Wednesday, March 30, 2011

தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!

நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;

வீரியம் மிக்க விதைகளாக
விளைச்சல்களை அதிகரிக்கும்
பயிர்களைப் பயிரிட
அவர்கள் ஒவ்வோர் முறையும்
எங்கள் தோட்டத்திற்கு வருகிறார்கள்
தாங்கள் புசித்த எலும்புத் துண்டுகளின்
எச்சில் நாற்றம் காயும் முன்னே
எங்களை விலை பேச
கைகளை உயர்த்தியபடி
தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!
என் பாட்டனும், என் வம்சமும்
இந்த கோவணத் துணிகளின்
நறு மணத்திற்கு கட்டுப் பட்டு
ஒவ்வோர் முறையும்
மன விருத்தியெனும் மூளையினை
மளிகை(க்) கடையில் அடகு வைத்தவர்களாய்
மகரந்த மணியினை தடவுவது போல
அவர்களைப் பார்த்து
தடவிச் சிரித்து
தம் புலன்களால்
பூரிப் படைந்து வாழ்கிறார்கள்!

இதனைத் தான் இன்றும்,
பொங்கிப் பிரவாகித்து
போதனைகள் செய்யும்
பிராணனை உட் கொண்டோரும் செய்கிறார்கள்!

அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
கோவணத்தை கைகளில் ஏந்தியபடி
வெட்கமின்றி மானத்தை
எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!

நாங்கள் மட்டும்
கைகளை ஏந்தி அந்த
முகம் சுளிக்கும் வாடையினை
நறுமணம் எனும்
பெயர் சூடி;
எம் எதிர்காலமும்
சுயங்களும் சுக்கு நூறாகுவதை உணாராமல்
சுகித்து மகிழ்ந்து,
புசித்துப் பசியாறத் தொடங்குகிறோம்

ஐய்யாவின் இதே பழைய
கந்தல் துணிக்கும்
அம்மாவின் கிழிந்த சீலைக்கும்
இன்றும் ஆட் காட்டி
விரலை உயர்த்தி
ஆலாபனை செய்யும் பொழுதில்
அமெரிக்காவோ விண் கலத்தில்
செவ்வாயை கடந்து சொல்லாத
சேதிகளைச் சொல்லி நிற்கிறது!

52 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

இலங்கைத்தமிழனின் கோபம் இங்கே இருக்கும் கோபால புரத்ததமிழனுக்கு உரைக்குமா?

தனிமரம் said...
Best Blogger Tips

கைநீட்டிப்பழகியவர்கள் கட்சிமாறமாட்டார்கள் இலவசம் என்றாள் வீட்டுக்கூரையைக்கூட புடுங்குவான் தன்மானம்மில்லா ஈழத் தமிழர் வலிபுரியாத மானாட மயிலாட போட்டால் மாறாப்பூ விலகாத எனப்பார்க்கும் எல்லாமே சிரிப்புத்தான் பார்க்கும் வள்ளல்கள் எம்நேரந்தான் வினாகும்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

எல்லோரும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மப்புல இருக்காங்க.

மெதுவாத்தான் மக்கள் இந்தப்பக்கம் வருவாங்க!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

எத்தனையோ சொல்லிப்பார்த்துட்டோம்.கவிதை புடிக்குமேன்னு கவிதையும் சொல்லியாச்சு.கொடநாட்டு கோமளவல்லியேன்னு எதிர்த்த வீட்டுல விளிச்சும் பார்த்தாச்சு.

யாரையும் கண்டுக்காம அவங்க விளையாட்டை அசறாமத்தான் ஆடுறாங்க.

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
இலங்கைத்தமிழனின் கோபம் இங்கே இருக்கும் கோபால புரத்ததமிழனுக்கு உரைக்குமா?//

சிபி யாரு மக்கா கோபாலபுரத்து தமிழன்...? நல்லா கூர்மையா அவர் பேக் ரவுண்டை கவனிச்சி பாருங்க அவர் ஒரு தெலுங்கர்....அவர் கட்சியில் அல்லைகைகளையும் பாருங்க ஆற்காடு வீராசாமி தெலுங்கன், துறை முருகன் தெலுங்கன் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்....

ரேவா said...
Best Blogger Tips

அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
கோவணத்தை கைகளில் ஏந்தியபடி
வெட்கமின்றி மானத்தை
எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!


நிதர்சனம் சொல்லும் அழகான கவிதை சகோ... இலவசங்களால் கட்டுண்டு போவோம், என்று தெரிந்தே தான் மயக்கும் இலவசங்களால், நான் சுயம் என்னும் சுவாசம் நெறிக்கிறார்களோ... தெரியவில்லை?... ஆனாலும், இந்த கவிதை, சிந்தனை விதையை நெஞ்சில் விதைத்து, சிந்தித்து வாக்களிக்க சொல்கிறது ...
அழகான கவிதை, வாழ்த்துக்கள் சகோ............

ரேவா said...
Best Blogger Tips

ஆட் காட்டி
விரலை உயர்த்தி
ஆலாபனை செய்யும் பொழுதில்
அமெரிக்காவோ விண் கலத்தில்
செவ்வாயை கடந்து சொல்லாத
சேதிகளைச் சொல்லி நிற்கிறது!

உண்மையான வரிகள்... நான் அதிகம் ரசித்த வரிகளும் இதுவே..எளிமையான வரிகளில், அழமான உண்மையை, அழகாக பதித்துள்ளீர்கள் சகோ...

Chitra said...
Best Blogger Tips

ரேவா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆட் காட்டி
விரலை உயர்த்தி
ஆலாபனை செய்யும் பொழுதில்
அமெரிக்காவோ விண் கலத்தில்
செவ்வாயை கடந்து சொல்லாத
சேதிகளைச் சொல்லி நிற்கிறது!

உண்மையான வரிகள்... நான் அதிகம் ரசித்த வரிகளும் இதுவே..எளிமையான வரிகளில், அழமான உண்மையை, அழகாக பதித்துள்ளீர்கள் சகோ.......... same here....

Ram said...
Best Blogger Tips

லேட்டா வந்தாலும் பஜ்ஜி கேப்பேன்.. பஜ்ஜி எனக்கே.! சரி பதிவு இருக்கில்ல.. அதுக்கு போவோம்.. என்னாது எழுதியிருக்கீங்க.!!

Ram said...
Best Blogger Tips

//நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;//

என்னாது அது.?? அடுத்த பத்திக்கு போவோம்..

Ram said...
Best Blogger Tips

//தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!//

அட செருப்படி மக்கா.!!

Ram said...
Best Blogger Tips

//எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!//

இது வீர சபதம் இல்லீங்கோ.!! விவகாரம் புடிச்சது.. இனிமே எதிர்காலத்துல உடுவாங்க பாருங்க வீர சபதம்.. உன்னைவிட நான் அதிகமா ஊழல் பண்றேன்னு..

Ram said...
Best Blogger Tips

//முகம் சுளிக்கும் வாடையினை
நறுமணம் எனும்
பெயர் சூடி;//

அட யாருங்க சொன்னா.? நீங்களும் சரி நானும் சரி.. திட்டிகிட்டு தானே இருக்கோம்..

Ram said...
Best Blogger Tips

//அமெரிக்காவோ விண் கலத்தில்
செவ்வாயை கடந்து சொல்லாத
சேதிகளைச் சொல்லி நிற்கிறது!//

நம்ம நாட்டு காரனா எப்படிவேணா கொடுமைபடுத்தலாம்.. அண்டை நாட்டவனை கொடுமைபடுத்தி, மற்ற நாடுகளுக்கு குழிபறித்து முன்னேரும் அமெரிக்காவை நம்மோடு ஒப்பிடவேண்டாமே.!

Ram said...
Best Blogger Tips

இப்ப மொத்ததுக்கு வருவோம்.. கவிதையில் கோபம் அதிகமா தெரியுது.. வழக்கம்போல வார்த்தைகள் உபயோகித்திருப்பது அருமை..குறியீடுகள் அதிகம் கொடுப்பது கவிதையின் உட்கருத்தை அதிகம் வெளிபடுத்தும். அதிகமான குறியீடுகள் வேண்டும்.!! இறுதியில் அந்த ஒப்பீடு பிடிக்கவில்லை.. மற்றபடி கோபம்.. தெரிகிறது.. ஏளனம் எங்கோ நகைக்கிறது..

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

முதல் மழை எனை நனைத்ததே//

வரும் போது குடையை விட்டு விட்டு வந்து விட்டீங்க போல.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


இலங்கைத்தமிழனின் கோபம் இங்கே இருக்கும் கோபால புரத்ததமிழனுக்கு உரைக்குமா?//

சகோ என்னையை வைச்சு வைத்தி வைக்கிற பிளானா?
சும்மா இருக்கிற எரிமலைகளை உசுப்பேற்றி வைக்கிற ஐடியாவோ. நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


கைநீட்டிப்பழகியவர்கள் கட்சிமாறமாட்டார்கள்
இலவசம் என்றால் வீட்டுக்கூரையைக்கூட புடுங்குவான் தன்மானம்மில்லா ஈழத் தமிழர் வலிபுரியாத மானாட மயிலாட போட்டால் மாறாப்பூ விலகாத எனப்பார்க்கும்
எல்லாமே சிரிப்புத்தான் பார்க்கும் வள்ளல்கள் எம்நேரந்தான் வீணாகும்.//

கவிதை முறையில் கருத்துக்களைச் சொல்ல முனைந்திருக்கிறீர்கள் சகோதரம். வாழ்த்துக்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

எல்லோரும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மப்புல இருக்காங்க.

மெதுவாத்தான் மக்கள் இந்தப்பக்கம் வருவாங்க!//

ஆமா இல்ல. பாகிஸ்தான் தோற்று விட்டதல்லவா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

எத்தனையோ சொல்லிப்பார்த்துட்டோம்.கவிதை புடிக்குமேன்னு கவிதையும் சொல்லியாச்சு.கொடநாட்டு கோமளவல்லியேன்னு எதிர்த்த வீட்டுல விளிச்சும் பார்த்தாச்சு.

யாரையும் கண்டுக்காம அவங்க விளையாட்டை அசறாமத்தான் ஆடுறாங்க//

ஒரு பழமொழி சொல்லுவார்கள். செவிடன் காதில் சங்கு ஊதினால் கேட்காது என்று. அது தான் இவர்களின் நிலையும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி


சுருக் கவிதை.//

நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
இலங்கைத்தமிழனின் கோபம் இங்கே இருக்கும் கோபால புரத்ததமிழனுக்கு உரைக்குமா?//

சிபி யாரு மக்கா கோபாலபுரத்து தமிழன்...? நல்லா கூர்மையா அவர் பேக் ரவுண்டை கவனிச்சி பாருங்க அவர் ஒரு தெலுங்கர்....அவர் கட்சியில் அல்லைகைகளையும் பாருங்க ஆற்காடு வீராசாமி தெலுங்கன், துறை முருகன் தெலுங்கன் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்....//

ஒரு கவிதையினூடாக தமிழக அரசியலின் பின்னணியே கிளறப்படுகிறதா.
வாழ்க வாழ்க!

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

நிதர்சனம் சொல்லும் அழகான கவிதை சகோ... இலவசங்களால் கட்டுண்டு போவோம், என்று தெரிந்தே தான் மயக்கும் இலவசங்களால், நான் சுயம் என்னும் சுவாசம் நெறிக்கிறார்களோ... தெரியவில்லை?... ஆனாலும், இந்த கவிதை, சிந்தனை விதையை நெஞ்சில் விதைத்து, சிந்தித்து வாக்களிக்க சொல்கிறது ...
அழகான கவிதை, வாழ்த்துக்கள் சகோ............//

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா


உண்மையான வரிகள்... நான் அதிகம் ரசித்த வரிகளும் இதுவே..எளிமையான வரிகளில், அழமான உண்மையை, அழகாக பதித்துள்ளீர்கள் சகோ...//

நன்றாக கூர்ந்து கவனித்துள்ளீர்களோ! இத்தகைய ஆழமான கருத்துக்கள் தான் என் கவிதைகளையும், இலக்கியப் படைப்புக்களையும் மெரு கூட்ட உதவும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

லேட்டா வந்தாலும் பஜ்ஜி கேப்பேன்.. பஜ்ஜி எனக்கே.! சரி பதிவு இருக்கில்ல.. அதுக்கு போவோம்.. என்னாது எழுதியிருக்கீங்க.!!//

என் வலைப் பதிவின் திறை சேரியின் நிதிப் பற்றாக்குறையினைக் கருத்திற் கொண்டு வடை, வாய்ப்பன், போண்டா, பஜ்ஜி, பாயாசாம் முதலிய இத்தியாதி, இத்தியாதி அயிட்டங்கள் வழங்குவது முற்று முழுதாக நிறுத்தப்பட்டுள்ளது.

இங்கே கருத்துக்களுக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படும். இதனையும் மீறிப் பஜ்ஜி கேட்டால்
டீ.ஆரின் ஆங்கில்ப பேச்சு அடங்கிய சீடிக்கள், யாழ்ப்பாண வாசனையுள்ள வடையுடன் பார்சலில் அனுப்பி வைக்கப்படும்!

(சகோ ச்.......சும்மா.....)

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!//

அட செருப்படி மக்கா.!//

சகோ சத்தம் போட்டுச் சொல்ல வேண்டாம், கட்சிக் காரங்க தேடப் போறாங்க.

Anonymous said...
Best Blogger Tips

////தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!/// அது சால்வை இல்லை கோமணம் தான் என்று மக்களுக்கு எப்ப தான் புரிதல் வருமோ???

Anonymous said...
Best Blogger Tips

///ஐய்யாவின் இதே பழைய
கந்தல் துணிக்கும்
அம்மாவின் கிழிந்த சீலைக்கும்
இன்றும் ஆட் காட்டி
விரலை உயர்த்தி/// மக்கள் உணராத வரை ஐயாவின் கந்தல் துணியும் அம்மாவின் சேலையும் தான் தமிழர் தலை எழுத்து...

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

//எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!//

இது வீர சபதம் இல்லீங்கோ.!! விவகாரம் புடிச்சது.. இனிமே எதிர்காலத்துல உடுவாங்க பாருங்க வீர சபதம்.. உன்னைவிட நான் அதிகமா ஊழல் பண்றேன்னு..//

அடடா... எதிர்காலமும் எகத்தாளமாக இருக்கும் போல இருக்கே!
வர்றவன் எல்லாம் ஊழல் பண்ணினால் மக்களின் நிலமை என்னவாகும்.

Anonymous said...
Best Blogger Tips

கவிதை "நச் "என்று இருக்கு நிரூபன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


அட யாருங்க சொன்னா.? நீங்களும் சரி நானும் சரி.. திட்டிகிட்டு தானே இருக்கோம்..//

இல்லைங்க சகோ, இலவசங்களை வேண்டுறவங்க திட்டுறாங்களா? ஒரு சிலர் திட்டாமல் தீப்பந்தமெல்லே பிடிக்கிறானுக.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


நம்ம நாட்டு காரனா எப்படிவேணா கொடுமைபடுத்தலாம்.. அண்டை நாட்டவனை கொடுமைபடுத்தி, மற்ற நாடுகளுக்கு குழிபறித்து முன்னேரும் அமெரிக்காவை நம்மோடு ஒப்பிடவேண்டாமே.!//

வரிகளை எமது தணிக்கைக் குழுவின் வேண்டுதலுக்கு அமைவாக நீக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். சந்தோசமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

இப்ப மொத்ததுக்கு வருவோம்.. கவிதையில் கோபம் அதிகமா தெரியுது.. வழக்கம்போல வார்த்தைகள் உபயோகித்திருப்பது அருமை..குறியீடுகள் அதிகம் கொடுப்பது கவிதையின் உட்கருத்தை அதிகம் வெளிபடுத்தும். அதிகமான குறியீடுகள் வேண்டும்.!! இறுதியில் அந்த ஒப்பீடு பிடிக்கவில்லை.. மற்றபடி கோபம்.. தெரிகிறது.. ஏளனம் எங்கோ நகைக்கிறது..//

உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மிக்க நன்றிகள் சகோ. இத்தகைய கருத்துக்களும், விமர்சனங்களும் தான் இந்த நாற்றினை மேலும் மேலும் வளர்ச்சியடையச் செய்ய உதவும். என் எழுத்துக்களைப் பட்டை தீட்ட உதவும். மிக்க நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

////தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!/// அது சால்வை இல்லை கோமணம் தான் என்று மக்களுக்கு எப்ப தான் புரிதல் வருமோ???//

இலவசங்களில் மதி மயங்கியிருந்தால் எப்படிச் சகோதரம் புரிதல் வரும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

//ஐய்யாவின் இதே பழைய
கந்தல் துணிக்கும்
அம்மாவின் கிழிந்த சீலைக்கும்
இன்றும் ஆட் காட்டி
விரலை உயர்த்தி/// மக்கள் உணராத வரை ஐயாவின் கந்தல் துணியும் அம்மாவின் சேலையும் தான் தமிழர் தலை எழுத்து..//

சரியாகச் சொன்னீங்கள் சகோதரம்.
ஐயாவினாலும், அம்மாவினாலும் ஆகப் போவது ஒன்றுமில்லைத் தானே!

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


கவிதை "நச் "என்று இருக்கு நிரூபன்...//

இக் கவிதை எல்லோர் மனங்களையும் தொட வேண்டும் என்பதே எனது ஆவல். நன்றிகள் சகோதரா.

ஹேமா said...
Best Blogger Tips

இத்தனை பேர் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு நிரூபன்.
ஆதங்கம்,ஆவேசம் கவிதையில் நாற்றம்....இதுதான் இன்றைய அரசியல் நிதர்சனம் !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அழுத்தமான கவிதை நிரு! உங்களுக்கு எல்லாவிதமான திறமைகளும் இருக்கு என்பதை நாளுக்கு நாள் நிருபித்து வருகிறீர்கள்!! வாழ்த்துக்கள்!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

இத்தனை பேர் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு நிரூபன்.
ஆதங்கம்,ஆவேசம் கவிதையில் நாற்றம்....இதுதான் இன்றைய அரசியல் நிதர்சனம் !//

உங்க மனசிலை ஏதாச்சும் தோனுமில்ல. அதனை சொல்ல வேண்டியது தானே.
நன்றிகள் நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


அழுத்தமான கவிதை நிரு! உங்களுக்கு எல்லாவிதமான திறமைகளும் இருக்கு என்பதை நாளுக்கு நாள் நிருபித்து வருகிறீர்கள்!! வாழ்த்துக்கள்!!//

இந்த வசனங்களின் பின்னாடி,நகைச்சுவை ஏதும் இல்லையே?
இதில் நிரூபிக்க என்ன இருக்கு. என்னால் முடிஞ்சதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றிகள் சகோ.

சிவகுமாரன் said...
Best Blogger Tips

அருமை.
நான் முன்னர் எழுதிய அறுவடை அரசியல் என்னும் கவிதையை நினைவுபடுத்துகிறது
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/10/blog-post.html
உங்களை மாதிரியே விமர்சனம் செய்யும் கூர்மதியனுக்கு பாராட்டுக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
Best Blogger Tips

அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
கோவணத்தை கைகளில் ஏந்தியபடி
வெட்கமின்றி மானத்தை
எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!

நிதர்சனம்... அருமை

Jana said...
Best Blogger Tips

ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

vimalanperali said...
Best Blogger Tips

வணக்கம் சார்.
நல்ல கவிதை,இலவசங்களை மட்டுமல்ல,இலவசம் கொடுப்பவர்களையும் மறுதலிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனத்தோனுகிறது.
அதுமட்டுமல்ல,நம்மைகாயடிக்கும் உத்தியும் கலந்தே இதில்/

மாலதி said...
Best Blogger Tips

அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
கோவணத்தை கைகளில் ஏந்தியபடி
வெட்கமின்றி மானத்தை
எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!


நிதர்சனம் சொல்லும் அழகான கவிதை ...

நிரூபன் said...
Best Blogger Tips

அருமை.
நான் முன்னர் எழுதிய அறுவடை அரசியல் என்னும் கவிதையை நினைவுபடுத்துகிறது
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/10/blog-post.html
உங்களை மாதிரியே விமர்சனம் செய்யும் கூர்மதியனுக்கு பாராட்டுக்கள்//

ஆமாம் சகோதரம், கவிதையினை இருவருமே ஒரே பாடு பொருளை உள்ளடக்கிப் படைத்திருக்கிறோம்.
எங்கள் சிந்தனைகளில் இருக்கும் ஒற்றுமையைப் பார்த்தீர்களா:))

நிரூபன் said...
Best Blogger Tips

@தோழி பிரஷா
அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
கோவணத்தை கைகளில் ஏந்தியபடி
வெட்கமின்றி மானத்தை
எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!

நிதர்சனம்... அருமை//

நன்றிகள் சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jana


ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.//

வருக, வருக சகோதரம்.
ஹொக்ரெயில் பகுதியில் நீங்கள் சொன்ன வியப்பூட்டும் பகுதியில் ஒன்றைப் பார்க்கச் சென்று விட்டீர்களோ என்று நினைத்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@விமலன்
வணக்கம் சார்.
நல்ல கவிதை,இலவசங்களை மட்டுமல்ல,இலவசம் கொடுப்பவர்களையும் மறுதலிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனத்தோனுகிறது.
அதுமட்டுமல்ல,நம்மைகாயடிக்கும் உத்தியும் கலந்தே இதில்///

நன்றிகள் சகோதரம், அனைவரும் இக் கவிதையின் உள்ளடக்கத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா. உங்களைப் போன்ற நண்பர்களின் இக் கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியினைத் தருகின்றது.

நிரூபன் said...
Best Blogger Tips

@malathi in sinthanaikal
அவர்கள் இப்போதும் வருகிறார்கள்
இலவசமெனும் இழிவான
கோவணத்தை கைகளில் ஏந்தியபடி
வெட்கமின்றி மானத்தை
எதிர் பார்க்காதோராய்
தெருவெங்கும் வீரச் சபதமிட்டு
எங்களுடன் விளையாட வருகிறார்கள்!


நிதர்சனம் சொல்லும் அழகான கவிதை ...//

நன்றிகள் சகோதரம்.

Muruganandan M.K. said...
Best Blogger Tips

அரசியலின் கோவண நாற்றம் வயிற்றைப் புரட்ட வைக்கிறது. அருமையான கவிதை.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails