Sunday, May 15, 2011

கல்லூரிப் பொண்ணுக்கு ஹா(கா)ர்ட் கொடுக்கலாமா?

வணக்கம் அன்பு உறவுகளே!
பள்ளிக் கால நினைவுகள் எப்போதுமே இனிமையானவை. அதுவும் பொடியங்களும், பொட்டையளும் சேர்ந்து படிக்கிற பள்ளிக் கூடத்தில் படித்த நண்பர்களின் நினைவுகள் அற்புதமானவையாக இருக்கும். ஆண்கள் பாடசாலையில் படித்த மாணவர்களின் நினைவுகளோ- அந்தோ பரிதாபம். காரணம் அவை மாலையில் இடம் பெறும் தனியார் ரியூசன் கொட்டகைகளில் இருந்து பெறப்பட்டவையாகத் தான் இருக்கும். ஆனாலும் கொட்டில் கால நினைவுகளில் தான் அதிக சுகமும், சுவாரசியமும் இருக்குமாம்!


தீபாவளிப் பண்டிகை பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். அந்தத் தீபாவளிப் பண்டிகையினை ஒட்டி இடம் பெறும் தீபாவளி வாழ்த்து மடல் அல்லது தீபாவளிக் கார்ட் பரிமாறல்கள் பற்றிய ஸ்பெசல் தான் இப் பதிவு. நம்ம ஊரில் இந்த நவீன தொழில் நுட்பத் தொலைத் தொடர்பு சாதனங்கள்(அலை பேசி, கம்பியூட்டர்.....) வர முன்னர் நாமெல்லாம் கடிதங்களைத் தான் நம்பியிருந்தோம். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு வரை கடிதங்களோடும், வாழ்த்து மடல்களைத் தபாலில் அனுப்புவதோடும் தான் எங்களின் பருவங்கள் நகர்ந்தன.

இரண்டாயிரத்தி இரண்டாம் ஆண்டிற்குப் பின்னர் தான் அலை பேசிப் பாவனை அதிகமாகியதும், வேண்டிய நேரம்- விரும்பிய நபருடன் அலை பேசலாம் எனும் நிலமை இலங்கையின் வட கிழக்கைச் சார்ந்து வாழும் தமிழ் உள்ளங்களுக்கு ஏற்பட்டது, ஆனாலும் வன்னிப் பகுதி மக்களைப் பொறுத்தவரை இது ஓர் எட்டாக் கனியாகவே இருந்தது.

தீபாவளி வருவதற்கு முன்பதாக புரட்டாதி மாதத்து இறுதிக் காலப் பகுதியளவில் எங்கள் ஊர்களில் தீபாவளி வாழ்த்து மடல்கள் விற்பனைக்கு வந்து விடும். ஒரு ரூபா தொடக்கம், நூறு, இரு நூறு ரூபாக்கள் வரை இந்த வாழ்த்து மடல்கள் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். வட இலங்கையின் கைதடிப் பகுதியைச் சேர்ந்த அஷ்டலக்ஸ்சுமி பதிப்பகத்தினரின் வாழ்த்து அட்டைகள் தான் கடைகளில் அதிகமாக விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அத்தி பூத்தாற் போல எங்காவது ஓரிரு இடங்களில் தமிழக இறக்குமதிக் கார்ட்ஸ்(Cards) கிடைக்கும்.

இந்தத் தீபாவளிக் கார்ட்டுகளில் சுவாமிப் படங்களும், நடிகர்- நடிகைகளின் படங்களும், சீனரிப் படங்கள் என எம்மால் செல்லமாக அழைக்கப்படும் இயற்கைக் காட்சிப் படங்களும் அடங்கும். போராட்டம் இடம் பெற்ற பகுதிகளில் அல்லது அக் காலங்களில் அவர்களின் கட்டுப் பாட்டில் இருந்த இடங்களில் நடிகர் நடிகைகளின் படங்களினை உள்ளடக்கிய வாழ்த்து அட்டைகளை விற்பதற்குத் தடை செய்திருந்தார்கள்.

இவ் வாழ்த்து அட்டைகளின் முன் பக்கத்தில் படங்களும், பின் பக்கத்தில் வெள்ளைக் கலரிலான பக் ரவுண்டில்(Back Round) அஞ்சல் அட்டையில் காணப்படுவது போல(It's Looks like smiler to  postal Card) நான்கு கோடுகளோடு, முத்திரை ஒட்டுவதற்கான ஒரு சிறிய சதுரப் பெட்டியும் இருக்கும்.

சினிமாப் பட கார்ட்ஸில் விஜய் ஷாலினி கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கும் காதலுக்கு மரியாதைக் கார்ட்ஸ் ரொம்ப பிரபலானது. மற்றையது கார்த்திக் ரம்பா பட கார்ட். நம்ம ஊரில் பாலர் வகுப்பு பிள்ளைகள் முதல், திருமணமான பெரியவர்கள் வரைக்கும் இந்தத் தீபாவளி வாழ்த்து அட்டைகளைப் பரிமாறிக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். நம்ம பாடசாலை நண்பர்களுக்கு, யாருமே தபால் மூலம் வாழ்த்து அட்டைகள் அனுப்ப மாட்டார்கள்.{ரொம்ப நப்பியாக/ கஞ்சனாக இருப்பாங்களே என்று யோசிக்கிறீங்க தானே;-))}

வாழ்த்து அட்டைகளை எழுதிய பின்னர், தாம் அனுப்பப் போகும் நண்பர் இல்லாத தருணம் பார்த்து, அவரின் புத்தகப் பையினைத் திறந்து(School Bag) புத்தகத்தினுள் அல்லது கொப்பியினுள் இந்த வாழ்த்து அட்டைகளை வைத்து- ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்து விடுவார்கள்.

இந்த வாழ்த்து அட்டைகளின் பின் புறத்தில் பல தில்லு முல்லு வேலைகள், குறும்பு விளையாட்டுக்கள் விடுவதில் நம்ம பொடியங்கள் ரொம்ப கெட்டிக்காரராக- திறமைசாலிகளாக இருப்பார்கள். முத்திரை ஒட்டுவதற்காக இருக்கும் பெட்டியில் அழகாக

முத்திரை வீட்டில் நித்திரை’ 
அப்படின்னு ஒரு வசனத்தை எழுதிப் போடுவாங்க.


ந்த வாழ்த்து அட்டைகளில் உள்ள ஸ்பெசல் மேட்டர் என்ன என்றால், 
நம்ம மனசிற்குப் பிடித்த ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் நண்பர்களுக்கு- சிம்பாலிக்கா, ஒரு குறியீட்டு வடிவில் காதலைச் சொல்ல நம்ம ஆட்கள் அந்தக் காலத்தில் யூஸ் பண்ணுவதும் இந்த வாழ்த்து அட்டைகளினைத் தான். 

தீபாவளி வாழ்த்து அட்டைகளை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கொடுக்கலாம் எனும் கோட்பாடு இருக்கின்ற காரணத்தால்,(பின்னாடி ப்ராப்பள் ஆகாது எனும் நம்பிக்கை) இரண்டு ரூபா காசு கொடுத்து ஒரு கார்ட்டை வாங்கி, அதன் பின்புறத்தில் அன்புள்ள நண்பி...................(இதில் மனசிற்குப் பிடித்த ஆளின் பெயர் வரும்) என எழுதி விட்டு, அட்டையின் மேற் புற, கீழ்ப் புறங்களில்

‘ஆழக் கடல் வற்றினாலும்- என் அன்புக் கடல் வற்றாது’ 
என நச்சென்று ஒரு வசனத்தை எழுதிப் போட்டுக் கொடுத்திட வேண்டியது தான். நம்ம ஆளுக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சின்னா, அவா இரண்டு மூன்று நாளைக்கப்புறம் ஒரு வாழ்த்து அட்டையில்

‘நேசம் வைக்க முன்பே
என் நெஞ்சைத் தொட்டு விட்டாய் அன்பே!

என எழுதிப் பதில் வாழ்த்து நம்மளுக்குத் தந்தா என்றால்- ஆளு நம்மளை லவ்வுறா என்று அர்த்தம்.

அதனை விடச் சில பொண்ணுங்க நம்மளைப் புரிஞ்சு கொண்டு, வெளிப்படையாக, நாம கேட்பது இது தான் என்று தெரிந்தும், தெரியாதது மாதிரி நாசூக்காகப் இப்படிப் பதில் சொல்லுவாங்க.

ன் வாழ்க்கை உன் கையில்
வாழ்ந்து பார் புன்னகையில்’


இன்னும் சிலர், இவ்வாறு எழுதுவார்கள்.

‘நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே!

இதனை விட; வாயாடிப் பொண்ணுங்க யாராச்சும் நம்ம கிளாசில் இருந்தால், அவங்களைச் சீண்டிப் பார்ப்பதற்கென்றே ஒரு சிலர் குறும்பான வசனங்களை எழுதிக் கொடுப்பாங்க.

டைசிப் பக்கத்தில் எழுதுகிறேன்
கட்டையில் போகும் வரை மறவாதே!

இதுவே அந்த வாயாடிப் பொண்ணுக்கு தங்கச்சி இருக்கனும், மேட்டர் இந்த ரேஞ்சிலை போகும்.

‘கடிதம் தந்தேன்
படித்துப் பார்
பிடிக்கவில்லை எனில் கிழிக்காதே
உன் அன்புத் தங்கையிடமாவது கொடு!

சக நண்பர்களுக்கு அனுப்பும் கார்ட்டில் பின் வருமாறு எழுதுவோம்.

‘கண்டவுடன் காதல் கொள்
பெண்ணிடமோ இளைஞனிடமோ அல்ல
உன் உரிமை மிக்க அன்னையிடம்
உன்னை வாழ வைக்கும் கல்வியிடம்!
***************************************

‘பசித்திரு
தனித்திரு
விழித்திரு
இவை மூன்றுமிருந்தால்
தானக உனைத் தேடி வரும் 
பதவி!!

படிப்பில் ரொம்ப திறமைசாலியாக ஒராள் இருக்கிறான் என்றால்,
’கல்வி எனும் பயிருக்கு கண்ணீர் எனும் மழை வேண்டும்’
என எழுதிக் கொடுப்போம்.

கொஞ்சம் ஓவரா, ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் பொண்ணுக்குப் பின்னாடி போய் லொல்ளு பண்ணுற ஆள் யாராச்சும் மாட்டிக்கிட்டான் என்றால், அவனுக்கு அனுப்பும் கார்ட்டில்,

’சைக்கிளில் போனேன் ஹாய் என்றாள்
மோட்டார் சைக்கிளில் சென்றேன் அன்பே என்றாள்
காரில் போனேன் ஆசை அத்தான் என்றாள்
அத்தனையும் வாடகை என்றேன் 
சீ போடா நாயே என்றாள்;
உனக்கும் இந் நிலை வேண்டுமா
என் அருமை நண்பா என்பேன் நான்!


நாம அனுப்புற ஆள் கொஞ்சம் லவ்வுறதிலை கில்லாடி என்றால்

‘சீறும் பாம்பை நம்பு- சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ 
என்று எழுதி அனுப்புவோம்.


‘என்னவள் இறந்தால்
நான் குடிக்கப் போவதில்லை
தாடி வளர்க்கப் போவதில்லை- ஆனால்
மௌனமாய் தூங்குவேன்
கல்லறையில் அல்ல
அவள் தங்கையின் அன்பு மடியில்
ஆகவே என்னை நீயும்
பின்பற்று நண்பா!
(தங்கை உள்ள பொண்ணைப் பார்த்து சைட் அடி என்பது போல நக்கலாக சொல்லுவோம்)


இது போன்று இப் பொழுது யாரும் நேரத்தை விரயமாக்கி வசனங்களை உட்கார்ந்து யோசித்தெழுவதில்லை. கடைகளில் அதிகமான கார்ட்ஸ் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் வாங்குவதில்லை. காரணம் எல்லோர் கைகளிலும் அலை பேசி இருக்கிறது. பண்டிகைகள் அன்றால், அந்த அன்றே எஸ். எம். எஸ் எனப்படும் குறுந்தகவல் அனுப்பி வாழ்த்துப் பரிமாறுவது பஷனாக (Fashion) மாறி விட்டது. அதெல்லாம் ஒரு காலம்!

டிஸ்கி: நம்ம பாடசாலைகளி தீபாவளிக் கார்ட் என்பதை எல்லோரும் தீவாளிக் கார்ட்...என்று தான் உச்சரிப்பார்கள். ஹி....ஹி....ஹி...

94 Comments:

Mathuran said...
Best Blogger Tips

பாஸ் எப்ப கல்யாணம்?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ஃபிகர் செட் ஆனா பார்ட்டி என வக்கு குடுத்திருக்கீங்க.. மறந்துடாதீங்க

Mathuran said...
Best Blogger Tips

//‘என்னவள் இறந்தால்
நான் குடிக்கப் போவதில்லை
தாடி வளர்க்கப் போவதில்லை- ஆனால்
மௌனமாய் தூங்குவேன்
கல்லறையில் அல்ல
அவள் தங்கையின் அன்பு மடியில்
ஆகவே என்னை நீயும்
பின்பற்று நண்பா!//

க.க.க.போ

Unknown said...
Best Blogger Tips

முன்பெல்லாம் இங்கே பொங்கல் காலங்களில் வாழ்த்து அட்டைகள் மிக பிரபலம்.
கணிணியின் வருகையால் இப்போதெல்லாம் மின்னஞ்சல் வாழ்த்துக்கள் தான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்


பாஸ் எப்ப கல்யாணம்?//

ஏன் சகோ, நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு,
தனி மரம் தோப்பா மாறுவதினையும், புயல், இடி மழை என்று நான் பாடு படுவதையும் பார்க்கனும் என்று ஆசையா.

சிங்கிளா இருக்க விடுங்க பாஸ். வயசிருக்காம் என்று சொல்லுறாங்க. நீங்க போய் வம்பை வலிய இழுத்து வா என்று சொல்லுறீங்களே. இது நியாயமா?
அவ்........

Mathuran said...
Best Blogger Tips

//’சைக்கிளில் போனேன் ஹாய் என்றாள்
மோட்டார் சைக்கிளில் சென்றேன் அன்பே என்றாள்
காரில் போனேன் ஆசை அத்தான் என்றாள்
அத்தனையும் வாடகை என்றேன்
சீ போடா நாயே என்றாள்;//

ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான தத்துவம்

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


ஃபிகர் செட் ஆனா பார்ட்டி என வக்கு குடுத்திருக்கீங்க.. மறந்துடாதீங்க//

வாக்கு குடுத்திருக்கேனா...
பிகர் இன்னுமே செட் ஆகலையே சகோ.
அப்போ வாக்கு நிறை வேற கொஞ்ச காலம் எடுக்கும்.
ஹி...ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

க.க.க.போ//

அப்படியென்றால் என்ன சகோ.
கல்லூரியில் கடைசி வாங்கில் கவனிக்காத போக்கிரி நீயா...

அப்படி என்னைத் திட்டுறீங்களா...
பிச்சுப் புடுவே பிச்சு.

நிரூபன் said...
Best Blogger Tips

@பாரத்... பாரதி...


முன்பெல்லாம் இங்கே பொங்கல் காலங்களில் வாழ்த்து அட்டைகள் மிக பிரபலம்.
கணிணியின் வருகையால் இப்போதெல்லாம் மின்னஞ்சல் வாழ்த்துக்கள் தான்.//

காலம் கலி காலம் ஆகிட்டுதே சகோ.

Unknown said...
Best Blogger Tips

//‘கண்டவுடன் காதல் கொள்
பெண்ணிடமோ இளைஞனிடமோ அல்ல
உன் உரிமை மிக்க அன்னையிடம்
உன்னை வாழ வைக்கும் கல்வியிடம்!//

இந்த வரிகள் வாழ்த்து அட்டைகளுக்கான சரியான வார்த்தைகள் தான். அப்படியே கருத்தும் சொன்ன மாதிரியும் ஆச்சு.

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Unknown said...
Best Blogger Tips

வாழ்த்து அட்டைகள் பற்றி வேறு யாரும் பதிவு எழுதியதாகவே தெரியவில்லை. இந்த பதிவில் நல்லதொரு வித்தியாசம் தெரிகிறது.
வாழ்த்துக்கள் நிரூபன்.

உணவு உலகம் said...
Best Blogger Tips

வாழ்த்து அட்டையைப் பற்றி வகையாத்தான் சொல்லியிருக்கீங்க, சகோ! இதற்கே உங்களுக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பனும்.

குணசேகரன்... said...
Best Blogger Tips

//கண்டவுடன் காதல் கொள்
பெண்ணிடமோ இளைஞனிடமோ அல்ல
உன் உரிமை மிக்க அன்னையிடம்
உன்னை வாழ வைக்கும் கல்வியிடம்-

very very nice...really its a very big post..how long u take to finish this?

http://zenguna.blogspot.com/

கவி அழகன் said...
Best Blogger Tips

முத்திரை வீட்டில் நித்திரை’

அப்படியே அந்த கால நினைவுகளை கண் முன் கொண்டு வருகிறீர் நண்பா

கவி அழகன் said...
Best Blogger Tips

குட்டி குட்டி வசனங்கள் அருமை
பல பஸ் ஏறி
சிலபஸ் முடிச்சு
கம்பஸ் போக
வாழ்த்துகிறேன்
என்பதும்
பிரபலமாய் இருந்திச்சு அந்த காலத்தில
--

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆழ்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

தங்க சங்கிலி அறுந்தாலும் என் அன்புச் சங்கிலி அறாது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

செல்லும் வழி எங்கெங்கிலும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் துன்பம் வரலாம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கான மயிலாட கடன் வந்து மேலாட வாங்கியவன் கொண்டாட நான் இங்கு திண்டாட தயவு செய்து கடன் கேளாதீர்! ..............

ஸாரி நிரு ப்லொவ் வில வந்திரிச்சு..........!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பல பஸ் ஏறி சிலபஸ் முடித்து கம்பஸ் போக வாழ்த்துகிறேன்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வாழ்த்து அட்டைக்கே வாழ்த்து அட்டையா...

Unknown said...
Best Blogger Tips

ரைட்டு வாழ்த்து அட்டை!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வாழ்த்து அட்டை அனுப்பியதெல்லாம் ஒரு காலம். மீண்டும் ஞாபகபடுத்திடிங்க சகோ....

Anonymous said...
Best Blogger Tips

வந்துட்டேன்

Anonymous said...
Best Blogger Tips

அருமையான வரிகளை பகிர்ந்தீர் சகோ

Anonymous said...
Best Blogger Tips

பெண்ணின் மனதை தொட்டு

Anonymous said...
Best Blogger Tips

பெண்ணை நினைச்சாலே வரிகள் வந்து விழுமோ

Anonymous said...
Best Blogger Tips

நம் ஆட்கள் இதில் கில்லாடிகள்

Anonymous said...
Best Blogger Tips

நல்ல டைம் தான் இனி வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஏன் சகோ, நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு,
தனி மரம் தோப்பா மாறுவதினையும், புயல், இடி மழை என்று நான் பாடு படுவதையும் பார்க்கனும் என்று ஆசையா.

சிங்கிளா இருக்க விடுங்க பாஸ். வயசிருக்காம் என்று சொல்லுறாங்க. நீங்க போய் வம்பை வலிய இழுத்து வா என்று சொல்லுறீங்களே. இது நியாயமா?
அவ்........//// கல்யாணம் என்றால் என்ன இப்படி பயம் .. யாம் பெற்ற இன்பம்??????? பெருக இவ்வையகம்..

Muruganandan M.K. said...
Best Blogger Tips

சுவையான முடித்திருக்கிறீர்கள். அருமை.

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

பள்ளி கால நினைவுகளை
கண் முன்னே நிறுத்தி இருக்கும்
உங்களின் பதிவு பிரமாதம் சகோ
வாழ்த்துக்கள்

athira said...
Best Blogger Tips

மனதின் அடியிலே போன வாசகங்களை அப்படியே மேலே தூக்கிவிட்டதுபோல ஒரு பதிவு.... அஸ்டலஸ்மி... பதிப்பகம்... நினைவுபடுத்திவிட்டீங்க...

//பல பஸ் ஏறி
சிலபஸ் முடிச்சு
கம்பஸ் போக
வாழ்த்துகிறேன்
என்பதும்
பிரபலமாய் இருந்திச்சு அந்த காலத்தில
/// இது மிகப் பிரபல்யம் எங்கள் மத்தியில்.

அருமையான பதிவு. நீங்க விட்டதை எல்லாம் பொறுக்கிப் போட்டுவிட்டினம் பின்னூட்டத்தில்:)))).

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

அருமையான வசனங்கள் ரசிக்கும்படி இருந்தது

செங்கோவி said...
Best Blogger Tips

//கடைசிப் பக்கத்தில் எழுதுகிறேன்
கட்டையில் போகும் வரை மறவாதே!// ஆஹா..ஆழ்ந்த கருத்து..நிஜமாவே கட்டைல போற வரைக்கும் இதை அந்தப் பொண்ணு மறக்க முடியுமா?

Unknown said...
Best Blogger Tips

அட பயலே....அப்பிடியே எழுதுறியே மக்கா.,,

Unknown said...
Best Blogger Tips

உண்மையை சொல்வதானால்
முத்திரை வீட்டில் நித்திரை,போஸ்தகங்களுக்குள் வைப்பது என்று..
அத்தனையும் கண்கூடு!!

Unknown said...
Best Blogger Tips

பாசுக்கு பீலிங்க்சாமே இப்ப கொஞ்ச நாட்களாய்??என்ன விசேசம்??

Anonymous said...
Best Blogger Tips

///வாழ்த்து அட்டைகளை எழுதிய பின்னர், தாம் அனுப்பப் போகும் நண்பர் இல்லாத தருணம் பார்த்து, அவரின் புத்தகப் பையினைத் திறந்து(School Bag) புத்தகத்தினுள் அல்லது கொப்பியினுள் இந்த வாழ்த்து அட்டைகளை வைத்து- ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்து விடுவார்கள்./// வணக்கம் தலைவா.. நீண்டநாளாக மறந்திருந்த அந்த நாட்களை கண் முன்னே கொண்டு வந்திட்டீர்கள்..

Anonymous said...
Best Blogger Tips

///‘ஆழக் கடல் வற்றினாலும்- என் அன்புக் கடல் வற்றாது’ // வாழ்த்து மட்டையில் எழுதும் வார்த்தைகளில் இது தான் மிகவும் பிரபலமானது என்று நினைக்கிறேன்..)

Anonymous said...
Best Blogger Tips

////கடைசிப் பக்கத்தில் எழுதுகிறேன்
கட்டையில் போகும் வரை மறவாதே!/// அதுக்கு பொண்ணு சொல்லும் "போடா கட்டையில போவானே" என்று .....ஹஹாஹா

Anonymous said...
Best Blogger Tips

////’சைக்கிளில் போனேன் ஹாய் என்றாள்
மோட்டார் சைக்கிளில் சென்றேன் அன்பே என்றாள்
காரில் போனேன் ஆசை அத்தான் என்றாள்
அத்தனையும் வாடகை என்றேன்
சீ போடா நாயே என்றாள்;
உனக்கும் இந் நிலை வேண்டுமா
என் அருமை நண்பா என்பேன் நான்!/// இது வாலிப வயசுக்கே உரிய குசும்பு..)

Anonymous said...
Best Blogger Tips

///‘சீறும் பாம்பை நம்பு- சிரிக்கும் பெண்ணை நம்பாதே’/// இதுகும் பிரபலமான வார்த்தை. )

Anonymous said...
Best Blogger Tips

நம்ம பாடசாலைகளி தீபாவளிக் கார்ட் என்பதை எல்லோரும் தீவாளிக் கார்ட்...என்று தான் உச்சரிப்பார்கள். ஹி....ஹி....ஹி... /// ஆமா ஆமா நான் கூட அப்படி உச்சரிச்ச்சதாக தான் நினைவு ..)

பாஸ்! கடந்த காலத்தை கண்முன்னே கொண்டு வந்துட்டீர்கள் நல்ல பதிவு நன்றிகள்..

ஹேமா said...
Best Blogger Tips

என் அம்மா நிறைய சிவாஜி,
எம்.ஜி.ஆர் வாழ்த்து அட்டைகள் சேர்த்து வைத்திருந்தார் !

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//அத்தி பூத்தாற் போல எங்காவது ஓரிரு இடங்களில் தமிழக இறக்குமதிக் கார்ட்ஸ்(Cards) கிடைக்கும்.//

தமிழக கார்ட்ஸ் இறக்குமதி தகுதி பெற்றவையா?சிவகாசி கார்டுகளை இலவச தேர்தல் திட்டத்துல வச்சிருந்திருப்பாங்க இப்போதைய தகவல் பரிமாற்ற வசதிகள் வந்திருக்கா விட்டால்:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நாங்கெல்லாம் பஞ்ச் டயலாக்குக்கு மாறிட்டதனால தீபாவளிக் கார்ட் அனுபவங்கள் இல்லாமல் போயிட்டோம்.அப்படியும் ஒன்னு ரெண்டு பேர் கார்டு காதலர்கள் இந்தப் பக்கம் எங்கேயாவது சுத்துறாங்களோன்னு தெரியல.

ஈழ கார்டு வசனங்களே இலக்கிய ரசனையோடு இருக்கின்றன:)

பழமைபேசி said...
Best Blogger Tips

நன்று

shanmugavel said...
Best Blogger Tips

சரியான அலசல் சகோ

Unknown said...
Best Blogger Tips

//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ஃபிகர் செட் ஆனா பார்ட்டி என வக்கு குடுத்திருக்கீங்க.. மறந்துடாதீங்க//

இருபத்தைந்தாவதா? ஐம்பதாவதா? :-)

தனிமரம் said...
Best Blogger Tips

இப்படி சிறப்பு நாட்கள் தபால் அட்டையில் எழுதும்  சுகம் இப்போது நவீன சாதனங்களில் இல்லை ..,!!!

Chitra said...
Best Blogger Tips

சனி - ஞாயிறு - வேலைப்பளு காரணமாக பதிவுகள் பக்கம் வர முடிவதில்லை. அதனால் தான், இந்த பதிவை மிஸ் செய்து இருக்கிறேன். சிறு வயதில், நான் பொக்கிஷமாக ரஜினி படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகளை சேர்த்து வைத்தது உண்டு. ஈமெயில் மற்றும் இகார்ட்ஸ் இப்பொழுது வந்து விட்டாலும், அந்த ஸ்பெஷல் வாழ்த்து அட்டைகளை ஒரு குதூகலத்துடன் collect செய்வது, தனி சந்தோஷம் தான். :-)

ரஹீம் கஸ்ஸாலி said...
Best Blogger Tips

present

Unknown said...
Best Blogger Tips

மலரும் நினைவுகள்...

சசிகுமார் said...
Best Blogger Tips

இந்த அனுபவம் எனக்கும் உள்ளது. பனிரெண்டாம் வகுப்பு படித்த பொழுது காதலர் தினத்திற்கு ஒரு பெண்ணுக்கு கார்ட் வாங்க காசு (20 ரூபாய்) இல்லாம நண்பனிடம் கடன் வாங்கி கார்ட் வாங்கி கொடுத்தேன். மிக அழகான அந்த தருணங்கள் மீண்டும் வராது. ஞாபக படுத்தியதற்கு மிக்க நன்றி நிரு.

vanathy said...
Best Blogger Tips

நல்ல அனுபவம். எனக்கு சாமி படங்கள் மீது தான் மிகவும் விருப்பம். நடிகர், நடிகைகள் பிடிப்பதில்லை. இப்ப சாமி மீது நம்பிக்கை போய், கார்ட் அனுப்புவதிலும் நம்பிக்கை போய் விட்டது.

Angel said...
Best Blogger Tips

//உன் வாழ்க்கை உன் கையில்
வாழ்ந்து பார் புன்னகையில்’//
நல்லா விவரம்மாதேன் யோசிக்கறாங்க .

//சீறும் பாம்பை நம்பு- சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ //

i've seen this in chennai autos .
very nice .enjoyed reading this post .

@rajeevan
//தங்க சங்கிலி அறுந்தாலும் என் அன்புச் சங்கிலி அறாது//
எப்படி ரஜீவ் எப்படி இப்படி எல்லாம் தோணுது ?

நிரூபன் said...
Best Blogger Tips

@பாரத்... பாரதி...


இந்த வரிகள் வாழ்த்து அட்டைகளுக்கான சரியான வார்த்தைகள் தான். அப்படியே கருத்தும் சொன்ன மாதிரியும் ஆச்சு.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி


nice..//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பாரத்... பாரதி...

வாழ்த்து அட்டைகள் பற்றி வேறு யாரும் பதிவு எழுதியதாகவே தெரியவில்லை. இந்த பதிவில் நல்லதொரு வித்தியாசம் தெரிகிறது.
வாழ்த்துக்கள் நிரூபன்.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


வாழ்த்து அட்டையைப் பற்றி வகையாத்தான் சொல்லியிருக்கீங்க, சகோ! இதற்கே உங்களுக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பனும்.//

அவ்.............

நிரூபன் said...
Best Blogger Tips

@குணசேகரன்...

very very nice...really its a very big post..how long u take to finish this?

http://zenguna.blogspot.com///

நிறைய நேரம் எல்லாம் எடுக்கலை சகோ, ஒரு 40 நிமிசம்,
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்

முத்திரை வீட்டில் நித்திரை’

அப்படியே அந்த கால நினைவுகளை கண் முன் கொண்டு வருகிறீர் நண்பா//

அப்போ, நீங்களும் ஒரு பழைய கட்டை தான்;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்

குட்டி குட்டி வசனங்கள் அருமை
பல பஸ் ஏறி
சிலபஸ் முடிச்சு
கம்பஸ் போக
வாழ்த்துகிறேன்
என்பதும்
பிரபலமாய் இருந்திச்சு அந்த காலத்தில //

ஆமா சகோ, வயசு போகிறது என்பதற்கு அடையாளமாய் அருமையான இவ் வசனத்தினை மறந்து விட்டேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஆழ்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாது//

நிஜமாவா சகோ,

இவ் வசனத்தினைப் பதிவில் சேர்த்திருக்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


தங்க சங்கிலி அறுந்தாலும் என் அன்புச் சங்கிலி அறாது//

போட்டிருக்கிறது கல்யாணி கவரிங் பித்தளை, அதிலை தங்கச்சங்கிலி என்று ஒரு உல்டா வேறு.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


பல பஸ் ஏறி சிலபஸ் முடித்து கம்பஸ் போக வாழ்த்துகிறேன்!//

ஏன் இரண்டாம் தடவையும் நம்மளை கம்பஸிலை படிக்க விடுவாங்களா.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

வாழ்த்து அட்டைக்கே வாழ்த்து அட்டையா...//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்


ரைட்டு வாழ்த்து அட்டை!//

நன்றிகள் சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


வாழ்த்து அட்டை அனுப்பியதெல்லாம் ஒரு காலம். மீண்டும் ஞாபகபடுத்திடிங்க சகோ....//

நிஜமாவா பாஸ்...
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்


நல்ல டைம் தான் இனி வாழ்த்துக்கள்//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

ஏன் சகோ, நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு,
தனி மரம் தோப்பா மாறுவதினையும், புயல், இடி மழை என்று நான் பாடு படுவதையும் பார்க்கனும் என்று ஆசையா.

சிங்கிளா இருக்க விடுங்க பாஸ். வயசிருக்காம் என்று சொல்லுறாங்க. நீங்க போய் வம்பை வலிய இழுத்து வா என்று சொல்லுறீங்களே. இது நியாயமா?
அவ்........//// கல்யாணம் என்றால் என்ன இப்படி பயம் .. யாம் பெற்ற இன்பம்??????? பெருக இவ்வையகம்.//

அது தான் பாழ் கிணறு என்று எல்லோரும் சொல்லுறாங்களே. அவ்...
போய் விழுந்து நான் நீந்தி தெளிய வேண்டுமா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr.எம்.கே.முருகானந்தன்


சுவையான முடித்திருக்கிறீர்கள். அருமை.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.RAJAGOPALAN

பள்ளி கால நினைவுகளை
கண் முன்னே நிறுத்தி இருக்கும்
உங்களின் பதிவு பிரமாதம் சகோ
வாழ்த்துக்கள்//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira


அருமையான பதிவு. நீங்க விட்டதை எல்லாம் பொறுக்கிப் போட்டுவிட்டினம் பின்னூட்டத்தில்:)))).//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரபாஷ்கரன்


அருமையான வசனங்கள் ரசிக்கும்படி இருந்தது//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

/கடைசிப் பக்கத்தில் எழுதுகிறேன்
கட்டையில் போகும் வரை மறவாதே!// ஆஹா..ஆழ்ந்த கருத்து..நிஜமாவே கட்டைல போற வரைக்கும் இதை அந்தப் பொண்ணு மறக்க முடியுமா?//

ஆனா, அந்தக் கார்ட்டை கொடுக்கும் போது, வாங்கிப் படிக்கும் பெண்ணின் கையில் மாட்டினா நிலமை எப்படி இருக்கும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா


பாசுக்கு பீலிங்க்சாமே இப்ப கொஞ்ச நாட்களாய்??என்ன விசேசம்??//

இப்பத் தான் ஒரு ஆள் நம்மளை பார்க்கத் தொடங்குறா. அந்த நினைப்பில் பழைய நினைவுகள் எல்லாம் வருது பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

வணக்கம் தலைவா.. நீண்டநாளாக மறந்திருந்த அந்த நாட்களை கண் முன்னே கொண்டு வந்திட்டீர்கள்.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///கடைசிப் பக்கத்தில் எழுதுகிறேன்
கட்டையில் போகும் வரை மறவாதே!/// அதுக்கு பொண்ணு சொல்லும் "போடா கட்டையில போவானே" என்று .....ஹஹாஹா//

மக்களே, அனுபவசாலி சொல்லுறாரு. எல்லோரும் கேட்டுக்குங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

என் அம்மா நிறைய சிவாஜி,
எம்.ஜி.ஆர் வாழ்த்து அட்டைகள் சேர்த்து வைத்திருந்தார் !//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


//அத்தி பூத்தாற் போல எங்காவது ஓரிரு இடங்களில் தமிழக இறக்குமதிக் கார்ட்ஸ்(Cards) கிடைக்கும்.//

தமிழக கார்ட்ஸ் இறக்குமதி தகுதி பெற்றவையா?சிவகாசி கார்டுகளை இலவச தேர்தல் திட்டத்துல வச்சிருந்திருப்பாங்க இப்போதைய தகவல் பரிமாற்ற வசதிகள் வந்திருக்கா விட்டால்:)//

ஆமா சகோ, தமிழக கார்ட்ஸ் நம்ம ஊரில் ரொம்ப பிரபல்யம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பழமைபேசி


நன்று//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

சரியான அலசல் சகோ//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
ஃபிகர் செட் ஆனா பார்ட்டி என வக்கு குடுத்திருக்கீங்க.. மறந்துடாதீங்க//

இருபத்தைந்தாவதா? ஐம்பதாவதா? :-)//

எடுங்கய்யா அந்த அருவாளை.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


இப்படி சிறப்பு நாட்கள் தபால் அட்டையில் எழுதும் சுகம் இப்போது நவீன சாதனங்களில் இல்லை ..,!!!//

எல்லாம் ஒரு காலம் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Chitra

சனி - ஞாயிறு - வேலைப்பளு காரணமாக பதிவுகள் பக்கம் வர முடிவதில்லை. அதனால் தான், இந்த பதிவை மிஸ் செய்து இருக்கிறேன். சிறு வயதில், நான் பொக்கிஷமாக ரஜினி படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகளை சேர்த்து வைத்தது உண்டு. ஈமெயில் மற்றும் இகார்ட்ஸ் இப்பொழுது வந்து விட்டாலும், அந்த ஸ்பெஷல் வாழ்த்து அட்டைகளை ஒரு குதூகலத்துடன் collect செய்வது, தனி சந்தோஷம் தான். :-)//

ஆஹா. நீங்களும் நம்ம கட்சி தான். சேம் சேம் பப்பி சேம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

இந்த அனுபவம் எனக்கும் உள்ளது. பனிரெண்டாம் வகுப்பு படித்த பொழுது காதலர் தினத்திற்கு ஒரு பெண்ணுக்கு கார்ட் வாங்க காசு (20 ரூபாய்) இல்லாம நண்பனிடம் கடன் வாங்கி கார்ட் வாங்கி கொடுத்தேன். மிக அழகான அந்த தருணங்கள் மீண்டும் வராது. ஞாபக படுத்தியதற்கு மிக்க நன்றி நிரு.//

அவ்...........
உங்களுக்குள்ளும் இப்படி ஒரு நிகழ்வா. நம்ப முடியலையே!

நிரூபன் said...
Best Blogger Tips

@vanathy


நல்ல அனுபவம். எனக்கு சாமி படங்கள் மீது தான் மிகவும் விருப்பம். நடிகர், நடிகைகள் பிடிப்பதில்லை. இப்ப சாமி மீது நம்பிக்கை போய், கார்ட் அனுப்புவதிலும் நம்பிக்கை போய் விட்டது.//

நானும் ஒரு காலத்தில் சாமிப் படங்கள் நிறையச் சேர்த்திருக்கிறேன். இப்போது பெரியவர்களாகி விட்டோமே, அதான் கடவுள் நம்பிக்கை போய் விட்டது என்று நினைக்கிறேன்.

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிநேகிதி


மலரும் நினைவுகள்...//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

/உன் வாழ்க்கை உன் கையில்
வாழ்ந்து பார் புன்னகையில்’//
நல்லா விவரம்மாதேன் யோசிக்கறாங்க .

//சீறும் பாம்பை நம்பு- சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ //

i've seen this in chennai autos .
very nice .enjoyed reading this post .//

ஆனால் நம்ம ஊர் தீபாவளிக் கார்ட்டில் இது ரொம்ப பேமஸான வசனம் சகோ.

//@rajeevan
//தங்க சங்கிலி அறுந்தாலும் என் அன்புச் சங்கிலி அறாது//
எப்படி ரஜீவ் எப்படி இப்படி எல்லாம் தோணுது ?//

ஆள் போட்டிருக்கிறதே பித்தளைச் செயினு. கல்யாணி கவரிங்கிலை வாங்கினது. ஆனாலும் ஒரு ப்ளோவிலை சொல்லுறாரு என்று நினைக்கிறேன்.

ஆகுலன் said...
Best Blogger Tips

உதில் இருக்கும் சந்தோஷம் இப்ப கிடைக்காது........

Unknown said...
Best Blogger Tips

அருமையான பதிவு பள்ளிகால நினைவுகளை மீட்டுள்ளீர்கள். என்ன இருந்தாலும் கொட்டில் போல வருமா? அந்த முறையில் வாழ்த்து பரிமாறினது எல்லாம் ஒரு காலம். பெரும்பாலானவை எழுதியவையே இதிலையும் ஒரு குறும்பு வைக்கிற காட்டை மாறி எடுத்து வைச்சு அதில நடக்கிறதை பாக்கிறதும் ஒரு இனிமைதான்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails