Friday, December 16, 2011

வன்னி மக்களை துரோகிகளாக சபிக்கும் வல்லூறுகள்!

ஈழ வள நாட்டின் வடபால் அமைந்துள்ள வன்னிப் பகுதியினுள் மன்னார், வவுனியா, முல்லைத் தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும். ஈழத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான சமரச முயற்சிகள் முறிவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மீண்டும் யுத்த மேகங்கள் கருக் கொள்ளத் தொடங்கியது. இதனால் இறுதிப் போருக்கான இலங்கை அரச படைகளின் நகர்வுகளும் வன்னி மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த முல்லைத் தீவு, மன்னார் மேற்கு, கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதி ஆகிய பிரதேசங்களினூடாகத் தான் இடம் பெற்றது.
வன்னிப் பகுதியில் சமாதான முயற்சிகள் நிலவிய காலத்தில் போராட்டத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பாதோர், வெளிநாட்டிற்குச் செல்வதற்கான விசா உள்ளவர்கள், ஸ்பான்ஸர் அடிப்படையில் புலம் பெயர்ந்து செல்லக் கூடியவர்கள் மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டோர் எனப் பல தரப்பட்ட மக்கள் புலிகளின் பகுதியிலிருந்து வெளியேறியிருந்தார்கள். சமரச முயற்சிகள் முறிவடைந்த பின்னர் ஈழத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்த போது புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்; "யாராவது வர விரும்பினால் வரலாம்" எனும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள். இந்த அறிவிப்பின் காரணமாக தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணப் பகுதியிலிருந்து இராணுவ அடக்கு முறையின் கீழ் வாழ விரும்பாத தமிழர்களும் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தாமாக விரும்பிக் குடியேறினார்கள். 

11.08.2006 அன்று A9 நெடுஞ் சாலை மூடப்பட்டு போர் ஆரம்பித்த போது போராட்டத்திற்கு ஆதாரவான மக்களும், தம் பிள்ளைகளை, உறவினர்களை விடுதலைப் போரிற்கு விதையாக்கிய உறவுகளும்,மற்றும் போராளி குடும்பங்களும், வெளி மாவட்டங்களினைச் சேர்ந்த அரச ஊழியர்களும் தான் வன்னிக்குள் தங்கியிருந்தார்கள்.வன்னிப் பகுதியினைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் போர் நடவடிக்கையினை ஆரம்பித்த போது அங்கிருந்த வன்னி மக்களில் அதிகளவானோர் தாமாக விரும்பி ஆயுதப் பயிற்சியினைப் பெற்றிருந்தார்கள். புலிகளுடன் இணைந்து இம் முறை ஈழத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் தீவிர வெறியோடு எல்லைப் படையாக, பின் தள உதவிப் படையாகப் பங்களிப்பு நல்கினார்கள். வன்னி மாவட்டத்தினுள் இலங்கை இராணுவம் நுழைந்தால் அதிகளவானோரை உயிருடன் திரும்பிச் செல்ல அனுமதிப்பதில்லை எனும் வெறியுடன் தான் பெருமளவான மக்கள் அங்கிருந்தார்கள்.

புலிகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு முன்பதாகப் பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு நெற்றியில் குங்குமமிட்டுப் போரிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்த வீரம் செறிந்த வரலாறு கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியிலும்,விசுவமடுப் பகுதியிலும் இடம் பெற்றிருந்தது.இவ்வாறு புலிகளைப் பலமாக நம்பி புலிகளால் இம் முறை தமது ஈழக் கனவிற்கு நிச்சயம் விடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்போடு தான் வன்னி மக்கள் பேரெழுச்சி கொண்டிருந்தார்கள்.இராணுவம் சமயோசிதமாக வன்னி மக்களின் உணர்வெழுச்சியினை அறிந்து கொண்டது. புலிகளை எதிர்க்க ஒரு இலட்சம் இராணுவத்தினரை இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்த போது புலிகள் குறைந்தளவு ஆளணியின் உதவியுடன், தம் மக்களின் பலத்துடன் போர் செய்தார்கள். 

இப்போது இராணுவத்திற்கு உள்ள பெரும் தலையிடி! மக்களிடமிருந்து புலிகளைத் தனிமைப்படுத்த வேண்டும்! 18 வயதிற்கு மேற்பட்டோர் வசிக்கும் வீடுகளிலிருந்து "வீட்டிற்கு ஒருவர் நாட்டைக் காக்க விரைந்து வர வேண்டும்" எனும் கொள்கை அடிப்படையில் ஆட்களைத் திரட்டுவதை சில பெற்றோர்கள் விரும்பாதிருந்தார்கள்.ஆனாலும் போராளிகளுக்கான கள முனைப் பணிகளை மகிழ்வோடு ஆற்றுவதில் சளைக்காதவர்களாக இருந்தார்கள். இந் நிலையினை எல்லாம் தன்னுடைய உளவாளிகள் ஊடாக அவதானித்த இராணுவம் மன்னார் உயிலங்குளம் வீதியினைக் கைப்பற்றிய பின்னர் வன்னி மக்கள் மீதான தாக்குதலை உக்கிரப்படுத்தியது. புலிகள் மீதான தாக்குதலை முழு மூச்சுடன் செய்வதை விடுத்து புலிகளை இயக்கும் நபர்கள் மீது தாக்குதல் நடாத்தினால் தான் புலிகளைத் தோல்வியடையச் செய்யலாம் என இராணுவம் முழுமையாக நம்பியது.

கண்மூடித் தனமாக விமான - ஆட்டிலறி- எறிகணை- பீரங்கி உந்து கணைத் தாக்குதல்களையும், பல்குழல் வெடிகணைத் தாக்குதலையும் கட்டவிழ்த்து விட்டது இலங்கை இராணுவம். மக்கள் குடியிருப்புக்கள் மீது ஓயாது மழை போன்று ஆட்டிலறி - பீரங்கி ஷெல்களை இலங்கை இராணுவம் பொழியத் தொடங்கியது. அதே நேரம் (NGO) எனப்படும் அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை வன்னியில் முடக்கியத்துடன், வன்னிப் பகுதிக்கு விநியோகிக்கப்படும் உணவு - மருந்துத் தேவைகளை இலங்கை இராணுவத் தரப்பு நிறுத்தத் தொடங்கியது. ஓயாத குண்டு மழை! தீராத பட்டினி அவலம்! உணவும் மருந்தும் இன்றி கண் முன்னே உறவுகள் சாகும் அவலம்! இவற்றையெல்லாம் அனுபவித்த வன்னி மக்கள் பகையினை எதிர்த்து மூர்க்கமாகப் போர் புரிந்த புலிகளோடு இருக்க விரும்புவார்களா?
ஒரு பகுதி மக்கள் புலிகளை விட்டுப் பிரிந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லத் தயாரானார்கள். புலிகள் தடுத்தார்கள். ஆனாலும் மக்களோடு முரண்பட்டுப் புலிகளும்,புலிகளோடு முரண் பட்டு மக்களும் தமது கருமங்களில் கண்ணெனச் செயற்பட்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அகதி முகாம்களை நாடிக் குடி பெயர்ந்தார்கள். இப்போது புலிகளோடு எஞ்சியிருந்த மக்கள். வைராக்கியம் கொண்ட, நெஞ்சுரம் கொண்ட போரில் பகையை எதிர்ப்போம் எனும் திடமான கொள்கை கொண்ட மக்களாகும். அந்த மக்களையும் இராணுவத்தினர் விட்டார்களா? ஒரு நாளில் மூவாயிரம் வரையிலான ஷெல்களைக் கூட மழை போன்று பொழிந்து தள்ளி விரட்டி அடிக்கத் தொடங்கினார்கள். உலக நாடுகள் அள்ளிக் கொடுக்க இலங்கை இராணுவம் நச்சுக் குண்டுகளை, கொத்துக் குண்டுகளை, பல்குழல் வெடி கணைகளை, ஆட்டிலறி எறிகணைகளை, மலைகளைப் பிளக்க வல்ல விமானக் குண்டுகளை தமிழர் தலை மேல் தள்ளிக் கொண்டிருந்தது. 

பாகிஸ்தான் விமானப் படையினருக்கு பின்லேடனைக் கொல்வதற்காக வழங்கப்பட்டிருந்த; கந்தஹார் பிரதேச மலைகளைக் குடைந்து சென்று தாக்கும் விமானக் குண்டுகளையெலாம் பிரபாகரன் வன்னியில் இருக்கும் இடங்கள் எனச் சந்தேகித்து மக்கள் தலை மேல் கொட்டி மகிழ்ந்தது அரசு. இப்போது சொல்லுங்கள்! இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்த வன்னி மக்கள் போரை விரும்புவார்களா? மூத்திரம் பெய்வதற்கு கூட எழுந்து நடக்க முடியாதவாறு ஓயாத தாக்குதல்கள்.உண்ண உணவு இல்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாதவாறு கண் முன்னே துடி துடித்து உறவுகள் இறக்கையில் பார்த்திருந்த கோர வலி. இறுதி யுத்தத்தின் பின்னே முள்ளிவாய்க்கால், கரையாம் முள்ளிவாய்க்கால், மாத்தளன் பகுதிப் பாலை வன வெப்பத்தின் தகிப்பினால் நாவறண்டு ஒரு சொட்டுத் தண்ணீருக்காக உயிர் வலிக்க கதறியழுது மயங்கி விழுந்த அவல நிலை.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு நாளிற்கும் மேலாக தண்ணீரோ உணவோ உண்ணக் கூட முடியாதவாறு இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு கொழுத்தும் வெய்யிலில் ஆமிக் கட்டுப்பாட்டினுள் வருவதற்காக காக்க வைக்கப்பட்ட மக்கள். மற்றும் காயத்துடன் குருதி வழிய வழிய துடி துடித்த உறவுகள், இவர்கள் எல்லாம் இன்று இன்னுமோர் போரை விரும்புவார்களா? மாதவிடாய் நாளின் போது கட்டுதற்கு துணி இன்றி தீட்டுச் சிந்த மணத்துடன் அந்நியன் முன்னே மண்டியிட்டு வரிசை கட்டி நின்ற சகோதரிகள்.இந்தச் சகோதரிகளைப் பார்த்தும் ஏதும் செய்ய முடியாதவர்களாக கை கட்டி நின்ற உறவுகள். இவர்கள் எல்லோரும் இன்னோர் போரை விரும்புவார்களா? தடுப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டு "ஒரு நாள் LTTE உடன் தொடர்புள்ளவர் யாராயினும் கை உயர்த்த வேண்டும்! நீங்களாக உங்களை அடையாளப்படுத்தினால் தண்டனை குறைவு. தப்பி விடுவீர்கள். நாமாக கண்டு பிடித்தால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்." என்று எச்சரிகையில் தன் மானம், நாட்டுப் பற்று அனைத்தையும் சந்தர்ப்ப சூழ் நிலையால் விலை கொடுத்த வன்னி மக்கள் இன்னோர் போரை விரும்புவார்களா?

அப்புறம் எதற்காக வன்னி மக்களை உசுப்பேற்றும் பாடல்களை எழுதும் உணர்வாளர்களை நாம் எல்லோரும் தலையில் ஏற்றிக் கொண்டாட வேண்டும்? இப்போது புலிகள் மீண்டும் எழுவார்கள்! மீண்டும் தமிழன் களங் காணுவான் என உசுப்பேற்றும் உணர்வாளர்களா எமக்குத் தேவை? இல்லையே! எமது மக்களுக்கான நல்லதோர் வாழ்வினைக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க கூடிய உணர்வாளர்கள் அல்லவா தேவை! போருக்கு எதிரானவர்களாக வன்னி மக்கள் இருப்பதில் என்ன தவறு கண்டீர்கள்? வன்னி மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் கொஞ்ச நஞ்சமா? "மலையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்று", இனியும் வன்னி மக்களை உசுப்பேற்றும் பாடல்களை எழுதிச் சிலர் மக்களின் உணர்வுகளை வியாபாரமாக்கும் போது வன்னி மக்கள் பொங்குவதில் ஏதும் தவறு உள்ளதோ?

ஈழத்தில் இப்போது என்ன தேனும் பாலுமா ஓடுகிறது? சினிமாவில் உள்ளோர்  நினைத்தால் இன்றைய ஈழ மக்களின் அவல நிலையினையும், இறுதிப் போரின் பின்னர் தம் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்ப பாடுபடும் அன்றாடங் காய்ச்சிகளின் நிலையினையும் படம் பிடித்து தமிழகத்திலிருந்தும், இந்திய மத்திய அரசிடமிருந்தும் உதவிகள் பெற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்தலாம் அல்லவா? இல்லாது விடின் தமிழக மக்களிடமிருந்தாவது ஈழத்தில் இயல்பு வாழ்விற்குத் திரும்ப முடியாது அல்லறும் பல முன்னாள் போராளிகளுக்கும்,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகள் கிடைத்திட அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தின் மூலம் இலங்கை அரசு உதவிகள் செய்திட வழி வகுக்கலாம் அல்லவா? இனியும் திருப்பி அடிப்பேன் என முகாரி இராகத்தில் மூச்சு வலிக்க கதறுவதனை விடுத்து, வாழ்வு என்றோ ஒரு நாள் கனியும் எனக் காத்திருக்கும் போராளிகளுக்காக, மக்களுக்காக தமது உணர்வுகளை வெளிப்படுத்தலாமே! 

பிற் சேர்க்கை: இப் பதிவு ஓர் உள் குத்துப் பதிவு என்று பதிவினை முழுவதுமாகப் படிக்காது யாராவது முடிவெடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!இப்படியான மனமுடையோர் தயவு செய்து பதிவின் நோக்கத்தினைத் திசை திருப்ப வேண்டாம்! இப் பதிவு ஓர் உள் குத்துப் பதிவு அல்ல! உதவ யாருமற்று உணர்வாளர்களின் உணர்ச்சி கவி வரிகளின் கீழ் அமிழ்ந்து போன வன்னி மக்களின் இன்றைய நிலையினை விளக்கும் பதிவு! 


41 Comments:

K said...
Best Blogger Tips

மச்சி, வணக்கம்! இறுதிப் போரின் போது வன்னி மக்கள் அனுபவித்த கொடுமைகளை நன்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறாய்! அத்தனையும் உண்மை! போரின் கொடுமையினை அனுபவித்த ஒருவன் ஒருபோதுமே போரை விரும்பமாட்டான்! இப்போது வன்னிமக்கள் போரை வெறுப்பதும் இதனால் தான்!

என்னைப் பொறுத்தவரை வன்னிமக்களின் வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்! அவர்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும்! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அவர்களது வாழ்க்கை சிறக்க வேண்டும்! பொருளாதாரத்திலும் கல்வியிலும் அவர்கள் உயர வேண்டும்!

இப்படியெல்லாம் நாம் அனைவருமே விரும்புகிறோம்! இனிமேலும் வன்னி மக்கள் போராடவேண்டும் என எவரேனும் கருதினால், அவருக்கு குறைந்த பட்ஷ மனிதாபிமானம் கூட இல்லை என்றுதான் அர்த்தம்!

இனிமேல் வன்னி மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே வாழ வேண்டும்!

இதுதான் எம் அனைவரினதும் விருப்பமாகும்!

K said...
Best Blogger Tips

நிரூ, சில உண்மைகள் சொல்கிறேன் கேள்!

2009 மே மாதம் வரை வன்னியில் என்ன நடந்தது? என்கிற சரியான விபரமும், உண்மையும் புலம்பெயர் மக்கள் எவருக்குமே தெரியாமல் இருந்தது! புலம்பெயர் மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வன்னி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இருந்த மக்களுக்கும் உண்மைகள் தெரிந்திருக்கவில்லை!

உதாரணமாக வன்னியில் கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது என்பதைக் கூட இங்கு யாருமே நம்பவில்லை! கொழும்பிலும், சென்னையிலும், வெளிநாடுகளிலும் இயங்கிய அத்தனை ஊடகங்களும் மிகப்படுத்தப்பட்ட செய்திகளை தாராளமாக அள்ளிவிட்டுக்கொண்டிருந்தன! விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள் ( வன்னியில் ) என்று எவருமே கனவிலும் நினைக்கவில்லை!

2009 மே 18 - உலகத்தமிழர்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்த நாளாகும்! கொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கட்டுரை போட்டவர்கள் எப்படி எப்படியெல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கினார்கள் என்று நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமா?

போர் முடிந்த பின்னர், சில ஊடகங்கள் செய்த கொடுமையை யாரும் மறந்துவிடவில்லை! குறிப்பாக பெரிய மீசைப் பத்திரிகைக் காரர் நடத்தும், அந்த ஐந்தெழுத்துப் பத்திரிகை செய்த பித்தலாட்டங்களை நாம் மறந்துவிடவில்லை!

வன்னியில் இருந்து மக்கள் மூன்று நாளாக பட்டினியாக வந்த போது, “ எதற்காக இங்கு வந்தீர்கள்? புலிகளோடு கிடந்து செத்திருக்கலாமே” என்று சொல்லம்பு வீசிய, கிராம சேவையாளர்களையும், பிரதேச செயலாளர்களையும் நாம் மறந்து விடவில்லை!

மொத்தத்தில் வன்னி மக்கள் அனுபவித்த கொடுமைகள் ஒருபோதுமே வரலாற்றை விட்டு மறையாது!

மேலும், 2009 மே மாதத்தின் பின்னர் ஒவ்வொருவர் ஒவ்வொருவராக வெளிநாட்டுக்கு வந்த இளைஞர்கள், யுவதிகள் இங்கிருக்கும் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அங்கு நடந்தவற்றைக் கூறலாயினர்! அவர்கள் சொன்ன சங்கதிகள் இங்கிருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது! நம்ப மறுத்தனர்!

ஆனால், வன்னியில் இருந்து வந்த அனைவருமே ஒரே கதையினையே திரும்ப திரும்பச் சொன்னார்கள்!

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வன்னி மக்கள் அனுபவித்த கொடுமைகள் புலம்பெயர் மக்களுக்கு புரியத் தொடங்கிவிட்டது! இன்னும் பல இளைஞர் யுவதிகள் வெளிநாட்டுக்கு வரத்தான் போகிறார்கள்! அவர்களும் வன்னியில் நடந்தது என்ன? என்பதை இங்கு விபரிக்கத்தான் போகிறார்கள்!

புலம்பெயர் மக்களுக்கு மேலும் மேலும் தெளிவு கிடைக்கத்தான் போகிறது!

இதில் உனக்கோ அல்லது வேறு எவருக்கோ எவ்வித ஐயமும் வேண்டாம்!

வன்னி மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்கணும்! ஆமிக்கு கல்லால் எறியணும்! இப்படி யாராவது கூவினால், அவருக்கான முதலாவது உள்குத்து என்னிடம் இருந்து வரும்!

அஞ்சற்க!

K said...
Best Blogger Tips

நிரூ, வன்னி மக்களை யுத்தத்தில் இருந்தும், அதன் பக்க விளைவுகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் விருப்பமாக உள்ளது!

அதனால் தான் இப்போது அனைத்து வகையான போராட்டங்களையும் புலம்பெயர் மக்கள் எடுத்துள்ளார்கள்! நாடுகடந்த தமிழீழம் ஆகட்டும் , இன்னும் சில நடவடிக்கைகள் ஆகட்டும் புலம்பெயர் மக்கள் தானே செய்கிறார்கள்?

வன்னிமக்களை அதைச் செய் இதைச் செய் என்று யாராவது சொல்கிறார்களா? இல்லையே?

K said...
Best Blogger Tips

வன்னிமக்களை உசுப்பேத்தும் விதமாக பாட்டு எழுதுவதாக சொல்கிறாய்! அது ஒரு பக்கம் இருக்கட்டும்! நாங்கள் ஒன்றும் உங்களை உசுப்பேத்தவில்லை!

உங்களுக்கு யுத்தத்தில் நாட்டம் இல்லை என்பது உண்மை என்றால்,

01. ஜனாதிபதி தேர்தலில் என்ன மயிருக்கு சரத் ஃபொன்சேகவுக்கு வாக்குகளை அள்ளிக் கொட்டினீர்கள்? அவருக்கு வாக்குப் போடச் சொல்லி நாமா சொன்னோம்? அல்லது பா விஜய் பாட்டு எழுதினாரா?

மகிந்த தானே உங்களை யுத்தத்தின் பிடிக்குள் இருந்து மீட்டார்! அப்போ அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டியதுதானே! நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஃபொன்சேகாவுக்கு காவடி எடுத்து, மஹிந்தவின் கோபத்துக்கு ஆளாகிவிட்டு, இப்போ குத்துது குடையுது என்றால் என்ன நியாயம்?

02. எதற்காக வவுனியா நகர சபைக்கு ப்ளொட் அமைப்பைத் தெரிவு செய்யவில்லை? லிங்கநாதன் அவர்கள் முன்பு ஏராளமான அபிவிருத்திகள் வவுனியாவில் செய்தவர் தானே! நீங்கள் அவரை ஒதுக்கிவிட்டு, எங்கேயோ கிடந்த ரதனை கொண்டு வந்தீர்கள்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தக் காலத்தில் மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை செய்திருக்கு? இன்று வவுனியா நகரசபை தூங்கிக் கொண்டிருக்கிறது! தேவையா உங்களுக்கு இது? ரதனுக்கு ஓட்டுப் போடச்சொல்லி புலம்பெயர் மக்கள் சொன்னார்களா?

அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு போட்டாரா?

உங்களுக்குப் பிழைக்கத்தெரியாது! பண்றதெல்லாத்தையும் நீங்க பண்ணிவிட்டு, அவன் தூண்டினான், இவன் தூண்டினான் என்று சொல்வது என்ன நியாயம்?

யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் நாள் கொண்டாடச் சொல்லி நாங்களா சொன்னோம்? நிங்கள் கொண்டாடினீர்கள்! நாங்கள் பிரச்சாரம் செய்தோம்!! அவ்வளவுதான்!

வன்னி மக்களுக்கு இன்னும் பழைய போர்க்குணம் மாறவில்லை என்று அரசு இன்றும் நம்புகிறது! காரணம் என்ன? நீங்கள் செய்யும் நடவடிக்கைகள் தானே!

எலாத்தையும் நீங்கள் செய்துவிட்டு, சினிமாவில பாட்டு எழுதுறவன குறை சொல்லுறது என்ன நியாயம்?

K said...
Best Blogger Tips

நீங்கள் சரத் ஃபொன்சேகாவுக்கு காவடி எடுக்கும் போதே, எங்களுக்குத் தெரியும் இலங்கையில் கிறிஸ் பூதம் வரும் எண்டு!

உங்களுக்குப் பிழைக்கத்தெரியாதப்பா! இப்ப கூட ஒண்டும் கெட்டுப் போகேலை! வடமாகாண சபை எலெக்சன் வந்தால், நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்? அள்ளுப்பட்டுக்கொண்டு போய், ச்ம்மந்தனுக்குதான் போடுவியள்!

அந்தாளும் வழக்கம் போல லண்டன் பி பி சி யில “ இவ்விதம் பார்க்கும் போது, அவ்விதம் பார்க்கும் போது....” என்று யாருக்கும் புரியாத பாஷையில் பேட்டி குடுப்பார்! நீங்களும் அதைக் கேட்டு கொட்டாவி விடுங்கோ!

மச்சி, உங்களுக்குள்ள பழைய போர்க்குணம் இல்லை எண்டதை முதல்ல ப்ரூஃப் பண்ணுங்கோ! பிறகு வந்து கதையுங்கோ!

ஜனாதிபதி தேர்தல்ல, நீங்கள் சரத் ஃபொன்சேகாவுக்கு அள்ளிப்போட்டு, மகிந்தவைக் கவிழ்க்க வேணும் எண்டு உங்களைத் தூண்டியவர்களின் பட்டியல் என்னிடம் இருக்கு! அனுப்புறன்! முதல்ல அவர்களுக்கு எதிராக உள்குத்து போடுங்கோ!

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்! ஒரு எலெக்சனைப் பயன்படுத்தி, மகிந்தவைக் கவிழ்க்க வேணும் எண்டு நீங்கள் ட்ரை பண்ணலாம்!

போர்க்குற்றவாளி ஆக்கி அந்தாளை சர்வதேச குற்றவாளி ஆக்க வேணும் எண்டு வெளிநாட்டு சனம் ட்ரை பண்ணினா, உங்களுக்கு அறச்சீற்றம் வந்திடுது!

என்ன கொடுமை கோவிந்தா?

K said...
Best Blogger Tips

பா விஜய் பாட்டு எழுதி உசுப்பேத்தினது கிடக்கட்டும்! அண்மையில் பொன் காந்தன் மாவீரர் நாளுக்கு கவிதை எழுதினாரே! அதனைப் படிக்கும் போது எங்களுக்கு எவ்வளவு புல்லரிப்பா இருந்திச்சு!

நீங்கள் பா விஜயை பிறகு திட்டுங்கோ! பொன் காந்தனிடம் இப்ப கேளுங்கோ! யார் தூண்டுறது எண்டு?

அநாவசியமாக வன்னி மக்களைத் தூண்டும் பலர் இலங்கையிலேயே இருக்கிறார்கள்! அவர்களைச் சாட வக்கில்லை! வெளிநாட்டுச் சனம் பற்றி கதைக்க வந்திட்டியள்!

நீங்கள் உண்மையிலேயே போருக்கு எதிரானவர்கள் என்றால், குருதியின் வெடுக்கு நாற்றத்தை மீண்டும் சுவாசிக்க விருப்பம் இல்லாதவர்கள் என்றால், முதல்ல, இலங்கையில் இருந்துகொண்டு தூண்டுபவர்களை கண்டியுங்கள்!

உங்களை யார் யாரெல்லாம் தூண்டி, தொடந்து அரசாங்கத்தின் வெறுப்புக்கு உள்ளான மக்கள் கூட்டமாக உங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணராவிட்டல் சொல்லுங்கள்!

டீட்டெயில் தருகிறோம்!

K said...
Best Blogger Tips

மச்சி, நீ யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதே கரும்புலிகள் நாளுக்கு பதிவு போட்டாய்!

மாலதி நினைவு நாளுக்குப் பதிவு போட்டாய்!

மாவீரர் நாளுக்கு பதிவு போட்டாய்!

புலிகளின் குரலுக்கு பதிவு போட்டாய்!

ஸப்பா.......! இப்படியெல்லாம், பழசை மறக்க முடியாமல் பதிவுகள் போட்டுவிட்டு, போருக்கு தூண்டுறம் எண்டு எங்களைக் குற்றம் சாட்டுவது என்ன நியாயம்!

எங்களுகளுடைய பாதி பதிவுகள் ஹன்சிகா வயசுக்கு வந்தது பற்றித்தானே இருக்கு!

நாங்கள் எங்கையா போருக்குத் தூண்டினோம்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

சுதா SJ said...
Best Blogger Tips

மணி கிரேட்........................... :) நிரு இதுக்கே மேலே நான் சொல்ல என்ன இருக்கு...... மணியின் கருத்துக்களை முதலில் உள் வாங்கி பதில் சொல்லுங்கோ.... (பதில் இருந்தால்...)

நிருபன் சொல்லுறேன் என்று தப்பா நினைக்காதீங்கோ... வன்னி மக்களை மீண்டும் போருக்கு தூண்டு பதிவர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் அதில் முதல் ஆள் நீங்கள் தான்.... முதல் தண்டனை உங்களுக்குத்தான். உசுப்பேத்தாதீங்கோ உசுப்பேத்தாதீங்கோ என்று சொல்லி சொல்லி அந்த வேலையை செய்வது நீங்கள்தான். உங்கள் பதிவுகளை திரும்ப ஒருக்கா பாருங்க 100 வீத பதிவில் 90 வீத பதிவு புலி பெருமை சொல்லி உசுப்பேத்தும் பதிவுதான்.... அப்புறம் எதுக்குப்பா அடுத்தவன் மேல் பழி போடுறீங்க.....

சுதா SJ said...
Best Blogger Tips

அப்புறம் வன்னி மக்கள் ஒன்றும் பா.விஜையும் வைரமுத்துவையும் கேட்டுத்தான் நடக்கணும் என்ற எந்த அவசியமும் இல்ல... சினிமாக்காரங்க பற்றி அவங்களுக்கு நல்லாவே தெரியும்... அவங்களுக்கு சினிமாக்காரன் பற்றி நல்ல புரிதல் இருக்கு உங்களுக்குத்தான் வன்னி மக்கள் மீது இன்னும் புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.... சாரி இப்படி சொல்வதற்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
நிருபன் சொல்லுறேன் என்று தப்பா நினைக்காதீங்கோ... வன்னி மக்களை மீண்டும் போருக்கு தூண்டு பதிவர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தால் அதில் முதல் ஆள் நீங்கள் தான்....//

அன்பிற்குரிய துஸி, இந்தப் பதிவில் எங்காவது ஓர் இடத்தில் வன்னி மக்களைப் போருக்குத் தூண்டும் பதிவர்கள் பற்றி நான் எழுதியிருக்கிறேனா?
முதலில் அதற்குப் பதில் சொல்லுங்கள். வன்னி மக்களைப் போருக்குத் தூண்டும் பதிவர்களைப் பற்றி நான் எழுதிய ஓர் வரியினைக் காட்ட முடியுமா?
நான் பதிவில் முன் வைத்திருக்கும் விடயத்திற்கு நீங்கள் பதில் சொல்லலாமே? ஏன் இன்னோர் திசையில் உங்கள் பதிலை நீங்கள் நகர்த்த வேண்டும்?
வன்னி மக்களை வியாபாரப்படுத்தும் தமிழ் சினிமா உணர்வாளர்கள் வன்னி மக்களின் அவலங்களையும் உலகறியச் செய்து தமிழகத்தின் மற்றும் மத்திய அரசின் தார்மீக ஆதரவினைப் பெற்றுக் கொள்ள வழி செய்யலாமே என்று தானே கேள்வியெழுப்பியுள்ளேன்! அதற்கு உங்கள் பதில் என்ன? சொல்லுங்கள் நண்பா! ஏன் பதிவினை இன்னோர் திசையினூடாக நகர்த்தி ஏதோ பதிவர்கள் பற்றி நான் பேசியிருப்பதாக நீங்கள் ஒரு புறத் தோற்றத்தை உருவாக்க வேண்டும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
அப்புறம் வன்னி மக்கள் ஒன்றும் பா.விஜையும் வைரமுத்துவையும் கேட்டுத்தான் நடக்கணும் என்ற எந்த அவசியமும் இல்ல... சினிமாக்காரங்க பற்றி அவங்களுக்கு நல்லாவே தெரியும்... அவங்களுக்கு சினிமாக்காரன் பற்றி நல்ல புரிதல் இருக்கு உங்களுக்குத்தான் வன்னி மக்கள் மீது இன்னும் புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.... சாரி இப்படி சொல்வதற்கு.//

அன்பிற்குரிய துஸி, நான் வன்னி மக்களின் போர் உணர்வைத் தூண்டும் வண்ணம் பாடல் எழுதுவோர், வன்னி மக்களின் அவலங்களை வெளியே தெரியும் வண்ணமும் பாடல் எழுதலாமே என்று தானே கேட்டிருக்கிறேன்! ஆமா! வன்னி மக்களுக்கு சினிமாக்காரங்க பற்றி நன்றாகத் தெரியுமாம்! ஹே...ஹே...என்னய்யா காமெடி பண்றீங்க! ஒரு இனத்தினது அவலத்தினை வைத்து வியாபாரம் செய்யும் சினிமாக்காரங்க பற்றி வன்னி மக்கள் கண்டு கொள்ளாது தானே இருக்கிறார்கள். அட வன்னி மக்கள் மீது எனக்கு புரிதல் இல்லையா? எதனை வைத்துச் சொல்லுறீங்க. நான் எந்த ஊர் ஆள்? புலம் பெயர் மக்களைப் பற்றி நாம் பதிவுகளை எழுதும் போது புலம் பெயர் சமூகத்தின் பிரதிநிதியாக நீங்கள் உங்களைக் காண்பித்து கண்டனங்களைச் சொல்லும் போது வன்னி மக்களின் அவலங்களை, அவர்களின் உணர்வுகளை அவர்களோடு வாழ்ந்த ஒருவன் சொல்லுவதில் என்னய்யா தவறு கண்டீர்? எதனை வைத்துப் புரிதல் இல்லை என்று சொல்லுகிறீர்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
உசுப்பேத்தாதீங்கோ உசுப்பேத்தாதீங்கோ என்று சொல்லி சொல்லி அந்த வேலையை செய்வது நீங்கள்தான். உங்கள் பதிவுகளை திரும்ப ஒருக்கா பாருங்க 100 வீத பதிவில் 90 வீத பதிவு புலி பெருமை சொல்லி உசுப்பேத்தும் பதிவுதான்.... அப்புறம் எதுக்குப்பா அடுத்தவன் மேல் பழி போடுறீங்க.....//

துஸி! வன்னி போரின் பெருமைகள் பற்றி நான் எழுதவில்லை! போரின் போது இடம் பெற்ற சில சறுக்கல்களைத் தான் நான் என் பதிவொன்றில் தொடராக எழுதி வருகின்றேன். அதனை வன்னி மக்களும் நன்கு அறிவார்கள். ஆகவே வன்னி மக்களை அந்தப் பதிவு உசுப்பேத்தும் என நீங்கள் மனக் கணக்குப் போடுவது தவறானது. இப்போது பதிவில் நான் முன் வைத்திருக்கும் விடயங்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

இப்படியெல்லாம் நாம் அனைவருமே விரும்புகிறோம்! இனிமேலும் வன்னி மக்கள் போராடவேண்டும் என எவரேனும் கருதினால், அவருக்கு குறைந்த பட்ஷ மனிதாபிமானம் கூட இல்லை என்றுதான் அர்த்தம்!

இனிமேல் வன்னி மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே வாழ வேண்டும்!

இதுதான் எம் அனைவரினதும் விருப்பமாகும்!
//

நண்பா! எல்லோரும் வன்னி மக்கள் சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழத் தான் விரும்புகின்றார்கள் என்று சொல்லிச் சொல்லியே எத்தனை நாளைக்கு உங்கள் காலத்தைக் கழிக்கப் போகின்றீர்கள்? நான் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன்! வன்னி மக்களின் உணர்ச்சிகளை வியாபாரப் பொருளாக்கும் உணர்வாளர்கள். கூடவே அவர்களின் அவலங்களையும் படம் பிடித்துக் காட்டி அம் மக்களின் வாழ்வு சிறக்க உதவி செய்யலாமே என்று தானே கேட்டிருக்கிறேன். இதுட் தொடர்பாக உங்கள் பதில் என்ன? இதற்குச் சினிமா உணர்வாளர்கள் கொடுக்கப் போகும் பதில் என்ன? அடடா! வன்னி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், அவர்களில் வாழ்வினைத் தொலைத்த பல தமிழ் உறவுகளின் அடிப்படை வசதிகள் மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதனை எத்தனை பேர் ஐயா செய்கிறீங்க?
வன்னி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று வெளிநாடுகளில் இருக்கும் பலர் எம் உறவுகளிற்குப் பணம் அனுப்பிக் கொண்டு அப் பணமும் எங்கோ ஓர் மூலையில் வன்னியில் இருக்கும் தமிழனுக்கும் போய்ச் சேர்கிறது என்று பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தால் ஏதும் நடக்குமா?
அப்படியாயின் வன்னி மக்களின் வாழ்வினை மீளக் கட்டியெழுப்பப் போவது யார்? உசுப்பேத்தும் உணர்வாளர்கள் உதவிகள் கிட்டவும் வழி செய்யலாமே என்று தானே எழுதியிருக்கிறேன்! இது தொடர்பில் தங்கள் பதில் என்ன?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
வன்னி மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்கணும்! ஆமிக்கு கல்லால் எறியணும்! இப்படி யாராவது கூவினால், அவருக்கான முதலாவது உள்குத்து என்னிடம் இருந்து வரும்!

அஞ்சற்க!//

மச்சி, அப்போ வன்னி மக்களை வைத்து வியாபார நோக்கில் படம் எடுப்போரை நீ ஏற்றுக் கொள்கிறாயா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

அதனால் தான் இப்போது அனைத்து வகையான போராட்டங்களையும் புலம்பெயர் மக்கள் எடுத்துள்ளார்கள்! நாடுகடந்த தமிழீழம் ஆகட்டும் , இன்னும் சில நடவடிக்கைகள் ஆகட்டும் புலம்பெயர் மக்கள் தானே செய்கிறார்கள்?

வன்னிமக்களை அதைச் செய் இதைச் செய் என்று யாராவது சொல்கிறார்களா? இல்லையே?
//

வன்னி மக்கள் சொல்லாமால் ஏன் மச்சி! ஒரு சிலர் திருப்பி அடிக்கனும் என்று உணர்ச்சி பொங்கப் பாடுறாங்க?

Anonymous said...
Best Blogger Tips

////நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@துஷ்யந்தன்
அப்புறம் வன்னி மக்கள் ஒன்றும் பா.விஜையும் வைரமுத்துவையும் கேட்டுத்தான் நடக்கணும் என்ற எந்த அவசியமும் இல்ல... சினிமாக்காரங்க பற்றி அவங்களுக்கு நல்லாவே தெரியும்... அவங்களுக்கு சினிமாக்காரன் பற்றி நல்ல புரிதல் இருக்கு உங்களுக்குத்தான் வன்னி மக்கள் மீது இன்னும் புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.... சாரி இப்படி சொல்வதற்கு.//

அன்பிற்குரிய துஸி, நான் வன்னி மக்களின் போர் உணர்வைத் தூண்டும் வண்ணம் பாடல் எழுதுவோர், /// யார் அப்படி பாடல் எழுதியது? எங்கே அப்படி உணர்வை தூண்டக்கூடிய வரிகளை சொல்லுங்கள் பார்ப்போம்? அது சரி வன்னி மக்களுக்கு இவற்றை பிரித்தறிய தெரியாதா? அட நாலு வரியை கேட்ட உடனே உணர்வு பொங்கி மீண்டும் சண்டை தொடங்கிடுமா ? காமெடி பண்ணாதேங்கோ தலைவரே )

ஆகுலன் said...
Best Blogger Tips

நினைத்து பார்க்கவே முடியவில்லை......

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
http://www.mathisutha.com/2011/12/blog-post_13.html

நண்பா, இந்த இணைப்பில் உள்ள பதிவினைப் படித்துப் பார்க்கலாமே?

Anonymous said...
Best Blogger Tips

உங்கள் பதிவுடன் ஒத்துப்போகிறேன் பாஸ். ஆனால் அந்த யுகபாரதி எழுதியதாக சொல்லப்படும் வரிககளை பிரபலப்படுத்தியது நீங்க தானே. அப்படி ஒரு வரி வந்திருக்கிறத்தை அடிச்சு பதைச்சு வெளியிட்டு பரபரப்பாக்கியது யார் ? சாதாரணமாக அமுங்கிப்போயிருக்க வேண்டிய விடயம் இது.

Anonymous said...
Best Blogger Tips

ஏன் பாஸ் அது யுத்த உணர்வை தூண்டக்கூடிய வரிகளா? )

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
அன்பிற்குரிய துஸி, நான் வன்னி மக்களின் போர் உணர்வைத் தூண்டும் வண்ணம் பாடல் எழுதுவோர், /// யார் அப்படி பாடல் எழுதியது? எங்கே அப்படி உணர்வை தூண்டக்கூடிய வரிகளை சொல்லுங்கள் பார்ப்போம்? அது சரி வன்னி மக்களுக்கு இவற்றை பிரித்தறிய தெரியாதா? அட நாலு வரியை கேட்ட உடனே உணர்வு பொங்கி மீண்டும் சண்டை தொடங்கிடுமா ? காமெடி பண்ணாதேங்கோ தலைவரே )//

நான் இங்கே சொல்லும் விடயம், வன்னி மக்களை வைத்து வியாபார நோக்கில் படம் எடுப்போர் பற்றியது, அதே போன்று வன்னி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அவர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை முன் வைத்தும் படம் எடுக்கலாமே?

அடிப்பேன்! திருப்பி அடிப்பேன் என்று புலம்பி பாடல் எழுதுவதால் ஆகி விடப் போவது ஒன்றுமில்லைத் தான். ஆனால், ஏன் பாஸ் இப்படிச் சினிமாவில் எம்மை வைத்து வன்னி மக்கள் அடிப்பார்கள்! திருப்பி அடிப்பார்கள் போன்று காட்டுவது போன்று பாடல் எழுத வேண்டும்?

Anonymous said...
Best Blogger Tips

////அடிப்பேன்! திருப்பி அடிப்பேன் என்று புலம்பி பாடல் எழுதுவதால் ஆகி விடப் போவது ஒன்றுமில்லைத் தான். /// மன்னிக்கவும், இப்படி ஒரு பாடல் வந்தது எனக்கு இது வரை தெரியாது. அந்த பாடல் வரிகளை இல்லை,ஒலி வடிவத்தின் இணைப்பை கொடுக்கவும்.

Anonymous said...
Best Blogger Tips

////நிரூபன் said...அன்பிற்குரிய துஸி, நான் வன்னி மக்களின் போர் உணர்வைத் தூண்டும் வண்ணம் பாடல் எழுதுவோர், வன்னி மக்களின் அவலங்களை வெளியே தெரியும் வண்ணமும் பாடல் எழுதலாமே என்று தானே கேட்டிருக்கிறேன்!/// நீங்கள் சொல்வது போல வன்னி மக்களின் அவலங்களை வெளிக்கொணரும் வகையில் ஒரு பாடல் வெளி வந்தாலும் அதையும் "வியாபாரத்துக்காக வன்னி மக்களை பயன்படுத்திறார்கள்"என்று தானே எழுதுவோம்... ஏன்னா எங்க பார்வை அப்படி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

வன்னிமக்களை உசுப்பேத்தும் விதமாக பாட்டு எழுதுவதாக சொல்கிறாய்! அது ஒரு பக்கம் இருக்கட்டும்! நாங்கள் ஒன்றும் உங்களை உசுப்பேத்தவில்லை!

உங்களுக்கு யுத்தத்தில் நாட்டம் இல்லை என்பது உண்மை என்றால்,

01. ஜனாதிபதி தேர்தலில் என்ன மயிருக்கு சரத் ஃபொன்சேகவுக்கு வாக்குகளை அள்ளிக் கொட்டினீர்கள்? அவருக்கு வாக்குப் போடச் சொல்லி நாமா சொன்னோம்? அல்லது பா விஜய் பாட்டு எழுதினாரா?
//

நண்பா, மகிந்தவிற்கு எதிராக, பொன்சேகா வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கில் வாக்களித்தால் அது எப்படி போர் வெறியாகும்? ஹே...ஹே..
தமக்கு இன்னோர் மாற்றுத் தெரிவு வேண்டும் என்பதை வன்னி மக்கள் நினைத்தது தவறா? வன்னி மக்கள் தம் கடந்த கால அவலங்களை நினைத்துப் பார்த்திருப்பார்கள். ஆகவே பொன்சேகவுடன் கூட்டு வைத்த தமிழர் குழு வெற்றி பெற வேண்டும் என நினைத்திருப்பார்கள். இது எப்படிப் போர் வெறியாகும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மகிந்த தானே உங்களை யுத்தத்தின் பிடிக்குள் இருந்து மீட்டார்! அப்போ அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டியதுதானே! நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஃபொன்சேகாவுக்கு காவடி எடுத்து, மஹிந்தவின் கோபத்துக்கு ஆளாகிவிட்டு, இப்போ குத்துது குடையுது என்றால் என்ன நியாயம்?
//

மச்சி! நான் இப் பதிவில் மகிந்த மீது மக்கள் அன்பு வைத்திருப்பதாக எங்காவது சொல்லியிருக்கேனா? இறுதி வரை மக்கள் என்ன நம்பிக்கையில் போராட்டத்தினை நேசித்தார்கள். இலங்கை அரசு எவ்வாறு மக்களை அடி பணிய வைத்தது என்று தானே சொல்லியிருக்கிறேன். மக்களை கோழைத் தனமாக அடி பணிய வைத்து மீட்டது நல்ல காரியமாகுமா? இதனை உணர்ந்து மக்கள் எப்படி நண்பா வாக்களிப்பார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

02. எதற்காக வவுனியா நகர சபைக்கு ப்ளொட் அமைப்பைத் தெரிவு செய்யவில்லை? லிங்கநாதன் அவர்கள் முன்பு ஏராளமான அபிவிருத்திகள் வவுனியாவில் செய்தவர் தானே! நீங்கள் அவரை ஒதுக்கிவிட்டு, எங்கேயோ கிடந்த ரதனை கொண்டு வந்தீர்கள்!
//

ஹி....ஹி.....மக்கள் நகரசபையும் அரசாங்கத்திற்கு விலை போனவர்களைப் போன்று விலை போய் விடக் கூடாது என்று நினைத்திருப்பார்கள் ஐயா. அதன் விளைவு தான் இது.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு போட்டாரா?

உங்களுக்குப் பிழைக்கத்தெரியாது! பண்றதெல்லாத்தையும் நீங்க பண்ணிவிட்டு, அவன் தூண்டினான், இவன் தூண்டினான் என்று சொல்வது என்ன நியாயம்? யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் நாள் கொண்டாடச் சொல்லி நாங்களா சொன்னோம்? நிங்கள் கொண்டாடினீர்கள்! நாங்கள் பிரச்சாரம் செய்தோம்!! அவ்வளவுதான்! வன்னி மக்களுக்கு இன்னும் பழைய போர்க்குணம் மாறவில்லை என்று அரசு இன்றும் நம்புகிறது! காரணம் என்ன? நீங்கள் செய்யும் நடவடிக்கைகள் தானே! எலாத்தையும் நீங்கள் செய்துவிட்டு, சினிமாவில பாட்டு எழுதுறவன குறை சொல்லுறது என்ன நியாயம்?//

மச்சி! உணர்ச்சி பொங்க ஹரிஸ் ஜெயராய் எழுதிய படப் பாடலையும், ஈழம் பற்றி ஏழாம் அறிவு கூறிய வசனங்களையும் தானே நாம் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறோம். எம்மில் யாராவது பாலை திரைப்படம் பற்றிப் பேசுகிறோமா? பாலை திரைப்படமும் தமிழர்களின் வரலாறு பற்றிச் சொல்கிறதே. அப்படியாயின் நாம் பாலை திரைப்படத்தினைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாமே? ஏழாம் அறிவு எப்படி மக்கள் மனங்களினை நோக்கி கொண்டு செல்லப்பட்டது? ஈழத் தமிழர்களைப் பற்றிய விடயங்களை முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்பட்ட காரணத்தினால் தானே. பாலை விளம்பர நோக்கம் இன்றி வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டுத் தூக்கப்பட்டு விட்டது.

மக்கள் மனங்களில் உணர்வுகள் இருக்கும் என்பதை யாரும் மறக்கவில்லைத் தான். ஆனால் அதற்காக அதே மக்களின் அவலத்தினை மறைத்து மக்கள் உணர்ச்சியோடும், இன்றும் மீண்டும் திருப்பித் தாக்கனும் எனும் வீரத்தோடும் இருக்கிறார்கள் எனச் சினிமாவில் காட்ட முனைவது சரியா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, உங்களுக்குள்ள பழைய போர்க்குணம் இல்லை எண்டதை முதல்ல ப்ரூஃப் பண்ணுங்கோ! பிறகு வந்து கதையுங்கோ!
//

ஹே...ஹே...

நண்பா, இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை, வன்னி மக்கள், ஈழ மக்களின் கடந்த கால உணர்வுகள் எப்படி இருந்தன என்று பதிவில் சொல்லியிருக்கேனே. அப்படியாயின் அவர்களை உணர்ச்சியூட்டும் நடவடிக்கைகளிலா நாம் ஈடுபட வேண்டும்? அம் மக்களின் அவலங்களை வெளிக் கொணரும் விடயங்களில் ஈடுபடக் கூடாது என்று ஏதாவது நியாயம் இருக்கிறதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்! ஒரு எலெக்சனைப் பயன்படுத்தி, மகிந்தவைக் கவிழ்க்க வேணும் எண்டு நீங்கள் ட்ரை பண்ணலாம்!

போர்க்குற்றவாளி ஆக்கி அந்தாளை சர்வதேச குற்றவாளி ஆக்க வேணும் எண்டு வெளிநாட்டு சனம் ட்ரை பண்ணினா, உங்களுக்கு அறச்சீற்றம் வந்திடுது!
//

எங்கே ஐயா அறச்சீற்றம் வருகின்றது, வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளிலிருந்து வலுக் கட்டாயமாகப் பிடிக்கப்பட்ட மக்களின் கையில் மகிந்தவின் போட்டோவினைக் கொடுத்து மகிந்த மீதான போர்க் குற்றம் பற்றி உலக நாடுகள் பேசக் கூடாது என்று துப்பாக்கி முனையில் மிரட்டிக் கூவச் சொன்னால் அறச் சீற்றமா? மக்க்ள் என்ன செய்வார்கள்? அதற்காக ஏன் ஒட்டு மொத்த தமிழ் மக்களும், வன்னி மக்களும் போர்க் குற்ற வழக்கே வேணாம் என்றா ஒதுங்கி இருக்கிறார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
பா விஜய் பாட்டு எழுதி உசுப்பேத்தினது கிடக்கட்டும்! அண்மையில் பொன் காந்தன் மாவீரர் நாளுக்கு கவிதை எழுதினாரே! அதனைப் படிக்கும் போது எங்களுக்கு எவ்வளவு புல்லரிப்பா இருந்திச்சு!

நீங்கள் பா விஜயை பிறகு திட்டுங்கோ! பொன் காந்தனிடம் இப்ப கேளுங்கோ! யார் தூண்டுறது எண்டு? //

நண்பா, புலம் பெயர் மக்களுக்கு எதிராக எழுதப்பட்ட பதிவு போன்று உங்கள் கருத்துக்களை முன் வைக்கிறீர்களே! நான் என்ன கேட்கின்றேன்! உணர்வேற்றுவது போல கொஞ்சம் மக்களுக்கான உதவிகள் பற்றிய கருத்துக்களையும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லலாம் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, நீ யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதே கரும்புலிகள் நாளுக்கு பதிவு போட்டாய்!

மாலதி நினைவு நாளுக்குப் பதிவு போட்டாய்!

மாவீரர் நாளுக்கு பதிவு போட்டாய்!

புலிகளின் குரலுக்கு பதிவு போட்டாய்!

ஸப்பா.......! இப்படியெல்லாம், பழசை மறக்க முடியாமல் பதிவுகள் போட்டுவிட்டு, போருக்கு தூண்டுறம் எண்டு எங்களைக் குற்றம் சாட்டுவது என்ன நியாயம்!
//

நண்பா, இங்கே பதிவர்கள் யாரையாவது குற்றம் சாட்டியிருக்கேனா? இல்லையே! பிறகேன் ஆட்டுக்குள் மாட்டை..............@##$$$#
நான் பதிவில் முன் வைத்துள்ள கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய முடியாதா? நான் என்ன சொல்கிறேன். மக்களுக்கு உணர்வேற்றும் பாடல்களைச் சினிமாவில் எழுதி ஈழத்தை வியாபார நோக்கில் சந்தைப்படுத்துவதை போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையினையும் வெளிக் கொண்டு வரும் விடயங்களயும் சினிமாவில் புகுத்தலாமே? ஈழம் ஏழாம் அறிவில் என்பது போல, ஈழத்தின் அவலம் இந்தப் படத்தில்! இது தான் ஈழ மக்கள் வாழ்க்கை! தமிழகமே இதனை நீ உணரமாட்டாயா என்று கேளுங்கள்! அதன் பின்னர் நீங்கள் உருவேற்றும் பாடல்களைச் சினிமாவில் போட்டாலும் யாரைய்யா கண்டு கொள்ளப் போகிறார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
யார் அப்படி பாடல் எழுதியது? எங்கே அப்படி உணர்வை தூண்டக்கூடிய வரிகளை சொல்லுங்கள் பார்ப்போம்? அது சரி வன்னி மக்களுக்கு இவற்றை பிரித்தறிய தெரியாதா? அட நாலு வரியை கேட்ட உடனே உணர்வு பொங்கி மீண்டும் சண்டை தொடங்கிடுமா ? காமெடி பண்ணாதேங்கோ தலைவரே )//

நண்பா, கீழே இணைப்புக் கொடுத்திருக்கிறேன். போர் வராது என்று சொல்கிறீர்கள் ஓக்கே! இன்னொரு சந்ததியின் மனதில் அந்த உணர்வே ஒரு வித விரோத மனப்பாங்காக உருவெடுக்க இத்தகைய படங்கள் வாய்ப்பினை அள்ளி வழங்கும் அல்லவா?
அதே நாலு வரியினைப் புகுத்துவோர் வியாபார நோக்கில் ஈழத்தினைக் காட்டி விளம்பரம் செய்வதனை விடுத்து ஈழ மக்களின் அவலத்தினையும் காட்டலாமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆகுலன்

நினைத்து பார்க்கவே முடியவில்லை......
/

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
உங்கள் பதிவுடன் ஒத்துப்போகிறேன் பாஸ். ஆனால் அந்த யுகபாரதி எழுதியதாக சொல்லப்படும் வரிககளை பிரபலப்படுத்தியது நீங்க தானே. அப்படி ஒரு வரி வந்திருக்கிறத்தை அடிச்சு பதைச்சு வெளியிட்டு பரபரப்பாக்கியது யார் ? சாதாரணமாக அமுங்கிப்போயிருக்க வேண்டிய விடயம் இது.
//

இல்லை நண்பா, நாங்கள் இவ் வரிகளைக் கண்டு கொள்ளா விட்டாலும் நாளை ஈழத்தின் கடந்த கால அவலக் காட்சிகளோடு நக்கீரனின் முதற் பக்கத்தில் இப் பாடல் வந்து பிரபலமாகியிருக்கும்! இது தங்களுக்குத் தெரியாத விடயமும் அல்ல.

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

வன்னி மக்களுக்கு உதவாமல்...
உசுப்பேத்தும் கவிஞர்கள் ராஜபக்‌ஷேவை விட கீழானவர்கள்.

Anonymous said...
Best Blogger Tips

///நிரூபன் said...

@கந்தசாமி.
யார் அப்படி பாடல் எழுதியது? எங்கே அப்படி உணர்வை தூண்டக்கூடிய வரிகளை சொல்லுங்கள் பார்ப்போம்? அது சரி வன்னி மக்களுக்கு இவற்றை பிரித்தறிய தெரியாதா? அட நாலு வரியை கேட்ட உடனே உணர்வு பொங்கி மீண்டும் சண்டை தொடங்கிடுமா ? காமெடி பண்ணாதேங்கோ தலைவரே )//

போர் வராது என்று சொல்கிறீர்கள் ஓக்கே! இன்னொரு சந்ததியின் மனதில் அந்த உணர்வே ஒரு வித விரோத மனப்பாங்காக உருவெடுக்க இத்தகைய படங்கள் வாய்ப்பினை அள்ளி வழங்கும் அல்லவா?/// அப்போ ஈழத்தில் யுத்தம் என்ற ஒரு தொடங்கியதுக்கு இவ்வாறான உசுப்பேத்தல்கள் தான் காரணம் என்கிறீர்களா? அரசியல் ,இன முரண்பாடுகள் இல்லையா?


கீ கொடுத்தவுடன் சுழலுவதர்க்கு மக்கள் என்ன பொம்மைகளா? அவர்களுக்கு தமக்கான நல்லது கெட்டதை பிரித்தறிய தெரியாதா?

நாலு வரி பாட்டை கேட்டதும் உணர்வு போங்குதாமாம்..ஆயிரக்கணக்கான இயக்கப்பாட்டுகளை கேட்டும் பொங்காத உணர்வுகள் எல்லாம்...!

ஐயா! அடிப்படை பிரச்சனை அரசியல் ,இன முரண்பாடுகள் தான். அது தீர்க்கப்படும் போது யுத்தம்,கலவரம் ,போராட்டம் ,மண்ணாங்கட்டி என்ற பேச்சுக்கே இடமிருக்கப்போவதில்லை. அதை விடுத்து நான் யுத்தத்துக்கு எதிரானவன் என்று படம் காட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.இங்க யாரும் யுத்த வெறியர்கள் இருப்பதாக தெரியவில்லை.

விஜயன்.கே.எஸ். said...
Best Blogger Tips

நண்பர்களே..நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன், ஈழத்தின் மீது மிகுந்த காதல் கொண்டவன்..அந்த மண்ணும்,மக்களும், கோவில்களும் என் மனதைக் கவர்ந்தவை..என்றேனும் ஒரு நாள் இலங்கைக்கு செல்லவேண்டும் அங்கு குடிகொண்டுள்ள முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற பேரவா கொண்டவன்...அனால் இடையில் ஏற்பட்ட நிகழ்வுகள் வேதனையைத்தந்தன... ஈழமக்களுக்காக நான் வேதனப்படுவதுண்டு.ஆனால் இன்று இந்த கட்டுரையையும்,அது சார்ந்த கருத்துக்களையும் படித்தவுடன் ஒன்றுமே புரியவில்லை..ஈழத்தில் என்ன நடக்கிறது..??புலம்பெயர்ந்த மக்கள் செய்வது சரியா..?நீங்கள் சொல்வது சரியா...??குழப்பந்தான் மிஞ்சுகிறது....முருகப்பெருமான் தான் இந்த தேசத்தைக் காப்பாற்றி மக்களின் மனக்காயங்களுக்கு மருந்திட்டு குறை தீர்க்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன்..

ad said...
Best Blogger Tips

ஸப்பா........
என்னையா நடக்குது இங்க?
ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்பதைப்போல ஆகிவிடப்போகிறது.

ad said...
Best Blogger Tips

ஏதோ.. பாடல்,... வரி,... இணைப்பு என்றெல்லாம் பேசினீர்கள்.ஆனால் நானும் தேடிப்பார்த்துவிட்டேன்.எந்த இணைப்பையும் காணவில்லையே?

ad said...
Best Blogger Tips

ஈழத்தில் போர் ஆரம்பித்தமைக்கான காரணங்கள் அனைவருக்குமே தெரியும். அரசியல் பக்கச்சார்புகளும் அடக்குமுறைகளுமே என்று.
அமைதியான முறையில் கிடைக்காத தீர்வைப்பெற்றுக்கொள்ள,வன்முறை வழியே போர் கையிலெடுக்கப்பட்டது.
ஆனால் காட்டிக்கொடுப்புக்களாலும் ,உலக வல்லாதிக்கங்களாலும்,யுத்த தர்மங்களை மீறிய அராஜக போர்முறைகளாலும் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இது அனைவருமே அறிந்த விடயம்தானே.

பதிவிலே சொல்லியதைப்போல.. மக்களை ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இழுத்தெடுப்பதற்கு ராணுவமும் அரசாங்கமும் கையாண்ட உத்தி ஒரு கோழைத்தனமான உத்தி.
மக்களைப் பட்டினி போட்டு,நோயாளிகளாக்கி,படுத்துக்கிடக்கும் இயலாதவர்களாகிய அவர்கள் மீது ராப்பகலாக சகல திக்குகளிலிருந்தும் குண்டுமழை பொழிந்து,அவர்களுக்கு வேறு வழியே இல்லாத நிலையில் விருப்பமில்லாதவர்களாக ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வரவைக்கப்பட்டார்கள்.
அது கோழைத்தனம்தானே.பட்டினியாகக்கிடப்பவனை அடித்துவிட்டு,வீரம் பேசுவது பொருத்தமாக இருக்குமா?
அதைத்தானே கூறியிருக்கிறார் இங்கே.இதற்கு ஏன் முரண்பாடு?

அதே போல... இப்போது எழுந்து நிற்கமுடியாமல் இருப்பவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிடுவதை விடுத்து,அதே-விழுந்து கிடப்பவர்கள் எழுந்து போராடப்போகிறார்கள் என்று எழுதியும்,பேசியும் கைதட்டல் வாங்குபவர்களைக் குற்றம் சாட்டாமல் வாழ்த்தவேண்டுமென்று சொல்கிறீர்களா?

ad said...
Best Blogger Tips

போர்க்குணமென்பது வன்னிமக்களுக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே இருக்கிறது.உரிமைகள் நசுக்கப்படும்போது இனி எதுவும் செய்யமுடியாதென்ற உச்சக்கட்ட நிலைவரும்போது அனைத்தையும் வெறுத்து ஆயுதம் தூக்குவதென்பது நாட்டுப்பிரச்சனையில் மட்டுமல்ல-தனிநபர் பிரச்சனையிலும் நடந்திருக்கின்றன-உலகெங்கும்.
அதேநிலை வன்னியில் மீண்டும் உருவாகாது என்பதற்கோ அல்லது,உருவாகுமென்பதற்கோ எந்தவிதமான உறுதிப்பாடும் கிடையாது.
ஆனால்.. இப்பொழுதோ, ஓரிரு வருடங்களுக்குள்ளேயோ அது நடக்கப்போகின்ற ஒன்றில்லை என்பது உறுதி.
இந்த நிலையில் வன்னிமக்கள்தான் போரை விலைகொடுத்து வாங்கினார்கள்,அடிதடிக்கு போனார்கள் என்பதுபோல..
-உங்களுக்கு போர்க்குணமில்லையென்று நிரூபித்துக்காட்டுங்கள்,மாவீரர்தினம் கொண்டாடினீர்கள்,பதிவெழுதினீர்கள் என்று விதண்டாவாதக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருப்பதென்பது நமக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகளை உலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டுவதாகும்.
பதிவிலே கூறப்பட்ட கருத்துக்கும் சிலர் எழுதியுள்ள பதிக்கருத்துகளுக்கும் தொடர்பே இல்லை.
போராட்டம் அரம்பிக்கப்பட்டது நியாயமான காரணத்துக்காகவே.ஆகவே,அப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூருவது என்பது போர்க்குணமல்ல.அது நன்றியின் பிரதிபலிப்பு.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails