Monday, April 2, 2012

கலைஞரின் கோவணம் கோபாலபுரத்து காற்றினில் பறந்ததோ?

காற்றினில் பறந்தன தேர்தல் வாக்குறுதிகள்
கண்ணீரால் நனைந்தன ஏழைகள் கண்கள்
சேற்றினில் கால் வைத்த குடும்பங்கள் வீட்டில்
செல்லா காசாய் இப்போ இலவச டீவீக்கள்!
முத்தமிழறிஞர்! முது பெரும் முதல்வர் - ஆட்சி
பித்தது பிடித்து தினமும் பிதற்றிடலானார்
செத்திடும் வேளையில் பொதுச் சொத்துமேல் ஆசை
நித்தமும் கொண்டவராய் நிதம் வருகின்றார்!

மக்களின் சொத்தினை மர்மமாய் கொள்ளையிட்டார்
மாளிகை கட்டி தன் மக்களை வளர்த்திட்டார்
அக்கிரமங்கள் எங்கனும் நடந்தால் - இரங்கி
அறிக்கையும் விட்டு அனுதாபத்தால் ஏமாற்றிடுவார்!!

மணிமேல் ஆசை கொண்டார் 
மகளை ராசாவுடன் கூட்டாக்கி
கனிவாய் ஊழலிட்டார் - கனியின்
இனிய வாழ்வையும் இடருள் அழுந்த வைத்தார்

கோபாலபுரத்தில் கோமகனாய் கொலுவீற்றிருப்பார்
ஆவேச அறிக்கை விட்டு இன்றோ சினிமாவில்
வடிவேல் இல்லாத குறையினையும் அய்யா போக்கிடுவார்
தாவாத தன் உணர்வு இன்னமும் குறையலையே என
மானாட மயிலாட பார்த்து மகிழ்ச்சியில் மூழ்கிடுவார் - இன்னும்
போகாத தன்னுயிரை பெருந்தீயில் மாய்ப்பேன் என 
பொய்யெல்லாம் உரைத்து பேசாமல் சிரிக்க வைப்பார்! 

கலைஞரின் கோவணம் கோபாலபுரத்து
காற்றினில் பறந்ததோ - மக்கள் கண்ணீரின்
வலிமையால் உந்தன் கட்சி வாழ்வும் 
தோல்வியில் துவண்டதோ? - எளிமையின் சிகரமாம்
அண்ணாவை முன் வைத்து நீ நடத்தும்
ஏமாற்று வித்தையும் இன்று சிதைந்ததோ - பேரீச்சம் பழத்திற்கும்
விலை போகா இரும்புத் துண்டாய் 
உன் அரசியல் வாழ்வும்
அடியோடு நிலை குலைந்ததோ? 

வஞ்சியர் நடனம் பார்க்கையில் வதையோனே 
மஞ்சள் துண்டதும் தொலைந்ததோ - மனையாளை
கொஞ்சையில் உந்தன் வெள்ளை துண்டும் 
வேறிடம் தேடி நகர்ந்ததோ - சிந்தனை எல்லாம்
அஞ்சிடா அரசியல் நடாத்துவதில் என சொன்ன பெரியோனே
கஞ்சனாய் உனை ஆக்கிட்டாரோ - நீயும் காவி உடுத்த
துறவியாய் மாறிட ஆசை கொண்டாயோ?

கோவணம் எனப்படுவது ஆபாசச் சொல் அல்ல. தமிழர்களின் பாரம்பரிய உடையினைக் குறிப்பிடும் சொல் ஆகும். 

இப் பதிவிற்குரிய படமானது பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்டது!

9 Comments:

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

படமே ஒரு கவிதை...
கவிதை மற்றொரு படம்.

கவி அழகன் said...
Best Blogger Tips

He he he karunanithiyin kevalamana kovanam

K said...
Best Blogger Tips

இணையத்தில் சம்பாதிக்கலாம் வாரீர்!

01. நல்ல நட்புக்களை
02. பெண் தோழிகளை
03. காதலிகளை,
04. எதிரிகளை

இப்படி பலரையும் சம்பாதிக்கலாம்!

( மச்சி, இனிமேல் கலைஞர் பற்றி பதிவு போட்டால், இப்படித்தான் கமெண்டு போடுவேன்! ஒழுங்கு மரியாதையா மொக்கை பதிவு போடு! )

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!கவிதை அருமை!!!இன்னுமின்னும் கோபாலபுரத்துப் பொட்டுக்கேடுகளை வெளிக்கொணர உங்களால் மட்டுமே முடியும்!வாழ்க!!!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
படமே ஒரு கவிதை...
கவிதை மற்றொரு படம்.//

ஹே...ஹே...
இப்பவும் சிரிச்சிட்டிருப்பீங்களே! அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@yathan Raj

He he he karunanithiyin kevalamana kovanam
//

என்னப்பா...இன்னமும் மணக்குதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Ideamani - The Master of All
என்னது...ஓசியில வெளம்பரம் போடுறியா?

நீ போடு ராஸ்கல்! அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
நன்றி ஐயா..

மேல ஒருத்தல் இப்படி எழுத வேணாம் என்று சொல்றார்..

ஆனா நீங்க சொல்லுறீங்க.

எழுதிட்டாப் போச்சு! அவ்வ்வ்வ்வ்வ்

ஹேமா said...
Best Blogger Tips

எப்பிடியிருந்த மனுசனை இப்பிடி ஆக்கிட்டீங்கள் நிரூ.
பாவமாவும் கிடக்கு !

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails