Friday, April 5, 2013

பொண்ணுங்கள பார்த்து இப்படி பேசலாமா?


வணக்கம் உறவுகளே, இன்று எல்லோரும் சைக்கிள் ஓடுவோமா?
 இன்றைய நவீன உலகில், கார், மோட்டார் சைக்கிள் என பல ஐயிட்டங்கள் வந்தாலும், நம்ம ஊர் சைக்கிளுக்கு ஈடாக எதுவும் வராதில்ல...(அவ்............)

சைக்கிள்களில் நம்ம ஊரில் பேமஸ் றல்லி (Ralli), லுமாலா (Lumala), இந்த இரண்டும் தான், இதற்கு அடுத்த படியாக ஹீரோ(Hero) சைக்கிள் இருந்திச்சு. றல்லி சைக்கிளை வயசான ஆளுங்க தான் அதிகமாக விரும்பி ஓடுவாங்க,(90'S_)
நம்மளை மாதிரி இளம் பசங்களுக்கு லுமாலா சைக்கிளில் ஏறி காலை மேலாலை தூக்கிப் போட்டு, சவாரி செய்வது என்றால் காணும். சொல்லவே தேவையில்லை.
பெண்களுக்கு உள்ள சைக்கிளை லேடிஸ் சைக்கிள் என்று அழைப்போம்.(அடப் பாவி..இதெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்?)
கிரவல்(செம் மண்) றோட்டில் சைக்கிளில் சவாரி செய்த காலங்களை மறக்க முடியாது. அதுவும் ரியூசன் விடும் நேரம் பார்த்து சைக்கிளில் குச் சொழுங்கை வழியே(Little Street) காத்திருந்து, நம்ம ஊர் டியூசன் பிகருங்க வரும் வரைக்கும் வெயிட் பண்ணி, அவர்களின் பின்னால் சேஸிங் விட்டு(Ceasing) கலாய்த்து, காமெடி பண்ணி, நக்கல் அடித்து, நாம் வாழ்ந்த காலங்களை இலகுவில், எம் நினைவுகளை விட்டு அழிக்க முடியாது.

நம்ம ஊர் காதல்களில் அதிகமானவை நிறை வேறுவதற்கும், பெண்களைப் பின்னால் கலைத்துச் சென்று லெட்டர் கொடுத்து, காதலை வாழ வைப்பதற்கும் இந்தச் சைக்கிள்கள் தான் காதல் தூதுவர்களாகவும் இருந்திருக்கின்றன. எப்பூடி என்று கேட்கிறீங்களா? 

’டீயூசனிலை என்னுடைய சைக்கிள் சீட்டுக்குள்ளே லெட்டர் வைச்சிருக்கிறன் என்று எனக்கு பிடித்த நாயகியிடம் சொல்லிட்டாப் போச்சு,
அவா உடனே ஓடிப் போய்,’சேர் தண்ணி குடிச்சிட்டு வாறன்’ என்று டியூசன் கிணற்றடிக்குச் சென்று, அங்கே பார்க்கிங்கில் இருக்கும் சைக்கிள் சீட்டினுள் இருக்கிற லெட்டரையும் எடுத்துக் கொண்டு, தண்ணியும் குடிச்சிட்டு வருவா..
{எப்பூடி நம்ம திறமை..;-)))}

பெண்களின் பின்னால் சைக்கிளில் சென்று. பாதுகாப்பு வழங்கி அவர்களை நாங்கள் பத்திரமாக வீடு வரைக்கும் அழைத்துச் செல்லுவதற்கும்,

குமர்ப் பெண்கள்(திருமணமாகத இளம் பெண்கள்) உள்ள வீடுகளில் அவர்கள் யாராவது குளிக்கிறார்களா என நோட்டம் பார்த்து, வீதியால் ரெண்டு மூன்று ரவுண்ட் அடித்து அவர்களை ரசிப்பதற்கும் சைக்கிள் தான் நம்ம தோஸ்த்தாக இருந்திருக்கின்றது.

இதனை விளக்கத் தான் நம்ம ஊர் நாடகம் ஒன்றில்
‘சைக்கிள் சீட்டு உயர...மதில் உயரும்’ என்று நக்கலாக ஔவையாரின் நீர் உயர பாடலினை மாற்றிப் பாடிக் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.

இந்தச் சைக்கிள்கள் சில நேரம் சைத்தான்களாகவும் மாறி விடும், அதுவும் பெண்களை பின் தொடர்ந்து கலைத்துச் செல்லும் முக்கியமான தருணங்களில் கிரவல் வீதியில் சைக்கிள் சறுக்கி விட்டால் போதும். ஒரு கரணம் அடிச்சு, முகங் குப்புற விழுந்து அவமானப் பட வேண்டிய நிலமை உருவாகி விடும்.

குப்புற விழுந்த பின்னர், எங்கையடா நம்ம ஆளுங்க என்று பார்த்தால்.அவளவை.. ஒரு ஐஞ்சடி தள்ளி, கல கல என எங்களை நக்கல் அடித்து, கலாய்த்துப் பேசிய வண்ணம் போய்க் கொண்டிருப்பாளுங்க.

பிறகு சைக்கிளின் நிலமையை எப்பூடிச் சொல்வது, ஹாண்டில்(cycle handlebar) திரும்பி இருக்கும், சைக்கிளை நிமிர்த்தினால் அது ஹாண்டில் நேராக இருக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும். 

பிறகென்ன, ரோட்டில் உதவிக்கு ஆளையா கூப்பிட முடியும். தன் கையே தனக்கு உதவி என, கவட்டுக்கை(இரண்டு கால்களுக்கும் நடுவில்) சைக்கிளின் முன் சில்லை வைத்து, சைக்கிளின் இரண்டு கைப் பிடிகளையும்(Bicycle handlebar) கையால் பிடித்து, சீட்டுக்கு நேராகவும், முன் அச்சிற்கு சமாந்தரமாகவும் ஹாண்டில் வரும் படி திருப்பி அட்ஜஸ்ற் (Adjust) பண்ணி, நேராக வந்ததன் பின்னர் தான் சைக்கிள் ஓடத் தொடங்குவோம், இதனை ’வக்கிள்’ எடுப்பது(Buckle) என்று எங்கள் ஊரில் சொல்லுவோம். இது ஒரு வகை வக்கிள் எடுக்கும் முறை.

{இப் பதிவில் உள்ள படங்களில் வக்கிள் எடுக்கும் படங்கள், சகோதரன் மதிசுதாவின் கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.}


புதிதாக சைக்கிள் வாங்கினாலோ, அல்லது சைக்கிளை சர்வீஸ் செய்து, கழுவிப் பூட்டினாலோ சைக்கிள் றிம்மினையும் வக்கிள் எடுக்க வேண்டும்,
இல்லா விட்டால், ரோட்டில் டண் டணக்கா விளையாட்டு, விளையாட வேண்டி நேரலாம்.

(Cycle Wheel Buckle). இது இரண்டாவது வக்கிள். இது எப்புடீன்னா, சைக்கிள் றிம்மில், சைக்கிள் கம்பிகளைப் பொருத்திய பின்னர், பூச் சாவியால் சுத்திச் சுத்தி, இறுக்க வேண்டும், இதுக்கு அப்புறம், றிம்மினைச் சுத்திச் சுத்தி, ஆட்டம், அசைவு ஏதும் இல்லாமல், ஒரே நேருக்கு றிம் அசையும் வண்ணம் வக்கிள் எடுப்பது தான் இரண்டாவது முறை.
இது தான் நம்ம ஊரின் வக்கிள் எடுப்பு மேட்டர்.

டிஸ்கி: இன்னொரு வக்கிள் எடுக்கும் முறை இருக்கு...
ஆனால் சொல்ல வெட்கமாவும் இருக்கே,

நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,(சில நேரம் காலை அகட்டி வைச்சு நடப்பாங்க) அவங்களை பார்த்து நம்ம பசங்க எப்பூடிச் சொல்லுவாங்க தெரியுமா?
ஆளுக்கு நல்லாத் தான் வக்கிள் எடுக்கிறார் போல,
பார்த்தீங்களா,............. ஆடுற ஆட்டத்தை..

இதுக்கு சத்தியமா எனக்கு அர்த்தம் தெரியாது எனும் உண்மையினையும், நான் ஒரு பச்சப் புள்ளை என்பதையும் இத்தால் சொல்லிக் கொள்கிறேன்.
அட நம்புங்க மக்கள்ஸ்!

டிஸ்கி: மேலே உள்ள படங்களில் வக்கிள் எடுக்கும் படங்கள், சகோதரன் மதிசுதாவின் கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails