ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கிறோம், எதற்காக இந்த அரசியல்வாதியின் காலை நாயைப் போன்று நக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாது தீவிர வெறி கொண்டு விசுவாசிப்போரை என்ன வகைக்குள் அடக்கலாம்? நீங்களே முடிவு செய்யுங்க மக்கள்ஸ்,
என்னையும், என் சார்ந்த சமூகத்தினையும் ஒரு அரசியல்வாதி தன் தூர நோக்குள்ள நற் திட்டங்கள் மூலம் வளர்த்தெடுப்பார் என்றால் விசுவாசிக்கலாம். தவறேதுமில்லை. ஆனால் நான் சார்ந்த சமூகத்திற்கு “டாஸ்மாக்” வகையறாக்கள் மூலம் நன்மை பயக்கும் திட்டத்தினைக் கொடுத்து பல ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வில் தீயை மூட்டும் இப்படியான ஓர் கேடு கெட்ட அரசியல்வாதிக்கு ஏன் நாம் எம்மை அறியாமலே வெறி கொண்டு ஆதரவு நல்குகிறோம்? இந் நிலை மாறுமோ?
என்னுடைய குழந்தை, என் உறவினர்கள், நான் குடியிருக்கும் நகரம், கிராமம் சார்ந்து அனைவருக்குமே போதையூட்டும் டாஸ்மாக் “அம்மா டாஸ்மாக்” ஊடாக மகா தீமை கிடைக்கிறது என்று தெரிந்தும் அவரைத் தீயாய் ஆதரிக்கும் இத்தகைய கடை நிலைத் தொண்டர்களை எப்படி அழைக்கலாம்? சிந்தியுங்கள் தோழமைகளே! மாற்றத்தினை எதிர்பார்க்காத உங்களின் மந்த சிந்தனை மூலம் பாதிப்பது ஒரு நாட்டின் எதிர்காலமே அன்றி வேறேது?
|
0 Comments:
Post a Comment