Saturday, April 6, 2013

பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்ணலாமா!

பாய அறிவிப்பு: 
அன்பிற்கினிய உறவுகளே, இன்றைய பதிவு கொஞ்சம் விவகாரமான பதிவு. ஆர்வமில்லாதவர்கள், கலாச்சார காவலர்கள் பதிவின் தலைப்பினையும், முன்னுரையினையும் பார்த்த பின்னர் ஓடிவிடுவது நன்மையான செயல். அதனையும் மீறிப் பதிவினைப் படித்து விட்டு, சீ....நீ இதையெல்லாம் பதிவில் எழுதுறியா என்று திட்டினால், நொந்து கொண்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

என்னங்க அப்படி யோசிக்கிறீங்க. இது எல்லோருக்கும் உள்ள ஒரு சீரியஸ்ஸான பிரச்சினை தான். ஆனால் இதனை எங்கே பண்ணுறோம், எப்படிப் பண்ணுறோம் என்று நமக்குத் தெரிந்தும்- பிறருக்குத் தெரியாது என்ற நினைப்பில்; நாம் இத்தகைய செயலினைச் செய்வதால் பலர் முகஞ்சுழிக்கிறார்கள்.  

சிலர் இந்த அசிங்கச் செயலினைச் செய்தவன் மட்டும் கையில் கிடைக்கனும். இந்த நிமிசமே அவன் செத்தான் என்று கொலை வெறியோடு அலைவார்கள். ஆமாங்க, அந்த மேட்டர் என்னன்னா.... நமக்குத் தெரிந்தும், பிறருக்குத் தெரியாத மாதிரி காஸ் லீக் பண்ற மேட்டர் தானுங்க.

ஒரு சிலர் ரொம்ப சத்தமா, ட்ரக்....புறுக்........புறுக்...புறூக்.. என்று பல பேர் சிரிக்கிற மாதிரி கூட்டத்திலை லீக் ஆக்கிடுவாங்க. மணம் இல்லாத வாய்வாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் மணம் உள்ள வாய்வென்றால், சொல்லவா வேண்டும். எல்லோரும் சேர்ந்து கொலை வெறியோடு ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க. அதனை அனுபவித்தவன் தான் சொல்லனும்.

பஸ் நிலையத்தில், பாடசாலையில், பொது இடங்களில் எனப் பலருக்குப் பல இடங்களில் இந்தப் பிரச்சினை இருக்கு. நான் அறிய இப்படிச் சத்தமா வாய்வை லீக் பண்ணி- காதலி முன்னால் அவமானப்பட்டு ஒருத்தன் தன்னோடை காதலைக் கூட இழந்திருக்கிறான்.

சிலர் என்ன பண்ணுவாங்க என்றால், பல பேர் கூட்டமா நிற்கிற இடத்தில நைசா, சத்தமே இல்லாம லீக் பண்ணிடுவாங்க. அதாலை எவன் நாற்றமுள்ள நச்சு வாய்வை லீக் பண்றானோ, மற்றவங்க கண்ணிலை மாட்டிக்காம தப்பிச்சிடுவான். ஆனால் அறிந்தும் அறியாமல் சத்தமா லீக் பண்ணினால்...........அவனுக்கு சங்கு தான்.

வாய்வை லீக் பண்ணிய பின்னாடி, அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகினால், வாய்வு விட்ட இடத்தில் மட்டும் தான் மணக்குமாம்.  

நாங்கள் பாடசாலையில் படித்த காலத்தில் மூக்கைத் துளைக்கும் அணு குண்டை நாற்றத்துடன் எவன் அடிக்கிறானோ, அவனைக் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும். இந்த மாதிரியான சூழ் நிலையில் என்ன பண்ணுவோம் என்றால், எந்தப் பக்கம் நாற்றம் அதிகமாக வருதோ, அந்தப் பக்கம் உள்ள மாணவர்களிடையே ஓ...பத்து- இருபது- முப்பது- நாற்பது- ஐம்பது....என்று நூறு வரை சொல்லி கடைசியாக நூறாம் இலக்கம் எவனில் முடியுதோ, அவன் தான் நச்சு வாயுவை நசுக்கிடாமல்(சத்தமில்லாம) ரிலீஸ் பண்ணின ஆள் என்று நையப்புடைத்திடுவோம்.

இதில உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த நம்பரை மாற்றி மாற்றி எண்ணுவதால், வாய்வை அடிச்சவனுக்கு அதிஷ்டம் இருந்தால் சில வேளை மாட்டிக்காமல் எஸ் ஆகிட, வாய்வை லீக் பண்ணாத ஒரு அப்பாவி மட்டும் மாட்டிக்குவான்.  ஹி...ஹி.. பிறகென்ன, தப்பிச்சவன் பாடு... கொண்டாட்டம் தான்.

ஒரு சிலரின் வாய்வு நாற்றங்கள், மூக்கைக் கொல்லுற மாதிரி இருக்கும், மரக்கறிகளை மட்டும் உண்ணுகின்ற நபர்கள் ஒரு மாதிரியான நாற்றத்தை வெளிப்படுத்துவார்கள்.

முட்டை தின்னும் நபர்களோட.... நாற்றம் இருக்கே.. அப்பாடா....வயிற்றைப் பிரட்டி வாந்தி வரவைத்து விடும். ஆமை முட்டை தின்ற பிற்பாடு யாராச்சும் காஸ் லீக் பண்ணினால் குறைந்தது மூன்று நிமிச நேரத்திற்கு தொடர்ச்சியாக மணக்கும். அவ்ளோ வீரியமான நாற்றம். (Very Strong Smell) மக்களே நோட் பண்ணிக் கொள்ளுங்க.

இன்னோர் முக்கியமான விடயம், பொது இடத்தில் ஒருத்தன் வாய்வை லீக் பண்ணிட்டான் என்றால், சில வேளைகளில் மூக்கைப் பொத்த முடியாது போனால், அதனைச் சுவாசிக்க நேரிடும். பிறகென்ன அடுத்த நாள் அதே நாற்றம் நம்மளுக்கும் தொற்றி விடும்.

*காலையில் ரெகுலரா தண்ணி வாளியைத் தூக்கிக் கொண்டு போகாத நபர்கள்,
*ஒழுங்காக குளிக்காத நபர்கள்
*காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் வெறு வயிற்றில் குடிக்காதோர்
*பிறருடைய லீக்கான நச்சு வாயுவைச் சுவாசித்த நபர்கள்
*முட்டை உண்ணிகள்
*காபோ ஹைதரேட் அதிகமுள்ள பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகமாக உண்ணும் நபர்கள்
*காபோஹைதரேட்/ மாச்சத்துள்ள {Carbohydrate} உணவினை அதிகமாக உட் கொள்வோர்
*புகைப் பிடிப்போர்

இவர்கள் தான் விசேடமாக பொது இடத்தினை நாறடிக்கும் நபர்கள். எனவே இனிமே இந்த மாதிரி நபர்கள் வரிசையில் நீங்கள் யாராச்சும் இருந்தால், கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பது நல்லது.

என்னய்யா...என் ப்ளாக்கில ஏதோ மணக்குது...
அடச் சீ..........கறுமம், நான் ப்ளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன் எல்லே....
ஓ......அப்போ இது நானாகத் தான் இருக்கும்.

2 Comments:

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

ஹா... ஹா....
குசும்பான பகிர்வு...
அருமை...

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

நாற்றுப் பதிவு நாற்றமடிக்கிறது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails