Sunday, August 5, 2012

முஸ்லிம்களை பூண்டோடு அழிக்க தயாராகும் இலங்கை அரசு!

முஸ்லீம் ஈழம் கோரி போரடத் தயாராகும் ஈழ முஸ்லிம்கள்! 

அனைத்து வலைப் பதிவுச் சொந்தங்களுக்கும் நாற்று குழுமத்தின் இதயம் கனிந்த இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!
வாங்க மக்கள்ஸ்...சிங்கள இனவாதிகளுடன் முஸ்லிம் மக்கள் ரொம்ப நாளா ஒண்ணா வாழ்றாங்களாம்! அது போல தமிழ் மக்களும் வாழப் பழகிக்கனும். ஈழ மக்கள் சிங்களவர்களை எதிரிங்க போல பார்ப்பதை நிறுத்திட்டு, ஓடும் புளியம் பழமும் போல ஒண்ணா இணைஞ்சிருக்கிற முஸ்லிம் மக்களைப் போல வாழக் கத்துக்கனும்! இப்படிச் சொன்னவர் வேறு யாரும் இல்லைங்க! நம்ம பதிவுலக தீர்க்கதரிசி - சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறப் போகிற அண்ணன் சுவனப்பிரியன் தானுங்க! அவர் போன வருசம் அக்டோபர் மாசத்துல சொன்னாரு! இப்போ தானுங்க அந்த வார்த்தையை நம்ம சிங்கள இனவாதிங்க நெசமாக்கியிருக்காங்க.
அன்பிற்கினிய தமிழ் உறவுகளே, ஏதோ தமிழ் மக்கள் சாப்பிட்டு விட்டு சும்மா சிவனேன்னு இருக்க முடியாம, களத்தில இறங்கி போராடினாங்க, பிரபாகரன் போராட்டை வளர்த்தாருன்னு தான் இன்று வரைக்கும் அதிகளவான முஸ்லிம் சகோதர்கள் கற்பனை கதை எழுதிட்டு இருக்காங்க. கண்ட மேனிக்கும் பேசிட்டு இருக்காங்க. ஆனால் உண்மை என்னான்னு அவங்க உள் மனசிற்கு தெரியும். ஆனாலும் புலிகள் நல்லவங்க என்றோ, தமிழர்களின் போராட்டம் சரி என்றோ வாய் திறந்து சொல்ல மாட்டாங்க. எல்லாத் தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்று சொல்லுவாங்க அல்லவா. அது போல இப்ப அவங்க வாயாலே அரசாங்கத்தினை “முஸ்லிம் ஈழப் போராட்டத்திற்கு அரசே வித்திடாதே!” அப்படீன்னு எச்சரிக்க வைச்சிட்டாங்க நம்ம சிங்கள இனவாதிங்க!

உலகில் வாழும் அனைத்துலகத் தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும். நாம சிங்கள மக்களுடன் ஒண்ணா வாழ முடியாது. கூட இருந்தே தமிழனின் முதுகில் குத்தும் ஜென்மங்கள் சிங்களவர்கள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியுமுங்க.
"இன்றே விடுதலை இன்றே விடுதலை என்றே முரசு முழங்கு
அன்றே சொன்னார் தலைவர் தமிழீழம் 
ஒன்றே நமது இலக்கு!!” இது கவிஞர் காசி ஆனந்தனின் பாடலில் வரும் ஆரம்ப வரிகள்! இந்த வரிகள் கூட மக்கள் அனைவரும் இனவாதிகளுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதைத் தான் ஆணித்தரமாகச் சொல்லி நிற்கின்றது.

சிங்களவர்களின் பூர்வீக குணம். முழு இலங்கையினையும் தாமே ஆழ வேண்டும் என்பதாகும். அவர்கள் பார்வையில் தமிழர்களும், முஸ்லிம்களும் வேண்டப்படாதவர்களே என்பதற்குப் பல கடந்த காலக் கசப்பான சம்பவங்கள் உதாரணங்களாக விளங்குகின்றன. ஏலவே தமிழர்கள் விடுதலை கோரிப் போராடும் போது, குட்டையை குழப்பினால் தமக்கு இலாபம் என்பதை உணர்ந்து சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் முறுகல் நிலையினை ஏற்படுத்தினார்கள். இப்போது தம்மால் இயன்றவரை துரோகிகளின் உதவியோடு தமிழர்களுக்கு போதுமானவரை அடித்து விட்டோம் என்று திருப்தி கொண்டவர்களாய் இஸ்லாமியச் சொந்தங்கள் மீது தம் இனவாத நெருப்பினைப் பற்ற வைத்திருக்கிறார்கள்.

இஸ்லாமியப் பள்ளிவாசல் அமைப்புக்கள், மற்றும் இஸ்லாமியப் பாராளுமன்றத்தினர் கூட இஸ்லாமியப் பள்ளிவாசல்களை மையப்படுத்தி பௌத்த மதவாதிகள் தாக்குதல் நடாத்தி, எச்சரிக்கை விடுத்து முஸ்லிம்களை மிரட்டும் வேளையில் “முஸ்லிம் ஈழம் உருவாகுவதை தடுக்க முடியாது” என எச்சரிக்குமளவிற்கு சிங்களவர்களின் அடாவடித்தனங்கள் அதிகமாகி விட்டது.  இன்று இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் பள்ளிவாசல்களில் இடம் பெறும் தொழுகையினை நிறுத்துவதும், பள்ளிவாசலை விட்டு முஸ்லிம் மௌலவிகளை விரட்டியடித்து தொழுகையில் ஈடுபடாது தடுப்பதிலும் இனவாதிகள் இன்பங் காண்கிறார்கள். 

நாளை இலங்கையில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்பதற்காக இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ இனவாதிகள்? இலங்கையில் போர் இடம் பெறனும்! இரத்த ஆறு ஓடனும்! சிறுபான்மை இன மக்களின் உயிர்கள் அழியனும் என்பது தான் பௌத்த பேரினவாதிகளின் இலட்சியம்! அவர்கள் பார்வையில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்று தான்! ஆனால் இது நமக்கு எங்கே புரியப் போகின்றது! வாருங்கள் மக்களே! ரொம்ப நல்லவங்க என்று நம்பி ஏமாறுவோம்! 
***********************************************************************************************************
இப்பொழுதே உங்கள் புரட்சி இணைய வானொலியுடன் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களையும் கேட்டு மகிழுங்கள். நண்பர்கள் தின நல் வாழ்த்துக்களையும் உங்கள் நட்புக்களுக்குச் சொல்லி மகிழுங்கள் அன்பு உறவுகளே!
அது மட்டுமன்றி,  இப்பொழுது இடம் பெறும் கதை பேசலாம் வாங்க நிகழ்ச்சியிலும் உங்கள் விருப்ப பாடல்களை நீங்கள் கேட்டு மகிழலாம் உறவுகளே! 
நீங்கள் உங்கள் புரட்சி இணைய வானொலியோடு 
பேஸ்புக் ஊடாக இணைந்து கொள்ள : https://www.facebook.com/groups/puradsifm/
மின்னஞ்சல் ஊடாக இணைந்து கொள்ள: puradsifm@gmail.com
தொலைபேசியூடாக இணைந்து பேச , பாடல் கேட்க: 0044 1622370644

இப் பதிவின் பின்னூட்டம் ஊடாகவும் நீங்கள் இணைந்து கொண்டு உங்கள் விருப்ப பாடல்களை கேட்டு மகிழலாம்.

புரட்சி எப்.எம் இணைய வானொலியின் இணையப் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக்கவும். 

தொடர்ந்தும் புரட்சியோடு இணைந்து கொள்ளுங்கள். உங்கள் புரட்சி வானொலியை உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

22 Comments:

Unknown said...
Best Blogger Tips

தமிழர்களையும், முஸ்லிம்களையும் வைத்து இருக்கின்ற அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு உழைக்கனுமோ அந்த அளவை விட மேலதிகமாகவே உழைத்துவிட்டனர்.இனிமேல் ஒவ்வொரு நிகழ்வின் பின்னரும் கோபமாக அறிக்கை விட்டு அமைதியாக இருப்பார்கள்.நாம் வாயை பிளந்து பர்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

நிரூபன் said...
Best Blogger Tips

நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க நண்பா.
நாமாக உணராதவரை...எம் நிலமை பரிதாபம் தான்!
நன்றி நட்பே!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

இதுக்குள்ள கிழக்கு மாகாண சபை தேர்தல் வேறு.அதில அதுலயும் ஒவ்வொருத்தருக்குள்ள போட்டி அதிகாரம் இல்லாத மாகாண ஆட்சியை வைத்து முஸ்லிம் காங்கிறேசோ ,தமிழ்க் கூட்டமைப்போ என்னத்தை கிழிக்க போகிறார்கள்.எல்லாம் அரசியல் நலம் மட்டும்தான் நோக்கம்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மச்சி சிலதை சொல்லிப் புரிய வைக்கேலாது தாங்களாக படும் போது தெரியும்...

சார்வாகன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நலமா,

நல்ல பதிவு. ஈழ நிலவரம் ஊடகங்களில் வடிகட்டி வெளியிடப் படுவது உண்மைகளை மறைக்கிறது.சிங்கள ஆளும் வர்க்கம் புத்த பிக்குகளினால் கட்டுப்படுத்தப்படும் போது எப்படி தீர்வு வரும்?


தமிழனுக்கு சாதி மதம் என்று பிரிந்து கிடப்பதே வரலாறு. தமிழனை "இந்துக்கள் ,கிறித்த்வன்,முஸ்லிம்கள்" என் பிரித்து ஒருவரை ஒருவர் மோத விட்டு சிங்களவன் நிம்மதியாக நில ஆக்க்கிரமிப்பு செய்து கொண்டே போகிறான்.

குறைந்த பட்சம் தழர்கள் சாதி மதம் மறந்து அழுத்தம் கொடுத்தால் பிரச்சினைக்கு தீர்வு வரும் வாய்ப்பு உண்டு. ஒன்றுபட்டு வாக்கெடுப்பு மட்டும் ஐ நா கண்காணிப்பில் நடத்தினால் தீர்வு வந்துவிடும்.

ஆனால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

‌ன்றி

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ.நிரூபன் நலமா?

இருக்கும் காலத்தில் ஒரு கவிஞனை கௌரவிக்கத் தெரியாமல் இல்லாத காலத்தில் மட்டும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுவது தமிழனின் இயல்பு.இது பாரதி முதல் கண்ணதாசன் தொட்டு இன்று காசி ஆனந்தன் வரை இன்னும் தொடரும்.

ஒரு புறம் நக்குசக்கு நக்குசக்குன்னு குத்தாட்ட பாடல்கள் கலைஞர் தொலைக்காட்சியிலும் இன்னொரு பக்கம் டெசோ மைனஸ் தமிழீழக் அறிக்கையும் நன்றாகவே இருக்கிறது.

கூடவே இந்திய,உலக அரசியல் நடப்புக்கள் இரட்டை நிலைப்பாடாக இலங்கை அரசுக்கு சாதகமாகவே உள்ளது.

தமிழனின் போராட்ட வலிமை எது வரை?

Anonymous said...
Best Blogger Tips

நல்ல விடயம் தானே சகோ.

இலங்கை சிங்களவன் நாடு ! சிங்களவருக்கு புத்தர் ( நீங்க நினைக்கிற புத்தர் இவர் இல்லை ) மூன்று முறை இலங்கைக்கு நேரில் பறந்து வந்து அரக்கர்களை அழித்து அந்த நாட்டை பரிசளித்தார்.

தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், பறங்கியர், மலாயர், காப்பிரிகள், தெலுங்கு பாம்பாட்டிகள் என அனைவரும் சிங்களம் மொழிக்கும், பௌத்தத்துக்கும் மாறும் வரை அந்நியர்களே.. !!!

தனிநாடு உரிமை என்றெல்லாம் கேட்கக் கூடாது .. புத்தரை தெய்வமாக ஏற்றால் உங்களுக்கு அமைச்சர் பதவி முதல் அனைத்தும் கிடைக்கும். ... !!!

இதையெல்லாம் கேட்டு இருந்தால் இருங்கள் இல்லை என்றால் உங்கள் நாட்டுக்கு போய்விடுங்கள் ( ..... )

இலங்கைத் தான் சொந்த நாடா ... அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. சிங்களவர் அல்லாதோர் அனைவருக்கும் சொந்த நாடு என்று ஒன்று இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பா, ஆப்பிரிக்கானு . அங்கே போய் விட வேண்டும் .. அவ்ளோ தான் ... !!

சௌதிக்கு போவோமா ... முடிந்தால் போய் பாருங்கள் தெரியும் ... !!!!

ஜெய ஜெய ஸ்ரீலங்கா !!! ஜெய ஜெய ஜெயலலிதா.. ( ச்சா... ) ஜெய ஜெய மகிந்தா ... !!!

Unknown said...
Best Blogger Tips

தமிழர்களை துண்டாடுவதில் சிங்களவர்கள் எப்போதோ வென்று விட்டார்கள் சகோ.! தமிழர்கள் , முஸ்லிம்கள் எனவும் தமிழர்களிலேயே வடகிழக்கு தமிழர், மலையகத் தமிழர் எனவும்.... இதில் ஒற்றுமையாய் இருக்க எதை மிச்சம் வைத்திருக்கிறார்கள். முஸ்லிம் நாடுகளை ஐ.நாவில் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போது கை கழுவி விட்டார்கள். 1948 இல் இந்தியத் தமிழரை கை கழுவியது போல. எப்போதும் பலி கடாக்கள் சிறுபான்மையினர்தான்.
நேரம் இருந்தால் வாருங்கள்.
varikudhirai.blogspot.com

கோவி.கண்ணன் said...
Best Blogger Tips

இலங்கைவாழ் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் வளைகுடா சினந்து எழும், இலங்கையை அடக்கும், என்று சுவனப்பிரியன் எழுதி இருக்கிறார்.

பாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும் மற்றும் லிபியாவிலும் வாழ்ந்த இஸ்லாமியர்களுக்கு அரேபிய நாடுகள் காட்டாத இரக்கத்தை இலங்கைவாழ் இஸ்லாமியர்களுக்குத்தான் காட்டப் போறாங்களோ என்னவோ.

suvanappiriyan said...
Best Blogger Tips

என்ன நிரூபன் சௌக்கியமா! உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் வழியை இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். அதன்படி செயல்பட்டு பரிசை வெல்ல முயற்ச்சிக்கவும்.

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_5.html

இக்பால் செல்வன்!

//தனிநாடு உரிமை என்றெல்லாம் கேட்கக் கூடாது .. புத்தரை தெய்வமாக ஏற்றால் உங்களுக்கு அமைச்சர் பதவி முதல் அனைத்தும் கிடைக்கும். ... !!!//

ஹி..ஹி...ரிஷாத் பத்ருதீன் புத்த மதத்துக்கு எப்போங்க மாறுனாரு...சரியான காமெடி போங்க...

Anonymous said...
Best Blogger Tips

http://www.kodangi.com/2012/08/truth-behind-the-dambulla-mosque-problems-in-srilanka.html

இந்தப் பதிவிற்கு தொடர்புடைய பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன்.. பார்க்கவும் ... !!!

Anonymous said...
Best Blogger Tips

ஹி..ஹி...ரிஷாத் பத்ருதீன் புத்த மதத்துக்கு எப்போங்க மாறுனாரு...சரியான காமெடி போங்க..

பள்ளிவாசலை காலி செய்ய சொன்னதக்கு ரிசாத் பத்ருதீன் என்ன செய்து கொண்டிருக்கின்றார் ... !!! கொஞ்சம் கேட்டு சொன்னால் நல்லாருக்கும் ... !!!

நிரூபன் said...
Best Blogger Tips

@Ahamed Jatheer

இதுக்குள்ள கிழக்கு மாகாண சபை தேர்தல் வேறு.அதில அதுலயும் ஒவ்வொருத்தருக்குள்ள போட்டி அதிகாரம் இல்லாத மாகாண ஆட்சியை வைத்து முஸ்லிம் காங்கிறேசோ ,தமிழ்க் கூட்டமைப்போ என்னத்தை கிழிக்க போகிறார்கள்.எல்லாம் அரசியல் நலம் மட்டும்தான் நோக்கம்.
//

அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று மந்திரிங்க பேசிக்குவாங்க. ஆனால் மக்களோட நிலமை?
மக்களைப் பற்றி இவ் உலகில் யார் புரிந்து கொள்கிறார்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

உண்மை தான் மச்சி!

நிரூபன் said...
Best Blogger Tips

@சார்வாகன்
நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.

தமிழர்கள்
தமிழ் - முஸ்லிம் என்ற பேதங்களை களைந்து ஓரணியில் திரள வேண்டும் நண்பா.
அப்போது தான் நன்மை கிடைக்கும், நல்ல தீர்வும் பிறக்கும்!

தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சகோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

வணக்கம் சகோ,
நலமா?

தமிழர்களைப் பொறுத்தவரை வன்னியில் தலைவர் காலத்தில்
கவிஞர் காசி ஆனந்தனுக்கு விழா எடுத்திருக்கிறார்கள்.
அவரின் படைப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் அவரால் இலங்கை வர முடியவில்லையே எனபது அவரது கவிதை ரசிகர்கள் பலருக்கு மிகப் பெரிய இடியாக இருந்தது.

தமிழரின் போராட்ட வலிமை என்பது உங்கள் கேள்வியின் இறுதியிலே தெரிகின்றது.

தமிழரின் போராட்ட வலிமை என்பது இப்போது கேள்விக் குறி தான் சகோ!!

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
வணக்கம் சகோ,
நான் நலமே, நீங்க நலமா?
நல்ல கருத்துக்களை கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறீங்க.

உண்மையில் பேரினவாதிகள் வரலாற்றினை மட்டுமா மாற்றுகிறார்கள்!

இனித் தமிழர்களின் பூர்வீகச் சின்னங்கள், வரலாற்று ஆதாரங்களையும் மாத்திடுவாங்க என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Arunprasath Varikudirai

சூப்பர் கருத்து சொல்லியிருக்கிறீங்க நண்பா.
இனியாவது தமிழர்கள்
தமிழ் - முஸ்லிம் எனும் பேதமற்று ஓரணியில் இருந்தால் பிணக்குகள் எதுவும் வராது,
அரசாலும் எதுவும் செய்ய இயலாது! ஆனால் தமிழர்கள் தானே ஒற்றுமையின் வலிமை பற்றி அறியாதவர்களாக உள்ளார்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@கோவி.கண்ணன்
வாங்க சகோ,
சிரியா, ஈராக், எனத் தொடர்ந்து அழிவுகள் நிகழும் போது சீறியெழாதவர்கள்
இலங்கையில் வாழும் மக்களுக்காக சீறி எழுவார்கள்! விடுங்க! சும்மா சொல்லி தம் உள் மனதை அவர் சந்தோசத்தில் வைத்திட்டு போகட்டும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப் பிரியன்
வணக்கம் சுவனப்பிரியன்,
வாங்க,
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது,..அர்த்தம் உள்ளது..

எனும் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் தான் எனக்கு நினைவிற்கு வருது நண்பா.

நான் உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
வணக்கம் சகோ,
கண்டிப்பா பார்க்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
வணக்கம் சகோ,
கண்டிப்பா பார்க்கிறேன்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails