Saturday, December 10, 2011

சே! அவளை அப்படி அணுகியிருக்க கூடாது!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 750ம் இலக்கப் பஸ் நிறுத்துமிடத்தில் காத்திருக்கின்றேன்! வழமைக்கு மாறாக அன்றைய தினம் அதிகளவான பயணிகளால் பருத்தித்துறை செல்லும் பஸ் நிறுத்துமிடம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பஸ் நிறுத்தப்படுவதற்கு முன்பதாகவே ஓடோடிச் சென்று சீட் பிடிப்பதற்காக அடிபட்டு ஏறுவோரும், கண்டக்டரின் கையில் இருந்த டிக்கட் புத்தகத்தினால் அடி வாங்கி பஸ் நிறுத்த முன்பதாக எப்படியாச்சும் ஏறிட வேண்டும் எனும் ஆசையினை நிராசையாக்கி மக்கள் கூட்டத்தின் முன்னே ஏமாற்றமடைந்து மனமுடைந்து திரும்புவோர் இன்னோர் புறமுமாகப் பயணிகள் தமது பிரயாணத்தினை வேகப்படுத்தும் நோக்கில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் தேர்த் திருவிழா இடம் பெற்றுக் கொண்டிருந்த நேரமது.
"சே....இன்னைக்கு Honda Cd 125 மோட்டார் சைக்கிளில் போகலாம்" என்று திட்டமிருந்த என்னுடைய கனவில் மண் அள்ளிப் போட்ட இனியவன் அண்ணையை நினைக்கையில் கோபங் கோபமாக வந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இன்றைய நாளுக்குரிய வேலைத் திட்டம் தொடர்பாக ஈஸ்வரன் அண்ணையிடம் பேச ஆரம்பிக்கையிலே எனக்கு ஆப்பு வைச்சிட்டார் இனியன் அண்ணை என்ற நினைவு தான் மீண்டும் மீண்டும் மனதில் வந்து அலை மோதிச் சென்றது. "அண்ணை இண்டைக்கு வடமராட்சிக்குத் தானே போறேன். அப்ப அந்த Cd 125 ஐ எடுத்துக் கொண்டு போகட்டுமா?" என்று கேட்கும் போது பிள்ளையளுக்கு (பெண் போராளிகள்) முன்னால் "அண்ணை உவன் முகிலிடம் நேற்றுக் கொடுத்த வேலை என்ன மாதிரி என்று கேட்டனீங்களா? எனக்கு உவன் இன்னும் படத்தைத் தரவில்லை என்று ஆரம்பித்தார் இனியவன் அண்ணை.

"என்னை அங்கை (வன்னியிலிருந்து) அடிக்கடி கேட்டுக் ஆக்கினை கட்டிக் கொண்டிருக்கிறாங்க. நான் மப் (Map) கொடுத்தால் தான் க(கொ)ம்பியூட்டரில அவங்கள் மப்பை போட்டு தங்கடை திட்டங்களை எதிர் காலத்தில முன்னெடுக்க முடியும். இவன் முகில் வேலைக்கு ஆக மாட்டான். எப்ப பார்த்தாலும் கலை பண்பாட்டுக் கழகத்துக்குப் போறதும், சொன்ன வேலையை முடிக்காது புதுவையரோட போய்க் கதைக்கிறதுமா நிற்கிறான். ஏதோ புத்தகத்தில தன்னோட தொடர் ஒன்றை எழுதப் போறாராம். அப்படியென்றால் இவனை நம்பி நாம கொடுத்த வேலை என்னாவது?" என அண்டி விட்டுக் கொண்டிருந்தார் இனியவன் அண்ணா. அப்பாடா! இன்னைக்கு எனக்கு சங்கு தான் என நினைத்துக் கொண்டிருக்க, என்னைப் பார்த்த ஈஸ்வரன் அண்ணை "இண்டைக்கு உனக்கு என்ன பணிஸ்மெண்ட் (தண்டனை) தெரியுமோ?" எனக் கேட்டார்.

வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஈஸ்வரன் அண்ணையின் முகத்தை உற்று நோக்கினேன். "உவன் நகுலன் அறிஞ்சான் என்றால் உடனேயே உன்னை வன்னிக்கு அனுப்பிடுவான். நீ விளையாட்டுப் பிள்ளை இல்லைத் தானே. உடனடியாக உனக்குத் தரப்பட்ட வேலைகளை முடிக்கிற வழியைப் பாரு. இன்னையில இருந்து ஏழு நாளைக்கு நீ மோட்டார் சைக்கிளைத் தொடக் கூடாது என்று சொன்னார் ஈஸ்வரன் அண்ணை.”"ஆளை விடு அண்ணே! இப்போ அதுவா முக்கியம்! பிள்ளையளுக்கு முன்னாலை நீ என்னை மானபங்கப்படுத்திறியே நிறுத்து" என மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்கையில் "இன்னைக்கு பிள்ளையள் தீவுப் பகுதிக்கு வேலைத் திட்டத்திற்காகப் போறாங்க.உன்னோட மோட்டார் சைக்கிளைத் தமிழரசி ஒரு வாரத்திற்கு வைத்திருப்பா என்று சொல்லி;நீ இனிமேல் பஸ்ஸில தான் போய் உனக்குத் தரப்பட்ட வேலைகளை முடிக்க வேண்டும்!" என எச்சரித்தார் ஈஸ்வரன் அண்ணை.

"முகில் உனக்கு இதுவும் வேணும்! இன்னும் வேணுமடா" என என்னை நானே திட்டிக் கொண்டிருக்கும் போது "அடோய் நீ பயணத்திற்கு காசு வைச்சிருக்கிறியே! இல்லை அதனையும் செலவளிச்சுப் போட்டியா?" எனக் கேட்டார் ஈஸ்வரன் அண்ணை. "இருக்கண்ணை! ஏற்கனவே தந்த காசை வைச்சிருக்கின்றேன்" எனச் சொல்லி என் கமெராவினையும் எடுத்து ஜீன்ஸ் பொக்கட்டினுள் சொருகிக் கொண்டு கிளம்பினேன்! அப்பாடா இன்னைக்கு தலைக்கு மேல வெள்ளம் வரேல்லை!இதுவே வன்னியில எங்கட கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பணிஸ்மெண்ட் என்றால் ரைபிளைத் (துப்பாக்கியை) தூக்கித் தலைக்கு மேல பிடிச்சுக் கொண்டு பதினைஞ்சு ரவுண்ட் ஓட வேண்டும். இல்லா விட்டால் எல்லோருக்கும் சமைச்சுப் போட வேண்டும்!இல்லேன்னா இன்னும் கஷ்டமான தண்டனைகள் தந்திருப்பாங்கள். நல்ல வேளை நான் தப்பிச்சேன்" என நினைத்தவாறு பஸ்ஸிற்கு இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கும் என சோதிக்கும் நோக்கில் என் கடிகாரத்தினைப் பார்த்தேன்.

அப்போது மணி காலை 9.45 இனைக் காட்டியது. திடீரென என் கண்கள் ஓர் புள்ளியில் நிலைத்து நின்றது. Wax (மளிக்கப்பட்டு) செய்யப்பட்டு மினுங்கும் கால்கள். முழங்காலிற்கு மேலாகத் தொடை தெரியும் வண்ணம் மினு மினுப்பைக் கூட்டும் நீல நிற டெனிம் பாவாடை. சற்று மேலே நிமிர்ந்து பார்க்கையில் அடடா! இப்படி ஓர் உடையில் இது வரை ஒரு பெண்ணை நான் என் வாழ் நாளில் இன்று வரை காணவில்லையே என எண்ணிப் பெரு மூச்சு விட வைக்கும் ஊதா நிற மேற் சட்டை. அந்த மேற் சட்டை வெட்டினூடாக வெளியே பிதுங்கி விழுந்து விடத் துடிக்கும் - என்னை ஏந்த உன் கைகள் வாராதா என மனதின் தவிப்பை தூண்டும் இரண்டு அழகிய இளமைச் சந்தங்கள். அழகிய முகம்! இயற்கை அன்னையின் தவம் இவள் என எண்ண வைக்கும் அழகி ஒருத்தி என் முன்னே வந்து கொண்டிருந்தாள். வன்னியில் போர்க் காலத்தில் கட்டுக் கோப்பான கலாச்சாரத்தினுள் வாழ்ந்த எனக்கு இன்று வரை இப்படி ஓர் பெண்ணைக் காணாதிருப்பது வியப்பினைத் தான் தந்தது. 
நல்ல வேளை! வழமையாக நாங்கள் (போராளிகள்) போடும் புட்டுக் குழல் (போத்தல் கால்) ஜீன்ஸினை இன்று நான் அணியவில்லை. இன்றைய என்னுடைய வேலைக்கு ஏற்ற மாதிரி டெனிம் ஜீன்ஸ் அணிந்து; தோற்றத்தில் பல்கலைக் கழக மாணவன் போலத் தான் அந்த பஸ் நிலையத்தில் நின்றேன். திடீரென வந்த Lanka Ashok Leyland பஸ்ஸினுள் அவள் ஏறினாள். அப்போது தான் புரிந்து கொண்டேன். பருத்தித்துறை செல்லும் பஸ்ஸினுள் தான் அவள் ஏறியிருக்கிறாள். அட நானும் இந்த பஸ்ஸில் தானே செல்ல வேண்டும் என நினைவிற்கு வந்தவனாய் ஓடிப் போய் ஏறினேன். அவள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு கொஞ்சம் சமீபமாக பின்னே நின்றேன்.பஸ் புறப்படத் தொடங்கியது. என் வாழ் நாளில் இது நாள் வரை நான் காணாத ஓர் பெண்ணைச் சந்நிதித் தேர்த் திருவிழாவன்று பஸ்ஸினுள் கண்டதை எண்ணி அந்த முருகனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டேன்! 

நான் யார்? என் நோக்கம் என்ன? இன்றும் கூட எனக்கு வழங்கப்பட்ட வேலையினை நான் முடிக்கா விட்டால் நிச்சயமாக வன்னிக்குத் தான் என்னை மீண்டும் அனுப்பித் தண்டிப்பார்கள் என்ற எண்ணத்தினையெல்லாம் மறந்து அவள் மீது மையலுறத் தொடங்கினேன். இன்னைக்கு அவள் இறங்க முன்னர் அவளோட பெயரையும், தொலைபேசி இலக்கத்தினையும் வாங்க வேண்டும் என முடிவு செய்தேன். நான் இறங்க வேண்டிய இடம் நெல்லியடிச் சந்தி. அட இன்னும் நிறையத் தூரம் இருக்குத் தானே என நினைத்துக் கிறுக்குப் பிடித்தவனாக நடத்துனர்: "முன்னுக்குப் போங்க! முன்னுக்குப் போங்க" எனக் கூறுவதனைக் கூடச் செவிமடுக்காதவனாக அவள் உட்கார்ந்திருந்த இருக்கைக்குப் பின்னே நான் நின்றேன். பஸ் காற்றில் அவளது மேற் சட்டை மெது மெதுவாகப் பறக்கத் தொடங்கியது. உள்ளே இருந்து இரண்டு மாதுளங் கனிகள் என் கண்களினைக் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தது. 

என்னைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியெல்லாம் கவலையுறாது என் விழிகளால் அவள் உடலினை விழுங்கிக் கொண்டிருந்தேன். ஆவரங்கால் பகுதியில் அவள் இறங்குவதற்காக எழுந்து நின்றாள். "நான் இறங்க வேண்டும். கொஞ்சம் தள்ளி நிற்க முடியுமா?" என என்னைப் பார்த்துக் கேட்கையில் தான் அவள் தமிழ்ப் பெண் என்பதனையே உணர்ந்து கொண்டேன். எப்படியாவது அவளின் விபரங்களை அறிய வேண்டும் எனும் நோக்கில் "ஹலோ" என்று அழைக்கத் தொடங்கிய எனக்கு, அதன் பின்னர் வார்த்தைகள் வர மறுத்தன. "ஒரு வேளை ஏதாவது இசகு பிசகாகி (ஏடா கூடமாகி) பொது சனத்திடம் தரும அடி வாங்கி அமைப்பிற்குத் தெரிய வந்தால் என் கதை வட்டுவாகலில் முடிந்து விடும்" என்பதனால் உணர்ச்சிகளை அடக்கி என் Cd 125 மோட்டார் சைக்கிள் மீண்டும் கைகளிற்கு வரட்டும்! அப்போது வந்து இவளை ஆவரங்கால் பகுதியில் தேடிப் பிடித்து விபரமறிகிறேன் என நினைத்து பம்மிக் கொண்டேன். "

நெல்லியடிக்குச் சென்று அங்கே ஐயா அண்ணையிடம் (அருணன் அண்ணா) உள்ள மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வல்லைச் சந்திக்கு வருவதாக முடிவு செய்திருந்தேன்.நெல்லியடியில் இறங்கி,ஐயா அண்ணையின் அரசியல் துறைச் செயலகத்திற்குச் சென்றேன். வணக்கம் அண்ணை என்று தொடங்கி, நான் வந்த நோக்கம் எல்லாம் சொல்லிப் பேசிக் கொண்டிருக்கையில் தான் ஐயா அண்ணை என்னிடம் கேட்டார் "அடோய் முகில் எல்லாம் இருக்கட்டும். கமெரா கொண்டு வந்தனியா? படம் எடுக்க? அப்போது தான் என் ஜீன்ஸ் பொக்கட்டினைத் தேடிப் பார்த்தேன். கமெரா பஸ்ஸினுள் என் கையை விட்டு நழுவியிருந்தது. ஊரெழு இராணுவ முகாம் பற்றிய படங்கள், புன்னாலைக் கட்டுவன் சந்தி முகாம் பற்றிய படங்கள், யாழப்பாணம் சிங்கள மகாவித்தியாலய இராணுவ முகாம் பற்றிய படங்கள், ஆரிய குளம் சந்தி முகாம் தொடர்பான படங்களை எல்லாம் அந்த கமெராவில் தானே எடுத்து வைத்திருந்தேன். இப்போது என்ன செய்வது என்று தலையில் கை வைத்தேன். 

"இன்னைக்கு இரவு யாழ்ப்பாணம் திரும்பிப் போனதும் நகுலன் மாஸ்டர் கையாலையும், ஈஸ்வரன் அண்ணையின் கையாலையும் எனக்குச் சப்பறத் திருவிழா தான் நடக்கும் என நினைத்துக் கொண்டேன். இன்றைக்கு வந்த வேலையைப் பார்ப்பம். அது முடிய எல்லாப் படங்களையும் முழு மூச்சோடு ஒரே நாளில் எடுத்து முடிப்பம்" என யோசித்துக் கொண்டு என்ன பாடு பட்டாவது ஈஸ்வரன் அண்ணையிடமும், நகுலன் மாஸ்டரிடமிருந்தும் தப்ப வேண்டும் என நினைத்தேன். இப்போது ஐயா அண்ணையின் மோட்டார் சைக்கிள் வல்லை வெளிப் பக்கம் போய்க் கொண்டிருந்தது. சந்நிதி முருகனின் தேர்த் திருவிழா பக்தி பூர்வமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக மக்கள் வெள்ளம் தூக்குக் காவடிகள், பாற் காவடிகள் (பால் செம்பு), முள்ளுக் காவடிகள் சகிதம் வீதியை நிறைத்திருந்தது. இப்போது வல்லை வெளி இராணுவ முகாமிற்கு அருகே வந்து விட்டோம். 

இன்று மக்கள் வெள்ளம் இந்த வீதியால் அலை மோதுவால் கமெரா கையிலிருந்தால் ஒரு தொகைப் படங்களைச் சுட்டுத் தள்ளியிருக்கலாம். எல்லாம் என் நேரம் என நொந்து கொண்டு காம்பின் (முகாமின்) மப்பினை வரைவோம் என நினைத்து என் பொக்கட்டினுள் பேனையும் கொப்பி ஒற்றையும் (நோட் புக் பேப்பர்)இருக்கும் எனும் நினைப்பில் கையை விட்டேன்! அப்போது............தொடரும்

பிற் சேர்க்கை: இக் கதையில் வரும் முகில் எனப்படும் முகிலரசன் நான் அல்ல. ஆனால் இக் கதையினை நகர்த்த வேண்டிய நோக்கில் இங்கே முகிலரசன் கதையினை எழுதுவது போன்ற பாவனையில் இச் சிறுகதையினை எழுதியுள்ளேன்.இக் கதையும் ஓர் நிஜத்தின் பிரதிபலிப்பாகும்! இக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையல்ல!

இக் கதையின் இரண்டாம் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

26 Comments:

சுதா SJ said...
Best Blogger Tips

வாவ்... புது தொடரா...... ஆரம்பமே நம்மூரில் இருக்கும் பிரமையை கொடுக்குது.... பேசுறது எல்லாம் கேக்கும் போது ஆசையா இருக்கு.... இங்கே நம்ம தமிழ் இப்போ எவ்ளோ மாறிட்டுது.....!!!! நிருபன் ரியலி சூப்பர்.... தொடர் சஸ்பென்ஸ் கலந்து பயணிக்கும் என்று நினைக்கிறேன்... என் கணிப்பு சரியா????

சுதா SJ said...
Best Blogger Tips

பாத்திர பெயர்களில் தமிழ் அவ்ளோ அழகு..... :)

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

வாவ்... புது தொடரா...... ஆரம்பமே நம்மூரில் இருக்கும் பிரமையை கொடுக்குது.... பேசுறது எல்லாம் கேக்கும் போது ஆசையா இருக்கு.... இங்கே நம்ம தமிழ் இப்போ எவ்ளோ மாறிட்டுது.....!!!! நிருபன் ரியலி சூப்பர்.... தொடர் சஸ்பென்ஸ் கலந்து பயணிக்கும் என்று நினைக்கிறேன்... என் கணிப்பு சரியா????
//

வணக்கம் துஸி,
இது ஓர் தொடர் அல்ல.,
இச் சம்பவத்தினைச் சிறுகதையாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் கதை நீண்டு விட்டது. ஆகவே நெடுங் கதையாக எழுதியுள்ளேன். அடுத்த பாகத்துடன் நிறைவடைந்து விடும் பாஸ்.

சுதா SJ said...
Best Blogger Tips

என்ன பாஸ்.... இப்படி ஒவ்வொரு நாளும் பதிவு போட்டா.... நாங்க எப்படி படிக்கிறதாம்!!! நீங்க ஒவ்வொரு நாளும் பதிவிடுவதால் உங்கள் நிறைய பதிவுகளை மிஸ் பண்ணுறேன்..... ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் இடையே ஒரு நாள் இடைவெளி விட்டால் கூட நாங்களும் உங்க பதிவுகளை மிஸ் பண்ணாம படிக்க முடியும். அவ்ளோ நேர பற்றாக்குறை பாஸ்..... அவ்வ..... சரி விடுங்கோ..... :)

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

பாத்திர பெயர்களில் தமிழ் அவ்ளோ அழகு..... :)
//

இப் பெயர்கள் அனைத்துமே எம் மண்ணில் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாத்திரங்கள் பாஸ்..

இச் சம்பவத்தில் வரும் பாத்திரங்கள் பற்றி நீங்கள் அறியவில்லையா?
ஹி....ஹி..

சுதா SJ said...
Best Blogger Tips

நிரூபன் said...
@துஷ்யந்தன்

வாவ்... புது தொடரா...... ஆரம்பமே நம்மூரில் இருக்கும் பிரமையை கொடுக்குது.... பேசுறது எல்லாம் கேக்கும் போது ஆசையா இருக்கு.... இங்கே நம்ம தமிழ் இப்போ எவ்ளோ மாறிட்டுது.....!!!! நிருபன் ரியலி சூப்பர்.... தொடர் சஸ்பென்ஸ் கலந்து பயணிக்கும் என்று நினைக்கிறேன்... என் கணிப்பு சரியா????
//வணக்கம் துஸி,
இது ஓர் தொடர் அல்ல.,
இச் சம்பவத்தினைச் சிறுகதையாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் கதை நீண்டு விட்டது. ஆகவே நெடுங் கதையாக எழுதியுள்ளேன். அடுத்த பாகத்துடன் நிறைவடைந்து விடும் பாஸ்./////ஆஹா...... ஹும்..

நிருபன் பாஸ்.... ஈழ பதிவுகளுக்கு நடுவே ஒரு கற்பனை தொடர் ஒன்று ஆரம்பிக்கலாமே.... (ஈழ நினைவு தொடரர்களைசொல்லவில்லை) ஆரம்பித்தால் கலக்குவீங்க என்று தெரியும்... அதை படிக்க ஆவலாய் இருக்கேன் பாஸ்... காதல் கவிதைகளில் நிருபனின் ரொமான்ஸ் தெரியுதே.... தொடர் என்றால் சொல்லவே தேவை இல்லை.... ப்ளீஸ் ஆரம்பியுங்க பாஸ்.

சுதா SJ said...
Best Blogger Tips

நிரூபன் said...
@துஷ்யந்தன்

பாத்திர பெயர்களில் தமிழ் அவ்ளோ அழகு..... :)
//

இப் பெயர்கள் அனைத்துமே எம் மண்ணில் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாத்திரங்கள் பாஸ்..
இச் சம்பவத்தில் வரும் பாத்திரங்கள் பற்றி நீங்கள் அறியவில்லையா?
ஹி....ஹி..<<<<<<<<<<<<<<<<<<<<<<நிறைய அறிந்து இருக்கேன்.... எங்கள் சித்தியை பார்க்க யாழ்ப்பான இயக்க பெண் காம்பில் போய் ரெண்டு மாசம் தங்கி இருந்து இருக்கேன்.... அப்போ இவர்களுடன் சேர்ந்து சமைக்கிறது விளையாடுறது என்று உந்த பெயர்கள் அங்கே ரெம்ப பிரபலம்.

ad said...
Best Blogger Tips

""இக் கதையில் வரும் முகில் எனப்படும் முகிலரசன் நான் அல்ல.""//

நம்புறம்.
மிகுதி எப்ப வரும்.?மொத்தமா பாத்திட்டு கருத்த சொல்லலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
என்ன பாஸ்.... இப்படி ஒவ்வொரு நாளும் பதிவு போட்டா.... நாங்க எப்படி படிக்கிறதாம்!!! நீங்க ஒவ்வொரு நாளும் பதிவிடுவதால் உங்கள் நிறைய பதிவுகளை மிஸ் பண்ணுறேன்..... ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் இடையே ஒரு நாள் இடைவெளி விட்டால் கூட நாங்களும் உங்க பதிவுகளை மிஸ் பண்ணாம படிக்க முடியும். அவ்ளோ நேர பற்றாக்குறை பாஸ்..... அவ்வ..... சரி விடுங்கோ..... :)//

உங்கள் கருத்தினைக் கவனத்தில் கொள்கின்றேன் பாஸ்..
எனக்கு பள்ளிக் கூடம் தொடங்கினால் எழுத நேரம் இருக்காது பாஸ்.
அதான் இப்பவே கை வசம் உள்ள விடயங்களை எழுதலாம் என்றி தீர்மானித்து இப்போது பதிவுகள் எழுதுகின்றேன் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@எஸ்.பி.ஜெ.கேதரன்

இக் கதையில் வரும் முகில் எனப்படும் முகிலரசன் நான் அல்ல.""//

நம்புறம்.
மிகுதி எப்ப வரும்.?மொத்தமா பாத்திட்டு கருத்த சொல்லலாம்.
//

ஏன் பாஸ்,
நம்பித் தானே ஆகனும்! ஹி...ஹி....

மிகுதி என்ன நடந்திருக்கும் என்று அறிந்திருப்பீங்க தானே... இல்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

நல்ல ஒரு காதல் கதை தொடங்குகின்றது... ரசனையான ஆளுய்யா நீ...மாதுளங்கனி!தெரியுதா?நல்ல எழுத்துநடை....

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்!
துஷி சொல்வதைபோல நீங்க ஏன் கொஞ்சம் இடைவெளி விட்டு பதிவ போடக்கூடது? இத நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன்.. அது சரி நீங்க இன்னும் பள்ளிக்கூடம் போகிறீங்களா?

shanmugavel said...
Best Blogger Tips

நல்ல தமிழ்நடையில் படிக்க சுகம்.அங்கும் பேருந்து அப்படித்தான் நிரம்பிவழியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

நல்ல ஒரு காதல் கதை தொடங்குகின்றது... ரசனையான ஆளுய்யா நீ...மாதுளங்கனி!தெரியுதா?நல்ல எழுத்துநடை....
//

அண்ணே, இது கண்டிப்பாக காதல் கதையாக இருக்காது! ஹி...ஹி...
அடுத்த பாகத்தில உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாகத் தான் பதிவு வரும்!
வெயிட் பண்ணுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

துஷி சொல்வதைபோல நீங்க ஏன் கொஞ்சம் இடைவெளி விட்டு பதிவ போடக்கூடது? இத நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன்.. அது சரி நீங்க இன்னும் பள்ளிக்கூடம் போகிறீங்களா?
/

அண்ணே எட்டு மணித்தியால இடை வெளி போதாதா?
ஹி....ஹி...

இப்ப பள்ளிக் கூடம் இல்லே அண்ணே ஏதோ யுனிவர்சட்டியாம் யுனிவர் சட்டி! அங்கே போறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

நல்ல தமிழ்நடையில் படிக்க சுகம்.அங்கும் பேருந்து அப்படித்தான் நிரம்பிவழியுமா?
//

ஆமா அண்ணே..நெருக்கமான பேருந்துகள் தான் நம்ம ஊரிலையும்!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!நல்லாயிருக்கு.

மின் வாசகம் said...
Best Blogger Tips

கொஞ்சம் பொறுங்க பாஸ் ! இதோப் படிச்சிட்டு வரேன் !

Mathuran said...
Best Blogger Tips

நிரூ நல்ல தொடர்.. பல விடயங்கள் ஞாபகம் வருது. இவர்கள் கடமையை செய்வதில் உள்ள பயத்துடன் கூடிய ஆர்வமும் அதேவேளை சக இளைஞர்களை போலவே பல ஆசைகள் இருந்தாலும் மேலிடத்திற்கு பயந்து கட்டுப்பாடக இருப்பதையும் அழகாக சொல்லியிருக்கிறீங்க.

Mathuran said...
Best Blogger Tips

நிரூ எனக்கும் துஷியின் பிரச்சினைதான்... நேரப்பிரச்சினை இருந்தால் எழுதி Draft இல் வைத்துவிட்டு பின்னர் பப்ளிஸ் பண்ணலாமே

ஆகுலன் said...
Best Blogger Tips

அண்ணே தொடர்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!

Sivakumar said...
Best Blogger Tips

//இப்படி ஓர் உடையில் இது வரை ஒரு பெண்ணை நான் என் வாழ் நாளில் இன்று வரை காணவில்லையே என எண்ணிப் பெரு மூச்சு விட வைக்கும் ஊதா நிற மேற் சட்டை. அந்த மேற் சட்டை வெட்டினூடாக வெளியே பிதுங்கி விழுந்து விடத் துடிக்கும் - என்னை ஏந்த உன் கைகள் வாராதா என மனதின் தவிப்பை தூண்டும்//

யப்பா...உழைப்பாளி படத்தில் ரஜினி கவுண்டமணியை உசுப்பேற்றுவது போல் உள்ளது தங்கள் வர்ணிப்பு.

Sivakumar said...
Best Blogger Tips

//முகில் எனப்படும் முகிலரசன் நான் அல்ல.//

அதற்கே இப்படி ஒரு வர்ணிப்பென்றால்..நீங்கள் அவ்விடத்தில் இருந்திருந்தால்?

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்!வர்ணனைகள் பிரமாதம்!

கதை சொல்லும் விதம காட்சிகளை கண் முன்னே கொணர்கிறது.
நல்லவேளை கடைசியில் முகில் நீங்களில்லை என்று சொல்லி விட்டீர்கள் எல்லோரும் அந்த இடத்தில உங்களை வைத்தே படித்திருப்போம்.(சில இடங்களில் மட்டும்)அவ்வவ்

ம.தி.சுதா said...
Best Blogger Tips

///நல்ல வேளை! வழமையாக நாங்கள் (போராளிகள்) போடும் புட்டுக் குழல் (போத்தல் கால்) ஜீன்ஸினை இன்று நான் அணியவில்லை.////

கற்பனை பண்ணிப் பார்த்தேன்...

கண் முன் அவர்கள் நினைவு தான்டா ஆடுது...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails