Saturday, December 24, 2011

நடிகை -கிசு கிசு - பரபரப்பு - ஏமாறும் தமிழர்கள்!

தீந்தை பூசப்படாத வானம்
தீ போல தகிக்கும் பாலை வனம்
சாந்தமான தென்றலென வருடும் ஞாபகங்கள்
சரசமாடும் சினிமா மீதான போதை! 
தொட்டில் பழக்கமாய் 
ஒட்டிக் கொள்ளும் நினைவலைகள்
கிட்ட வந்து நெருங்காமலே தினமும்
கிச்சு கிச்சு மூட்டும் நடிகைகளின் முகங்கள்
அலை பாயும் மனதிடையே இருக்கும்
அழுக்கினை அகற்றிட நாளும் 
பத்திரிகை நடுப் பக்கத்தினை நாடும் நரக மனம்
இவை யாவற்றுக்கும் நடுவே முனகும்
நடிகையின் உடல் மீதான நீங்காத இச்சை! 

தேடல்கள் பலவாறாக இருக்கையில்
தமிழர் உடல் நாடல்கள் மட்டும்
நடிகை -நிர்வாணம் - கிசுக்கள் என
பலவற்றை வேண்டி நாளும் யாகம் நடத்தும்!
வேஷங்கள் அற்ற உலகம் இல்லையே என்பதால்
நம் மனங்களோ மதில் மேல் பூனையாய் தவழும்!

காட்சிகள்- சித்தரிப்புக்கள் - வர்ணிப்புக்கள் தாண்டி
கனவிலும் நனவிலும் சிந்தனைகள் எழுந்தாடும்
மனச் சாட்சியாய் எம்முள் ஏதும் உண்டா என 
அறிய நினைக்கையிலோ மனிதம் வேஷம் போடும்!
அந்தி மாலை - மென்மை காற்று - அழுக்கு நீருள்
அமிழ்ந்த மனிதர் மனச் சிந்தையினை துடைக்க
இன்று வரை வழிகள் ஏதும் இல்லை! 
சந்தியிலே நின்றாலும் சரசமாடும் மங்கை வாசம்
இல்லையென நினைக்கும் நொந்து போன
மனங்களுக்குத் தீனியான் பிட்டு படம்!

சமூகம்- கலாச்சாரம் - சீரழிவு வாழ்க்கை முறையின் முன்னே
வேண்டப்படாத தொழு நோய்க் காரியாக பிட்டு படம்!
சிதறும் நினைவுகளை ஒன்று திரட்டி
குவியப் பார்வையினூடே ஊடு புகட்டி
விரசம் நிறை உணர்வோடு வீதியில் தெறித்து வீழும்
உயிரணுக்களாய் பற்றிக் கொள்ளும் பரபரப்பு!

மனம் - கோயில்- மௌனச் சிறை கலந்த புன்னகை
எனத் தினம் சொல்லி வாழும் மனித வாழ்வு
பிணம் தின்னும் பேய்களாகி மீண்டும் மீண்டும்
தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கு அடையாளம் கொடுத்து
இணையத் தளங்களிலும் இரவல் மனங்களிலும்
இன்ப சுகம் வேண்டி தேடும் - நடிகை உடல் பார்க்க ஆவல் நீளும்!

பிற் சேர்க்கை: இப் பதிவின் தலைப்பு சிதறுண்ட சிறிய சொற் பிரிப்புக்கள் ஊடே எழுதப்பட்டுள்ளது. 


அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்! 


32 Comments:

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி
நலமா இர்கீன்களா ,?
கலக்கலான பதிவு

Mahan.Thamesh said...
Best Blogger Tips

எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ;

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

ம் ...

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,
நலமா?
//////////சமூகம்- கலாச்சாரம் - சீரழிவு வாழ்க்கை முறையின் முன்னே
வேண்டப்படாத தொழு நோய்க் காரியாக பிட்டு படம்!//////////////

கலாச்சாரச் சீரழிவை பற்றி அவர்களுக்கு என்ன கவலை.
இன்றைய தினம் இவ்வளவு பணம் வந்ததா.. அவ்வளவுதான்...
பணத்திற்காக எதையும் விற்கத் தாயாராக உள்ளவர்கள்..

FOOD NELLAI said...
Best Blogger Tips

புத்தாண்டு வாழ்த்துக்கள் நிரூ.

FOOD NELLAI said...
Best Blogger Tips

காலையிலேயே கவர்ச்சி தலைப்பா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

யாழ் அர்ஜுன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ
கலக்கலான பதிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


எம்.ஜி.ஆர் ஒரு சகாப்பதம் --வாழ்வும் வரலாறும் ஒரு பதிவு --மறக்க முடியாதவரை நினைத்து பார்க்கும் நேரம்

மனசாட்சி said...
Best Blogger Tips

வணக்கம்

காலங்காத்தாலே...ஹிம் படிச்சிட்டு வாரேன்

மனசாட்சி said...
Best Blogger Tips

கால்கட்டு போட்டே ஆகனும்.. நிலைமை வீரியம் அடையும் முன்..

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

பாஸ் எவனோ மைனஸ் ஒட்டு போட்டிருக்கான்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

இனிய காலை வணக்கம் பாஸ் தலைபை பார்த்திட்டு எதோ பிட்டு பட லிங் இணைச்சு இருக்கீங்க என்று வந்து பல்பு வாங்கிய பலரின் நானும் ஒருவன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

ஆனாலும் அந்த நயன்தாரா படம் சூப்பர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

காலங்காத்தால நல்லலலல பதிவு.. நானும் அப்பிடி எண்ணித்தான் பலப் வாங்கிட்டேன்.. ஹி ஹி ஹி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Best Blogger Tips

தலைப்பு வில்லங்கமா இருக்கே மச்சி..


வாழ்த்துக்கள் ..

சசிகுமார் said...
Best Blogger Tips

????

விக்கியுலகம் said...
Best Blogger Tips

ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்ல ஹிஹி!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்!
என்னய்யா காலங்காத்தால.. இப்பிடி ஒரு தலைப்போட வந்து வந்து நிக்கிற...!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அடபாவி, தலைப்பை பார்த்து அவசரமா வந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

veedu said...
Best Blogger Tips

அடப்பாவி....இப்பத்தான் ஒரு வலைதளத்தில நயன்தாராவின்...18+படம் அப்படின்னு போட்டு நயன்தாராவின் 18 வயது புகைப்படம் போட்டு ஹிட்ஸ் ஏத்திகிட்டு இருக்கான்....

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
கவிதை வித்தியாசமான முயற்சி தனிதனி வார்த்தைகளில் சொல்லாடலா...
உன்னை யாரோ நல்லா கெடுத்துவெச்சிருக்கிறாங்க.....தம்பி
சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பா........

சீனுவாசன்.கு said...
Best Blogger Tips

நாற்று!நல்லா நடுறீரு!

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

அருமை .. இப்படிக்கு தலைப்பை பார்த்து ஏமாந்த அப்பாவி

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

சினிமா வெறித்தனாத்தாலும், கவர்ச்சி என்ற போர்வையில் காட்டப்படும் ஆபாசத்தாலும் சீரழிந்து போகும் சமூகத்தை சாடியுள்ளீர்கள்...கவிதை நன்றாக உள்ளது..

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

பாஸ் நத்தார் தின வாழ்த்துக்கள் :))

அப்புறம் அனுமதி இன்றி நம்ம நயன்தாரா பெயரை பதிவில் பயன்படுத்தியமைக்கு பிரவுதேவா சார்பில் என் கடும் கண்டனங்கள்... அவ்வவ்

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

உண்மையில் நடிகைகள் வாழ்வு பாவப்பட்டது.... என்றோ செய்யும் தவறுகள் அவர்களை எப்பவும் பின் தொடருதே :((

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

சரி விடுங்க பாஸ்.
உங்க கவிதையை பார்த்து நாங்க திருந்தவா போறோம்..
அல்லது அவர்களும் அப்படி நடிக்காமல் இருக்கவா போறார்கள்....
ஹீ ஹீ

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

மனிதாபிமானம் கொண்ட கவிதை பாஸ்.

shanmugavel said...
Best Blogger Tips

தமிழ்சினிமா,விடலைத்தமிழன் பற்றி பிட்டுப்பிட்டு வைத்துவிட்டீரே சகோ!

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

உண்மைகள் கவிதையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கோவிந்தராஜ்,மதுரை. said...
Best Blogger Tips

வணக்கம்

காலங்காத்தாலே...ஹிம் படிச்சிட்டு வாரேன் அழகே அழகு

நீங்கள் பதிவரா? அப்படிஎன்றால் உங்களுக்குத்தான் !!

sirippousingaram said...
Best Blogger Tips

அவர்கள் கண்டவன் கை பட்டஎச்சில் இலைகள், ஜிகினா போர்த்திய வியாதிப் பிண்டங்கள்,

சுழியம் said...
Best Blogger Tips

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.

அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.

அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.

சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails