Thursday, November 17, 2011

ஈழப் போரியலில் இது வரை வெளி வராத மர்மங்கள்!

சத்தியன் தலமையில் இராணுவத்தினர் நெருப்பினையும்,ஏனைய போராளிகளையும் தேடி அழிக்கும் நோக்கில் ஒரு அதிரடி நடவடிக்கைக்குத் திட்டமிட்டார்கள். சத்தியன் தலமையிலான குழுவினர் புலிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியினுள் பொது மக்கள் போன்று வேடமிட்டுச் சென்று தாக்குதல் நடத்தினால் தான் புலிகளை உயிரோடு பிடிக்க முடியும் என கனவு கண்டார்கள்.தாம் புலிகளினைத் தேடிச் செல்வதனை புலிகள் அறியாதவர்களாக பொது மக்களோடு உரையாடிக் கொண்டிருப்பார்கள். இப்படியொரு சந்தர்ப்பம் அமையும் போது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள் இராணுவத்தினர். மழைக் காலத்தில் ஓடுவதனைப் போன்று ஆட்டோவின் இரு பக்க யன்னல் பகுதிகளையும் தரப்பாள் / படங்கு கொண்டு மூடித் தம் தாக்குதலுக்குத் தயாராக ஆட்டோவினையும் ஒழுங்கு செய்தார்கள் இராணுவத்தினர். 

நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் பேரபிமானம் பெற்ற நாற்று வலைப் பதிவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள். இராணுவத்தினரின் தாக்குதலுக்கு முன்பதாக 2007ம் ஆண்டு பங்குனி மாத இறுதி நாட்களில் வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் முன்னாள் புலி உறுப்பினரான வேணன் அவர்கள் தன் காதலி தன்னை விட்டுப் பிரிந்ததற்கான காரணத்தினை அறிந்து, இதற்கு காரணம் காதலியின் அண்ணன் எனத் தெரிந்து கொண்டு காதலியின் அண்ணன் மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் இளைஞர்கள் சிலரைத் திரட்டி வந்து அவரது காதலியின் அண்ணன் மீது சைக்கிள் செயின், மற்றும் கிரிக்கட் மட்டை முதலியவற்றால் தாக்குதல் நடாத்த தொடங்கினார்கள்.

இந்தச் சம்பவத்தினைத் தீர்க்கும் நோக்கோடும் விடுதலைப் புலிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு மாறன் தலமையில் கோஷ்டி மோதல் நடை பெறும் இடத்திற்கு வந்து மாறனையும், அவரது குழுவினரையும் எச்சரித்து அனுப்பினார்கள். இதுவும் புலிகளுக்கு ஒரு துன்பகரமான நிகழ்வாக அமைந்து கொள்கின்றது.மறு நாள் காலை பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலத்தில் உள்ள மாணவர்கள், பண்டாரிக்குளத்தில் வசிக்கும் மக்கள் என அனைவருக்கும் புலிகள் நள்ளிரவில் ஆயுதங்களோடு வந்து பஞ்சாயத்து செய்த செய்தி பரவுகின்றது. அதே வேகத்தோடு அச் செய்தி இராணுவத்தினரின் காதுகளையும் எட்டுகின்றது.இராணுவம் தம் நடவடிக்கைக்கான நாளினைக் குறித்தது. 11.04.2007 புதன் கிழமை மாலையப் பொழுதில் புலிகள் சிவகரனின் மளிகைக் கடைக்கு வந்து கொம்பு பணிஸ் வாங்கி உண்டவாறு நாட்டு நடப்புக்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாலை 05.37 அளவில் அங்கே நின்ற விமலனின் நோக்கியா தொலை பேசி அலறத் தொடங்கியது. போனை எடுத்துக் காதில் வைத்தவருக்கு அதிர்ச்சி! சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்று தோணிக்கல் வீதியூடாக தம் பகுதியை நோக்கி வருவதாக மக்களிடமிருந்து தகவல் கிடைக்கின்றது. உடனடியாக தம்மைத் திடப்படுத்திய புலிகள் சிவகரனின் கடைப் பகுதியினை விட்டு நேரடியாக கூமாங்குளத்திற்குப் போவதற்குத் தயாரானார்கள். அதே நேரம் மற்றுமொரு ஆட்டோவிலும் ஸ்ரீலங்கா இராணுவப் படைத் துறைப் புலனாய்வாளர்கள் எதிர்த் திசையிலிருந்து புலிகள் நின்ற பகுதியினை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு ஆட்டோ தோணிக்கல் உக்குளாங்குளம் வீதியூடாகவும், மற்றுமொரு ஆட்டோ வேப்பங்குளம் வீதியூடாக வந்து கூமாங்குளம் - உக்குளாங்குளம் வீதியினூடாக புலிகள் நின்ற பகுதியினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

இப்போது நடுவில் புலிகள். வீதியின் இரு மருங்கிலும் இராணுவத்தினர். சமயோசிதமாகச் செயற்பட்ட புலிகள் உடனடியாக சிவகரனின் கடைக்கு உள்ளே சென்று கடையின் பின் புறப் பகுதியில் உள்ள மதிலால் தாவி ஏறி, மக்களின் வீடுகளுக்குள்ளால் பதுங்கிச் சென்று "உக்குளாங்குளத்திலுள்ள கனறா" பாலர் பாடசாலையினுள் பதுங்கிக் கொள்கின்றார்கள். இராணுவம் பொது மகன் ஒருவர் ஆட்டோவினுள் இருந்து இறங்கி சிவகரனின் கடைக்குப் பொருட்கள் வாங்கச் செல்வது போலப் பாசாங்கு செய்து ஆட்டோவை விட்டுக் கீழிறங்கி; நடந்து சென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தம் துப்பாக்கிகளால் சராமாரியாகச் சுடத் தொடங்குகின்றது. புலிகளைத் தேடிக் கொலை வெறியோடு வந்தவர்களுக்குத் தம் வலையில் புலிகள் விழாதது மிகுந்த ஏமாற்றத்தினையளித்திருக்க வேண்டும். சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார்கள். புலிகள் இராணுவத்தின் கண்களில் சிக்கவேயில்லை.

11.04.2007 மாலை 05.47: அந் நேரம் சிவகரனின் கடையில் சிவகரனும், அவரது 11 மாதக் குழந்தை வைஷ்ணவியும்;பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்த வயோதிக மூதாட்டியும், சிவகரன் வீட்டிற்கு அருகே இருக்கும் அவரது நண்பரான கேதீஷ்வரன் தம் உறவினர்களோடு பேசுவதற்காக தொலைபேசி எடுக்கும் நோக்கிலும்;20 வயதுடைய சந்திரன் அவர்கள் சிகரட் வாங்குவதற்காகவும் அங்கே வந்திருந்தார்கள்."அட இம்புட்டுத் தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கிறோமே? சும்மா வெறுங்கையராகத் திரும்பிப் போவதா?" என இராணுவம் யோசித்து, தாம் ஒன்றும் ஏமாந்த சோனகிரிகள் அல்ல என்பதனை இச் சம்பவத்திலும் நிரூபிக்க வேண்டும் எனும் நோக்கோடு தம் ஈனச் செயலை / கையாலாகத்தனத்தை ஆரம்பித்தது.

"புல்லும் இங்கே போர்க் கோலம் பூணும்" எனக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் பின்னாளில் எழுதிய வசனத்தை தம் ஞானக் கண்ணால் முற் கூட்டியே உய்த்தறிந்து கொண்டார்களோ என்னவோ?கடையில் நின்றிருந்த 68 வயதுடைய மூதாட்டியிடம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தித் தெள்ளத் தெளிவான தமிழால் "இங்கே புலிகள் வந்தார்களா? புலிகள் எங்கே இருக்கிறார்கள்? நீ புலிகளுக்கு ஆதரவா?" எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துன்புறுத்தி அவரைச் சுட்டுக் கொன்றத் இராணுவம். சத்தியனின் கொலை வெறித்தனத்தால் 68 வயதுடைய சுப்பிரமணியம் சந்திரமதி எனும் மூதாட்டி ஸ்தலத்திலேயே பலியானார். அடுத்ததாக அங்கே நின்ற 48 வயதுடைய அருளப்பு கேதீஷ்வரனையும் சுட்டுக் கொன்றார்கள். கேதீஷ்வரன் உயிருக்குப் போராடியவாறு "தண்ணீர்! தண்ணீர்!"என்று கதறியழுத போது அதனைக் கேட்காதவர்களாக இராணுவம் காலால் அவர் உடலில் ஏறி நின்று மிதித்து மகிழ்ந்தது.

இப்போது எஞ்சியிருப்போர் சந்திரனும், சிவகரனும் அவரது கைக் குழந்தை வைஷ்ணவியும் மாத்திரமே. விடுவார்களா? 20 வயதுடைய ராஜகோபால் சந்திரகுமாரைப் புலியென நினைத்து அடித்தும், காலால் மிதித்தும் சித்திரவதை செய்து தம் கொடூரத்தினை நிரூபித்து விட்டுச் சுட்டுக் கொன்றார்கள்.("சந்திரகுமாரின் தம்பியொருவர் புலிகள் வவுனியா - உக்குளாங்குளத்திற்கு வந்த பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சென்று புலிகளோடு இணைந்து கொண்டவராவார்.) முகத்தைக் கறுப்புத் துணியால் இராணுவத்தினர் கட்டியிருந்தாலும், அவர்களின் சாயலை வைத்தும், உரையாடலை வைத்தும் சிவகரன் அங்கே தாக்குதல் நடாத்திக் கொண்டிருந்த குழுவின் தலைவர் சத்தியன் தான் என்பதனை உறுத்திப்படுத்திக் கொண்டார். "நீ புலிகளுக்கு உதவி செய்கிறனி! புலிகள் எங்கே என்று சொல்றியா உன் மகளைக் கொல்லவா?" எனச் சினிமாப் பாணியில் மிரட்டி அவரது 11 மாத மகளைத் தூக்கி எறிந்து விளையாடினார்கள் இராணுவத்தினர். அவர் கண்ணீர் மல்க சத்தியனின் காலில் விழுந்து கெஞ்சினார்.
சத்தியன் சிவகரனைத் தன் பாடசாலை நண்பன் என்று சத்தியன் நினைத்திருப்பாரோ என்னவோ தன்னால் இயன்ற வரை துப்பாக்கிப் பிடியால் சிவகரனின் மேனியெங்கும் அடி கொடுத்து விட்டு, அவரது கடையில் இருந்த பெறுமதி மிக்க பொருட்களை உடைத்து நொருக்கி விட்டு, குழந்தையினையும் சிவகரனிடம் கொடுத்து விட்டு "இங்கே உள்ள எல்லோருக்கும் சொல்லு! புலிகளுக்கு உதவி செய்தால் இது தான் நிலமை என மிரட்டி எச்சரித்து விட்டுச் சென்றார்கள்.உக்குளாங்குளம் ரணகளமாகியது. சிவகரனின் கடை முழுவதும் இரத்த வெள்ளம். இதே வேளை உடனடியாக மேலதிக இராணுவத்தினர் அப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு புலிகளைத் தேடியளிக்கும் தம் நடவடிக்கையினை இராணுவம் ஆரம்பிக்கத் தொடங்கியது. சிவகரன் உக்குளாங்குளத்தினை விட்டு வெளியேற வேண்டிய நிலமை. 

இதற்கான காரணம் இராணுவம் இரவோடு இரவாக சிவகரன் வீட்டிற்கு வந்து புலிகளைப் பற்றிக் கேட்டுத் தொல்லை செய்யத் தொடங்கியது. இப்போது புலிகளுக்கு உக்குளாங்குளத்திலிருந்த பேராதரவு மெது மெதுவாக குறையத் தொடங்கியது.புலிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி வவுனியா மாவட்டத்தினை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என இராணுவம் தீர்மானித்தது."துன்பத்தைத் தருபவர்க்கே அந்தத் துன்பத்தைத் திருப்பிக் கொடு" எனும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சிந்தனையினை அங்கே ஒளித்திருந்த போராளிகள் மீட்டிப் பார்த்தார்கள்.தம்மோடு நெருங்கியிருந்த மக்களுக்குத் தம்மால் தானே தாக்குதல் இடம் பெற்றது. சே! என்ன கொடுமை! எம்மைத் தேடியளித்துக் கொன்றிருக்கலாம் தானே? ஏன் அப்பாவி மக்களின் உயிரோடு இராணுவம் விளையாட வேண்டும்?" என புலிகள் பலமாகச் சிந்தித்தார்கள். 

நெருப்பு, டக்ளஸ், விமலன் ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். மறு நாள் 12.04.2007 அன்று; வவுனியா நகரம் அதிரத் தொடங்கியது. வவுனியா வைத்தியசாலையினை நோக்கி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடத் தொடங்கியது. ஏன்? எதற்காக என அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்.

பிற் சேர்க்கை:11.04.2007 அன்று இராணுவத்தினரின் மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு எம் அஞ்சலியினையும் காணிக்கையாக்குவோம். இச் சம்பவத்தில்; 
சுப்பிரமணியம் சந்திரமதி - வயது 68
இராஜகோபால் சந்திரகுமார் - வயது 20
அருளப்பு கேதீஷ்வரன் - வயது 48 ஆகியோர் உயிரிழந்தார்கள்.

இச் சம்பவத்தின் உச்சபட்ச காமெடி என்ன தெரியுமா? வவுனியாவில் மூன்று LTTE உறுப்பினர்களைத் தாம் கொன்றதாக அவசரக் குடுக்கைத் தனமாக அறிக்கை விட்டு, பின்னர் அது பொது மக்கள் என மனித உரிமை அமைப்புக்களால் உறுதிப்படுத்தப்பட்ட உடன்;மனித உரிமைகள் திணைக்களத்திடமும், ஏனைய பொதுமக்கள் சார் அமைப்புக்களிடம் இராணுவம் முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டமை ஆகும்.

27 Comments:

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பிற்கினிய உறவுகளே, என் வலையில் சிறு கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் உங்கள் பின்னூட்டங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை.

மீண்டும் உங்கள் பின்னூட்டங்களை இணைக்கின்றேன்.

தவறுகளுக்கு வருந்துகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் has left a new comment on your post "ஈழ யுத்தத்தில் இது வரை வெளி வராத மர்மங்கள்!":

முதல் வாசகன்

நிரூபன் said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் has left a new comment on your post "ஈழ யுத்தத்தில் இது வரை வெளி வராத மர்மங்கள்!":

வழக்கமான எழுத்து நடையில் இருந்து கொஞ்சம் விலகி இந்தியத்தமிழில் கட்டுரை , வரவேற்கிறேன்

நிரூபன் said...
Best Blogger Tips

"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment on your post "ஈழ யுத்தத்தில் இது வரை வெளி வராத மர்மங்கள்!":

இன்டிலி இணைத்துவிட்டேன்

நிரூபன் said...
Best Blogger Tips

"என் ராஜபாட்டை"- ராஜா rrajja.mlr@gmail.com via blogger.bounces.google.com
2:41 PM (48 minutes ago)

to me
"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment on your post "ஈழ யுத்தத்தில் இது வரை வெளி வராத மர்மங்கள்!":

அருமையான கட்டுரை

நிரூபன் said...
Best Blogger Tips

@என் ராஜபாட்டை
"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment on your post "ஈழ யுத்தத்தில் இது வரை வெளி வராத மர்மங்கள்!":

அருமையான கட்டுரை//

சகோ, இதில் எங்கே கட்டுரை எழுதியிருக்கேன்? ஒரு சம்பவத்தை விவரணமாக அல்லவா எழுதியிருக்கேன்.

பதிவு எழுதி ஒரு நிமிடத்தினுள் முழுப் பதிவையும் படித்து அருமை என்று பின்னூட்டியிருக்கிறீங்களே!

என்ன வேகம்?

கொஞ்சமாவது நிதானமாக பதிவைப் படிக்க மாட்டீங்களா?

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

படிக்கும் போது உண்மையை மனதை உறைய வைக்கிறது அண்ணா.
உறவுகள் பட்ட, படும் வேதனைகள் வெளியுலகுக்குத் தெரியாதவை இதுபோல் இன்னும் எத்தனை...?????

சசிகுமார் said...
Best Blogger Tips

ஈழப் புலிகளின் பல தகவல்களை எங்களுக்கு தருகிறீர்கள் நண்பரே நன்றி...

F.NIHAZA said...
Best Blogger Tips

வாசிக்கும் போதே...நெஞ்சடைக்கிறது.....
இதையெல்லாம் தாங்கும் சக்தி எனக்கில்லைங்க....

என்னமோ தெரியலை நிரூபன்....
ஈழப்போரியல் சம்பந்தமான
முந்தைய பதிவுகளைவிட இந்தப்பதிவுல என்னமோ ஈர்ப்பு இருக்கு...என்னன்னு புரியலை...
என்னவாக இருக்கும்.....

Unknown said...
Best Blogger Tips

நிறைய விஷயங்கள் புதிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது!
இந்தத் தொடரில் உங்கள் எழுத்துநடை அருமை!
தொண்ணூறுகளில் வந்த வெளிச்சம், சாளரம் இதழ்களைப் படிப்பது போன்ற உணர்வு! உங்களுக்கு(ம்) ஞாபகமிருக்குமென நினைக்கிறேன்!

Unknown said...
Best Blogger Tips

என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியலே நிரூ..

எப்படிப்பட்ட சூழலில் மக்கள் வாழ்ந்து இருந்தார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாய் இருக்கிறது..

Unknown said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி!

Unknown said...
Best Blogger Tips

ஆரம்பித்து படிக்கும்போதே பதற்றம் இயல்பாக வந்து ஒட்டிக்கொள்கிறது,கடந்து போன சம்பவங்களாயினும் ஜீரணிக்க முடியவில்லை.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ராணுவத்தால் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்...!!

தனிமரம் said...
Best Blogger Tips

இரானுவத்தால் மக்கள் கொலை செய்யப்படுவதும் பின் புலிகள் என்று அறிக்கைவிடுவதும் ஒரு தொடர்கதை .லங்காபுவத்தின் செயல் எப்போதும் அப்படித்தான் என்பதைப் புரிந்து கொண்டோர் பலர் ! 
அறியமுடியாத தகவலைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுறீங்கள் தொடருங்கள் முடிந்தளவு தொடர்கின்றேன்!

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்,நலமா
வெளியூர் சென்றுவிட்டதால் கடந்த இரு பான்ஞ்களை தவற விட்டு விட்டேன்.அவற்றையும் வாசித்து விட்டு வருகிறேன்

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
இலங்கையில் லங்கா புவத்த CVP என்றும் சொல்வார்கள்..!! (சிலோன் வெடி புளுகன்)..

Anonymous said...
Best Blogger Tips

இலங்கை ராணுவம் பறித்த நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிர் கூட சேர்த்து இந்த மூவருக்கும் என் அஞ்சலி...

SURYAJEEVA said...
Best Blogger Tips

கண்ணீர் அஞ்சலியுடன் தொடர்கிறேன்... அடுத்த பதிவை எதிர்நோக்கி

கோகுல் said...
Best Blogger Tips

உங்கள் தமிழ் நடையில் வாசிக்கையில் நடந்தவை கண் முன்னே விரிகிறது.
அப்பாவி மக்களுடன் இம்மூவருக்கும் அஞ்சலிகள்!

வைரவர் said...
Best Blogger Tips

நன்றி நிரூபன்..... அறியாத பல விடயங்களை அறிந்து கொண்டேன்..............ஒளிவீச்சு பார்த்த ஒரு உணர்வு.........

Unknown said...
Best Blogger Tips

மூதாட்டி,குழந்தையையுமா....மனதை பிசைகின்றது என்ன கொடுமை...

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

பதிவுக்குப்பின் மிகுந்த உழைப்புத் தெரிகிறது.

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,நினைவஞ்சலியாக அமைந்துள்ளது இந்தப் பதிவு.மனதைப்பிசைகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

இலங்கை ராணுவம் பறித்த நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிர் கூட சேர்த்து இந்த மூவருக்கும் என் அஞ்சலி...


அன்பிற்குரிய நண்பா, இராணுவத்தினராலும், போரின் போதும் கொல்லப்பட்ட மக்களின் தொகை நாற்பதாயிரம் அல்ல, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேல்.

உணவு உலகம் said...
Best Blogger Tips

இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

கவி அழகன் said...
Best Blogger Tips

Aduthathu ena vavuniya police station climore than

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails