Monday, January 9, 2012

ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?

வண்ணத் தமிழ் மொழியினூடாக எம் எண்ணங்களை வலையேற்றி, இணைய வலையினூடே உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கமுங்க;
இணையம் தந்த இணையற்ற வரப்பிரசாதத்தின் வெளிப்பாடாய் இன்று எம் கைகளில் கூகிள் அம்மம்மாவின் வலைப்பூவானது எம் எண்ணங்களை வலையேற்றியவுடன் உலகின் எட்டுத் திசையில் உள்ளோரும் படிக்கும் வண்ணம் எடுத்துச் செல்கிறது. நம்மாளுங்களில் அதிகமானோருக்கு ஓர் கவலை இருக்கும். நாமளும் பதிவெழுதுகிறோமே! அட இராப் பகலா கண்ணு முழிச்சு பதிவு எழுதினாலும், யாருமே படிக்கிறாங்க இல்லையே என்பது தான் அந்தக் கவலை. அந்தக் கவலை உள்ளவங்க எல்லோரும் இங்கிட்டு வாங்க. காதைக் கொஞ்சம் குடுங்க. கவனமா நோட் பண்ணிக்குங்க.
பதிவு எழுதுவதில் ஏதாச்சும் மாய மந்திரங்கள் இருக்கா? எப்படிப் பட்ட பதிவுகளை எழுதினால் பல வாசர்களைப் பெறலாம்? என்றெல்லாம் ஐயங்கள் பதிவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.அப்படித் தானேங்க? ஸோ; உங்க எல்லோருடைய மன உணர்வுகளையும்; சில வாசகர்கள் பின்னூட்டங்கள் வாயிலாக கேட்ட கேள்விகளையும் புரிந்து கொண்டவனாய், பதிவெழுதுவது தொடர்பான நுட்பங்கள் சிலவற்றைத் தொடர் பதிவினூடாக வழங்கவுள்ளேன். "இந்தப் பாவிப் பய என்னமோ ஹிட்ஸ் அப்படின்னு உளறுகிறானே! அப்படீன்னா என்ன?"என்று சிலர் யோசிக்கலாம்.நாம ஒவ்வோர் பதிவுகளையும் எம் ஆத்ம திருப்திக்காக எழுதினாலும், அந்தப் பதிவுகளை எத்தனை நாளைக்குத் தான் திருப்பித் திருப்பி நாமளே படிச்சுக் கிட்டிருக்க முடியும்? 

பாட்டும் நானே பாவமும் நானே என்று சிங் சக் போட்டுக் கிட்டிருக்க முடியுமா? இல்லே தனிக் கடையில் ஈ ஓட்டிக்கிட்டிருக்க முடியுமா? இல்லைத் தானேங்க.எப்படியாச்சும் நாம எழுதிய பதிவுகளைப் பிறர் படிக்கனும், விமர்சிக்கனும் என்றெல்லாம் ஏங்குவோம் அல்லவா? ஸோ...அந்த மாதிரி ஏக்கங்களை களைந்து; நம்ம வலைக்கு எத்தனை பேர் வந்திருக்காங்க என்பதனை அறிவதற்கான ஒரே வழி தானுங்க ஹிட்ஸ் பார்க்கிறது. ஸோ..இந்த ஹிட்ஸ் பார்க்கிறது பத்தி நாம இப்போ கவலைப் பட வேணாம். இன்னமும் கலியாணம் ஆகலை, அதுக்கு முன்னாடி குழந்தை எப்போ பொறக்கும் என்று கேட்கிறானுங்க என்று கோவிச்சுக்க வேணாமுங்க. நாம பூஜையை தொடங்கி ப்ளாக் எழுதுவது எப்படி என்று பார்ப்போமா? 

பாகம் 01: மனித மனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் விதமான ரசனை உணர்வுகள் இருக்கும். சிலருக்கு சினிமா பிடிக்கும். சிலருக்கு அரசியல் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும், இன்னும் சிலருக்கு கில்மா பிடிக்கும். பலருக்கு அனுபவப் பதிவுகளும், அந்தரங்க நினைவுகளும் பிடிக்கும். ஆனால் எல்லாப் பதிவர்களுக்கும் தொழில் நுட்பம் பிடிக்கும். "வலைப் பூக்கள் என்பது எம் கைகளில் தவழும் ஓர் ஊடகமாகும்." நீங்க தான் இந்த ஊடகத்தின் ஓனருங்க. நீங்க தான் இந்த ஊடகத்தை நடாத்துகின்ற ஆளுங்க. என்னங்க ஆச்சரியமா இருக்கா? நீங்க விரும்பினா காத்திரமான பதிவுகளைப் போட்டு அதிக வாசகர்களை உங்க வலைப் பக்கம் வர வைக்கலாம். விரும்பாவிட்டால் ஏதோ நாம எழுதுறோமுங்க. விரும்பினா வந்து படிச்சிட்டு போங்க என்ற பாணியில் நடந்துக்கலாம். அப்படி நடந்தா காலப் போக்கில நாம தான் ஈயோட்டிக்கிட்டிருக்க வேண்டியும் ஏற்படலாமுங்க. இல்லையா?

இப்போ நேரா மேட்டருக்கு வருமங்குங்க. இந்த ப்ளாக் எழுதுவதில் உள்ள ரொம்ப முக்கியமான சூட்சுமம் என்னவென்றால், ப்ளாக்கிற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையானது உங்கள் ப்ளாக் டிசைனிங் அல்லது ப்ளாக் வடிவமைப்பிலும், உங்கள் பதிவுகளின் உள்ளடக்கத்திலும் தானுங்க தங்கியுள்ளது. கணினியோடு தொடர்புடையோரும், அலுவலகங்களில் பணி புரிவோரும் தான் நம்ம ப்ளாக்குகளை அதிகமாக படிப்பதால் உங்க ப்ளாக் பெயரை இணையத்தில் அடித்ததும் லபக்கென்று ஓப்பின் ஆகிற மாதிரி உங்க ப்ளாக்கை நீங்க டிசைன் பண்ணி வைத்திருக்கனும்.ப்ளாக்கிற்கு டெம்பிளேட்டைத் தெரிவு செய்யும் போது எப்போதுமே கூகிள் ஆத்தா வழங்கும் இலகுவான டெம்பிளேட்டைத் தெரிவு செய்து, உங்களுக்கு விம்பிய மாதிரி நீங்களே டிசைன் பண்ணிக் கொள்ளலாமுங்க.
கூகிள் ஆத்தா கொடுக்கும் டெம்பிளேட்டை தெரிவு செய்வதற்கு பதிலாக மூன்றாம் நபர் டெம்பிளேட்களை இணையத்தளத்தில் தேடி எடுத்து, உங்க ப்ளாக்கில் இணைத்திருந்தா கண்டிப்பாக நீங்க எழுதும் ஓர் பதிவின் முக்கியத்துவம் மற்றும் பரபரப்புக் கருத்தி பல பேர் ஒரே நேரத்தில் Page Track பண்ணும் போது, உங்க ப்ளாக் ஓப்பின் ஆகுவதில் சிரமம் இருக்கலாம். மேலே உள்ள இரு படங்களில் காட்டப்பட்டுள்ள டெம்பிளேட்டுக்கள் கூகிள் வழங்கும் டெம்பிளேட்டிலிருந்து எடுக்கப்பட்டு டிசைனிங் பண்ணப்பட்டவையே ஆகும். முடிந்த வரை உங்க டெம்பிளேட் 40-60 செக்கனிற்குள் ஓப்பின் ஆக கூடிய மாதிரி வடிவமைத்துக் கொள்ளுங்க.  இனி அடுத்த பாகத்தில் இலகுவாக டெம்பிளேட் டிசைனிங் பண்ணுவது தொடர்பிலும், உங்கள் பதிவுகளின் உள்ளடக்கம் எப்படி இருக்கனும் என்றும் அலசுவோமா?

பிற் சேர்க்கை: நண்பர்களே, ஈழத் தமிழ் நடையில் என் பதிவுகள் வருவதால் பல வாசகர்களுக்குப் புரிதலில் சிரமம் இருக்கு என்று சொல்லுகின்றார்கள். இப்போது நானும் லோக்கல் தமிழில் எழுதியிருக்கேனுங்க. இப்ப சொல்லுங்க. என் பதிவு உங்களுக்கு இலகுவாக புரிகிறதா? இல்லையா?
******************************************************************************************************************************
முற்று முழுதாகத் தொழில்நுட்பப் பதிவுகளுக்கும்,தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கும் என்று பதிவர் மதுரன் அவர்கள் "Tamilsoft" எனும் இணையத் தளத்தினை உருவாக்கியிருக்கிறார். கவலைப் படாதீங்க. அங்கே ஓட்டுப் பட்டை எதுவுமே இருக்காதுங்க. ஸோ...உங்களுக்கு விரும்பிய தொழில்நுட்பத் தகவல்களைப் பெற விரும்பின் நீங்களும் Tamilsoft பக்கம் போய் வரலாம் அல்லவா?
*********************************************************************************************************************************
ப் பதிவிற்கு முன்னர் வெளியாகிய சுவாரஸ்யமான பதிவினைப் படிக்க:
ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்!
http://www.thamilnattu.com/2012/01/blog-post_09.html

69 Comments:

K said...
Best Blogger Tips

ஓ! இப்படித்தானா?

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கமுங்க, நிரூபன் சார்!ஒண்ணுமே புரியலிங்க.இது வந்து தமிழ் நாட்டுல ஒருபடம் எடுத்தாங்களே,"கன்னத்தில் முத்தமிட்டால்"அப்புடீன்னு?அந்தப் படத்துல வர்ற கண்றாவி(ஈழ)தமிழ் மாதிரியே இருக்குதுங்க!பாதி தான் நம்ம ஊரு தமிழு!மீதி??????கோச்சுக்காதீங்க சார்!!!!!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

சே... ஜஸ்ட்டு மிஸ்ஸ்டூஊஊஊஊஊஊ:))

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஓ! இப்படித்தானா?
//

என்ன இப்படித்தானா? எதையுமே முழுசா சொல்லமாட்டியா நீயி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

உண்மையைச் சொல்லோணும்.. கூகிள் ஆத்தாவா இல்ல அம்மம்மாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..

எங்க நிரூபனின் வண்ணப்படம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் விடமாட்டமில்ல:))

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கமுங்க, நிரூபன் சார்!ஒண்ணுமே புரியலிங்க.இது வந்து தமிழ் நாட்டுல ஒருபடம் எடுத்தாங்களே,"கன்னத்தில் முத்தமிட்டால்"அப்புடீன்னு?அந்தப் படத்துல வர்ற கண்றாவி(ஈழ)தமிழ் மாதிரியே இருக்குதுங்க!பாதி தான் நம்ம ஊரு தமிழு!மீதி??????கோச்சுக்காதீங்க சார்!!!!!
//

என்ன சார், நீங்க இப்புடிச் சொல்லிப்புட்டீங்க.
நான் பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி எழுதியிருக்கேனுங்க.
அடுத்த வாட்டி என்னோட தமிழிலையே எழுதுறேனுங்க.
மன்னிச்சுக் கொள்ளுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
சே... ஜஸ்ட்டு மிஸ்ஸ்டூஊஊஊஊஊஊ:))
//

அப்போ, நீங்க இன்னமும் படத்தைப் பார்க்கலையா? Limited Offer என்பதால் இன்னும் கொஞ்சத்தால எடுத்திடுவேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

உண்மையைச் சொல்லோணும்.. கூகிள் ஆத்தாவா இல்ல அம்மம்மாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..

எங்க நிரூபனின் வண்ணப்படம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் விடமாட்டமில்ல:))
//

ரெண்டும் தானுங்க..
ஹே...ஹே...

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//கோச்சுக்காதீங்க சார்!!!!!///

இது எந்தத்தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்.. ஹையோ கோபி/விச்சிடாதையுங்கோ....:))

K said...
Best Blogger Tips

மச்சி, நீ இப்படி எழுதியிருப்பது படிப்பதற்கு இலகுவாக இருக்கு! இந்த ஸ்டைலை மாத்தாதே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நிரூபன் நாங்க என்ன உங்கட “ஜோடிப்”படமா கேட்டோம்:) தனிப்படம்தானே... சொல்லிப்போட்டு காலைவாரப்புடா சொல்லிட்டேன் ஆமா:))

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

ரொம்ப பயனுள்ள பகிர்வு..

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

அப்போ, நீங்க இன்னமும் படத்தைப் பார்க்கலையா? Limited Offer என்பதால் இன்னும் கொஞ்சத்தால எடுத்திடுவேன்.///

http://hunterlodging.com/CatShootingPheasant.gif

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன் நாங்க என்ன உங்கட “ஜோடிப்”படமா கேட்டோம்:) தனிப்படம்தானே... சொல்லிப்போட்டு காலைவாரப்புடா சொல்லிட்டேன் ஆமா:))
//

அக்கா, ஒருவாட்டி Page Refresh பண்ணிப் பாருங்க. படம் இருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
நிரூபன் நாங்க என்ன உங்கட “ஜோடிப்”படமா கேட்டோம்:) தனிப்படம்தானே... சொல்லிப்போட்டு காலைவாரப்புடா சொல்லிட்டேன் ஆமா:))//

அக்கா, பதிவின் கீழ் போட்டோ இருக்கிறதே. கவனிக்கலையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

///படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.
//

ஹையோ இதுதான் நிரூபனோ? ஆளை விடுங்க சாமீஈஈஈஈஈஈஈஈஈஇ.. தோட்டில இருந்து ஒளி:) பரப்பாகுதே:))

K said...
Best Blogger Tips

நிரூ, உனது ஃபோட்டோவில் காதில் ஏதோ மின்னுதே அது என்ன?

K said...
Best Blogger Tips

மச்சி, உனக்கு ரெண்டு காதுதானே! ஒன்று இங்க இருக்கு! மற்றது எங்க?

K said...
Best Blogger Tips

மச்சி, உன்னோட கன்னத்துல ரெண்டு கோடு கீறியிருக்கே! அது யார் கீறினது?

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
ஹையோ இதுதான் நிரூபனோ? ஆளை விடுங்க சாமீஈஈஈஈஈஈஈஈஈஇ.. தோட்டில இருந்து ஒளி:) பரப்பாகுதே:))//

நம்புங்கையா...இது நான் தான்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//அக்கா, பதிவின் கீழ் போட்டோ இருக்கிறதே. கவனிக்கலையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நிரூபன் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே....ஆனா இண்டைக்கு காலையிலயே நான் கொலை ஒன்று பண்ணிடுவன்போல இருக்கே... நான் அந்தப் பறவையைச் சொன்னேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்:)))

K said...
Best Blogger Tips

மச்சி, உன்னோட தலையின் பாரத்தை உனது உடம்பு தாங்குமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நிரூ, உனது ஃபோட்டோவில் காதில் ஏதோ மின்னுதே அது என்ன?
//

ஓ..அதுவா பக்கத்து வீட்டு பொண்ணிடமிருந்து சுட்ட தோடு மச்சி,.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, உனக்கு ரெண்டு காதுதானே! ஒன்று இங்க இருக்கு! மற்றது எங்க?
//

அதுவா.....அதை போட்டோ புடிக்கும் போது வாடகைக்கு கொடுத்திட்டேன்.
அவ்வ்வ்

K said...
Best Blogger Tips

மச்சி, நான் வேலைக்குப் போறன்! பத்ரோன் ( முதலாளி ) நித்திரை தூங்கும் போது நான் களவாக ஆன் லைன்ல வருவேன்! ஸோ, பிறகு சந்திப்பம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, உன்னோட கன்னத்துல ரெண்டு கோடு கீறியிருக்கே! அது யார் கீறினது?
//

ஹே...ஹே..
அதையெல்லாம் இதில வைச்சா கேட்பாங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K said...
Best Blogger Tips

மச்சி, உனக்கு ரெண்டு காதுதானே! ஒன்று இங்க இருக்கு! மற்றது எங்க?
//

அதுவா.....அதை போட்டோ புடிக்கும் போது வாடகைக்கு கொடுத்திட்டேன்.
அவ்வ்வ் /////

நோ இப்படிப் பதில் சொல்லக் கூடாது!

இந்தக் காதுதான் அந்தக் காது என்று சொல்ல வேண்டும்! ஹி ஹி ஹி !

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//Star - Dr. ஐடியாமணி said...
மச்சி, உனக்கு ரெண்டு காதுதானே! ஒன்று இங்க இருக்கு! மற்றது எங்க//

ஹா..ஹா..ஹா...ஹையோ... பார்த்திங்களோ நிரூபனின் படம் பார்த்த உடனேயே, அவருக்கு பாதி தட்டினதுபோலாகிட்டார்:))... இருந்தாலும் நியாயமான கேள்விதானே? மற்றக்காது எங்க நிரூபன்? எலிகொண்டுபோட்டுதோ நித்திரையில?:)))

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
நிரூபன் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே....ஆனா இண்டைக்கு காலையிலயே நான் கொலை ஒன்று பண்ணிடுவன்போல இருக்கே... நான் அந்தப் பறவையைச் சொன்னேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்:)))//

என்னையை தேடி வந்து கொல பண்ணாத வரைக்கும் ரொம்ப சந்தோசம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
ஹா..ஹா..ஹா...ஹையோ... பார்த்திங்களோ நிரூபனின் படம் பார்த்த உடனேயே, அவருக்கு பாதி தட்டினதுபோலாகிட்டார்:))... இருந்தாலும் நியாயமான கேள்விதானே? மற்றக்காது எங்க நிரூபன்? எலிகொண்டுபோட்டுதோ நித்திரையில?:)))//

என்னமோ தெரியலைங்க. ரொம்ப நாளா ஒரு மார்க்கமாத் தான் இருக்கேன். எதுக்கும் டாக்டர்கிட்ட போயிட்டு வந்து சொல்றேனுங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

ரொம்ப பயனுள்ள பகிர்வு..
//

மிக்க நன்றிங்க.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//Powder Star - Dr. ஐடியாமணி said...
மச்சி, உன்னோட கன்னத்துல ரெண்டு கோடு கீறியிருக்கே! அது யார் கீறினது//

ஆரும் கீறல்ல கனவெல்லாம் காணாதீங்க.. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது...:)) அது முள்ளுமுருக்கம் முள்ளுக்கீறினது அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மீயும் எஸ்ஸ்ஸ் சீயா மீயா...

ஊ.கு:
நிரூபன் எங்க படம்?:))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
ஆரும் கீறல்ல கனவெல்லாம் காணாதீங்க.. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது...:)) அது முள்ளுமுருக்கம் முள்ளுக்கீறினது அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மீயும் எஸ்ஸ்ஸ் சீயா மீயா...

ஊ.கு:
நிரூபன் எங்க படம்?:))))))//

ஹே...ஹே...என்னது கனவா? அதெல்லாம் எனக்கு வராதுங்க, இது நெசம் தானுங்கோ. பூனை ஏதாச்சும் பிராண்டினதோ தெரியலை.அவ்வ்வ்

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நிரூபன் said...

@athira
ஹையோ இதுதான் நிரூபனோ? ஆளை விடுங்க சாமீஈஈஈஈஈஈஈஈஈஇ.. தோட்டில இருந்து ஒளி:) பரப்பாகுதே:))//

நம்புங்கையா...இது நான் தான்////


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னாது ஐயாவோ?:))) வன்மையான கண்டனங்கள்...:))))

http://2.bp.blogspot.com/_aO8JqSNtauA/S-OvvcZXTdI/AAAAAAAAObU/QHwQcim9WtE/s400/cat+rapid+fire.jpg

Yoga.S. said...
Best Blogger Tips

இப்போ நேரா மேட்டருக்கு வருமங்குங்க. இந்த ப்ளாக் எழுதுவதில் உள்ள ரொம்ப முக்கியமான சூட்சுமம் என்னவென்றால், ப்ளாக்கிற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையானது உங்கள் ப்ளாக் டிசைனிங் அல்லது ப்ளாக் வடிவமைப்பிலும், உங்கள் பதிவுகளின் உள்ளடக்கத்திலும் தானுங்க தங்கியுள்ளது. கணினியோடு தொடர்புடையோரும், அலுவலகங்களில் பணி புரிவோரும் தான் நம்ம ப்ளாக்குகளை அதிகமாக படிப்பதால் உங்க ப்ளாக் பெயரை இணையத்தில் அடித்ததும் லபக்கென்று ஓப்பின் ஆகிற மாதிரி உங்க ப்ளாக்கை நீங்க டிசைன் பண்ணி வைத்திருக்கனும்.ப்ளாக்கிற்கு டெம்பிளேட்டைத் தெரிவு செய்யும் போது எப்போதுமே கூகிள் ஆத்தா வழங்கும் இலகுவான டெம்பிளேட்டைத் தெரிவு செய்து, உங்களுக்கு விம்பிய மாதிரி நீங்களே டிசைன் பண்ணிக் கொள்ளலாமுங்க.////இப்ப நேரா மேட்டருக்கு வருவமுங்க.இந்த ப்ளாக் எழுதுறதுல இருக்கிற ரொம்ப முக்கியமான ட்ரிக் என்னன்னா,பிளாக்குக்கு வர்ற படிக்கிறவங்களோட எண்ணிக்கைய கூட்டனும்.அதுக்கு,நம்பளோட ப்ளாக் டிசைனிங் ரொம்ப முக்கியம்.அத்தோட பதிவோட தலைப்பு.ஆபிசில வேல பாக்குறவங்களும்,லேப்டாப்போட(மனோ இல்ல) அலையிறவங்களும்,கம்பியூட்டர்ல வேலைபாக்குறவங்களும் தான் நம்மளோட பதிவ அதிகமா படிக்குறதுனால,ஒங்களோட ப்ளாக் பேர கம்பியூட்டர்ல அடிச்ச உடனையே லபக்குன்னு ஓப்பின் ஆகிற மாதிரி நீங்க ஒங்க ப்ளாக் பேர வச்சுக்கணும்!ப்ளாக்குக்கு டெம்ப்ளேட்டு செலக்ட் பண்றப்போ எப்பயுமே கூகிள் ஆத்தா குடுக்கிற ஈசியான டெம்ப்ளேட்ட செலக்ட் பண்ணி அப்புறமா ஒங்களுக்கு இஷ்டப்பட்டாப்புல நீங்களே மாத்திக்கலாமுங்க!CORRECTAAAAAAAA!!!!!!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

CORRECT.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னாது ஐயாவோ?:))) வன்மையான கண்டனங்கள்...:))))
//

அக்கா படத்தை தெளிவாகப் போட்டா, இப்பவோ பொண்ணு குடுக்க போட்டி போடத் தொடங்கிடுவாங்க. ஸோ...அதான் சும்மா லைட்டா காட்டியிருக்கேன்.

Yoga.S. said...
Best Blogger Tips

படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.////இது வந்து,INTOUCHABLE அந்தப் புதுப்படம்.அதில வர்ற ஆபிரிக்க கறுப்பர்(மரியாதை)தானே????ஹி!ஹி!ஹி!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
ஐயா, சும்மா தூக்கலா எழுதியிருக்கிறீங்க இல்லே!

நன்றிங்க ஐயா.

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...

@athira

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னாது ஐயாவோ?:))) வன்மையான கண்டனங்கள்...:))))
//

அக்கா படத்தை தெளிவாகப் போட்டா, இப்பவோ பொண்ணு குடுக்க போட்டி போடத் தொடங்கிடுவாங்க. ஸோ...அதான் சும்மா லைட்டா காட்டியிருக்கேன்.////தம்பி இது உங்களுக்கே கொஞ்சம்"ஓவரா" தெரியலை???,,,

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.////இது வந்து,INTOUCHABLE அந்தப் புதுப்படம்.அதில வர்ற ஆபிரிக்க கறுப்பர்(மரியாதை)தானே????ஹி!ஹி!ஹி!!!!
//

நிரூ, உனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்,
இப்பவே துஸியைக் கூட்டிக் கொண்டு லாச்சப்பலுக்கு வாறேனுங்க.
இல்லே லாகூர்வே பக்கம் வாறேனுங்க.

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...

@Yoga.S.FR
ஐயா, சும்மா தூக்கலா எழுதியிருக்கிறீங்க இல்லே! /////).).).).).).);=;

ம.தி.சுதா said...
Best Blogger Tips

////படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.////

படத்தில் உள்ளவரைச் சொல்லவா...

அல்லது பதிவு எழுதுபவரை காட்டவா..? ஹ...ஹ...

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...
இல்லே லாகூர்வே பக்கம் வாறேனுங்க.///அந்த நகரின் பெயர் லா கூர் நேவ்(La courneuve).லாசப்பலில்(La chappelle) சந்திப்பதாயின்,செவ்வாய் மாலை வரவும்!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

உண்மையில் நாம் எழுதும் பதிவு பலரை சென்றடைய வேண்டும் என் ஏக்கம் என்னிடமும் இருக்கிறது... அதனால் தான் மதுரனுக்கு அடிக்கடி சொல்வேன் ஒவ்வொர் நாளும் பதிவு போடுவதால் வரும் post/hist வீதத்ததை விட 2 நாட்களுக்கு ஒரு மறை எழுத வரும் ஹிட்ஸ் அதிகமாகும்..

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

படத்தில் உள்ளவரைச் சொல்லவா...

அல்லது பதிவு எழுதுபவரை காட்டவா..? ஹ...ஹ...
//

ஏன் மச்சி, உன்கிட்ட என்னோட போட்டோ ஏதும் இருக்கா? இல்லைத் தானே?
அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FRஇல்லே லாகூர்வே பக்கம் வாறேனுங்க.///அந்த நகரின் பெயர் லா கூர் நேவ்(La courneuve).லாசப்பலில்(La chappelle) சந்திப்பதாயின்,செவ்வாய் மாலை வரவும்!
//

உங்களைக் எப்படிங்க ஐயா கண்டு பிடிக்கிறது?

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔
அதனால் தான் மதுரனுக்கு அடிக்கடி சொல்வேன் ஒவ்வொர் நாளும் பதிவு போடுவதால் வரும் post/hist வீதத்ததை விட 2 நாட்களுக்கு ஒரு மறை எழுத வரும் ஹிட்ஸ் அதிகமாகும்..//

மச்சி, நீ சொல்வது சரி, ஆனால் ரெண்டு நாள் அல்லது ஒரு நாளுக்கு மேல வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்திடுமே மச்சி.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

///ஏன் மச்சி, உன்கிட்ட என்னோட போட்டோ ஏதும் இருக்கா? இல்லைத் தானே?////

ஹ..ஹ.. போட இவனே..

Yoga.S. said...
Best Blogger Tips

♔ம.தி.சுதா♔ said...

////படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.////

படத்தில் உள்ளவரைச் சொல்லவா...

அல்லது பதிவு எழுதுபவரை காட்டவா..? ஹ...ஹ...////பிளீஸ் சுதா பதிவு எழுதினவரைக் காட்டுங்கள்!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

Yoga.S.FR said...

பிளீஸ் சுதா பதிவு எழுதினவரைக் காட்டுங்கள்!

-------------

ஐயா ஆக்கப் பொறுத்தனிங்கள் ஆற பொறுங்களேன்...

Thava said...
Best Blogger Tips

அருமையான பதிவு..என்னை போன்றவர்களுக்கு மிகப் பெரிய துணைப்புரியும் படியான ஒரு சிறந்த பதிவு..அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி,

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...
உங்களைக் எப்படிங்க ஐயா கண்டு பிடிக்கிறது?////அதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்!ஆனால் ஒன்று ஒரு இளைஞனைத் தான் பார்ப்பீர்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

♔ம.தி.சுதா♔ said...

Yoga.S.FR said...

பிளீஸ் சுதா பதிவு எழுதினவரைக் காட்டுங்கள்!

-------------

ஐயா ஆக்கப் பொறுத்தனிங்கள் ஆற பொறுங்களேன்..///O.K!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே, நம்ம தமிழுல இந்த பதிவு எழுதியிருகிங்களா? எங்க? மாப்ளே தேடிப் பார்த்தேன், அங்கங்க அப்படி தெரியுது...

Yoga.S. said...
Best Blogger Tips

கொஞ்சம் வேலை இருக்கிறது.மறுபடியும் பார்க்கலாம்!

Yoga.S. said...
Best Blogger Tips

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாப்ளே, நம்ம தமிழுல இந்த பதிவு எழுதியிருகிங்களா? எங்க? மாப்ளே தேடிப் பார்த்தேன், அங்கங்க அப்படி தெரியுது...///கோச்சுக்காதீங்க பிரகாஷ்!அவரு மணிரத்தினம் ஸ்டைல்ல ட்ரை பண்ணியிருக்காரு.போகப்போக சரியாயிடும்!

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,
முதலில் தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

அட..ஹிட்சுகள் அள்ளுவதற்கு இப்படியெல்லாம்
வழியிருக்கா...
பயனுள்ளதா இருக்கு சகோ...

Unknown said...
Best Blogger Tips

நிரூபன் பதிவுங்களா இது...கொங்கு பாசையில முயற்சி பண்ணியிருக்கியா கண்ணு...தமிழ்மணம் நட்சத்திரத்துக்கு வாழ்த்துங்க தம்பி...யாரு இது படத்தில கோமாளி மாதிரி காதில கடுக்கன் வேற....கையில மியூசிக் பொட்டி வேற....எவன்டா வரைஞ்சது இதைய ஏ..பசுபதி அவன் கைய கடிச்சிட்டு வாடா....

Unknown said...
Best Blogger Tips

ஸ்ஸ் அபா என் தமிழ் நடையய் கிண்டல் பண்ணியதுக்கு கண்டனங்கள்...ஹிஹி!

Anonymous said...
Best Blogger Tips

///படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.///

காதில தோடு கையில கிட்டார் ...அப்பிடியே மூக்கில ஒண்ணும் குத்தவேண்டியது தானுங்களே !...

முடிஞ்சா..இடம் கிடந்தா தொப்பிள்ளையும் ஒண்ண குத்துங்கோ ;)

Yoga.S. said...
Best Blogger Tips

கந்தசாமி. said...

///படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.///

காதில தோடு கையில கிட்டார் ...அப்பிடியே மூக்கில ஒண்ணும் குத்தவேண்டியது தானுங்களே !...

முடிஞ்சா..இடம் கிடந்தா தொப்பிள்ளையும் ஒண்ண குத்துங்கோ ;)
////இப்ப கண்ட,கண்ட இடத்துலயும்"குத்துற" நாட்டுக்குத் தான் வந்திருக்கிறார்!என்ன நடக்க போகுதோ????

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

//ஒவ்வோர் பதிவுகளையும் எம் ஆத்ம திருப்திக்காக எழுதினாலும்//

தனி மனிதத் தாக்குதல் சட்ட விரோதம்.
(என் பதிவின் தலைப்பை வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறீர்கள்) நான் சர்வதேச நீதி மன்றத்தில் பிராது கொடுக்கப் போகிறேன்??????

ஹேமா said...
Best Blogger Tips

சரி...சரி...உதாலதான் என்ர தளம் பப்ளிக் ஆகேல்லப்போலக்கிடக்கு.எனக்கு அடிக்கடி மாத்தித் தர ஆருமில்ல.அதுதான் அது அப்பிடியே கிடக்கு.எனக்கும் பிடிச்சிருக்கு.
விடுங்கோ.அதுசரி...எங்க உந்தப் பெடி நிரூ.படம் போட்டிருக்காம்.எனக்குக் கண்ணும் சரியாத் தெரியேல்லயடா மோனே !

Mahan.Thamesh said...
Best Blogger Tips

ரொம்ப சரிங்க சார் நீங்க சொன்னது . எங்க இன்னும் மேல சொல்லுங்க

shanmugavel said...
Best Blogger Tips

நன்றாக புரிகிறது,நல்ல அலசல்,தொடருங்கள்.

vanathy said...
Best Blogger Tips

ஆரும் கீறல்ல கனவெல்லாம் காணாதீங்க.. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது...:)) அது முள்ளுமுருக்கம் முள்ளுக்கீறினது அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மீயும் எஸ்ஸ்ஸ் சீயா மீயா...///
hehe...
ஊ.கு:
நிரூபன் எங்க படம்?:))))))//

எனக்கும் அதே டவுட்.

Yoga.S. said...
Best Blogger Tips

Mahan.Thamesh said...

ரொம்ப சரிங்க சார் நீங்க சொன்னது . எங்க இன்னும் மேல சொல்லுங்க.///இதுக்கு "மேல" யுமா????

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

>பாட்டும் நானே பாவமும் நானே என்று சிங் சக் போட்டுக் கிட்டிருக்க முடியுமா? இல்லே தனிக் கடையில் ஈ ஓட்டிக்கிட்டிருக்க முடியுமா?

யோவ், அதைத்தானேய்யா அடியேன் செய்துகொண்டுள்ளேன். :-)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails