Thursday, October 13, 2011

விம்மும் கலைஞர்! வாக்குறுதி வீசியதால் பம்மும் ஜெயலலிதா!

விம்மியழும் கலைஞர்!


கண்ணீரில் மூழ்கி கதறியழுகின்றார் ஐயா கலைஞர்
கனிமொழியின் வாழ்வையும் சிதைத்த முன்னாள் தமிழ் தலைவர்!
மண் ஆசையால் இன்றும் போக மனமின்றி தள்ளாடுகின்றார்
மஞ்சள் துண்டே சரணம் என நாளும் திண்டாடுகின்றார்!

தமிழ்த்தாயின் மடியில் தன்னுயிர் போகுமாம்
தவறுகளைச் செய்த உயிர் காரணமாய்
தமிழுக்கும் அ(இ)ழிவு வந்து சேருமோ?

கனிமொழியின் கவலை நிலை!

அப்பா சொல் கேட்டேன்! என் ஆதரவை இழந்தேன்!
தப்பாக ஊழல் செய்தேன்! இன்றோ தனிமையில் உள்ளேன்!
முப்பாலும் கொண்ட திருக்குறளை மொழி பெயர்த்த முத்தமிழறிஞர்
எப்போதோ நல் வழி சொல்லியிருந்தால் ஏளனமாய் ஆகியிருப்பேனா?

எத்தனை நாள் உள் இருந்து தண்டனையை எண்ணி
ஏளனமாய் நானும் வாடுவது? - வெந்து நொந்தேன்!
"பெத்தவரும் கை விட்டாரோ" என எண்ணியதால் - இன்று
பேதைப் பெண் யானும் ஜாமீன் கேட்டேன்!
சொத்து பல சுருட்டிய உனக்கோ ஜாமீன் இல்லை(யாம்)!
சொந்தங்கள் பலரும் வெளியே என்பதால் தினமும் தொல்லை(யாம்)!

"சொத்ததனைப் பங்கிட்டோர் மட்டும் வெளியே- சொகுசாய்
சொர்க்க உலா வருகின்றார்" - செம் மொழியின் காதலினால்
புத்தகமாய் வெளியிட என் நிலையை எழுதி வைத்திருந்தேன்
பேப்பரில் கூட ஊழல் பணம் இருக்கும் எனும் நினைப்பில்
புத்தகத்தை கசக்கி கூடையிலே எறிந்திட்டார் - கனி நான்
புழுப் பூச்சி போல திஹார் வெயிலில் துடித்து வாடுகின்றேன்!
பத்திரத்தில் என் விடுதலையை எழுதி தந்து விட்டால் - வெளியே
பாவை நானும் சென்று வாழ்ந்திடுவேன்! தமிழால் வாழ்த்திடுவேன்!

வார்த்தைகளை வீசியதால் பம்மும் ஜெயலலிதா!

இலவசமாய் இணையில்லா பல எலக்ட்ரோனிக் பொருட்கள் தந்தார்!
அதை இயக்கிடவும் முழு நேர மின்சாரம் வரும் என்றார்!
தலைவியிப்போ பெருந் தலை வலியில் வாடுகின்றார் - இன்றளவில்
தமிழகத்தில் ஐந்து மணி மின் வெட்டாம்- அம்மாவிற்கோ திண்டாட்டமாம்!
வார்த்தைகளை இலவசத்தோடு இலவசமாய் வீசினார் அம்மா - மக்கள்
வாழ்வு சிறக்க மின் வழங்குவேனா என மூச்சு வாங்குகின்றார் சும்மா!

மண்டியிட மறுக்கும் மாறன்!

மண்டியிட மறுக்கின்றார் மாறன் - மச்சமுள்ள அதிஷ்டகாரன்!
ரெய்டு வந்த சிபிஐக்கு ஏமாற்றதோடுஆப்படித்தார்!
மச்சினனின் மூலம் நாடகம் ஆடி தப்பி நிற்கின்றார்!
கைது செய்ய வந்த சிபிஐக்கு கலாநிதி உதவியுடன்
கேள்வி மேலே கேள்வி கேட்க வைத்த வீரன்!
இன்றோ ஆனந்தகிருஷ்ணனுக்கும் செக் வைத்தார் மாறன்!

பஞ்சு வசனம் பேசும் ராமதாஸும் பம்மி நிற்கும் ஏனைய கட்சிகளும்!

முதலில் சென்னையைப் பிடிப்போமாம்
முகத்தில் மலர்ச்சியுடன் சொன்னாராம் ராமதாஸ்
பதவி கைக்கு வந்ததும் பின்னர்
புனித ஜார்ஜ் கோட்டையை பிடிப்பாராம்!
முதல்வாராகுவாராம் 2016 இல்
முன்னாயத்தமாக மக்கள்
ஓட்டளிக்கனுமாம் 2011 இல்!!
*****************************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் பதிவரின் வலைத் தளம்,இலங்கையில் வானொலித் துறையூடாகவும், இலக்கியத் துறையூடாகவும், பத்திரிகைத் துறையூடாகவும் நன்கு அறியப்பட்ட சகோதரி "வெலிகம ரிம்ஸா முஹம்மத்" அவர்களின் வலைத்தளமாகும். 

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்கள் தன்னுடைய "கவிதைகள்" எனும் வலைப் பதிவினூடாக வித்தியாசமான கருப் பொருட்களில் கவிதைகளைப் பகிர்ந்து வருகின்றார். 

சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களின் வலைப் பூவிற்குச் செல்ல: 
http://www.rimzapoems.blogspot.com/
******************************************************************************************************************************

44 Comments:

மகேந்திரன் said...
Best Blogger Tips

அடடா...
கதம்பம் மணக்குது நண்பரே...

தறுதலைப் பிள்ளைகளை பெற்ற தகப்பனின் புலம்பலில்
ஆரம்பித்து, எழுத்துக்களில் பெண்ணியம் பற்றி எழுதி
கவிதை உலகில் கொலேச்சு பின்னர் ஊழலில் சிக்கிய
பெண்கவிஞரை நைய்யப்புடைத்து..
அப்படியே அம்மாவை கொஞ்சம் அசைத்துவிட்டு
அய்யாவையும் ஆட்டுவித்திருக்கிரீர்கள்..

இன்றைய கதம்பம் மனம்.

சகோதரி ரிம்ஸா முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

கனிமொழியின் நிலைக்கு அவரே காரணம்....! கலைஞரின் பங்கு ஒன்றுமில்லை, கண்மூடித்தனமாக ஆதரித்ததைத் தவிர....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

மற்ற விடயங்கள் அனைத்தும் தமிழ்க அரசியல்வாதிகள் நிலையை தெளிவாக படம் பிடித்திருக்கிறது........

தனிமரம் said...
Best Blogger Tips

தமிழக அரசியல் நிலையை என்னி வந்திருக்கும் உங்கள் கவிதை கனிமொழியை தமிழில் சாடி நிற்கின்றது!

தனிமரம் said...
Best Blogger Tips

தோழி ரிம்ஸா மொகமத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

தமிழகத்தில் இன்றைய அரசியல் நிலையை அழகா எடுத்து சொல்லி இருக்கீங்க...

செங்கோவி said...
Best Blogger Tips

//தப்பாக ஊழல் செய்தேன்! இன்றோ தனிமையில் உள்ளேன்!//

ஹா..ஹா..ஆமாம், மற்ற குடும்பத்தினர் போல் சரியாக ஊழலைச் செய்திருந்தால் தப்பி இருப்பார்..

செங்கோவி said...
Best Blogger Tips

//பஞ்சு வசனம் பேசும் ராமதாஸும் //


ஆமாம்யா..அது பஞ்ச் வசனம் அல்ல..பஞ்சு வசனம் தான்!


// பம்மி நிற்கும் ஏனைய கட்சிகளும்!//

யோ, ராமதாஸைப் பார்த்து யாரய்யா பம்முவது?

செங்கோவி said...
Best Blogger Tips

//வார்த்தைகளை இலவசத்தோடு இலவசமாய் வீசினார் அம்மா - மக்கள்
வாழ்வு சிறக்க மின் வழங்குவேனா என மூச்சு வாங்குகின்றார் சும்மா!//

என்னென்னவோ சொன்னாங்களே..இப்போ?

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நிரூபன்..... நான் போயிட்டுப் பிறகு வாறேன்.

sarujan said...
Best Blogger Tips

கலக்கல் பதிவு!

சுதா SJ said...
Best Blogger Tips

ஆஹா.......... எல்லா கவிதையும் ஒக்கே... ராமாதாஸ் காமெடியனை ஏனுங்க இங்க சேர்த்தீங்க.... அவருக்கு கவிதை எழுதும் அளவுக்கு அவர் பெரியவரா?? அது ஒரு காமெடி சேனல்.. ஹீ ஹீ

சுதா SJ said...
Best Blogger Tips

வழமைபோல் தாத்தா பகுதியே கலக்கல்.....

அம்மாக்கு சப்போட் பண்ண ஆசைதான்....
அவ்வவ்...... வேணாமப்பா.........

கனிமொழி ..... ஹீ ஹீ

மாய உலகம் said...
Best Blogger Tips

அடடா...
தகப்பனின் புலம்பலில்
ஆரம்பித்து, எழுத்துக்களில் பெண்ணியம் பற்றி எழுதி
கவிதை உலகில் கொலேச்சு பின்னர் ஊழலில் சிக்கிய
பெண்கவிஞரை நைய்யப்புடைத்து..
அப்படியே அம்மாவை கொஞ்சம் அசைத்துவிட்டு
அய்யாவையும் ஆட்டுவித்திருக்கிரீர்கள்..

அரசியல் அலசல் அருமை

சகோதரி ரிம்ஸா முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...
Best Blogger Tips

வந்தேன்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் இன்னும் நீங்க தாத்தாவை விடவில்லையா?ஹி.ஹி.ஹி.ஹி

ஓவ்வொறு கவிதையும் சூப்பர்

கூடல் பாலா said...
Best Blogger Tips

ச்சும்மா நச்சின்னு இருக்கு ...!

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

தமிழக விஐபிக்களுக்கு மட்டும்தான் கவிதையா??? சென்ட்ரல் விவிஐபிஸ் என்ன பாவம் செய்தார்கள்??. அவர்களைப்பற்றியும் கவிதை பாடுங்கள் சகோ. ரொம்ப சுவாரஸ்யமான கவிதை.

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

பூம்புகார் படைத்தவரின் வாரிசு திகாரில் இருக்க முக்கியக்காரணம் தாயாரின் பேராசை.

Anonymous said...
Best Blogger Tips

சென்னை கோமாளிகள் ரௌண்ட்ஸ் அப் சூப்பர்...

கனிமொழி தீபாவளிக்கு வெடி போட சென்னையில் இருப்பார் என்று கேள்விப்பட்டேன்...

சகோதரி ரிம்ஸா முகம்மதுக்கு வாழ்த்துக்கள்...

கோகுல் said...
Best Blogger Tips

சொத்து பல சுருட்டிய உனக்கோ ஜாமீன் இல்லை(யாம்)!
//
ஜா'மீன்'கடல்லயே இல்லையாம்!

கோகுல் said...
Best Blogger Tips

தமிழகத்தில் ஐந்து மணி மின் வெட்டாம்- அம்மாவிற்கோ திண்டாட்டமாம்!
//
இது கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அச்சமூட்ட என சொல்லப்படுகிறது,உண்மையா தெரியவில்லை.

கோகுல் said...
Best Blogger Tips

மண்டியிட மறுக்கின்றார் மாறன் - மச்சமுள்ள அதிஷ்டகாரன்!
ரெய்டு வந்த சிபிஐக்கு ஏமாற்றதோடுஆப்படித்தார்!
//

இது முன்னறிவிக்கப்பட்ட ரெய்டு போல.

கோகுல் said...
Best Blogger Tips

முதலில் சென்னையைப் பிடிப்போமாம்
முகத்தில் மலர்ச்சியுடன் சொன்னாராம் ராமதாஸ்
பதவி கைக்கு வந்ததும் பின்னர்
புனித ஜார்ஜ் கோட்டையை பிடிப்பாராம்!
முதல்வாராகுவாராம் 2016 இல்
முன்னாயத்தமாக மக்கள்
ஓட்டளிக்கனுமாம் 2011 இல்!!
//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பூங்குழலி said...
Best Blogger Tips

யாரையும் விட்டுவைக்காமல் நைசாக வாரியிருக்கிறீர்கள்

ஆமினா said...
Best Blogger Tips

//

சொத்து பல சுருட்டிய உனக்கோ ஜாமீன் இல்லை(யாம்)!
//
ஜா'மீன்'கடல்லயே இல்லையாம்!
//

haa...haa...haa....

Unknown said...
Best Blogger Tips

///தமிழ்த்தாயின் மடியில் தன்னுயிர் போகுமாம்
தவறுகளைச் செய்த உயிர் காரணமாய்
தமிழுக்கும் அ(இ)ழிவு வந்து சேருமோ?///

அன்னிக்குத்தான் தமிழனுக்கு தீபாவளி

------------------------------------------------------------------------------------
புழுப் பூச்சி போல திஹார் வெயிலில் துடித்து வாடுகின்றேன்!

எத்தனையோ விவசாய மீனவர்கள் வெயிலில் வாடும்போது இவளுக்கன்ன என்ன ஆட்டம் போட்டிங்க கொய்யால

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலவசமாய் இணையில்லா பல எலக்ட்ரோனிக் பொருட்கள் தந்தார்!
அதை இயக்கிடவும் முழு நேர மின்சாரம் வரும் என்றார்!

வரும் ஆனால் வாராது

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி மேலே கேள்வி கேட்க வைத்த வீரன்!
இன்றோ ஆனந்தகிருஷ்ணனுக்கும் செக் வைத்தார் மாறன்!

வீரன் அல்ல சூரன் (தயாநிதிகாசூரன்)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலில் சென்னையைப் பிடிப்போமாம்
முகத்தில் மலர்ச்சியுடன் சொன்னாராம் ராமதாஸ்
பதவி கைக்கு வந்ததும் பின்னர்
புனித ஜார்ஜ் கோட்டையை பிடிப்பாராம்!

எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்

கமாண்டே ஒரு பதிவு ஆயிடுச்சு

SURYAJEEVA said...
Best Blogger Tips

பின்னி பெடல் எடுங்க,

Unknown said...
Best Blogger Tips

நிகழ்காலத்தை கண் முன் கொண்டு வரும் பதிவு எல்லாம் அருமை

rajamelaiyur said...
Best Blogger Tips

//
மண் ஆசையால் இன்றும் போக மனமின்றி தள்ளாடுகின்றார்
மஞ்சள் துண்டே சரணம் என நாளும் திண்டாடுகின்றார்!/


ரொம்ப சரி

சசிகுமார் said...
Best Blogger Tips

பாமர மக்களின் பணத்தில் என்ன ஆட்டம் ஆடுநீங்க இப்ப படுங்க பட்டாதான் தெரியும் அடுத்த முறை கொள்ளை அடிக்கும் போது யோசிப்பீங்க....

Unknown said...
Best Blogger Tips

உள்ளேன் ஐயா!

த.ம ஓ5

புலவர் சா இராமாநுசம்

Yoga.s.FR said...
Best Blogger Tips

பகல் வணக்கம்,நிரூபன்!கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளுகிறேன்!நல்ல கவிதை.எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் ஒரு வேண்டுதல் வைத்ததாக அறிந்ததுண்டு;அதாகப்பட்டது;"அறம் பாட வேண்டாம்" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதாக பேசிக் கொண்டார்கள்.உண்மை,பொய் தெரியாது!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன், ராசாத்தி அம்மையாரை விட்டுட்டீங்களே...!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கனிமொழி ஜாமீன்ல வரப்போறதா நியூஸ் வந்துட்டு இருக்கே...??!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

தலைப்பு சூப்பர்.,

shanmugavel said...
Best Blogger Tips

வந்தேன்.படித்தேன்.

Unknown said...
Best Blogger Tips

super boss

ningka sonnathu avvalavum sari than

KANA VARO said...
Best Blogger Tips

தமிழ்மணம் வர வர குறைன்சிட்டே போகுதே, நீங்க சொன்னதை இப்ப தான் கேக்குறாங்க போல

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

சூப்பர் ரவுண்ட்-அப்!

Mahan.Thamesh said...
Best Blogger Tips

காலத்துக்கு காலம் இந்திய தமிழ்நாட்டு அரசியல் கள நிலவரங்கள் கவிதை வடிவில் . தருகிறீர்கள் சுப்பர் . படங்களும் .கவிதையும் .

Mahan.Thamesh said...
Best Blogger Tips

சில நாட்களாக பதிவுலகிற்கு வர நேரம் கிடைக்க வில்லை சகோ . உங்களில் பல பதிவுகளை நேரம் இருக்கும் போது படிக்கிறேன் .

F.NIHAZA said...
Best Blogger Tips

கவிதை அருமை....சகோ....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails