Thursday, November 10, 2011

Last Night - விமர்சனம் - கணவனா / காதலானா தேவை என குழம்பும் பெண்ணின் நிலை!

மனித மனம் விசித்திரமானது என்று கூறுவார்கள். யார் மனதுள் எத்தகைய விடயங்கள் பொதிந்திருக்கின்றன என்றோ,அல்லது மனதில் எப்போது மாற்றங்கள் வந்து கொள்ளப் போகின்றது என்றோ இலகுவில் அறிய முடியாதளவிற்கு ஆழமானது தான் மனம் என்று அறிஞர்களும் ஆன்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள். எம் உணர்வுகளைப் பொறுத்து மனங்களில் இயல்புகள் மாறுபடுமா? அல்லது எம் மனத்தினைப் பொறுத்து உணர்வுகளின் இயல்பு மாறுபடுமா என்று எண்ணினால் எம் மனங்கள் தான் சில வேளைகளில் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன எனும் நிலையினையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.ஒரு மனதிற்குள் பொதிந்திருக்கும் விடயத்தினை வெளியே கொட்டித் தீர்த்து விட்டால் மனப் பாரம் குறைந்து விடும் என்பார்கள்.
மனதில் குழப்பங்களுக்கு ஆளாகித் திரிசங்கு நிலையில் நின்று தவிக்கின்ற பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற Last Night  எனும் ஹாலிவூட் திரைப் படத்தினைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா? கல்லூரி வாழ்வில் சந்தித்துக் கொள்ளும் இரு இளம் ஜோடிகளான ஜோனாவும் மைக்கலும், நீண்ட காலத்திற்குச் சேர்ந்து வாழும் நோக்கத்தோடு திருமண பந்தத்தில் இணைகின்றார்கள். அன்பு அதிகமாகச் சுரக்கும் இடத்தில் தான் அர்த்தமற்ற சந்தேகங்கள் வந்து தொற்றிக் கொள்ளும் எனும் யதார்த்தத்திற்கு அமைவாக கணவன் மைக்கலின் ஒவ்வோர் அசைவுகளையும் அளவுக்கதிகமாக நேசிக்கும் மனைவியின் ஜோனாவின் முன்னே ஒரு பார்ட்டியில் கணவன் தன் ஆப்பீஸில் வேலை செய்யும் பெண்ணோடு அருகே நின்று பேசி மகிழும் போது சந்தேகம் தொற்றிக் கொள்கின்றது.

இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தும் நோக்கில் அலுவலகத் தேவைக்காக வெளியூர் சென்ற மைக்கல் தன் ஆப்பீஸ் பெண்ணோடு தங்கி நின்ற செய்தியினை மைக்கேலின் நண்பன் ஜோனாவிடம் போட்டுக் கொடுக்கிறார். இதனால் ஜோனாவிற்கு மைக்கேல் மீதிருந்த சந்தேகம் வலுப் பெறுகின்றது. மனைவிக்குத் தூரோகமிழைக்க விரும்பதாக கணவனாக வரும் மைக்கேல் தன் மனைவியினைத் தேற்றி தான் ஜோனாவின் நம்பிக்கைக்கு உரிய கணவனாக நடப்பேன் என உறுதி கொண்டு வாழ்கிறார். இப்படியாக வாழ்ந்து வரும் சூழலில் திருமணத்திற்கு முன்பு ஜோனா பிரான்ஸிற்குச் சுற்றுலா சென்ற சமயம் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொண்ட டைம்பாஸ் காதலனைச் சந்தித்து மீண்டும் உரையாடத் தொடங்குகிறார்.

ஜோனாவை விட்டுப் பிரிய மனமில்லாது இறுதி வரை அவள் கூட வாழ ஆசைப்படும் காதலனின் தொல்லை ஒரு புறமும், தன்னை அன்போடு கவனித்துக் கொள்ளும் கணவனின் இனிமையான நினைவலைகள் மறு புறமும் ஜோனாவின் மனதினை வாட்ட குழம்பித் தவிக்கிறாள் ஜோனா.
இந் நேரத்தில் முன்னாள் காதலன் "உனக்கு கணவன் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா" எனக் கேள்வி கேட்டுக் காதல் தொல்லை செய்கிறான். ஜோனாவின் கணவன் மைக்கலை அடைய வேண்டும் எனத் துடிக்கும் அவரது அலுவலகத் தோழியின் செயற்பாடுகளைக் காட்சிப்படுத்தியவாறு படம் இன்னோர் கோணத்தில் நகர்கின்றது. தமிழ் சினிமாவில் வரும் காதற் காட்சிகளைப் போன்று - மைக்கலின் அலுவலகத் தோழி அவனை அடைய எடுக்கும் முயற்சிகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
மைக்கலும் ஜோனாவும் சேர்ந்து வாழ்ந்தார்களா? ஜோனாவும் அவளது முன்னாள் காதலனும் இணைந்து வாழ்ந்தார்களா என்பதனை 93 நிமிடங்களுக்குள் ஒரு காதல் காவியமாகச் சொல்லி நிற்கிறது இத் திரைப்படம். செப்டெம்பர் மாதம் 18ம் திகதி 2010ம் ஆண்டு திரைக்கு வந்திருக்கிறது இத் திரைப்படம். Massy Tadjedin அவர்களின் இயக்கத்திலும் எழுத்துருவாக்கத்திலும் உருவாகியிருக்கும் இத் திரைப்படத்தில், Keira Knightley, Sam Worthington, Eva Mendes, Guillaume Canet, Stephanie Romanov ஆகிய ஹாலிவூட், மற்றும் பிரெஞ்ச் கலைஞர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Clint Mansell அவர்களின் இசை படத்தின் ரொமான்டிக் நகர்விற்கு ஏற்றாற் போல இனிமையாகப் பொருந்தியிருக்கிறது. ஒரு காதல் காவியத்திற்கு இசை எவ்வளவு அவசியமோ அதனை உணர்ந்து மென்மையான மெலடியினால் எம் மனசை லயிக்கச் செய்திருக்கிறார் Clint Mansell அவர்கள். வசனங்களில் இயக்குனர் Massy Tajedin அவர்கள் ஒவ்வோர் விதமான உணர்ச்சிகளைக் காட்டும் போதும் எம் மனங்களில் எளிதில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வசனங்களை எழுதியிருக்கிறார். இதற்கு எடுத்துக் காட்டாக கணவன் மீது மனைவிக்குச் சந்தேகம் ஏற்படும் போது, "She likes you And you like her But you don't wont to tell me about this?" என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வசனத்தினை அமைத்திருக்கும் இயக்குனர், ஜோனா கணவன் மீதான அளவற்ற அன்பால் தான் சந்தேகம் கொண்டேன் என்பதனை உணர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதி வைக்கும் நேரத்தில் பின்வருமாறு வசனம் அமைத்திருக்கிறார்.

"I'ts Possible. I over racked. I know you And I love you" என நம்பிக்கையினைக் கட்டியெழுப்பும் காதற் சுவை ததும்பும் வசனங்களைத் தந்திருக்கிறார். படத்தில் ஜோனாவாக நடித்திருக்கும் Keira Knightley அவர்கள் அற்புதமாகத் தன் பங்களிப்பினைப் படத்திற்கு வழங்கியிருக்கிறார்.உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வண்ணம் முகபாவனைகளைக் காட்டுவது முதல், ஓவர் மேக்கப் இன்றி எளிமையான பெண்ணாக வந்து மனதினைக் கொள்ளையிட்டுச் சென்றிருக்கிறார்.இப் படத்தின் கதா நாயகனாக நடித்திருக்கும் Sam Worthington அவர்களிற்கான காட்சியமைப்புக்கள் குறைவாக இருந்தாலும் சிறப்பான முறையில் சென்டிமென்ட் கலந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களில் அசத்தியிருக்கிறார்.

காதற் காவியங்களை ரசிக்கும் ரசனை உள்ளோருக்கும், டைம் பாஸிற்காக கொஞ்சம் ரொமான்டிக் படம் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் எண்ணம் கொண்டோருக்கும் நிச்சயமாக விருந்தளிக்கும் இப் படம்!

*93 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இத் திரைப் படத்தினை இணையத் தளத்தில் கண்டு களிக்க விரும்புவோர் இங்கே கிளிக் பண்ணிச் செல்வதனூடாக உங்களுக்குப் பிடித்தமான தளத்தில் கண்டு களிக்க முடியும்:

Last Night: கணவனா அல்லது முன்னாள் காதலனா தன் வாழ்விற்குத் தேவை என உணராது குழம்பித் தவிக்கும் பெண்ணின் திரிசங்கு நிலையினை உணர்த்தும் படம்!

இப் படத்தினைப் 15 வயதிற்கு மேற்பட்ட யாவரும் பார்த்து மகிழலாம். விரும்பின் குடும்பத்துடனும் பார்த்து மகிழலாம். 

22 Comments:

Unknown said...
Best Blogger Tips

என்ன நிரூ மூன்று நாளா ஒரே ரொமாண்டிக் மூடுல
என்னய்யா நடக்குது அங்க...


சம்மதம் தருவாயா சகியே...

M.R said...
Best Blogger Tips

காலை வணக்கம் நண்பா

அழகிய விமர்சனம் ,டைம் கிடைத்தால் படம் பார்க்கிறேன் நண்பா

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>இப் படத்தினைப் 15 வயதிற்கு மேற்பட்ட யாவரும் பார்த்து மகிழலாம். விரும்பின் குடும்பத்துடனும் பார்த்து மகிழலாம்

hi hi அப்போ நான் பார்க்க முடியாதா? அவ்வ்வ்வ்வ்வ்

செங்கோவி said...
Best Blogger Tips

அந்த 7 நாட்கள் - படம் போல் இருக்குமா?

செங்கோவி said...
Best Blogger Tips

நல்ல தெளிவான விமர்சனம்..டாரண்ட் லின்க் இருந்தால் கொடுங்களேன்..

Unknown said...
Best Blogger Tips

மற்றுமொரு அசத்தல் விமர்சனம் நிரூ.. படத்தை பார்க்க தூண்டும் உங்கள் விமர்சனம். அருமை

சசிகுமார் said...
Best Blogger Tips

தேங்க்ஸ் மச்சி விமர்சனம் தூக்கல்...

Thava said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம்.நன்றி.

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம்,நிரூபன்!அருமையான விமர்சனம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ... தற்சமயம் நேரம் அதிகமாக கிடைக்கிறதா? படங்களின் விமர்சனங்கள் நிறைய வருதே... தொடர்க மாப்ளே


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

Unknown said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம் நன்றி!

கார்த்தி said...
Best Blogger Tips

பிறகென்ன சார் இப்ப ஆங்கில பட விமர்சனம் எல்லாம் தர வெளிக்கிட்டார்!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
Best Blogger Tips

சற்று முன் கிடைத்த தகவல் படி ......
பதிவு உலக ..........
அன்பின் நண்பர்கள் ,
அன்பின் தோழிகள் ,
அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
இன்று
"ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
நேரம் :மாலை 5 மணி .
வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
அன்புடன்
யானை குட்டி
http://yanaikutty.blogspot.com

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் ....

15 வயதுக்கு குறைந்த எவறும் பார்க்க கூடாது என்றால்....ஜயோ நான் பார்த்திட்டேனே.............ஹி.ஹி.ஹி.ஹி.......

Anonymous said...
Best Blogger Tips

இப் படத்தினைப் 15 வயதிற்கு மேற்பட்ட யாவரும் பார்த்து மகிழலாம். விரும்பின் குடும்பத்துடனும் பார்த்து மகிழலாம். //

பாஸூ.. அப்ப நான் இந்த படத்த பாக்க இன்னும் ஒரு வருசம் வெய்ட் பண்ணனுமா... அவ்வ்வ்வ்வ்வ்வ்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...

>>இப் படத்தினைப் 15 வயதிற்கு மேற்பட்ட யாவரும் பார்த்து மகிழலாம். விரும்பின் குடும்பத்துடனும் பார்த்து மகிழலாம்

hi hi அப்போ நான் பார்க்க முடியாதா? அவ்வ்வ்வ்வ்வ்//

நீ ஒரு போதும் உருப்படவே மாட்டேடா மூதேவி...ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வித்தியாசமான படமா இருக்கே, சூப்பர்...!!!விமர்சனமும் படத்தை காண தூண்டுகிறது மக்கா...!!!

N.H. Narasimma Prasad said...
Best Blogger Tips

ஆங்கிலப் பட விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை...பாஸ்!!!

Anonymous said...
Best Blogger Tips

இது நான் பார்க்காத படம்...தேடிப்பார்க்கிறேன்..விமர்சனம் Long & Sweet சகோதரம்...

ஹேமா said...
Best Blogger Tips

நல்லதொரு பட அறிமுகத்திற்கு நன்றி நிரூ !

Unknown said...
Best Blogger Tips

Keira Knightley :-)
கனவுக்கன்னி சொல்லவும் வேணுமா இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails