Sunday, December 4, 2011

மூக்கிலிருந்து (அசிங்கமான) டின் பால் உற்பத்தி செய்வோர்!

பாடசாலைக் காலங்களில் ஒவ்வொருவரின் குணவியல்புகளும் வேறு பட்டிருந்தாலும், குழந்தை தனமான எமது உள்ளத்தில் அக் குணங்களைப் பிரித்தறிய முடியாதிருக்கும். சின்னஞ்ச் சிறு வயதில் எம்மிடையே இருக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கூட நாம் வேறு பிரித்தறிய முடியாதவர்களா ஏதோ நற் செயல்கள் செய்து சாதித்த பெரியார்கள் போலப் பெருமைப்பட்டிருக்கிறோம். பள்ளிக் காலத்தில் பாலர் வகுப்பு (நேசறி) படித்த போது எம்மில் பலருக்குப் பல விதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். சின்ன வயசில் எம்மில் சிலர் ஸ்டைல் என்றால் என்னவென்றே அறியாதவர்களாக பள்ளிக்குச் சென்றிருப்போம். 
சின்ன வயதில் அருகே இருக்கும் பெண் எம்மைப் பார்த்து ரசிப்பாளா அல்லது எமது நடை உடை பாவனைகளைப் பிறர் யாராச்சும் பார்த்து நையாண்டி செய்வார்களா என்பது பற்றிய கவலைகள் ஏதுமின்றி பிள்ளை மனம் வெள்ளை மனம் எனும் உணர்விற்கு அச்சாரம் பூசுவது போன்று எமது கருமங்களில் கண்ணாயிருப்போம். பள்ளிக்குச் செல்லும் வயசில் பலரையும் வாட்டி வதைக்கும் ஓர் பிரச்சினை தான் மூக்கிலிருந்து சளி சிந்துவதாகும். சிறு வயதில் பள்ளி செல்லும் மாணவர்களில் வசதி உள்ள பணக்கார வீட்டுப் பசங்க(ள்) என்றால் பெற்றோர் சப்பாத்தும் போட்டு, தோளில் அழகிய புத்தகப் பையினையும் மாட்டி விட்டு, வெள்ளைச் சட்டையின் கழுத்துப் பகுதிக்கு கீழ் ஒரு கைக்குட்டையினை ஊசியால் சொருகி விடுவார்கள்.

மழைக் காலம் வருகின்றது என்றாலே தடிமனும், சளி சிந்துதலும் எம்மக்குத் தொற்றி விடும். பள்ளிக்கு கைக் குட்டையுடன் வரும் மாணவர்கள் தமது அழகிய வர்ணங்கள் நிறைந்த லேஞ்சியால்(ஹங்கியால்) தமது மூக்கிலிருந்து சிந்தும் சளியினைத் துடைத்துக் கொள்வார்கள். அவர்கள் மூக்கிலிருந்து சளி சிந்தினாலும் முக அழகில் சிறிதளவேனும் குறை ஏற்படா வண்ணம் மூக்கிலிருந்து சளி சிந்தும் தடயம் இல்லாதவாறு துடைத்தெடுத்து விடுவார்கள். ஆனால் வசதி குறைந்த சாதாரண குடும்பத்து மாணவர்களின் நிலமையில் இவ் விடயத்தினை நோக்கும் போது பரிதாபமாகவே இருக்கும். இதற்கான பிரதான காரணம் அவர்கள் பாடசாலை செல்லும் போது கைக்குட்டையுடன் செல்லுமளவிற்கு அம் மாணவர்களின் பொருளாதார வசதி இடங் கொடுக்காமையே ஆகும்.

சில நல்லாசிரியர்கள் தம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு மூக்கிலிருந்து சளி சிந்தினால் தம்மிடம் உள்ள ரிஷ்யூ (Tissue) பேப்பரினால் துடைத்து விடுவார்கள். அல்லது ஓடிப் போய் ஸ்கூல் பாத்ரூமில் உள்ள தண்ணீர் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கழுவி விட்டு வருமாறு கேட்பார்கள். சில மாணவர்களே தம் மூக்கிலிருந்து வழியும் சளியினைத் தாம் அணிந்திருக்கும் சட்டையின் கைப் பகுதியினால் ஒத்தி எடுப்பார்கள். இதனைப் பார்க்கும் சிலர் "சே...அசிங்கம் பண்றான்" என நொந்து கொள்வார்கள். இன்னும் சில குழந்தைகள் மூக்கிலிருந்து வழியும் சளி பற்றிய போதிய அறிவு இல்லாது அதனைத் தம் நாக்கால் நக்கிச் சுவைப்பார்கள். இதனைக் காணும் பிறரது மனம் சொல்லும் வார்த்தையினை நீங்களே நினைத்துப் பாருங்களேன்!
மூக்கிலிருந்து சளி வருவது இயற்கையான நிகழ்வு. பழுப்பு நிறமான தடிமன் என்றால் மூக்கிலிருந்து சளி வராது. ஆனால் சிலருக்கு அதுவே மஞ்சள் கலரில் மூக்கினை அடைத்து யாராது அவர்களைப் பார்த்துப் பேச முனையும் போது வாந்தியினை வர வைப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். சிலருக்கு தண்ணீர் தன்மையான தடிமன் இருக்கும். அது எந் நேரமும் மூக்கிலிருந்து சிந்திக் கொண்டிருக்கும். இவ்வாறு மூக்கிலிருந்து மஞ்சள் கலரில் தடிமன் சிந்துவதாலும், சில குழந்தைகள் தமது தடிமனை நாக்கால் நக்கிப் பார்ப்பதாலும் நம்ம ஊரில் மூக்கிலிருந்து டின்பால் (Condescend Milk) சுரக்கிறது என்று நையாண்டியாகப் பேசுவார்கள்.

மூக்கிலிருந்து டின்பால் வருகிறது. ஓடிப் போய்த் துடைத்து விட்டு வா என்று தான் வீடுகளில் அழைப்பார்கள். இன்றைய காலத்தில் அனைவர் வீடுகளிலும் கைக் குட்டை வாங்குமளவிற்கு வசதி இருக்கும். அப்படிக் கைக் குட்டை வாங்க முடியாத வீடுகளில் பழைய லுங்கித் துணியினை (கைலி அல்லது சாரம்) கிழித்து லேஞ்சி போலச் செய்து பள்ளி செல்லும் பையனின் சட்டையில் இணைத்திருப்பார்கள். இன்றைய காலத்தில் ஹங்கி வாங்க முடியாத பெற்றோர் தம் பிள்ளைகள் தடிமனுடன் பள்ளி செல்லும் போது லுங்கியினைக் கிழித்து சிறிய கைக்குட்டை போன்று வடிவமைத்துக் சட்டையில் இணைத்துப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கலாம். இன்று பல பிள்ளைகள் ரிஷ்யூப் பேப்பருடன் பள்ளி செல்லத் தொடங்கி விட்டார்கள்.

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் மூக்கிலிருந்து தடிமன் சிந்துவதனைப் பார்த்து பிறர் எள்ளி நகைக்காக வண்ணமும், பிறருக்கு இந்த வைரஸ் தொற்றினை உங்கள் பிள்ளை ஏற்படுத்தா வண்ணமும் கைக் குட்டையினை உங்கள் பிள்ளைகள் பாடசாலை செல்லும் போது கொடுத்து விடுவது ஆரோக்கியமான சமூகத்தினை விரும்பும் பெற்றோர்கள் ஒவ்வொருவரின் கடமை அல்லவா.  மழைக் காலத்தில் குழந்தைகளின் உடல் நலனில் விசேட கவனம் செலுத்தி தம் பிள்ளைகளைப் பிறர் நையாண்டி செய்யா வண்ணம் வளர்க்க வேண்டியது பெற்றோர்களிற்குரிய சிறப்பான பணி அல்லவா? மூக்குள்ள வரைக்கும் சளி என்று ஓர் பழமொழி கூறுவார்கள். நாம் தான் எம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தினைப் பேணி அவர்களை மூக்கினூடாகத் தொற்றும் நோய் அழற்சிகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். 

27 Comments:

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

A right post in right time

Unknown said...
Best Blogger Tips

மாப்ள என்னய்யா இது புல்லா ஞாயிறு சாப்பிட்டு(சாப்பாடுய்யா.... தவறா நினைச்சிடாதே..)உக்காந்து உங்க வலைய ஓப்பன் செய்தா....சளி மேட்டர்..
சரி சின்ன வயசுல நமக்கு ஒழுகாததா...
குழந்தைகளை காலையில் குளிக்க வைக்கும் போது குளித்து முடித்தவுடன் நன்றாக சளி சிந்தி விடவும் மூக்கின் சளி முழுவதும் வெளியேறிவிடும் (குளிக்கும் போது மட்டுமே சளி நன்றாக வெளியேரும்)அதன் பிறகு அன்று முழுவதும் குழந்தைகளுக்கு சளி ஒழுகாது
தூதுவளை லேகியம் ஒரு உருண்டை தரலாம் ஆனால் சூடு அதிகமாக கொடுக்கக்கூடாது,சமகன் தரலாம் நல்லது,சளியை உடனே நிறுத்தும் ஆங்கில மருந்து கொடுக்கக் கூடாது பின்னளில் சைனஸ் பிரச்சனை வரக்கூடும்

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS

A right post in right time
//

நன்றி நண்பா.

ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu
மாப்ள என்னய்யா இது புல்லா ஞாயிறு சாப்பிட்டு(சாப்பாடுய்யா.... தவறா நினைச்சிடாதே..)உக்காந்து உங்க வலைய ஓப்பன் செய்தா....சளி மேட்டர்..
சரி சின்ன வயசுல நமக்கு ஒழுகாததா...
குழந்தைகளை காலையில் குளிக்க வைக்கும் போது குளித்து முடித்தவுடன் நன்றாக சளி சிந்தி விடவும் மூக்கின் சளி முழுவதும் வெளியேறிவிடும் (குளிக்கும் போது மட்டுமே சளி நன்றாக வெளியேரும்)அதன் பிறகு அன்று முழுவதும் குழந்தைகளுக்கு சளி ஒழுகாது
தூதுவளை லேகியம் ஒரு உருண்டை தரலாம் ஆனால் சூடு அதிகமாக கொடுக்கக்கூடாது,சமகன் தரலாம் நல்லது,சளியை உடனே நிறுத்தும் ஆங்கில மருந்து கொடுக்கக் கூடாது பின்னளில் சைனஸ் பிரச்சனை வரக்கூடும்//


ஹே...ஹே..

நல்ல ஐடியாத் தான் சொல்லியிருக்கிறீங்க.

ஆங்கில மருந்துகளை விட, நம்ம நாட்டு வைத்தியம் தான் இவ்வாறான நோய்களுகு சிறந்தது என்பதனை ஏற்றுக் கொள்கிறேன்.

கவி அழகன் said...
Best Blogger Tips

Sali matter supper

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்,

மழை முடிஞ்சு பனி அதிகமா பொழிய துவங்கியாச்சு.
இந்த நேரத்தில் தான் அனேக பள்ளிக்குழந்தைகளுக்கு சளித்தொற்று பரவும்.
பெற்றோர் கொஞ்சம் முன்கூட்டி எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நேரத்துக்கு தக்க பதிவு.

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

சகோ சின்ன வயசிலேயிருந்தே ஒரு மார்க்கமாத்தான் திரிஞ்சிருக்கிங்க போல
நல்ல பகிர்வு.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம், நிரூபன்!மூக்குச் சிந்தும் பதிவு!ச்சீ,............விழிப்புணர்வுப் பதிவு,வாழ்த்துக்கள்!

தர்ஷன் said...
Best Blogger Tips

அடடடடா வெள்ளைக்காரன் மேட்டரா, எனக்கும் சின்ன வயசுல இந்த பிரச்சினை இருந்தது அடிக்கடி தடிமன் வரும்.
அசிங்கப்படக் கூடாதென்று உறிஞ்சி மூக்கிற்குள்ளேயே பத்திரப்படுத்தி வைத்திருப்பேன். அம்மா அதே ஸ்கூலில் டீச்சராய் இருந்தார்கள் நண்பர்கள் முன்னேயே என்னை இழுத்தெடுத்து பேப்பரால் சீந்தி விடுவார்கள் அசிங்கமாய் போய் விடும்.
இதை விட ஒரு முறை மேடையில் பாடிக்கொண்டு இருக்கிறேன். லேசாக ஒழுகி மூக்கின் வாயிலுக்கே வந்து விட்டது. உருட்டென்று இழுத்தால் பாட்டு குழம்பி விடும். எங்க மியூசிக் சர் என். ரகுநாதன் இப்படி ஏதும் நடந்தால் கம்பாலேயே கோடிழுத்து வரிக்குதிரை ஆக்கி விடுபவர். எல்லோர் முன்னும் ஒழுகிய மூக்கோடு பாடி முடித்தது மறக்க முடியாத அனுபவம். உங்கள் பதிவு மலரும் நினைவுகளை தூண்டி விட்டது.

அன்புடன் நான் said...
Best Blogger Tips

நல்ல பகிர்வு அனைவருக்கும் புரிதல் அவசியம்.

சுதா SJ said...
Best Blogger Tips

ஹா ஹா...
பாஸ் என்ன இப்படி திடிரென வித்தியாச பதிவு!!!!
இதுவும் நல்லாத்தான் இருக்கு....

சசிகுமார் said...
Best Blogger Tips

அருமை.....

சுதா SJ said...
Best Blogger Tips

பதிவு படிச்சு என் நேசரி காலத்துக்கு மனசு போயிட்டுது பாஸ்....
அப்போ எல்லாம் நேசரி நான் போறது என்றா அம்மா எனக்கு ஒரு ரோசாப்பு தந்தாதான் போவனாம், எல்லாம் டீச்சருக்கு கொடுக்கத்தான்.... அவ்வ

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

மகா நியூசன்ஸான நோய் இந்த ஜலதோஷம்தான்.சரியாச் சொன்னீங்க.

KANA VARO said...
Best Blogger Tips

தலைப்பே கொடூரமா இருக்கே!

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ!

நீங்களும் காலத்திற்கேற்ற பதிவு போட ஆரம்பித்து விட்டீர்கள்,நல்ல ஆலோசனை.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நல்ல பதிவு நிரூபன், ஆனா பதிவை செயலிழக்கச் செய்கிறது தலைப்பு.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

இப்படி ஒரு நல்ல பதிவுக்கு ஏன் இப்படி ஒரு அசிங்கமான தலைப்பு... மீண்டும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

Yoga.S. said...
Best Blogger Tips

ரீச்சருக்கே ரோசாப்பூ குடுத்து கரெக்ட் பண்ணப் பாத்த மன்மதக் குஞ்சு!(துஷ்யந்தன்)

Sivakumar said...
Best Blogger Tips

மூக்கு மேல் விரல் வைக்க செய்யும் பதிவு!

சுதா SJ said...
Best Blogger Tips

Yoga.S.FR said...

ரீச்சருக்கே ரோசாப்பூ குடுத்து கரெக்ட் பண்ணப் பாத்த மன்மதக் குஞ்சு!(துஷ்யந்தன்)<<<<<<<<<<<<<<<

பாஸ்... நம்மள கவனிச்சுட்டே இருக்கீங்க போல அவ்வ....
விடுங்க விடுங்க அதெல்லாம் கண்டுக்கப்படாது.... ஹீ ஹீ

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...குளிர்காலத்துக்கேற்ற பதிவு.ஆனா இங்க இந்த வருஷம் குளிர் குறைவு.ஐஸ் கொட்டவேண்டிய காலத்தில வசந்தகாலம்போல இளவெய்யில் !

ஹேமா said...
Best Blogger Tips

துஷி...நேசரிக்குப் போகேக்கையே ரோசாப்பூவா....!

Unknown said...
Best Blogger Tips

நல்ல பதிவு நன்றி!

Unknown said...
Best Blogger Tips

டின்பால் எமது குழுஉக்குறிகள் தடிமனுக்கான

Yoga.S. said...
Best Blogger Tips

ஹேமா said...துஷி...நேசரிக்குப் போகேக்கையே ரோசாப்பூவா....! ////"ரோசாப் பூ,சின்ன ரோசாப் பூ" எண்டு பாட்டும் பாடினவராம்!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
ஹேமா said...
Best Blogger Tips

துஷி அப்பவே இப்பிடிப் பாட்டுப் பாடியிருந்தா இப்போ அவரைச் சுத்தி மச்சாள்மார் நிறைய இருக்கிறது ஒரு பெரிய அதிசயமேயில்லை !

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails