Sunday, June 5, 2011

கண்டறியப்பட முடியாத காம நோய்!

முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில் தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன், அது அவள் தான், அவளே தான்,
புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா எனும் நினைப்பு!
மேகங்கள் கீழிறங்கி என் மார்பில் பூமாரி பொழிவது போன்ற மகிழ்ச்சியில்
அவளைப் பார்த்தேன், அவள் பின்னேயிருந்து ஒரு சிறு குழந்தை வந்து கூப்பிட்டது மட்டும் காதில் கேட்டது, ’’பிரியம்வதனா அக்கா! என்ன செய்யுறீங்க! நேரமாகுது, வீட்ட போக வேணுமில்லே’!
அந்தக் கணமே புரிந்து கொண்டேன், அவள் பிரியம்வதனா தான்,
பேருக் கேற்றாற் போல என் மீது எப்போது பிரியம் கொள்ளுவாள் எனக் காத்திருந்தேன். காத்திருப்பும் கனிவாகும் நாளும் வந்தது.

வேப்பமரத்தடித் திட்டில் குந்தியிருந்து வேற்றுக் கதைகள் பேசி, காற்றில் கலந்து வந்த அந்த நறு மணத்தின் சொந்தகாரி மீது, என் சிந்தையினைக் கொன்று விட்ட நெஞ்சக்காரி மீது என் நினைபெல்லாம் படிய, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தேன். என் நடத்தையில் சிறிது வித்தியாசம் தெரிவதை உணர்ந்தவனாய் அருகே இருந்த நண்பன் காந்தன் கேட்டான்,

’ஏன் மச்சான் - கொஞ்ச நாளாய் ஒரு மார்க்கமா இருக்கிறாய்! 
’இல்லை மச்சான், போன கிழைமை கோயிலுக்குப் போயிருந்தேன். தேங்காய் உடைக்கும் போது இப்ப ஊருக்கு அகதியாக வந்துள்ள பிரியம்வதனாவைப் பார்த்தேன். என் நினைப்பெல்லாம் அவள் மீது நிறைந்து விட்டதே மச்சான்’’ காதல் செய்து பிரியம்வதனாவை எனை விட்டுப் பிரியாதவளாய் ஆக்க வேண்டும் என ஆவல் உளதே என்றேன்!

மாநாடு முடிகையில் மனதெல்லாம் நிறைந்திருந்த காதல் எனும் புனிதத்தை ஆடையாக்கி அணிந்துள்ள காம நோய் தீர நண்பன் உதவி செய்தான். களவாக வாங்கிய கந்தப்பரின் தவறணையின் மூன்று நாள் புளித்த பழைய கள்ளும், தோட்டம் கொத்தும் சின்னையாவின் பொக்கற்றிலிருந்து திருடப்பட்ட குறைச் சுருட்டும் அவனது மனதை நியூட்டனின் சிந்தனைகளுக்கு நிகராக மாற்றிப் போட்டு விட்டது.  காந்தன் விஞ்ஞானியானான். காதல் மெய் ஞானி ஆகி விளக்கம் சொல்லத் தொடங்கினான். அவன் சொல்வதை செவிமடுப்பவனாய் நானும் அவன் அருகே மாணவனானேன்.

‘அவன் நண்பன், எனக்கு காதலெனும் போதையூற்றிய திருநகரூர் வம்பன்!
நாம்பனைத் தேடி ஓடும் பசு மாடாய் நானிருக்கையில் நல்வாக்கு தந்த இளவல்! நெஞ்செல்லாம் அவள் நினைப்பு, வற்றாத நிலாவரை நிரூற்றாய் பெருக்கெடுக்க, காதலெனும் உண்ணா நோன்பில் நானிருப்பதாய் உணவோ என்னை அடிக்கடி புறக்கணிக்கும் வேளையிலும் நண்பன் எப்போதும் உடன் இருப்பான் என்பதற்கு எடுகோளாய், ஐடியா தந்தான்.

‘நீ ஒரு கடிதம் கொடுத்துப் பாரேன்’. அவள் எங்கே படிக்கிறாள் என்பதை உணர்ந்து பாடசாலை விட்டு வரும் வேளையில் கடிதம் கொடுத்தால் சில நேரம் ஆள் மடியலாம் மச்சான்! ‘சும்மா கிடந்த இரணைமடுக் குளத்தின் கதவுகளை வலியப் போய் முட்டி உடைத்து வான் பாய விட்டு குடி மனைகளை நாசம் செய்வது போல, எனக்குள் ஓர் வில்லங்கத்தை அவன் வர வைத்தான்.

நாட் குறித்தேன், அவளை அடைய வேண்டும் எனும் ஆவல் மேலெழுந்து வர கடிதத்தில் பார்த்தவுடன் அவள் பார்வை என்னைப் பிரகாசமுள்ள மனிதனாக்க வேண்டும் என ஆவல் கொண்டேன். நண்பர்களின் உதவியோடு கை கூடும் காதல்கள் தான் காத்திரமானவை எனும் தத்துவத்தின் உண்மை தெளிந்தேன். காந்தனின் கூற்றினைச் செவியிலிருத்திக் கடிதம் வரைந்தேன்.

எல்லாக் கடிதங்களிலும் அன்புள்ள என்று தொடக்கம் எழுதி எம் தமிழக் காதல்கள் விரசம் குறைந்து விட்டன என்பதால், என் காதலில் ஒரு சேஞ்ச் வைக்க நினைத்தேன். அதன் விளைவு கடிதம் இப்படி வந்து பிறந்தது!

‘உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!

என் உணர்வுகள் யாவும் நீ திருடி நீண்ட நாளாகி விட்டதால், நலம் பற்றி எழுத இங்கே வேலையில்லை. மனதினுள் நீ வந்து பிள்ளையாரின் சந்நிதியில் புகுந்த பின்னோ கொழுக்கட்டை, அவல், சுண்டல் வாங்க கோயிலுக்குப் போறேனோ தெரியாது, நீ வருவாய் எனும் நினைப்பில் நீண்ட நாளாய் பக்தி முத்திப் போய்; சித்தம் பித்துப் பிடித்து, சிக்கெடுக்க முடியாதிருக்கும் உந்தன் துவட்டாத கூந்தல் போலாகி விட்டேன்.

நீ இறுதியாக என்னை உந்தன் பார்வைகளால் பறித்தெடுத்து, விழிகளில் அமில நீர் சுரக்கத் தொடங்கிப் பல மாதங்களாகி விட்ட நிலையில் நான் உனக்காக எழுதும் அன்பு மடல்இது.

என் ஆசைகளை உணர்வுகளைத் தாங்கி வரும் என் இதயக் கீதமிது!  இது தான் என் இறுதி மடலாக இருக்கலாம் என நினைக்கிறேன். நீ என்னை வெறுத்தால் இயக்கத்திற்குப் போய் நாட்டிற்காய் என் வாழ்வை அர்ப்பணிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.

அன்று நீ என்னைப் பார்வைகளால் தழுவிச் சென்ற நிலையும், உனக்கே தனித்துவமாய், உன்னை அந்தக் கோயிலில் வேறுபடுத்திக் காட்டிய வாசமும் என்னைக் கொன்று விட்டது.
என் உணர்வுகளைத் தின்று விட்டது. உப்பளக் காற்றுக் கூட என்னை வந்து வாசமுள்ள தென்றலாய் வருடுவது போன்ற உணர்வு! இது உன்னால் தான் பெண்ணே! உன் பதிலுக்காக விழி மேல் வழி வைத்து காத்திருப்பேன்! இல்லையேல் சென்ரியில் (Military bunkers) விழியில் துவக்கெடுத்து பார்த்திருப்பேன்!

என என் கடிதம் எழுதி முடித்து, அவளின் பாடசாலை தேடியறிந்து அவள் வரும் வேளைக்காய் காத்திருந்தேன். கூடை பூட்டிய லுமாலா சைக்கிளில் அவள் வந்தாள். கோடை வெய்யிலினால் நீரேதும் அருந்தாது அவள் நினைப்பில் இருந்த என் குரலையும் ஒரு செருமல் செருமி, கம்பீரக் குரலாக்கி 'எக்ஸ்கியூஸ்மீ'! என்று குரல் கொடுத்தேன். சுற்றும் முற்றும் பார்த்தவள்
கடிதத்தை வேண்டப் பயந்து, பெண்மைக்கேயுரிய நாணத்துடன் தரை பார்த்திருந்தாள்.

இது தான் தருணம் என்று அவளின் சைக்கிள் கூடைக்குள் என் கடிதத்தை வைத்து விட்டுப் போனேன்.  தொடர்ச்சியாக இரு நாட்கள் அவளின் முடிவிற்காய் பள்ளிக் கூட வாசலில் வெயிற் பண்ணிக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் அவள் வரும் நேரம் பார்த்து பாடசாலை வாசலுக்குப் போனேன்.

‘ஹலோ பிரியம்வதனா! உங்கடை முடிவென்ன என்று சொல்ல முடியுமா? எனக் கேட்டேன், அவள் என் பின்னே பார்த்துச் சிரித்தாள். புரியாதவனாய்த் திரும்பிப் பார்த்தேன்.
பஷன் பிளஸ் மோட்டார் சைக்கிளில் விடுதலைப் போராளி ஒருவன் துவக்குடன் (துப்பாக்கியுடன்) வந்திறங்கினான்!

‘’அறிகிலார் எல்லோரும் என்றே என் காமம்
குறுகின் மறுகும் மருண்டு!’’
திருக்குறள்- அதிகாரம் 114, குறள் 1139

டிஸ்கி: இப் பதிவு ஒரு சிறிய கவிதை கலந்த உரை நடைப் பதிவு.

61 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாக த்தான் நிரூபா...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>‘நீ ஒரு கடிதம் கொடுத்துப் பாரேன்’. அவள் எங்கே படிக்கிறாள் என்பதை உணர்ந்து பாடசாலை விட்டு வரும் வேளையில் கடிதம் கொடுத்தால் சில நேரம் ஆள் மடியலாம் மச்சான்!

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

?>>என் உணர்வுகள் யாவும் நீ திருடி நீண்ட நாளாகி விட்டதால், நலம் பற்றி எழுத இங்கே வேலையில்லை.

துளித்துளியாய் பெய்யும் மழைத்துளியாய் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்.. பார்வையிலே உன் பார்வையிலே. ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாக த்தான் நிரூபா...//

ஹா...ஹா.....முதல் வருகை நீங்களா.
வாங்க சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..//

மக்களே! காதல் கடிதம் தீட்டி அனுபவப் பட்டவர் சொல்றாரு! நல்லா கேட்டுக்குங்க:-))

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


?>>என் உணர்வுகள் யாவும் நீ திருடி நீண்ட நாளாகி விட்டதால், நலம் பற்றி எழுத இங்கே வேலையில்லை.

துளித்துளியாய் பெய்யும் மழைத்துளியாய் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்.. பார்வையிலே உன் பார்வையிலே. ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்//

ஆய், துளித் துளியாய்....பாட்டுப் பாடியா நீங்க கடிதம் கொடுத்தீங்க;-))

Unknown said...
Best Blogger Tips

ஓகே ஓகே ...கொஞ்சம் வேலை இருக்கு ஹி ஹி ஒரு கடிதம் கொடுக்கணும் .முடிச்சுட்டு வாரன்

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது


ஓகே ஓகே ...கொஞ்சம் வேலை இருக்கு ஹி ஹி ஒரு கடிதம் கொடுக்கணும் .முடிச்சுட்டு வாரன்//

நிஜமாவா சகோ, கடிதம் கொடுத்து அடி வாங்காதிருக்க வாழ்த்துக்கள்;-))

ரேவா said...
Best Blogger Tips

நானும் வந்துட்டேன்

ரேவா said...
Best Blogger Tips

புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா எனும் நினைப்பு...

ஓவர் ஆசை.....உடம்புக்கு ஆகாது சகோ

ரேவா said...
Best Blogger Tips

’ஏன் மச்சான் - கொஞ்ச நாளாய் ஒரு மார்க்கமா இருக்கிறாய்!

ஹி ஹி உன் நண்பனுக்கும் தெரிஞ்சு போயிடுச்சா...நீ ஒரு மார்க்கமா இருக்கன்னு

ரேவா said...
Best Blogger Tips

காதல் எனும் புனிதத்தை ஆடையாக்கி அணிந்துள்ள காம நோய்

சூப்பர் லைன்....

ரேவா said...
Best Blogger Tips

எல்லாக் கடிதங்களிலும் அன்புள்ள என்று தொடக்கம் எழுதி எம் தமிழக் காதல்கள் விரசம் குறைந்து விட்டன என்பதால், என் காதலில் ஒரு சேஞ்ச் வைக்க நினைத்தேன்


அங்கயுமா சேஞ்ச் :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ப்ரியவதனா என்னை மறந்துவிடாதே - முழு நிலவே சென்று மறைந்து விடாதே...... ஹி ஹி ஹி! இரு மச்சி வாறன்!! வேலைக்குப் போய் - அங்கிருந்து கமெண்ட் போடுறே்ன்!

ரேவா said...
Best Blogger Tips

கடிதம் வடிவில் நீ எழுதிய உரைநடை கவி அருமை சகோ...ஒவ்வொரு வரியும் ரசித்தேன்...ஆனால் விடுதலைப் போராளி ஒருவன் துவக்குடன் வந்திறங்கினான்... இதற்க்கான பொருள் மட்டும் தான் எனக்கு விளங்கவில்லை....அடிக்க வந்தானா?..

உணவு உலகம் said...
Best Blogger Tips

முதல் காதலா?

உணவு உலகம் said...
Best Blogger Tips

காதலை கருவறுக்க வந்த கயவன் யாரோ!

உணவு உலகம் said...
Best Blogger Tips

மீண்டும் மலர்ந்ததா?

உணவு உலகம் said...
Best Blogger Tips

இதே போல் இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கு நண்பரே!

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

"‘உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!"

காதல் மையூற்றி முனைகளின் வழியும் உங்கள் காதல் உங்களின் பிரியம்வதனாவை பிரியம் கொள்ளவே வைக்கும்
தொடர்ந்து படிக்கிறேன்

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

"அன்று நீ என்னைப் பார்வைகளால் தழுவிச் சென்ற நிலையும், உனக்கே தனித்துவமாய், உன்னை அந்தக் கோயிலில் வேறுபடுத்திக் காட்டிய வாசமும் என்னைக் கொன்று விட்டது. என் உணர்வுகளைத் தின்று விட்டது. உப்பளக் காற்றுக் கூட என்னை வந்து வாசமுள்ள தென்றலாய் வருடுவது போன்ற உணர்வு"

சகோ நானே உருகிவிட்டேன் இந்த கவித்துவத்தை பார்த்து
ஆஹா ..... அருமை அற்புதம் ஆனந்தம் அசத்தல் அட்டகாசம் அமர்க்களம்

கவி அழகன் said...
Best Blogger Tips

நல்ல அருமையான கதை மண் மனம் வீசுது

NKS.ஹாஜா மைதீன் said...
Best Blogger Tips

பதிவும்,பதிவை ஒட்டிய !படங்களும் அருமை...

கவி அழகன் said...
Best Blogger Tips

கவி வடிவில்
கதை அழகு
காதலின் சுவை அழகு

Unknown said...
Best Blogger Tips

காதல்???காதல்???காதல்??(தலையில் அடிக்கவும் ப்ளீஸ் எனக்காக)

Unknown said...
Best Blogger Tips

ஆமா முருகண்டி பிள்ளையார் இப்போ யாருக்கு சொந்தம்னு இப்போ பட்டி மன்றம் நடக்குது தெரியுமோ??

Unknown said...
Best Blogger Tips

கதை ரொம்ப நல்லாயிருந்தது நண்பா.. முடிவை பாதிக் கதையிலேயே கெஸ் பண்ணியிருந்தேன்.. :-)

நல்லா எழுதியிருக்கீங்க..

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இது ஒரு காதல் இலக்கியம்!அதுவும் அந்த வித்தியாசமான காதல் கடிதம்!அதற்காகவே எப்பெண்ணும் காதலிக்கத் தொடங்குவாள்!
விசையுந்தில் வந்தவன்,வில்லனா-காதலன்,முறைப்பையன்..
அல்லது மச்சானா?

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

காதல் கடிதம் அருமை

தினேஷ்குமார் said...
Best Blogger Tips

என்மீது உள்ளக்காதலை ஈழத்தின் மீதுக்கொண்டு ஈழம் வெல்ல புறப்படு போராளியாக ... வென்று திரும்பும் வரைக்காத்திருப்பேன் பூச்செண்டுடன் உன் கட்டுடல் ஏற்குமா நிந்தன் கல்லறை ஏற்குமா எந்தன் கைநிறை மலர்க்கொண்டு என்று எண்ணம் கொண்டாலோ மல்லிகை மலர்க்கொண்டு ... நண்பரே எழுத்தும் நடையும் அருமை ....

கார்த்தி said...
Best Blogger Tips

அய்யோ அம்மா என்ன சொல்ல வாறீங்க? ஒண்ணுமே புரியலயே! அய்யோ அய்யோ!!!
என்ர பிகருக்கு கவிதை எழுத உங்களதான் பிடிக்கணும் எண்டு புரிந்து கொண்டேன்! நேரம் இருந்தா இண்டைக்கு பாட்டுக்கு பாட்டு நிகழ்சிக்கு நானும் வாறேன்!!

Mahan.Thamesh said...
Best Blogger Tips

அண்ணே மண்வாசனை .காதல் வாசனை , தமிழ் வாசனை நல்லாவே இருக்கு உங்க கதையில

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

காதல் ஓவியம் பாடும் காவியம் தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

துளித்துளியாய் பெய்யும் மழைத்துளியாய் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்.. பார்வையிலே உன் பார்வையிலே. ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்//


டேய் பன்னாடை இங்கேயும் காப்பிதான் அடிச்சி போடுறியா கொன்னியா...?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..///


நாராயணா இவன் தொல்லை தாங்க முடியலைடா சாமீ.....

ஹேமா said...
Best Blogger Tips

ப்ரியவதனா....பெயரே அழகு.எங்களுர்க் காதல் வாசனை !

Anonymous said...
Best Blogger Tips

என்ன பாஸ் கல்யாண ஆசை வந்திடிச்சா ...;-)

Anonymous said...
Best Blogger Tips

//////‘உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!/// காதல் காதல் அது இல்லையேல் சாதல் ....

Anonymous said...
Best Blogger Tips

///நீ என்னை வெறுத்தால் இயக்கத்திற்குப் போய் நாட்டிற்காய் என் வாழ்வை அர்ப்பணிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.//// ம்ம்ம் நம்மவர்கள் இப்படி தான் தமது சுயலனத்துக்காக இயக்கத்தை பயன்படுத்தினார்கள்... வீட்டில அம்மா அப்போவோட சண்டை பிடிச்சா கூட இயக்கத்துக்கு போடுவன் எண்டு தானே பயமுறுத்துவார்கள் ..))

Anonymous said...
Best Blogger Tips

///‘ஹலோ பிரியம்வதனா! உங்கடை முடிவென்ன என்று சொல்ல முடியுமா? எனக் கேட்டேன், அவள் என் பின்னே பார்த்துச் சிரித்தாள். புரியாதவனாய்த் திரும்பிப் பார்த்தேன்.
பஷன் பிளஸ் மோட்டார் சைக்கிளில் விடுதலைப் போராளி ஒருவன் துவக்குடன் வந்திறங்கினான்!// அப்புடியே ஷாக் ஆகிட்டன்....உரை நடை நல்லாய் இருக்கு பாஸ் .தொடர்க ...

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா


கடிதம் வடிவில் நீ எழுதிய உரைநடை கவி அருமை சகோ...ஒவ்வொரு வரியும் ரசித்தேன்...ஆனால் விடுதலைப் போராளி ஒருவன் துவக்குடன் வந்திறங்கினான்... இதற்க்கான பொருள் மட்டும் தான் எனக்கு விளங்கவில்லை....அடிக்க வந்தானா?..//

சென்னை பித்தன் said... [Reply to comment]
இது ஒரு காதல் இலக்கியம்!அதுவும் அந்த வித்தியாசமான காதல் கடிதம்!அதற்காகவே எப்பெண்ணும் காதலிக்கத் தொடங்குவாள்!
விசையுந்தில் வந்தவன்,வில்லனா-காதலன்,முறைப்பையன்..
அல்லது மச்சானா?//


இக் கதையின் படி, எழுதப்பட்ட கடிதத்தில் சொல்லியிருந்தேன் தானே,


என் காதலை ஏற்றுக் கொள்ளா விட்டால் போராட்டத்தில் இணைந்து விடுவேன் என்று....ஹி...ஹி...
இலங்கையின் வன்னி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் காதலை ஏற்கா விட்டாலோ அல்லது வீட்டில் பெற்றோருடன் பிள்ளைகளிற்குத் தகராறு என்றாலோ பிள்ளைகள் யூஸ் பண்ணும் ஒரு மிரட்டல் வசனம் தான் ‘இயக்கத்திற்குப் போடுவேன் என்பது,


இதனைத் தான் இந்தக் கடிதத்திலும் தன் காதலை ஏற்காவிட்டால் தானும் போராடப் போய் விடுவேன் எனும் பாணியில் மிரட்டலுடன் நாயகன் கூறியிருந்தான்.


கடிதம் கொடுத்து இரண்டு நாட்களாகியும் பிரியம்வதானா பதில் சொல்லவில்லை. மீண்டும் மூன்றாவது நாளன்று நாயகனைக் காணும் போதும் அவன் தான் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றாது இயக்கத்திற்குப் போகாது அவளுக்காக காத்திருக்கிறான்.
அந்த உணர்வினைக் கிண்டலடிக்கத் தான், தான் முடிவு சொல்லவில்லை, நாயகன் போராடப் போகவில்லை எனும் உணர்வினைக் கிண்டலடிக்கத் தான் மோட்டார் சைக்கிளில் இறங்கிய போராளியைப் பார்த்து பிரியம்வதனா சிரித்தாள்.


கதைப் படி....அவள் காதலை ஏற்கவும் இல்லை...
நாயகன் இயக்கத்திற்குப் போகவும் இல்லை.

மாலதி said...
Best Blogger Tips

"‘உயிராகி எந்தன் உடலோடு கலந்து; என் உணர்வாகப் புகுந்து மனதிற்குள் நிறைந்து, உயிர் மூச்சாசி இப்போது என்னோடு இணைந்திருக்கும் என் உயிர்த் தேவதையே! என்றென்றும் என் ப்ரியமுள்ள பிரியம்வதனா!"எழுத்தும் நடையும் அருமை ....

shanmugavel said...
Best Blogger Tips

சகோ நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா? முயற்சி செய்தால் என்ன? வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பேருக் கேற்றாற் போல என் மீது எப்போது பிரியம் கொள்ளுவாள் எனக் காத்திருந்தேன். காத்திருப்பும் கனிவாகும் நாளும் வந்தது.>>>>>>

சகோ... இந்த பிரியமானவள் யாரோ?

Anonymous said...
Best Blogger Tips

நல்ல எழுத்து நடை...அருமையான உற்சாகம் இருக்கிறது உங்களிடம்..இளமை கொப்பளிக்கிறது நிறைய எழுதுங்க

Anonymous said...
Best Blogger Tips

கவிதை உரைநடை...நல்லாருக்கு

சுதா SJ said...
Best Blogger Tips

என்ன இசையும் கதையுமா அண்ணா??

சுதா SJ said...
Best Blogger Tips

//என் உணர்வுகள் யாவும் நீ திருடி நீண்ட நாளாகி விட்டதால், நலம் பற்றி எழுத இங்கே வேலையில்லை///

யார் அந்த லக்கி பொண்ணு அண்ணா ??? சொல்லவே இல்ல

சுதா SJ said...
Best Blogger Tips

‘///அவன் நண்பன், எனக்கு காதலெனும் போதையூற்றிய திருநகரூர் வம்பன்!///


இலங்கையின் வைரமுத்து எங்கள் நிருபன் அண்ணா

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

//அவன் நண்பன், எனக்கு காதலெனும் போதையூற்றிய திருநகரூர் வம்பன்!///


இலங்கையின் வைரமுத்து எங்கள் நிருபன் அண்ணா//

மவனே, பிச்சுப் புடுவேன் பிச்சு... சூம்மா ஓவரா அடை மொழி கொடுத்து பப்பாவில் ஏற்றிச் சரிக்கிற ப்ளானா.

Mathuran said...
Best Blogger Tips

அடடடடடா... கடைசியில இப்பிடியா போச்சே

Mathuran said...
Best Blogger Tips

//துஷ்யந்தனின் பக்கங்கள் said.
இலங்கையின் வைரமுத்து எங்கள் நிருபன் அண்ணா//

பாஸ் அப்புடி சாதாரணமா சொல்லீர முடியாது

ஒரு 100 வைரமுத்து..... 500 கண்ணதாசன்.......1000 வாலி.....1500 மதன் கார்க்கி....2000 பாரதி.....2500 தாமரை.. 3000 வடிவேலு???? (அடச் சீ.. சாரி பாஸ் ஒரு புளோவில வந்திரிச்சு) எல்லாம் சேர்த்து செஞ்ச கலவைதான் எங்க நிரூபன்

Angel said...
Best Blogger Tips

முடிவு எனக்கு புரியாமலிருந்தது .நீங்கள் விளக்கபடுதியபின் நன்றாக புரிகிறது .very nice.

Mathuran said...
Best Blogger Tips

//ஏன் மச்சான் - கொஞ்ச நாளாய் ஒரு மார்க்கமா இருக்கிறாய்!//

ஹா ஹா நிரூபன் கொஞ்ச நாளா இல்ல ரொம்ப நாளாவே ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறாரு

Ashwin-WIN said...
Best Blogger Tips

//‘ஹலோ பிரியம்வதனா! உங்கடை முடிவென்ன என்று சொல்ல முடியுமா? எனக் கேட்டேன், அவள் என் பின்னே பார்த்துச் சிரித்தாள். புரியாதவனாய்த் திரும்பிப் பார்த்தேன்.
பஷன் பிளஸ் மோட்டார் சைக்கிளில் விடுதலைப் போராளி ஒருவன் துவக்குடன் (துப்பாக்கியுடன்) வந்திறங்கினான்!// இப்போ எங்க பிரியம் வதனா? கடைசி ஒத்தவரில பல நிலைப்பாடுகளை சொல்லியிருக்கிரியல் சகோ.

தனிமரம் said...
Best Blogger Tips

அழகான காதல் அதையும் தாண்டிய சில தனிப்பட்ட உள்ளக்குமுறல் வெளிப்படுகிறது.அழகான பெயர் சந்திரவதனா!

தனிமரம் said...
Best Blogger Tips

மன்னிக்கவும் நண்பா கதையில் வரும் பெயர் பிரியவதனா நான் எழுதும் போது தவறுதலாக வேறு பெயரை சேர்த்துவிட்டேன் .மன்னிக்கவும் பாஸ் !

தனிமரம் said...
Best Blogger Tips

அன்புள்ள சந்திரனை ஒத்த முகம் என்றும் பொருள் கொள்ள முடியும் பிரிய வதனா என்ற பெயருக்கு! 

ந.குணபாலன் said...
Best Blogger Tips

இளமை துள்ளும் எழுத்துக்கள்.

ஒரு சிறு திருத்தம்

நாம்பன் - காளை

நாகு - பசு

நிரூபன் said...
Best Blogger Tips

@நடராசா குணபாலன்
இளமை துள்ளும் எழுத்துக்கள்.

ஒரு சிறு திருத்தம்

நாம்பன் - காளை

நாகு - பசு//

மிக்க நன்றி அண்ணே.
மாத்திட்டேன்.

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

வாவ்... அசத்தல் கவிதை சிறுகதை .. சூப்பரா இருக்கு பாஸ்..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails