Tuesday, April 12, 2011

தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி!

தமிழகத் தேர்தலும், தமிழர்களின் பழக்க தோசங்களும்- 

ஆலமரத்தடி அரட்டை!

’’நேரம் ஆறு மணியாகப் போகிறது, எங்கே நம்மடை அரட்டைக் குறூப் மெம்பர்களை இன்னமும் காணோமே, எனத் தனக்குள் யோசித்தபடி, பாக்கெட்டினுள் இருந்த பக்கோடாவை மெல்லத் தொடங்கினார் மணியண்ணை. 


முதலில் இளையபிள்ளை ஆச்சி, 'நாதஸ்வரம் பிப்பீபி......பிப்பீபி..........
மேளச் சத்தம் டும்டும்.....டும்டும்........எனப் பாடியவாறு, ஆல மரத்தடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறா, ஆல மரத்தடியில் காத்திருந்த மணியத்தாரைக் கண்டதும், பாட்டை நைசாக லோ(Law) பிச்சிலில் குறைத்து முணு முணுத்துக் கொண்டு 
’’என்ன மணியண்ணை, இண்டைக்கு கொஞ்சம் ஏழியா(Early) வந்திட்டீங்க..... ஆல மரத்தடிக்கு, ஏதும் ஸ்பெசல் இருக்கோ? எனக் கேட்கத் தொடங்கிறா......

மணியண்ணையும் பதிலுக்கு, இண்டைக்கு ஸ்பெசல் ஒன்றும் இல்லை, நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் என ஒரு நக்கலைப் போட்டு விட்டு ’’அது சரி இளையபிள்ளை , நீங்கள் என்ன பாட்டுப் பாடிக் கொண்டு வந்தனீங்கள்?... எனக் கேட்கிறார்.

’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு, அதைத் தான் பாடிக் கொண்டு வாறன்... எனச் சமயோசிதமாகப் பேசித் தப்பிக்க நினைக்கிறா.

’’என்ன கிழவி, நீ, போய் பவர் ஸ்டாரோடை படத்தைப் பார்த்திட்டு, அதிலை வாற பாட்டைப் பாடுறாய், எனக்கு என்ன காதிலை பூவே சுத்தப் பார்க்கிறாய்? பழநிக்கே பஞ்சாமிர்தம் கொடுக்கிற கதையா எல்லோ உன்ரை கதை இருக்குது. நாதஸ்வரம் சீரியலிலை வாற பாட்டைப் பாடிப் போட்டு, இடியப்பத்துக்கு சொதி ஊத்தின மாதிரி வாய் குழையாமல் ஒரு பொய் வேறை பேசுறாய்
காலம் கெட்டுப் போச்சு...... என்று மணியத்தார் கூறி முடிக்கவும், நிரூபனும், குணத்தாரும் இரு வேறு திசைகளுக்கூடாக அரட்டை நடக்கும் வைற் ஹவுஸினை நோக்கி Sorry ஆலமரத்தினை நோக்கி வருகிறார்கள். 

ஏன் பொடியங்கள் லேட்? என்ன பிரச்சினை? என்று மணியத்தார், மிரட்டலுடனும், புன்னகையுடனும் கேட்கிறார். 

’’இல்லை மணியண்ணை, வாற வழியிலை, (On the way to the conference Hall) ஒரு பெரிய லேடிஸ் கிளப் மீட்டிங்,  மூன்றாவது தெருவிலை இருக்கிற தண்ணீர்ப் பம்படி தெரியுமே, அதிலை நடந்தது, அதனைத் தான் மறைந்திருந்து, துப்புத் துலக்கினம், ஸோ.. அது தான் லேட் என்று குணத்தான் கூறி முடிக்கவும், நீருபன் வில்லுப் பாட்டுக்கு ஆமாம் போடுறாள் மாதிரி, ஓமோம் மணியண்ணை என்று கூறி முடித்தான்.

’’பாரன் , நாசமாப் போன பயலுகளின்ரை பழக்கத்தை, இந்த வயசிலை பொம்பிளையள் மீட்டிங் வைச்சு, கதைக்கிறதை ஒட்டுக் கேட்குதுகளாம்... என்று மணியண்ணை பேசி முடிக்கவும், இளையபிள்ளை ஆச்சி திருடிப் பிடிபட்ட திருடன் போல முழுசிக் கொண்டு, பயந்த சுபாவத்துடன் நிற்கிறா. 

’’என்னடா, தம்பியவை உந்த டேடீஸ் கிளப் மீட்டிங்கிலை நடந்தது?  என்னடா பேசினவையள் பொம்பிளையள்? இது மணியத்தார்.

’’மணியண்ணை, கூட்டத்துக்கு தலைவி, உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஆள் தான். 
அதுவும் கொடும்பாவி எரிக்கப் போகினமாம்.  இது குணத்தான்.

’’எனக்கு நன்கு பரிச்சயமான ஆளோ,  என் கிட்டப் போயி பின் நவீனத்துவ வித்தை காட்டமால் விடயத்தை விளக்கமாகச் சொல்லடா குணத்தான்..  கொடும்பாவி எரிக்கிறதென்றால் நல்ல விசயம் தானே?

’’மணியண்ணை, டீவியிலை வாற, நாதஸ்வரம் சீரியல் தெரியுமோ? அதிலை வாற வில்லி மாமியார் இருக்கிறா தானே, அவா சீரியல் கதாநாயகியை(மருமகளை) பயங்கரமா கொடுமைப்படுத்துறாவாம், அதனைக் கண்டித்து, ’’சிலோன் நாதஸ்வர சீரியல் மகளிர் அணி’’ சார்பாக கொடும்பாவி எரிக்கிறதா பெரிய ப்ளான் வேறை பண்ணியிருக்காங்க நம்மடை இளைய பிள்ளையாச்சி தலமையிலான லேடீஸ் கிளப் மெம்பர்ஸ் என்று நிரூபன் கூறி முடித்தான்.

’’இளைய பிள்ளை, உனக்கு என்ன லூசே.. நாட்டிலை நடக்கிற விசயங்கள் தெரியாமல் நீ இந்தக் கொடும்பாவி எரிப்பு என்று போய், உன்ரை நேரத்தையும் வீணடிக்கிறதோடு, ஏழரையைத் தூக்கி ஏரோப்பிளேனாச் சுமக்கிற ஐடியாவோ என்று மணியண்ணை பேசினார்....

’’நாடு இருக்கிற நிலமையிலை. உங்களுக்கு நாட்டு நடப்பை பற்றிக் கதைக்க(பேச) என்ன இருக்கிறது?
தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, தமிழகத்திலை தேர்தல் என்றால் ஒராளை மாறி ஒராள் தனி மனித தாக்குதல் செய்கிறது, இலவசமா இலவசத்தையே கொடுக்கிறது, தான் போற நேரத்திலையும் தன்னோடை கிறாண்ட் சன் ஐ (Grand Son) மந்திரியாக்கிறது தொடர்பாக கலந்தாலோசிக்கிறது.

‘’எங்கடை நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினால் எரிமலையைப் பத்த வைச்சிட்டாள் கிழவி என்று வெள்ளை வான் வேறை வரும்.......இப்ப சிக்கலைத் தீர்க்க பெண்களுக்கு சீரியல் இருக்குத் தானே? கவலையை மறக்க கஸ்தூரி இருக்கிறா. அது தான் சீரியலோடை ஐக்கியமாகிட்டம் பெண்கள் எல்லோரும்.........என இளைய பிள்ளை ஆச்சி பேசி முடித்தா.....


தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, ஒருத்தன் கட்சி ஆரம்பிச்சிட்டால் அவனுக்குப் போட்டியா பக்கத்து வீட்டுக்காரன் எதிர்க்கட்சி தொடங்கிறது, ஒருத்தன் போராட்டம் தொடங்கினால் அவனுக்கு எதிராக இன்னொரு போராட்ட அமைப்பைத் தொடங்கிறது. ஒருத்தன் ஒரு பொண்ணைக் கலியாணம் கட்டினால், பக்கத்து வீட்டுக்காரனும் பாய்ஞ்சடிச்சுக் கொண்டு போய் ஒற்றைக் காலிலை நின்று கலியாணம் கட்டுறது, இப்புடிப் பல விசயங்களை எங்கள் தமிழ்ப் பெரும் மக்கள் தயங்காமல் போட்டி போட்டுத் தானே செய்கிறார்கள்............ தமிழனாலை தானே தமிழன் அழிஞ்சு கொண்டிருக்கிறான். தமிழனால் தானே தமிழனுக்கே அழிவு..........இது குணத்தான்.

போட்டி போட்டுச் செய்தால் பரவாயில்லை, ஆனால் எங்களின் தமிழர்கள் பொறாமையோடு, எரிச்சலோடு, நான் முந்தியோ, நீ முந்தியோ என்று காரியங்களைச் செய்யப் போய்க் கடைசியிலை ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணியினை விட்டெல்லே நீந்திச் சாகிறாங்கள்.........என்று மணியண்ணை கூறி முடித்தார்.

ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணி ஊத்தி நீந்திச் சாவதிலும் பார்க்க எங்கடை தமிழர்கள் உள்ளங்கையினுள் உப்புத் தண்ணியை ஊத்திப் போட்டு, கடல் என்று நினைத்துக் கொண்டு விழுந்து செத்தால் நன்றாக இருக்கும்.........இது நிரூபன்.

தமிழரைப் பற்றிச் சொல்லத் தான் ஒரு மேட்டர் நினைவுக்கு வருகுது என இளைய பிள்ளையாச்சி தனது அலப்பறையினை நீட்டத் தொடங்கினா.
,
மூன்று தமிழர்கள்,  நடுக் கடலில் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறாங்கள். திடீரென்று எழுந்த பாரிய அலைகள் கப்பலை உடைத்து விடுகிறது, மூன்று பேரும் கப்பலின் ஒரு பக்கத்தினைப் பிடித்துக் கொண்டு, நடுக் கடலில் தத்தளித்தவாறு, உதவியேதும் இல்லாமல் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமெல்லாம் உள்ள கடவுளர் எல்லோரையும் கூப்பிட்டு அழுகிறார்கள். இரஞ்சி மன்றாடிக் காப்பாற்றும் படி கேட்கிறார்கள். திடீரெனப் பார்த்தா; இம் மூவரின் முன்னுக்கும் ஒரு அழகிய தேவதை ஒளிப் பிளம்புடன் தோன்றியது, 
இம் மூவரையும் தூக்கி ஒரு தீவில் கொண்டு போய் இறக்கி விட்டது. 

இவர்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த தேவதை, ஓ நீங்கள் தமிழரா! எனச் சிரித்துக் கொண்டது, இதோ களைப்பு நீங்கச் சாப்பிடுங்கள் என உணவும் கொடுத்தது,  பின்னர் அத் தேவதை சொன்னது, உங்களுக்கு மூன்று வரங்கள் நான் தருகிறேன், கேளுங்கள் என்றது, 

என்ன வரம் கேட்டாளும், தருவீங்களா என்றார்கள் அம் மூன்று தமிழர்களும், 

ஆம் நிச்சயம் தருவேன் என்று சொன்னது தேவதை.

முதலாவது தமிழன் கேட்டான், தேவதையே, என் நீண்ட நாள் ஆசை, நான் உலகிலே மிகப் பெரிய கோடிஸ்வரனாகி அமெரிக்காவிலை இருக்க வேண்டும். இதனை நிறை வேற்றி வைப்பாயா என்றான்.

ஆமாம், குழந்தாய், உனது ஆசைப் படியே இது நடக்கட்டு, இதோ உன்னை நான் இப்போதே பெரிய மாளிகை வீட்டில் பணக்காரனாக்கி அமெரிக்காவில் இருக்க விடுகிறேன் என்று கூறித் தன் மந்திர சக்தியால் முதலாவது தமிழனைத் தூக்கி, அமெரிக்காவில் விட்டது, 

இப்போது இரண்டாவது, நபரின் முறை, முதலாவது தமிழன் அமெரிக்காவிற்குப் போனால், நான் மட்டும் இங்கிட்டு இருந்து என்ன பண்ணுறது? யோசித்தான். 

தேவதையே, எனக்கு முதலாவது தமிழனை விட அதிக வசதிகளுடன், நிறையப் பொன் பொருட்களுடன், உலகின் முதற் கோடீஸ்வரன் என்ற நாமத்துடன் இங்கிலாந்தில்(United kingdom) மாளிகை வீடு வேண்டும் என்று கூறினான்.
அப்படியே ஆகட்டும் எனத் தேவதை பதில் சொன்னது.

இப்போது மூன்றாவது தமிழனின் முறை. நன்றாக யோசித்தான். இந்த ரெண்டு தமிழரும் என்னை விட முன்னேறி நல்லா இருக்கவோ.......இது நடக்கவே நடக்க கூடாது..

தேவதையே, இப்போது எனது முறை தானே!

ஆமாம் குழந்தாய், நான் என்ன வரம் கேட்டாலும் தருவாயா?
ஆமாம் குழந்தாய்,  நிச்சயமாக? 
சந்தேகமே இல்லை, நிச்சயமாக வரம் தருவேன் என்றது தேவதை.

அப்படியாயின் அந்த ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து எனக்கு முன்னாலை விடு என்றான் மூன்றாவது தமிழன்......

நீங்களெல்லாம் உருப்படவே மாட்டீங்கடா, உங்களைப் போயி நடுக்கடலிலை காப்பாற்றினேன் பாரு.. என்னையைச் செருப்பாலை அடிக்க வேணும் எனச் சொல்லி விட்டு தேவதை மூன்று பேரையும் கடலினுள் தள்ளிய பின் மறைந்து விட்டது.............

இப்படி இளைய பிள்ளை ஆச்சி சொல்லி முடிக், எல்லோரும்.......கல கலவெனச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

தூரத்தே நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது என்று நீருபன் சொன்னான்...
சொன்னது தான் தாமதம்............ஆலமரத்தடியே ஆளரவமற்ற இடமாய் அடுத்த விநாடியே மாறியது.


பிற் குறிப்பு: ஈழத் தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது, புரியவில்லை எனும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைவாக என் பதிவினை முடிந்த வரை அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன். ஒரு சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்திருக்கிறேன். பதிவில் இன்னும் மாற்றங்கள் செய்ய வேண்டும், இப்போதும் தமிழ் புரியவில்லை, கடினமாக இருக்கிறது என்றால் சொல்லுங்கள். கொஞ்சம் கூடிய கவனம் எடுத்து உங்களுக்காய் இன்னும் பல திருத்தங்களை மேற் கொள்ளக் காத்திருக்கிறேன்..

88 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நான்தான் முதல் ஆளா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

எனக்கு வடை வேணாம்! என்கிட்ட நிறைய இருக்கு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆழ மரத்தடி அரட்டை சூப்பர்! நிறைய உள்குத்து இருக்கிறமாதிரி தெரியுது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஸாரி ஆல மரத்தடி!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மணியண்ணையும் பதிலுக்கு, இண்டைக்கு ஸ்பெசல் ஒன்றும் இல்லை, நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் என ஒரு நக்கலைப் போட்டு விட்டு...........


இது செம நக்கல் தான்!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


நான்தான் முதல் ஆளா?//

இதில் என்ன சந்தேகம், திறந்த வீட்டினுள் புகுந்து விட்டுக் கேள்வி வேறா...;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


எனக்கு வடை வேணாம்! என்கிட்ட நிறைய இருக்கு!!//

வடை போட்டால் our system will reject...

நிரூபன் said...
Best Blogger Tips

எனக்கு வடை வேணாம்! என்கிட்ட நிறைய இருக்கு!!//

வடை போட்டால் முறிகண்டி வசந்த விலாஸ்......புளிச்ச போண்டா Exchange ஆக மாற்றித் தரப்படும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இடியப்பத்துக்கு சொதி ஊத்தின மாதிரி வாய் குழையாமல் ஒரு பொய் வேறை பேசுறாய்

ஹா......ஹா....... இது செம கடி! நல்ல உவமை!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஆழ மரத்தடி அரட்டை சூப்பர்! நிறைய உள்குத்து இருக்கிறமாதிரி தெரியுது!//

ஆழ மரத்தடி என்றால், மரத்திலை ஆழம் போட்டதாகப் போய் விடும்.

உள் கூத்துக்களை, உங்களைப் போன்ற வாசக உள்ளங்கள் தான் தெருக் கூத்துக்களாக மாற்ற வேண்டும். (நான் புதுவை அன்பனையோ இல்லை முல்லைச் செல்வனையோ இங்கே குறிப்பிடவில்லை)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஊரில இப்ப சீரியல் மோகம் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறதோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஸாரி ஆல மரத்தடி!!//

ஸாரி கேட்டால்.....பூரி அனுப்பி வைக்கப்படும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

இடியப்பத்துக்கு சொதி ஊத்தின மாதிரி வாய் குழையாமல் ஒரு பொய் வேறை பேசுறாய்

ஹா......ஹா....... இது செம கடி! நல்ல உவமை!//

என்ன போட்டாலும் கண்டு பிடிக்கிறீங்களே....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒரு கப்பல், மூன்று தமிழர்கள் கதை நன்று!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஊரில இப்ப சீரியல் மோகம் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறதோ?//

இப்போது பொழுது போக்கிற்காக முன்பு போல தெருக் கூத்து, வானொலி நிகழ்ச்சிகள் எல்லாம் இல்லைத் தானே, அது தான் இப்ப சீரியல் மோகம்..

ஊரிலை இரவுத் திருவிழா என்றாலே சனம் வீட்டை விட்டு வெளியிலை வராத அளவிற்கு சீரியலுடன் ஐக்கியமாகி விட்டார்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பிற் குறிப்பு: ஈழத் தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது, புரியவில்லை எனும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைவாக என் பதிவினை முடிந்த வரை அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன். ஒரு சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்திருக்கிறேன். பதிவில் இன்னும் மாற்றங்கள் செய்ய வேண்டும், இப்போதும் தமிழ் புரியவில்லை, கடினமாக இருக்கிறது என்றால் சொல்லுங்கள். கொஞ்சம் கூடிய கவனம் எடுத்து உங்களுக்காய் இன்னும் பல திருத்தங்களை மேற் கொள்ளக் காத்திருக்கிறேன்..

எனக்குப் புரிகிறது! ஆனால் இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதலாம் னு நினைக்கிறேன்!

Chitra said...
Best Blogger Tips

நீங்கள் எழுதிய விதம் - வார்த்தைகள் புரியுது. ஆனால், உள் குத்து இருந்தால், அதுதான் புரியவில்லை. :-)

டக்கால்டி said...
Best Blogger Tips

நான் தமிழன் இல்லீங்கோ...

Anonymous said...
Best Blogger Tips

மற்றவர்களுக்காக எழுதுவது தவறாகும் ஈழத்தமிழிலையே எழுதியிருக்கலாம்

Mathuran said...
Best Blogger Tips

// ஒரு சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்திருக்கிறேன். பதிவில் இன்னும் மாற்றங்கள் செய்ய வேண்டும், இப்போதும் தமிழ் புரியவில்லை, கடினமாக இருக்கிறது என்றால் சொல்லுங்கள். கொஞ்சம் கூடிய கவனம் எடுத்து உங்களுக்காய் இன்னும் பல திருத்தங்களை மேற் கொள்ளக் காத்திருக்கிறேன்..//

ஆஹா.......
வாழ்க தமிழ்....வளர்க உங்கள் பணி

shanmugavel said...
Best Blogger Tips

//.இப்ப சிக்கலைத் தீர்க்க பெண்களுக்கு சீரியல் இருக்குத் தானே? கவலையை மறக்க கஸ்தூரி இருக்கிறா. அது தான் சீரியலோடை ஐக்கியமாகிட்டம் //

கலக்கல் சகோதரம்.தவிர தலைப்பே வைரவரி

எல் கே said...
Best Blogger Tips

தமிழனுக்கு தமிழன்தான் எதிரி. மொழி நடை மாற்றியுள்ளது நல்ல விஷயம் தம்பி. அதற்கு நன்றி

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

பாராட்டுக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

குட் போஸ்ட்.. நல்லா புரியுது.. தமிழ்..

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Ram said...
Best Blogger Tips

//ஆலமரத்தடி அரட்டை!//

வந்தாச்சா அரட்டை.. பாப்போம்..

Ram said...
Best Blogger Tips

//பாக்கெட்டினுள் இருந்த பக்கோடாவை மெல்லத் தொடங்கினார் மணியண்ணை.//

இந்த மாதிரி வேலையெல்லாம நம்ம நிரூபன் தானே செய்வார்..

Ram said...
Best Blogger Tips

//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் என ஒரு நக்கலைப் போட்டு விட்டு//

ஹி ஹி.. நகல்லு செம

சரியில்ல....... said...
Best Blogger Tips

இவர்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த தேவதை, ஓ நீங்கள் தமிழரா! எனச் சிரித்துக் கொண்டது,//


நாசமா போச்சி... இப்பிடி தமிழன் பேர ஊருக்கு ஊரு நாரடிச்சிட்டானுவளே? பாஷு.. நான் பொதுவா சொன்னேன்...

Ram said...
Best Blogger Tips

//’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு, அதைத் தான் பாடிக் கொண்டு வாறன்..//

எனக்கு லத்திகா பத்தியும் தெரியாது, நாதஸ்வரம் பத்தியும் தெரியாது.. அடுத்தது போவோம்..

Ram said...
Best Blogger Tips

//நீருபன் வில்லுப் பாட்டுக்கு ஆமாம் போடுறாள் மாதிரி, ஓமோம் மணியண்ணை என்று கூறி முடித்தான்.//

லேடிஸ் க்ளப்னா நீங்க நின்னுடுவீங்கன்னு எனக்கு தெரியும் பாஸ்

சரியில்ல....... said...
Best Blogger Tips

‘’எங்கடை நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினால் எரிமலையைப் பத்த வைச்சிட்டாள் கிழவி என்று வெள்ளை வான் வேறை வரும்......//

நம்ம ஊரு அரசியல பேசினால் 108 ஆன்புலன்ஸ்தான் வரணும்...... அவ்ளோ நாறும்...

Ram said...
Best Blogger Tips

//போட்டி போட்டுச் செய்தால் பரவாயில்லை, ஆனால் எங்களின் தமிழர்கள் பொறாமையோடு, எரிச்சலோடு, நான் முந்தியோ, நீ முந்தியோ என்று காரியங்களைச் செய்யப் போய்க் கடைசியிலை ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணியினை விட்டெல்லே நீந்திச் சாகிறாங்கள்.........//

கவிதை கவிதை

சரியில்ல....... said...
Best Blogger Tips

கல கல..கல... கலக்கல் பதிவு,.... ஒரு ரெண்டு மாசம் சென்னைக்கு வந்துட்டு போயிடுங்க எல்லாம் சரியாயிடும்.. .

Ram said...
Best Blogger Tips

அந்த தேவதை கதையை ஏற்கனவே கேட்டிருக்கேன்..

அப்பரம் ஒவ்வொரு வரி போட்டுவிட்டு இது மணி, இது குணத்தான் போன்று போடுவது சரியாக இல்லை என தோன்றுகிறது..

இருப்பினும் இப்பதிவில் என்னால் நிறைய தெரிந்துகொள்ளமுடியவில்லை..

உங்கட தமிழ்ல இருந்து எங்கட தமிழுக்கு முயற்சித்த விதம் நல்லாருக்கு.. இருந்தாலும் அப்பப்போ உங்கட தமிழ்லயே ஒரு சில பதிவுகள் போடுமாறு கேட்டுகொள்கிறேன்..

Prabu Krishna said...
Best Blogger Tips

தமிழனுக்கு தமிழன் மட்டுமே எதிரி.
இப்போது புரிகிறது நண்பரே.

தனிமரம் said...
Best Blogger Tips

உங்களுக்கு ஆலமரத்தடி சரிகிடைக்குது அரட்டையடிக்க நாங்கள் ஆலமரம் தேட கருனாநிதியிடம்தான் போகனும் காசு வாங்க.

அருள் said...
Best Blogger Tips

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் //

கச்சேரி இனித்தான் கலை கட்டும் போல தெரியுதே:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

முந்தைய பின்னூட்டம் கலையல்ல களை!ஒரு மார்க்கு குறைச்சிக்கோங்க:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு//

இப்படியொரு படம் வந்திருக்கா?அரசியல் அரட்டையில தமிழகத்துல என்ன நடக்குதுன்னே தெரியமாட்டேங்குதே!

நல்லா ஒரு படம் எடுத்துட்டு அதுக்கு குள்ளநரிக்கூட்டம்ன்னு பேர் வச்சிட்டாங்களாம்:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, தமிழகத்திலை தேர்தல் என்றால் ஒராளை மாறி ஒராள் தனி மனித தாக்குதல் செய்கிறது, இலவசமா இலவசத்தையே கொடுக்கிறது, தான் போற நேரத்திலையும் தன்னோடை கிறாண்ட் சன் ஐ (Grand Son) மந்திரியாக்கிது தொடர்பாக கலந்தாலோசிக்கிறது.//

இதெல்லாம் நாதஸ்வர சீரியலில் காட்டுறாங்களா:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

மிச்சத்தை அப்புறமா சொல்கிறேன்:)

ஹேமா said...
Best Blogger Tips

தமிழன் உருப்பட சந்தர்ப்பமே இல்லையப்பு நிரூ.முக்கி முக்கிக் கத்தினா அசிங்கமும் நாத்தமும்தான் எங்களுக்கே வரும் திரும்பி !

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

இப்போ கொஞ்சம் எளிமையா இருக்கு, ஆனாலும் நீங்க நீளத்தை இன்னும் குறைக்கனும்.......!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//ஈழத் தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது, புரியவில்லை எனும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைவாக என் பதிவினை முடிந்த வரை அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன். //

மறுபடியும் வந்தா தேவதை கதைதான் மிச்சம்!

தேவதை கதைக்கெல்லாம் போக வேண்டிய அவசியமேயில்லை.அதோ அங்க ஒருத்தர் பயோடேட்டா வாசிக்கிறார் பாருங்க:)

சகோ!நீங்க உங்க நடையிலே சொல்லுங்க.அப்புறம் எப்படி ஈழத்தமிழ் கற்றுக்கிடறதாம்.

Ram said...
Best Blogger Tips

//சகோ!நீங்க உங்க நடையிலே சொல்லுங்க.அப்புறம் எப்படி ஈழத்தமிழ் கற்றுக்கிடறதாம்.//

சரியா சொன்னீங்க ராஜ்..

Ram said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்:எனக்கு நிரூபனின் எழுத்து நல்லாவே புரியும்.. இருந்தாலும் மத்தவங்களுக்கு கஷ்டம் தெரியும்போது அவர் எழுத்துநடையை மாற்றிடதில் தவறில்லை.. அதனால் என்போல எப்பவாவது அவரது இயல்பு நடையிலே ஒரு பதிவு போட சொல்லி கேளுங்க..

நிரூபன் said...
Best Blogger Tips

வணக்கம் உறவுகளே, வாசகர்களே, நண்பர்களே, அன்பு உள்ளங்களே, என் வீட்டு இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு, காரணமாக இணையத்தினூடாக உலா வர முடியவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அது என் கதை இல்லைச் சகோ, இளைய பிள்ளையாச்சி சொல்லிய கதை;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எனக்குப் புரிகிறது! ஆனால் இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதலாம் னு நினைக்கிறேன்!//

எளிமையான முறையில் எங்களூர் விடயங்களை வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நன்றிகள் சகோ. வெகு விரைவில் திருத்துகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Chitra


நீங்கள் எழுதிய விதம் - வார்த்தைகள் புரியுது. ஆனால், உள் குத்து இருந்தால், அதுதான் புரியவில்லை. :-)//

சகோதரம், இதில் உள் கூத்துக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. சும்மா வதந்திகளைப் பரப்புகிறீர்கள்;-))

நன்றிகள், நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி


நான் தமிழன் இல்லீங்கோ...//

ஹா...ஹா.. இது தான் சமயோசிதமாக எஸ் ஆகிறது என்பது.. இந்த தடவை தப்பிச்சிட்டீங்க. அடுத்த வாட்டி, வைச்சிக்கிறன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Anonymous


மற்றவர்களுக்காக எழுதுவது தவறாகும் ஈழத்தமிழிலையே எழுதியிருக்கலாம்//

நன்றிகள் சகோ, தாய் மொழியைத் தன் தாய்க்கு நிகரானது என ஒப்பிட்டுக் கூறுவார்கள். மொழியை மாற்றுவது, தாயை மாற்றுவது போன்ற செயலாகும், ஆனாலும் எங்களூர்த் தமிழைப் புரிந்து கொள்ள முடியாத நண்பர்களிடம் என் எழுத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, என் தமிழைப் படி என்று திணிப்பதற்கு ஒப்பானது, ஆதலால் பதிவுகளில் கொஞ்சம் சேஞ்ச் இருப்பது நன்றாக இருக்கும் தானே?


இன்னொரு விடயம், எங்கள் நாட்டின் பல விடயங்களை ஏனைய இணைய நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இலகுவான அனைவரும் புரிந்து கொள்ளும் மொழி நடை அவசியமாகின்றது தானே?
அது தான் ஒரு சின்ன சேஞ்ச்.
நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran

ஆஹா.......
வாழ்க தமிழ்....வளர்க உங்கள் பணி//

நான் என்ன ஆறுமுக நாவலரா? இல்லை, சின்னத்தம்பிப் புலவரா? ஏதோ தமிழ் வளர்க்கிற ஆளுக்கு வணக்கம் சொல்லி, வாழ்த்துச் சொல்லுற மாதிரி ஒரு பில்டப்பு.
நக்கலு..நாலுமணிக்கெல்லாம் எழும்பியாச்சா...நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

//.இப்ப சிக்கலைத் தீர்க்க பெண்களுக்கு சீரியல் இருக்குத் தானே? கவலையை மறக்க கஸ்தூரி இருக்கிறா. அது தான் சீரியலோடை ஐக்கியமாகிட்டம் //

கலக்கல் சகோதரம்.தவிர தலைப்பே வைரவரி//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@எல் கே


தமிழனுக்கு தமிழன்தான் எதிரி. மொழி நடை மாற்றியுள்ளது நல்ல விஷயம் தம்பி. அதற்கு நன்றி//

எல்லாம் என் உறவுக்காரங்களின் வேண்டுகை தான். நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!


பாராட்டுக்கள்...//

ஐயோ, சித்தப்பூ, நான் இங்கே என்ன சொல்லியிருக்கிறன் என்று பாராட்டுறீங்க, புதுசா ஏதாவது விஞ்ஞானக் கண்டு பிடிப்பு நடத்தியிருக்கேனா....
என்ன வார்த்தை சொல்லிப் புட்டீங்க சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


குட் போஸ்ட்.. நல்லா புரியுது.. தமிழ்..//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

பழநிக்கே பஞ்சாமிர்தம் கொடுக்கிற கதையா எல்லோ உன்ரை கதை இருக்குது. //
சங்கீதமாய், இதமாய் தமிழ் ஒலிக்கிறது வித்தியாசமாக இருக்கிறது.
பாரட்டுக்கள்.//


ஆஹா..ஆஹா... சங்கீதம் வேறை காதிலை வந்து பாயுதா? நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//ஆலமரத்தடி அரட்டை!//

வந்தாச்சா அரட்டை.. பாப்போம்..//

என்ன அரட்டையை பாப்போம் என்று சொல்லிக்கிட்டு, சகோ......நீங்களும் அரட்டையிலை ஐக்கியமாகனும் சகோ.ஹி..ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//ஆலமரத்தடி அரட்டை!//

வந்தாச்சா அரட்டை.. பாப்போம்..//

என்ன அரட்டையை பாப்போம் என்று சொல்லிக்கிட்டு, சகோ......நீங்களும் அரட்டையிலை ஐக்கியமாகனும் சகோ.ஹி..ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


//பாக்கெட்டினுள் இருந்த பக்கோடாவை மெல்லத் தொடங்கினார் மணியண்ணை.//

இந்த மாதிரி வேலையெல்லாம நம்ம நிரூபன் தானே செய்வார்..//

நம்மளையை மாட்டி விடுறதென்றே பசங்க அலையுறாங்க என்று யாரோ சொன்னாங்க. அது நீங்க தானா சகோ.
நான் இல்ல பாஸ், அது மணியண்ணை

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் என ஒரு நக்கலைப் போட்டு விட்டு//

ஹி ஹி.. நகல்லு செம//

இது நக்கலு... ரொம்ப ஓவர் சகோ.. சும்மா ஒரு யதார்த்தம்...
ஹி..ஹி;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@சரியில்ல.......

இவர்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த தேவதை, ஓ நீங்கள் தமிழரா! எனச் சிரித்துக் கொண்டது,//


நாசமா போச்சி... இப்பிடி தமிழன் பேர ஊருக்கு ஊரு நாரடிச்சிட்டானுவளே? பாஷு.. நான் பொதுவா சொன்னேன்...//

அடடா,.... நீங்க ஒரே கல்லிலை ரெண்டு மாங்கா பிடுங்கிறீங்க...

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


/’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு, அதைத் தான் பாடிக் கொண்டு வாறன்..//

எனக்கு லத்திகா பத்தியும் தெரியாது, நாதஸ்வரம் பத்தியும் தெரியாது.. அடுத்தது போவோம்..//

ஒரு இளைஞனின் வாழ்வில் அற்புதமான விடயத்தை தவற விட்டீர்களே பாஸ்...

உங்கள் வாழ்க்கையிலை பெரும் பகுதியை நீங்க மிஸ் பண்ணின பீலிங் இருக்குமே...
லத்திகா பாருங்க சகோ. இதெல்லாம் போயிடும்;-))

ஹா...ஹா..

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


/நீருபன் வில்லுப் பாட்டுக்கு ஆமாம் போடுறாள் மாதிரி, ஓமோம் மணியண்ணை என்று கூறி முடித்தான்.//

லேடிஸ் க்ளப்னா நீங்க நின்னுடுவீங்கன்னு எனக்கு தெரியும் பாஸ்//

இதையெல்லாம் பப்ளிக்கில பேசக் கூடாது.. ஊரக் கூட்டியா சொல்லுவாங்க இந்த
மேட்டருகளை;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@சரியில்ல.......

’எங்கடை நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினால் எரிமலையைப் பத்த வைச்சிட்டாள் கிழவி என்று வெள்ளை வான் வேறை வரும்......//

நம்ம ஊரு அரசியல பேசினால் 108 ஆன்புலன்ஸ்தான் வரணும்...... அவ்ளோ நாறும்...//

நம்மளுக்குள்ளை ஒற்றுமையைப் பார்த்தீங்களா...

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//போட்டி போட்டுச் செய்தால் பரவாயில்லை, ஆனால் எங்களின் தமிழர்கள் பொறாமையோடு, எரிச்சலோடு, நான் முந்தியோ, நீ முந்தியோ என்று காரியங்களைச் செய்யப் போய்க் கடைசியிலை ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணியினை விட்டெல்லே நீந்திச் சாகிறாங்கள்.........//

கவிதை கவிதை//

பாஸ்........நீங்க ரொம்ப நல்லவர் என்பதை ஒத்துக்கிறேன். அதுக்காக இப்படி உண்மையைப் போட்டுடைக்க வேணாம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சரியில்ல.......

கல கல..கல... கலக்கல் பதிவு,.... ஒரு ரெண்டு மாசம் சென்னைக்கு வந்துட்டு போயிடுங்க எல்லாம் சரியாயிடும்.//

சொல்லிட்டீங்க எல்லே பாஸ்.. வந்துட்டாப் போச்சு.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

அந்த தேவதை கதையை ஏற்கனவே கேட்டிருக்கேன்..//

அது இளையபிள்ளை ஆச்சி சொன்ன கதை. ஐ ஆம் அப்பீட்டு...

அப்பரம் ஒவ்வொரு வரி போட்டுவிட்டு இது மணி, இது குணத்தான் போன்று போடுவது சரியாக இல்லை என தோன்றுகிறது..//

அரட்டையினைச் சிறுகதை போலச் எழுதுவது சிரமம் என்பதால் தான் இப்படி எழுதுகிறேன் சகோ. அடுத்த பதிவில் கொஞ்சம் வெரைட்டியாக ட்றை பண்ணுறேன்.

//இருப்பினும் இப்பதிவில் என்னால் நிறைய தெரிந்துகொள்ளமுடியவில்லை..//

இது அரட்டை சகோ, அரட்டை.. அதாலை புதிய விசயங்கள் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும்.

//உங்கட தமிழ்ல இருந்து எங்கட தமிழுக்கு முயற்சித்த விதம் நல்லாருக்கு..//

அதென்ன உங்கடை தமிழ், எங்கடை தமிழ்... இனிமே எல்லாமே நம்ம தமிழ்...


//இருந்தாலும் அப்பப்போ உங்கட தமிழ்லயே ஒரு சில பதிவுகள் போடுமாறு கேட்டுகொள்கிறேன்..//

உங்கள் சொய்ஸ் கண்டிப்பாக நிறை வேற்றப்படும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு

தமிழனுக்கு தமிழன் மட்டுமே எதிரி.
இப்போது புரிகிறது நண்பரே.//

இவ்வளோ நாளும் இதைப் புரியாமலா இருந்தீங்க.. நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

உங்களுக்கு ஆலமரத்தடி சரிகிடைக்குது அரட்டையடிக்க நாங்கள் ஆலமரம் தேட கருனாநிதியிடம்தான் போகனும் காசு வாங்க//

சகோ, கருணாநிதி காசெல்லாம் தர மாட்டார், இலவசமாக மிக்ஸி, டீவி, கிறைண்டர் தான் தருவாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@அருள்

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html//

சகோ, தமிழனுக்குத் தமிழன் தான் எதிரிக்கும், பா.ம.க சாதி வெறிக்கும் என்ன சகோ சம்பந்தம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் //

கச்சேரி இனித்தான் கலை கட்டும் போல தெரியுதே:)//

சகோ, கச்சேரி இனித்தான் களை கட்டும். நீங்க வந்திட்டீங்க இல்லே...

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


//’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு//

இப்படியொரு படம் வந்திருக்கா?அரசியல் அரட்டையில தமிழகத்துல என்ன நடக்குதுன்னே தெரியமாட்டேங்குதே!//

நீங்க அப்பப்ப, பாளிமெண்டை விட்டு, அரட்டையிலும் ஐக்கியமாகனும். அப்போ தான் இதெல்லாம் புரியும்.

//நல்லா ஒரு படம் எடுத்துட்டு அதுக்கு குள்ளநரிக்கூட்டம்ன்னு பேர் வச்சிட்டாங்களாம்:)//

சகோ, நிஜமாவா... சொல்லவே இல்ல.. ரொம்ப நன்றிகள்.
படம் வந்திட்டா, இனிமேத் தான் வருமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


/தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, தமிழகத்திலை தேர்தல் என்றால் ஒராளை மாறி ஒராள் தனி மனித தாக்குதல் செய்கிறது, இலவசமா இலவசத்தையே கொடுக்கிறது, தான் போற நேரத்திலையும் தன்னோடை கிறாண்ட் சன் ஐ (Grand Son) மந்திரியாக்கிது தொடர்பாக கலந்தாலோசிக்கிறது.//

இதெல்லாம் நாதஸ்வர சீரியலில் காட்டுறாங்களா:)//

யாரு சொன்னாங்க, இதெல்லாம் நாதஸ்வர சீரியலிலை வாறதெண்டு. நம்ம அரட்டையிலை காட்டுற விடயங்கள் சகோ..

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


மிச்சத்தை அப்புறமா சொல்கிறேன்:)//

எப்போ சொல்லுறீங்க..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

தமிழன் உருப்பட சந்தர்ப்பமே இல்லையப்பு நிரூ.முக்கி முக்கிக் கத்தினா அசிங்கமும் நாத்தமும்தான் எங்களுக்கே வரும் திரும்பி !//

உண்மையை உணர்ந்திட்டீங்க போல.. நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி


இப்போ கொஞ்சம் எளிமையா இருக்கு, ஆனாலும் நீங்க நீளத்தை இன்னும் குறைக்கனும்.......!//

சொல்லிட்டீங்களெல்லே,,, செய்திட்டாப் போச்சு. நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

//ஈழத் தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது, புரியவில்லை எனும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைவாக என் பதிவினை முடிந்த வரை அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன். //

மறுபடியும் வந்தா தேவதை கதைதான் மிச்சம்!

தேவதை கதைக்கெல்லாம் போக வேண்டிய அவசியமேயில்லை.அதோ அங்க ஒருத்தர் பயோடேட்டா வாசிக்கிறார் பாருங்க:)//

எங்க சகோ..........வாசிக்கிறார். புரியும் படி சொல்லுறது.

//சகோ!நீங்க உங்க நடையிலே சொல்லுங்க.அப்புறம் எப்படி ஈழத்தமிழ் கற்றுக்கிடறதாம்.//

சரி விடுங்க பாஸ், எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு மொழி கண்டு பிடிச்சாப் போச்சு..

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//சகோ!நீங்க உங்க நடையிலே சொல்லுங்க.அப்புறம் எப்படி ஈழத்தமிழ் கற்றுக்கிடறதாம்.//

சரியா சொன்னீங்க ராஜ்.//

அவர் சொல்லுறதை, நீங்கள் வழி மொழிகிறீங்களா. நன்றிகள் நன்றிகள்.

அடுத்த தேர்தலிலை உங்களை சீப் மினிஸ்டர் ஆக்கிடுறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

@ராஜ நடராஜன்:எனக்கு நிரூபனின் எழுத்து நல்லாவே புரியும்.. இருந்தாலும் மத்தவங்களுக்கு கஷ்டம் தெரியும்போது அவர் எழுத்துநடையை மாற்றிடதில் தவறில்லை.. அதனால் என்போல எப்பவாவது அவரது இயல்பு நடையிலே ஒரு பதிவு போட சொல்லி கேளுங்க..//

மேலே அனானிமஸ் நண்பர் ஒருவருக்கு எழுதிய பதிலைத் தான், உங்களுடைய கருத்திற்கும் சொல்ல முடியும் என்பதால், அதை அப்படியே கட், காப்பி, பேஸ்ற் செய்யுகிறேன்.

நன்றிகள் சகோ, தாய் மொழியைத் தன் தாய்க்கு நிகரானது என ஒப்பிட்டுக் கூறுவார்கள். மொழியை மாற்றுவது, தாயை மாற்றுவது போன்ற செயலாகும், ஆனாலும் எங்களூர்த் தமிழைப் புரிந்து கொள்ள முடியாத நண்பர்களிடம் என் எழுத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, என் தமிழைப் படி என்று திணிப்பதற்கு ஒப்பானது, ஆதலால் பதிவுகளில் கொஞ்சம் சேஞ்ச் இருப்பது நன்றாக இருக்கும் தானே?


இன்னொரு விடயம், எங்கள் நாட்டின் பல விடயங்களை ஏனைய இணைய நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இலகுவான அனைவரும் புரிந்து கொள்ளும் மொழி நடை அவசியமாகின்றது தானே?
அது தான் ஒரு சின்ன சேஞ்ச்.
நன்றிகள் சகோ.


நன்றிகள் சகோ.... நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக//

நன்றிகள் சகோ.. நன்றிகள்..

விளம்பரத்திற்கு நிறைய காசெல்லாம் கேட்க மாட்டீங்க எல்லே;-)))
ச்...ச்சும்மா...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அட்டகாசமா கல கல கலனு இருக்கு இப்போது ஹா ஹா ஹா ஹா கொஞ்சம் நீளம் குறையுங்க மக்கா...

சுதா SJ said...
Best Blogger Tips

நாதஸ்வரம் சீரியல்ல விட
தென்றல் சூப்பர்ரா போகுது பாஸ்...
தமிழ் - துளசிக்கு நடுவில் ஓடும் லவ் சூப்பர் பாஸ் lol

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

அட்டகாசமா கல கல கலனு இருக்கு இப்போது ஹா ஹா ஹா ஹா கொஞ்சம் நீளம் குறையுங்க மக்கா...//

நன்றிகள் சகோ, வாசகர்களின் விருப்பமே எனது தேர்வாகவும் இருக்கும். நீளம்..குறைச்சிட்டாப் போச்சு.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

நாதஸ்வரம் சீரியல்ல விட
தென்றல் சூப்பர்ரா போகுது பாஸ்...
தமிழ் - துளசிக்கு நடுவில் ஓடும் லவ் சூப்பர் பாஸ் lol//

சகோ, நான் சீரியல் பார்ப்பதில்லை.இந்த நாதஸ்வரம் எல்லாம்..இணையத்தில் தேடிய போது தான் கிடைத்தது சகோ.
நீங்கள் சீரியலோடை நல்லா ஐக்கியமாகிட்டீங்க போல இருக்கே..
ஹி...ஹி.. நன்றிகள் சகோ.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails