips

present

Anonymous said...
Best Blogger Tips

ம் இந்தியனாமி காலப்பகுதி..(

Anonymous said...
Best Blogger Tips

///இன்றும் எங்கள் மண்ணில் பல வெளித் தெரியா இராசாத்திகள் இருக்கிறார்கள்.// உண்மை தான். வெளி உலகுக்கு தெரியாத எத்தனையோ ராசாத்திகள் தம் வாழக்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////நீதி தேவதயின் தராசின் இரு படிகளிலும் குருதிகள் கட்டி பட்டு, நிறுத்தற் படிகளாக இருக்கும் போது, எங்கனம் நியாயம் கிடைக்கும். ////

கிடைக்காது எமத்மவரே எம்மை ஈனப் பிறவிகளாக பார்க்கும் காலம் வரை தொடரும்...

செங்கோவி said...
Best Blogger Tips

மனது கனக்கிறது நண்பா..என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

என்ன செய்ய?

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

படங்கள் இணைப்பு அருமை

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
சுதா SJ said...
Best Blogger Tips

மனசு கனக்குறது உலர்ந்த வார்த்தைகளால் எழுதி இருக்குறிர்கள் அண்ணா

ஹேமா said...
Best Blogger Tips

பெருமூச்சு மட்டுமே.இனி ஒரு காலம் கிடைக்குமா முன்னைப்போல !

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails