Thursday, March 10, 2011

மனிதனை மனிதன் வேட்டையாடுதல்- உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு 18+

உலகில் உள்ள உயிரினங்களில் விந்தையானது மனித இனம் என்று கூறுவார்கள். இந்த மனித இனம் மட்டுமே ஆறறிவு கொண்ட ஓர் இனமாக ஏனைய ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளில் இருந்து வேறுபடுகின்றது. மனிதர்கள் தமது உணவுத் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடினார்கள். விலங்குகளை வலை வைத்து பிடித்து உணவாக உட் கொண்டார்கள்,  மாமிசம் புசித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.  ஆனால் மனிதர்களே மனிதர்களை வேட்டையாடி உணவாக உட் கொள்வதனைப் பார்த்திருக்கிறீர்களா? கேட்டிருக்கிறீர்களா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.

மனிதர்களின் மூதாதையர்களின் வம்சங்களினடிப்படையில் இன்று வரை விருத்தியடையாத ஒரு குடியினராக ஆதிக் குடிகளை அல்லது காட்டு வாசிகளைக் குறிப்பிடுவார்கள். இந்தக் காட்டுவாசிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மிருகங்களைப் போல மனிதர்களை வேட்டையாடி நரமாமிசமாக உண்ணுவார்கள்.

இதிகாசங்களிலும், தல புராணக் கதைகளிலும் நரமாமிசம் உண்ணுவது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். சிறுத் தொண்டர் நாயனார் தனது மகனையே இறைவனுக்கு கறியாக்கி வழங்கியதாக பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் இந்த நவீன உலகில், இவ் இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்த நரமாமிசம் உண்ணும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் வியப்பளிக்கிறதா? இவர்களை ஆங்கிலத்தில் கனிபல் (Cannibal) என்று அழைப்பார்கள்.

இவர்கள்; மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவது போன்று, தமது இனமல்லாத வேற்று இன அதாவது தம்மிலிருந்து வேறுபட்ட மனிதர்களை பொறி வைத்துப் பிடித்து,  உயிருடன் கடித்தும், மெது மெதுவாக வெட்டியும் உணவாக உண்ணுவார்கள். சமைத்தும், Barbecue ஆக்கியும் உண்ணுவார்கள்.

இந்த நரமாமிச விரும்பிகள் பற்றி முதன் முதலாக அறிவியல் பூர்வமாக மக்கள் நம்பத் தொடங்கியது, 1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டொக்கியூமென்ரரி (Documentary)   தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, இவர்களைப் பற்றி அறிவதற்காகச் சென்றார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே இந்த ஆதிவாசிகளால் வேட்டயாடப்பட்டு உணவாக உண்ணப்பட்டார்கள்.

அமேசன் காடுகளில் உள்ள யக்குமோ கிராமத்தைச் சென்றடைந்த இந்த விவரணப் படத் தயாரிப்பாளர்களை காணவில்லை என அறிந்து தேடிச் சென்றவர்களினால் கைப்பற்றப்பட்ட வீடியோ நாடாக்கள் மூலம் இந்த மூவரும் காட்டு வாசிகளால் கோராமாக கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டமை வெளி உலகிற்கு தெரியவந்தது.  பின்னர் கைப் பற்றப்பட்ட வீடியோ பிரதிகளின் உதவியுடன் ஒரு விவரணப் படமாக இந்தக் காட்டு வாசிகளைப் பற்றிய படம் 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்த காரணத்தால் உலகில் அதிகமான நாடுகளினால் இப் படம் திரையிட அனுமதியேதுமின்றி தடை செய்யப்பட்டிருந்தது.

இன்று வரை இந்த நரமாமிசம் உண்ணும் கனிபல்கள் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினிய காடுகளிலும், அமேசன் காடுகளிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகளிலுள்ள சிறு தீவுக் கூட்டங்களிலும், பப்புவாநியூகினியா நாட்டிலும், பிஜி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.


ஆபிரிக்க நாடான லைபிரியாவில் என்ன செய்வார்கள் தெரியுமா?  போரின் போது இறக்கும் தமது எதிரணி வீரர்களின் இறந்த உடலில் இருந்து ஒவ்வோர் அவையங்களையும் தமக்கு வீரம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சமைக்காது பச்சையாக உண்ணுவார்கள். குடல், இருதயம் என்பன இவர்களின் முக்கிய உணவு.


இந்தியாவின் காசியில் வாழும் அகோரிகள் எனப்படும் சந்நியாசிகள், காசி ஆற்றில் இறந்த பின்னர் எரிக்கப்படும் மனித உயிர்களின் உடற்பாகங்களை எடுத்து உண்ணுவார்கள்.
1971ம் ஆண்டு விபத்திற்குள்ளான உருகுவே நாட்டின் Uruguayan Air Force 571 விமானத்தில் பயணம் செய்த 49 பேரில் எட்டுப் பேர் நரமாமிசம் உண்போரினால் உண்ணப்பட்டார்கள் என அக்காலப் பகுதியில் உருகுவே அரசாங்கம் அறிவித்துள்ளது.


2009ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் மூலம் பயணம் செய்த ஐம்பதிற்கும் அதிகமானோர்கள் இந்த மனிதர்களால் கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.


இக் கனிபல்கள் பற்றிய திகிலூட்டும் சம்பவங்கள், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படங்களாக 
Hannibal holocaust, Wrong Turn part 1, 2 &  3 இனைக் குறிப்பிடலாம். இவர்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் விரும்பின் இத் திரைப்படங்களைப் பார்க்கலாம்.
அன்பு நண்பர்களே, இக் கனிபல்கள் அல்லது நரமாமிச விரும்பிகள் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.


இப் பதிவில் வரும் தகவல்கள் யாவும் ஆங்கில விக்கிபீடியா, மற்றும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. 


http://en.wikipedia.org/wiki/Cannibalism

13 Comments:

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

எவ்வளவு கொடுமையான விஷயம்.

சமுத்ரா said...
Best Blogger Tips

TERROR pics:(

Unknown said...
Best Blogger Tips

யோவ் என்னய்யா இது??
இனி இப்படிப்பட்ட பதிவு வந்திச்சு நானே வந்து கடிச்சு குதறிடுவன்!!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நல்லவேளை நான் சாப்பிட்டுட்டேன்

எல் கே said...
Best Blogger Tips

//2009ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் மூலம் பயணம் செய்த ஐம்பதிற்கும் அதிகமானோர்கள் இந்த மனிதர்களால் கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.//


இது உண்மையா ? ஏதேனும் சுட்டி இருக்கா ??

எல் கே said...
Best Blogger Tips

//சி.பி.செந்தில்குமார் said...
நல்லவேளை நான் சாப்பிட்டுட்டேன்/

என்னது சித்தப்பு மனிதக் கறியா??

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அய்யய்யோ எவ்வளவு பயங்கரம்? பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நிரு!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பயங்கரமான, ஆச்சர்யமான தகவல்கள்....!!!

Anonymous said...
Best Blogger Tips

சமீபத்திலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

ஹேமா said...
Best Blogger Tips

ஐயோ..இதெல்லாம் உண்மையா.
பயங்கரமா இருக்கு.புதுமையாவும் இருக்கு.அதுசரி...எங்கட நாட்டிலயும் இதேதானே நடக்குது !

Chitra said...
Best Blogger Tips

பொதுவாக 18 + டாபிக் ஸ்கிப் பண்ணிடுவேன். அந்த படங்களை பார்க்கும் தைரியம் இல்லை. தலைப்பை பார்த்து விட்டு, நேர கமென்ட் காலம் வந்துட்டேன். ஆளை விடுங்கப்பா சாமி.....

jayarani said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
பாலா said...
Best Blogger Tips

ஒரு முறை இடி அமீன் தனது விருந்தினர்கள் முன்னாலேயே தன் வீட்டு பிரிட்ஜில் இருந்து ஒரு தலையை எடுத்து வந்து அதில் ஒரு துண்டை சாப்பிட்டாராம்.

அப்புறம் எனக்கு தெரிந்து ஹண்ணிபல் ஹோலோகஸ்ட் என்ற படம் ஆவணபடம் அல்ல. அது ஆவணப்படம் மாதிரி எடுக்கப்பட்ட ஒரு படம். அதில் பயன் படுத்தப்பட்ட காட்சிகள் எதுவுமே உண்மையானவை அல்ல. உண்மை போல தெரியவேண்டும் என்பதற்காகவே நடிக்கதெரியாதவர்களை வைத்து, மோசமான பிலிமை வைத்து எடுத்திருக்கிறார்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails