Friday, November 25, 2011

Colombiana - வெறியோடு விரோதம் தீர்க்கும் அழகுப் பதுமையின் ஆக்‌ஷன் திரிலிங்!

புத்தம் புதிய ஹாலிவூட் பட விமர்சனம்!
குழந்தைகள் மனம் மென்மையானது.குழந்தைகளின் உள்ளத்திலிருந்து உதடுகள் ஊடே வெளி வரும் வார்த்தைகள் கபடமற்றவை. சிறு வயதில் மனதில் ஆழப் பதிகின்ற பல விடயங்கள் தான் மழலைகள் பெரியவர்களானதும் அவர்களின் எதிர் காலத்தினைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி விட ஏதுவாக அமைந்து கொள்கின்றன. ஒரு குழந்தையின் குணவியல்பும், அக் குழந்தை வாழும் சமூகத்தின் மற்றும் சூழலின் இயல்பும் ஒன்றித்துப் போகும் தனையினைக் கொண்டிருக்கும். குழந்தைகள் மனம் என்பது தாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றும் பச்சோந்திகளின் இயல்பினை ஒத்தது அல்ல. சிறு வயதில் கண்டு தரிசித்த விடயங்களை நெஞ்சில் நிலை நிறுத்திப் பரீட்சித்துப் பார்க்கும் உணர்வைக் கொண்டது என்று கூறுகின்றார்கள் அறிஞர்கள்.
கொலம்பியா நாட்டில் அழகான குடும்பத்தில் தன் தாய், தந்தையரோடு எட்டு வயதில் வாழ்ந்து வரும் சிறுமி (Cataleya) கத்தலியா. குழு மோதலின் அடிப்படையில் தன் கண் முன்னே பெற்றோர் இறப்பதனைப் பார்த்து தந்தையினைக் கொலை செய்த ஹேங் குழுத் தலைவனின் கையினைக் கத்தியால் குத்தி விட்டு ஓடத் தொடங்குகின்றாள் கத்தலியா. சேஸிங் (விடாது துரத்துதல்) காட்சிகளோடு ஆரம்பிக்கும் இத் திரைப்படத்தின் ஆரம்ப பகுதியில் தந்தையாரின் அறிவுரைக்கு அமைவாக தந்தை இறப்பதற்கு முன்பதாக கொடுத்த கம்பியூட்டர் சிப் இன் உதவியோடு சிறு வயதில் தன்னந் தனியாக தன் பாதுகாப்பின் நிமித்தம் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரிற்குச் சென்று தன் தந்தையின் சகோதரனோடு (Uucle) வசிக்கத் தொடங்குகின்றாள்.

உங்கள் அபிமான நாற்று வலைப் பதிவில் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இவ் விமர்சனத்தினையும் வெட்கம், மானம், சுறணையின்றி காப்பி பேஸ்ட் செய்து ஒரு சில இணையத் தளங்கள் நகல் எடுத்துக் கொண்டிக்கும் இவ் வேளையில்; ஒரு மனிதன் வாழும் சூழல் சில நேரங்களில் அவனது பழமையினை மறக்கச் செய்து விடும். அதே போல மனதில் ஆழப் பதிந்த வடுக்களையும் நீர்த்து விடச் செய்யும் இயல்பு கொண்டது. இந்த வரிகள் ஈழத் தமிழர்கள் பலருக்குப் பொருத்தமானவையாகும். படத்தின் மையக் கருவாக (Never Forget Where you came form) "நீ எங்கே இருந்து வந்தாயோ, உன் பூர்வீகத்தினை மறந்து விடக் கூடாது!" என்பதனை முன்னிறுத்தி, இக் கதையினை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் Oliver Megaton. கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய சிறு வயதில் தன் சிறிய தந்தையிடம் அடம் பிடித்து தானும் ஒரு கொலையாளியாக மாற வேண்டும் எனத் தன்னைத் தயார்படுத்துகின்றாள் கத்தலியா. 

ஈழத் தமிழர்கள் பலரும் இத் திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் கத்திலியாவைப் பற்றிய - நீ எங்கிருந்து வந்தாயோ- உன் பூர்வீகத்தினை மறந்து விடாதே எனும் உணர்வினை இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர் சிந்தையிலிருத்தியிருந்தால்; ஈழத் தமிழர்களுக்கென்று ஓர் தனியான தேசம் பிறந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உண்மையில் எம் போன்ற தமிழர்களின் வாழ்க்கையோடு பொருந்திப் போகின்ற யதார்த்தம் நிரம்பிய மையக் கருவினை உள்ளடக்கி பெற்றோருடன் இனிமையாக வாழ்ந்து வந்த தன் வாழ்க்கையினை; தன் பூர்வீகத்தினைச் சிதைத்த கொடியவர்களை அழிக்கும் நோக்கில் தன்னைத் தயார்படுத்தும் பெண்ணின் தனித்துவமான அல்லது தனித்து நின்று சாகசம் புரியும் அதிரடி - திரிலிங் காட்சிகளை உள்ளடக்கிய அமெரிக்க - பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் கொலம்பியானா. 

2011ம் ஆண்டு, ஜூலை மாதம் 27ம் திகதி Tri Star Pictures நிறுவனத்தின் விநியோகத்தில் வெளி வந்திருக்கும் இத் திரைப் படத்தினை ட்ரான்ஸ்போட்டர் 3, ஹிட்மேன் ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த பிரான்ஸ் நாட்டு இயக்குனர் Oliver Megaton அவர்கள் இயக்கியிருக்கிறார். நடிகை Zoe Saldana அவர்கள் கத்தலியா எனும் கதா பாத்திரத்திலும், Michael Varten அவர்கள் கத்தலியாவின் காதலன் டனி ஆகவும், நடித்து காதற் காட்சிகளில் நமது கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார்கள். இவ் இருவருடன் மற்றும் பல ஹாலிவூட், மற்றும் கொலம்பிய நாட்டுத் திரை நட்சத்திரங்களும் இணைந்து இந்த திரிலிங் படத்திற்குத் தம் பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள். இள வயதில் கொலைக் காட்சிகளைப் பார்த்து விட்டு தன் மனதில் பழி வாங்கும் உணர்வோடு அலையும் சிறுமியாக Amandia Stanberg எனும் கொலம்பிய நாட்டுச் சிறுமியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
சிறுமி Amandia அவர்கள் இத் திரைப்படத்தில் சிறிய காட்சிகளில் வந்து போனாலும் மனதில் தன்னுடைய அசத்தலான நடிப்பின் மூலம் இடம் பிடித்து விடுகின்றார்.தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை கொஞ்சம் சிரத்தையெடுத்து தன் அழகிய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கார் என்று கூறலாம். Luc Besson மற்றும் Pierre Ange Le Pogam ஆகியோர் இணைந்து இத் திரைப்படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். Nathaniel Machaley அவர்கள் தன்னுடைய இசையின் மூலம் திரிலிங் படத்திற்குரிய விறு விறு காட்சிகளை நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து அடுத்தது என்னவாக இருக்கும் என ஆச்சரியப்படும் வகையில் மெருகூட்டியிருக்கிறார்.ஒளிப்பதிவு, எடிற்றிங் பற்றி குறை சொல்லுமளவிற்கு ஏதும் இல்லை. வழமையான ஹாலிவூட் படங்களின் கை வண்ணங்கள் தான் இங்கேயும் அரங்கேறியிருக்கிறது.

21ம் நூற்றாண்டில் பெண்கள் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு நிற்கும் சூழலில், அமெரிக்காவில் குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைக் கூடத்தினுள் ஒரு பெண் தனியாக வேடமிட்டு பழிக்குப் பழி எனும் அடிப்படையில் கொலை செய்த பின் தப்பிச் சென்று விட, அமெரிக்க உளவு நிறுவனமான FBI நிறுவனத்தினர் சிறைக் கூடத்தின் வீடியோ காட்சிகளைப் பரிசீலனை செய்து பார்க்கும் போது ஒரு பெண் கொலை செய்திருக்கச் சந்தர்ப்பம் இல்லை என நம்பி "We are not looking for a women. It's not possible" எனச் சொல்லிக் கொலையாளியைத் தவற விடும் காட்சிகளும், பின்னர் கொலையாளி ஒவ்வோர் கொலையினைப் புரிந்த பின்னரும் கத்தலியா எனும் பெயருக்கான பொருள் வரும் வகையில் ஒவ்வோர் தடயங்களைப் போட்டு விட்டுச் செல்லும் காட்சிகளும் சுவாரஸ்யமானவை. 

படத்தில் பெற்றோரை இழந்த சிறுமி, அமெரிக்காவில் தனித்திருக்கும் போது; கொலையாளியாக மாறும் காட்சிகளில் முற்று முழுதாக நவீன உயர் ரக ஆயுதங்களைப் பின் புல உதவி மற்றும் ஆதரவு (Backup Support) ஏதுமின்றிக் கையாள்கின்றார், கொலையாளியாக மாறியதும் தனித்து வாழும் கத்தலியா தான் வாழுமிடத்தினை ஒரு போராட்டக் குழுவின் இடத்தினைப் போன்று மாற்றி வைத்திருக்கிறார். இவற்றுக்கான உதவிகளை எங்கிருந்து பெற்றார் என்பது மர்மமாகவே இருக்கின்றது. மிகவும் அருமையான விறு விறுப்பான படத்தில் இவ் இடத்தில் தான் லாஜிக் தவறு இடம் பெற்றிருக்கிறது. ஆக்‌ஷன் பிரியர்களின் சிந்தைக்கு விருந்தளிக்கும் வண்ணம் படத்தினை அமைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே அழகுச் சிலையின் நிர்வாணக் காட்சிகளாலும் மனதை அலைய வைத்திருக்கிறார்கள். 
குடும்பத்துடன் பார்க்க முடியாத படம். ஆங்கிலத்தில் 13 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க முடியும் என வரையறை செய்யப்பட்டிருந்தாலும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் குடும்பத்துடன் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல. இணையத்தில் இப் படம் கிடைக்கின்றது. புதிய திரைப் படத்தின் இணைப்பினைப் பகிர முடியாது எனும் கூகிள் நிறுவன விதி முறைக்கமைவாக படம் பார்ப்பதற்கான இணைப்பினைப் பகிர முடியவில்லை.

இத் திரைப் படத்தினைப் பார்த்து ஓர் விமர்சனம் பகிர வேண்டும் என எனக்கு இத் திரைப் படத்தினைச் சிபாரிசு செய்த சகோதரன் "சண்முகன் முருகவேல்" அவர்களிற்கு என் உளமார்ந்த நன்றிகளை உங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதில் அகம மகிழ்கின்றேன். 


Colombiana: வெறி தீர்க்கும் உணர்வோடு பழி வாங்கும் பதுமையின் அதிரடி!

17 Comments:

இந்திரா said...
Best Blogger Tips

//குடும்பத்துடன் பார்க்க முடியாத படம்.//


:(((


for the trailer, Youtube link click panren..
thank you..

இந்திரா said...
Best Blogger Tips

அட..
நான்தான் First'a?????
:))))

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல ஆங்கிலப் படங்களின் விமரிசனங்களைத் தந்து கொண்டி ருக்கிறீர்கள்.படித்து நானும் படம் பார்த்த நிறைவைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

Unknown said...
Best Blogger Tips

//(Never Forget Where you came form)//இறுதி from என நினைக்கிறேன், நேரமிருந்தால்"THE ART OF GETTING BY","ONE DAY","ABDUCTION" இந்த படங்களையும் பாருங்கள். என்னை குறிபிட்டமைக்கு நன்றிகள் :-)

rajamelaiyur said...
Best Blogger Tips

உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுது
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம், நிரூபன்!படிக்கவே இல்லை!குடும்பத்துடன் பார்க்க முடியாத படம் என்று இறுதிப்பாராவில் குறிப்பிட்டிருந்ததால்,படிக்கவில்லை,ஹி!ஹி!ஹி!

Unknown said...
Best Blogger Tips

நல்ல பகிர்தல்! எனது தளத்தில் நீங்கள் சொன்ன மாற்றத்தைச் செய்கிறேன்! அதுவரை உங்களின் கமெண்டைப் பப்ளிஷ் பண்ணவில்லை! - புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்! :-)

நன்றி உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும்!

Unknown said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் நிரூ நல்ல படங்களை தேர்ந்தெடுத்து எங்களிடம் சேர்க்கிறீர்கள் நன்றி..

நிரூபன் said...
Best Blogger Tips

@M.Shanmugan
/(Never Forget Where you came form)//இறுதி from என நினைக்கிறேன், நேரமிருந்தால்"THE ART OF GETTING BY","ONE DAY","ABDUCTION" இந்த படங்களையும் பாருங்கள். என்னை குறிபிட்டமைக்கு நன்றிகள் :-)//

நன்றியெல்லாம் எதற்கு பாஸ்,

Abduction படம் ஏற்கனவே பார்த்து விமர்சனம் எழுதியிருக்கேன்.
இந்த இணைப்பில் தாங்கள் விரும்பின் படிக்கலாம் நண்பா.
http://www.thamilnattu.com/2011/09/abduction.html

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>//குடும்பத்துடன் பார்க்க முடியாத படம்.//


haa haa நாமெல்லாம் எந்தக்காலத்துல குடும்பத்தோட போய் இருக்கோம்?

Mathuran said...
Best Blogger Tips

///உங்கள் அபிமான நாற்று வலைப் பதிவில் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இவ் விமர்சனத்தினையும் வெட்கம், மானம், சுறணையின்றி காப்பி பேஸ்ட் செய்து ஒரு சில இணையத் தளங்கள் நகல் எடுத்துக் கொண்டிக்கும் இவ் வேளையில்;//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... காப்பியடிக்கிறவனெல்லாம் நாறப்போறாங்கள்

Mathuran said...
Best Blogger Tips

//ஈழத் தமிழர்கள் பலரும் இத் திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் கத்திலியாவைப் பற்றிய - நீ எங்கிருந்து வந்தாயோ- உன் பூர்வீகத்தினை மறந்து விடாதே எனும் உணர்வினை இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர் சிந்தையிலிருத்தியிருந்தால்; ஈழத் தமிழர்களுக்கென்று ஓர் தனியான தேசம் பிறந்திருக்கும் என்பதில் ஐயமில்லை//

உண்மைதான் நிரூபன்

Mathuran said...
Best Blogger Tips

படம் இன்னும் பார்கவில்லை. இனிமேல்தான் பார்க்கவேண்டும்

Unknown said...
Best Blogger Tips

//விமர்சனத்தினையும் வெட்கம், மானம், சுறணையின்றி காப்பி பேஸ்ட் செய்து ஒரு சில இணையத் தளங்கள் நகல் எடுத்துக் கொண்டிக்கும் இவ் வேளையில்// இதுதான் நிரூபனின் குறும்பான இடுக்கு குத்து !!!!!!!

செங்கோவி said...
Best Blogger Tips

நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நிரூ..

இந்தப் படத்துடன் நம் வாழ்வை இணைத்து யோசித்த விதம் அருமை.

Unknown said...
Best Blogger Tips

Nice Review Friend..

///சி.பி.செந்தில்குமார் said...
>>//குடும்பத்துடன் பார்க்க முடியாத படம்.//


haa haa நாமெல்லாம் எந்தக்காலத்துல குடும்பத்தோட போய் இருக்கோம்?////

Ha ha ha..

shanmugavel said...
Best Blogger Tips

எப்படி இத்தனை படம் பார்க்கிறீர்கள்? அந்த ரகசியத்தை சொன்னால் நானும் தெரிந்துகொள்வேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails