Saturday, October 15, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 09

இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு: 
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாக.......
இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லிம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்) முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கத்தோடு அமைந்து கொள்கிறது. இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் "வஹாப் இப்னு அபீ ஹப்ஸா" எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, "இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும்" கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
"ஐயா வரலாறுகள் கூறியிருப்பது எல்லாம் இருக்கட்டும். இலங்கையினுள் எப்படி? எப்போது முஸ்லிம் இன மக்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியுமா?" என அம்மா குறுக்கிட்டா(ர்). 


ஐயா தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார். கி.பி 628ம் ஆண்டினைத் தொடர்ந்து எங்கள் நாட்டினுள் முஸ்லிம்கள் வந்திருந்தாலும், இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாறானது, கிபி 711ம் நூற்றாண்டில் இடம் பெற்ற முஹம்மத் பின் காஸிமின் சிந்துப் படையெடுப்போடு தான் ஆரம்பமாகிறது. அதாவது முஹம்மத் பின் காஸிமின் படையெடுப்பு இடம் பெற்ற காலப் பகுதிக்கும், கிபி 628ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஈழத்தில் முஸ்லிம்கள் குடியேறினாலும், அந்த ஆண்டினைச் சரியாகக் கணிப்பிடக் கூடிய குறிப்புக்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கைகளுக்குக் கிடைக்காமற் போய் விட்டன. 

வரலாற்றில் சிறிது புரிதல் கொண்டவனாக நான் "ஓ! அப்படியா எனக் கேட்டுத் தலையாட்டினேன்." 

"ஐயா நிரூபனுக்கும் வரலாறு கேட்கிறதில ஆசை வந்திட்டுப் போல. நான் தூக்கம் வருது! தூங்கனும் என்றூ சொன்னாலும் இந்தப் பொடியன் (பையன்) விட மாட்டான் போலிருக்கே" என செல்லக் கடி கடித்தவாறு தொடர்ந்தார். 

இக் காலப் பகுதியில் (கிபி 628- கிபி 711), தென் இந்தியாவிலிருந்து ஈழத்தில் குடியேறியிருந்த தமிழர்களிற்கு இடையேயான மத மாற்றச் செயற்பாடுகளோடு தான் இலங்கையில் முஸ்லிம் இனமானது வேர் கொள்ளத் தொடங்குகிறது.(இப்போதைய இலங்கைத் தமிழர்கள் என நாம் சொல்லிக் கொள்வோர்) இதன் பின்னர் தான் ஈழத்தவர்கள் எனும் அடை மொழிக்குள் இருந்த தமிழர்களில் இஸ்லாமின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டோர், விரும்பி மதம் மாறத் தொடங்குகிறார்கள்.

"இப்ப விளங்கிச்சுதா? இது தான் இலங்கையில் முஸ்லிம்கள் வருகை பற்றிய வரலாறு என ஐயா சொல்ல, நானும் "ஓமோம்" (ஆமாம்) எனத் தலையாட்டினேன். 

"அது சரி பேரனுக்கு இலங்கைக்குப் பறங்கியர் இனத்தினர் எப்படி வந்தார்கள் என்று சொல்லலையே?" என அம்மம்மா நினைவூட்டினார். ஐயா தான் ஒரு முழுமையான வரலாற்றுக் கதையினைச் சொல்லி முடிக்க வேண்டும் எனும் நோக்கத்தினை அடி மனதில் கொண்டவராகவும், ஓயாது பேசி களைப்புற்றுத் தண்ணீர் கேட்கும் அரசியற் கட்சியொன்றின் தேர்தற் பிரச்சார வேட்பாளரின் நிலையினை அடைந்தவராகவும் "செம்பில கொஞ்சம் தண்ணி எடுத்துக் கொண்டு வாவேன் பிள்ளை" என அம்மாவிற்கு கட்டளை போட்டு விட்டு கதையினைத் தொடங்கினார். 

இலங்கையினுள் கி.பி 1505ம் ஆண்டளவில் (கி.பி 15ம் நூற்றாண்டு) காலடி எடுத்து வைத்த மேலைத் தேய நாட்டவர்களான போர்த்துக்கேயர்களின் வருகையோடு தான் Eurasian எனப்படும் இந்தப் பறங்கியர்களின் வருகையும் ஆரம்பமாகின்றது. "ஐயா, கொஞ்சம் நிப்பாட்டுங்கோ (நிறுத்துங்க).  "யூரேசியன் என்றால் என்ன ஐயா?' என நான் கேட்டேன்.


ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்குள் வருகை தந்து ஆசிய மக்களோடு கலப்புற்றுத் தமது வம்சங்களை ஆசியாவில் உருவாக்கிய ஐரோப்பிய - ஆசிய நாட்டு மக்களின் கலப்பில் உருவாகிய இனத்தவர்களைத் தான் யூரேசியன் என்று அழைப்பார்கள். இவர்கள் இப்போதும் எங்கள் நாட்டில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய ஊர்களின் கரையோரப் பகுதியினை அண்டிச் சிறிதளவிலும், தென்னிலங்கையில் பெருமளவிலும் வாழ்கிறார்கள் என ஐயா விளக்கம் கொடுத்தார். 

இது தான் இலங்கையில் உள்ள இனங்களோட பூர்வீக வரலாறு. என ஐயா ஒரு பெரு மூச்சோடு வரலாற்றினை நிறை செய்தார். 


"இலங்கையில் உள்ள இனங்களோட வரலாறு சொல்லியது இருக்கட்டும். நீங்க சொன்னீங்க தானே. இந்தியாவிலிருந்து வந்த எம் மூதாதையரின் எச்சங்கள் தான் நாங்கள் என்று. அப்படீன்னா இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களிற்கு தலைவனாக ஒரு ராசா இல்லையா? ராஜ்ஜியம் இல்லையா? ஒளவையார் கதையில் வரும் அரசிளங் குமாரன், பாரதக் கதையில் வரும் அரசர்கள் போலத் தமிழர்களுக்கும் ஆரம்ப காலத்தில் இலங்கையில் அரசர்கள் இருக்கலையா?" என நான் ஐயாவிடம் கேட்டேன். 

ஐயா தொடர்ந்தார். "இந்த இடத்தில தான் தமிழர்கள் மிகப் பெரிய வரலாற்றுத் தவறினை விட்டிருக்கிறாங்க. தங்கடை வரலாற்றினை கி.பி 17ம் நூற்றாண்டு வரை எழுதாமல் சாப்பிட்டுப் போட்டு படுத்துத் தூங்கின ஒரேயொரு நல்ல வேலையினைத் தான் எங்கட மூதாதையர்கள் செய்திருக்கிறாங்க. இந்தியாவின் திராவிட மொழிக் குடும்ப இனங்களுள் ஒன்றான எம் தமிழினம் காலாதி காலமாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றது என்று நாம் மார் தட்டிக் கொண்டாலும், எங்களின் மூதாதையர்கள் விட்ட பெருந் தவறின் காரணத்தினால் தான் சிங்களவன் எம்மை அடக்கி ஆள வேண்டும் எனும் நோக்கம் கொண்டவானாக தாங்கள் இலங்கையின் மூத்த குடிகள் என பொய்ப் பிரச்சாரம் செய்து ஒட்டு மொத்த தமிழினத்தையும் அடிமையாக்க முயற்சி செய்கிறான். 

சிங்களவர்களின் வரலாறு கி.மு 300ம் ஆண்டிலிருந்து எழுதப்பட்டிருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதுவும் எங்களின் பண்டைய தமிழ்க் குடிகள் வசம் வரலாற்றுக் குறிப்புக்கள் ஏதும் இருக்கவில்லை. நான் ஏலவே சொல்லியது போல இலங்கையில் ஆராய்ச்சிகளின் போது கிடைத்த கல்வெட்டுக்கள், மற்றும் தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற சங்க காலக் குறிப்புக்கள் தான் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனும் பூர்வீக வரலாற்றினைப் பேசி நிற்கின்றது. "சிங்களவர்களின் வரலாறு இலங்கையில் அனுராதபுர இராஜ்ஜியத்தோடு ஆரம்பமாகின்றது.""இந்த அனுராதபுர இராசதானிக் காலத்தில் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்றது பற்றியோ அல்லது தமிழர்கள் வாழ்ந்தது தொடர்பிலோ இன்று வரை குறிப்புக்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. "

இவ்வாறு ஐயா நீண்ட தன்னுடைய பிரசங்கத்தை நிறைவு செய்கையில் அம்மா தான் வரலாற்றினை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தா(ர்) என்பதற்கு சான்றாக "இலங்கையில் தமிழ் மொழியின் பரம்பல், தமிழ் மொழி தமிழர்களின் பேச்சு மொழியாக எப்படி உருமாற்றம் பெற்றது என்று சொல்லாமே" என ஐயாவிற்கு நினைப்பூட்டினா(ர்). 


"இன்னைக்கே நான் சொல்லத் தொடங்கி என்னோட நித்திரையினையும் கை விட்டு நிற்பதுதான் உனக்கு விருப்பமோ? இப்பவே பேரன் தூங்கிட்டான். அவனைக் கொண்டு போய் தூங்க வை.  நான் நாளைக்கு மிகுதி வரலாற்றினைச் சொல்கிறேன்" எனப் பேசியவாறு படுக்கையறையினை நோக்கிப் போனார் ஐயா.
                                                     வரலாறு விரியும்..........................

அன்பு உறவுகள் அனைவரினதும் கவனத்திற்கு: 

இத் தொடரின் ஆறாவது பாகத்தில் வட இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆரியர்களின் வழித் தோன்றலே சிங்களவர்கள் என எழுதியிருந்தேன். "செங்கோவி" அண்ணாச்சியின் கருத்தினைத் தொடர்ந்து மீண்டும் இக் குறிப்புத் தொடர்பாகத் தேடிப் பார்த்தேன். பின்னர் அது தவறு என்று படித்தேன்.
ஆகவே இத் தவறிற்காக என் மன்னிப்பினையும், வருத்தங்களியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தமிழர்களின் வரலாறு எனும் தலைப்பில் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றினை முழுமையாக எழுதிய "கலாநிதி.முருகர் குணசிங்கம்” அவர்களின் நூலினை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து, ஆரியர் என்ற இனத்தின் கலப்பு சிங்களவர்கள் அல்ல எனவும், திராவிட மொழிக் குடும்பத்தோடு தொடர்புறாத பேச்சு மொழியினைக் கொண்ட வட இந்தியர்களின் வழித் தோன்றல் தான் சிங்களவர்கள் எனவும் அறிய முடிகின்றது. அத்தோடு இச் சிங்கள மொழியானது பாளி, சமஸ்கிருதம், ஆகிய மொழிகளின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து தமிழின் கலப்பால் உருவாக்கம் பெற்றுக் கொள்கின்றது. 
இவ் வேளையில் செங்கோவி அண்ணாச்சிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றேன். 

43 Comments:

M.R said...
Best Blogger Tips

படித்து வருகிரேன் நண்பரே ,தொடருங்கள்

அனைத்திலும் வாக்கிட்டேன்

மாய உலகம் said...
Best Blogger Tips

தங்கடை வரலாற்றினை கி.பி 17ம் நூற்றாண்டு வரை எழுதாமல் சாப்பிட்டுப் போட்டு படுத்துத் தூங்கின ஒரேயொரு நல்ல வேலையினைத் தான் எங்கட மூதாதையர்கள் செய்திருக்கிறாங்க. இந்தியாவின் திராவிட மொழிக் குடும்ப இனங்களுள் ஒன்றான எம் தமிழினம் காலாதி காலமாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றது என்று நாம் மார் தட்டிக் கொண்டாலும், எங்களின் மூதாதையர்கள் விட்ட பெருந் தவறின் காரணத்தினால் தான் சிங்களவன் எம்மை அடக்கி ஆள வேண்டும் எனும் நோக்கம் கொண்டவானாக தாங்கள் இலங்கையின் மூத்த குடிகள் என பொய்ப் பிரச்சாரம் செய்து ஒட்டு மொத்த தமிழினத்தையும் அடிமையாக்க முயற்சி செய்கிறான். //

வரலாற்றில் நிறைய விசயங்கள் இழந்திருக்கிறோம் போல... பகிர்வுக்கு நன்றி பாஸ்

கோகுல் said...
Best Blogger Tips

சாப்பிட்டு படுத்து தூங்கியதால் வரலாற்றில் சில குறிப்புகளை இழந்தது விட்டோமே?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

வரலாறு நன்றாக இருக்கு

SURYAJEEVA said...
Best Blogger Tips

ஆரிய திராவிடர் குறித்த வரலாற்று முக்கிய விஷயங்கள் அழித்தொழிக்கப் படுகிறது... ரஷ்ய அறிஞர்கள் படி நீங்கள் கூறுவது படி சிங்களவர்கள் ஆரியர்களாக இருக்கலாம், ஆனால் சில மேற்கு நாட்டு அறிஞர்கள் படி அவை தவறு என்று சொல்லப் படலாம்... ஆப்கானிஸ்தான் மக்கள் மொழி திராவிட மொழியை ஒத்திருப்பதால் ஆரிய திராவிட சிந்தனை செழித்தொங்குவதை தவிர்க்க முடியாது... இது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கும்.. வழக்கம் போலவே இதன் கடைசி பாகத்தை எதிர்பார்த்து இருக்கிறேன்.. மொத்தத்தையும் ஒரே மூச்சில் படிக்க

K said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் மாமா!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன், எங்களது நாட்டின் வரலாற்றை ஒரு கதைபோல படிப்பதற்கு விரும்புவதாக நகர்த்திச்செல்வது நன்றாக உள்ளது

Unknown said...
Best Blogger Tips

ஆம் நண்பரே வறலாற்றில் சில குறிப்புகளை அல்ல பல குறிப்புகளை இழந்துவிட்டோம் போல.

ஓட்டும் போட்டாச்சு

அம்பலத்தார் said...
Best Blogger Tips

உண்மையிலேயே எங்களில் எத்தனையோ பேரிற்கு எங்கள் தாயக வரலாறு சரியாக தெரியாமல் உள்ளது.

Mohamed Faaique said...
Best Blogger Tips

வணக்கம்..
இலங்கை முஸ்லீம்கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களின் மத மாற்றமா? என்பதில் இன்னும் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.. இலங்கையில் கிழக்கு முஸ்லீம்களின் முக வெட்டு, வாழ்க்கை முறை என்பன அச்சு அசலாக மலையாளிகளை ஒத்து காணப்படுகின்றது, அவர்கள் பேசும் தமிழில் ஏகப்பட்ட மலையாள வார்த்தைகள் கலந்துள்ளன.

மலை நாட்டு, மற்றைய மக்களின் வரலாற்றில் யெமன் முஸ்லீம்களின் தாக்கம் இருக்கிறது.

எங்கள் குடும்ப் பெயர்களில் ப்ன்னனியில் சிங்களப் பெயர்கள் வருகின்றன. (ஆனால் நாம் பேசுவது தமிழ்)

யாழ்ப்பாண முஸ்லீம்களில் அதிகம் தமிழ் நாட்டின் தாக்கம் அதிகம் இருக்கிறது..

கி.பி 400 இலேயே அரபிகள் இலங்கை வந்ததாக நிறைய சரித்திரங்கள் சொல்கின்றன..

அதனால் என்னை பொறுத்தவரை முஸ்லீம்களின் வருகை பற்றி ஒரு சரியான முடிவு எடுக்க முடியவில்லை.

உணவு உலகம் said...
Best Blogger Tips

வரலாறு அறிய வாய்ப்பளிக்கும் பகிர்வு.

Unknown said...
Best Blogger Tips

சுவாரசிய தகவல்கள்
தொடருங்கள் நிரூ ..

தனிமரம் said...
Best Blogger Tips

வரலாறு பலதை பதிவு செய்யவில்லை அல்லது செய்விக்க முயலவில்லை என்றும் என்னலாம்! சுவராசியமான அடுத்த தொடருக்கு காத்திருக்கின்றேன்.

தனிமரம் said...
Best Blogger Tips

 "சிங்களவர்களின் வரலாறு இலங்கையில் அனுராதபுர இராஜ்ஜியத்தோடு ஆரம்பமாகின்றது.""இந்த அனுராதபுர இராசதானிக் காலத்தில் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்றது பற்றியோ அல்லது தமிழர்கள் வாழ்ந்தது தொடர்பிலோ இன்று வரை குறிப்புக்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. "//

!!!
இந்த இடத்தில் எனக்கு சிறு ஐயம் அனுராதபுரத்தில் இந்துக் கோவில் (சிவன்)இருந்ததாகவும் அது பாராமரிக்காமல் சிதைந்து விட்டதாகவும் பின்னாலில் அதனை பராக்கிரமபாகு மீளவும் புனரமைத்தான் ! என்று படித்த ஞாபகம் தவறு எனின் திருத்திக்கொள்கின்றேன்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் தொடரட்டும் வரலாறு...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வரலாறு எழுதாது நல்லா துன்னுட்டு உறங்கிய தமிழ் மன்னர்கள்.....!!! எழுதப்படிக்க தெரியாத அக்பர் சூப்பரா வரலாறு எழுதி வச்சிருக்கிறார்...!!!

கூடல் பாலா said...
Best Blogger Tips

பல அரிய தகவல்கள் ....தொடரட்டும் ........

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி.,
பல தெரியாத தகவல்களை உங்கள் இந்த தொடர் மூலம் அறிந்துக் கொள்கிறேன்,.
நன்றி..

rajamelaiyur said...
Best Blogger Tips

பல புது தகவல்கள் .. நன்றி

Anonymous said...
Best Blogger Tips

முஸ்லீங்கள் அரபு நாடுகளில் இருந்து வந்து குடியேறினாலும் ..பெரும்பாலானோர் பிற்காலங்களில் தமிழர்களில் இருந்து மதம் மாறியவர்கள் என்று எங்கே படித்த நினைவு ...!

Anonymous said...
Best Blogger Tips

பறங்கியர் வரலாறு எனக்கு புதிது..நன்றி ...

Anonymous said...
Best Blogger Tips

////இத் தொடரின் ஆறாவது பாகத்தில் வட இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆரியர்களின் வழித் தோன்றலே சிங்களவர்கள் என எழுதியிருந்தேன்./// அனேகமாக கி மு வில் விஜயனின் வருகையை முன்னிறுத்தி தான் பரவலாக சிங்களவர்கள் ஆரிய வழித்தோன்றல் என்று பேசப்படுகிறது.. எனினும் முழுமையான சான்றுகள் இல்லை தான் ..காரணம் சிங்கள ஆராச்சியாளர்கள் இது தொடர்பில் ஆராய்ந்தாலும் முடிவுகளை சரியாக வெளிகொனார்கள். அவர்களை பொறுத்தவரை தாம் தாம் இலங்கையின் பூர்வீக குடிமக்கள்...

Anonymous said...
Best Blogger Tips

///அத்தோடு இச் சிங்கள மொழியானது பாளி, சமஸ்கிருதம், ஆகிய மொழிகளின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து தமிழின் கலப்பால் உருவாக்கம் பெற்றுக் கொள்கின்றது. /// பழங்கால கல்வெட்டுக்களில் பாளி மொழிதான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது...

ஆனாலும் ஒரு டவுட்டு பாளி சமஸ்கிரித மொழிகளை ஆரியர்கள் பயன்படுத்துவதில்லையா - அவர்களின் தாய் மொழியாக இருந்திருக்கவில்லையா ????

Anonymous said...
Best Blogger Tips

////இத் தொடரின் ஆறாவது பாகத்தில் வட இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆரியர்களின் வழித் தோன்றலே சிங்களவர்கள் என எழுதியிருந்தேன்./// பாஸ்! அது ஆறாம் பாகம் அல்ல ஏழாம் பாகம் என்று நினைக்கிறன்....!

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

இம்முறையும் நிறைய பல புது விடயங்களை கற்றுக்கொண்டேன். நன்றாக போகிறது இந்த கருத்தாழமிக்க தொடர்.. வாழ்த்துக்கள் நிரூ..

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique
வணக்கம்..
இலங்கை முஸ்லீம்கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களின் மத மாற்றமா? //

வணக்கம் நண்பா,
இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் தோற்றமானது தென் இந்தியாவிலிருந்து இலங்கையினுள் வந்தோரது மதமாற்றச் செயற்பாட்டோடு தான் தொடங்குகிறது என்பதனை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இப் பதிவின் இரண்டாவது பந்தியிலும் கூறியிருக்கிறேன். இலங்கையில் முஸ்லிம்கள் எப்போது வந்தார்கள் என்பதற்கான சரியான காலப் பகுதியினை இற்றை வரை அறிய முடியவில்லை என்பதனையும் சுட்டியிருக்கிறேன்.

கிமு நாநூறு என்பதில் எனக்கும் ஐயா, ஆனால் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, மற்றும் இலங்கையில் தமிழர், செல்வநாயகத்தின் நூல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் கி.பி 628 - கிபி 711 இற்கு இடையேயான காலப் பகுதியில் தான் இலங்கையில் முஸ்லிம்கள் குடியேறியிருக்க வேண்டும் நண்பா.

Riyas said...
Best Blogger Tips

//Mohamed Faaique//

இவரின் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன்..

ஒரு நூலை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு வரலாற்றை தீர்மானித்துவிட முடியாது,, இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கலாம்,, அல்லது சந்தேகமாகவே விட்டிருக்கலாம்,,மன்னிக்கனும்..

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

!!!
இந்த இடத்தில் எனக்கு சிறு ஐயம் அனுராதபுரத்தில் இந்துக் கோவில் (சிவன்)இருந்ததாகவும் அது பாராமரிக்காமல் சிதைந்து விட்டதாகவும் பின்னாலில் அதனை பராக்கிரமபாகு மீளவும் புனரமைத்தான் ! என்று படித்த ஞாபகம் தவறு எனின் திருத்திக்கொள்கின்றேன்!//

அன்பிற்குரிய சகோதரம்,
மகாநாயக்கர் எனும் பௌத்த பிக்குவால் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் தான் மகாவம்சமாகும். மகாவம்சமானது ஒரு வரலாற்று நூல் என அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பிற் காலத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்கள், யாத்திரிகர்களின் குறிப்புக்கள், தொல் பொருள் ஆராய்வுகளோடு மகாவம்சத்தின் கி.மு 300 இனைத் தொடர்ந்து வருகின்ற பல வரலாற்றுச் சம்பவங்கள் சரிவரப் பொருந்துகின்றன.

பௌத்த மதவாதிகளின் திருப்திக்காகவும், ஆன்மீக நோக்கிலும் பிக்கு ஒருவரலா எழுதப்பட்ட இந் நூல் தான் இன்று சிங்களவர்களின் வரலாற்று நூலாக விளங்குகின்றது.

இதே மகாவம்சத்தில் தான் தென் இந்திய இலங்கை மன்னர்களுக்கிடையேயான தொடர்புகளும், 2100 ஆண்டுகளுக்கு முன்பதாக மன்னனாக இருந்த எல்லாளன் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

கலிங்கப் போரின் பின்னர் பௌத்த மதத்தினைத் தழுவிய அசோக மன்னன், மகிந்த தேரர் தலமையில் பௌத்த மதத்தினைப் பரப்பும் நோக்கில் தூதுக் குழு ஒன்றினை இலங்கைக்கு அனுப்புகின்றார். அசோக மன்னனின் விருப்பத்திற்கமைவாக மதம் மாறிய திஸ மன்னன் தேவ நம்பிய எனும் விருதினைப் பெற்று தேவ நம்பிய திஸ எனும் பெயரோடு வரலாற்றில் இடம் பெறுகின்றான்.

இத் தேவ நம்பிய திஸ மன்னின் காலத்தில் ஸேன, குத்தக எனும் இரு பெரு வணிகர்கள் அல்லது குதிரை வியாபாரிகள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகின்றார்கள். இக் காலத்தில் தேவநம்பிய திஸ மன்னன் இறந்தது, அனுராதபுரத்தினைக் கைப்பற்றி ஆட்சி செய்கின்றார்கள். இந்த ஸேன குத்திகன் எனும் மன்னர்கள் இருவரும் தமிழர்களாவார் என பாளி வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இவ் இரு மன்னர்களைத் தொடர்ந்து எளார எனப் பாளி மொழியில் சிறப்பிக்கப்படுவனும், தமிழில் எல்ளாளன் எனும் பெயர் கொண்டவனுமான வீரம் பொருந்திய மன்னன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தீபவங்ஸ எனும் நூலிலும் இந்த எல்லாள மன்னன் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த எல்லாளன் பற்றி கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த மகாவம்சமானது சோள நாட்டிலிருந்து வருகை தந்த தமிழ் மன்னன் எல்லாளன் என்று கூறுகின்றது.

நாம் இங்கே அலசுவது இலங்கையில் தமிழ்க் குடிகளின் பரம்பலினைப் பற்றிய விடயங்களாகும்.

இலங்கையில் இராஜ்ஜியங்களானது அனுராதபுரம், பொலநறுவை, தம்பதெனியா, கண்டி, கோட்டை என பெயர்ச்சிக்குள்ளாகின்றது.

இங்கே கி.மு முன்னூறாம் நூற்றாண்டளவில் அனுராதபுர இராஜ்ஜியத்தில் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்றிருந்ததாக குறிப்புக்கள் காணப்படவில்லை எனபதைத் தான் சுட்டியிருக்கிறேன்.

அனுராதபுர இராஜ்ஜியத்தில் கிறிஸ்துவிற்குப் முற்பட்ட காலத்திலிருந்து தான் தமிழ் மன்னர்களின் செல்வாக்கிருப்பதாக கூறுகின்றார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனால் தமிழின் முக்கியத்துவம் பற்றி, தமிழர்களின் வரலாற்றிற்கான போதுமான ஆதாரங்களை இங்கே யாரும் சுட்டவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

நான் இங்கே பேசும் அனுராதபுர இராஜ்ஜியமானது கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலப் பகுதியாகும்.
நீங்கள் சொல்கின்ற காலப் பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் 247ம் ஆண்டில் அரசனாக முடி சூடிக் கொண்ட தேவநம்பிய திஸனின் தந்தை பெயர் மூத்த சிவன் என்று மகாவம்சமும், பாளி நூல்களும் கூறுகின்றது.

இவ் மகா சிவன் கி.மு 197-187ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அனுராதபுர அரசனாக இருந்திருக்கிறான். சிவன் எனும் பெயர் வழக்கிலிருந்தமை அக் காலத்தில் சிவ வழிவாடு நிகழ்ந்தது என்பதற்கான சான்றாதாரமாக அமைந்திருந்தாலும், அக் காலத்தில் இம் மன்னன் காலத்தில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியோ, இலக்கியங்கள் பற்றியோ அறியக் கூடிய குறிப்புக்கள் ஏதும் காணப்படவில்லை.

இதனை விட இலங்கையில் புராதன காலத்தில் ஈஸ்வரங்கள் அமைந்திருந்ததாக புராண - மரபுக் கதைகள் கூறுகின்றன. ஆனால் இவற்றினூடாக நாம் தமிழ் மக்களின் வரலாறு பற்றியோ, தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியோ அறிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் வரலாற்றினைத் தொகுத்தோர் கி.பி 17ம் நூற்றாண்டைத் தொடர்ந்து வந்த இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர் வரலாற்றின் தொகுப்புக்களை ஆதாரப்படுத்துகின்றார்கள்.

கிமு 103- கிமு 89 வரையான வட்டகாமினி மன்னன் காலத்தில் பிராமாணர்களுக்கான வேதம் ஓதும் மண்டபங்களையும், சாலைகளையும் அமைத்தான் என மகாவம்சம் கூறுகின்றது. இவையாவும் சைவ சமயம் தொடர்பான சான்றாதாரங்களாக விளங்குகின்றனவே அன்றி, இலங்கையில் தமிழர்களின் மொழிப் பரம்பல். வரலாற்று ரீதியான தமிழரின் பூர்வீகம் பற்றிப் பேசவில்லை.

ஏன் கி.பி ஏழாம் நூற்றாண்டி திருஞானசம்பந்தரும், சுந்தரரும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் முதலிய தலங்கள் மீது பதிகங்கள் பாடியுள்ளார்கள். ஆனால் இந்தக் குறிப்புக்களையெல்லாம் வைத்து இலங்கையில் தமிழர்களின் பூர்வீக வரலாற்றினை நூற் குறிப்புக்களோடு ஆதாரப்படுத்த முடியாதல்லவா.

இலங்கையில் தமிழர்கள் தமது வரலாற்றினை கி.பி 17ம் நூற்றாண்டிலிருந்து தான் எழுதத் தொடங்குகின்றார்கள். நீங்கள் கூறுகின்ற அனுராதபுர கால இந்துக் கோவில் தொடர்பான விடயம் சைவ சமயப் பரம்பலுக்குச் சான்றாக அமைந்தாலும், இலங்கையில் தமிழர்களின் புராதன வரலாற்றிற்கான எழுத்து மூல ஆதாரத்திற்கு சான்றாக அமையாது பாஸ். இப்போது நமக்கு வேண்டியது தமிழ் - தமிழர்கள் அனுராதபுர காலத்தில் முற்கால அனுராதபுர இராஜ்ஜியத்தில் முக்கியத்துவம் பெற்றது பற்றியதற்கான குறிப்புக்களாகும், இதனை எந்த வரலாற்று ஆசிரியர்களும் இது வரைக்கும் முன் வைக்கவில்லை.

//

"சிங்களவர்களின் வரலாறு இலங்கையில் அனுராதபுர இராஜ்ஜியத்தோடு ஆரம்பமாகின்றது.""இந்த அனுராதபுர இராசதானிக் காலத்தில் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்றது பற்றியோ அல்லது தமிழர்கள் வாழ்ந்தது தொடர்பிலோ இன்று வரை குறிப்புக்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. "//

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas

//Mohamed Faaique//

இவரின் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன்..

ஒரு நூலை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு வரலாற்றை தீர்மானித்துவிட முடியாது,, இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கலாம்,, அல்லது சந்தேகமாகவே விட்டிருக்கலாம்,,மன்னிக்கனும்..//

நண்பா, நானும் இங்கே ஐயாமாகத் தான் இரண்டாவது பந்தியில் சொல்லியிருக்கேன். சரியான காலப் பகுதியாக ஒன்றினை அறிய முடியவில்லை என்பதனைச் சொல்லியிருக்கேன்.
இதற்கெல்லாம் மன்னிப்பெதற்குப் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///அத்தோடு இச் சிங்கள மொழியானது பாளி, சமஸ்கிருதம், ஆகிய மொழிகளின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து தமிழின் கலப்பால் உருவாக்கம் பெற்றுக் கொள்கின்றது. /// பழங்கால கல்வெட்டுக்களில் பாளி மொழிதான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது...

ஆனாலும் ஒரு டவுட்டு பாளி சமஸ்கிரித மொழிகளை ஆரியர்கள் பயன்படுத்துவதில்லையா - அவர்களின் தாய் மொழியாக இருந்திருக்கவில்லையா ????
//

பாஸ். வட இந்தியர்களும் பாளி, சமஸ்கிருத மொழிகளைப் பயன்படுத்தினார்கள் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் அவர்கள் அனைவரும் ஆரியர்களா என்பது சந்தேகம் பாஸ்.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் 
எனக்கு தெரியாத விடயங்கள் பல தெரிந்து கொண்டேன் தொடருங்கள்.. 
வாழ்த்துக்கள்..

Mohamed Faaique said...
Best Blogger Tips

அனுராதபுரத்துக்கால சந்திர வட்டக்கல்லில் உள்ள எருமை உருவம், பொலன்ன்றுவை காலத்தில் இல்லை. இந்துக்கள் பசுவை வழிபடுவதால் அதை மிதிபடுமாறு வைக்கக்கூடாது என நீக்கி இருக்கலாம். இதை வைத்து, பொலன்னறுவை கால பகுதியிலேயே ஹிந்துக்களின் ஆதிக்கம் அதிரிகரிக்கலாம்`னு வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். என்பதாக படித்த ஞாபகம்..

shanmugavel said...
Best Blogger Tips

இரவு வணக்கம் நிரூபன்,

பலரும் அறியாத வரலாற்றுத்தகவல்கள்.

தொடருங்கள் சகோ!

-தோழன் மபா, தமிழன் வீதி said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்.
தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்.

சிங்களவர்கள் இந்தியாவின ஒரிசா (ஓடிஷா) மாநிலத்தைச் சார்ந்தவர்கள். சிங்கள மொழியும் ஒரியாவின் எழுத்து வடிவமும் ஒன்று போலவே இருக்கும். அதுவும் போக... இயற்கையாவே ஒரிசா பகுதியில் உள்ளவர்கள், இலங்கைக்கு இயல்பாக வரமுடியும். என்னடா... இது புதுக் கதை என்று நினைக்கவேண்டாம்!. இதுநாள் வரையில் நாம் அறியாத ஒன்று.

ஒரிசா பகுதியின் வங்காள விரிகுடா கடல் நீரோட்டமானது, சரியாக இலங்கை கடற்கரை வரை நல்ல இழுவையில் இருக்கும். அதனால் இன்றும் ஒரிசா காட்டுப்பகுதியில் கடலின் ஓரத்தில் விழும் தேக்கு போன்ற மரங்கள் இலங்கைக்கு அடித்துவரப்படும். அப்படி கிடைக்கும் மரங்களை இலங்கையில் வருடம் தோறும் 'ஒரிசா தேக்கு மரங்கள்' என்று ஏலம் விடுவதவும் நான் படித்திருகின்றேன், சொல்லக் கேட்டுருக்கிறேன்.

ஒரிசாவிலிருந்து இலங்கைக்கு வருவது கடினமான ஒன்றல்ல. அதனால்தான், மன்னர் அசோகரது வாரிசுகள் இலங்கைக்கு எளிதாக வந்திருக்கலாமென்றுக் கருதப்படுகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@-தோழன் மபா, தமிழன் வீதி
வணக்கம் நண்பா,
தங்களது கருத்துக்களைப் போலத் தான் நானும் படித்த வரலாற்றினை வைத்து இத் தொடரின் ஏழாம் பாகத்தில் பின் வருமாறு எழுதியிருந்தேன்//

//"ஐயா, அப்போ; சிங்களவர்கள் இனம் உருவாகுவதற்கு காரணமான வட இந்தியர்கள் எப்படி இலங்கைக்குள் வந்தார்கள் என்று சொல்லவில்லையே?" என அம்மா குறுக்கிட்டாள்.
"கி.மு. 700ம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்த விஜயனும், அவனுடன் கூட வந்த 700 தோழர்களையும் கொண்டு தான் சிங்கள இனத்தின் கலப்பு முறை வரலாறு இலங்கையில் தொடங்குகின்றது" என ஐயா மீண்டும் தொடர்ந்தார்.


இந்த விஜயன் வட இந்தியாவில் லாலா தேசம் என முற் காலத்தில் அழைக்கப்பட்ட வங்காளம், ஒரிசா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய சிங்கபாகு மன்னனது இராஜ்ஜியத்தில் பல அட்டூளியங்களையும், திருட்டுச் செயல்களையும் செய்த மன்னனின் மகன் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதனால் ஆத்திரமுற்ற மன்னனோ விஜயனிற்கு எதிர்காலத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகும் எனும் நம்பிக்கையில் விஜயனையும், அவனது 700 தோழர்களையும் கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றார்.
//

http://www.thamilnattu.com/2011/10/07.html

ஆனால் பின்னர் ஆரியர்கள் சிங்களவர்களா என்பது தொடர்பில் ஐயம் கொண்டே மேற்படி கருத்தினை முன் வைத்தேன்.

மிக்க நன்றி நண்பா.

C.P. செந்தில்குமார் said...
Best Blogger Tips

Thanx to share

முத்தரசு said...
Best Blogger Tips

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 09

முதற் பாகங்களைப் படிக்க பாகம் 01 பாகம் 02பாகம் 03பாகம் 04பாகம் 05பாகம் 06பாகம் 07பாகம் 08
ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாக.......
இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லிம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட .....

ஐய்யா, சிறு பிழை திருத்துங்கள் - பகிர்வுக்கு நன்றி

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்

Yoga.S. said...
Best Blogger Tips

அருமையாக இருக்கிறது.விளக்கங்கள் அதை விட அருமை.இப்போதும் "தோண்டி"க் கொண்டு தானே இருக்கிறார்கள்,புதைத்தனவற்றை

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

ஐய்யா, சிறு பிழை திருத்துங்கள் - பகிர்வுக்கு நன்றி

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்//

ஆமா, இதில எங்கே பிழை இருக்கிறது?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

அருமையாக இருக்கிறது.விளக்கங்கள் அதை விட அருமை.இப்போதும் "தோண்டி"க் கொண்டு தானே இருக்கிறார்கள்,புதைத்தனவற்றை//

ஆனாலும் ஐயா இப்போது பல அகழ்வாராச்சியகளை அரசாங்கம் மேற் கொண்டு தொடர விடாமல் அல்லவா தடை போட்டிருக்கிறது.

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...

ஆனாலும் ஐயா இப்போது பல அகழ்வாராச்சியகளை அரசாங்கம் மேற் கொண்டு தொடர விடாமல் அல்லவா தடை போட்டிருக்கிறது.///அது முதலில் "அவர்கள்" புதைத்தவற்றைத் தோண்ட வேண்டும் என்றல்லவா?

செங்கோவி said...
Best Blogger Tips

நமது வரலாற்றினை நாம் முழுமையாக, முறையாக எழுதி வைக்காதது தான் தவறு. ஆனால் மகாவம்சம் போன்ற வரலாற்றை எழுதி வைத்தாலும், நம் அறிவுஜீவிகள் அது கட்டுக்கதை என்று சொல்லவே வாய்ப்பு அதிகம்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails