Tuesday, March 1, 2011

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

அன்றொரு நாள், வானில்
விமானங்கள் இரைகையில்
நானும் அம்மாவும், அப்பாவும்,
என் உடன் பிறந்த தங்கையும், தம்பியும்
உயிரைக் கையில் பிடித்தபடி
பங்கரை நோக்கி ஓடினோம்,
ஊரில் இல்லாத கடவுளர்களையெல்லாம்
கண் முன்னே நிறுத்தி
கதறிக் கதறி,  எம் உயிரைக் காப்பதற்காய்
வேண்டுதல் செய்தோம்;


எங்களின் முன்னே இருந்த பங்கர் மீது
யுத்த விமானங்கள் குண்டு போட்ட போது
அசைவற்றவர்களாய், எங்கள் அயலவர்கள்
துடி துடித்து இறந்தார்கள்.
அக் குடும்பத்தில் எஞ்சியிருந்த
தன் ஒரு காலையும் ஒரு கண்ணையும் இழந்த
அப்பையா அண்ணை சொன்னார்,
‘உந்தப் பத்தியெரிவார், பாழ்படுவார், துலைஞ்சு போவார்,
இதற்கு நன்றாக அனுபவிப்பார்கள்,
கண்டிப்பாக இவங்களுக்கு
இந்தப் பழி வந்து சேரும்,
அவர் அந்த விமானங்களைப் பார்த்து
இரண்டு வருடங்களுக்கு முன்னர்
இதே காலப் பகுதியில் வலைஞர் மடத்தில்
வைத்து வாய்க்கு வந்த படி
குண்டு வீச்சு விமானங்களைத் திட்டினார்,

அவர் மட்டுமா சாபம் போட்டார்,
இன்னும் ஆயிரம் அப்பாவிகள் கண்ணீர் சொரிய
கடவுளரை வேண்டி கதறியழுதார்கள்,
இன்று தான் புரிந்தது
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமாம்’
நானும் போருக்கு எதிரானவன் தான்,
எதிரியாக இருந்தாலும்
இக் கதி அவனுக்கும் ஏற்படக் கூடாது
என்பதை தான் எங்களின் அவலங்கள்
எமக்கு கற்றுத் தந்தன- ஆனாலும்
அப்பையா அண்ணையின் வார்த்தைகளும்,
எம் ஆன்றோரின் வாக்குகளும்
இன்று மட்டும் நிஜமாகி விட்டதாக
மனதினுள் ஒரு உணர்வு!
****************************

பிற் குறிப்பு: இன்றைய தினம் வானிலிருந்து தீப்பற்றி விழுந்த இரண்டு இலங்கையின் போர் விமானங்களுக்கும் இக் கவிதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எமது தணிக்கை குழு அறியத்தருகின்றது.

16 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

APPADIYAA NEWS.......?

ENAKKU THERIYAATHE....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

MMMM...... IPPATHAAN PADICHCHEN.......

I UNDERSTAND YOUR FEELINGS

sundarmeenakshi said...
Best Blogger Tips

venum srilankavugu idhuvum venum innum idhu madhtri neri flighr villa andavani vendukiran

Anonymous said...
Best Blogger Tips

///முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமாம்///unmai..

Anonymous said...
Best Blogger Tips

ஊழ்வினை சும்மா விடாது...

Unknown said...
Best Blogger Tips

மரணத்தைவிட மிக துன்பம் தருவது, அயலவர்கள் மரணத்தை அருகிலிருந்து பார்ப்பது, மரணத்திலிருந்து நூலிழையில் விலகியது..

Unknown said...
Best Blogger Tips

உங்களின் வலி கவிதையின் வழியே புரிகிறது சகோ.

Unknown said...
Best Blogger Tips

///முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமாம்///


இரக்கமில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் சாபம் தவறல்ல...

Chitra said...
Best Blogger Tips

தலைப்பிலேயே சொல்ல வேண்டியதை நச்னு சொல்லிட்டீங்க....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
Best Blogger Tips

உண்மையை தெளிவாக கூறியுள்ளீரகள்.

Riyas said...
Best Blogger Tips

//முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்//

உண்மையே... கவிதைகளில் வார்த்தையோடு வலியும்.

ஹேமா said...
Best Blogger Tips

எங்கள் அழிவுக்கெல்லாம் சமப்படுத்தினா இது ஒரு தூசு நிரூபன் !

அன்புடன் அருணா said...
Best Blogger Tips

வலி புரிகிறது.

Anonymous said...
Best Blogger Tips

வேதனையாக இருக்கிறது...அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்

Jana said...
Best Blogger Tips

சில யதார்த்தங்களையும், ரணங்களையும், ஒரேயடியாக பலர் மறந்துவிட்டதே என்னைப்பொறுத்தவரை மிகப்பெரும் வேதனை நிரூ

Anonymous said...
Best Blogger Tips

வருத்தமாய் இருக்கு

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails