Wednesday, March 30, 2011

தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!

நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;

வீரியம் மிக்க விதைகளாக
விளைச்சல்களை அதிகரிக்கும்
பயிர்களைப் பயிரிட
அவர்கள் ஒவ்வோர் முறையும்
எங்கள் தோட்டத்திற்கு வருகிறார்கள்
தாங்கள் புசித்த எலும்புத் துண்டுகளின்
எச்சில் நாற்றம் காயும் முன்னே
எங்களை விலை பேச
கைகளை உயர்த்தியபடி
தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!

Tuesday, March 29, 2011

மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!


ஆஹா இனி நம்ம பாட்டுக்குப் சிவனே என்று இருக்கலாம். கொஞ்ச நாளா, எங்கடை பதிவுகளுக்கு வந்து அறு அறு என்று எங்களையெல்லாம் அறுத்துத் தள்ளிய, நோண்டி நொங்கெடுத்த நம்ம நிரூபன் பயபுள்ளை இனிமே வலைப் பதிவிற்கு வரமாட்டான். சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.

Monday, March 28, 2011

இப்போது தமிழகத்தில் தேர்தல் காலம்!

எம் உறவுகளின்
ஊரில் தேர்தல் காலம்
தம் தேவைகளை உணர்ந்தோராய்
வேட்பாளர்கள் வீடு தேடி வரும் காலம்
பொய்களையெல்லாம் வர்ணமடித்து
பேச்சோசை எனும் பூச் சூடி
அலங்கரித்து, அழகாக்கி
அனைவரின் கதவுகளையும் தட்டி
வாக்குக் கேட்கும் இழிவான காலம்!

Friday, March 25, 2011

இலவசங்களின் வரிசையில் இனி அதுவும் வரும்!

நடு இரவில் தெறித்து
நரம்பறுக்கும் வேகத்துடன்
உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!

நெருடல் கொண்ட நினைவுகளையும்
பரவிக் கிடக்கும் கற்பனா புலன்களையும்
ஒட்ட நறுக்கி விடத் துடித்த படி
வார்த்தைகளால் வானினையும் தொடுகிறது அது!

Thursday, March 24, 2011

இம் முறைத் தேர்தலில் எல்லாமே இலவசம்!

இது தேர்தல் காலம், மக்கள் மனங்களையெல்லாம் இலவசங்களை அள்ளிக் கொடுத்து வாங்கும் திருவிழாக் காலம். எங்கள் தாய் தமிழக உறவுகளின் தேர்தல் கொண்டாட்டங்கள் பற்றி எங்கள் ஊரில் இடம் பெறும் ஒரு அரசியல் கருத்தாடலை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளப் போகிறேன். எல்லோரும் படிக்க றெடி தானே!

இன்று முதல் என் வலைப் பதிவினூடாக, இவ்வாறான அரசியல், சமூகம் சார் அரட்டைகள் இடம் பெறும் பகுதியாக ‘ஆலமரத்தடி’ எனும் பெயரில் ஒரு பகுதியினை உங்களின் பேராதரவுடன் தொடங்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்.

Wednesday, March 23, 2011

கேட்டியளே, எனக்கு கலியாணம் நடக்காதாம்!

மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் பல் வேறு விதமான ஆசா பாசங்கள் இருக்கும். அத்தகைய மனித இனத்த்தில் வந்த எனக்கும் இயல்பான ஆசாபாசங்கள் இருப்பது வழமை தானே. ஒரு சில விசயங்களைத் தனி மனிதனாகத் தீர்த்து விடலாம். இன்னும் சில விடயங்களைப் பேசித் தீர்த்து விடலாம்.

ஆனால் சில விபரீதமான விடயங்களால் மெல்லவும், முடியாமல், விழுங்கவும் முடியாமல் மனசுக்குள் பூட்டிப் பூட்டி வைத்து தீர்க்க முடியாதவர்களாகி,  இறுதியில் மன அழுத்தத்திற்குத் தானே நாங்கள் ஆளாகிறோம். என்னுடைய ஒரு சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையிலை தான் உங்களிடம் இப்பதிவினைக் கொண்டு வருகிறேன்.

Tuesday, March 22, 2011

நினைவில் தத்தளிக்கும் பருவங்கள்! (பாகம் 01)

நெஞ்சை விட்டகலாத நினைவுகள்!

முற் குறிப்பு: எல்லோருடைய வாழ்க்கையிலும் பால்ய காலம், பாடசாலைக் காலம், பல்கலைக் கழகக் காலம் என்பன மறக்க முடியாத, நினைவேடுகளிலிருந்து அழிக்க முடியாத காலப் பகுதிகளாகும். இதனை விட நண்பர்களோடு கூடிக் கூத்தடித்துக் கும்மாளமடித்து மகிழ்ந்த காலங்களும் மறக்க முடியாத காலப் பகுதிகளாகும். அக் காலப் பகுதிகளில் இடம் பெற்ற சம்பவங்களை மீண்டும் மனக் கண் முன்னே கொண்டு வந்து உங்களோடும் உங்கள் உணர்வுகளோடும் கலப்புறச் செய்யும் முயற்சியாகவே இந்தப் பதிவினைத் தொடங்குகிறேன்.

Sunday, March 20, 2011

இனியும் ஒரு போர் வேண்டாம்!

பதிவினைப் படிக்க முன்,  இதனையும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்!

அன்றொரு நாள் அன்பொழுக
அனைவருமே ஒன்றாக இருந்தோம்
ஊர் பிடிக்க, உறக்கமின்றிப்
பலர் வருகையிலோ
ஊரிழந்து, உடுத்த உடையுடனே
உணர்விழந்து அகதியானோம்,
சொந்த வீடு, உடு புடவை,
உறவுகளை தொலைத்தவராய்
கால் போன போக்கில்
நாம் நம்பினோர்
கைவிட மாட்டார்கள் எனும் நம்பிக்கையில்
ஒரு சிலரும்;
பாஸ் கிடைத்தால் ஆமியிடம்
போகலாம் பாஸ் கிடைக்காதா
எனும் அங்கலாய்ப்பில்
பலபேரும் ஓடத் தொடங்கினோம்!

மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! உலகத் திரையரங்குகளில் முதன் முறையாக..

உலகத் திரையரங்குகளில் முதன் முறையாக, வெகு விரைவில் எதிர்வரும் மேமாதம் திரைக்கு வரவிருக்கிறது மீண்டும் ஓர் ஈழயுத்தம் திரைப்படம்.
அதி நவீன தொழில் நுட்ப உதவிகளுடனும், இதுவரை தமிழ்ச் சினிமாவில் பயன்படுத்தப்படாத கிறபிக்ஸ்(Graphics) தொழில் நுட்பங்களுடனும் திரைக்கு வரவிருக்கிறது மீண்டும் ஓர் ஈழயுத்தம்.!

Thursday, March 17, 2011

நறுக்கென நாலு வார்த்தைகள்!

நங்கையும், நண்பனும்!

அன்பே நீ சிரிக்கும் அழகோ தனி Twit's
நீ கிடைத்தால் எல்லோர்க்கும் கொடுப்பேன் Many Sweet's!

Monday, March 14, 2011

எனக்கு அது போக மாட்டேங்குது!

வணக்கம், வந்தனம், நமஸ்தே, ஆயுபோவான், அஸ்லாமு அலைக்கும், எல்லோரும் எப்பிடி இருக்கிறீங்கள்?  இன்றைக்கு ஒரு சீரியஸ்ஸான மேட்டரோடை உங்களை நாடி வருகிறேன். சில வேளை உங்களுக்கு இந்தப் பிரச்சினை சிரிப்பை வரவழைக்கலாம். ஆனாலும் இப் பிரச்சினையால் நான் தினம் தினம் படும் வேதனை இருக்கிறதே, அவலம் இருக்கிறதே அது வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது.

Sunday, March 13, 2011

ஈழ மக்களை துடி துடிக்க கொல்லும் ஈனர்களின் செயல்கள் - உண்மைச் சம்பவம்!

பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவுதல்!
பதிவினைப் படிக்க முன்: இப் பதிவு முற்று முழுதாக உண்மைச் சம்பவங்கள் கலந்த பதிவாகும்.  இங்கு கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைச் சம்பவங்களும், கசப்பான நிகழ்வுகளையும் மட்டுமே பதிவாக உங்கள் முன் கொண்டு வருகிறேன்!

விவரணம் 1): மனித இனத்தில் பல் வேறு விதமான விசித்திர முகங்கள் உள்ளன. மனிதர்களினை அடித்து துன்புறுத்துவது, மனிதர்களைத் துடிக்கத் துடிக்க கொலை செய்வது இவையெல்லாம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு உடலளவில் தண்டனை கொடுத்தே குற்றங்களை நிறுத்தப்பார்க்கிறார்கள். மனிதனை உடலளவில் கொடுமைப்படுத்துவதனை Brutal என அழைப்பார்கள். மனிதர்களை மனிதர்கள் தங்களின் பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏதுவாக, தம் மனதின் அடிப்படையில் துன்புறுத்தி மகிழ்கிறார்கள்.

Saturday, March 12, 2011

வேண்டாமே இந்த பதிவரசியல்!

இணைய வலை ஏறி வந்து அனைவர் இதயங்களையும் கவரும் பதிவர்களே, அவரசமாய் ஓடி வந்து அரிய பல தகவல்களைச் சேகரித்து எழுதுவோர் பதிவுகளைப் படிக்காமல் ஓட்டுப் போட்டு, ஒரே நிமிடத்தினுள் பின்னூட்டமிடும் ஜனநாயக வாதிகளே வணக்கம்! டோய் சித்தப்பூ, என்ன நடக்குது? நீ என்ன  வில்லுப் பாட்டே நடத்தப் போறாய், வாயை மூடிட்டு பதிவை எழுதடா என்று உங்களில் யாரோ கோபப்பட்டுத் திட்டுவதும் கேட்கிறது. மீண்டும் எல்லோருக்கும் இனிய வணக்கங்கள்!

Thursday, March 10, 2011

நினைப்பிலை நீ ஒரு ஆம்பிளைச் சிங்கம்!

யூரியூப்பில் கடந்த வாரம் உலா வந்து கொண்டிருந்த போது ஒரு நம்மவர் பாடல் கண்ணில் பட்டது. மிகவும் இயல்பான, அனைவருக்கும் விளங்கும் மொழி நடையில், மென்மையான கவி வரிகளோடு அழுத்தமான குரலில் ஒரு உறுதியான பாடல். பெண்களின் பெருமைகளைப் பற்றிச் சொல்லும் ஒரு றப் பாடல்.  தமிழில் இதனைச் சொல்லிசை என்று சொல்லுவார்கள்.

மனிதனை மனிதன் வேட்டையாடுதல்- உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு 18+

உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடினார்கள். விலங்குகளை வலை வைத்து பிடித்து உணவாக உட் கொண்டார்கள்,  மாமிசம் புசித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.  ஆனால் மனிதர்களே மனிதர்களை வேட்டையாடி உணவாக உட் கொள்வதனைப் பார்த்திருக்கிறீர்களா? கேட்டிருக்கிறீர்களா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.

Tuesday, March 8, 2011

மகளிர் தினம் கொண்டாட வேண்டுமா?

வணக்கம் உறவுகளே, அன்பு நெஞ்சங்களே, மகளிர் தினம் என உலகெல்லாம் சிறப்பிக்கப்படு இந் நன் நாளில் ஒரு விவகாரமான விடயத்துடன் உங்களைச் சந்திக்கலாம் என நினைக்கிறேன்

பெண்கள்- காப்பியங்களின் பாடு பொருளாகவும், வரலாறுகளின் தோற்றத்தின் மூலாதாரங்களாகவும், பல போர்களுக்கும், பல சர்ச்சைகளுக்கும், பல நாடுகளின் அழிவுகளுக்கும், எங்களைப் போன்ற மனிதர்களின் தோற்றத்திற்கும், உயிரினங்களின் பிறப்பிற்கும் அத்திவாரமாக அமைந்துள்ளார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

Sunday, March 6, 2011

இது காமமா இல்லை காதலா??

இப்போது என்
நினைவுகளை(ப்) பின் நகர்த்துகிறேன்
இறுதியாக நானும்
நீயும் சந்தித்துக் கொண்ட 
அந்த கடைசி நிமிடங்கள்,
நீ பேசிய 
கபடமில்லாத வார்த்தைகள்
‘ஏதோ நடந்தது நடந்து போச்சு
எனக்கு வெளி நாட்டிலை
மாப்பிளை பார்த்திருக்காங்க
அவசரப் பட்டு 
ஆசையிலை என்னை இழந்திட்டன்?
பருவத் தவறால்
நாம் இருவரும் மணமாகாமலே
’அது உருவாகி விட்டது,
இப்போது அதை
அழித்திடலாம் என நினைக்கிறேன், 
எனக்கு என் எதிர் காலம் முக்கியம்
உங்களுக்கு என்னை விட்டால்
வேறொருத்தி
கிடைக்காமலா போவாள்?

Thursday, March 3, 2011

கேள்விக்கு என்ன பதில்?

’ஹலோ, இங்கை உங்களைத் தான் கூப்பிடுறன், ஒருக்கா திரும்பிப் பாருங்கோவன்’.  இப்படி எனது லுமாலா சைக்கிளில் முன்னே போய்க் கொண்டிருக்கும் எனது வசந்தங்களையெல்லாம் வர்ணம் தீட்டப் போகின்ற ஆசை நாயகியை விசிலடித்தும், ஹலோ என்று சொல்லியவாறும் அழைத்தபடி பின் தொடர்கிறேன்.

Wednesday, March 2, 2011

சிதைவுகளின் எச்சங்கள்!

கருவேலங் கண்டல்
கரிப்பட்ட முறிப்பு
கந்தசாமி கோயிலடி
கதறியழும் ஓசை,
தெருவோரக் கிணற்றடி
உருமாறும் மனங்கள்
உதவியற்ற மனிதர்கள்
இறைவா இதுவோ உன் நியதி?

Tuesday, March 1, 2011

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

அன்றொரு நாள், வானில்
விமானங்கள் இரைகையில்
நானும் அம்மாவும், அப்பாவும்,
என் உடன் பிறந்த தங்கையும், தம்பியும்
உயிரைக் கையில் பிடித்தபடி
பங்கரை நோக்கி ஓடினோம்,
ஊரில் இல்லாத கடவுளர்களையெல்லாம்
கண் முன்னே நிறுத்தி
கதறிக் கதறி,  எம் உயிரைக் காப்பதற்காய்
வேண்டுதல் செய்தோம்;

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க