Sunday, November 20, 2011

Domino - ஹாலிவூட் பட விமர்சனம்: கவர்ச்சிப் பதுமையின் மெய் சிலிர்க்கும் அதிரடி!

இளகிய மனமுடையோருக்கும், 18 வயதிற்கு குறைந்தோருக்கும் உகந்த படம் அல்ல!
ஒரு குழந்தையினைத் தன் அன்பால் பாராட்டிச் சீராட்டி வளர்ப்பதில் அன்னை எந்தளவு தூரம் முக்கியத்துவம் பெறுகின்றாளோ, அதே போன்று ஒரு குழந்தையின் முன்னேற்றத்திற்கும், அக் குழந்தையினைப் பின்னிருந்து வழி நடத்துவதிலும் தந்தையும் சிறப்புப் பெறுகின்றார்.அன்னை வளர்ப்பில் வளரும் குழந்தைகளிலும் பார்க்க தந்தையின் மேற் பார்வையிலும், கண்டிப்பிலும் வளரும் குழந்தைகள் தம் எதிர் கால வாழ்வில் நின்றும் விலகி வழி தவறிப் போவது குறைவு என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள். 
இப் பதிவினூடாக உங்கள் நாற்று வலையில் நாம் படித்துக் கொண்டிருப்பது Domino எனும் ஆங்கிலத் திரைப் படத்தின் விமர்சனமாகும்.பெற்றோரின் அரவணைப்பில் வாழும் குழந்தையொன்று தன்னுடைய எட்டாவது வயதில் தன் தந்தையினை இழந்த பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றது. மேலை நாடுகளில் மறு மணங்களும், விவாகரத்தும் தடைக்குரிய விடயங்களே அல்ல என்பதால், கணவன் இறந்து எட்டாம் நாள் ஆகிய பின்னர் மனைவி மறு மணம் புரிந்து கொள்ளத் தன்னைத் தயார் செய்யும் போது எட்டு வயதுடைய பெண் குழந்தை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றது.

எட்டு வயதுடைய குழந்தை பெற்றோரின் அரவணைப்பின்றித் தனித்து வாழும் போது, அக் குழந்தையின் மனம் வன் முறையினை நோக்கிய பாதையினை நாடிச் செல்கின்றது. உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து இயக்குனர் Tony Scoot அவர்களால் 2005ம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Domino எனும் ஆங்கில ஆக்‌ஷன் திரைப்படமாகும். ஹாலிவூட் நடிகர் Domino Harvey அவர்கள் கார் விபத்து ஒன்றில் இறந்து விட, அவரது மகளான Laurence Harvey அவர்கள் அன்னை வளர்ப்பினில் வளராது தனிமையில் வளர்ந்த காரணத்தினால் வன்முறையினை நோக்கிய பாதையில் அமெரிக்காவின் கூலிக் கொலையாளியாக உருவாகுகின்றார்.  

மேற்படி உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து Domino எனும் பாத்திரத்தில் ஹாலிவூட் நடிகை Keira Knightley அவர்களை முதன்மையாகக் கொண்டு, நியூ லைன் சினிமா நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் தான் Domino ஆகும். Bounty Hunter எனப்படும் அமெரிக்காவை அச்சத்திற்கு உள்ளாக்கும் கூலிக் கொலையாளிகள் கும்பலில் இணைந்து வங்கிகளை, சூதாட்டம் இடம் பெறும் Casino மாளிகைகளைக் கொள்ளையடிக்கும் Domino, இறுதியில் தமிழ் சினிமாவில் வரும் சென்டிமென்ட் நிலைக்குத் தள்ளப்படுகினறார். 

28 வயதுப் பெண்ணின் பேரக் குழந்தையின் ஆப்பிரேசனுக்கு மூன்று இலட்சம் அமெரிக்க டாலர்கள் தேவை எனும் நிலையில் வாழ்வா? சாவா எனத் தீர்மானித்து மூன்று இலட்சம் டாலர் பணத்தினைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்கும் Domino வெற்றி பெற்றாரா? குழந்தையின் உயிரைக் காப்பாற்றினாரா? எனும் மர்மங்களுக்கான பதிலை நீங்கள் இப் படத்தினைப் பார்ப்பதன் மூலம் கண்டு களிக்க முடியும். இக் கதையின் சாயலில் இன்னோர் தமிழ் சினிமாப் படத்தினையும் பார்த்திருக்கிறேனே என என் உள் மனம் சொல்லுகின்றது. ஆனால் அந்தப் படம் என்ன படம் என்று தான் நினைவிற்கு வரமாட்டேங்குது. 

நியூ லைன் சினிமாவின் வெளியிட்டீல் 2005ம் ஆண்டு திரைக்கு வந்த இந்த டொமினோ திரைப்படத்தினை Tony Scoot அவர்கள் இயக்கியிருக்கின்றார். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் நடை பெற்ற உண்மைச் சம்வத்தினை அடிப்படையாகக் கொண்ட இப் படத்தின் கதையினை Richard Kelly அவர்கள் எழுதியிருக்கின்றார். 50 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் Tony Scoot, Samuel Hadida ஆகிய இருவரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப் படத்தில் பிரதான கதாபாத்திரமேற்று ஹாலிவூட் நடிகை Keira Knightely அவர்களும், இவருடன் இணைந்து ஏனைய ஹாலிவூட் நட்சத்திரங்களான Micky Rourke, Edgar Ramirez, Jacqueline Bisset, Delroy Lindo, Monique ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 
திரைக் கதையின் நகர்வு - ஆக்சன் படமானாலும் பார்வையாளர்களிற்கு வெறுபேத்தா வண்ணம் விவரணப் பட வடிவில் நகர்ந்திருப்பது சலிப்பின்றி அடுத்தது என்ன எனும் ஆவலுடன் இப் படத்தினைப் பார்ப்பதற்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றது. பின்னணி இசையில் ஒரு விறு விறுப்பான உணர்வினைத் தூண்டுகின்ற இசையினைக் கலவை செய்து கோர்வையாக்கி வழங்கியிருக்கின்றார் இசையமைப்பாளர் Harry Gerson அவர்கள். வசனங்கள் மேலைத் தேய வாழ்கை முறைக்கேற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதாலோ என்னவோ படத்தின் பெரும்பாலான காட்சிகளில் "F" வார்த்தைகள் தான் வந்து போகின்றது. ஒளிப்பதிவு பற்றி ஹாலிவூட் படங்களில் குறை கண்டு பிடிப்பதோ விமர்சிப்பதோ எம்மால் முடியாத விடயம்.

காட்சியமைப்பில்; ஒவ்வோர் படங்களிலும் வித்தியாசமான தொழில் நுட்பங்களைக் கையாண்டு  அதிக கவனம் செலுத்துவதும் இதற்கான காரணமாகும்.வசன நடையில் பல இடங்களில் நகைச்சுவையான வசனங்களைப் புகுத்தி எம்மைச் சிரிக்க வைத்திருக்கின்றார் Richard Kelly அவர்கள். ஒரு பெண் கொலை செய்யும் ஹேங் கூட்டத்தில் எப்பாடு பட்டாவது சேர்ந்து விட வேண்டும் எனத் துடிக்கும் போது, ஹேங் குழுவின் தலைவர் "உன்னிடம் அழகும், பார்ப்போரைக் கிறங்கடிக்கும் மார்பும், also you have a little - - - - -" என்று கூறும் போது; கொஞ்சமும் கோபப்படாது டொமினோ அவர்களிடமிருந்து சிரித்தபடி I want to have a little Fun என்று சொல்ல வைத்து அட கேங்கில் இணைவது கூட மகிழ்ச்சிக்காகவா என்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார் Richard Kelly அவர்கள்.

"ஆக்சன் பிரியர்களின் பசியினையும், கவர்ச்சி விரும்பிகளின் தாகத்தினையும் போக்கும் வகையில் இப் படம் அமைந்திருப்பதால் நீங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ முடியாது." துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் சில இடங்களில் கொடூரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இளகிய மனமுடையோருக்கு உகந்த படம் இது அல்ல! இலகுவாக அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இப் படத்தினை விவரணப் படம் போன்ற பாணியில் நகர்த்தியிருக்கின்றார்கள். சமயோசிதமாக சண்டைக் காட்சிகளில்; "தன்னை வேண்டுமானால் நீ ருசிக்கலாம்" என்று சொல்லி விட்டு டொமினோ கொலை செய்யும் நிலையிருக்கிறதே! இதனை நீங்கள் பார்க்கும் போது அட இதுவா அழகை ரசித்தபடி சாவது எனும் வசனத்திற்கான அர்த்தம் என்று யோசிப்பீங்கள்!

Domino: கவர்ச்சிப் பதுமையின் அதிரடி ஆக்சன்!

18 Comments:

Unknown said...
Best Blogger Tips

நானும் பார்த்தேன் பாஸ்!!!பார்க்கலாம்:)

வைரவர் said...
Best Blogger Tips

நான் இன்னும் பார்க்கவில்லை.....
இன்றிலிருந்து நான் புதிதாக ப்ளாக் ஒன்று தொடங்கியுள்ளேன் .... உங்கள் சேவை எங்களுக்கு தேவை....
http://vairavarvaakku.blogspot.com/

shanmugavel said...
Best Blogger Tips

//இளகிய மனமுடையோருக்கும், 18 வயதிற்கு குறைந்தோருக்கும் உகந்த படம் அல்ல!//

அப்போ எனக்கு உகந்த படம் அல்ல! ஹேஹே

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம்,நிரூபன்!அருமையான விமரிசனம்.இணைத்துப் பார்க்கவில்லை.முடிந்த போது பார்க்கிறேன்.நன்றி!

Anonymous said...
Best Blogger Tips

செம விமர்சனம், லின்கயும் கொடுத்துடீங்க.. பார்த்துட்டா போச்சி....

செங்கோவி said...
Best Blogger Tips

இதென்னய்யா படம்? கேள்விப்பட்டதே இல்லை..

செங்கோவி said...
Best Blogger Tips

// நீங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ முடியாது."//

அப்போ நல்ல படம் தான்..கண்டிப்பா பார்க்கணும்.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் நண்பா நலமா?
விமர்சனம் உங்கள் எழுத்தில் சூப்பர் . நேரம் இருக்கும் போது பார்க்காலாம் என்றிருந்தேன் . ஆனால் 18 வயதிற்கு குறைந்தோருக்கும் உகந்த படம் அல்ல குறிப்பிட்டுள்ளீர்கள் அப்போ சின்னவன் பார்க்கமுடியாது.

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

// இப் பதிவினூடாக உங்கள் நாற்று வலையில் நாம் படித்துக் கொண்டிருப்பது Domino எனும் ஆங்கிலத் திரைப் படத்தின் விமர்சனமாகும். //

என்ன பண்பலையில் பணியாற்றிய அனுபவம் போல தெரிகிறது...

காப்பி கள்ளர்களை தடுக்கத்தானே இப்படியொரு யோசனை...

Anonymous said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம்...

பார்த்துட்டா போச்சி....

Unknown said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம்.. இந்த படம் சனிக்கிழமை போட்டிருந்தாங்க.. பார்க்க முடியல.. நன்றி..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

///கவர்ச்சி விரும்பிகளின் தாகத்தினையும் போக்கும் வகையில் இப் படம் அமைந்திருப்பதால்////

பார்த்திட்டா போச்சி

சசிகுமார் said...
Best Blogger Tips

தேங்க்ஸ் மச்சி...

அன்புடன் மலிக்கா said...
Best Blogger Tips

// நீங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ முடியாது."/

அதுசரி அப்பயேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..

Mathuran said...
Best Blogger Tips

//இப் பதிவினூடாக உங்கள் நாற்று வலையில் நாம் படித்துக் கொண்டிருப்பது Domino எனும் ஆங்கிலத் திரைப் படத்தின் விமர்சனமாகும்//

காப்பி பேஸ்டுக்கு ஆப்பா?

Mathuran said...
Best Blogger Tips

விமர்சனம் சூப்பர் பாஸ்.. படமின்னும் பார்க்கவில்லை.. இரவு பார்ப்போம்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இணைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.
எச்சரிக்கையும் கொடுத்துவிட்டீர்கள்.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

குழந்தைகள் பார்க்க கூடாத படம் என்றதும் சிபி, அந்த படத்தை துருவி துருவி பார்த்துட்டே இருக்கானாம் ஹி ஹி....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails