Wednesday, April 20, 2011

குழந்தை தாய்ப் பாலில் அடங்குமா அல்லது தகரப் பாலில் அடங்குமா?

கலவன் பள்ளிக் கூடமும், காதல் செய்யும் ஆசிரியர்களும்- பாகம் 02

டீச்சர் டிங்குசாவும் மாணவர்களும்!

வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்லிக் கொண்டு மூன்றாம் வகுப்பு வகுப்பறையினுள் நுழைந்தா டீச்சர் டிங்குசா. இன்றைக்கு நாங்கள் கூட்டல் கழித்தல் பற்றிப் படிப்போம் சரியா என்று கேட்டு விட்டு, பிள்ளைகளே
5+3=8(வலக் கையிலை ஐந்து விரலையும், இடக் கையிலை மூன்று விரலையும் எடுத்துக் கூட்டிப் பாருங்கோ.. விடை சரியாக வரும்..)

4+2= இதுக்கும் அதே மாதிரித் தான் கூட்ட வேண்டும். இரண்டு கை விரல்களையும் வைச்சுக் கூட்டிப் பாருங்கோ. விடை ’ஏழு’  எனச் சொல்லி விட்டு, இப்படித் தான் கூட்டல் கழித்தல் படிக்க வேண்டும் என ஒரு அட்வைஸ் வேறு சொன்னா நம்ம டீச்சர் டிங்குசா.

பிள்ளைகளே! கூட்டல் கணக்கு எப்படிச் செய்வதென்று எல்லோருக்கும் தெரியும் தானே என்ற வாறு, வகுப்பறையினுள் இருந்த முப்பது மாணவர்களுள் ஒருவனான ‘டிங்குமாரை’ எழுப்புகிறா.
''A" கிளாசிலை 25 பேர்
’’B''கிளாசிலை 28 பேர். அப்ப சொல்லுங்கோ பார்ப்பம். A கிளாசையும், B கிளாசையும் சேர்த்துக் கூட்டினா என்ன வரும் என்று?
‘டீச்சர் குப்பை வரும்’ என்று விட்டு அமர்ந்து கொள்கிறான் டிங்குமார்..

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை டிங்குசா தன் பாட நேரம் முடிவடைகிறது என்பதை உணர்ந்தவளாய் வகுப்பறையினை விட்டு வெளியேற முடிவு செய்கிறா. அந் நேரம் திடீரென வகுப்பறையினுள் நுழைந்த ஹெட் மாஸ்டர், இன்றைக்கு ஆங்கில சேர் அல்போன்ஸ் பள்ளிக் கூடத்திற்கு வரவில்லை, டீச்சர் நீங்கள் தான் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்லுகிறார். 

ஆங்கிலம் என்றாலே வேப்பெண்ணையினைப் போல நாக்கில் வெறுப்பு வந்து விடும் உணர்வு கொண்டவளாய், தான் ஒரு தீவிர தமிழ் பற்றாளர் எனும் கொள்கையுடன் இருந்த நம்ம ஆசிரியையின் முகத்தில் இடி விழுந்தாற் போன்ற ஓர் உணர்வு. ஆனாலும் சவாலாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலத்தைக் கற்பிக்கத் தொடங்கினார்.

பிள்ளைகளே, conjunction words என்பது வசனங்களை அமைக்கும் போது கண்டிப்பாகத் தேவைப்படுகிறது, ஆகவே இப்போ நான் உங்களுக்கு இந்த இணைப்பிடைச் சொற்களை வைத்து ஒரு சில வசனங்களை அமைப்பது எப்படி என்பதைச் சொல்லித் தாறேன் என்று தொடங்கினா பாருங்க நம்ம டீச்சர்... பாயிண்டு பாயிண்ட் எக்பிரஸ்ஸை விடப் பயங்கர வேகம்.
கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா is get angry,
கந்தையா started ceasing the cow,  Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.

என்ன பிள்ளைகளே, புரிஞ்சுதா Conjunction words என்றால் என்ன என்று கேட்டா நம்ம டீச்சர்.
Some body listing your lesson, but Some body want to leave from you'r lesson இதுவும் ஒரு இணைப்பிடைச் சொல் தானே என்று கேட்டான் ஒரு கேள்வியை, நம்ம குழப்படி குசும்பன். நம்ம டீச்சரே வகுப்பறையை விட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க.

**********************************************************************************


அடுத்த கிளாசிற்கு போனா நம்ம டீச்சர், பிள்ளைகளே இன்றைக்கு உங்களுக்கு உள்ள தமிழ் அறிவினைச் செக் பண்ணிப் பார்க்கப் போறேன். முதலாவதாக ‘அந்த கடைசி வாங்கில இருக்கிற கலக்கல் கண்ணியப்பன்’ எழும்பு என்று அழைத்தா. நம்ம டீச்சர்.

‘’முருகன் மரத்தால் விழுந்தான்..இது என்ன காலம்?

டீச்சர் இது கூடத் தெரியாமலா?, இது கஸ்ட காலம் டீச்சர்.
ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். அப்பிடியே உட்காரு என்று இருத்தினா டீச்சர்.

அடுத்ததாக பால்களைப் பற்றிப் படிப்போம் என்று சொல்லிவிட்டு முதலாவது கேள்வியை மாணவி, டாரணியை எழுப்பிக் கேட்டா.

குழந்தை என்ன பாலிலை அடங்கும்?
டீச்சர் இது கூடத் தெரியாமலே....
குழந்தை தகரப் பாலிலையும் அடங்கும் இல்லேன்னா பெட்டிப் பாலிலையும் அடங்கும் டீச்சர்.(Tin milk Or packet Milk powder)

ஓம் உண்மையாகத் தான், , இந்தக் காலக் குழந்தைகள் தாய்ப் பாலை விட தகரப் பாலிலை தானே அடங்கும் என்று தனக்குள் தானே நொந்து கொண்டா நம்ம டீச்சர்...

டிஸ்கி: இப் பதிவில் வருகின்ற நகைச்சுவைகளில் Conjunction Word மட்டும் சொந்தமா யோசித்தது, ஏனைய நகைச்சுவைகள், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த லூஸ் மாஸ்டரின் தனி நடிப்பு கசற்றிலிருந்து உல்டா செய்து, கொஞ்சம் ரீமேக் பண்ணி, மொழி மாற்றங்களோடு எழுதியிருக்கிறேன்.

115 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வடை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வேலைக்கென்று புறப்பட்டு வாசல் வரை சென்று விட்டு மறுபடியும் வந்திருந்து, கமெண்டு போடுறேன் செல்லம்! இண்டைக்கு முதலாளியிடம் செமையா வாங்கிகட்டப் போகிறேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

குழந்தை தாய்ப் பாலில் அடங்குமா அல்லது தகரப் பாலில் அடங்குமா?///////////////

தலைப்பே செம கிக்கா இருக்கு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்லிக் கொண்டு மூன்றாம் வகுப்பு வகுப்பறையினுள் நுழைந்தா டீச்சர் டிங்குசா. இன்றைக்கு நாங்கள் கூட்டல் கழித்தல் பற்றிப் படிப்போம் சரியா என்று கேட்டு விட்டு, பிள்ளைகளே
5+3=8(வலக் கையிலை ஐந்து விரலையும், இடக் கையிலை மூன்று விரலையும் எடுத்துக் கூட்டிப் பாருங்கோ.. விடை சரியாக வரும்..)///////////////////////////////////

டின்குஷா என்று பேருள்ள டீச்சரா? எந்தப்பள்ளிக்கூடத்தில? நான் ஒருக்கா அவவ பார்க்கவேணும்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

''A" கிளாசிலை 25 பேர்
’’B''கிளாசிலை 28 பேர். அப்ப சொல்லுங்கோ பார்ப்பம். A கிளாசையும், B கிளாசையும் சேர்த்துக் கூட்டினா என்ன வரும் என்று?
‘டீச்சர் குப்பை வரும்’ என்று விட்டு அமர்ந்து கொள்கிறான் டிங்குமார்..////////////////////////////////

அடப்பாவி வகுப்ப கூட்டினா குப்பைதானே வரும்!! ஹா..................ஹா.............ஹா..............!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

படத்தில இருக்குற டீச்சர பார்த்தா சிங்கள டீச்சர் மாதிரிகிடக்கு! மச்சி ஒழுங்கா உண்மையச்சொல்லு, படத்தை எங்க சுட்டனி?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு எதோ சாமான் குடுக்கவந்த யுனிசெப்காரி வாழ்க!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா got angry,
கந்தையா started ceasing the cow, Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.//////////////////::

நிரு இந்த வசனத்தை உம்முடைய குரலில, வொயிஸ் கட பண்ணி, ஆடியோ பயில் போட்டிருந்தா செம கிக்காக இருந்திருக்கும்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

என்ன பிள்ளைகளே, புரிஞ்சுதா Conjunction words என்றால் என்ன என்று கேட்டா நம்ம டீச்சர்.
Some body listing your lesson, but Some body want to leave from you'r lesson இதுவும் ஒரு இணைப்பிடைச் சொல் தானே என்று கேட்டான் ஒரு கேள்வியை, நம்ம குழப்படி குசும்பன். நம்ம டீச்சரே வகுப்பறையை விட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க./////////////////////:

ஹா..........ஹா..........ஹா........... இவ்வளவு புத்திசாலித்தனமா பதில் சொன்னது நிருபன் தானே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஓம் உண்மையாகத் தான், , இந்தக் காலக் குழந்தைகள் தாய்ப் பாலை விட தகரப் பாலிலை தானே அடங்கும் என்று தனக்குள் தானே நொந்து கொண்டா நம்ம டீச்சர்.../////////////////////

அடிங் கொய்யாலே! டீச்சர்மாரை இப்படியா குத்துறது?

shanmugavel said...
Best Blogger Tips

super comedy

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

டிஸ்கி: இப் பதிவில் வருகின்ற நகைச்சுவைகளில் Conjunction Word மட்டும் சொந்தமா யோசித்தது, ஏனைய நகைச்சுவைகள், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த லூஸ் மாஸ்டரின் தனி நடிப்பு கசற்றிலிருந்து உல்டா செய்து, கொஞ்சம் ரீமேக் பண்ணி, மொழி மாற்றங்களோடு எழுதியிருக்கிறேன்.////////////////////


தெரியும் மேட்டர் பலசா இருந்தாலும் உல்டாவும், எழுதின விதமும் சூப்பரா இருக்கு!!

ஓகே நிருபன் நான் வேலைக்குப் போகிறேன்! ஸாரி பறக்கிறேன்!! இன்று எந்த நண்பர்களுக்கும் கமென்ட் போடவில்லை! எனக்கும் சேர்த்து போடவும்!! தமிழ்மணத்தில் ஓட்டும் போடவும்!!( பள்ளிக்கூடப் பகிடிகள், இன்னும் நிறைய இருக்கு அப்பப்ப எடுத்துவிடவும் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மச்சி தமிழ்மணத்தில ஒடுப் போட முடியல பிறகு போடுறன்!!

Anonymous said...
Best Blogger Tips

படங்களை எங்க இருந்து புடிக்கறீங்க..

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை டிங்குசா தன் பாட நேரம் முடிவடைகிறது என்பதை உணர்ந்தவளாய் வகுப்பறையினை விட்டு வெளியேற முடிவு செய்கிறா//

நம்ம பசங்க லேசுபட்டவிங்களா என்ன....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//ஆங்கிலம் என்றாலே வேப்பெண்ணையினைப் போல நாக்கில் வெறுப்பு வந்து விடும் உணர்வு கொண்டவளாய்//

அய்யய்யோ காப்பாத்துங்க....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா got angry,
கந்தையா started ceasing the cow, Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.///


யாரு அங்கே கல்லெடுக்க போறது....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//என்ன பிள்ளைகளே, புரிஞ்சுதா Conjunction words என்றால் என்ன என்று கேட்டா நம்ம டீச்சர்.
Some body listing your lesson, but Some body want to leave from you'r lesson இதுவும் ஒரு இணைப்பிடைச் சொல் தானே என்று கேட்டான் ஒரு கேள்வியை, நம்ம குழப்படி குசும்பன். நம்ம டீச்சரே வகுப்பறையை விட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க.///


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//டீச்சர் இது கூடத் தெரியாமலா?, இது கஸ்ட காலம் டீச்சர்.
ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். அப்பிடியே உட்காரு என்று இருத்தினா டீச்சர்.//

டீச்சருக்குதான் கஷ்டகாலம்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//குழந்தை என்ன பாலிலை அடங்கும்?
டீச்சர் இது கூடத் தெரியாமலே....
குழந்தை தகரப் பாலிலையும் அடங்கும் இல்லேன்னா பெட்டிப் பாலிலையும் அடங்கும் டீச்சர்.(Tin milk Or packet Milk powder)//


கொய்யால....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//டிஸ்கி: இப் பதிவில் வருகின்ற நகைச்சுவைகளில் Conjunction Word மட்டும் சொந்தமா யோசித்தது, ஏனைய நகைச்சுவைகள், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த லூஸ் மாஸ்டரின் தனி நடிப்பு கசற்றிலிருந்து உல்டா செய்து, கொஞ்சம் ரீமேக் பண்ணி, மொழி மாற்றங்களோடு எழுதியிருக்கிறேன்.//

சிரிப்பாணி சிரிப்பானியா வருது போங்க....

Unknown said...
Best Blogger Tips

அருவா அருவா

Unknown said...
Best Blogger Tips

ஏனிந்த கணிதமும் ஆங்கிலமும் வைத்தானோ இந்த ஆண்டவன் என்று படிக்கும் போது தோன்றியதுண்டு ஹிஹி!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


வடை!//

உங்க ஊருக்கு வடை அனுப்பலாம் தான், ஆனால் புளிச்சுப் போய் விடுமே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


வடை!//

உங்க ஊருக்கு வடை அனுப்பலாம் தான், ஆனால் புளிச்சுப் போய் விடுமே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வேலைக்கென்று புறப்பட்டு வாசல் வரை சென்று விட்டு மறுபடியும் வந்திருந்து, கமெண்டு போடுறேன் செல்லம்! இண்டைக்கு முதலாளியிடம் செமையா வாங்கிகட்டப் போகிறேன்!!//

அப்போ இன்றைக்கு அடி செமையாகத் தான் இருக்கும் சகோ. நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

குழந்தை தாய்ப் பாலில் அடங்குமா அல்லது தகரப் பாலில் அடங்குமா?///////////////

தலைப்பே செம கிக்கா இருக்கு!!//

மேட்டருக்கை ஆழ ஊடுருவிப் பார்க்கிறது..ஹி..ஹி....

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


டின்குஷா என்று பேருள்ள டீச்சரா? எந்தப்பள்ளிக்கூடத்தில? நான் ஒருக்கா அவவ பார்க்கவேணும்!!//

அவா பெரியவர்களுக்கெல்லாம் வகுப்பு எடுக்க மாட்டா, சிறியவர்களுக்கு மட்டும் தான் வகுப்பெடுப்பா...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


அடப்பாவி வகுப்ப கூட்டினா குப்பைதானே வரும்!! ஹா..................ஹா.............ஹா..............!!!//

நன்றாகத் தான் கணிதம் படித்திருக்கிறீங்க..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

படத்தில இருக்குற டீச்சர பார்த்தா சிங்கள டீச்சர் மாதிரிகிடக்கு! மச்சி ஒழுங்கா உண்மையச்சொல்லு, படத்தை எங்க சுட்டனி?//

எல்லாம் கூகிள் ஆத்தாவின் புண்ணியம் தான் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு எதோ சாமான் குடுக்கவந்த யுனிசெப்காரி வாழ்க!!//

ஹி...ஹி...நல்லாக் கூர்ந்து கவனிக்கிறீங்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா got angry,
கந்தையா started ceasing the cow, Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.//////////////////::

நிரு இந்த வசனத்தை உம்முடைய குரலில, வொயிஸ் கட பண்ணி, ஆடியோ பயில் போட்டிருந்தா செம கிக்காக இருந்திருக்கும்!!//

ஆனால் என் குரலைக் கேட்க எல்லோரும் இருக்க வலைப் பதிவிலை இருக்க வேணுமே.. வலைப் பதிவிற்கு கரடி வந்திடாது என்பதற்கு என்ன நிச்சயம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஹா..........ஹா..........ஹா........... இவ்வளவு புத்திசாலித்தனமா பதில் சொன்னது நிருபன் தானே?//

அது நானில்லை சகோ, எனக்குப் பக்கத்து bench இலை இருந்த நீங்க தான் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஓம் உண்மையாகத் தான், , இந்தக் காலக் குழந்தைகள் தாய்ப் பாலை விட தகரப் பாலிலை தானே அடங்கும் என்று தனக்குள் தானே நொந்து கொண்டா நம்ம டீச்சர்.../////////////////////

அடிங் கொய்யாலே! டீச்சர்மாரை இப்படியா குத்துறது?//


அவ்...........நான் சொன்னது வேறை அர்த்ததிலை..ஹி..ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

super comedy//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

தெரியும் மேட்டர் பலசா இருந்தாலும் உல்டாவும், எழுதின விதமும் சூப்பரா இருக்கு!!

ஓகே நிருபன் நான் வேலைக்குப் போகிறேன்! ஸாரி பறக்கிறேன்!! இன்று எந்த நண்பர்களுக்கும் கமென்ட் போடவில்லை! எனக்கும் சேர்த்து போடவும்!! தமிழ்மணத்தில் ஓட்டும் போடவும்!!( பள்ளிக்கூடப் பகிடிகள், இன்னும் நிறைய இருக்கு அப்பப்ப எடுத்துவிடவும் )//

நன்றிகள் சகோ, நீங்க சொல்லிட்டிங்க எல்லே. செய்திட மாட்டமா என்ன?
பள்ளிக் கூடப் பகிடிகள் இன்னும் வரும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

மச்சி தமிழ்மணத்தில ஒடுப் போட முடியல பிறகு போடுறன்!!//

பரவாயில்லை சகோ, நோ ப்ராப்ளம்ஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !


படங்களை எங்க இருந்து புடிக்கறீங்க..//

எல்லாம் நம்ம கூகிள் ஆத்தாவோடை புண்ணியம் தான்.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


//இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை டிங்குசா தன் பாட நேரம் முடிவடைகிறது என்பதை உணர்ந்தவளாய் வகுப்பறையினை விட்டு வெளியேற முடிவு செய்கிறா//

நம்ம பசங்க லேசுபட்டவிங்களா என்ன....//

ஆஹா...ஆஹா... சிங்கம் கிளம்பிடுச்சா...

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

//ஆங்கிலம் என்றாலே வேப்பெண்ணையினைப் போல நாக்கில் வெறுப்பு வந்து விடும் உணர்வு கொண்டவளாய்//

அய்யய்யோ காப்பாத்துங்க....//

ஏன் நான் என் ப்ளாக்கிலை கடி நாயை விட்டா கடிக்க வுடுறேன்;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


யாரு அங்கே கல்லெடுக்க போறது....//

விடுங்க சகோ, நம்ம சிபியாக இருக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


டீச்சருக்குதான் கஷ்டகாலம்...//

அவ்....அவ்....இது நமக்கு கிளிக் ஆகாமல் போயிட்டுதே..
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


கொய்யால....//

புரிஞ்சுதா சகோ...
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


சிரிப்பாணி சிரிப்பானியா வருது போங்க....//

சிரிக்கிறதுக்கே வெட்கப்பட்டுச் சிரிக்கிற மாதிரி இருக்கு;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்


அருவா அருவா//

இது நம்ம சகோ நாஞ்சில் மனோவைப் பார்த்துச் சொல்ற மாதிரி இருக்கே..

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்

ஏனிந்த கணிதமும் ஆங்கிலமும் வைத்தானோ இந்த ஆண்டவன் என்று படிக்கும் போது தோன்றியதுண்டு ஹிஹி!//

எனக்கு கணக்கு பிடிக்கும் சகோ, ஆங்கிலம் தான் ஆமணக்கு எண்ணெய் மாதிரி..

நீங்களும் நம்ம கட்சி தான்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வேலை பிஸி.. ஹி..ஹி... அப்புறமா படிச்சிட்டு கமென்ட் போடுறேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

நானும் பாடம் படித்துக்கொண்டேன்...

நகைச்சுவைகள் இடத்திற்கு ஏற்றார் போல் பொருந்தியுள்ளது....

சுட்டது என்றாலும் மன்னிக்கப்படுகிறது....

ஆனா ஆசியரிர் மீது ஏன் இந்த கொலைவெறி என்று தான் தெரியவில்லை....

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நிரு...செமையா இங்கிலிபீச்சு பாடம் நடதியிருக்கிங்க...ரீமிக்ஸ் சூப்பர்

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


வேலை பிஸி.. ஹி..ஹி... அப்புறமா படிச்சிட்டு கமென்ட் போடுறேன்//

உங்க வேலை கூட பிஸியாகிட்டுதா...
சரி அப்புறமா வாங்க சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

கவிதை வீதி # சௌந்தர் said...

நானும் பாடம் படித்துக்கொண்டேன்...//

நிசமாவா.. அப்போ டியூசன் பீசு தர மாட்டீங்களா;-))

நகைச்சுவைகள் இடத்திற்கு ஏற்றார் போல் பொருந்தியுள்ளது....//

நன்றிகள் சகோ.
சுட்டது என்றாலும் மன்னிக்கப்படுகிறது....//

ஹி....ஹி...

ஆனா ஆசியரிர் மீது ஏன் இந்த கொலைவெறி என்று தான் தெரியவில்லை....//

நீங்க யாரையும் இங்கே கோர்த்து விடலையே....

எந்த ஆசிரியர் மீது கொலை வெறி..அவ்.....

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


நிரு...செமையா இங்கிலிபீச்சு பாடம் நடதியிருக்கிங்க...ரீமிக்ஸ் சூப்பர்//

நன்றிகள் சகோ.

Priya Sreeram said...
Best Blogger Tips

nice read !

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@Priya Sreeram

nice read !//

Thanks for your comments.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே..//

ஆமா சகோ, தமிழ் மணம் ஏதோ திருவிளையாடல் புரியுது, என்னவென்று தான் புரிய மாட்டேங்குது.

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ....தெரிஞ்ச சிரிப்பா இருந்தாலும் விடியக்காத்தால நல்லாச் சிரிக்க வச்சிட்டியள்.பாருங்கோ எங்கட பெடியள் எவ்வளவு புத்திச்சிசாலியள் எண்டு.சும்மா நக்கலடிக்கிறீயள்.

ஒருவேளை உந்தச் சிங்கள டீச்சரும் வெள்ளைக்காரப் பெட்டயும் தமிழ் பெடியளுக்கு வேணுமெண்டே பிழை பிழையா சொல்லிக் குடுத்திருப்பினம்.நீங்களும் உவையளிட்டையே படிச்சனீங்கள் !

தனிமரம் said...
Best Blogger Tips

பாவம் ஐயா இந்த வாத்தியார் தொழிலில் இருக்கும் டீச்சர்மார் வீட்டில் பெரிசுகள் இம்சை பள்ளியில் குட்டீஸ் சயித்தான்கள் தொல்லை இடையில் வலைக்குசும்பர்கள் கடாய்ப்பு ஆளைவிடுங்க கந்தய்யாவின் மாட்டைப்பிடிப்பம்!

தனிமரம் said...
Best Blogger Tips

அந்தப்பால் பசுப்பாலா?எருமைப்பாலா பெட்டியில் வருவது நிரூ.

கவி அழகன் said...
Best Blogger Tips

யாழ்ப்பாணத்து பகுதிகளை வாசிக்க பம்பலா இருக்கு

கவி அழகன் said...
Best Blogger Tips

உது என்ன கோதாரி பெயரப்ப டின்குசா வல்கேல கேள்விப்படேல

கவி அழகன் said...
Best Blogger Tips

எங்கட பாடசலேலார் வாத்தியாருக்கு பகுடி பண்ணுற
அவருக்கு இங்கிலீஷ் தெரியா
ஒரு பெடியன் குழப்படி செய்திட்டன் உடன கெட் அவுட் எண்டு சொல்லி வெளில அனுப்பிட்டார் , அந்த நேரம் அதிபர் வந்துகொண்டிருந்தார் வெளில பெடியன் நிண்ட பிரச்சன என்டிடு உள்ளுக்கு வர சொல்லி அங்கிலத்தில சொல்லுவம் எண்டு ஜோசிச்சிட்டு சொல்ல தேடின அவருக்கு கெட் இன் எண்டிறது தெயரியாது. உடன வெளில பொய் நெண்டு கொண்டு பெடியன பத்து கெட் அவுட் எண்டு வகுப்பறையை காட்டி சொனாராம்

ரேவா said...
Best Blogger Tips

கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா is get angry,
கந்தையா started ceasing the cow, Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.


ஹி ஹி...எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச இங்கிலிஷும் இந்த படிச்ச மறந்துடும் சகோ...ஹ ஹ...பட் சூப்பர்..

ரேவா said...
Best Blogger Tips

‘’முருகன் மரத்தால் விழுந்தான்..இது என்ன காலம்?

டீச்சர் இது கூடத் தெரியாமலா?, இது கஸ்ட காலம் டீச்சர்.
ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய்.

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ... சகோ நீங்களும் இந்த நிரூபன் மாதிரி தானே...எனக்கு தெரியுமே...எனக்கு தெரியுமே

ரேவா said...
Best Blogger Tips

குழந்தை என்ன பாலிலை அடங்கும்?
டீச்சர் இது கூடத் தெரியாமலே....
குழந்தை தகரப் பாலிலையும் அடங்கும் இல்லேன்னா பெட்டிப் பாலிலையும் அடங்கும் டீச்சர்.(Tin milk Or packet Milk powder)

ஹ ஹ சமத்து பசங்க...

ரேவா said...
Best Blogger Tips

சகோ பதிவு நகைச்சுவையோடு, கடைசியில் எதார்த்தம் கலந்த ஆவின் பாலாய் பொங்கி வழிகிறது..வாழ்த்துக்கள் சகோ...அவ்வவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூ....தெரிஞ்ச சிரிப்பா இருந்தாலும் விடியக்காத்தால நல்லாச் சிரிக்க வச்சிட்டியள்.பாருங்கோ எங்கட பெடியள் எவ்வளவு புத்திச்சிசாலியள் எண்டு.சும்மா நக்கலடிக்கிறீயள்.//

அவ்...அவ்....ஆஹா....ஹா...

ஒருவேளை உந்தச் சிங்கள டீச்சரும் வெள்ளைக்காரப் பெட்டயும் தமிழ் பெடியளுக்கு வேணுமெண்டே பிழை பிழையா சொல்லிக் குடுத்திருப்பினம்.நீங்களும் உவையளிட்டையே படிச்சனீங்கள் !//

நானும் உவையளிட்டைப் படிச்சதால் தான் இப்ப உங்கள் எல்லோரையும் வதைக்கிறன் போல...;-))
அவ்..............

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

பாவம் ஐயா இந்த வாத்தியார் தொழிலில் இருக்கும் டீச்சர்மார் வீட்டில் பெரிசுகள் இம்சை பள்ளியில் குட்டீஸ் சயித்தான்கள் தொல்லை இடையில் வலைக்குசும்பர்கள் கடாய்ப்பு ஆளைவிடுங்க கந்தய்யாவின் மாட்டைப்பிடிப்பம்!//

சகோ, மாட்டைப் பிடிச்சாச்சா, இல்ல இனிமேத் தானா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

அந்தப்பால் பசுப்பாலா?எருமைப்பாலா பெட்டியில் வருவது நிரூ.//

பசுப் பால் தகரத்தில் வருவது.. அதனைப் பதப்படுத்தி எருமைப் பாலாக்கி பெட்டியில் விற்கிறார்கள்;-))
அவ்..........

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


யாழ்ப்பாணத்து பகுதிகளை வாசிக்க பம்பலா இருக்கு//

உண்மையாவே சொல்லுறியள். எங்கடை ஊர்க் கதையளைத் திரும்பத் திரும்ப ரசித்து, சிரிச்சுப் படிக்கலாம் தானே...ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


உது என்ன கோதாரி பெயரப்ப டின்குசா வல்கேல கேள்விப்படேல//

நீங்கள் எங்கை படிச்சனீங்கள்? நான் படிச்ச துணுக்காய் அதக பாடசாலையிலை உந்த டிங்குசா டீச்சர் தான் படிப்பிச்சவா...
பிறகு ட்ரான்ஸ்பர் ஆகி குமுழமுனைக்கு போயிட்டா;-))

சும்மா ஒரு கற்பனைப் பெயர் சகோ..
ஹி..ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்
எங்கட பாடசலேலார் வாத்தியாருக்கு பகுடி பண்ணுற
அவருக்கு இங்கிலீஷ் தெரியா
ஒரு பெடியன் குழப்படி செய்திட்டன் உடன கெட் அவுட் எண்டு சொல்லி வெளில அனுப்பிட்டார் , அந்த நேரம் அதிபர் வந்துகொண்டிருந்தார் வெளில பெடியன் நிண்ட பிரச்சன என்டிடு உள்ளுக்கு வர சொல்லி அங்கிலத்தில சொல்லுவம் எண்டு ஜோசிச்சிட்டு சொல்ல தேடின அவருக்கு கெட் இன் எண்டிறது தெயரியாது. உடன வெளில பொய் நெண்டு கொண்டு பெடியன பத்து கெட் அவுட் எண்டு வகுப்பறையை காட்டி சொனாராம்//

ஆஹா....ஆஹா... இப்பிடியும் இருக்கெல்லே சகோ.. அந்த மாணவன் யாரு? நம்ம ஓட்ட வடையா;-))

ரஹீம் கஸ்ஸாலி said...
Best Blogger Tips

wait

Chitra said...
Best Blogger Tips

:-)))))))

இந்த மாதிரி ஜோக்ஸ், புதுசா இருந்துச்சு.... தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

Anonymous said...
Best Blogger Tips

////ஆங்கிலம் என்றாலே வேப்பெண்ணையினைப் போல நாக்கில் வெறுப்பு வந்து விடும் உணர்வு கொண்டவளாய், தான் ஒரு தீவிர தமிழ் பற்றாளர் எனும் கொள்கையுடன் இருந்த நம்ம ஆசிரியையின் முகத்தில் இடி விழுந்தாற் போன்ற ஓர் உணர்வு. ஆனாலும் சவாலாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலத்தைக் கற்பிக்கத் தொடங்கினார்.//// நம்ம ஆசிரியர்களுக்கு இங்கிலிசு தெரியாது என்று நாசுக்காக சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.ஹிஹிஹிஹி. .......................... உண்மை தான் நம்ம பள்ளிகளில் கூட பல ஆசிரியர்களுக்கு நாமளே இங்கிலீசு படிப்பிக்கலாம்.

Anonymous said...
Best Blogger Tips

///‘’முருகன் மரத்தால் விழுந்தான்..இது என்ன காலம்?

டீச்சர் இது கூடத் தெரியாமலா?, இது கஸ்ட காலம் டீச்சர்.
ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். அப்பிடியே உட்காரு என்று இருத்தினா டீச்சர்.//// ஒரு வேளை மரத்தால் விழுந்த கந்தன் இறந்திருந்தா இறந்தகாலம் என்று சொல்லிருப்பாரோ அந்த மாணவன்.)))

Ram said...
Best Blogger Tips

//வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்லிக் கொண்டு மூன்றாம் வகுப்பு வகுப்பறையினுள் நுழைந்தா டீச்சர் டிங்குசா. //

டிங்குசாவா.? எங்கயா இந்த மாதிரி பேரெல்லாம் புடிக்கிறே.!!?

Ram said...
Best Blogger Tips

//விடை ’ஏழு’ எனச் சொல்லி விட்டு,//

ஹி ஹி.. அவரு கையில ஏதோ கோளாறு போல

Ram said...
Best Blogger Tips

//‘டீச்சர் குப்பை வரும்’ என்று விட்டு அமர்ந்து கொள்கிறான் டிங்குமார்..//

போங்க பாஸ்.. ரொம்ப பழைய மொக்கை ஜோக்..

Ram said...
Best Blogger Tips

//டீச்சர் நீங்கள் தான் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்லுகிறார். //

தமிழே பெப்பரப்பே..!! இதுல ஆங்கிலம் வேறயா.?

Ram said...
Best Blogger Tips

//கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா is get angry,
கந்தையா started ceasing the cow, Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.//

எவ்வளவு அருமையான பாடம்.. ஹி ஹி.. இப்படியொரு ஆசிரியை எனக்கு இல்லாமல் போனாரே.!!

Ram said...
Best Blogger Tips

//இந்தக் காலக் குழந்தைகள் தாய்ப் பாலை விட தகரப் பாலிலை தானே அடங்கும்//

அட செம கருத்து போங்க நிரூ.. கலக்கிட்டீங்க..

Ram said...
Best Blogger Tips

//கொஞ்சம் ரீமேக் பண்ணி, மொழி மாற்றங்களோடு எழுதியிருக்கிறேன்.//

அந்த லூஸ் மாஸ்டர் யாரு.. அவருடைய நகைப்புகள் எல்லாம் இங்கே பிரபலம்.. எல்லாமே கேள்விபட்டிருக்கேன்.. அவரை பத்தி ஒரு பதிவு போடலாமே.!!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நான் ரொம்ப லேட்டு.

www.eraaedwin.com said...
Best Blogger Tips

அருமை அருமை அருமை நிரூபன்

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
செங்கோவி said...
Best Blogger Tips

கேள்விப்பட்ட ஜோக்குகள் தான்..ஆனாலும் உங்க நடையில் சொன்னது நல்லா இருக்கு!

இமா க்றிஸ் said...
Best Blogger Tips

நேற்றே எட்டிப் பார்த்தேன். கருத்துப் பெட்டி வழிவிடவில்லை.

ஆசியர்களைக் கலாய்க்கிற இடுகை என்பதால்.. கர்ர்ர் ;))

மாலதி said...
Best Blogger Tips

..செமையா இங்கிலிபீச்சு பாடம் நடதியிருக்கிங்க...ரீமிக்ஸ் சூப்பர்

Anonymous said...
Best Blogger Tips

நகைச்சுவைகள் ரொம்ப நல்லா இருக்கு

Anonymous said...
Best Blogger Tips

நகைச்சுவைகள் ரொம்ப நல்லா இருக்கு

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

ஹி ஹி...எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச இங்கிலிஷும் இந்த படிச்ச மறந்துடும் சகோ...ஹ ஹ...பட் சூப்பர்..//

ஆகா..ஆஹா.. வேணாம், விபரீதமாகிடும்;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ... சகோ நீங்களும் இந்த நிரூபன் மாதிரி தானே...எனக்கு தெரியுமே...எனக்கு தெரியுமே..//

அவ்....முடியல..

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா
குழந்தை என்ன பாலிலை அடங்கும்?
டீச்சர் இது கூடத் தெரியாமலே....
குழந்தை தகரப் பாலிலையும் அடங்கும் இல்லேன்னா பெட்டிப் பாலிலையும் அடங்கும் டீச்சர்.(Tin milk Or packet Milk powder)

ஹ ஹ சமத்து பசங்க...//

ஆனா ஒன்னு, நான் மட்டும் இந்தக் கிளாசில படிக்கலையே!
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா
சகோ பதிவு நகைச்சுவையோடு, கடைசியில் எதார்த்தம் கலந்த ஆவின் பாலாய் பொங்கி வழிகிறது..வாழ்த்துக்கள் சகோ...அவ்வவ்வ்வ்வ்//

அடிங்...............ஓவரா உசுப் பேத்திட்டுத் தான் ஓடிப் போயிடுறீங்க....

ஆவின் பாலய் பொங்கி வழியுதோ, இனி ஒருத்தர் வந்து சொல்லுவார்,
தயிர் போல கட்டியாக
இருக்கென்று;-))
தமிழிலை என்ன மாதிரியெல்லாம் வார்த்தைகளைத் தேடி
எடுக்கிறீர்கள்;-))
ஹி....ஹி..

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரஹீம் கஸாலி

wait//

ஏன், அவசரமா ஏதோ ஒரு முக்கியமான இடத்திற்கு குந்தப் போறீங்களா சகோ,

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Chitra

:-)))))))

இந்த மாதிரி ஜோக்ஸ், புதுசா இருந்துச்சு.... தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.//

நன்றிகள் சகோ, தலைப் பார்த்து, வரமால் விட்டு விட்டீர்களே என்று ஆதங்கப்பட்டேன், ஆனாலும் ஆஜர் ஆகி இருக்கிறீர்கள்.
உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு இருக்கும் வரை, பகிர்ந்து கொள்ளுவேன்,

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

////ஆங்கிலம் என்றாலே வேப்பெண்ணையினைப் போல நாக்கில் வெறுப்பு வந்து விடும் உணர்வு கொண்டவளாய், தான் ஒரு தீவிர தமிழ் பற்றாளர் எனும் கொள்கையுடன் இருந்த நம்ம ஆசிரியையின் முகத்தில் இடி விழுந்தாற் போன்ற ஓர் உணர்வு. ஆனாலும் சவாலாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலத்தைக் கற்பிக்கத் தொடங்கினார்.////

நம்ம ஆசிரியர்களுக்கு இங்கிலிசு தெரியாது என்று நாசுக்காக சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.ஹிஹிஹிஹி.//

ஏன் மேடை போட்டு, ஆசிரியர் சங்கப் பணிப் புறக்கணிப்பு, ஹர்த்தால் எல்லாம் வைக்கலாமே.. விட்டால் அதுவும் தொடங்கிடுவீங்க போல இருக்கு;-))


//.......................... உண்மை தான் நம்ம பள்ளிகளில் கூட பல ஆசிரியர்களுக்கு நாமளே இங்கிலீசு படிப்பிக்கலாம்.//

ஹா.....ஹா....

ம்... எங்கள் பாடசாலையில் ஆங்கிலப் பாடம் என்றால் எல்லோரும் நித்திரை கொள்ளத் தொடங்கி விடுவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///‘’முருகன் மரத்தால் விழுந்தான்..இது என்ன காலம்?

டீச்சர் இது கூடத் தெரியாமலா?, இது கஸ்ட காலம் டீச்சர்.
ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். அப்பிடியே உட்காரு என்று இருத்தினா டீச்சர்.////

ஒரு வேளை மரத்தால் விழுந்த கந்தன் இறந்திருந்தா இறந்தகாலம் என்று சொல்லிருப்பாரோ அந்த மாணவன்.)))//

நீங்க நல்லாத் தான் யோசிக்கிறீங்க....
நல்ல வேளை, அந்த டீச்சரோடை கிளாசிலை நீங்கள் இருக்கேல்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்லிக் கொண்டு மூன்றாம் வகுப்பு வகுப்பறையினுள் நுழைந்தா டீச்சர் டிங்குசா. //

டிங்குசாவா.? எங்கயா இந்த மாதிரி பேரெல்லாம் புடிக்கிறே.!!?//

சும்மா... உட்கார்ந்து யோசித்து தான் புடிக்கிறேன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//விடை ’ஏழு’ எனச் சொல்லி விட்டு,//

ஹி ஹி.. அவரு கையில ஏதோ கோளாறு போல//

பதிவைப் படித்த வாசகர்களுள், இந்தத் தவறைக் கண்டு பிடித்த ஒரே ஆள், நீங்க தான் சகோ, பெயருக்கேற்றாற் போல கூர்ந்து தான்
கவனிக்கிறீங்க;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//‘டீச்சர் குப்பை வரும்’ என்று விட்டு அமர்ந்து கொள்கிறான் டிங்குமார்..//

போங்க பாஸ்.. ரொம்ப பழைய மொக்கை ஜோக்.//

அதான், பதிவிலையே டிஸ்கி போட்டு சொல்லிட்டேனே.. பழைய மொக்கை என்று;-))
ஹி....ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//டீச்சர் நீங்கள் தான் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்லுகிறார். //

தமிழே பெப்பரப்பே..!! இதுல ஆங்கிலம் வேறயா.?/

அஃதே...அஃதே....

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா is get angry,
கந்தையா started ceasing the cow, Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.//

எவ்வளவு அருமையான பாடம்.. ஹி ஹி.. இப்படியொரு ஆசிரியை எனக்கு இல்லாமல் போனாரே.!!//

இப்படியொரு ஆசிரியர் இருந்திருந்தா, நீங்க, ஆசிரியருக்கு கற்பித்திருப்பீங்க...இல்லே...;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்
//இந்தக் காலக் குழந்தைகள் தாய்ப் பாலை விட தகரப் பாலிலை தானே அடங்கும்//

அட செம கருத்து போங்க நிரூ.. கலக்கிட்டீங்க.//

உண்மையும் இது தானே, தாய்ப் பால் கொடுத்தால் அழகு கெட்டுப் போய் விடுமாம்..
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//கொஞ்சம் ரீமேக் பண்ணி, மொழி மாற்றங்களோடு எழுதியிருக்கிறேன்.//

அந்த லூஸ் மாஸ்டர் யாரு.. அவருடைய நகைப்புகள் எல்லாம் இங்கே பிரபலம்.. எல்லாமே கேள்விபட்டிருக்கேன்.. அவரை பத்தி ஒரு பதிவு போடலாமே.!!//

கண்டிப்பாக உங்கள் சாய்ஸ் நிறைவேற்றப்படும் சகோ, இலங்கையில் பிரபலமான நகைச்சுவை நடிகர், தனி நடிப்பு நடிகர் தான் இந்த லூஸ் மாஸ்டர்...

உங்கள் ஊரிலும் அவர் பிரபலமா?
நம்பவே முடியவில்லைச் சகோ. சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கு சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நான் ரொம்ப லேட்டு//

வாத்தியார் மேட்டர் என்றதும், தெரிந்து தான் லேட்டா வாறீங்களோ என்று தோனுது..;-))

ஹி...ஹி...
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இரா.எட்வின்

அருமை அருமை அருமை நிரூபன்//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். அப்பிடியே உட்காரு என்று இருத்தினா டீச்சர்.
ரொம்ப நல்லா யோசிச்சிருகிறீங்க.பாராட்டுக்கள்//

இதெல்லாம் நான் யோசிக்கலையே, நம்ம ஊரிலை உள்ள ஒரு நகைச்சுவை நடிகர் யோசித்தது, அதை நான் உல்டா பண்ணி, ரீமேக் பண்ணியிருக்கிறேன். நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


கேள்விப்பட்ட ஜோக்குகள் தான்..ஆனாலும் உங்க நடையில் சொன்னது நல்லா இருக்கு!//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிநேகிதி

good post...//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இமா


நேற்றே எட்டிப் பார்த்தேன். கருத்துப் பெட்டி வழிவிடவில்லை.

ஆசியர்களைக் கலாய்க்கிற இடுகை என்பதால்.. கர்ர்ர் ;))//

நீங்க இப்பூடிப் பேசுவீங்க என்று தெரிந்து தான் கருத்துப் பெட்டி, நேற்றுக் கண்டனம் தெரிவித்திருக்கிறது என்று நினைக்கிறேன். சரியா...
அவ்....;-)))

நன்றிகள் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@மாலதி

..செமையா இங்கிலிபீச்சு பாடம் நடதியிருக்கிங்க...ரீமிக்ஸ் சூப்பர்//

நான் நடத்தவில்லை., நம்ம டிங்குசா டீச்சர் தான் இங்கிலீசு பாடம் நடத்தினா.
நன்றிகள் சகோ..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்

நகைச்சுவைகள் ரொம்ப நல்லா இருக்கு//

நன்றிகள் சகோ.

vanathy said...
Best Blogger Tips

நல்ல பதிவு, நிரூபன். அருமையான நகைச்சுவை இழையோட அழகிய பதிவு.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails