Thursday, April 4, 2013

ஐயோ நான் பட்ட அவஸ்தை, யாருக்கும் வேண்டாம்! உண்மைச் சம்பவம்!


வணக்கம் உறவுகளே, இது ரொம்பவும் சுவாரசியமான மேட்டர், அதுவும் பல வருடங்களுக்கு முன்னாடி நடந்த மேட்டராக இருந்தாலும், இப்போதும் சூடாகத் தான் இருக்கும், பட்டையைக் கிளப்பும் எனும் நம்பிக்கையில் வெட்கத்தை விட்டுப் பல உண்மைகளை வெளியே சொல்லப் போறேன்.
மத்தவனோடை துன்பம் என்றால், எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீங்களே...
அவ்.........................;-)) வாங்கோ, வாங்கோ!

சமாதான காலத்தில்(2002ம் ஆண்டு) மிக நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பிற்கு, நம்ம அரசாங்கம் வழங்கும் தேசிய அடையாள அட்டையினை மாளிகாவத்தையில் பெற்றுக் கொள்வதற்காகவும், பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காகவும்(Birth Certificate)  போயிருந்தேன். விதி என் வாழ்க்கையிலும் விளையாடும் என்று யார் கண்டது!!

 கொழும்பில் உறவினர் வீடு ஏதும் இல்லாத நிலையில் சரவணாஸ் லொட்ஜ்ஜில் போய் நண்பர்களுடன் ரூம் போட்டு நின்றேன். மேட்டர் என்னவென்றால், கொழும்பு ரொம்ப மாறிப் போய், கொஞ்சம் டெவலப் ஆகின மாதிரி இருந்திச்சு. நாங்க ரூம் போட்ட லாட்ஜ்ஜில் உள்ள டாய்லெட் இருக்கே... அது வெஸ்ரேன் டாய்லெட்.


காலங் காத்தால எந்திருச்சு, பெப்சிப் போத்தலையோ, இல்லாட்டி கொக்க கோலாப் போத்தலையோ வாய்ப் பக்கத்தாலை வெட்டி, அதனுள் கொஞ்சம் தண்ணி விட்டுக் கொண்டு பனையடி வாரத்தில் ஒதுங்கிய என்னை மாதிரி ஆட்களுக்கு, இந்த வெஸ்ரேன் டாயிலெட் கொஞ்சம் புதுசு தானே:-))
ஹி...ஹி...

வெட்கத்தை விட்டுச் சொல்லுறேன், நம்புங்கோ. வீட்டில டாயிலெட் இருந்தாலும், காலங் காத்தாலை ஒரு வேப்பங் குச்சியை வாயுக்கை வைச்சுக் கொண்டு, போத்தலுக்கை தண்ணீரை நிரப்பிக் கையில் எடுத்துக் கொண்டு; பனை வடலிக்கு கீழ் போய்க் குந்தியிருக்கிறதும் ஒரு சுகம் தான்.
(எடுங்கடா அந்த அருவாளை, இவனை இப்பவே முடிச்சிடுவம்)

ஆனாலும் கேவலங் கெட்ட, இழிவான வேலை என்ன தெரியுமே, முன் அனுபவம், பின் அனுபவம் ஏதுமின்றி வெஸ்டேன் டாயிலெட் கொமெட்டில்(western toilet commode) போய்க் குந்தியிருப்பது தான். ஹி...ஹி..ஹா..ஹா....

என்னைப் போலப் பல பேருக்கு இப்பூடி ஒரு அனுபவம் இருந்திருக்கும்.(வெட்கத்தை விட்டு, உண்மையை ஒத்துக்குங்க, வேறு வழியே இல்ல) நம்ம ஊர் டாயிலெட் எல்லோருக்கும் தெரியும் தானே. அதில் போய்க் குந்தியிருக்கிறவனுக்கு, வெஸ்டேன் டாயிலெட்டில் போய் இருப்பதென்பது, பிராடு வேலை செய்து பிழைக்கும் வலைப் பதிவாளனை அப்பாவி ஒருவன் பார்த்து மூக்கிலை விரல் வைத்து வியப்பது போன்ற செயல் தானே;-))))))))))))

முதன் முதலாக ஒரு வெஸ்டேன் கொமட்டில் போய் உட்காரப் போறேன். உள்ளே போய்க் கதவைப் பூட்டிப் போட்டுப் சுற்றும் முற்றும் பார்த்தால், தண்ணியையும் காணேல்ல, தண்ணீர்ப் பைப்பையும் காணேல்ல. அடிங் கொய்யாலா... வலது பக்க சைட்டில மட்டும் ‘ருசு’ (Tissue) பேப்பர் இருந்திச்சு.

அடக்க முடியாத கட்டத்திலை ஓடிப் போய்; உள்ளே வந்து கதவைப் பூட்டிய எனக்கு, தண்ணியைத் தேடி எடுத்துக் கொண்டு ஓடி வர நேரம் ஆகும் என்பதால், ‘ருசுப்’ பேப்பரே துணை எனும் நம்பிக்கையில் உட்காரலாம் என்று யோசித்தேன். இப்போது தான் என் அவஸ்தையின் முதல் பகுதி ஆரம்பம். 

இரண்டு விதமான பிளாஸ்ரிக் வளையங்கள் இருந்தன. ஒன்று டாய்லெட்டை முழுமையாக மூடுவதற்கு, மற்றையது எதற்கென்று தெரியாதவனாய் விழி பிதுங்க யோசித்தேன்.  இறுதியில்; அட இந்த இடம் தான், உட்கார ஏற்ற இடம் என்று யோசித்து தெளிவடைந்தேன்.

இந்த இடத்தில் நமக்கு முன்னாடி பல பேர் உட்கார்ந்திருப்பாங்க எனும் நம்பிக்கையில் நிறைய ருசுவைப் போட்டுச் சுற்றி வரத் துடைத்தேன். பின்னர் ஒரு Safety ஆக இருக்கட்டுமே எனும் துணிவில் மீண்டும் ருசுவைச் சுற்றி வரப் போட்டு விட்டு, இதிலையும் நம்ம ஊர் டாயிலெட்டில் உட்கார்வது மாதிரித் தானே இருப்பாங்க என்ற நினைப்பில் கால் இரண்டையும் மேலே வைத்து உட்கார்ந்தேன், மேட்டர் எல்லாம் கிளியராகியதும், எந்திருச்சு, துடைச்சுப் போட்டு, தண்ணியை அமுக்கினால்.............................ஐயோ, அம்மா.......நான் போட்ட ருசுவின் அளவு அதிகமானதால் தண்ணி பெருகத் தொடங்கி விட்டது. டாய்லேட் (block) நிரம்பிப் போச்சு.

மேட்டரை வெளியை சொன்னால், டவுசரை உருவிடுவாங்களே, என்று பயந்து, பதை பதைக்க வெளியே ஓடி வந்த என்னைப் பார்த்து விட்டு, ஒரு சகோதர மொழிக்காரன்(சிங்கள அன்பர்) உள்ளே போனான். போனது தான் தாமதம்.....ஹோட்டல் மனேஜ்ஜரைப் பார்த்து சிங்களத்தில கத்திக் கொண்டு ஓடினான்.

லாட்ஜ், மனேஜ்ஜர் ஓடி வந்தார். ‘தம்பி ராசா, நீங்க என்ன செய்தனீங்க? சரியான காரணத்தைச் சொன்னால் தான், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று சொன்னார்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டுச் சொன்னேன்.
’’பேப்பரைக் கொஞ்சம் அதிகமாகப் போட்டு விட்டேன் என்று.

மனேஜ்ஜர், சுத்திகரிப்புத் தொழிலாளியைக் கூப்பிட்டு பிரச்சினையை முடிக்க முதல், மேட்டரை என் நண்பர்கள் கிட்டச் சொல்லி, மானத்தைக் கப்பலேற்றி விட்டிட்டார்.

பூனை சைசில இருந்து கொண்டு, நிரூபன் யானை இலத்தி போட்ட மாதிரிப் போட்டு டாயிலெட்டை ப்ளொக் பண்ணி விட்டாய் என்று எல்லா இடமும் கதையைப் பரப்பி விட்டிட்டாங்க.

அடிங் கொய்யாலா......பிறகு எப்பூடி இருந்திச்சு,  நம்ம நிலமை என்று கற்பனை பண்ணிப் பாருங்க. வன்னி முழுவதும், யாழ்ப்பாணம் முழுவதும் ‘இலத்தி நிரூ......., இலத்தி நிரூ...என்று ஒரு பட்டப் பெயரோடு நான் பேமஸ் ஆகிட்டன். என் நண்பர்களுள் ஒருவரான திருமாறன்,  என் கூட இருக்கும் வரை இதே நிகழ்வினை அடிக்கடி சொல்லிச் சொல்லி, என்னையை வைச்சு காமெடி பண்ணி மகிழ்வான்.

இப்போ, இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் என்ன என்றால்,
நான் பட்ட இந்த அவஸ்தையினை, நீங்கள் எல்லோரும் படக் கூடாது தானே?
இதான, நம்ம கூட்டாளி ஒருவர்(என்ன நமக்கு இவரு கூட்டாளி ஆகிட்டாரே என்று யோசிக்க கூடாது) நம்மளை மாதிரி இப்படி அவஸ்தைப் பட்ட ஒருவர்,
உங்க எல்லோர் நன்மை கருதியும் ஒரு சூடான மேட்டரை யூரியூப்பில் போட்டிருக்கிறார்.

வெஸ்டேன் டாயிலெட் எப்பூடி யூஸ் பண்ணுவது என்று தெரியாதவர்களுக்காக; இந்தியாவின் யூரியூப் நட்சத்திரம் வில்பர் சர்குணராஜ்ஜின் விளக்கம், இங்கே உள்ளது, இதோ பார்த்துப் பயன் பெறுங்கள்!

2 Comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...
Best Blogger Tips

'லத்தி' நண்பரே, எங்கை யுட்ரீப் தொடுப்பு?

எனக்கு ஒரு ஐயம் நெடுங்காலமாக இருக்கிறது...ஏனய்யா எல்ல இலங்கைத் தமிழர்களும் டகரத்தை ரகரம் அல்லது றகரமாக்கி உயிரை எடுக்கிறீர்கள்?

யூட்யூப் என்று எழுதுவதில் என்ன கடினப்பாடு இருக்கிறது?

நிரூபன் said...
Best Blogger Tips

@அறிவன்
மதிப்பிற்குரிய நண்பருக்கு வணக்கம்
தாங்கள் கேட்ட யூரியூப் இணைப்பு இப்பொழுது தான் இணைத்திருக்கிறேன்.
தவற விட்டு விட்டேன். மன்னிக்கவும்,

ஈழத்தமிழர்கள் ஆங்கிலத்தில் எப்படி உச்சரிப்பார்களோ. அதே பாணியில் தான் ரகரம், றகரம் உச்சரிக்கிறார்கள். இது தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினால் எனது தாழ்மையான வருத்த்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails