Saturday, December 31, 2011

செக்சுவல் ப்ளே பாய் ஷேண் வோர்ன் - கிசு கிசு & கிளு கிளு அலசல்!

பிரபலங்கள் என்றால் எப்போதும் ப்ராப்ளங்கள் சூழ்ந்து கொள்வதும், அப் ப்ராப்ளங்கள் சுவாரஸ்யமாக அமையும் பட்சத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து கொள்வதும் இயல்பான ஓர் விடயமாகும். கிரிக்கட்டில் தன் சுழற் பந்து மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரனா ஷேர்ன் வோர்ன் அவர்கள் கிரிக்கட்டில் புகழ் பெற்றுப் பிரபலமாக வாழ்ந்ததனைப் போன்று கிசு கிசுக்களுக்கும், மன்மத லீலைகளுக்கும் பஞ்சம் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றார். உலகப் புகழ் பெற்ற பிரபலங்கள் சிக்கல்களில் மாட்டி விட்டாலே போதும்! பத்திரிகைகளின் முன் பக்கத்தில் வர்ணமயமான அட்டைப் படத்துடன் கூடியவாறு சூடான செய்திகளைப் போட்டு நல்ல வருமானமும் ஈட்டி விடுவார்கள் பத்திரிகையாளர்கள்.
1969ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் உள்ள Upper Frentree Gully எனும் இடத்தில் செப்டெம்பர் மாதம் 13ம் திகதி பிறந்தவர் தான் உலகளவில் பல செக்சுவல் சர்ச்சைகளில் சிக்கினாலும் தன் மென்மையான புன்னகை மூலம் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்ற ஷேர்ன் வோர்ன் அவர்கள். 1992ம் ஆண்டு தன்னுடைய கிரிக்கட் வாழ்க்கையினைத் தொடங்கிய வோர்ன் அவர்கள் உலகளாவிய ரீதியில் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 708 விக்கட்டுக்களை வீழ்த்தி, அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையினை இலங்கை அணியைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் தனதாக்கிக் கொள்ளும் வரை தன்னகத்தே வைத்திருந்தார்.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் என்ற வகையில் இந்த ஷேர்ன் வோர்ன் அவர்களும் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சில் தவறு உள்ளதென இறுதி வரை குற்றஞ்சாட்டி வந்ததோடு, மைதானத்தில் ஹர்பஜன் சிங், மற்றும் சில கிரிக்கட் வீரர்களோடும் முரண்பட்டு கிரிக்கட்டில் ஒரு Naughty Boy எனும் பெயரினைப் பெற்றிருந்தார். அத்தோடு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூனா ரணதுங்காவைத் தனக்குப் பிடிக்காது என்று 1999ம் ஆண்டு The Times சஞ்சிகையில் அர்ஜூனாவை தரம் தாழ்த்திக் கூறி சர்ச்சையில் மாட்டியிருந்தார்.

தனிப்பட்ட வாழ்கையில் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாக விளங்கும் வோர்ன் அவர்கள், பாரதக் கதையில் வரும் அருச்சுனன் போன்று தான் போகும் இடமெங்கும் பெண்களால் சர்ச்சைகளிற்கு ஆளாகும் பெருமையினைப் பெற்றிருக்கிறார். இந்தச் சர்ச்சைகளின் காரணமாகவே தன் மனைவியான Simon Callahan அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு, ஆண்டுக்கொரு பெண்களோடு ரகசியமாகவும், பகிரங்ககமாகவும் உலா வந்து கொண்டிருக்கும் பெருமையினை ஓர் காலத்தில் பெற்றிருந்தார் வோர்ன். இவருக்கும் செக்ஸிற்கும் இடையிலான தேடல்களும், இவர் தேடிப் போகும் பெண்களும் எப்போதும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாதோர்களாகவே விளங்குகின்றனர்.
கிரிக்கட் போட்டி இடம் பெறும் மைதானத்திற்கு வெளியே சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கை செய்யும் நோக்கில் வோர்ன் நடந்து கொண்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அப்புறமா அந்த கிசு கிசு பலூன் போன்று உடைந்து விடவே, புதிதாக பெண்கள் தொடர்பான கிசு கிசுக்களில் அகப்பட்டுக் கொண்டார். பிரபலங்களோடு கிசு கிசுக்களில் ஈடுபடுவதன் மூலம் அதிகளவான பணத்தினைப் பிரபலங்களிடமிருந்து பெண்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார்களோ? என்னவோ? ஷேர்ன் வோர்னுடன் கிசு கிசுக்களில் ஒட்டிக் கொண்ட ஒவ்வோர் பெண்களும் மில்லியன் டாலர்களை வோர்னின் திறை சேரியிலிருந்து இனாமாக கேட்டுத் தான் வோர்னை ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

தென் ஆபிரிக்காவில் ஆஸ்திரேலிய அணியனர் கிரிக்கட் ஆட்டத்தில் பங்குபற்றுவதற்காக தங்கியிருந்த வேளை ஆபாச குறுந்தகவல் அனுப்பினார் எனும் சர்ச்சையில் சிக்கி, தென் ஆபிரிக்காவில் வைத்தே தன்னுடன் சர்ச்சையில் ஈடுப்பட்ட பெண்ணிற்கு பல மில்லியன் டாலர்களை வழங்கினார். "ஆடின கையும், பாடிய வாயும் சும்மா இருக்காது" என்பதற்கு அமைவாக தன் மனைவியிடமிருந்து 2005ம் ஆண்டு பிரிந்த வோர்ன் அவர்கள் அதன் பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஓர் பாலியல் பட நாயகியினை மூன்று தடவைகள் உடலுறவிற்கு அழைத்து, பின்னர் ஆபாச சாட்டிங் செய்து சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

அதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள அதி வேக நெடுஞ்சாலை ஒன்றில் வாகனத்தினை ஓரமாக நிறுத்தி விட்டு ஓர் மாடல் பெண்ணுடன் முத்தமிட்டுக் கொண்டிருக்கையில் யாரோ போலிசுக்கும் அறிவித்து,திருட்டுத் தனமாக வீடீயோ பிடித்து வெளியிட்டு விட்டார்கள்.அப்புறம் சொல்லவா வேண்டும்?கொஞ்ச காலம் அந்த சர்ச்சையில் சிக்கியிருந்தார். இது மட்டுமா? புகைப் பிடித்தலுக்கு எதிரான விளம்பரம் ஒன்றில் Nicotine Patch கம்பனியுடன் ஒப்பந்தம் செய்து விட்டு, இரகசியமாக சிகரட் பிடிக்கையில் சிறுவர்கள் சிலர் கூட்டமாகச் சேர்ந்து போட்டோ எடுத்து உலகெங்கும் பரப்பி விட்டார்கள்.

புகைப் பிடித்தலுக்கு எதிரான கம்பனியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு விட்டு, புகைப் பிடித்துக் கொண்டிருப்பது அக் கம்பனிக்கு எரிச்சலை ஏற்படுத்தியதோ என்னவோ? அவர்களும் ஒரு தொகை பணத்தினை இனாமாக வோர்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். 2006ம் ஆண்டு உள்ளாடையுடன் இரு மாடல்களுடன் தனி அறையில் இருக்கையில் ரகசியமாகப் படம் பிடித்து News of the World Tabloid பத்திரிகை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. 2010ம் ஆண்டு இந்தியத் தொழிலதிபர் அருண் நாயாரின் மனைவியும், ஹாலிவூட் நடிகையுமான லிஸ் எலிசபெத் ஹேர்லி (Liz Elizabeth Hurley) அவர்களுடன் வோர்ன் காதலில் வீழ்ந்தார் என்று தகவல்கள் வந்தன.
வோர்ன் அவர்களின் டுவிட்டர் அக்கவுண்ட் ஸ்டேட்டஸ்களும் லிஸ் ஹேர்லியுடனான காதல் லீலைகளை உறுதி செய்திருந்தன. இக் காலத்தில் எலிசபெத் ஹேர்லி அவர்கள் தனது கணவர் அருண் நாயாரிடமிருந்து விவாகாரத்தி பெற்றிருந்த காரணத்தினால் இவர்களின் உறவு உண்மை என்று உலகம் நம்பியிருந்தது.அது போலவே நீண்ட நாட்களாக ரகசியமாக இருவரும் பழக ஆரம்பித்து, தற்போது பொது இடங்களில் தோன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற நட்சத்திர வீரர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் தன்னுடைய Fiance ஹேர்லி என்று ஓர் சிறப்பு அறிமுகமும் கொடுத்திருக்கிறாராம் வோர்ன்.

இந்தியாவில் இடம் பெறும் ஐபிஎல் கிரிக்கட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வோர்ன் அவர்கள், ஆஸ்திரேலியாவின் Channel Nine தொலைக்காட்சிக்காக மூன்று இலட்சம் டாலர்கள் வருட வருமானம் எனும் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கட் வர்ண்ணையாளராகவும் இருக்கின்றார். இதன் மூலம் பணத்திற்கும் குறைவில்லை. சர்ச்சைகளிற்கும் குறைவில்லை என்ற ரீதியில் ஷேர்ன் வோர்ன் உலகெங்கும் உள்ள கிரிக்கட் ரசிகர்களின் மத்தியில் பரப்பரப்பாக ப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இப் பதிவிற்கான தகவல்கள் அனைத்தும் இணையத் தளத்தில் உள்ள ஆங்கில சஞ்சிகைகள், மற்றும் வீக்கிப் பீடியா ஆகியவற்றிலிருந்து எடுக்கபப்ட்டு மொழி பெயர்க்கப்பட்டவை. 

பிற் சேர்க்கை: இந்தப் பதிவு தான் என்னுடைய முதலாவது கிரிக்கட் பதிவு. நண்பர்களே இப் பதிவு தொடர்பான உங்களின் உள்ளக் கருத்துக்களை வரவேற்கிறேன். 

நாற்று வலைப் பதிவோடு இணைந்திருக்கும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! 

16 Comments:

Mahan.Thamesh said...
Best Blogger Tips

நண்பா இனிய காலை வணக்கம் .
ஆண்டின் கடைசி தினத்தில் நீர் பதிவிட்ட ஒரு கடைசி பதிவு தரமானதாக இருக்க கூடாத,?
போயும் போயும் இந்த காவலி பற்றி விக்கிபிடியாவில தேடி டைம் வெஸ்ட் பண்ணியிருக்காய் நண்பா .
சும்மா தான் LOL

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh
நண்பா இனிய காலை வணக்கம் .
ஆண்டின் கடைசி தினத்தில் நீர் பதிவிட்ட ஒரு கடைசி பதிவு தரமானதாக இருக்க கூடாத,?
போயும் போயும் இந்த காவலி பற்றி விக்கிபிடியாவில தேடி டைம் வெஸ்ட் பண்ணியிருக்காய் நண்பா .
சும்மா தான் LOL//

வணக்கம் நண்பா,
இந்த வருடத்தின் இறுதிப் பதிவு இன்று மாலை வரும். ஹே...ஹே...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

எல்லா மேட்டர்களையும் கலந்து கட்டி அடிக்கும் நீங்கள் கிரிக்கெட்டை மட்டும் ஏன் விட்டுவைச்சிருக்கீங்க என்று எனக்கு நெடுநாட்களாகவே உங்கள் வாசகனாக ஒரு குறையிருந்தது.முதல் கிரிக்கெட் பதிவை இந்த வருட இறுதியில் தந்திருக்கீங்க பாராட்டுக்கள் பாஸ்

வோர்ன் எந்த அளவுக்கு பிரபலமானவரோ அந்த அளவுக்கு சர்சைகளில் சிக்குபவர்.

உங்கள் பதிவு சிறப்பாக இருக்கு தொடர்ந்து இடைக்கிடையில் பல கிரிக்கெட் பதிவுகளையும் தரவேண்டும் என்பது ஒரு வாசகனாக என் எதிர்பார்ப்பாகும்

தர்ஷன் said...
Best Blogger Tips

முதலில் புதுவருட வாழ்த்துக்கள்

ஓ இதுதான் கிரிக்கெட் பதிவா? பொதுவாக இலங்கையர்களுக்கு பிடிக்காத வீரர் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு துடுப்பாட்ட வீரர்களில் அரவிந்தவை எவ்வளவு பிடிக்குமோ அதே போல் பிடித்த பந்து வீச்சாளர் இவர்தான்.
அர்ஜுன ஓய்வுப் பெற்ற பின் அவரை ஒரு நாள் பார்த்தவர் அர்ஜுன ஒரு செம்மறியாட்டை முழுசாய் விழுங்கியவர் போல இருந்தார் என சொல்லியிருந்தார். ஊக்க மருந்து பாவித்து ஒரு வருட போட்டித்தடை பெற்றமையும் இவரது சாதனைகளில் சேர்க்கப்பட வேண்டியதுதான்.

rajamelaiyur said...
Best Blogger Tips

இன்று :

பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

rajamelaiyur said...
Best Blogger Tips

திறமையான பந்து வீசளார் .. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளால் தனது பெயரை கெடுத்து கொண்டார்

மகேந்திரன் said...
Best Blogger Tips

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...
Best Blogger Tips

சர்ச்சை திலகம்னு சொல்லுங்க ஹிஹி!

Unknown said...
Best Blogger Tips

கிசுகிசு...ராசா.....ரூட்டை மாத்திறாதப்பா.....நல்ல தொகுப்பு...

யோவ் விக்கி யாரைய்யா சொல்லுறாரு? சர்ச்சை திலகம்ன்னு.......ஹிஹி வந்த வேலை முடிஞ்சது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்..!
இதில எங்கையா கிறிக்கட் இருக்கு..? 

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

முதல் பதிவே அருமை. தொடர்ந்தும் கிரிக்கட் மற்றும் விளையாட்டு பதிவுகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம்.. வாழ்த்துக்கள். உங்களிற்கும் உங்கள் குடிம்பத்திற்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

Anonymous said...
Best Blogger Tips

உங்களுக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஹேமா said...
Best Blogger Tips

பிறக்கும் வருடம் இனிதாகப் பிறக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள் நிரூ !

Anonymous said...
Best Blogger Tips

ஷேம் வார்னே?

சுதா SJ said...
Best Blogger Tips

ஆஹா.... நீங்களும் விளையாட்டு பதிவா..ஆ...... அவ்வ்.....

இனி ராஜ் இங்கேயே இருப்பானே.... :)))

பாஸ்..... அவரின் மைதான விளையாட்டை விட மற்ற விளையாட்டுக்கள் சுவராசியமாய் இருக்கு.... ஹீ ஹீ...

shanmugavel said...
Best Blogger Tips

பிரபலத்தை பற்றிய தெரியாத விஷயங்களை நிறைய சொல்லியிருக்கிறீர் சகோ!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails