Tuesday, July 31, 2012

ப்ரீயா வுடுறான் கூகுள்காரன்! புகுந்து வெளாடு மாப்புள நீயி!

வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியம் தானேங்க? எல்லோரும் நல்லா வயிறு நெரம்ப சாப்பிட்டு விட்டு, கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருப்பீங்க என்று நெனைச்சிட்டு எழுதுறேன். ஏன்னா நீங்க சாப்பிடும் போது புரையேறி, வாந்தி எடுக்க கூடாது பாருங்க. என்னா மேட்டருன்னா, நான் மறுபடியும் எக்ஸ்பிரஸ் வேகத்தில எழுதலாம் என்று கெளம்பியிருக்கேனுங்க.அட..பலருக்கு இருக்கிற சந்தோசமும் இப்போ இல்லாம போயிருக்குமே என்று நினைக்கையில் ரொம்ப வருத்தமா இருக்குங்க. "ப்ரீயா தானே கூகுள்காரன் வுடுறான்”அதான் நானும் புகுந்து வெளையாடலாம் என்று இறங்கியிருக்கேனுங்க.

Monday, July 30, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப்.எம்

புதுப் பொலிவுடன் உங்கள் புரட்சி எப்.எம்
அன்பிற்கினிய உறவுகளே,
பதிவுலகத்தில் உள்ள நாற்று முக நூல் குழும உறவுகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாக உங்களை இப்பொழுது புதுப் பொலிவுடன் நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம் - புரட்சி எப்.எம்.
இணைய வானொலிகள் வரிசையில் புதுப் புரட்சி படைக்கும் வண்ணம் எமது வானொலி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Thursday, July 12, 2012

வண்டலூர் வனிதாவின் கொண்டையில் மலர்ந்த பூ என்ன பூ?

வாங்க நண்பர்களே, வாங்க.. எல்லோரும் ஜோரா இருக்கீங்களா? புரட்சி இணைய வானொலி கேட்டுக் கொண்டே ப்ளாக்கை படிக்கிறீங்களா? 
அதென்ன வண்டலூர் வனிதாவின் கொண்டையில் மலர்ந்த பூ அப்படீன்னு யோசிக்கிறீங்களா? வாங்க சார்.. வாங்க.. இப்பவே பதிவிற்குள் இறங்கி நீராடுவோம்.

Saturday, July 7, 2012

வேட்டி கிழிந்த வெங்கியின் வெங்கங் கெட்ட செயல்!


துன்னாலை சந்தி அருகே
              தூங்காமல் விழித்திருந்தாள் சாந்தி
பின் வாசல் வழியே
              பாய்ந்தது ஓர் சைக்கிள்
இன் நேரம் யாரங்கே,
              இங்கிதமாய் உணர்ந்து கொண்டாள்
இளசுகளிற்கு ஈக்குவலாய் 
                இன் நாளில் ஆப் அடிப்பதிலோ அவர் வம்பர்
தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய் 
                தள்ளாடி வந்தார் தம்பர்!

                                               

ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்கள்!

அன்பிற்குரிய சொந்தங்களே.. எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
உங்க எல்லோருக்கும் அட்வைசு செஞ்சு எழுதுமளவிற்கு நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லைங்க. என் மனசில பட்ட சில விசயங்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதுகின்றேன். வாங்க பதிவுக்கு போகலாம். எம் தமிழர்களிற்கு என சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. அவ் இயல்புகள் உலகினில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இல்லாத தனித்துவ இயல்புகள் என்றும் கூட சொல்லிக்கலாமுங்க. 

Wednesday, July 4, 2012

பிரபாகரனுக்குப் பின்னர் நட்டாற்றில் ஈழ மக்கள்!

அன்பிற்குரிய உறவுகளே, நலமாக இருக்கிறீர்களா?
ஈழ மக்களினுடைய இலட்சிய வேட்கையினை, தமிழீழக் கனவினை தன் தோள் மீது தாங்கி தமிழர்களுக்கான விடுதலைப் பாதையில் ஓயாது உழைத்து ஓர் படையணியினை உருவாக்கி உலகில் தமிழர்களை தலை நிமிரச் செய்த பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனையே சாரும். ஈழ மக்கள் இளிச்ச வாயர்கள் என வாயாரச் சொல்லி சிங்கள அரசும், அதன் அமைச்சர்களும் ஈழ மக்களின் தலையில் தாம் விரும்பிய எதையாவது திணித்து விட்டு செல்லலாம் என்றிருந்த போது அவர்களுக்கெல்லாம் பிரபாகரனும், தமிழ் மக்களும் வேண்டுவது தமீழமேயன்றி வேறேதும் இல்லை என்கின்ற தார்மீக ரீதியான கொள்கையினை கொண்டிருந்த பெரும் பேறிற்கு உரியவர் தேசிய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். 

Tuesday, July 3, 2012

தமிழ் வலைப் பதிவு வரலாற்றில் ஓர் புதுப் புரட்சி!

தமிழ் இணைய உலகில் முதன் முறையாக ஒரு நேரடி ஒலிபரப்பு:
அன்பிற்குரிய சொந்தங்களே..
இன்றைய தினம் உங்கள் நாற்று வலைப் பதிவு குழுமத்தின் இன்னோர் படைப்பாக இணையத் தளத்தினூடாக ஓர் நேரடி விவாத மேடை இடம் பெறவிருக்கிறது.
நீங்கள் நேரடியாக எமது புரட்சி இணைய வானொலியினைக் கேட்டவாறு விவாத மேடையில் இணைந்து கொள்ளலாம்.
வானொலியைக் கேட்க: http://www.puradsifm.com/
தொலைபேசியூடாக இணைந்து கொள்ள: 
ஐரோப்பிய தொலைபேசி இலக்கம்: 0044 -1622 370644
Skype ஊடாக நீங்கள் இணைந்து கொள்ள: puradsifm
விவாத மேடையின் தலைப்பு:
உலக நாடுகளோடு ஒப்பிடும் போது.. தமிழர்களின் கல்வி முறை வளர்ச்சியடைகின்றதா?
அல்லது பின்னோக்கிச் செல்கின்றதா?
நேரலையில் இணைந்து கொண்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து மகிழுங்கள்..
முக நூலில் எம்மோடு இணைந்து கொண்டு உங்கள் விருப்ப பாடல்களை, இந்த விவாத மேடை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் உறவுகளே..

உங்கள் பேராதரவினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

புரட்சி இணைய வானொலி குழுவினர்.



தமிழரின் கல்வி முறை கற்பழிக்கப்படுகின்றதா? - விவாத மேடை

அன்பிற்குரிய சொந்தங்களே.. வணக்கம் 
நலமா?
நீண்ட நாட்களின் பின்னர் வித்தியாசமான ஓர் விவாத மேடையுடன் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலகில் ஓர் புதிய புரட்சியாக நாற்று பேஸ்புக் குழும நண்பர்கள் இணைந்து உருவாக்கிய புரட்சி எப். எம் எனப்படும் ப்ளாக்கர் எப்.எம் இல் நாளைய தினம் இடம் பெறும் நேரடி ஒலிபரப்பில் ஓர் விவாத மேடை உங்களிற்காய் காத்திருக்கிறது. 

Sunday, July 1, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப் எம்

நேரடி ஒலிபரப்பு:
அன்பிற்குரிய வலையுலக உறவுகளே,
வணக்கம் நலமா? நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஓர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலக வரலாற்றில் ப்ளாக்கர் எப். எம் என்றோர் நேரடி ஒலிபரப்பினை காமெடி பதிவாக எழுதி மகிழ்ச்சி கொண்டாடிய நாம், இப்போது நாற்று பேஸ்புக் குழுமத்தினருடன் இணைந்து புரட்சி எப்.எம் எனும் இணையத் தள வானொலியினை ஆரம்பித்திருக்கின்றோம். (ப்ளாக்கர் எப்.எம் பதிவினை படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க