Thursday, May 24, 2012

சாதாரணமானவனின் மனது கொண்ட அசாதாரணமான பதிவர்!

விபரம் அறிய, விரைந்து வாருங்கள்..
இணையத்தினூடே, உங்கள் இதயங்களைத் தம் பதிவுகளூடாக கொள்ளை கொள்ளும் வலைப் பதிவு எழுத்தாளர்களுக்கு அவர் தம் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்கள் இலகுவில் கிடைத்து விடுவதில்லை. இன்றைய இயந்திர மயமான சூழலில் இலக்கணத் தமிழிற்கு விடுதலை கொடுத்து அனைத்துப் பதிவர்களும் இயல்புத் தமிழினூடாக, பேச்சுத் தமிழில், தத்தம் வசதிக்கு ஏற்றாற் போல இலகுவான மொழி நடையில் இணையத்தில் எழுதி வருகின்றார்கள். எம் போன்ற பதிவர்களுக்குரிய விமர்சனங்கள் கிடைக்காதா எனும் ஏக்கத்தில் பல பதிவர்கள் ஏங்கி நிற்க, அந்த குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் நோக்கில் பதிவர் அம்பலத்தார் அவர்கள் பதிவர் விமர்சனம் என்றோர் பகுதியினை நாற்று வலைப் பதிவினூடாக தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றார். அம்பலத்தாரின் அரிய முயற்சிக்கு அனைவரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, இன்றைய பதிவர் விமர்சனம் பகுதியினுள் நுழைவோமா?
வணக்கம் நண்பர்களே, வாசகர்களே நீண்ட நாட்களின் பின் மற்றும் ஓர் பதிவர் அறிமுகத்தில் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி! அப்படியென்றால் அங்கை இங்கை ஓடுறதை விட்டிட்டு பொறுமையாக தொடர்ந்து படியுங்கோ. விசர்க்கதைகள் நிறைய இருக்கிற இடத்துக்கு உங்களையும் கூட்டிக்கொண்டு போகிறேன்.

எனக்குப் பொழுது போகாத நேரங்களில் வலையுலகெனும் கடலில் மூழ்குவிடுவன். பல தடவைகளும் சேற்றில் விழுந்த அசதியும் அலுப்பும்தான் கிட்டும்/ அருமையாக சில சமயங்களில் தான் நல்ல முத்துக்கள் கிடைக்கும்.  இப்படிக் கண்டு கொண்ட ஒரு வலைப் பக்கம் தான் "சஞ்ஜயனது சாதாரணமானவனின் மனது", அதில் அவர் விசர்க்கதைகள் என்று சொல்லிப் பல விடயங்களையும் சுவாரசியமாகப் பதிவிட்டிருக்கிறார். சுவாரசியமான படிக்கத் தூண்டும் நல்ல பதிவுகளக எழுதியிருக்கும் சஞ்ஜயன் அநியாயத்திற்கு எதற்கு விசர்க்கதைகள் என்று தலைப்பிட்டாரோ; தெரியவில்லை. நல்லதொரு தலைப்பாகக் கொடுத்திருக்கலாம். 

பொதுவாகவே ஆண்களுக்கு அதுவும் குடும்பஸ்த்தர்களுக்கு மறதி ஜாஸ்த்தி. இந்தக் குடும்பத் தலைவன் என்று சொல்லிக்கொள்கிறவங்க சின்ன விசயம் முதல் முக்கிய விசயம்வரை பலதையும் அடிக்கடி மறந்துவிட்டு வீட்டில் செய்யும் அட்டகாசங்கள் இருக்கே; அதைத்தனியே ஒரு மெகா தொடராகவே எழுதலாம். பல வீடுகளிலும் இதை அவதானிக்கலாம். இந்தவிசயத்தில நானும் கில்லாடி ஐந்து சதம் பெறுமதியில்லாத விசயங்களைக் கூட மறந்திட்டு வீட்டையே உண்டு இல்லை என்று ஒருவழிப் பண்ணி விடுவேன். இந்த மறதிபற்றி "கதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்" http://visaran.blogspot.de/2011/11/blog-post_05.html என்று ஒரு பதிவு படித்தேன். அப்படியே என்ரை விட்டீல உங்கட வீட்டில நடக்கிறது போல இருந்தது. சுவாரசியமாக எழுதியிருந்தார்.

ஒரு வயோதிபத்தாயிற்கும் மகனுக்கும்மிடையே இடம்பெறும் உரையாடலாக அமைந்திருக்கும் "அப்பாவின் அழகிய ராட்சசி" http://visaran.blogspot.de/2011/11/blog-post_13.html எனும் மற்றொரு பதிவும் என்னைக் கவர்ந்தது. சாதாரண ஒரு உரையாடலூடாக தாயின் மனநிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். அநேகமாக ஒவ்வொருவீட்டிலும் இதுபோன்ற " அப்பாவின் அழகிய ராட்சசிகள்" வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

"முன்னாள் போராளியின் இந் நாள் போராட்டம்" http://visaran.blogspot.de/2011/10/blog-post_14.html  எமது முன்னாள் விடுதலைப்போராளி ஒருவரது மிகவும் பரிதாபகரமான இன்றைய நிலையை இவரது இந்தப் பதிவில் படித்த போது மனது மிகவும் கனத்துப் போனது. போராட்டத்தை மிகவும் உன்னத இடத்தில் வைக்கும் எம்மில் பெரும்பாலானவர்களும் முன்னாள் போராளிகளின் இன்றைய துன்பநிலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது புரியாத புதிராகவே இருக்கிறது. 
வெறுமனே ஒரு ஜடப்பொருளான சைக்கிள்தான், அதன்பின்னால் எத்தனை கதைகள். அப்பா மகன் உறவின் பாலமாக, ஒரு இளவயதுப் பையனுடன், இளைஞனுடன் அவனது வாழ்வின் பெரும் பொழுதுகளுடன் ஒரு சைக்கிளும் எப்படியெல்லாம் சேர்ந்தே பயணித்திருக்கிறது என்பதை "அப்பாவின் சைக்கிள்" http://visaran.blogspot.de/2012/04/blog-post.html எனும் பதிவு உணர்வுபூர்வமாக எடுத்துக்கூறுகிறது.

"துபாயில் நடிகர் வடிவேலுவும் ஒரு விசரனும்" http://visaran.blogspot.de/2011/02/blog-post_16.html டுபாயில் ஒருநாள் சுற்றிய இனிய அனுபவத்தை இந்தப்பதிவு பகிர்கிறது. இதனூடாக எதையும் பணத்தை முன்னிலைப்படுத்தியே எடைபோடும்; மேற்குலகில் வாழும் எமது மனநிலையையும், பிரதியுபகாரம் பாராது உதவும் பண்பை குறைந்த வருவாயுடனே வாழும் ஒரு ஒரு வாகனச்சாரதியின் மூலமும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதை, கவிதை, பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடிவருபவர்களிற்கு சற்றே ஏமாற்றம் அளிக்கும்விதத்தில் படித்த வரையில் பதிவுகள் யாவும் அவரது அனுபவங்களை, பார்த்த, கேட்ட விடயங்களை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. ஆயினும் பதிவுகளின்மூலம் கூற எத்தனிக்கும் உளவியல் பின்னணி மற்றைய பதிவர்களில் இருந்து அவரை வேறுபடுத்தி காட்டுகிறது. அத்துடன் தனது எழுத்தின் ஆளுமையால் வாசகர்களைப் படைப்புக்களின்பக்கம் ஈர்க்கும் வண்ணம் சுவாரசியமாக எழுதுகிறார்.

வலைப்பூவின் பெயரிற்கேற்ப அதன் வடிவமைப்பும் சாதாரணமானதாக எளிமையானதாகக் காணப்படுகிறது. பெரும்பாலான பதிவர்களைப்போல இவரும் தனது எழுத்தில் செலுத்தும் சிரத்தையைப் போன்று அதை அனேகரிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற விடயத்தில் கவனம் செலுத்தவில்லை என்பது புரிகிறது. எந்த ஒரு திரட்டிகளிலும் இணைக்கப்படாமலும் முகப்புத்தகம், டிவிற்றர் போன்றவற்றிற்கான தொடுப்புக்கள் கொடுக்கப்படாமலும் அனாதரவாக விடப்பட்ட அழகான குழந்தைபோல தேடுவாரற்றுக்கிடக்கிறது சாதாரணமானவனின் மனது. வாசகர்களின் வரவு மிகவும் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.  

சுவாரசியமானதொரு பக்கத்தை படிக்கவும்வேண்டும் அதே நேரத்தில் அதில் எதாவது ஒரு நல்ல செய்தியும் இருக்கவேண்டும் என்ற எண்ணதுடன் தேடுவோருக்கு சாதாரணமானவனின் மனது ஒரு நல் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!!

கடந்த காலங்களில் அயர்லாந்தில் சைக்கிள் பயணம், நோர்வேயில் தொடர் மலையேற்றம், அவுஸ்திதிரேலியாவில் பரசூட் முலம் 12000 அடி உயரத்தில் இருந்து குதித்தது போன்ற சாகசமான காரியங்களைச் செய்த சஞ்சயன் சென்றவாரம் 800 கிலோமீற்றர் தொடர் நடைப்பயணம் ஆரம்பித்திருக்கிறார். இதையும் வெற்றீகரமாகச் செய்துமுடிக்க அவரை வாழ்த்துவோம்.  

மீண்டும் நாற்று வலைப் பதிவினூடாக மற்றுமோர் பதிவர் விமர்சனம் பகுதியினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, நன்றியும், வணக்கமும் கூறி விடை விடை பெற்றுக் கொள்கின்றேன்.

நேசமுடன்,
பொ.அம்பலத்தார்.

28 Comments:

ஆத்மா said...
Best Blogger Tips

visaranin vimarsanam super but naan Ippa mobile le irukkuran pc vanthathum fulla padikeren

ஆத்மா said...
Best Blogger Tips

ovvoru linkum interest a na headings la irukki
Hmmm padippoom

Unknown said...
Best Blogger Tips

மிக்க நன்றி நிரூபன் நல்லதொரு தளத்தை சுட்டிக்காட்டியதற்க்கு :)

rajamelaiyur said...
Best Blogger Tips

ஒரு நல்ல பதிவரை அறிமுக படுத்தியமைக்கு நன்றி .. அவர் வலைக்கு சென்று பார்கின்ற்ன்

நிரூபன் said...
Best Blogger Tips

ஐயா வலைஞன்...ஒருவாட்டி ஒரு நாளைக்கு வெளம்பரம் போட்டால் போதாதா?
இன்னைக்கு 5 வாட்டி என் பதிவில விளம்பரம் போட்டிருக்கிறீங்க.
இனிமே அப்படி வேணாம்;-)))

K said...
Best Blogger Tips

வணக்கம் செல்லம்!:-)) ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போட்டா எதைப் படிக்கிறது! நல்ல காலம் இண்டைக்கு நான் லீவாக்கும்! அதால ரெண்டையும் படிச்சன்!

இந்தப் பதிவர் பற்றி நான் ஏலவே கேள்விப் பட்டுள்ளேன்! தமிழ்மண கட்டண சேவையில் பார்த்த ஞாபகம்! அவரை சிறப்பான முறையில் அரிமுகம் செய்திட்ட அம்பலத்தார் ஐயாவுக்கு மிகவும் நன்றி!

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

K said...
Best Blogger Tips

அச்சோ, அது அரிமுகம் இல்லை! அறிமுகம்! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

Unknown said...
Best Blogger Tips

தம்பியின் கோரிக்கை நிறைவேற்றிய அம்பலத்தார் அவர்களுக்கு நன்றி....!

நல்ல பதிவர் பல விசயங்களை அலசியிருப்பார் போல......முழுவதும் படிக்கிறேன்!

Anonymous said...
Best Blogger Tips

நல்ல பதிவரை அறிமுக படுத்தியமைக்கு நன்றி சகோதரம் + அம்பலத்தார்...

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நிரூ!காலையிலேயே போட வேண்டிய பின்னூட்டம் தாமதமாக.ஈழ சகோதரர்களின் பதிவுகளின் எழுத்தை இரு விதமாக பார்க்கிறேன்.மொத்த பதிவர்களின் எழுத்தும் தனி தனியாக பிரிந்து உட்கார்வதற்கு பதிலாக ஒரே இடத்தில் இருந்தால் கால அவகாசத்தில் தொடர் வாசிப்புக்கு உதவியாக இருக்கும்.

ஆனால் இதில் எழுதுபவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் அமையக்கூடிய சாத்தியங்களும் இருப்பதால் பரந்து கிடப்பதே நலம்.

விசரன் சிகரெட்டோ தீப்பெட்டியோ வாங்க போன அனுபவ பகிர்வை படித்ததாக நினைவு.கால அவகாசத்தில் தொடர்கிறேன்.அறிமுக நினைவுக்கு நன்றி.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

நல்ல அருமையான அறிமுகம். இப்பொழுது தான் அவரின் “கதவைத் திற காற்று வரட்டும்” பதிவை வாசித்தேன். நல்லாயிருந்தது. சீக்கிரமே மற்றவற்றையும் வாசித்து விடுவேன்.

விமர்சனமெழுதிய அம்பலத்தார் ஐயாவுக்கும் நன்றி.

Angel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் ,நலமா .
அறிமுகம் மிக அருமை .
அம்பலத்தார் ஐயாவுக்கும் உங்களுக்கும் நன்றி

ம.தி.சுதா said...
Best Blogger Tips

அறிமுகம் தந்த ஐயாவுக்கும் நிருபனுக்கும் நன்றிகள்... மிகுதிக்கு அங்கேயே செல்கிறேன்...

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல அறிமுகத்துக்கு நன்றி நிரூ

தனிமரம் said...
Best Blogger Tips

சஞ்சயன் அண்ணாவின் பதிவுகள் எப்போதும் நினைவுகளைச் சுற்றியும் சில ஜாலியான விடயங்களை மெல்லிய திருப்பத்தோடு பதிவு செய்வார் அவர் எப்போதும் என்னோடு நெருக்கமானவர் போல இருக்கும் இவரின் பதிவைப் படிக்கும் போது வாழ்த்துக்கள் அம்பலத்தார் அதை வெளியிட்ட நிரூபனுக்கும் வாழ்த்துக்கள்!

விச்சு said...
Best Blogger Tips

நிரூபன் நல்ல முயற்சி. நல்ல வலைப்பூவினை அறிமுகம் செய்து தரும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. விசரனின் சில பதிவுகள் படித்திருக்கிறேன். விடுபட்டதை மீண்டும் படிக்கிறேன்.

Muruganandan M.K. said...
Best Blogger Tips

நானும் அவரது ரசிகன். இங்கு பகிர்ந்தது நல்லது.

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

அருமையான பதிவர் அறிமுகம்...
வாழ்த்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

வணக்கம் இளைய தளபதி.. நலம்தானே? கோபமோ? சே..சே.. இருக்காது..எனக்குத்தான் கோபம்.. அதுவும் கெட்ட கோபம்:)))...

சரி அது போகட்டும்...

அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

சகோ நிரூபனுக்கும், ஐயா அம்பலத்தார் அவர்களுக்கும்
என் இனிய வணக்கங்கள்,

அருமையானதொரு அறிமுகம் இங்கே கண்டேன்.
சென்று பார்த்து எழுத்து நடையும் சீரிய சிந்தனையும்
இயல்புத் தமிழும் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன்..
தொடர்ந்து செல்கிறேன்..

சசிகலா said...
Best Blogger Tips

அருமையான பதிவர் அறிமுகம்...
வாழ்த்துக்கள்.

Athisaya said...
Best Blogger Tips

உங்கள் பணி தொடர வாழ்த்துகளும் நன்றிகளும்....!பார்த்துட்டு வரேன்.....!

Athisaya said...
Best Blogger Tips

உங்கள் பணி தொடர வாழ்த்துகளும் நன்றிகளும்....!பார்த்துட்டு வரேன்.....!

Athisaya said...
Best Blogger Tips

உங்கள் பணி தொடர வாழ்த்துகளும் நன்றிகளும்....!பார்த்துட்டு வரேன்.....!

சிவகுமாரன் said...
Best Blogger Tips

அறிமுகத்திற்கு நன்றி நிருபன்

J.P Josephine Baba said...
Best Blogger Tips

என் ஈழவலைப்பதிவுகளுக்கு என ஆராய்ச்சியில் இருந்த போது அறிமுகம் ஆன சஞ்சயன் அண்ணாவின் வலைப்பதிவு தொடர் வாசகி என்பதில் பெருமிதம் கொள்கின்றேன். அவருடைய எழுத்து என் வலைப்பதிவு வருகைக்கு ஊக்கம் ஆக்கம் கொடுத்துள்ளது. அறிய அறிமுகம் நல்கிய நாற்று மற்றும் பொன்னம்பலத்தார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

Unknown said...
Best Blogger Tips

நிரூபன்!
நலமா!
அம்பலத்தாருக்கும் தங்களுக்கும்
மிக்க நன்றி! இது நல்ல பணி!
தொடர்க!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...
Best Blogger Tips

நிரூபன்!
நலமா!
அம்பலத்தாருக்கும் தங்களுக்கும்
மிக்க நன்றி! இது நல்ல பணி!
தொடர்க!

புலவர் சா இராமாநுசம்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails